Jump to content

பேய் பிசாசு அனுபவம்..

Recommended Posts

மல்லை அண்ணா தமிழ் சூரியன் அண்ணா நல்ல அழகிய தமிழில் எழுதி இருக்கார் சூப்பரா இருக்கு அவரே தொடரனும் என்றது தான் என்னோட ஆசை சோ அண்ணா தொடர் உங்கள்

சுண்டலுக்கு இந்த தொடரை எழுத நேரமின்மையால் ..................தமிழ்சிறி அண்ணாவிடம் தாழ்மையாக கேட்கப்படுகிறது ...........அழகான [பே] படங்களுடன் ........நன்றி :D

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

ஆடிச்சிலுப்பினாள் ஆலமரத்தடி காளி அவள் அடர்ந்த கரும் கேசம்

கூடியடித்ததடி மின்னல், கூவென்று காற்றும், சோவென்று மழையும்

நாடிவிட்டதடி, நெஞ்சின் நினைவும், நாவந்த பேச்சும், மூச்சும் போய்

தேடி சுண்டலை செய்வதறியாமல் கோவென்று கத்தினேன் கனவில்

:lol:

Link to comment
Share on other sites

பிள்ளையார் புடிக்கப்போய் குரங்கு புடிச்ச கதையாய் இந்த திரி வந்தடைந்திருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிசிலுப்பினாள் ஆலமரதடி காளி அவள் அடர்ந்த கரும் கேசம்

கூடியடித்தடி மின்னல், கூவென்று காற்றும் சோவென்று மழையும்

நாடிவிட்டதடி, நெஞ்சில் நினைவும் நாவந்த பேச்சும் மூச்சும் போய்

தேடி சுண்டலை செய்வதறியாமல் கோவென்று கத்தினேன் கனவில்

:lol:

:D.

பிள்ளையார் புடிக்கப்போய் குரங்கு புடிச்ச கதையாய் இந்த திரி வந்தடைந்திருக்கிறது....

நீங்க என்னை குரங்கு என்று சொன்னதை....குரங்குகளின் சார்பில் வன்மையா கண்டிக்கிறன்

Link to comment
Share on other sites

ஊரில சில மாசங்கள் படிச்ச அனுபவம்.

இரவு 7 மணிக்கு கணிதம் ரியூஷன். கணக்கு வாத்தியார் வீடு மாரியில வெள்ளம் ஓடுகிற ஒரு ஒழுங்கைக்குள்ள. கோடையில ஒரே புழுதி.

4 பேர் படிக்கப் போனோம். ஒருத்தன் சரியாப் பயந்தவன்.

போற வழியில ஒரு வைரவர் கோயில். இரவில பிந்தி சனம் கரியர் உள்ள சையிக்கிள்ள அதால போகாது. வைரவர் கரியர்ல‌ ஏறி இருக்கிற மாதிரி ஒரு பீலிங். அந்த நேரம் சையிக்கிள் பாரமாகவும் இருக்குமாம். உழக்க கஸ்டமாம்.

இருட்டுப்பட்ட ஒரு நேரம் நாங்க மூண்டு பேர் இந்த பயந்தான் கொள்ளிய இன்னும் வெருட்ட என்று சொல்லி வாத்தியார் வீட்டு ஒழுங்கைக்குள்ள இருக்கிற பனங்கூடல் ஒன்றுக்குள்ள அம்புஷ்ல வெய்டிங்கு..

இவர் பாடிப் பாடிக்கொண்டு வாறார்... (பயத்தில)

அவன் பெயர பொம்பிள மாதிரி மெல்லமாக‌ இழுத்து இழுத்து கூப்பிட இவன் எடுத்தான் ஓட்டம்.. சொல்லி வேலயில்ல.

**********************************

வருடங்கள் ஓடின...

இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில இருந்த இயக்கத்தில மிச்ச சொச்சம் எல்லாத்தையும் துடைச்சு துப்பரவாக்கி எடுத்துக்கொண்டிருந்தது.

