Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாவற்றையும் எதிர்த்தே பழகியவர்கள் நாங்கள். எதிரிகளை அதிகரிக்கின்றோமே தவிர குறைப்பதாகத் தெரியவில்லை.

போராட்டம் தோல்வியுற்ற பின்னராவது தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் தலைமைகள் தயாராக இல்லை என்பது இதில் இருந்து தெரிய வருகின்றது.

சினிமா தொடர்பான நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு ஊதிவிட்டு பின்புலத்தில் அந்த அமைப்பாளர்களிடமே புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் (புலிகள் சார் தமிழர் அமைப்புக்கள் உட்பட) பணம் வாங்கியது பலர் மறந்திருக்கலாம்.

அதேபோன்று திரைப்படங்களையும் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பாடகர்களை பினாமிகளின் பெயரில் அழைத்து நடத்தியதனை எவ்வாறு மறந்து இவ்வாறான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர்?

எனக்கு என்னமோ இளையராஜா நிகழ்வினை நடத்துகின்றவர்களோடு கனடா, உலகத் தமிழர் அமைப்பு நடத்திய பணப் பேரம் படியாததனால் இவ்வாறான எதிர்ப்புப் போராட்டங்களை உசுப்பேற்றி விட்டிருக்கின்றனர் என்றே தோன்றுகின்றது.

நவம்பர் மாதத்தில் மாவீரர் வாரத்தில் இந்த நிகழ்வு நடந்தால் கண்டிக்கக்கூடிய ஒரு விடயம். இதற்கு அப்பாற்பட்ட நாட்களில் நடைபெற்றால் அதனை நடத்த விடுவதுதான் அழகு.

நவம்பர் மாதத்தில் இப்படியான காரணத்தினைக் கொண்டு வந்தவர்கள் டிசம்பரில் ஒரு காரணத்தினைக் கொண்டுவரத் தயங்கமாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு மாதத்திலும் விடுதலைப் போராட்டத்தில் வௌ;வேறான நிகழ்வுகள்- உங்கள் பாசையில் சொல்வதனால் துன்பியல் நிகழ்வுகள் நடந்துதான் உள்ளன. (மே மாதத்தினையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)

இந்த யாழ் களத்தில் பார்த்த விடயங்களில் வேதனையைத் தருகின்ற சில விடயங்கள் உள்ளன. அதாவது, எத்தனையோ ஆதாரமற்ற சில இணையத்தள செய்திகளுக்குக்கூட யாழ் கள நண்பர்கள் தமது நேரத்தினை விரயமாக்கி கருத்துக்களை எழுதிக்கொண்டு இருக்கின்றனர்.

யாழ் கள நண்பர்களிடம் அன்புடன் வேண்டிக் கொள்வது இதுதான்,

எத்தகைய ஒரு விடயத்தினையும் உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்கருத்துக்கள் எழுதுவதனை விடுத்து ஆதரவாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை தீர ஆராய்ந்து சாதக-பாதகங்களை எழுதுங்கள்.

எதற்கு எடுத்தாலும் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாக உங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே கருத்துக்களை எழுதுகின்றீர்கள். உங்களுக்குச் சார்பாகவே யாவரும் எழுத வேண்டும் என்ற சிந்தனையே உங்களிடம் மேலோங்கி உள்ளது.

யாராவது மாற்றுக்கருத்தினை எழுதினால் அவர்களின் நதி மூலம்-ரிசி மூலத்தினை ஆராய்கின்றீர்களே தவிர அவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையினை ஆராய முயலவில்லை என்பதனை நினைக்க கவலையாக உள்ளது.

மாற்றுக்கருத்துக்கள் ஆரோக்கியமான வழிமுறைகளுக்கு இட்டுச் செல்லுமே தவிர அழிவுக்கு இட்டுச் செல்லாது.

நான் முடிவாக கூற வருவது இதுதான்,

தமிழக திரைப்படத்துறையில் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளனர். அவர்களுடனான உறவினை மேம்படுத்தி உங்களின் நிகழ்ச்சி நிரலை அதாவது, இந்த இந்த மாதங்களில் நிகழ்வுகளை நடத்த நாம் அனுமதிக்க மாட்டோம். ஆகையால் வேறு நாட்களில் நடத்துங்கள் என்று கூறினால் கேட்டுவிட்டுப் போவார்கள். அதனை விடுத்து, அவர்கள் உங்களின் நிகழ்ச்சி நிரல் எது என்று அறியாது, அவர்களும் தமக்கு வசதியான நேரத்தினை ஒதுக்கிவிட்டு பின்னர் நீங்கள் எதிர்க்க அவர்களின் மனநிலையில் இருந்தும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லாவற்றையும் உங்கள் உங்கள் கோணத்தில் இருந்தே சிந்திக்காதீர்கள்.

இவ்வாறு எல்லாம் நான் எழுதுவதால் என்மீது வசைபாடுவதனை விடுத்து ஆரோக்கியமாக உரையாடுங்கள்.

  • Replies 83
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சிது நிர்மலன் பிறகு தாறன் என்ன :D

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா நிகழ்ச்சி நவம்பர் 3ந் தேதி நடத்துவதா சரியா, பிழையா என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் மட்டும்தான் கதைக்கவேண்டும். வேறு யாரும் கதைத்தால் அவர்கள் தமது சொந்த அரசியல் லாபத்திற்காக அல்லது பிரபல்யம் தேடுவதற்காக மட்டுமே இருக்கும்.

எனவே அப்படிக் கதைப்பவர்களுக்கு முதலில் வாய்ப்பூட்டு போட்டுவிட்டு நாம் (நானும் தமிழ்த் தேசியவாதிதான்!) சரியா, பிழையா என்பதைக் கதைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மனதில் எழும் கேள்விகள் இரண்டு..!

  1. இந்த நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் நடைபெறுவதை மாற்றுவதற்கு எதிர்ப்புக் குழுவினர் விழா ஏற்பாட்டாளர்களை முதலில் அணுகி, பின்னர் அது சரிவராததால்தான் அறிக்கை விட்டார்களா? எல்லது எடுத்ததும் அறிக்கைதானா? :rolleyes:

  2. இந்த இணைப்பைப் பாருங்கள்.. http://www.yarl.com/...020#entry787880 படத்தின் வலது மேல் மூலையில் Nov3 என்று உள்ளதே.. யாழ்களத்தில் யாருமே கவனிக்கவில்லையா? :unsure: நெல்லையன் அண்ணா இந்த இணைப்பை Aug 13 2012 அன்று பதிவிட்டிருக்கிறார். அன்று யாராவது இந்தப் பிரச்சினையை எடுத்திருந்தார்கள் என்றால் களத்தில் இன்று இவ்வளவு சிக்கல் வந்திராதே.. :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி வருகின்றார் என்றதும் பின்பக்கத்தால லாபத்தில் ஒரு பகுதியையும், மேடையில ஏறுகிற ஆட்களில் ஒரு பகுதியையும் தருமாறு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருப்பினம். பேரங்கள் சரிவரவில்லை என்றால் தேசியத்தில் நம்பிக்கையுள்ள தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட பிரமாஸ்திரம் என்று அவர்கள் நம்புவதைக் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

மேலுள்ளது ஒரு அனுமானம்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மனதில் எழும் கேள்விகள் இரண்டு..!

