Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுகளே......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தும்பு நகைச்சுவையோடை சுவாரசியமாய் நகர்த்துறீங்கள் தொருங்கள் ஆவலாயுள்ளேன் மீதிக்காக

  • Replies 59
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான்றாக போகிறது தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒட்டோவிற்கு மறக்க முடியாத இன்னொரு நாளும் இருக்கிறது.

A /L 2005 maths மாணவர்களில் பலர் திரு.கெங்காதரன் ஆசிரியரை நன்கு அறிவர். அவரிடம் இணைந்த கணிதம் படிப்பதற்காக காலை 6 மணிக்கு ( என்றும் 6 மணிக்கு யாரும் போனது கிடையாது , அவரும் பாரியாரை வேலைக்கு கொண்டு போய்(mate 50 இல் ) விட்டுட்டு வரும் வரை வெளியிலே நின்று 6 .30 யின் பின்னரே வகுப்புக்குள் போவது வழமை ...) வந்திருந்த பெடியளுக்கு நான் சொன்னன் "மச்சான் இண்டைக்கு வரதக்கா (எங்கள் குடும்பத்தினரின் கடற்கரையை அண்டிய காணிகளை பராமரிப்பவர் ) வீட்டை தேங்காய் எடுக்க போகோணும் , கெங்கற்ற வகுப்பை முடிச்சிட்டு நான் ஓட்டோவை எடுத்துக்கொண்டு வாறன் எண்டு ....."

எதோ கெங்கரும் சைன் ரீற்றா கொஸ் ரீற்றா எண்டு சொன்னதையும் அவர் வீட்டு கோழி ஏந்தி இருந்த வாங்கிலில் 'டொச் ' போட்டதையும் ரசித்தபடி ஒருவாறாக வகுப்பை முடித்துவிட்டு வெளியில் வந்தோம் . ஏந்தி சொன்னான் "மச்சான் நீ ஓடிப்போய் ஓட்டோவை எடுத்துக்கொண்டு போய் தேங்காயை எடுத்துக்கொண்டு வா , நாங்கள் குட்டி வீட்டை நிக்கிறம் ..." எண்டு .. நானும் " மச்சான் பகீர் நீ வீட்டை போ நான் வாறன் , உன்ட வீட்டை ரெண்டு பேரும் தேங்காயை எடுத்துக்கொண்டு குட்டி வீட்டை போவம் " எண்டு ...

சொன்னபடியே ஓட்டோவில் போனன், பகீர் வீட்டுக்கு ஒரு மூண்டு வீடு தள்ளித்தான் வரதகான்ர வீடு . அங்க போய் இருந்த எல்லா தேங்காயையும் எடுத்துக்கொண்டு , கணக்கிலாவத்தை ஒழுங்கைகிள்ளால குட்டி வீட்டை போக அங்கயிருந்த ஆடு(ஆனந்த் ), ஏந்தி, குட்டியும் இணைந்து கொண்டனர்.

இவர் எனக்கு நல்லா ஏறிட்டுது , ஓட்டோவை வளைச்சு வளைச்சு ஓடி வல்லிபுர பரியாரிண்ட ஒழுங்கைக்குள்ளாள மிதந்து பருத்துறை யாழ்பாணம் றோட்டிலை ஓடிக்கொண்டிருந்தானான், பருத்துறை பஸ் டிப்போ அடியில ஒரு U turn போட்டன் ....

ஓட்டோ நியூட்டன் , லாமி எல்லா விதிகளையும் மீறி சில்லுகளையும் மேலே சுழல விட்டது , எல்லா தேங்காயும் ஏந்தியை சூழ்ந்துகொண்டது ... பின்னுக்கிருந்த குட்டி ஓட்டோன்ர முன்பக்க ரோட்டில தவளையை போல பிரண்டிருந்தான் ... நான் குதிச்சிட்டன் எந்தியின் காலொன்று ஆட்டிண்ட வாய்க்குள்ள பூந்திட்டு.

ஆட்டிண்ட ஒரு கால்ல ஓட்டோ இடிச்ச காயம் வேற ...அதோட ஏந்தி அந்த நிலத்தில கிடந்தான் ... பகீர் கவிண்ட ஓட்டோகுள்ள கைய எடுக்கேலாமல் தடுமாறிக்கொண்டிருக்க யாரோ ஓட்டோவை நிமித்தி விட்டாங்கள் .. ஆனந்தன்ர வாயில அடுக்கடுக்கா அழகான செந்தமிழ்கள் என்னை வாழ்த்தின. அதோட நொண்டி ஆடு பழைய ராஜா சுவைச் சோலை இருந்தபக்கமா போயிட்டான் ..

ஏந்தியும் பிரதியும் புளுதியை தட்டிக்கொண்டு டிப்போ பக்கமா போயிட்டாங்கள் ... ஆனாலும் எந்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை ... எஞ்சி இருந்த நானும் பகீரும் கொட்டு பட்ட தேங்காயை பொறுக்கி போட்டுகொண்டிருக்க பகீர் என்னைப் பார்த்துக் கண்ணைக் காட்டுறான். வழக்கமா இவன் இப்பிடி காட்டினா யாரோ சுப்பர் அயிட்டம் ஒண்டு குரோஸ் பண்ணுது எண்டு அர்த்தம். நானும் மண்டி மண்டி திரும்பிப் பார்த்தா போலீசுகாரன் வாரான். "மல்லி மொனவாத கறன்னே?" எண்டு தொடங்கவும் எதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச சிங்களத்தைவைச்சு சமாளிச்சிட்டு ஓட்டோவை உருட்டிக்கொண்டு குட்டியிண்ட ரோட்டுக் கரை வீட்டுக்குப் போனம்.

தொடரும்....

