Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

வருங்காலத்தில் இப்போது ஏற்பட்ட குழப்பம்போல் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தமிழ்பேசும் மக்கள் சார்ந்த எந்த விடயங்களாயினும் முன் அனுமதி பெறுவதுபோல் வைக்க வேண்டும். இதற்கு ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டால் நன்று. :D

இதன் அடிப்படையில், தமிழகம், ஈழம், இலங்கை, தென்னாபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழர்கள் கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னர் இந்த இணையத்தளம் மூலம் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்..! :icon_idea:

மீண்டுமா? இந்த பூமி நிச்சயம் தாங்காது .. ஏற்கனவே பலபேர் லட்சாதிபதியாயிட்டான் ஊரான் வீட்டுக் காசிலே :lol:

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply

அருமையான யோசனை இசை ..........அப்படியே காண்டம்..........என்ற பெயரையும் வைத்துவிடலாம் ..... :D :D :D :D

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிய நவம்பரில் நடத்தப்படுவதை மக்கள் சுயாதீனமாக தமக்கான காரணங்களோடு எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..???!

முள்ளிவாய்க்கால் பேரவலம் கண்டு மக்கள்.. சொல்லனா மனத்துயரில் உள்ள இன்றைய வேளையில் நவம்பர் மாதம் என்பது பல ஈழத்தமிழர் வீடுகளில்.. குறிப்பாக மாவீரர் குடும்பங்களில் தங்கள் பிள்ளைகள் குடும்பத் தலைவர்கள் தலைவிகள் பற்றிய நினைவுகளை மீட்டிச் செல்லும் மாதமாக அமைவதும்.. மாவீரர் தினத்திற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபடுவதும் வழமையான மனித நடத்தைகளில் அடங்கும். அந்த மாதத்தில் மாவீரர் சார்ந்த உறவுகளின் எண்ணங்களில் அவர்கள் பற்றிய நினைவுகள் அதிகம் அலைமோதவும் செய்யும். இது மனித இயற்கை..!

இப்போ கார்கில் போர் நினைவு தினத்தில் இசைஞானி ஒரு களியாட்ட இசை நிகழ்ச்சியை நடத்த முன் வருவாரா..??! நிச்சயமாக இல்லை. கார்கில் போரில் செத்த 800 பேரின் வீடுகள் தவிர மிச்சம் கோடி கோடிப் பேரின் வீடுகளில் அந்த நாளில் மகிழ்ச்சி தானே பொங்கி வழியுது. அப்புறம் எதுக்கு.. அதை நிறுத்தனும்..??!

அந்த வகையில் மாவீரர்கள் சார்ந்து உண்மையாகவே நினைவலைகளைத் தாக்கும் மக்கள் இளையராஜா என்ற மனிதர் சராசரி ஈழத்தமிழனின் (இந்த இசை நிகழ்ச்சிக்கு ரிக்கெட் வாங்கக் கூட முடியாத அல்லது விரும்பாத ஈழத்தமிழனும்.. கனடாவில் வாழ்கிறான்..!) மன உணர்வை உள்வாங்க கோரி ஒரு எதிர்ப்பைக் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

மாற்றம் என்பது இரண்டு வழிகளில் பிறக்க முடியும்.

1. பரஸ்பர புரிந்துணர்வு.

2. எதிர்ப்புக்காட்டுதல்.

முதலாம் வழிக்கு சந்தர்ப்பம் குறைவென்றால் இரண்டாம் வழி தான் மக்களின் தேர்வு.

அதேவேளை.. பல வித சமாதானங்கள் சொல்லிக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை காண ஆவலோடு இருப்பவர்களும் உளர். அவர்களுக்கும் அந்த ஆசையினை திருப்திப்படுத்தும் உரிமை உண்டு. அதை இளையராஜா பூர்த்தி செய்ய முனையலாம். இருந்தாலும்... மக்களில் ஒரு பகுதியினர் இளையராஜாவின் இந்த நிகழ்ச்சியோடு இல்லை.. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள். அதுவும் தவறல்ல. அது இளையராஜாவைப் போய் சேர்வதும் தவறல்ல.

இளையராஜா இசைக்கு ஞானியே தவிர.. மனிதத்திற்கு தலைவன் அல்ல..! அவர் சாதாரண ஆசா பாசமுள்ள சராசரி மனிதன்..! அவர் தமிழினத் தலைவரும் கிடையாது. தமிழ் பேசும் தமிழ் கலைஞன் அவ்வளவே..!