  1. இந்த நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் நடைபெறுவதை மாற்றுவதற்கு எதிர்ப்புக் குழுவினர் விழா ஏற்பாட்டாளர்களை முதலில் அணுகி, பின்னர் அது சரிவராததால்தான் அறிக்கை விட்டார்களா? எல்லது எடுத்ததும் அறிக்கைதானா? :rolleyes:

  2. இந்த இணைப்பைப் பாருங்கள்.. http://www.yarl.com/...020#entry787880 படத்தின் வலது மேல் மூலையில் Nov3 என்று உள்ளதே.. யாழ்களத்தில் யாருமே கவனிக்கவில்லையா? :unsure: நெல்லையன் அண்ணா இந்த இணைப்பை Aug 13 2012 அன்று பதிவிட்டிருக்கிறார். அன்று யாராவது இந்தப் பிரச்சினையை எடுத்திருந்தார்கள் என்றால் களத்தில் இன்று இவ்வளவு சிக்கல் வந்திராதே.. :rolleyes:

உங்கள் கேள்விக்கான பதிலாக இவை அமையாவிட்டாலும்

சில நடைமுறைச்சிக்கல்களை இங்கு குறிப்பிடுகின்றேன்.

புலம் பெபயர் நாட்டில் சில அமைப்புக்களுடன் சேர்ந்து நடந்தவன் நடப்பவன் என்ற ரீதியில்

ஒரு விழாவை ஏற்பாடு செய்வதைவிட கடினமான விடயம் நாளைத்தெரிவு செய்வது.

நூற்றுக்கணக்கான விழாக்கள் வருடத்தில் நடப்பதால் அதுவும் சனி அல்லது ஞாயிறு நடப்பதால் இந்தச்சிக்கல் வருகிறது.

முன்பு இயக்கம் வலுவாக இருந்தபோது ஒன்றாக இருந்தபோது

ஒரு வருடத்துக்கான இயக்க கலை பண்பாட்டு விளையாட்டு பாடசாலைகள் மற்றும் புனர்வாழ்வுக்கழகம் சம்பந்தமான விழாக்களுக்கான திகதிகளை முதல் வருட இறுதியிலேயே தந்து விடுவார்கள். அதற்கு ஏற்றாப்போல் மற்றய கழகங்கள் சங்கங்கள்மற்றும் கச்சேரி செய்வோர் திகதிகளை எடுப்பார்கள். அப்படியும் சிக்கல்கள் வந்து ஒரே நாளில் பல நிகழ்வுகள் வந்துவிடுவதுண்டு.

எனவே தான் ஆரம்பத்திலேயே நான் எழுதினேன். நவம்பர் 3ந்திகதி செய்வது தப்பில்லை என்று. ஆனால் எங்கும் அதிதீவிரவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கும் அவர்களது கருத்தை சொல்ல உரிமையுண்டு. இவை மக்கள் மயப்படுத்தப்பட்டு அவர்களது புறக்கணிப்பு நடந்தால் வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலனின் கட்டுரை மீளவும் சாதியுணர்வைத் துாண்டும் விதமாகவும்,தான் ஆதரிக்க வந்த கருத்துக்காக களமாடியவர்கள் பற்றிக் கதைப்பதையும் கருத்தில் கொண்டு, ஆதரவாக எழுதிய

என் முதற்கருத்தினை நீக்குகின்றேன்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சிது நிர்மலன் பிறகு தாறன் என்ன :D

நானும் தான்

இளையராஜா எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாதவர். அவர் ஒரு படைப்பாளி. அந்தத் திமிரோடு அவர் இருக்க வேண்டும்.

எவன் என்ன சொன்னாலும் திகதி மாற்ற வேண்டாம். ஈழத் தமிழர்களின் பெயரால் வியாபாரம் ஈனத் தமிழர்களுக்கு பணிய வேண்டாம்.

நான் ஏற்கனவே சொன்ன ஒரு விடயத்தை ஜெயபாலன் அவர்களுக்கு உதாரணம் காட்டியிருக்கிறார். நான் தேசியத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சுட்டிக் காட்டினேன். ஆனால் அவர் இறந்து விட்டார் என்று சொன்னதற்குத்தான் சிலர் அதில் பதில் கருத்து எழுதினார்கள்.

நான் சொல்ல வந்த முக்கிய விடயம் நவம்பர் மாதமோ, அல்லது மாவீரர் வாரத்திலோ வெறுமனே கண்ணீர் சிந்தும் நிகழ்வுகள் மட்டும் நடைபெறுவதில்லை என்பதைத்தான்.

நேரமாகி விட்டது. மிகுதியை நாளைக்கு எழுதுகிறேன்.

பணம் பிடுங்கும் நோக்கத்தோடு தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஒரு கலைஞனை அவமதிக்க முயலம் ஈனர்கள் மாவீரர்கள் பற்றிப் பேசுவதற்கு மாவீரர் நாளை நடத்துவதற்கோ எவ்வித தகுதியும் அற்றவர்கள். இவர்கள் யார் என்று இனம் கண்டு, இவர்கள் நடத்தக்கூடிய மாவீரர் நாள் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும்.

தமிழர் அடையாளமும் பண்பாடும் இல்லாமல் தேசியம் இல்லை. அவற்றை எமக்கு மீட்டுத் தந்த கலைஞனை மாவீரர்கள் போற்றுவார்கள். தமது மாதத்தில் அந்த கலைஞனின் புல்லாங்குழல் ஈழத் தமிழர்கள் முன் இசைப்பதை இட்டு மகிழ்வார்கள்.

இந்த மாவீரர்களை மனதில் இருத்திப் போற்றுவோம். பணம் பிடுங்கும் வழிப்பறியர்களை புறக்கணிப்போம்.