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருங்கிட்டம்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தும்ஸ். சம்பவங்கள் சுவாரசியமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுந்த ஓட்டோவ அதில வீடோயோக் கடை வச்சிருந்த பிரகாஸ் அண்ணாவும் மற்ற பெடியளும் வந்து நிமித்தி விட்டாங்கள். இதுக்குள்ள, குட்டி "மச்சான் உனக்கு அப்பவும் சொனந்தானே, மைய நீக்க விசை தொழிற்படும் எண்டு தெரியாதோ? v = rw (omega - w) எல்லோ எண்டான்." நேற்றுதானே பிரபா அப்பிடி ஒரு சாமான் கற்பனை விசை என்டிச்சு இவனும் இந்த அரியண்டத்துக்க பிசிக்ஸ இழுக்கிறான், ஓட்டோவ வேற பிரட்டிப் போட்டன், என்ன இழவோ எண்டு யோசிசுக் கொண்டிருக்க ஆனந்தன் சும்மா எமிலாந்திக்கொண்டு காலைத் தடவிக்கொண்டு இருந்தாவன் டேய் ........... எண்டு என்னைப் பாத்துத் துடங்கினவன் வச்சு கிழி கிழி எண்டு கிழிச்சான். உண்மையில பாதிக்கப் பட்டது ஆனந்தன் தான் எண்டு போட்டு நான் நைசா மண்டிக் கொண்டு எஞ்சின ஸ்டார்ட் பண்ண ட்ரை பண்ணினா அது அடிக்க மாட்டன் எண்டு அடம் பிடிச்சிச்சு. பின் கதவத் திறந்து பாத்தா கவிண்டதில காபுறேற்றர் ல இருந்து பெட்ரோல் ஊத்துப் பட்டிடுது. float ஊசி செட்டிங்கும் மாறியிருக்கும், எனக்கு மூளையும் (இருக்கோ எண்டு கேக்கப்படாது - மிச்சம் மீதியா இருந்த கொஞ்சத்த சொல்றன்) வேலை செய்யேல்ல, அந்த நேரம் எண்டு பாத்து. இது இவளவும் நடக்குது ஏந்தி டிப்போவுக்கு முன்னுக்கு நிண்டு பல்லக் காட்டிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் பாத்து ஆனந்தனிண்ட தேப்பன் அதால சைக்கிளில வந்தவர். இவருக்கு ஒரு சிறிய அறிமுகம். பெயர் கிருஷ்ணசாமி, கொஞ்சம் கண்டிப்பானவர். ஆனந்தனுக்கு A/L வந்தும் அவரில ஒரு பயம் எண்டு தான் சொல்லோனும். எங்களுக்கும் ஆனந்தன எங்கட குழப்படியளுக்கு கூப்பிட கொஞ்சம் பயம். நான் குட்டி பகீர் செற்றா சேந்து செய்யிற ஒரு வேலை "சிலபஸ்" முடிக்கிறது. அதுபற்றி பின்னர் வசதி வரும் போது எழுதலாம் என நினைக்கிறன் ஆனால் பகீர் எழுத விரும்பினால் தாராளமாக எழுது மச்சான்.ஆனா கடைசி கொஞ்ச காலங்களில ஆனந்தனும் ஏந்தியும் எங்களோட "சிலபஸ்" முடிக்கிரதுக்காக குட்டி வீட்ட வந்த ஞாபகம். அவர் பருத்திதுறையிலே பிரபலமான மருந்துக் கடையான "சிறிமுருகன் மருந்தக" உரிமையாளர். வெள்ளை பனியனும் சாரமும் கட்டிக்கொண்டு நிண்ட நிலையில்தான் பிஸ்னஸ் செய்வார். முந்தி மருதடியிலே(Dr. முருகானந்தத்தின் பழைய டிஸ்பென்சரி முன்பாக) சிறியதாக கடை வைத்திருந்து படிப்படியாக முன்னேறினவர். இப்போது பருத்தித்துறை - யாழ்ப்பாண வீதியிலே இவரினுடைய கடை இருக்கு. இவற்ற கடையில எல்லாம் இருக்கும், விலையும் அதிகமில்லை, பொருட்களும் தரமானவை. இதால அந்தக் கடையில எப்பவுமே சனமாயிருக்கும். நாங்களும் எங்களுக்கு தேவையான சில சாமான்களை (சத்தியமா என்ன எண்டு சொல்ல மாட்டன், பிறகு குடும்பப் பிரச்சினை எல்லோ வரும்) ஆனந்தன களவெடுத்துக் கொண்டுவந்து தரச் சொல்லுறது. அவனும் தேப்பன் சாப்பிட வீட்டபோற நேரம் பாத்து சுட்டுக் கொண்டு வருவான். அவங்களின்ட கடையில் வேலை செய்யும் இன்னுமொரு பெடியன் "ஜிம்புறு" (உண்மையான பெயர் தெரியாது) அவனும் நல்ல பம்பலான ஆள்.

ஆனந்தனிண்ட தேப்பனக் கண்ட உடனேயே ஆனந்தன் கொஞ்சம் பயந்துதான் போனான், மூத்திரம் போகாத குறை..... அவரும் சோதினைக்கு படிக்காமல் இதிலை எங்க நிக்கிறாய் எண்டு கேக்க இவனும் தான் கடைக்குப் போட்டு வந்தது எண்டும் இவங்கள் ஆட்டோவக் கொண்டுவந்து பிரட்டிப் போட்டாங்கள் எண்டும் தான் அதில நிண்டு புதினம் பாக்கிறன் எண்டும் சொன்னான். உந்தப் பெரிய பொய்ய அவரும் நம்பீட்டார் போல, "சரி நீ வீட்டபோய் படி நான் வாறன்" எண்டு சொல்லி வெளிகிட்டார். அவர் போய் மறையவும் ஆனந்தன் வந்து திரும்பி துடங்கினானே "செல்லடிக்க". காதால இரத்தம் வார மாதிரி இருந்திச்சு. வடிவேலு சொன்ன மாத்திரி "ரெண்டு மூண்டு தலை முறையை இழுத்து பேசினான் ". நான் இனி நிண்டா சரிவராது எண்டு சொல்லிப் போட்டு ஓட்டோவ நைசாத் தள்ளிக் கொண்டு குட்டியிண்ட புது வீட்ட வந்து சேந்தம். (இந்த வீடு பற்றியும் இங்கு நாங்கள் செய்த அநியாயங்கள் பற்றியும் பின்னர் குறிப்பிடுகிறேன்)