அப்ப இவன் தான் எங்கட ஊர் பொறுப்பாளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு இந்த தொடரை எழுத நேரமின்மையால் ..................தமிழ்சிறி அண்ணாவிடம் தாழ்மையாக கேட்கப்படுகிறது ...........அழகான [பே] படங்களுடன் ........நன்றி :D

யாராவது அவ்வழியே வரமாட்டார்களா என்று மனம் ஏங்கியது .....இராட்சத கொடிமின்னலின் ஒளியில் .ஆலமரத்தின் கீழ் அந்த அழகான பெண்ணின் உருவம் தலை விரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.........................................

banyan-tree-aerial-root.jpgtrack_ghost25.jpg

ம‌ன‌மோ... ப‌க்,ப‌க் என்று அடித்துக் கொண்டிருக்க‌... தேவாரம் ஒன்றை மனதுக்குள் பாடினால்.. பயம் குறையும் என்று நினைத்து, "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி, காடுடைய சுடலை பொடி பூசிய‌ன்...." ச்சாய்... தேவாரத்திலும், சுடலை வர... என‌க்கு பயம் அதிகமாகி விட்டது. நான் நிற்கும் இடத்திலிருந்து சுடலைக்குள் நோட்டம் விட்ட போது.... முதல் நாள் மழையில், நள்ளிரவு எரித்த சடலம், ஈர விறகு என்ற படியால்...

PT-BurningCarSmokeAnimation-01s.gif

கரிக்கோச்சி மாதிரி புகைவருவதும், அடிக்கிற காத்துக்கு கொழுந்து விட்டு எரிவதுமாக இருந்தது. என்ன... இழவுக்கோ... உதயன் பேப்பரில்... "இளம் பெண் தூக்குப் போட்டு, சாவு" என்ற செய்தி படத்துடன் வர... ப‌யம் அதிகரித்து விட்டது. இப்போ... சைக்கிள் மோகினி பிசாசுக்கு முன்னுக்கு வர... அவள், கையை... நீட்டி, "எக்சியூஸ் மீ..." என்றாள். என்ன... கோதாரியப்பா.... பேய் இங்கிலீஸ் கதைக்குது... என்று யோசிக்கவும்... நேரமில்லை.

சைக்கிளை வேகமாக மிதிக்க... விர்.... என்று, செல் அடித்த மாதிரி... சுடலையிருந்து தேங்காயளவு நெருப்பு உருண்டை எனது சைக்கிளின் முன் வந்து விழ,

images.jpeg

அது மண்டையோடு என்று தெரிய, எனக்கு... மயக்கம் மாதிரி வந்திட்டுது. இப்ப, இன்னும் பலம் கொண்ட மட்டும் சைக்கிளை, உழக்க அது, உழக்குப் படாமல்... சைக்கிள் செயின், படார்.......... என்று கழண்டு விட்டது. அதை... சரி செய்து கொண்டு, காத்தோட்டி வயிரவரை....devil-smiley-5.gif நினைச்சுக்கு கொண்டு சைக்கிளில்... ஏறி, உழக்கத் தொடங்கினேன்.

திடீரென்று... மல்லிகைப் பூ வாசம், மூக்கைத் துளைக்க... சுடலையடியில் எப்படி...

-%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B%2B8%2B71%2B%2B%2B1%2B442.jpg

மல்லிகைப் பூ வாசம் வரும்... என்று....திரும்பி பார்க்க...

சைக்கிள் பின் கரியரிலை.. அந்த மோகினிப் பிசாசு, பல்லைக்காட்டி... சிரித்த படி இருந்தது.

nov13-150x300.jpg

இப்போ.... எவ்வளவு பலம் கொண்ட மட்டும், சைக்கிளை... உழக்கியும், சைக்கிள் பாரமாக... இருந்தது.