இது தான் உங்கள் நோக்கமோ? ஒன்றை நியாயப்படுத்துவதற்காக இன்னொன்றில் கத்தியை வைக்காதீர்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எண்ணைக்குள் தண்ணி ஊற்றினால் என்னை மிதக்கும்.....[/size]

[size=1]

[size=4]துரோகிகள் வேறெங்கும் இருந்து வருவதில்லை. எமக்குள் இருந்துதான் வருகிறார்கள்.[/size][/size][size=1]

[size=4]எமக்குள் இருந்து எமது உழைப்பில் வளர்ந்து பின்பு தமது ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் எம்மை கொலை செய்வபர்கள். எமது இனத்தை சிங்களவன் ஓடும் இந்தியநோடும் சேர்ந்து கொன்று ஒழித்தவர்கள்.[/size][/size][size=1]

[size=4]இவர்களில் பல வகை உண்டு [/size][/size][size=1]

[size=4]சாதாரண தலை ஆட்டியில் இருந்து [/size][/size][size=1]

[size=4]டக்கிலஸ் ......... கருணா என்று இருந்து இப்போது கே பி வரை பட்டியல் நீள்கிறது.[/size][/size][size=1]

[size=4]நேரடியாக டக்கிலஸ் கருணாபோல் எமது இனத்தின் மேல் கத்திவைக்காமல். பேப்பர் புத்தகம் என்று அப்பப்ப சிங்களவனையும் சாடி எமது இனத்தை எழுத்தில் விக்கிறது இன்னொரு கூட்டம் என்றால் நாம்தான் உச்ச கட்ட போராளிகள் என்று பாசாங்கு காட்டி மக்களின் பணத்தை கொள்ளை அடித்து வாழ்கிறது இன்னொரு கூட்டம்.[/size][/size]

[size=1]

[size=4]எமது போராட்டத்தை சாட்டி இன்று வயிறு வளர்த்து இருப்பவன் எல்லா இடத்திலும் இருக்கிறான்.[/size][/size][size=1]

[size=4]இறுதி காலகட்டத்தில் சேர்த்த பணமே இதுவரை காலத்தில் சேர்த்த பணத்திலும் கூடுதல் தொகையை கொண்டது. இதில் கவலையான விடயம் இதில் ஒரு பைசா கூட மண்ணை எட்டவில்லை. இறுதியில் வணங்கா முடி கப்பல் அதுவும் இலக்கினை எட்டவில்லை. இத்தனை காசையும் சுட்டவன் எம்மோடுதான் இருக்கிறான் சிலரை நாம் இலகுவாக அடையாளம் காண்கிறோம். சிலரை அடையாளம் காணமுடியவில்லை.[/size][/size][size=1]

[size=4]எப்போது பெண் ஆசையோ பண ஆசையோ ஒருவனை பிடிக்கிறதோ அதற்காக மனிதர்கள் செய்பவை கேட்டாலே எமக்கு கைகால் நடுங்குகிறது அனால் அவர்கள் எந்த நடுக்கமும் இன்றி அதை இலகுவாக செய்துவிட்டு போகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]எமது சமூகத்தை நாம் துப்பரவு செய்யமுடியாது...[/size][/size][size=1]

[size=4]அது புலிகளாலேயே முடியாமல் போன ஒன்று. ஒரே வழி போட்டுதள்ளவேண்டும் அதை செய்தால் துரோகிகளுக்கு இன்னமும் இலகுவாகிவிடும் அவர்கள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி தப்பிவிடுவார்கள். அது புலிகளுக்கும் நடந்தது. அமிர்தலிங்கத்தை போட்டதில் புளிகளுக்குள்ளேயே முரண்பாடு நேர்ந்ததை நாம் அறிவோம் தலைவரினதோ இல்லை தலைமை பீடத்தினதோ அனுமதி என்றி இனி யாரும் எந்த காரணத்தை கொண்டும் சுட கூடாது அப்படி ஒரு நிலை எனில் நீங்கள் குப்பி அடியுங்கள் என்ற முடிவை புலிகள் எடுத்ததுதான் [/size][/size][size=1]

[size=4]தூரோகிகளின் வெற்றி. புலிகளால் கூட துரோகிகளை வெல்ல முடியாது போனதுதான் உண்மை.[/size][/size]

[size=1]

[size=4]சர்வதிகாரியால்தான் அது முடியும். சர்வதிகாரம் என்பதுதான் தனிபட்ட முறையில் எனக்கு பிடித்த ஆட்சிமுறையும் ஆகும் (அல்லது எல்லோரும் உண்மையான ஜெகோவாவின் சாட்சிகளாக வேண்டும் அது நடைமுறைக்கு வராது) . போலி ஜெனநாயகத்தை சொல்லி கொல்லபட்ட மக்கள் அளவிற்கு கிட்லர் கொல்லவில்லை என்பதுதான் உண்மை. [/size][/size]

[size=1]

[size=4]என்று எல்லாமதமும் சொல்லும் கடவுளும் சர்வாதிகாரிதான் தனது விருப்புக்கு இன்று நடக்கும் எத்தனையோ கொலைகளையோ பாலியல் துன்புறுத்தலையோ கண்டு அவர் தயங்கவில்லை. பூமிக்கு வருவதற்கு அவருக்கு தேவை வந்தாலே வருவார். இல்லாவிட்டால் எத்தனை அப்பாவிகள் துடித்தாலும் அவர் துரும்பளவும் அசையபோவதில்லை.[/size][/size]

[size=1]

[size=4]இன்று எத்தனையோ உயிர்த்தியாகங்களையும் செய்த மாவீர்களை கண்டு துரோகிகள் பணியபோவதில்லை. நாம் வெறுமனே எல்லாவற்றையும் ஏற்றுகொண்டிருந்தால் அழிவு எமைநோக்கியே வருகிறது. துரோகிகள் செளிப்படைகிறார்கள் நாம்தான் நலிவடைகிறோம். இப்போது துரோகத்திற்கு நல்ல மவுசு.[/size][/size][size=1]

[size=4]( எமது ஊர் பாடசாலை கட்டிட விடயமாக ஈபி டிப்பி உறுப்பினர் ஒருவருடன்தான் எனது உறவை வளர்க்க வேண்டிய கட்டாய நிலை இருக்கிறது. இது இன்று உங்களில் பலருக்கு நேர்த்திருக்கலாம்).[/size][/size][size=1]

[size=4]நாம் நெல்லுக்கு என்று ஊத்திய நீரில் இன்று புல்லுகள் நன்றாக வளர்ந்திருக்கிறது. நெல்லு கருகி வயல்கள் எல்லாம் காய்ஞ்சு போய் கிடக்கு இப்போதும் மனம் சலிக்காதவர்களை காணும்போதுதான் எமக்கும் எதோ ஒரு மன தையிரியம் நெஞ்சில் வருகிறது. [/size][/size]

[size=1]

[size=4]இசை என்றால் தமிழில் இளையராஜா என்று இனி தமிழ் அகராதியில் கூட எழுதலாம் தப்பில்லை என்பது எனது தனிபட்ட எண்ணம். அப்படி ஒரு இசையை தமிழுக்கு தந்தவனை தமிழ் என்ற சொல்லை உலகிற்கு அறிமுகம் செய்தவர்களின் பெயரால் நோகடித்துவிடுவோமா? என்ற அச்சம் என்னைபோல பலருக்கும் இருக்கும்.[/size][/size]

[size=1]

