Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுக்க தொலைக்காட்சிகளில் காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு நிகழ்சிகள் நடைபெறும் .பாடசாலைகளிலும் தோறும பல சிறப்பு வைபவங்களும் நடைபெறும்.

ஆனால் இந்தியா காந்தி விரும்பிய காந்தி தேசத்தின் கால் பங்கு கூட நடைமுறையில் இல்லை .மத கலவரம் ,லஞ்சம் ,ஊழல்,பிரிவினை வாதம் என்று நிறைந்து உலகின் மிக கேவலமான நாடாக இருக்கின்றது ஏழைகளை நாயாக, தீண்டதகாதவர்கள் என்று ஒரு பிரிவினரை நாயிலும் கேவலமாக நடாத்துகின்றது.

காந்தியை இந்தியா நேசித்தால் காந்தியின் கொள்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் .

ஐரிஸ் விடுதலை வீரன் பொப்பி சாண்ட்ஸ் சொன்னான் "எமது விடுதலை என்பது எமது குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பு "என்று .

பெற்றோரை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு அவர்கள் பிறந்தநாளுக்கு மண்டபம் எடுத்து தாங்கள் குடித்து கும்மாளம் இடுவதும் எம்மவர் பலர் செய்வது .

மாவீரர்களுக்கு தமிழர்கள் செய்ய வேண்டியது அவர்கள் கனவை நனவாக்குவதுதான் ஒழிய வேறொன்றோம் இல்லை .தீர்வு கிடைத்ததும் பிரான்சில் இருக்கும் சாம்ஸ் எலிசி மாதிரி பெயர்கள் பொறித்த நினைவு மண்டபம் எழுப்பி விளக்கையும் கொழுத்தலாம் .

அதுவரை எதுவும் அவர்களுக்கானவை அல்ல .

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply

ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுக்க தொலைக்காட்சிகளில் காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு நிகழ்சிகள் நடைபெறும் .பாடசாலைகளிலும் தோறும பல சிறப்பு வைபவங்களும் நடைபெறும்.

ஆனால் இந்தியா காந்தி விரும்பிய காந்தி தேசத்தின் கால் பங்கு கூட நடைமுறையில் இல்லை .மத கலவரம் ,லஞ்சம் ,ஊழல்,பிரிவினை வாதம் என்று நிறைந்து உலகின் மிக கேவலமான நாடாக இருக்கின்றது ஏழைகளை நாயாக, தீண்டதகாதவர்கள் என்று ஒரு பிரிவினரை நாயிலும் கேவலமாக நடாத்துகின்றது.

காந்தியை இந்தியா நேசித்தால் காந்தியின் கொள்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் .

ஐரிஸ் விடுதலை வீரன் பொப்பி சாண்ட்ஸ் சொன்னான் "எமது விடுதலை என்பது எமது குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பு "என்று .

பெற்றோரை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு அவர்கள் பிறந்தநாளுக்கு மண்டபம் எடுத்து தாங்கள் குடித்து கும்மாளம் இடுவதும் எம்மவர் பலர் செய்வது .

மாவீரர்களுக்கு தமிழர்கள் செய்ய வேண்டியது அவர்கள் கனவை நனவாக்குவதுதான் ஒழிய வேறொன்றோம் இல்லை .தீர்வு கிடைத்ததும் பிரான்சில் இருக்கும் சாம்ஸ் எலிசி மாதிரி பெயர்கள் பொறித்த நினைவு மண்டபம் எழுப்பி விளக்கையும் கொழுத்தலாம் .

அதுவரை எதுவும் அவர்களுக்கானவை அல்ல .

[size=6]மாவீரர்களுக்கு தமிழர்கள் செய்ய வேண்டியது அவர்கள் கனவை நனவாக்குவதுதான் ஒழிய வேறொன்றோம் இல்லை[/size]

Edited by தமிழ்சூரியன்

மாவீரர்களுக்கு தமிழர்கள் செய்ய வேண்டியது அவர்கள் கனவை நனவாக்குவதுதான் ஒழிய வேறொன்றோம் இல்லை .தீர்வு கிடைத்ததும் பிரான்சில் இருக்கும் சாம்ஸ் எலிசி மாதிரி பெயர்கள் பொறித்த நினைவு மண்டபம் எழுப்பி விளக்கையும் கொழுத்தலாம் .