பின்னேரம் பிரபாவிண்ட classukku காலில பெரிய ஒரு பண்டேஜோட நொண்டியபடி ஆடு வந்திச்சு... வாயில் அதே வார்த்தைகள்.. கொடுப்புக்குள் சிரித்தபடி கேட்டன் "கொப்பரிட்ட என்ன பொய் சொன்னனி?" "குட்டியிண்ட காற ரிவேஸ் பண்ணேக்க மெல்லிசாத் தட்டிப் போட்டங்கள்" (குட்டியின் அப்பாவின் காரை நாங்கள் எடுத்து ஓடியிருக்கிறோம்) எண்டு சொன்னன் எண்டான் எந்தவித சலனமும் இல்லாமல். எங்கள் ஊரின் வழக்கம் படி நான் வீட்ட போகுமுதல் நியூஸ் வீட்ட போயிருக்கும் எண்டு நினைச்சன் ஏனென்டா இதப் பாத்தா யாரவது ஒரு பெரிசுக்கு வீட்ட பொய் அப்பரிட்ட அதப் போட்டுக் குடுக்காட்டில் பத்தியப்படாது. வாகனத்தைக் கொண்டே விட்டிட்டு ரெண்டு தேங்காய உரிச்சுக்கொண்டு மண்டி மண்டி குசுனீக்க புகுந்தன். அம்மாவும் "படிச்சு களைச்ச" பெடியனுக்காக பம்பரமா சமைத்துக் கொண்டிருந்தா. அம்மாட சாப்பாடு வழமை போல மூக்கின் வழி இறங்கி வயித்தைக் கிண்டவே (சத்தியமா shez the best cook ever! ) நானும் சோத்தையும் முருங்கக் காய் கறியையும் ஒரு பிடி பிடிக்க தயாராகினேன்...

நல்லாயிருக்கு தும்பளையான் தொடருங்கள். எனக்கும் ஹர்ட்லியுடன் தொடர்பிருக்கு. R.K வாத்தியும், தும்பளை சூரியநாதன் வாத்தியும் மறக்க முடியாதவர்கள்.

நடராசா அதிபராக இருக்கும்போது நான் அங்கே படித்தேன். காண்டி, ராஜாராம், அருமையான நண்பர்கள்.

மெதடிஸ் பெண்களை வீடுவரை கொண்டே விட்டு தான் வீடு திரும்புவோம்.

தும்பளை கடற்கரையோர வாசிக சாலை, வெளிச்ச வீடு, அதனை ஒட்டி இருக்கும் பேக்கரியில் கறி பணிஸ், ரோஸ் பாண்.

கிளிஞ்சல்கள், கரைவலை மிதப்பிகளுடன் முனையில் நீச்சல்.

அது ஒரு கனா காலம்.

Edited by பகலவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தும்பளையான் தொடருங்கள். எனக்கும் ஹர்ட்லியுடன் தொடர்பிருக்கு. R.K வாத்தியும், தும்பளை சூரியநாதன் வாத்தியும் மறக்க முடியாதவர்கள்.

நடராசா அதிபராக இருக்கும்போது நான் அங்கே படித்தேன். காண்டி, ராஜாராம், அருமையான நண்பர்கள்.

மெதடிஸ் பெண்களை வீடுவரை கொண்டே விட்டு தான் வீடு திரும்புவோம்.

தும்பளை கடற்கரையோர வாசிக சாலை, வெளிச்ச வீடு, அதனை ஒட்டி இருக்கும் பேக்கரியில் கறி பணிஸ், ரோஸ் பாண்.

கிளிஞ்சல்கள், கரைவலை மிதப்பிகளுடன் முனையில் நீச்சல்.

அது ஒரு கனா காலம்.

நீங்கள் A/L 98/99 போல? எனது அண்ணா 99 A/L bio. தற்போது வைத்தியராக இருக்கும் கௌதமன் அண்ணாவின் நல்ல கூட்டு. நீங்கள் சொல்லுவது வதிரிக் காண்டியா? பெராவில் E fac இல் இருந்தவர். இவரின் ஒரு தம்பி வைத்தியர். மற்றைய தம்பி ராகுலன் என்ட பச். ஆழ்வார் சேரின் மகன் ராஜா ராமையா சொல்லுகிறீர்கள்? தற்போது வைத்தியராக இருக்கும் முன்னாள் ஹாட்லிக் கிரிகட் கப்டின் வத்சலன் அண்ணாவைத் தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]அது ஒரு கனா காலம்[/size]

ஆமாம் பேராதனை பொறியியல் வதிரி காண்டியை தான் குறிப்பிட்டேன்.

சைக்கிளிலே பெடல் போட்டு

இரும்பு மதகடி, குளங்கரை எல்லாம் சுத்துவோம்.

கொலின்சில் உதைபந்தாட்டம்.

சோளங்கன் கள்ளு தவறணை

பிறகு இமையாணன் பனந்தோப்பு நினைக்கவே

இப்பவும் மனசை வருடும் நினைவுகள்.

நன்றி தும்பளையான், தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்க்கையிலே என்னை அதிகமாகப் பாதித்தவர்கள் எனது நண்பர்கள். அவர்கள் பற்றிய சில சுவாரசியமான விடயங்கள் எனது நினைவுகளிலே எப்போதும் சுழன்றடிக்கும். என்னதான் வேலைக்குப் போய் காசு பார்த்தாலும், திறமான ஸ்போர்ட்ஸ் கார் ஓடினாலும், மனிசி எவ்வளவு வடிவாக இருந்தாலும் நண்பர்களுடன் பழகிய காலங்கள் இனிமையானவை, பசுமையானவை, உலகில் வேறு எதற்குமே ஈடாகாதவை. அந்த வகையில் எனது மனதிலே இன்றும் பசுமையாக இருக்கும் நண்பர்கள் பற்றிய எனது நினைவுகளே....