[size=4]நவம்பர் மாதம் முழுக்க விரதம் இருப்பது என்பது வெறும் பூச்சாண்டி என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். மாவீரர் வாரத்திற்குள் அது வந்துவிட்டால் ஏன் என்று ஒரு கேள்வியை நாம் கேட்கலாம். மாவீரர் வாரத்திற்குள் கொண்டு வருவதற்கான முதல் படி இது என்று கூட சிலர் எதிர்வு கூறலாம். எதிர்ப்பவர்கள் இது நவம்பர் மாதம் என்று மட்டுமே காரணம் சொன்னால் அதை ஏற்க முடியாது. அது மட்டுமல்ல அதற்கு நாம் ஆதரவு கொடுத்தால் எங்களை விட இழிவான முட்டாள் இந்த உலகில் வேறு யாரும் இல்லை என்பது எனது தனிபட்ட எண்ணம். [/size][/size][size=1]

[size=4]தலைவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்ட்டாடியதாக பலர் சொல்கிறார்கள் நான் ஈழத்தில் இருந்த வரை அது இருக்கவில்லை. தவிர அன்று முழுக்க தலைவர் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்வார்கள் போராளிகள். [/size][/size][size=1]

[size=4]தமிழனுக்கு இப்படியான விழா என்றால் இனிப்பான விடயம் ஆக அப்படி ஒன்று நடந்தே இருக்காது என்று என்னால் எழுதமுடியாது. [/size][/size]

[size=1]

[size=4]இதை எதிர்ப்பவர்கள்.......[/size][/size][size=1]

[size=4]இது கார்த்திகை மாதம் இதை தவிர வேறு ஏதாவது காரணம் சொல்கிறார்களா?[/size][/size]

[size=1]

[size=4]அப்படி என்றால் அவை என்ன காரணம் என்று யாரவது தயவு செய்து எழுதுவீர்களா? [/size][/size][size=1]

[size=4]எதுவுமே இல்லாமல் நாம் எதிர்த்து கொண்டிருப்பது. வெறும் வாந்திகளையே சாபிடுபவர்களுக்கு நாம் பிரியாணி கொடுப்பது போல் ஆகிவிடும். அதுதான் நடக்கிறதுபோல் இருக்கு.[/size][/size][size=1]

[size=4]கனடா வாழ் உறவுகள் இதில் முட்டாள் தனம் இன்றி காரணத்துடன் இதை அணுகுவது நாலாம் என்று எண்ணுகிறேன்.[/size][/size]

[size=1]

[size=4]கடவுளை நான் நம்புவதில்லை.....[/size][/size][size=1]

[size=4]அப்படி நீ மேலே இருந்தால் கீழே வா இருவரும் பேச நிறைய இருக்கு என்று என்னிகொள்வேன். இல்லை என்றால் நான் மேலே வரும்போது பேசி கொள்ளலாம் என்று சொல்லிகொள்வேன்.[/size][/size][size=1]

[size=4]அதனாலோ என்னமோ எனக்கு கடவுள் ஆசி எப்போதும் உண்டு. நான் வாழும் இடத்தில் தமிழர்கள் இல்லை குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள். வீடும் வேலையாகவும் இருப்பதால் அவர்களையும் காண முடியாது. அவர் அவர் அறிவுக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். பேரணிகள் நடக்கும்போது குறிப்பிட்டவர்கள் நியூ யோர்க்கோ வாசிங்க்டன் டீசிக்கோ வருவார்கள். சிலர் அமெரிக்க வந்தது சொர்கத்திற்கு வந்த நினைப்பில் எங்கிருந்து வந்தோம் என்ற நினைவே அற்று வாழ்கிறார்கள். எல்லாம் அவர் அவர் அறிவோடு நடக்கிறது.[/size][/size][size=1]

[size=4]எனக்கு இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை.[/size][/size][size=1]

[size=4]உங்களுக்கு அப்பிடி இல்லை இவை பல மன உளைச்சலை உங்களுக்கு கொடுக்கும். எதோ ஒருவகையில் எமது சமூகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களே இந்த களத்தில் அதிகம். அப்படியானவர்களின் மனதை இவை வெகுவாக பாதிக்கும். [/size][/size][size=1]

[size=4]சும்மா எல்லாவற்றையும் எதிர்க்கவும் முடியாது அணைக்கவும் முடியாது. எதை அணைப்பது எதை எதிர்ப்பது என்று காரணங்கள் ஊடாக நாம் முடிவு கொள்ள வேண்டும்.[/size][/size][size=1]

[size=4]கள உறவுகள் மன சலனமின்றி இருந்து கொள்ளுங்கள்.[/size][/size]

உங்கள் கேள்விக்கான பதிலாக இவை அமையாவிட்டாலும்

சில நடைமுறைச்சிக்கல்களை இங்கு குறிப்பிடுகின்றேன்.

புலம் பெபயர் நாட்டில் சில அமைப்புக்களுடன் சேர்ந்து நடந்தவன் நடப்பவன் என்ற ரீதியில்

ஒரு விழாவை ஏற்பாடு செய்வதைவிட கடினமான விடயம் நாளைத்தெரிவு செய்வது.

நூற்றுக்கணக்கான விழாக்கள் வருடத்தில் நடப்பதால் அதுவும் சனி அல்லது ஞாயிறு நடப்பதால் இந்தச்சிக்கல் வருகிறது.

முன்பு இயக்கம் வலுவாக இருந்தபோது ஒன்றாக இருந்தபோது

ஒரு வருடத்துக்கான இயக்க கலை பண்பாட்டு விளையாட்டு பாடசாலைகள் மற்றும் புனர்வாழ்வுக்கழகம் சம்பந்தமான விழாக்களுக்கான திகதிகளை முதல் வருட இறுதியிலேயே தந்து விடுவார்கள். அதற்கு ஏற்றாப்போல் மற்றய கழகங்கள் சங்கங்கள்மற்றும் கச்சேரி செய்வோர் திகதிகளை எடுப்பார்கள். அப்படியும் சிக்கல்கள் வந்து ஒரே நாளில் பல நிகழ்வுகள் வந்துவிடுவதுண்டு.

எனவே தான் ஆரம்பத்திலேயே நான் எழுதினேன். நவம்பர் 3ந்திகதி செய்வது தப்பில்லை என்று. ஆனால் எங்கும் அதிதீவிரவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கும் அவர்களது கருத்தை சொல்ல உரிமையுண்டு. இவை மக்கள் மயப்படுத்தப்பட்டு அவர்களது புறக்கணிப்பு நடந்தால் வரவேற்கத்தக்கது.

ஆதிபகவன் .

பணம் பிடுங்கும் நோக்கத்தோடு தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஒரு கலைஞனை அவமதிக்க முயலம் ஈனர்கள் மாவீரர்கள் பற்றிப் பேசுவதற்கு மாவீரர் நாளை நடத்துவதற்கோ எவ்வித தகுதியும் அற்றவர்கள். இவர்கள் யார் என்று இனம் கண்டு, இவர்கள் நடத்தக்கூடிய மாவீரர் நாள் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும்.

தமிழர் அடையாளமும் பண்பாடும் இல்லாமல் தேசியம் இல்லை. அவற்றை எமக்கு மீட்டுத் தந்த கலைஞனை மாவீரர்கள் போற்றுவார்கள். தமது மாதத்தில் அந்த கலைஞனின் புல்லாங்குழல் ஈழத் தமிழர்கள் முன் இசைப்பதை இட்டு மகிழ்வார்கள்.