பிணம் பாரமாக... இருக்கும், ஆரோ... சொன்னது, ஞாபகத்துக்கு வர.... என்னுடைய... சைக்கிளில்... பிணமா, என்று நினைக்கவே... எனக்கு கால்சட்டையில்... "உச்சா" வந்திட்டுது.ghost-17.gifghost-17.gif

Link to comment
Share on other sites

பிரமாதம் பிரமாதம் ...................சிறி அண்ணா ............இன்னும் தொடருங்கோ ............இறுதியில் இதுவும் கனவென்று முடித்து விடவேண்டாம்

:D :D :D

உண்மையில் இப்ப தான் எனக்கு பயமா இருக்கு .............. :unsure::D

பச்சை...............மு....

Link to comment
Share on other sites

ஊரில சில மாசங்கள் படிச்ச அனுபவம்.

இரவு 7 மணிக்கு கணிதம் ரியூஷன். கணக்கு வாத்தியார் வீடு மாரியில வெள்ளம் ஓடுகிற ஒரு ஒழுங்கைக்குள்ள. கோடையில ஒரே புழுதி.

4 பேர் படிக்கப் போனோம். ஒருத்தன் சரியாப் பயந்தவன்.

போற வழியில ஒரு வைரவர் கோயில். இரவில பிந்தி சனம் கரியர் உள்ள சையிக்கிள்ள அதால போகாது. வைரவர் கரியர்ல‌ ஏறி இருக்கிற மாதிரி ஒரு பீலிங். அந்த நேரம் சையிக்கிள் பாரமாகவும் இருக்குமாம். உழக்க கஸ்டமாம்.

இருட்டுப்பட்ட ஒரு நேரம் நாங்க மூண்டு பேர் இந்த பயந்தான் கொள்ளிய இன்னும் வெருட்ட என்று சொல்லி வாத்தியார் வீட்டு ஒழுங்கைக்குள்ள இருக்கிற பனங்கூடல் ஒன்றுக்குள்ள அம்புஷ்ல வெய்டிங்கு..

இவர் பாடிப் பாடிக்கொண்டு வாறார்... (பயத்தில)

அவன் பெயர பொம்பிள மாதிரி மெல்லமாக‌ இழுத்து இழுத்து கூப்பிட இவன் எடுத்தான் ஓட்டம்.. சொல்லி வேலயில்ல.

**********************************

வருடங்கள் ஓடின...

இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில இருந்த இயக்கத்தில மிச்ச சொச்சம் எல்லாத்தையும் துடைச்சு துப்பரவாக்கி எடுத்துக்கொண்டிருந்தது.

அப்ப இவன் தான் எங்கட ஊர் பொறுப்பாளன்.

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nov13-150x300.jpg

இப்போ.... எவ்வளவு பலம் கொண்ட மட்டும், சைக்கிளை... உழக்கியும், சைக்கிள் பாரமாக... இருந்தது.

பிணம் பாரமாக... இருக்கும், ஆரோ... சொன்னது, ஞாபகத்துக்கு வர.... என்னுடைய... சைக்கிளில்... பிணமா, என்று நினைக்கவே... எனக்கு கால்சட்டையில்... "உச்சா" வந்திட்டுது.ghost-17.gifghost-17.gif

சுண்டலுக்குக் கொஞ்ச நாளைக்குச் 'சவராத்திரி', அடச்சீ 'சிவராத்திரி போலத்தான் கிடக்குது!

சரி. நீங்க மிச்சக் கதையைச் சொல்லூங்கோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு கிராமத்து, மிளகாய்த் தோட்டம்!

கரும்பேட்டுக் குஞ்சுகளாக, மிளகாய்க் கன்றுகள், வளர்ந்திருந்தன!

இண்டைக்கு, 'யூரியா' அடிச்சுவிட்டாப், பின்னேரம், வாற மழைக்கு, அந்த மாதிரி எழும்பும் என நினைத்தபடி, குமரேசர் வெகு வேகமாகப் பசளையடித்துக் கொண்டிருந்தார்,

பக்கத்துத் தோட்டக்காரன், மணியத்தாரும், போன கிழமை, இருந்தாப் போலப், பஞ்சமியில போய்ச் சேர்ந்திட்டார்!

மணியத்தாற்ற மனிசியாலை, ஏலாது என்ட படியால, அந்தத் தோட்டத்துக்கும், குமரேசர் போறையடிச்சு, ஒரு மாதிரி முடிச்சிட்டார்.