பகீர் - என்னோட நேசரியில இருந்து ஒண்டாப் படிச்சவர். அப்பா வழியில ஒருமுறையில் சொந்தக்காரனும் கூட. சின்னனில நாங்கள் ஒண்டாப் படிச்சாலும் ஹாட்லியில 6C ல இரண்டு பெரும் திரும்பவும் சந்திச்சாப் பிறகுதான் கூட ஒட்டு எண்டு சொல்லலாம். இவருக்கு இலத்திரனியல் துறையில ஆர்வம் அதிகம். பழைய மோட்டார், டயோட், லேட் எண்டு ஏதாவது ஒண்ட நொண்டிக் கொண்டு இருப்பார். அந்தக் காலத்தில turn போட்டு generator மூலம் மின்சாரம் தரேக்க turn இல்லாத நாட்களில earth வயரை கிணத்துக்க போட்டு சில ஆக்கள் கரண்ட் எடுக்கிரவேல். இதுக்காக இவரும் நானும் இவயளிண்ட வீட்டு கிணத்துக்க கல்லக் கட்டி வயற இறக்கிய ஞாபகம். இதோட ஒழுங்கா வேலை செய்யிற ரேடியோக்களை "திருத்திற" போர்வையில கழட்டிக் கொட்டிறதில இவர் வலு கெட்டிக்காரன். ஆற்றையோ ஒரு ஒண்டுக்கும் உதவாத பழைய ரேடியோவை இவரும் நானும் குட்டியும் சைக்கில் காரியரில வச்சுக் கட்டி இலேக்ற்றோநிக்க்ஸ் வாத்தியிண்ட வீட்ட கொண்டு பொய் அந்த மனிசனுக்கு சாமம் 12 மணி மட்டும் அரியண்டம் குடுத்த ஞாபகம். ஒருக்கா இப்பிடித்தான் பழைய transformer ஒண்ட பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு வந்தது கண்டவன் வந்தவனுக்கெல்லாம் ஷாக் அடிச்சுக் கொண்டிருந்தார். இவரிண்ட இலக்குகள் படுத்திருந்த மகிந்தன், பேனை சுண்டிக் கொண்டிருந்த கிரி, படக் கதை சொல்லிக் கொண்டிருந்த ராஜவர்மன் எண்டு. இவங்கள் எல்லாரும் இவருக்கு தமிழில பேசிப் போட்டு விட்டுடாங்கள். இவர் விஷயம் தெரியாமல் கதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்தியின் மூக்கில வயற வைக்க அவன் அழுது கொண்டே ஓடிப் பொய் தவராசா வாத்தியிட்ட சொல்லி விட்டான். பிறகென்ன அந்த மனிசன் வந்து இவர காது மயிரப் பிடிச்சு தூக்கினது தான் மிச்சம் (உந்த ட்ரீட்மென்ட் கிடைச்ச ஆக்களுக்குத்தான் அதின்ட அருமை புரியும்). வலு நீட்டாத்தான் எப்பவும் வெளிக்கிடுவார். (எதிர்ப் பாலார இம்ப்ரெஸ் பண்ணோணும் எண்டு யோசிப்பார் போல)

முந்தி முந்தி இவனுக்கு டக்கெண்டு கோவம் வரும் பிற் காலங்களில் பெடியன் வளர வளர அதுவும் குறைஞ்சு போச்சு. ஒருக்கா சிவராமுக்கும் இவனுக்கும் நல்ல சண்டை வந்து ரெண்டு பெரும் பிடுங்குப்பட்டதாக ஞாபகம்.

நானும் இவரும் முந்தி சின்னனில சேர்ந்து கனக்க projects செஞ்சிருக்கிரம். கூடினதுகளில அன்டனும் இருந்திருக்கிறான். ஆறுமுகம் டீச்சரிண்ட ஒப்படை எண்டு சொல்லித்தான் கனக்க விசயங்கள நாங்கள் துடங்கிறது. வகுப்புக்குள்ள படம் ஓடினது, அவவிண்ட சமூகக் கல்வி பாடத்துக்கான சில வேலையள் எண்டு சிலதுதான் ஞாபகம் இருக்கு.

தொடரும்.....

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், தும்பளையான்!

ஆர்வத்தைத் தூண்டுகின்றது, உங்கள் பதிவு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]தொடருங்கள்,நினைவுகள் இனிமையானவை [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A /L காலம்.....

இந்தக் காலப் பகுதியில நடந்த கனக்க விஷயங்கள் எனக்கு இப்பவும் அப்பிடியே ஞாபகம் இருக்கு. துடக்கத்தில நடந்த ஒரு குறிப்பிடக் கூடிய விஷயம் மணியம் சேர் A /L துடங்கி மூண்டு நாளில இவனை வகுப்பால கலைச்சது. என்ன நடந்தது எண்டா, ஒரு மணியம் வாத்தியிண்ட வகுப்பில அந்தாள் வளித் துணிக்கைகள் அது இது எண்டு எதோ அலம்பிகொண்டிருக்க நான் வலு சீரியசா போட்ட பாத்துக் கொண்டிருந்த, பக்கத்தில இருந்த இவனைக் கேட்டன் "மச்சான் லைலா வந்தவளோ எண்டு". இவன் அதுக்கு முதலே அந்தாள் படிப்பிசுக் கொண்டிருகேக்க என்னட்ட சின்சியரா அது சம்பந்தமா எதோ கேட்டவன். நான் வகுப்பில ஒராளை தேடிகொண்டிருந்த இதில என்னைக் குழப்பாதை எண்டு உடனே சொல்ல அப்பவே அந்த மனிசன் என்னைக் கண்டிட்டுது ஆனா ஒண்டும் சொல்லேல்ல. நான் திரும்பவும் கதைக்கவும் அந்த மனிசன் பாத்திட்டு என்ன நினைச்சுதோ தெரியாது "எழும்படா கழுதை" எண்டு சொல்லி இவனை எழுப்பி வெளியால கலைச்சு இனி வகுப்புக்கும் வராதை எண்டு சொல்லிப் போட்டுது. எனகேண்டா "லைலா" வராத கவலையுடன் என்னால அநியாயமா ஒருத்தன் வெளியால போறானே எண்ட கவலையும் தொற்றிக்கொண்டது.