இந்த மாவீரர்களை மனதில் இருத்திப் போற்றுவோம். பணம் பிடுங்கும் வழிப்பறியர்களை புறக்கணிப்போம்.

மாவீரர் நாளை நடத்துவதற்கும் ,பணம் பிடுங்குவதற்கும் சம்பந்தமென்ன ???? 20 வருடங்களுக்கு மேலாக இவர்கள் மாவீரர் தினத்தை அதற்குரிய சிறப்போடு நடாத்தி வருகிறார்கள் ...........இவையெல்லாம் மூன்று வருடத்திற்கு முன் உங்களுக்கு தெரியவில்லை .......அதுவும் இப்படியான ஒன்றுக்கும் உதவாத உதாரணத்தை காட்டி மாவீரர் நிகழ்வையே புறக்கணிக்கும் அளவிற்கு உங்கள் கருத்து அமைந்திருப்பதை இட்டு வெட்கப்படுகிறேன் ............அப்படி மாவீரர் தினத்தை புறக்கணித்து இப்படியான நிகழ்வுகளை நடாத்துவது கேவலங்கெட்ட பிறப்புக்களாகத்தான்இருக்கும் ................இளையராஜாவின் நிகழ்ச்சி நடந்துவிட்டு போகட்டும் ...............அதால் ஒரு பிரச்னையுமில்லை .நீங்கள் எண்ணெய் ஊத்தி பெருப்பிப்பது என் என்று இப்போதான் விளங்குது............மாவீரை தினத்தை புறக்கணிக்க நினைத்தால் அது உங்கள் பகற்கனவே ............

குறிப்பு ...............இளையராஜாவயும்விட மாவீரர் எமக்கு உயிர்...........................

Edited by தமிழ்சூரியன்

பணம் பிடுங்கும் நோக்கத்தோடு தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஒரு கலைஞனை அவமதிக்க முயலம் ஈனர்கள் மாவீரர்கள் பற்றிப் பேசுவதற்கு மாவீரர் நாளை நடத்துவதற்கோ எவ்வித தகுதியும் அற்றவர்கள். இவர்கள் யார் என்று இனம் கண்டு, இவர்கள் நடத்தக்கூடிய மாவீரர் நாள் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையின் அடிப்படை நோக்கமே இதுவாகத்தான் இருக்கின்றது. இசை நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட ஒன்று. மாவீரர் நாளை வாரமாக்கி அதுக்கும் மேலாக மாதமாக்க முற்படும் இமாலய தேசீய வாதிகளுக்கு இது நன்கு தெரியும். அவர் வந்தவுடன் பிரச்சனையை கிழப்புகின்றார்கள் என்றால் பிரச்சனையை கிழப்புபவர்களுக்கும் இலங்கை அரசுக்குமே தொடர்பிருக்கலாம் தவிர வேறு காரணமிருக்கமுடியாது. இப்போது மிகச் சிக்கலான நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. மக்கள் குழப்பப் படுகின்றார்கள். நிச்சயமாக இப்போது பிரச்சனையை கிழப்புவர்கள் நிச்சயம் நேர்மையானவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. இலங்கை அரசுடன் தொடர்பைக் கொண்டவர்கள் இறுதிக்கட்டத்தில் காசைக் கொள்ளையடித்தவர்கள் என்று சந்தேகிக்க இடமிருக்கின்றது. இவர்கள் இனங்காணப்பட்டு இவர்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மாவீரர் நாளை நடத்துவதற்கும் ,பணம் பிடுங்குவதற்கும் சம்பந்தமென்ன ???? 20 வருடங்களுக்கு மேலாக இவர்கள் மாவீரர் தினத்தை அதற்குரிய சிறப்போடு நடாத்தி வருகிறார்கள் ...........இவையெல்லாம் மூன்று வருடத்திற்கு முன் உங்களுக்கு தெரியவில்லை .......அதுவும் இப்படியான ஒன்றுக்கும் உதவாத உதாரணத்தை காட்டி மாவீரர் நிகழ்வையே புறக்கணிக்கும் அளவிற்கு உங்கள் கருத்து அமைந்திருப்பதை இட்டு வெட்கப்படுகிறேன் ............அப்படி மாவீரர் தினத்தை புறக்கணித்து இப்படியான நிகழ்வுகளை நடாத்துவது கேவலங்கெட்ட பிறப்புக்களாகத்தான்இருக்கும் ................இளையராஜாவின் நிகழ்ச்சி நடந்துவிட்டு போகட்டும் ...............அதால் ஒரு பிரச்னையுமில்லை .நீங்கள் எண்ணெய் ஊத்தி பெருப்பிப்பது என் என்று இப்போதான் விளங்குது............மாவீரை தினத்தை புறக்கணிக்க நினைத்தால் அது உங்கள் பகற்கனவே ............

குறிப்பு ...............இளையராஜாவயும்விட மாவீரர் எமக்கு உயிர்...........................

மாவீரர் உயர் தெய்வங்கள் செல்வங்கள் என்று தேனொழுகப்பேசும் உங்களுக்கு இதை முற்கூட்டியே ஏன் சொல்லத்தெரியவில்லை. இந்த ஒழுங்கு ஒன்றும் ஒரே நாளில் நடக்கவில்லையே ! யார் காசுபார்க்கின்றது என்ற போட்டியில் மாவீரர் நிகழவை நீங்கள் பயன்படுத்த முற்படுகின்றீர்கள். நீங்களே தான் மாவீரர் தினத்தை சிதைக்க முற்படுகின்றீர்கள். உங்கள் கருத்துக்களில் எதுவித நேர்மையும் இல்லை. நீங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்களே

இந்தப் பிரச்சனையின் அடிப்படை நோக்கமே இதுவாகத்தான் இருக்கின்றது. இசை நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட ஒன்று. மாவீரர் நாளை வாரமாக்கி அதுக்கும் மேலாக மாதமாக்க முற்படும் இமாலய தேசீய வாதிகளுக்கு இது நன்கு தெரியும். அவர் வந்தவுடன் பிரச்சனையை கிழப்புகின்றார்கள் என்றால் பிரச்சனையை கிழப்புபவர்களுக்கும் இலங்கை அரசுக்குமே தொடர்பிருக்கலாம் தவிர வேறு காரணமிருக்கமுடியாது. இப்போது மிகச் சிக்கலான நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. மக்கள் குழப்பப் படுகின்றார்கள். நிச்சயமாக இப்போது பிரச்சனையை கிழப்புவர்கள் நிச்சயம் நேர்மையானவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. இலங்கை அரசுடன் தொடர்பைக் கொண்டவர்கள் இறுதிக்கட்டத்தில் காசைக் கொள்ளையடித்தவர்கள் என்று சந்தேகிக்க இடமிருக்கின்றது. இவர்கள் இனங்காணப்பட்டு இவர்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இறுதிக்காலத்தில் காசை கொள்ளையடித்தவர்கள் என்று கூறுகிறீர்கள் ............குற்றச்சாட்டுக்கள் வரவேற்கத்தக்கது ......இதுவரை எல்லோரும் இலகுவாக எழுதும் ஓர் அற்பதமான கருத்து...............ஆனால் இதுவரை எவருமே இவர்தான் காசைப்புடுன்கினார் .இவர்தான் கொள்ளையடித்தார் என்று ஒருவரைக்கூட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டவில்லை என்றுதான் கவலையாக உள்ளது அவர் யாரென்று தெரிந்தால் நாமும் அறிந்து கொள்ளாலாம் அல்லவா ............இப்படி ஆத்தாரத்துடன் ,படத்துடன் சுட்டிக்காட்டப்படும்போது பல குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும் .ஊகத்தின் அடிப்படையில் கூறினால் அது ஏற்கனவே குழம்பியுள்ள மக்களை இன்னும் குழப்பத்திற்கே இட்டு செல்லுமல்லவா ?????