அர்ச்சுனின் யாழ் அடையாளத்தை இதுவரையில் யாரும் களவாடவில்லைத்தானே? :D .

நன்றாக்கத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

அரிச்சுனன் மாதிரி களுத்தில் தான் கண் இருக்க வேண்டும் என்று வாதிட்டிருக்கிறீர்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் தீவிர ரசிகரான இ.கலைஞன் ரிக்கெட் வாங்கி விட்டாரா :D

இசைஞானியின் தீவிர ரசிகரான இ.கலைஞன் ரிக்கெட் வாங்கி விட்டாரா :D

:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் தீவிர ரசிகரான இ.கலைஞன் ரிக்கெட் வாங்கி விட்டாரா :D

ரிக்கற் வாங்கிவிட்டார்.. :D எல்லோரும் அரசியல் கதைக்கிறதாலை கம்முன்னு இருக்கார்..! :lol:

நிழலி, நீங்கள் எழுதியதைப் பார்த்தபோது, நீங்கள் எனது கருத்துக்களை முழுமையாக வாசிக்காது எழுதியது போன்றிருந்தது. அதனால்தான் அப்படி எழுதியிருந்தேன். கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. அவற்றுக்கு இல்லாத எதிர்ப்பு ஏன் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் இருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கனடாவில் தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைக்க வேண்டுமென்பதில் சிறீலங்கா அரசு மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதனை அறியாமல் பலர் அவர்களின் வலைக்குள் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதுவும் அப்படியானதொரு நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் நிகழ்ச்சிக்கெதிரான பிரச்சாரத்தை யார் நடத்துகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், இது அவசியம் என்று மட்டும் படுகிறது. நாம் இவ்வாறே எல்லாவற்றையும் கணக்கிலெடுக்காது விடுவோமானால், நாளை நமக்கு ஒன்றுமே மிஞ்சாது. இளையராஜா நிகழ்ச்சி நடத்துவதைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்த மாதத்தில் ஏன் நடத்தவேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இது திட்டமிட்ட சதியாகத்தான் தோன்றுகிறது. நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் இந்தப் பிரச்சாரம் தொடங்கியதில் எந்தப் பிழையும் நான் காணவில்லை. இளையராஜா நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே இங்கு வந்து விட்டார் என்பதற்காக பிரச்சாரத்தைச் செய்யாமல் இருக்க முடியுமா? எங்கள் மக்களின் உணர்வுகள் இன்னும் சாகவில்லை என்பதற்கு இது ஒரு சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

ரிக்கற் வாங்கிவிட்டார்.. :D எல்லோரும் அரசியல் கதைக்கிறதாலை கம்முன்னு இருக்கார்..! :lol:

நீங்கள் இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் நிகழ்ச்சிக்கு போங்கோ இசை...இப்படி புறக்கணி,பகிஸ்கரி என சொல்லுறதை நான் அதிக விலை கொடுத்து ரிக்கட் வாங்கிப் நிகழ்ச்சியைப் பார்க்க முன்னுக்குப் போவினம்

நவம்பர் மாதத்தில் கட்டுப்பாடு போடுபவர்கள் மற்றவர்கள் மீது தமது உணர்வுகளைத் திணித்துவிட்டால் தமது கடமைகளில் வெற்றிபெற்றுவிடமுடியும் என்று நினைக்கின்றார்களோ என்னமோ. நாம் கட்டுப்பாட்டுடன் இருப்பது ஒரு விடயம். மற்றவன் மீது கட்டுப்பாடு போடுவது இன்னோர் விடயம். நாம் கட்டுப்பாட்டுடன் இருக்காமல் மற்றவன் மீது கட்டுப்பாடு போடுவது பிரிதோர் விடயம்.