கனடா போன்ற சனநாயக நாட்டில் மக்கள் மாறுபட்ட கருத்தோடு இருப்பதும்.. அதில் நியாயத்தை முன் வைத்து எதிர்ப்புக் காட்டுவதும் தவறே அல்ல. நியாயமற்ற காழ்ப்புணர்வுள்ள.. தொழில் போட்டி சார்ந்து இன்னும் என்னென்னவோ சார்ந்தெல்லாம் எத்தனையோ எதிர்ப்புக்கள் எழும் நிலையில்.. மக்கள் ஒரு நியாயத்தை முன்னிறுத்தி எதிர்ப்புக்காட்டுவது தவறே அல்ல..! அந்த நியாயம் சிலருக்கு தவறாகலாம். பலருக்கு உண்மை ஆகலாம்..! இன்னும் சிலருக்கு முடிவெடுக்க முடியாத நிலை தரலாம்..! :icon_idea::)

நான் இதை ஆமோதிக்கின்றேன். ஏன் இப்படியான நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடத்தப்பட வேண்டும்?

இளையராஜா ஒரு மக்கள் கலைஞன் என்றால் இத்தனை இலட்சம் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டபோதும் ஏன் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை?

இப்படிப்பட்டவர்கள் மாமேதையே ஆனாலும் நாம் (இழப்புகளை அனுபவித்தவர்கள்) மதிக்கவேண்டியதன் தேவை என்ன?

அப்படியான இழப்புகளுடன் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்த நாம் இவர்களுக்காக வாதாடுவதும் முண்டுகொடுப்பதும் தேவைதாணா?

இந்நிகழ்ச்சியால் சேர்க்கப்படும் பணம் நம் ச்மூகத்தின் துயரத்தை சிறிதேனும் துடைக்க முற்படவில்லை என்னும் போது இதில் நாம் அக்கறைப்பட வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

சகாரா சொல்வதைப்போன்று ,இதுவரை நம் தமிழரின் துயரத்தைப் பாடாத இவரின் வாய் இனிப்பாடும் என்று எதிர்பார்ப்பதும அப்படியே பாடினாலும் மாண்ட நம் உறவுகள் உயிர் பெர்று எழும்பப்போவதுமில்லை. அதனால் அவருக்காக வக்காலத்து வாங்குவதை தயவு செய்து நிறுத்திக்கொள்வோம்..

நாங்கள் இருப்பது முற்று முழுதான ஜனநாயக நாடுகளில் அங்க மக்களை அத செய்யாத இத செய்யாத எண்டு சொல்ல நாங்க யாரு? Please explain me bro

நானும் நீங்களும் யாழ்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் முற்று முழுதாக தமிழ் திரைப்படங்கள் பாக்க தடை அப்போ எங்க ஜனங்க பங்கருக்குள்ள ஜெனரேட்டர் ஒளிச்சு வைச்சு படம் பாக்கலியா?

சோ தடை விதிசாலும் சனம் கள்ளமா பாக்க தான் போது..... நிகழ்ச்சிக்கு போக தான் போது ஏன் சும்மா இப்பிடி எல்லாம் அறிக்கை விட்டு அவமானப்படனும்?

சுண்டல் நீர் சரி என்கிறீரா? அல்லது பிழை என்கிறீரா?

நாம் இப்படியான வேலைகள் நவம்பரில் வேண்டாமென்கின்றோம். நீர் வேண்டும் என்கின்றீரா? வேண்டாமென்கின்றீரா?

இந்த சனம் செய்யும், புலி செய்யும் கதயெல்லாம் இங்கே வேண்டாம்..

[size=2]நியானி: கள உறுப்பினர்களைச் சீண்டும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது.[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

கடன் அட்டை பாவனை செய்யக்கூடிய வகையில் நான் குறிப்பிட்ட இணையத்தளம் அமைய வேண்டும். :wub: நிகழ்ச்சி நடத்த விரும்புபவர்கள் முன் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணமாக 50 டொலர்களை அறவிடலாம். :D

நிகழ்ச்சிக்கான அனுமதியை காரண காரியங்களை ஆராய்ந்தபின் வழங்கலாம். இதற்கென ஒரு அனுமதிக் குழுவை நியமித்தல் அவசியம். :)