மாவீரர் உயர் தெய்வங்கள் செல்வங்கள் என்று தேனொழுகப்பேசும் உங்களுக்கு இதை முற்கூட்டியே ஏன் சொல்லத்தெரியவில்லை. இந்த ஒழுங்கு ஒன்றும் ஒரே நாளில் நடக்கவில்லையே ! யார் காசுபார்க்கின்றது என்ற போட்டியில் மாவீரர் நிகழவை நீங்கள் பயன்படுத்த முற்படுகின்றீர்கள். நீங்களே தான் மாவீரர் தினத்தை சிதைக்க முற்படுகின்றீர்கள். உங்கள் கருத்துக்களில் எதுவித நேர்மையும் இல்லை. நீங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்களே

எதை?????????

:D:lol::icon_idea::icon_mrgreen:

இறுதிக்காலத்தில் காசை கொள்ளையடித்தவர்கள் என்று கூறுகிறீர்கள் ............குற்றச்சாட்டுக்கள் வரவேற்கத்தக்கது ......இதுவரை எல்லோரும் இலகுவாக எழுதும் ஓர் அற்பதமான கருத்து...............ஆனால் இதுவரை எவருமே இவர்தான் காசைப்புடுன்கினார் .இவர்தான் கொள்ளையடித்தார் என்று ஒருவரைக்கூட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டவில்லை என்றுதான் கவலையாக உள்ளது அவர் யாரென்று தெரிந்தால் நாமும் அறிந்து கொள்ளாலாம் அல்லவா ............இப்படி ஆத்தாரத்துடன் ,படத்துடன் சுட்டிக்காட்டப்படும்போது பல குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும் .ஊகத்தின் அடிப்படையில் கூறினால் அது ஏற்கனவே குழம்பியுள்ள மக்களை இன்னும் குழப்பத்திற்கே இட்டு செல்லுமல்லவா ?????

இசை நிகழ்ச்சியை குழப்புபவர்களின் செயற்பாடு அவ்வாறு சந்தேகிக்க வைக்கின்றது.

1- நவம்பர் 27 மாவீரர் தினத்துக்கும் நவரம்பர் 3 இசை நிகழ்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

2- இசை நிகழ்ச்சியின் ஏற்பாடு பல மாதங்களாக வெளிப்படையாக ஏற்பாடு செய்யப்படுகின்றது அப்போது எந்த கலகத்திலும் ஈடுபடாமல் திடீர் என்று தற்போது செய்வதுதான் பின்னணியில் யாரோ இருப்பதற்கான அதிக சந்தர்ப்பம் என்று கருத இடமும்ணடு.

3- இந்த இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் மூன்று வாரங்கள் கழித்து மாவீரர் தினம் வழமையான குத்துப்பாடுகளுக்கு நடுவே நடக்கும் ஆனால் இப்போது தோற்றுவிக்கப்படும் பிரச்சனையால் குத்துப்பாடுகள் அதிகரிக்கும். அந்தவகையில் தற்போது குழப்பம் விழைவிக்க முற்படும் கலகக் காரர்களையே சந்தேகிக்க இடமுண்டு.

4- புதிதாக யாரும் இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதை பழைய ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை.

5- இளையராசாவின் இசை தனியே கொண்டாட்ட இசை இல்லை. தமிழோடு சம்மந்தப்பட்டது அங்கே மக்கள் கூடுவது கூட ஒரு பலம் அதை விரும்பவில்லை.

எப்படி எந்த வகையில் இதைப்பற்றிச் சிந்தித்தாலும் தற்போதைய கலகக் காரர்கள் சந்தேகத்துக்கு இடமானவர்களே ! இலங்கை அரசின் கைவரிசை என்றவர்கள் தற்போது றோவின் கைவரிசை என்று எழுதத் தொடங்குகின்றாரகள். காசுள்ள நாலுபேர் கனடாவில் இருக்கின்ற நூறாயிரக்கணக்கான சனத்தின் தலையிலும் மாவீரர் நாமத்தைக்கொண்டு மொட்டையடித்து மிளகரய்கலாம் என்றால் அதற்கு உடன்பட முடியாது. நீங்கள் சுமத்த முற்படும் பழி உங்களுக்கு சொந்தமாக்கப்படும்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது ...........அதன் படி ஆரம்பித்துவிட்டது..........ஆனால் இந்தமுறை கொஞ்சம் வேளைக்கு ஆரம்பித்துவிட்டது.............

இந்த திரி இவ்வளவு நீண்டு போக ஒரே அடிப்படைக்காரணம் .நம்மிடம் உள்ள குழப்பங்கள் தான் ....................அந்தக்குழப்பங்க்களை அழகான முறையில் உரியவர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்த திரி நல்ல ஓர் உதாரணமாய் அமையும்............

இப்ப என்ன பிரச்சனை .............இளையராஜாவின் இசை நிகழ்ச்சியால் யாருக்கு பிரச்சனை .........ஒருவருக்கும் பிரச்சனையில்லை ...............ஆனால் யாருக்கு பிரச்னை என்பதை நான் இங்கு குறிப்பிட்டு இன்னும் இந்த திரியை நீட்டிச்செல்ல இஸ்டமில்லை ...அதனால் ஆணித்தரமான சில விடயங்களை குறிப்பிடுகிறேன் .

1 எம் தேசியத்தலைவரின் கலை சார்ந்த சிந்தனைக்கு ஏற்ப இந்த்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இனிது நடைபெறவேண்டும்......................

2 கனடா வாழ அத்தனை ஈழத்தமிழ் உறவுகளும் இந்த நிகழ்ச்க்கு சென்று அந்த தமிழர்களின் பெரும் கொடையாகிய அந்த கலந்ஜனை கவ்ரவிக்கவேண்டும்................

3 எதிர்காலத்தில் மாவீரர் தினம் அன்றே இப்படியான நிகழ்வுகள் நடைபெற சாத்தியக்கூறுகள் உள்ளது............அதுவும் பிழையல்ல .ஆனால் எந்த நிகழ்வுக்கு நான்.....,நீ............முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுக்க தயாராய் இருக்கவேண்டும் ..