சிறிது காலத்துக்கு முன்னர் ஐயப்பன் கோயிலில் (கோயில் முன்றலில்) சூப்பர் சிங்கர் அறிவிப்பாளர் திவ்யா அவர்களை கூட்டிக்கொண்டு வந்து திருவிழா நடந்தது. கோயில் என்றால் திருவிழா வேண்டும்தானே. திருவிழாவுக்கு அள்ளுப்பட்ட சனங்களை தற்செயலாக தொலைக்காட்சியில் பார்த்தபோது ஆச்சரியமாகவே இருந்தது (நிழலி, மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் உங்களை பொதுசனமாகவே பார்க்கின்றேன்). இந்திய தொலைக்காட்சிகள், தமிழ் சினிமாவின் ஆதிக்கம் கனேடிய தமிழர்களின் இரத்தத்துடன் கலந்துவிட்டது. அறிக்கைகள் விடுபவர்கள் தொடர்ந்தும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

சிறிது காலத்துக்கு முன்னர் ஐயப்பன் கோயிலில் (கோயில் முன்றலில்) சூப்பர் சிங்கர் அறிவிப்பாளர் திவ்யா அவர்களை கூட்டிக்கொண்டு வந்து திருவிழா நடந்தது. கோயில் என்றால் திருவிழா வேண்டும்தானே. திருவிழாவுக்கு அள்ளுப்பட்ட சனங்களை தற்செயலாக தொலைக்காட்சியில் பார்த்தபோது ஆச்சரியமாகவே இருந்தது (நிழலி, மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் உங்களை பொதுசனமாகவே பார்க்கின்றேன்). .

ஏன் குறிப்பிட்டுள்ளீர்கள் எனப் புரியவில்லை...

ஐயப்பன் கோவில் முன்றலில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்து 'திவ்ய' தரிசனம் மிக அருகே கிடைத்தது ஜென்ம சாபல்யம் என்றும், மதுபாலக்கிருஸ்ணனின் குரல் தேன் என்றும் யாழில் (அல்லது என் முகப்புத்தகத்தில்) நானே குறிப்பிட்டு இருந்தேனே.....

ரிக்கற் வாங்கிவிட்டார்.. :D எல்லோரும் அரசியல் கதைக்கிறதாலை கம்முன்னு இருக்கார்..! :lol:

நான் ஒட்டுமொத்தமாக 400 டொலர் போய்விடுமே என்று முழியைப் பிரட்டிக் கொண்டு இருக்கின்றன்..

தாம் கனடாவிலிருந்து வெளிவிடுகின்ற அறிக்கைக்கு ஒருவனும் செவிசாய்க்கமாட்டான் என்பதால் இன்னொருவரை தூண்டி அவர் மூலம் இந்தியாவிலிருது அறிக்கை விடுகின்றார்களோ? தமிழனிடம் அரசியல் சாணக்கியம் இல்லை என்று எந்த மடையன் கூறியது?

+++

(நிழலி, உங்கள் பதிவை பார்த்தமையாலேயே அப்படி குறிப்பிட்டேன். நான் சுற்றிவளைத்து உங்களை போட்டு தாக்குவதாக நினைக்ககூடாதல்லவா. ஐயப்பன் கோயில் என்றால் நானும் ஏதோ முற்றும் துறந்த சாமியார்களின் உறைவிடம் என்று நினைத்திருந்தேன். இதனாலேயே எனக்கு ஐயப்பன் கோயிலில் திவ்யா அம்மாளாட்சியின் வருகையை அறிந்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது)

தமிழ்நாட்டிலிருக்கும் கலைஞர்களுக்கு டிக்கெற் வாங்கி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் கனடாவில் இசை வெளியீடு செய்யுமளவிற்கு தென்னிந்தியச் சினிமாத் துறையினருக்கு ஈழத்தமிழர்களிடம் ஆதரவு இருக்கிறது.

நானும் ஓசி டிக்கெட்டு கிடைக்குமா என்று பார்க்கின்றன் இன்னும் சரிவரவில்லை .

நேற்று இளையராஜாவின் பத்திரிகையார்களுக்கான சந்திப்பு ஸ்கபோரோ கொன்வேன்சன் சென்டரில் நடந்தது .

நிகழ்சி நடாத்துபவர்கள் எனக்கு புதுமுகமாக இருந்தார்கள் (போட்டோ பாஸ்ட் தவிர்த்து ).இளையராஜாவும் கார்த்திக் ராஜாவும் வந்திருந்தாகள் .

கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு-கவலையில் தமிழர்கள்!

டோரன்டோ இசைஞானி இளையராஜா கனடாவில் நவம்பர் 3ம் தேதி நடத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவில் இசைஞானி இளையாராஜாவின் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் பிரச்சனை என்னவென்றால், நவம்பர் மாதம் முழுவதும் கனடா வாழ் தமிழர்கள் ஈழத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்வர்.

அதுமட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நவம்பர் 2 தேதி வருகிறது. இதற்கும் கனடா தமிழர்கள் பெருந்திரளாக கூடி நினைவு கூர்வர். இவ்வாறு தமிழர்களின் பேரெழுச்சி மாதமாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவாக நவம்பர் மாதம் அனுசரிக்கப் படுகிறது.

இந்த எழுச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை எப்படியாவது திசைத் திருப்ப வேண்டும், மழுங்கடிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவை கனடாவில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம் மற்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

இதை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் பெயர் ட்ரினிடி ஈவன்ட்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக கனடாவில் இளையராஜாவும் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களும் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர் .

இந்த சந்திப்பில் ஒரு புதுமை என்னெவென்றால், இளையராஜாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட அதிக பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமத்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று இளையராஜாவிற்கு எடுத்துச் சொல்ல தமிழர் பிரதிநிதிகள் பலர் முயன்றும் இளையராஜாவை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இயக்குனர் பாரதிராஜாவை அவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவர்களது விளக்கத்தைக் கேட்ட பாரதிராஜா தான் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விட்டாராம்.

இப்போது ஈழத் தமிழர்கள் கவலை எல்லாம், இந்த இசைக் கச்சேரி தமிழர்களின் ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் என்பது தான் . இளைராஜாவை பெரிதும் நேசிக்கும் ஈழ மக்கள் இன்று இந்த இசை நிகழ்ச்சியால் அவரை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இளையராஜாவிற்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இளையராஜா இந்நிகழ்வை நவம்பர் மாதத்தில் நடத்தாமல் டிசம்பர் மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ நடத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர்.

தமிழகத்தில் இருந்தும் இளையராஜாவிற்கு இதற்கான கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வைத்துள்ளார். அமீர் முதலான இயக்குனர்கள் கூட இது தொடர்பாக இளையராஜாவை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக தமிழர்களும் கட்சிகளும், இயக்கங்களும் இளையராஜாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இந்த இசை கச்சேரியை நவம்பர் மாதத்தில் நடத்தாதபடி செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

http://tamil.oneindi...one-162689.html

நானும் ஓசி டிக்கெட்டு கிடைக்குமா என்று பார்க்கின்றன் இன்னும் சரிவரவில்லை .

நேற்று இளையராஜாவின் பத்திரிகையார்களுக்கான சந்திப்பு ஸ்கபோரோ கொன்வேன்சன் சென்டரில் நடந்தது .

நிகழ்சி நடாத்துபவர்கள் எனக்கு புதுமுகமாக இருந்தார்கள் (போட்டோ பாஸ்ட் தவிர்த்து ).இளையராஜாவும் கார்த்திக் ராஜாவும் வந்திருந்தாகள் .

இந்த முறை ஓ.சி. ரிக்கற் கிடைப்பது கஸ்டம் என்று நினைக்கிறேன் அர்ஜுன். ஏனெனில் இதனை ஒழுங்கு செய்தவர்கள் புதுசு என்று கேள்வி. இன்னும் சரியான விபரம் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

487414_431679350228730_533958916_n.jpg

ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்:

[Friday, 2012-10-05 18:01:17]

அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன.

!