அனுமதி கொடுத்தால் அதற்குரிய சான்றை நிகழ்ச்சிதாரருக்கு வழங்க வேண்டும். அதை உபயோகித்து அவர்கள் தங்கள் நிகழ்ச்சிக் குழுவினருக்கு கனேடிய, பிரித்தானிய தூதரகங்களில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கெதிராக அறிக்கை விட்ட பெண்மணி ஒருவரைக் குற்றம் சாட்டி எழுதியிருந்தீர்கள். நீங்கள் அந்த அமைப்பின்மீது குற்றம் சாட்டியிருந்தால் நியாயம் இருக்கிறது. ஒரு தனிநபர் மீது குற்றம் சாட்டுவது எவ்வகையில் நியாயம்? அவர் இந்தக் களத்தில் எழுதுபவரும் அல்ல. அவர் செய்தது தவறாயின் அந்த அமைப்பின் கீழ் இயங்கிய உங்கள் மீதும் தவறுகள் இருக்கிறதுதானே? அதைத்தான் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

அக்காலகட்டத்தில், என்னைப் பற்றியதான உங்கள் தேடலுக்கு உரிய இடத்திலிருந்தே உங்களுக்குப் பதில் கிடைத்திருந்ததை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் மீறி நீங்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் செய்தது எனக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதும். மற்றவர்கள் என்னைக் குற்றவாளியாகப் பார்த்தாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

இளையராஜாவின் நிகழ்ச்சி விடயத்தில், எனது கருத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இவ்வாறான ஒரு நிகழ்ச்சி இம்மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ நடப்பதை நான் விரும்பவில்லை. இப்போது, இந்நிகழ்ச்சி நடந்தாலும் எதிர்காலத்திலாவது நிகழ்ச்சிகள் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

[size=5]தாயே தமிழச்சி [/size]

[size=5]உங்களைப்பற்றியதேடல் நான் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது செய்ததோ கிடையாது. இல்லாத ஒன்றுக்கு உரிய இடத்தில் இருந்து பதில் கிடைத்திருக்கும் என்னும் உங்கள் கற்பனாவாதத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு இப்படியான ஒரு கருத்தை நீங்கள் வைப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்த நீங்கள் சம்பந்தப்பட்டவரோடு நீங்கள் நின்று கொள்ளுங்கள். இங்கு உங்களுக்குப் பதில் அளிக்கும் வேண்டாத வேலையைச் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன் ஆனால் அப்படி நான் மௌனம் காத்தால் உங்களுடைய கருத்துக்களை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று மற்றவர்கள் முடிவெடுத்துவிடுவார்கள். அதற்காகவே உங்கள் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேன். [/size]

இங்கு வந்ததற்கு இதுவரை ஓரிரு இசை நிகழ்ச்சிகளுக்குத்தான் சென்றிருக்கிறேன். இதிலெல்லாம் மெனக்கெடுவதில்லை.

இந்தத் திரியை வாசித்த பின், நேரம் ஒத்துழைத்தால் இந்த இசைநிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. கட்டணம் எவ்வளவு என்று யாராவது கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டுமா? இந்த பூமி நிச்சயம் தாங்காது .. ஏற்கனவே பலபேர் லட்சாதிபதியாயிட்டான் ஊரான் வீட்டுக் காசிலே :lol:

பெயர்,விலாசங்கள் தெரிந்தால் வெளியிலை எடுத்து விடுறதுதானே....

இங்கு வந்ததற்கு இதுவரை ஓரிரு இசை நிகழ்ச்சிகளுக்குத்தான் சென்றிருக்கிறேன். இதிலெல்லாம் மெனக்கெடுவதில்லை.

இந்தத் திரியை வாசித்த பின், நேரம் ஒத்துழைத்தால் இந்த இசைநிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. கட்டணம் எவ்வளவு என்று யாராவது கூறுவீர்களா?

என்னங்க சார் இப்படியெல்லாம் புறகாஸ்டினேட் பண்ணுறீங்க.

உங்களுக்கு என்றபடியில் பார்த்து போட்டு தரலாம்.

எல்லாம் போயிட்டு.

இரண்டு இண்டிவிட்டுயுவல் இருக்கு. தலா $1000. ஃபமிலி இன்னா சொல்லுங்கா. நிறைய இருக்கு. சும்மா ஒரு $2000 மட்டும்தான் ஒன்னுக்கு. நிறைத்தான் சேவிங்கு. :)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நீர் சரி என்கிறீரா? அல்லது பிழை என்கிறீரா?

நாம் இப்படியான வேலைகள் நவம்பரில் வேண்டாமென்கின்றோம். நீர் வேண்டும் என்கின்றீரா? வேண்டாமென்கின்றீரா?

இந்த சனம் செய்யும், புலி செய்யும் கதயெல்லாம் இங்கே வேண்டாம்..