இவருக்கு சில விசயங்கள பழக்கின குருஜி நான் தான் but பிற் காலங்களில இவன் குருவை மிஞ்சின சீஷன் ஆகிட்டான். இவனுக்கு புத்தகங்கள் வாசிகிறது எண்டால் நல்ல விருப்பம். முந்தி சாண்டில்யனின் "கடல் புறா", சுஜாதாவிண்ட சில புத்தகங்கள் எண்டு எடுத்துக் கொண்டு வருவான். நாங்களும் ஆட்டயப் போட்டு வாசிக்கிறது தான். சந்திரசேகரன், யூளின் போன்ற ஆக்களிண்ட பழைய கணிதப் புத்தகங்களும் கொண்டு வருவான். A /L காலங்களில Landon A /L passpaper புத்தகங்களும் எடுத்துகொண்டு வருவான். அருளரும் அந்த பேப்பர்களில சில கணக்குகள சுட்டு "எங்க இதை செய்யுங்கோ பாப்பம்" எண்டு சொல்லிக் கனக்க வாசிக்கத துடங்க இவனும் இது அங்க வந்தது இங்க வந்தது எண்டு துடங்கீடுவான். அந்தாளும் "டேய் கதைக்கிறத விட்டுபோட்டு கணக்க எழுதுங்கோ" எண்டு சொல்லும். இதே விசயத்த இவன் ஜெயந்தன் வாத்தியிலையும் பாவிச்சு தானும் குழம்பி அந்த ஆளையும் குழப்பி விடுவான். இங்க அங்க எண்டு ரெண்டு மூண்டு விசயங்கள சேர்த்து அந்தாள் "மருமோன்" எண்டு கொண்டு பின்னால வரேக்க பாத்து இழுத்து விடுவான். அந்தாளும் பின்வாங்கில் முழுக்க சோக்கால கிறுக்கி ஏதாவது ஒரு முடிவுக்கு வரும். இவன் அதுக்கும் ஏதாவது சொல்ல அவரும் வீட்ட போய் பாத்திட்டு வந்து சொல்லுறன் எண்டு சரண்டர் ஆகிடுவார்.

எனக்கு வகையீடு தொகையீடு படிப்பிச்சது இவன் தான். இண்டைக்கும் நான் அதை மறக்கேல்ல. pure maths ல அந்த பகுதியில இவன் விண்ணன். நாங்கள் இரண்டு தளத்தில x ,y வச்சு வகையிடெக்க இவன் 3D ல z தள வகையீடு பற்றி எல்லாம் விளங்கப் படுத்தியிருக்கிறான். Physics ல பிரபாவிண்ட gates விளங்காமல் நான் முளிக்கேக்க "நாசா"வில வச்சு அதுக்குள்ள இலத்திரன் ஓடும் இதுக்குள்ள பூறும் எண்டு சொல்லி எனக்கு விளங்கப் படுத்தினதும் இவன் தான். ஒருக்கா நாங்கள் ஏந்தி வீட்ட வழமையா செய்யிற chemistry paper class ல இவன் Kmno4 பற்றி ஒரு விளக்கமே குடுத்தான், சுத்தி நிண்ட நான், குட்டி ஏந்தி, ஆடு, திலக், காண்டி எல்லாருமே பயந்து போனம். இவனுக்கு ஏராளமான விசயங்களில knowledge இருக்கு. சிலதில எங்களையும் பேய்காட்டிப் போடுவான் ஆனால் அதுக்கும் ஏதாவது ஒரு விளக்கம் வச்சிருப்பான். சில வாத்தி மாறிட்ட இவன் சின்சியரா எழும்பிநிண்டு கேள்வி கேக்கிறது என் போன்ற பலருக்கும் நல்ல விருப்பம். அந்த gap ல தான் நாங்கள் ஸ்கோர் பாக்கிறது, sms reply பண்ணுறது, அடுத்த வகுப்பில இருக்கிற கவிக்கு ஏதாவது சொல்லுறது, வரவேண்டிய ஆக்கள் வந்திருகினமோ எண்டு பாக்கிறது. ஒருக்கா இப்பிடித்தான் இவன் ஆரோ வாத்தியிண்ட உயிரை வாங்கேக்க Pulsar - சஞ்சீ வெளியில போய் யாரோடையோ போன் கூட கதைச்சுப் போட்டு வந்தவன்.

தொடரும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் உதுகளை நினைச்சால் தலை சுத்தும். பீக்கோன் ல சண்ணர் என்னை படுத்தினபாடு இருக்கே???? :o:rolleyes:

அதை விட பிறேமா ரீச்சர் :unsure::( சொல்லி வேலையில்லை.

தொடர்ந்து எழுது தும்ப்ஸ்.. அந்த நாள் ஞாபகம் வந்ததே.. நண்பனே..நண்பனே.. :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமாவாசையட்டை ஆங்கிலம் படிப்பிச்ச ராஜகுமாரன் சேரை தெரியுமெல்லே?

அந்தாள் என்னை மருமோன் என்று தான் சொல்லும். ஏதோ கொஞம் படிக்க கூடிய பொடியள்ளை ஒராளா இருந்தம் ஆங்கிலத்திலை கொஞ்சம் பரவாயில்லை ஆனால் நான் கார்த்தி,ராஜ்,மயூரன் எல்லாரும் பின்,இல்லை இடை பெஞ் தான் இந்தாள் வந்தால் என்னை கூப்பிட்டு முன்வாங்கில்லை இருத்திவிடுவான் பாவி.. பொடியள் வேறை என்னை மருமோன் என்று நக்கல் அடிக்க தொடங்கிவிட்டாங்கள் பார்ட்தேன் சரிவராது ஒரு நாள் கூப்பிட்டு முன்னுக்கு வர சொல்ல முடியாது என்று சொல்லிட்டேன்.