சாதாரணமான விடயம்...........இழுத்து அனைத்தையும் நாறடிக்காதீர்கள் ,,,,,,,,எனக்கு இவற்றை எழுத ஓர் தகுதி இருப்பதனால் எழுதுகிறேன் ................அந்த தகுதி நான் எப்போதும் மாவீரர் காற்றை சுவாசிப்பவன் ...நான் மட்டுமல்ல நீங்களும்தான் நன்றி வணக்கம்

இளையராயாவின் இசை நிகழ்ச்சி பற்றி நான் இன்னொரு திரியில் கருத்திட்டது ............உங்கள் சந்தேகங்கள் நியாயமானவையாய் இருக்கலாம்

ஆனால் நான் பின்னூட்டமிட்ட இன்னொரு கருத்திற்கு நீங்கள் பதில் சம்பந்தமில்லாமல் பதில் எழுதிய படியினாலே .........நான் இப்படி எழுதினேன் ..

குழப்பங்களை எல்லா தமிழர்களும் விரும்புகிறவர்கள் இல்லை

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா தமிழரின் அடையாளம் என்பதும் நாங்களே.. (நாங்க யாரும் அப்படி ஏற்றுக் கொண்டதா இல்லை!.. அவர் ஒரு நல்ல இசைக்கலைஞன்.. அவ்வளவு தான்..!) அவரை கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துவதும் நாங்களே.. மாவீரர்கள் என்பதும் நாங்களே.. மாவீரர் தினம்.. வாரம் அனுஷ்டிப்பதும் நாங்களே.. அதனை களியாட்ட விழா போலச் செய்வதும் நாங்களே.. விடுதலை கேட்டவர்களும் நாங்களே.. களத்தில் அவர்களை சாகவிட்டு.. அகதி அந்தஸ்திற்காக.. பிற நாட்டு பிரஜா உரிமைக்கு அடிபட்டு ஓடினவர்களும் நாங்களே.. எங்களிடம் போய்.. கொள்கை.. கோத்திரம்.. கோட்பாடு.. இதை எல்லாம் பேசுவது.. சரிவராது..!

எனவே இளையராஜா வாழ்க..!

இதில காட்டிக் கொடுப்பாளர்கள் இடையில புகுந்து நின்று கொண்டு தாங்களும் தாங்களும் என்றதுதான் இன்னும் வேடிக்கை.

காட்டிக் கொடுப்பாளர்களைப் பொறுத்தவரை உலகின் எந்த மூலையிலும் மாவீரர் நிகழ்வுகள் அறவே நடக்கக் கூடாது. புலி பற்றிய எந்த எச்சமும் எங்கும் இருக்கக் கூடாது. சிங்களவனை விட இவைக்கு புலி மேல உள்ள வெறுப்பு என்பது எல்லை கடந்தது..!

சந்தர்ப்பவாதிகளுக்கு இதுதான் காக்கா பிடிக்க சரியான தருணம். தங்களை தென்னிந்திய சினிமாவில் தலைகாட்ட வைக்க.. மாவீரர்கள் என்ன மாதமென்ன.. புனிதமென்ன.. அதெல்லாம் சும்மா வார்த்தைகள். அப்படின்னு ஒன்றே அவர்களின் சுயநலத்துக்கு முன்னில்லை..!

இன்னும் கொஞ்ச புத்திசாலிகள்.. சா.. முற்போக்கு எழுத்தாளர்களோ.. சா சுய பகுத்தறிவாளர்களைப் பொறுத்தவரை.. 1990 க்கும் முன் மாவீரர் தினம் இருந்ததோ.. ஆனால் இளையராஜா இருந்தவர். மாவீரர் வாரம் இருந்ததோ இல்லை. இப்ப என்ன மாவீரர் மாதம் என்றீங்கள். மாவீரர் தினமே கொண்டாட முடியாம அல்லல் படுறம். அதென்ன புதிதா மாவீரர் மாதம். அப்படின்னு ஒன்று வந்திட்டா.. நாங்க எங்க மனிசி மாரோட கூடவும் விடமாட்டாங்கள் போல எல்லோ கிடக்குது. எனவே கனடாவில்.. போராட்டத்தை அடகு வைத்து குடியேறீயோர் மத்தியில் இளையராஜா பணம் புடுங்குதல்.. வரவேற்கப்படும். புத்திசாலிகளின் சுய அறிவுக்கு எட்டிய வரை இது ஒன்றும் பகுத்தறிவுக்கு விரோதமான செயலே அல்ல...!

தலித்தியம்.. குறுந்தேசியம்.. தமிழ் தேசியம்.. விரோதம்.. குரோதம்.. இதுகளை எழுதியே எழுத்து வளர்க்கிறவைக்கு.. எழுத ஒன்றுமில்ல.. அப்ப என்ன செய்வது... தமிழ் தேசியவாதிகளுன்னு நாலு பேரை இழுத்து வைச்சு ஒரு வாங்கு வாங்க.. இப்படியான தலைப்புக்கள் தான் தஞ்சம். அவை தங்கட எழுத்துப் புலமை.. காழ்ப்புணர்ச்சி.. வயிற்றெரிச்சல் எல்லாத்தையும் ஒன்றாச் சேர்த்துக் கொட்ட..பயன்படுகிறது இந்தத் தலைப்பு. அதில் இடையில் இளையராஜாவின் நலன் பேணல். மாவீரர் உச்சரிப்பு. அது இப்போதைக்கு ஒரு ஓரத்தில கிடக்கட்டும். எப்ப அது முக்கியம் பெறுதோ அப்ப அதைப் பார்த்துக்குவம்..!

இப்படியாப்பட்ட பல வித மனித வினோதங்கள் வாழும் இடத்தில்.. கள நிர்வாகம். அதுவும் விதிவிலக்கல்ல..! செல்வமணிட அறிக்கையைக் கூட.. தூக்கிட்டு.. ஜெயபாலனின் தலைப்பை மட்டும் விட்டு வைச்சிருக்குது..!

யாழுக்கும் சரி நிகர் வியாதி தொத்திட்டுப் போல. அது திசை மாறிக்கிட்டே போகுது. சரி நிகரில் எதுவும் சரியாகவும் இருந்ததில்ல நிகராகவும் இருந்ததில்ல. அதுபோல யாழும் ஆகிக்கிட்டு போகுது.

இந்த இடத்தில் இளையராஜா நிகழ்ச்சி நடத்த.. அதில நாங்கள் விசிலடிக்க.. அவர் அதில புகழும் பணமும் புரட்ட.. மாவீரர்கள் பாவங்கள்.. எந்த சனத்துக்காக போராடப் போய் மடிந்தார்களோ.. அந்த சனத்தாலையே குதறி எறியப்பட்டு.. மறக்கப்படும் நேரங்கள் கண்ணெதிரே தெரிவது மட்டும் நிஜமாக இருக்கிறது..! இளையராஜாவ வாழவைக்கை ஆயிரம் பேர் இருக்கிறாங்க. ஆனால் மாவீரர்களை நினைவு கூற ஆள் தேடிப்பிடிக்கும் நிலை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை..!