தமிழ் திரைப்படங்களுக்கு பிரமாண்டமாக இசை வெளியீடு நடத்தப்படுவது வழமையே என்ற போதிலும் கூட, இது வரையிலும் கனடாவில் எந்த திரைப்படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. திரைப்படத்தின் இயக்குனர் அமீர் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக பலமுறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளதுடன் , இயக்குனர் சீமானுடன் இணைந்து இதற்காக சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளார். திரு நங்கை வேடத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படத்தில் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமீரின் படங்கள் அனைத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசை அமைத்துக் கொடுத்து வருவதும் , இது வரையிலும் இருவரின் கூட்டணியிலும் உருவான அனைத்து பாடல்களுமே தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதும் முக்கியமான ஒன்றாகும்.

http://seithy.com/br...&language=tamil

இந்த இரு நிகழ்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது மக்கள் எங்கு கூடுவார்கள்? :o

யாராவது இதைக் கேட்க மாட்டீங்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

----

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ரசனிக்காந்த் வரும்போதும் பெரிய ஆர்ப்பாட்டமாகக்கருதி மிகச் சின்னதாக எதிர்ப்பைக் காட்டினார்கள், விசு வந்தபோதும் எதிர்ப்புக் காட்டி கொஞ்சப்பேர் ஆரவாரப்பட்டார்கள். இப்போது இசைஞானிக்கும் அவர்களே தமிழகத்துச் சகோதரர்களைப்பயன்படுத்தி அறிக்கைகளை வெளியிட வைத்துள்ளார்கள். ஒன்று மட்டும் தெரிகிறது பிரபலங்களை எதிர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பை காட்ட சிலர் முயல்கிறார்கள். ஆக தனித்துவமாக தங்களால் ஏற்படுத்த முடியாத பிரபலத்தை பிரபலங்களை எதிர்ப்பதன் மூலம் ஏற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. நிற்க

இப்படியான வகையில் நான் தாயகக்கவிஞருடன் பேசும்போது தமிழகக் கலைஞர்கள் மீது காழ்ப்புணர்ச்சியாக பேசியபோது... கவிஞர் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்களைத் திட்டமுன் எங்களுக்குள் அத்தகைய திறமைசாலிகளை உருவாக்கிக்காட்டு என்றார். வெட்கித் தலைகுனிந்தேன். ஏன் இதனை இவ்விடத்தில் கூறுகிறேன் என்றால் மேலே தமிழச்சி குறிப்பிட்ட நக்கீரன் இங்கு படைப்பாளிகள் கழகம் என்ற அமைப்பின் தலைவர் முதல் சகலமும் அவரென்றால் மிகையாகாது. அத்தகைய அவர் தூயதமிழ் பெயர்களை ஊக்குவித்து தைப்பொங்கல் தினத்தை தமிழர் ஆண்டாக பிரகடனப்படுத்திவருகிறார். ஆனால் அதற்கு மேல் அந்தக்கழகம் கலைஞர்களை வளர்த்ததா என்றால் இதுவரை நான் அறியவில்லை. இன்று இவ்வளவு எதிர்ப்பை ஒரு பெரும் கலைஞனை நோக்கி பிரயோகிக்க முற்பட்டிருக்கும் இவர்கள் சொல்லும் காரணம் மாவீரர் மாதம் என்பதாகும். இவர்கள் இவ்வளவு உந்துதலாக செயற்பட்டு தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மேல் குத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத முத்திரையை ஏன் கிழித்தெறியவில்லை????

அத்தோடு எனக்குத் தெரிந்த ஒருவர்முகநூலில் இசைஞானியின் நிகழ்வுக்கு ஆர்.கே. செல்வமணி எழுதிய புறக்கணிப்பு கடிதத்திற்கு முழு ஆதரவும் கொடுக்கிறாராம் ஆனால் அதே நேரம் இசைஞானி அந்நிகழ்வை நடாத்துவதன் மூலம் பெரும் நிதியை ஈழத்தில் அல்லல்படும் சாகோதரர்களுக்கு ஒதுக்கினால் நல்லதாம்..... என்னைய்யா நடக்குது? மாவீரர் மாதம் என்று குதிகுதியென்று குதிக்கிறீர்கள் அப்படியானால் அது விலைமதிப்பற்றது என்றுதானே எடுக்கவேண்டும். ஆனால் விடுதலையை முகநூலில் நாளாந்தம் பிரச்சாரம் செய்யும் ஒருவர் அங்குள்ளவர்களுக்கு பணஉதவி செய்வதாக இருந்தால் மாவீரர் நாளிலும் நிகழ்வை வைக்க வழிவிடுவார்கள் போலிருக்கிறதே..... ஐயோ போலிகளால் மாவீரர் வீரம் விலைபேசப்படுகிறதே..... :(