ஒன்றில் முன்னுக்கு வந்து இரு இல்லாட்டி வெளிய போ என்று சொல்ல வெளிய வந்திட்டேன். என்ரை கெட்டகாலம் கிரகம் அமாவாசை வந்து கேட்டான் ஏன்டா வெளிய நிக்குறாய் என்று பிந்தி வந்திட்டேன் அதான் வெளிய நிக்குறேன் என்று சொன்னேன் நல்ல காலம் அவன் அடிக்கேல்லை.

அதெல்லாம் ஒரு காலம்.. :icon_idea:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமாவாசையட்டை ஆங்கிலம் படிப்பிச்ச ராஜகுமாரன் சேரை தெரியுமெல்லே?

அந்தாள் என்னை மருமோன் என்று தான் சொல்லும். ஏதோ கொஞம் படிக்க கூடிய பொடியள்ளை ஒராளா இருந்தம் ஆங்கிலத்திலை கொஞ்சம் பரவாயில்லை ஆனால் நான் கார்த்தி,ராஜ்,மயூரன் எல்லாரும் பின்,இல்லை இடை பெஞ் தான் இந்தாள் வந்தால் என்னை கூப்பிட்டு முன்வாங்கில்லை இருத்திவிடுவான் பாவி.. பொடியள் வேறை என்னை மருமோன் என்று நக்கல் அடிக்க தொடங்கிவிட்டாங்கள் பார்ட்தேன் சரிவராது ஒரு நாள் கூப்பிட்டு முன்னுக்கு வர சொல்ல முடியாது என்று சொல்லிட்டேன்.

ஒன்றில் முன்னுக்கு வந்து இரு இல்லாட்டி வெளிய போ என்று சொல்ல வெளிய வந்திட்டேன். என்ரை கெட்டகாலம் கிரகம் அமாவாசை வந்து கேட்டான் ஏன்டா வெளிய நிக்குறாய் என்று பிந்தி வந்திட்டேன் அதான் வெளிய நிக்குறேன் என்று சொன்னேன் நல்ல காலம் அவன் அடிக்கேல்லை.

அதெல்லாம் ஒரு காலம்.. :icon_idea:

ராஜ்குமார் சேரை மறக்க முடியுமே? அவர் "அந்த" விசயங்களில கொஞ்சம் கில்லாடி. பெட்டயளப் போட்டு அறு அறு எண்டு அறுப்பார். என்னோட நல்ல மாதிரி. எனக்கு ஆங்கிலம் முந்தியே கொஞ்சம் ஓடும் எண்டதால பிரச்சினை இருக்கவில்லை. ஹாட்லியிலே எங்களுக்கு படிப்பிச்சவர். அவரின் "British Love" என்ற யாழ் மாவட்டத்தில் போட்டிக்குப் போய் பரிசு பெற்ற நாடகத்திலும் நடித்திருந்தேன். பின்னர் யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத் துறையில் வேலை செய்தவர் என நினைகிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A/L கிட்டக் கிட்ட நாங்கள் வலு முமுரமாத்தான் படிச்சனாங்கள். நானும் மொபைல நிப்பாட்டிப்போட்டு "நாசா"வுக்குள்ள இருந்து பழைய பழைய கணக்குகளில மண்டயப் போட்டு உடைசிருக்கிறம். போதாக் குறைக்கு இவன் சோக்கையும் எடுத்துக் கொண்டு போட்டில கிறுக்கத் தொடங்கினான் எண்டா கண்டபடி அலம்பி, மற்ற ஆக்களையும் குழப்பி, தானும் குழம்பாமல் ஒரு முடிவுக்கு வரமாட்டான். கெங்காதரன் சேர், பிரபா, அருளர், சிவகுமார், ஜெயந்தன் வாத்தி எண்டு எல்லாருக்கும் இவன் ஒரு கட்டத்தில வில்லன் மாதிரி வந்திட்டான். "அடேய் பகீரதா......" எண்டு எஸ்.பி வாத்தி இழுக்கேக்கையே இவன் அந்தாள் படிப்பிக்கிற பீல்டிக்கு எந்த விதமும் சம்பந்தம் இல்லாத ஒரு பீல்டையும் அதையும் கொழுவி ஒரு கேள்வி கேப்பான். ஒரு உதாரணத்துக்கு அவர் மொத்தலில pattern கணக்கு (அவரிட்ட படிச்ச ஆக்களுக்கு மட்டும் விளங்கும்., அவர் short cut method எண்டு சொல்லுற அறுவை) செய்யேக்க இவன் அதோட எரியத்த கொழுவி ஏதாவது விசர்க் கேள்வி கேப்பான். அவரும் இது 1977 இல 37 ஆவது MCQ ல வந்த கேள்வி எண்டு சொல்லிப் போட்டு ஏதாவது ஒரு விளக்கம் குடுப்பார். எங்கட lab இக்குப் போய் அங்க எதனோல், மெதனோல் எண்டு எல்லா அட்ககோலையும் மிக்ஸ் பண்ணி ஆராய்ச்சி செய்யிற ஆழவரரிட்டையும் ஏதாவது கேள்வி கேக்க அவரும் வேலை செய்யாத பழைய வோல்ட் மானி, அம்பியர் மானி ஒரு பழைய பற்றி எண்டு எதையாவது குடுத்து கலைச்சு விடுவார் - அவரும் இவனுக்கு ஒருவகையில இவனுக்கு சொந்தம் எண்டு நினைகிறன். இவன் நான் அறிய சோலிக்குப் போகாத ஒரே ஒரு வாத்தி எண்டா அது மணியம் சேர் தான். (தண்ட ஏரியா இல்லை எண்டு விட்டிருப்பான் போல.)