பின்னேரம், வர வேண்டிய அந்த. நாசம் கெட்ட மழையும், கையை விடக், குமரேசர் பதறிப் போனார்.

நாளைக்கு அடிக்கப் போற வெயிலிலை, எல்லா மிளகாய்க் கண்டுகளும், எரிஞ்சு துலைக்கப் போகுது!

பதறிப் போன குமரேசர், பத்தாக் குறைக்குப் பக்கத்து வீட்டுக்காரற்றை தோட்டத்திலும், இந்தக் கண்டறியாத 'யூரியாவைப் போட்டுத் துலைச்சிட்டன், என்ற படி, மகனையும் கூட்டிக் கொண்டு, இரவில் தோட்டத்துக்கு ஓடினார்.

மகனைத் துலாவில் ஏற்றியவர், தண்ணீருக்குப் பாத்தி கட்டத் துவங்கினார்!

கொஞ்ச நேரத்தில், மகன் களைத்துப் போய், அப்பு, என்னாலை இனி ஏலாது, என்று போய்விட்டான்.

குமரேசரும், சரி, இனிப் பட்டையால எண்டாலும், விடுவம் என நினைத்து, கிணற்றை நோக்கி நடக்க, வாய்க்காலில் இன்னும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது!

குமரேசர், துலாவைப் பார்த்தார்.

அது மேலும், கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது!

குமரேசருக்கு,உதறலெடுக்க ஆரம்பிக்க, இருட்டில் துலாவைப் பார்க்க,துலாவில் நிற்பவர், வேட்டி, கீட்டி ஒன்றும் கட்டியிருந்ததாகத் தெரியவில்லை!

அவருக்குக் கால்களும், முழங்காலுக்குக் கீழ் இருக்கவில்லை

அங்கால, இங்கால,பதுங்கிக் கிதுங்கி, ஓடுவமேண்டால், தண்ணியும் நின்ற பாடில்லை! விட்டால், தண்ணியும், பாத்தி எல்லாத்தையும் உடைச்சுப் போடும் என்ற பயம் வேறு!

கொஞ்சம், துணிவை வரவழைத்துக் கொண்டு, ' அதாரது' என்று கேட்டார்! அவருக்கே, அவரது குரல், பிடி படவில்லை!

உடனே, துலாவிலிருந்த பதிலும் வந்தது.

அது நான் தான் 'மணியத்தார்'

குமரேசர் ஒரு முடிவுக்கு, வந்தவராய், தனது, வேட்டியைக் கழட்டி, மண்வெட்டியில்,சொருகி விட்டு, மெதுவாக, இருட்டோடு கலந்து, நழுவி விட்டார்!

மணியத்தாரின், வீட்டடியில் வந்த போது, பஞ்சமிக்கு, வைக்கப் பட்ட அரிக்கன் லாம்பு, மின்னிக் கொண்டிருந்தது!

அடுத்த நாள், குமரேசருக்குக், கடும் காய்ச்சல்!

ஊர் ஆக்களைக் கூட்டிக் கொண்டு, தோட்டத்திற்குப் போனவருக்கு, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது!

அவரது, வேட்டியைத் துலா, கட்டியிருந்தது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடசியா சாத்ஸ் அண்ணாண்ட பேய்க்கதை மாதிரி இல்லாம இருந்தா சரி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D அந்த மணியத்தார் நான் தான்..................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=3] பேயை பிடிச்சு கட்டுங்கப்பா[/size] :D[/size]

Link to comment
Share on other sites

எல்லாரும் பேயளைப் பத்தி கதைக்கிறியள் . ஆனால் எங்கடை முகத்தார் 2005 லேயே இந்த பேயளை பத்தி சிக்கெடுது பிரிச்சு மேய்ஞ்சு போட்டார் . நான் முகத்தாற்ரை ஒரு ரசிகன் . இப்ப அவர் எழுதாது எனக்கு பெரிய கவலை . அப்ப வாசகனாய் இருந்த நான் இதுகளை தரவேண்டி கிடக்கு .