இறைவா எனக்கு கண், காது, வாய் ஆகிய முப்புலன்களையும் அடக்கிவிடு. :icon_mrgreen:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா அவர்கள் 84 ல் என நினைக்கிறேன் ஈழத் தமிழர்களிற்கென சம்பளம் வாங்காமல் ஒரு இசை நிகழ்ச்சி செய்து நிதி திரட்டி கொடுத்திருந்தார். அதற்கு பின்னர் இன்றுவரை அவர் அரசியல் அது தமிழ்நாட்டு அரசியலாகட்டும் ஈழத்தமிழ் அரசியலாகட்டும் தவிர்த்தே வருகிறார். அவரை வைத்து எம்மவர்கள் தான் அரசியல் செய்கிறார்கள். அது கிடக்கிடக்கட்டும். ரஜனி படத்தை வெளியட லாபத்தில் பாதி கேட்டதால் தகராறு வந்து ஜரோப்பாவிலும். கனடாவிலும் ரஜனியை எதிர்த்து ம் படத்தை புறக்கணி எண்டும் கோசம் போட்டார்கள். ஆனாலும் ரஜனி ஈழத்தமிழர்களிற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை சொல்லியிருந்தால் தமிழ்நாட்டில் என்ன நடந்திரக்கும் என்பதையும் நினைத்து பாரக்கவேண்டும்.

ஆனால் ரஜனி மகிந்தாவை உதைக்க வேண்டும் என்று சொன்னதும் கைதட்டி விசில் அடிச்சம். அடுத்ததாக விசு அரட்டை அரங்கம் நடத்த கனடா வந்த பொழுது புறக்கணி என்று சொல்லி சிலர் மட்டையை யும் தூக்கி பிடிச்சு கொண்டு அரட்டை அரங்கம் நடந்த மண்டபத்துக்கு முன்னாலை நிண்டவை. அதை புறக்கணிச்சதுக்கு காரணம் விசு ஜெயலலிதாவை பற்றி யாரும் பட்டி மன்றத்தில் கதைக்க கூடா என்றதுதான். அதே விசு வும் தமிழ் நாட்டிற்கு போய் பேசாமல் இருந்து விட்டார். அதே ஜெயா ரிவியில் அதே பட்டி மன்றத்தில் அதே விசு ஈழத்தமிழர்களை வைத்து பட்டி மன்றம் நடாத்தியபோதும் கைதட்டினம். அதே ஜெய லலிதா மகிந்தாவிற்கு எதிராக சட்டசபையில் தீர் மானம் எண்டதும் அங்கையும் கை தட்டினம். இப்ப இளைய ராஜாவை புறக்கணிக்க போகினம். நான் நினைக்கிறன் இளையராஜா நடத்திற நிகழ்ச்சியின்ரை வருவாயிலை ஏதாவது (பாபு கடை) பங்குகேட்டிருப்பினம். அதை நடத்து பவர்கள் மறுத்திருப்பார்கள். உடைனையே மாவீரர் வாரத்தை கண்டு பிடித்திருப்பார்கள். ஒழுங்கா இலங்கை பொருட்களையே புறக்கணிக்க தெரியாத ஆக்கள். மிச்சம் எல்லாத்தையும் புறக்கணிப்பினம். முதல்லை முந்திரி கொட்டை மாதிரி எல்லாத்துக்கும் அறிக்கை விடுற நக்கீரனை யாராவது வயோதிபர் மடத்திலை சேத்து விடுங்கோ அறளை பேந்திட்டு மனிசனுக்கு

Edited by sathiri

யாரும் இங்கு இளையராஜாவைப் புறக்கணிக்குமாறு கூறவில்லை. இந்த நிகழ்ச்சியை இந்த மாதத்தில் நடத்தவேண்டாம் என்றுதான் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை இந்த மாதமோ அல்லது டிசம்பர் மாதமோ நடத்தும்படிதான் கோரிக்கை வைக்கப்பட்டடிருக்கிறது. அந்தக் கோரிக்கை நியாயமானதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன். இவ்வாறான சில எதிர்ப்புகளால் எதிர்வரும் காலங்களிலாவது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தென்னிந்தியக் கலைஞர்களும் இதனைக் கருத்தில் எடுத்து நடக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு அடுத்ததாகத் தென்னிந்தியச் சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இங்குதான் அதிகம் இடம்பெறுகின்றன.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி செய்றவை புதுசாம் அது தான் பழசுகளுக்கு தன்மான பிரச்னை போல :D

487414_431679350228730_533958916_n.jpg

இந்த இரு நிகழ்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது மக்கள் எங்கு கூடுவார்கள்? :o

யாராவது இதைக் கேட்க மாட்டீங்களா?