சுனாமி அடிச்ச காலத்தில நான் இவருக்கு ஒரு பழைய போன் குடுத்த கதையை இன்னொரு இடத்தில சொல்லியிருந்தவர். அதை இடுப்பில கொழுவிக்கொண்டு ரோட்டுவழிய திரிஞ்சா சனம் உளவுத் துறை எண்டுதான் நினைக்கும். அந்தளவுக்கு "வோக்கி" மாதிரிப் பெரிய சாமான் அது. பிற் காலங்களில் அவரையும் இழுத்துக் கொண்டு எங்கயாவது ஊர் மேய வெளிக்கிடவும் அதுவே உதவியது. சுனாமி அடிச்ச உடனேயே, நான் குட்டி வீட்ட போய் அவனையும் இழுத்துக் கொண்டு நேர இவனட வீட்ட தான் போனனாங்கள். முழங்கால் அளவு கடல் தண்ணீக்க RX100 ஐ விட்டாச்சு. ஒரு கட்டத்தில சைலேன்சர் தண்ணீக்குக் கீழையும் போய் வாற புகை எல்லாம் குமிழி குமிழியா வரவர இவரிண்ட வீட்ட போனா, ஆள் ஒரு உடுப்பு பாக்கையும் தலையில வச்சுக் கொண்டு வெளியால வாரார். நாங்கள் முதலில போனது விடுப்பு பாக்கிறதுக்குத்தான் பிறகுதான் அதிண்ட தார்ப்பரியம் எங்களுக்கும் புரிய ஆரம்பிச்சுது.

A /L - பிற்பட்ட காலப்பகுதி.....

வழமையா A/L முடிஞ்சா பிறகு எல்லாரும் ஒருக்கா கொழும்புப் பக்கம் பொய் வாறது அந்தக் காலத்தில நடைமுறை வழக்கா இருந்திச்சு. கொழும்பில பெரியம்மா இருக்கிறா எண்டு சாட்டிக்கொண்டு இவன் முதலே போயிட்டான். நான், குட்டி, ஏந்தி எண்டு கொஞ்சப் பேர் பிறகு போன நாங்கள். ரிசல்ட் வந்து ரெண்டு மாதத்தில இவனும் திரும்பி வந்திட்டான். பிறகென்ன திரும்பியும் வேதாளம் முருங்க மரத்தில ஏறிய கதையா எங்கட பழைய கூத்துக்கள திரும்பியும் தொடங்கினம். இந்த முறை சோதினை முடிஞ்சா கையோடே இவனும் வெளிகிட்டிடான். நான் வெளிக்கிட ஒரு மாதம் பிந்திப் போச்சு. கொழும்பில நான் இருக்கிறது மனிங் பிளேஸ், இவனிண்ட பெரியம்மா வீடு இருந்தது W.A சில்வா மாவத்தை. ரெண்டும் பக்கத்துப் பக்கத்து தெரு எண்டதால பாதி நேரமும் நான் அங்க தான் நிக்கிறது. போதாக் குறைக்கு கொள்ளுப்பிட்டி விஸ்டம், பிரிட்டிஷ் கௌன்சில் எண்டு எங்கயாவது பொழுது போகும். பிறகு எனக்கு இவண்ட பெரியம்மா வீட்டையும் போகப் பயம் ஏனென்டா நல்ல பெடியன நான் கொண்டேத் தான் பளுதாக்கிறன் எண்டு நினைப்பினம் எல்லோ. இதால கீழ நிண்டுகொண்டு போனடிச்சு ஆள வரச் சொல்லுறது. பிறகு அவேண்ட வீடுக்குள போகாமல் நேர மொட்டை மாடிக்கு போய் அங்க நிண்டு கொண்டு சுத்திவர இருக்கிற நல்ல காட்சிகளைப் பாத்துக் கொண்டு ஏதாவது அலம்பிறது. வெள்ளவத்தை பிளட் வழிய இருக்கிற ஆக்களுக்கு மொட்டை மாடி காட்சிகள் நல்லா விளங்கும். பிட் காலத்தில இவர் ஐ.பி.சி ரோடுக்கு மாறினாப் பிறகு மொட்டை மாடிக்கு கட்டிட வேலையால் காரணமா போக முடியேல்ல. போன முறை இலங்கை வந்த பொது போய்ப் பார்த்தா இது இன்னும் வளமான லோகேசன் போலத் தெரிஞ்சிச்சு, ஐ மீன் யு கான் சி தெ பீச்.

தொடரும் .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அந்த நாள் ஞாபகம் வந்ததே.[/size]

  • 4 weeks later...

வணக்கம் தும்பளையான்,

கடந்த சில வருடங்களாக உங்களை யாழில் பல கருத்தாடல்களில் சந்தித்துள்ளேன். என்னுடன் யாழில் என்றும் இனிமையாக கருத்துக்களை பகிர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்றுதான் உங்கள் வாழ்க்கையின் ஓர் முக்கியகட்டத்தின் அனுபவங்களை வாசித்து அறிந்துகொண்டேன், மிக்க மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இவ்வளவு விரிவாக யாராவது தமது க.பொ.த.உ வயது அனுபவங்களை பகிர்ந்து நான் வாசித்ததாக எனக்கு நினைவு இல்லை. உங்கள் பழைய அனுபவங்களை விபரிக்கும் கதையை வாசித்தபோது எவ்வளவோ பல விடயங்களை அறியமுடிந்தது.

நான் 95இல் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறினேன். ஒரே ஒரு தடவை மட்டும் ஹாட்லிக்கல்லூரிக்கு வந்துள்ளேன். எனது நண்பன் ஒருவன் ஈழநாதம் பத்திரிகையில் ஆசிரியராக விளங்கினான். அவன் ஏதோ கட்டுரை எழுதுவதற்காக (எதுபற்றியது என்று தற்போது நினைவில் இல்லை) ஹாட்லிக்கல்லூரிக்கு வந்து, ஹாட்லியின் மிகவும் பழைய அதிபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அவரையும் பேட்டி கண்டான். அப்போது அவனுடன் நானும் வந்தேன். இன்னோர் தடவை க.பொ.த.உ பரீட்சையில் தேசிய அளவில் சிறந்தபேறுகளைப்பெற்ற மாணவர்களை ஈழநாதம் பத்திரிகைக்காக பேட்டிகாண்பதற்காக சென்றபோது வர்த்தகத்துறையில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற தும்பளையில் உள்ள ஓர் மாணவனின் (ஹாட்லி மாணவன் என்று நினைக்கின்றேன்) வீட்டுக்கு எனது நண்பனுடன் பேட்டி காண்பதற்காக சென்றுள்ளேன். அது தவிர வேறு சில சமயங்களிலும் வடமராட்சிக்கு வந்துள்ளேன். நான் யாழ்ப்பாணத்தில் முழுமையாக பார்க்காத இடங்கள் இரண்டு உள்ளன.