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t5931-0.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் முகத்தார் அங்கிள் இப்ப திருமலையில என்ன செய்திட்டு இருக்காரோ தெரிய நன்றி அண்ணா

எங்களுடைய வம்பன்னா இருந்தாலும் இன்னும் அவருடைய எழுத்ஹுல்களால் யாழில். வாழ்ந்து கொண்டு தான் இருக்கார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பேயளைப் பத்தி கதைக்கிறியள் . ஆனால் எங்கடை முகத்தார் 2005 லேயே இந்த பேயளை பத்தி சிக்கெடுது பிரிச்சு மேய்ஞ்சு போட்டார் . நான் முகத்தாற்ரை ஒரு ரசிகன் . இப்ப அவர் எழுதாது எனக்கு பெரிய கவலை . அப்ப வாசகனாய் இருந்த நான் இதுகளை தரவேண்டி கிடக்கு .

http://www.yarl.com/...hp/t5931-0.html

பார்த்து முடித்தேன் உண்மையான பேய்க்கதை :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

வாய்க்காலில் இன்னும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது!

குமரேசர், துலாவைப் பார்த்தார்.

அது மேலும், கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது!

குமரேசருக்கு,உதறலெடுக்க ஆரம்பிக்க, இருட்டில் துலாவைப் பார்க்க,துலாவில் நிற்பவர், வேட்டி, கீட்டி ஒன்றும் கட்டியிருந்ததாகத் தெரியவில்லை!

அவருக்குக் கால்களும், முழங்காலுக்குக் கீழ் இருக்கவில்லை

அங்கால, இங்கால,பதுங்கிக் கிதுங்கி, ஓடுவமேண்டால், தண்ணியும் நின்ற பாடில்லை! விட்டால், தண்ணியும், பாத்தி எல்லாத்தையும் உடைச்சுப் போடும் என்ற பயம் வேறு!

-------

நான் ஊரில், இருந்த போது... இதனைப் போன்றதொரு பேய்க் கதையை கேள்விப்பட்டுள்ளேன்.

பஞ்சமியில் செத்தால்... அடுத்தடுத்து, அஞ்சு பேர் சாவார்கள் என்பது, உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயந்து பயந்து வாழுறதிலும்.. பேயோடும் வாழப் பழகிக்கனும்.. அப்ப தான் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில், இருந்த போது... இதனைப் போன்றதொரு பேய்க் கதையை கேள்விப்பட்டுள்ளேன்.

பஞ்சமியில் செத்தால்... அடுத்தடுத்து, அஞ்சு பேர் சாவார்கள் என்பது, உண்மையா?

அதுக்குத் தானே, எட்டு நாளைக்கு, விளக்குக் கொழுத்தி வைக்கிறவை!

பஞ்சமிப் பேய்க்கு, விளக்கைக் கண்டால், பயமாம்!

ஒரு நாள், விஷயம் தெரியாம, பெட்ரோ மாக்ஸ், லைற்றப் தொட்டுப் பாத்ததாம்! அதுக்குப் பிறகு, வெளிச்சத்துக்குக் கிட்டப் போறதில்லை என்று முடிவு கட்டினதாக் கேள்வி!

எனவே, பயப்பிடாதயுங்கோ. தமிழ் சிறி! :D

Link to comment
Share on other sites

அதுக்குத் தானே, எட்டு நாளைக்கு, விளக்குக் கொழுத்தி வைக்கிறவை!

பஞ்சமிப் பேய்க்கு, விளக்கைக் கண்டால், பயமாம்!

ஒரு நாள், விஷயம் தெரியாம, பெட்ரோ மாக்ஸ், லைற்றப் தொட்டுப் பாத்ததாம்! அதுக்குப் பிறகு, வெளிச்சத்துக்குக் கிட்டப் போறதில்லை என்று முடிவு கட்டினதாக் கேள்வி!

எனவே, பயப்பிடாதயுங்கோ. தமிழ் சிறி! :D

:D :D :D:icon_idea:

:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.