ஆதிபகவனை இயக்கிய அமீரின் பிரபலம் காணாது...ஜெயம் ரவியும் சின்னப் பெடியன்... இளையராஜாவின் பிரபலம் சொல்லி மாளாது...இளையராஜாவை எதிர்த்து நெற்றிக் கண்ணை திறந்து கேள்வி கேட்டால்தான், இன்னும் கொஞ்சம் கூட பிரபலமும் ஆகலாம். இப்படியான சமன்பாடுகளை விளங்காமல் கேள்வி கேட்க கூடாது.

முதலில் ஊரை அடிச்சு உலை வைத்தவர்களையும், இறுதிப் போருக்கு காசு சேர்த்த காசில் சுப்பர் மார்கெட் திறந்தவர்களையும் கேள்வி கேட்டு அங்குள்ள சனத்துக்கு ஏதாவது நக்கீரன் போன்றோர் செய்தால் கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இங்கு இளையராஜாவைப் புறக்கணிக்குமாறு கூறவில்லை. இந்த நிகழ்ச்சியை இந்த மாதத்தில் நடத்தவேண்டாம் என்றுதான் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை இந்த மாதமோ அல்லது டிசம்பர் மாதமோ நடத்தும்படிதான் கோரிக்கை வைக்கப்பட்டடிருக்கிறது. அந்தக் கோரிக்கை நியாயமானதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன். இவ்வாறான சில எதிர்ப்புகளால் எதிர்வரும் காலங்களிலாவது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தென்னிந்தியக் கலைஞர்களும் இதனைக் கருத்தில் எடுத்து நடக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு அடுத்ததாகத் தென்னிந்தியச் சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இங்குதான் அதிகம் இடம்பெறுகின்றன.

எனக்கு தெரிய ஊரிலை நடந்தது மாவீரர் தினம்தான். பிறகு வெளிநாடுகளிலை அது வாரமாகி இப்ப மாதமாகி நிக்கிது. மாவீரர் எல்லா திகதிகளிலும் மாதங்களிலும் மரணித்திருக்கிறார்கள். எனவே அடுத்ததை மா வீரர் வருடம் ஆக்குவோமா??? ஒவ்வொரு வருடமும் எவரும் எந்த நிகழ்ச்சியும் செய்யக்கூடாது

அப்படி மாற்றத் தேவையில்லை சாத்திரி. அவர்கள் செத்தவர்கள்தானே? அன்றே ஒரு கோயிலுக்குப் போயோ அல்லது சேர்ச்சுக்குப் போயோ ஒரு பிரார்த்தனையைச் செய்து விட்டு மாலையில் இந்தக் கச்சேரியை வைத்து விடலாமே. சனமும் நிறைய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மாற்றத் தேவையில்லை சாத்திரி. அவர்கள் செத்தவர்கள்தானே? அன்றே ஒரு கோயிலுக்குப் போயோ அல்லது சேர்ச்சுக்குப் போயோ ஒரு பிரார்த்தனையைச் செய்து விட்டு மாலையில் இந்தக் கச்சேரியை வைத்து விடலாமே. சனமும் நிறைய வரும்.

மா வீரர்கள் செர்சையோ கொவிலையோ நம்பாமல் தான் தானாக போராட போனவர்கள் அவர்களிற்கு மேடையிலேயே பிரார்த்தனையை நடத்த சொல்லி ஒரு நிமிட மெளனம் கேட்கலாமே அனைவரிற்கும் முன்னால். அறிக்கை எதிர்ப்பு புறக்கணிப்பை விட இது சிறந்தது தானே

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.