ஒன்று: தீவுப்பகுதி - இதை முற்றிலுமாகவே ஒருபோதும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு தடவை மூன்றாம் வகுப்பில் பள்ளிச்சுற்றுலாவின்போது மண்டைதீவில் அமைந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை பார்ப்பதற்கு சென்றபோது ஏதோ பிரச்சனை காரணமாக அரைவழியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுவிட்டோம். இரண்டு: வடமராட்சி, தென்மராட்சி. மிகவும் அரிதாகவே சில தடவைகள் இந்த இடங்களைப்பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், வலிகாமம் பெரும்பாலும் எல்லாப்பகுதிகளும் அத்துப்படி.

உங்கள் அனுபவங்கள் நான் அறிந்திராத, நான் அனுபவிக்காத பல்வேறு விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது. வெவ்வேறு காலங்களில் பிறந்து, வெவேறு சூழ்நிலைகளில் வளர்ந்த நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலப்பகுதிகளுக்குரிய வரலாற்றின் சான்றுகளாக வாழ்கின்றோம். எங்கள் ஒவ்வொருவரினுடைய வாழ்வும் வித்தியாசமானது. இதேபருவவயதில் இப்போது யாழ்ப்பாணத்தில் ஹாட்லிக்கல்லூரியில் கற்கின்ற மாணவனுக்கு உங்களைப்போன்றது அல்லாத இன்னுமோர் வித்தியாசமான வேறுபட்ட அனுபவம் கிடைக்கலாம். நாங்கள் எவ்வளவு தூரம் ஒருவருடன் ஒருவர் பல்வேறு வகைகளில் வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும் ஏதோவகையில் ஒருவருடன் ஒருவர் அன்யோன்யமாக பிணைப்புக்களையும் கொண்டுள்ளோம்.

வாழ்த்துக்கள்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் வாவ்...!

இன்றுதான் சற்று ஆறுதலாக உங்கள் அனுபவப்பதிவுகளை படித்தேன். சுவார்சியமாக எழுதுகிறீர்கள் வாசிக்க வாசிக்க ஆவலைத் தூண்டுகிறது.... :rolleyes:

தும்பளையான்,

அருமையாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஹாட்லிக்கல்லூரி அனுபதி பற்றிக் குறிப்பிட்டதை வாசித்தபோது, எனது யாழ் இந்து அனுமதிக்காலம் அப்படியே மனதில் விரிந்தது. உண்மைதான், யாழில் குறிப்பிட்ட பாடசாலை உள்நுழைவுகள் பல்கலைக்கழகத் தெரிவைப் போன்றே பார்க்கப்பட்டன.

யாழ்பாணத்தில் வகுப்பறையில் phone எஸ்.எம்.எஸ் என்று நீங்கள் எழுதுவை வாசிக்க எனக்கு வியப்பாக இருக்கிறது. நாங்கள் யாழில் படித்த காலங்களிற்கும் (89ம் ஆண்டோடு சரி) உஙகள் விபரிப்பிற்கும் இடையே ஏகப்பட்ட வளர்ச்சிகள் தெரியுது.

இன்னுமொரு விடயம் பார்த்தேன், 1996, நான் Canadaல் பல்கலைக்கழகம் முடிந்து வேலையில் நுழைந்த வருடம். நீங்கள் ஹாட்லியில் ஆறாம் ஆண்டில் நுழைந்திருக்கிறீர்கள். என்தலையில் எங்காவது நரை தெரிகிறதா என்று உற்றுப் பார்க்கவேண்டும் என்றொரு உணர்வு உள்ளுரக் குறுகுறுக்கிறது. :D

இனிமையான பதிவிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவபகிர்வு நல்லாய் இருக்கு

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்,

அருமையாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஹாட்லிக்கல்லூரி அனுபதி பற்றிக் குறிப்பிட்டதை வாசித்தபோது, எனது யாழ் இந்து அனுமதிக்காலம் அப்படியே மனதில் விரிந்தது. உண்மைதான், யாழில் குறிப்பிட்ட பாடசாலை உள்நுழைவுகள் பல்கலைக்கழகத் தெரிவைப் போன்றே பார்க்கப்பட்டன.

யாழ்பாணத்தில் வகுப்பறையில் phone எஸ்.எம்.எஸ் என்று நீங்கள் எழுதுவை வாசிக்க எனக்கு வியப்பாக இருக்கிறது. நாங்கள் யாழில் படித்த காலங்களிற்கும் (89ம் ஆண்டோடு சரி) உஙகள் விபரிப்பிற்கும் இடையே ஏகப்பட்ட வளர்ச்சிகள் தெரியுது.

இன்னுமொரு விடயம் பார்த்தேன், 1996, நான் Canadaல் பல்கலைக்கழகம் முடிந்து வேலையில் நுழைந்த வருடம். நீங்கள் ஹாட்லியில் ஆறாம் ஆண்டில் நுழைந்திருக்கிறீர்கள். என்தலையில் எங்காவது நரை தெரிகிறதா என்று உற்றுப் பார்க்கவேண்டும் என்றொரு உணர்வு உள்ளுரக் குறுகுறுக்கிறது. :D

இனிமையான பதிவிற்கு நன்றி

இன்னுமொருவன் நான் உங்களுக்கு இத்தனை வயதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தேன் கிட்டதட்ட சரியாகத் தான் கணித்திருக்கிறேன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.