[size=2]நியானி: கள உறுப்பினர்களைச் சீண்டும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது.[/size]

அண்ணா திரும்ப திரும்ப சொல்ல முடியா மாவீரர் வாரம் என்பது ஒரு கிழமை தான் அதாவது ஏழு நாள் தான் சோ இந்த நிகழ்ச்சி நடக்கடியும் சனம் BBQ கெட் டு கெதர் எண்டு வைக்க தான் போகுது சோ :D

மற்றது அங்க இந்தியா நாட்டு தமிழர் மலேசிய தமிழர் சிங்கபோரே தமிழர் ஏன் மலையாளம் பேசும் மக்கள் கூட நிகழ்ச்சிய பாக்க போவினம்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது அங்க இந்தியா நாட்டு தமிழர் மலேசிய தமிழர் சிங்கபோரே தமிழர் ஏன் மலையாளம் பேசும் மக்கள் கூட நிகழ்ச்சிய பாக்க போவினம்

அவையள் எப்பிடிப் போகலாம்? :unsure: நம்மகிட்ட முன் அனுமதி வாங்கிப் போறதுதானே முறை? :D

  • கருத்துக்கள உறவுகள்

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,

பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :(

நிகழ்ச்சி முடிஞ்சாலும் இங்க முடியாதுபோல

சுண்டல் கதை நல்லாய் இருக்கு

ஐயோ வேண்டாம்........... சுண்டல்...... நான் எனக்குள் சிரித்துவிட்டு கம்மிண்ணு இருந்திடனும்................... :lol::rolleyes::D

நவம்பர் 3இல் கனடாவில் இசை நிகழ்ச்சிக்கு சிலர் கொடி பிடிக்க, இசைஞானியோ நவம்பர் 11இல் அமெரிக்காவிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போகிறாராம்.

இதற்கு இன்னும் எதிர்ப்பு ஒன்றையும் காணவில்லை. கனடாவிலும் எதிர்ப்பு தணிந்து விட்டது போல் தெரிகிறது. புதிய அறிக்கைகள் எதையும் காணவில்லை.

"டீல்" முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.

எதிர்ப்பு ஒன்றும் அணையவில்லை.. இளையராஜா சைட் என்ன யோசிக்கின்றது என யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

தெரியாதை எழுத்தி சீண்டுவதில் சிலர் மகா மன்னன்.

அரசு கொடுக்கும் பணத்திற்கு எதையாவது எழுதுகிறார்கள்.

இளையராஜாவுக்கு அத்துடன் மத்திய கிழக்கிலும், தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நிகழ்சிகளுக்கு பட்டியல் இடப்பட்டிருக்காம்.

எழுத இல்லாத வங்குறொத்தை காட்டும் அப்பாவிகள்.

எதிர்ப்பு ஒன்றும் அணையவில்லை.. இளையராஜா சைட் என்ன யோசிக்கின்றது என யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

மாரித்தவளைகள் கத்தும் வரை கத்தி விடிய இறந்து விடும் என கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்,விலாசங்கள் தெரிந்தால் வெளியிலை எடுத்து விடுறதுதானே....

பல முறை நானும் கேட்டுவிட்டேன்

பதில் தான் இல்லை.

முன்பு புலிகளை விமர்சித்த பலரும் தற்பொழுது வேறு ஏதும் கிடைக்காததாலும் தொடர்ந்து தமது அரிப்பை சொறியவும் தமிழ் மக்கள் மீதான தமது பங்களிப்புக்களை முன்புபோல் செய்யாதிருக்கவுமே இது போன்ற தூற்றுதலில் ஈடுபடுகின்றனர் போலுள்ளது.

உண்மையில் எவருக்காவது தெரிந்திருந்தால்

அல்லது தமிழ் மக்கள் மீதான பணத்தின் மீது அக்கறை இருந்தால் அவர்களை இங்கு விமர்சனம் செய்வது இளைராசாவை இங்கு விமர்சிப்பதைவிட ஆயிரம் மடங்கு பிரயோசனமானது.

செய்வார்களா?

அல்லது

முன்பு செய்தனான்

இப்ப

எல்லோரும் கள்ளர் என்று விட்டு கதவைப்பூட்டிக்கொள்வார்களா?

அல்லது நான் செய்யுறன் அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று...........???

(புலம் பெயர் மக்களின் இதுபோன்ற பங்களிப்பின் கண்ணாடி தான் வன்னி மக்களின் இன்றைய வாழ்க்கை தரம்)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்ததற்கு இதுவரை ஓரிரு இசை நிகழ்ச்சிகளுக்குத்தான் சென்றிருக்கிறேன். இதிலெல்லாம் மெனக்கெடுவதில்லை.

இந்தத் திரியை வாசித்த பின், நேரம் ஒத்துழைத்தால் இந்த இசைநிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. கட்டணம் எவ்வளவு என்று யாராவது கூறுவீர்களா?

$100,$80,$60,$39

http://www.trinityeventsonline.com/

மற்றவன் என்ன செய்யவேணும்.எப்ப செய்ய வேணும் ,ஏன் செய்ய வேணும் என்ற எல்லாவற்றையும் தாங்களே தீர்மானிக்க உரித்துடையவர்கள் என்ற எண்ணம் தான் இன்று அவர்களை இல்லாமலே பண்ணியது .

இப்பவும் அதே நினைப்பு சிலருக்கு .

இளையராஜா கட்டாயம் ஈழ தமிழனை பற்றி பாடியே தீரவேண்டுமா ?

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு நிற்கும் போது "அவர்கள் " வந்து அந்த கடை கதவில் இன்னதிகதி கடை திறக்காது என்ற நோட்டிசை ஒட்டுகின்றார்கள்(அது எல்லா கடைகளுக்கும் ஓட்ட அவர்களே அடித்து வைத்திருக்கும் நோட்டிஸ் ).அவர்கள் போக கடைக்காரர் என்னிடம் சொன்னார் ."என்ரை கடையை எப்ப பூட்டவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கின்றார்கள்.பாப்பம் எத்தனை நாளைக்கு என்று "

கனடாவில் தடையும் இவர்களால் தான் வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

பல முறை நானும் கேட்டுவிட்டேன்

பதில் தான் இல்லை.

முன்பு புலிகளை விமர்சித்த பலரும் தற்பொழுது வேறு ஏதும் கிடைக்காததாலும் தொடர்ந்து தமது அரிப்பை சொறியவும் தமிழ் மக்கள் மீதான தமது பங்களிப்புக்களை முன்புபோல் செய்யாதிருக்கவுமே இது போன்ற தூற்றுதலில் ஈடுபடுகின்றனர் போலுள்ளது.

உண்மையில் எவருக்காவது தெரிந்திருந்தால்

அல்லது தமிழ் மக்கள் மீதான பணத்தின் மீது அக்கறை இருந்தால் அவர்களை இங்கு விமர்சனம் செய்வது இளைராசாவை இங்கு விமர்சிப்பதைவிட ஆயிரம் மடங்கு பிரயோசனமானது.

செய்வார்களா?

அல்லது

முன்பு செய்தனான்

இப்ப

எல்லோரும் கள்ளர் என்று விட்டு கதவைப்பூட்டிக்கொள்வார்களா?

அல்லது நான் செய்யுறன் அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று...........???

(புலம் பெயர் மக்களின் இதுபோன்ற பங்களிப்பின் கண்ணாடி தான் வன்னி மக்களின் இன்றைய வாழ்க்கை தரம்)

பெயரை எழுதினால் நிர்வாகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா அண்ணா?

மற்றவன் என்ன செய்யவேணும்.எப்ப செய்ய வேணும் ,ஏன் செய்ய வேணும் என்ற எல்லாவற்றையும் தாங்களே தீர்மானிக்க உரித்துடையவர்கள் என்ற எண்ணம் தான் இன்று அவர்களை இல்லாமலே பண்ணியது .

இப்பவும் அதே நினைப்பு சிலருக்கு .

இளையராஜா கட்டாயம் ஈழ தமிழனை பற்றி பாடியே தீரவேண்டுமா ?

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு நிற்கும் போது "அவர்கள் " வந்து அந்த கடை கதவில் இன்னதிகதி கடை திறக்காது என்ற நோட்டிசை ஒட்டுகின்றார்கள்(அது எல்லா கடைகளுக்கும் ஓட்ட அவர்களே அடித்து வைத்திருக்கும் நோட்டிஸ் ).அவர்கள் போக கடைக்காரர் என்னிடம் சொன்னார் ."என்ரை கடையை எப்ப பூட்டவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கின்றார்கள்.பாப்பம் எத்தனை நாளைக்கு என்று "

கனடாவில் தடையும் இவர்களால் தான் வந்தது .

புலம் பெயர் நாடுகளில் இருந்த புலி அடிப்பொடிகளின் இவ்வகையான அருவருக்கத் தக்க செயல்களே மக்களின் ஆதரவு வெகுவாகக் குறையக் காரணமாயிற்று.

இதையெல்லாம் சகித்துக் கொண்டு போராட்டத்திற்கு ப்ங்களிப்பு செய்த மக்களைத்தான் பாராட்டவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.