இளையராஜா.. கடவுளுக்கு செருப்பால அடிக்கமாட்டார்..! ஏனென்றால்.. அது அவரை புண்படுத்தாது. அவரின் ரசிகளைப் புண்படுத்தும். அவரின் புகழுக்கு இழக்காரமாகும். ஆனால் வாழும் தெய்வங்களாகப் போற்ற வேண்டிய மாவீரர்களை மதிக்க.. இளையராஜா மட்டுமல்ல.. பலரும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

இளையராஜா என்ன தான் பெரிய கலைஞனா தன்னை இனங்காட்டினாலும்.. அவரை கலைஞனாக ஏற்றுக் கொள்ளாத ஏன் அவரைத் தெரிந்தே இராத எத்தனையோ கோடி மக்கள் இந்தப் பூமிப்பந்தில் வாழ்கினம்.. என்பதையும் இங்கு கருத்தெழுதும் கணவான்கள் சிந்திப்பது நல்லம். அந்த நிலையை மாவீரர்கள் மத்தியிலும் ஏற்படுத்தாதீர்கள். மாவீரர்களை அறிந்திருக்கும் ஒரு சிறிய குழும மக்களிடம் இருந்து கூட அவர்களை உங்களின் தனிப்பட்ட கெட்டித்தனக்களுக்காக மறக்கடிக்கச் செய்யாதீர்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதம் நிகழ்ச்சி ஒன்றுமே வைக்ககூடாது என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நவம்பர் மாதத்தை மாவீரர் மாதமாகவே பிரகடனப்படுத்தக் கூடாது. அதையும் எனி பிரபாகரன் வந்து சொன்னால் தான் செய்வீங்களோ..??! நீங்களா எதனையும் செய்யமாட்டீர்களோ..??!

முன்னர் நவம்பர் 26 இல் ஒரு தினமாக இருந்த மாவீரர் நாளை.. விடுதலைப்புலிகள் மாவீரர் வாரமாக நீட்டினார்கள். மாவீரர் நாள் நவம்பர் 27 என்று ஆனது. இன்று மேலும் எத்தனையோ ஆயிரம் பேர் மாவீரர்கள் பட்டியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ள நிலையில்.. எத்தனையோ மாவீரர் குடும்பங்களும் போராளிகளும் தேச விடுதலைக்காகப் போராடிய மக்களும் நிர்கதியாகி உள்ள நிலையில் அவர்கள் மீது கவனம் செலுத்த ஒரு மாதத்தை மாவீரர் மாதமாக்கி தொண்டு அடிப்படையில் அவர்களுக்கு உலகத் தமிழினம் உதவினால் என்ன தப்பு..???! ஏன் அப்படிச் செய்யக் கூடாது..?????????!

ஏன் தமிழின அடையாளமாக உள்ள.. இளையராஜா தனது வருமானத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்கதியாகியுள்ள மாவீரர்களுக்கு வழங்கக் கூடாது..???! அதை யாராவது பெற்றுக் கொடுப்பீர்களா..????!

இசைக்கு ஒரு மாதம்.. வைச்சு கொண்டாடும் தமிழன்.. தம் இனம் வாழ உயிர் விட்ட ஜீவன்களுக்காக ஒரு மாதம்.. உணர்வேந்தலுக்கு.. உதவி புரிதலுக்கு என்று அதனை நீட்டி வைக்கக் கூடாது..???!

பொப்பி வாரங்கள் என்று போர் வீரர்களை அவர்களின் குடும்பங்களை பராமரிக்க கவனிக்க.. நினைவு கூற என்று மேற்குலகிலும் இந்த நடைமுறை இருக்குத் தானே..??! ஏன் நாங்கள் மாவீரர் சார்ந்த விடயங்களை ஒரு நாளைக்குள் அடக்கி வைக்க வேண்டும். மாவீரர் குடும்பங்கள் மீதான கவனம்.. முன்னாள் போராளிகள் மீதான கவனம்.. குறைந்துள்ள இன்றைய நிலையில் அவர்களுக்கு உதவ.. கவனிக்க.. எமக்கு ஒரு மாதம் கூடப் போதாதே..????!

நாங்கள் மாவீரர் தினத்தை.. வாரத்தைக் கூட கடமை உணர்வோட செய்யுறமா.. இல்ல வெறும் வார்த்தை அளவில் அவற்றை கடைப்பிடிக்கிறமா.. என்பதில் இருந்து தான்.. சில விடயங்கள் புதுப்பிறப்பு பிறக்க வேண்டி உள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் 7 நாட்களாக அது இருந்தது. பிற்பாடு, மாவீரர் வாரத்தில் மாவீரர்கள் பற்றிய விருப்பும், உவகையும், நாட்கள் நீட்சியால் குறைவதைக் கருத்தில் கொண்டு தான் அதை 3 நாட்களாக மாற்றினார்கள். ஒரு மாதம் கடைப்பிடிப்போம் என நீங்கள் எழுதுவீர்கள். ஆனால் அந்த ஒரு மாத்ததில் நீங்கள் யாரும் அதைப் பக்திபுர்வமாக நினைவில் கொண்டு யாழில் தேவையற்ற கருத்துக்களை வைக்காமல் இருப்பீர்களா என்ன? கடந்த வரலாற்றில் மாவீரர் நாளில் கூட, என்ன மாதிரியான கதைகளை யாழில் கதைத்தீர்கள் எனப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.. அப்போது எல்லாம் எப்படி உணர்வுபுர்வமாக இருந்தீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி விளங்கப்படுத்தத் தேவையில்லை. எழுதுவதற்கு என்ன வேண்டுமானாலும் வீராப்பாகப் பந்தி வடிவமாக வடிக்கத் தெரியும் என்பது எனக்கும் தெரியும்...

ஏன் நீங்கள் எவ்வளவு பணம் மாவீரர் குடும்பத்திற்கு கொடுத்தீர்கள்?? அவர் ஏன் கொடுக்க வேண்டும்?? ஆயினும்

உண்மையில் இந்த நிகழ்வில் கிடைக்கும் பணத்தில் குறித்தளவு தொகையை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தான் ஒதுக்குகின்றார்.

இதுவரை நான் இளையராஜா நிகழ்ச்சிக்குப் போவதில்லை என்று தான் இருந்தேன். ஆயினும் இப்போது போவதாக நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுத்துள்ளேன். யாராவது யாழ்கள உறவுகள் அங்கே வந்தால் சந்திப்பு ஒன்றைச் செய்யலாம்!!!

ஏன் நீங்கள் ஒரு மாதத்துக்கு மட்டுமே நீட்ட வேண்டும். வருடம் முழுவதும் ஏன் அவர்களைக் கௌரவிக்ககூடாது!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் 7 நாட்களாக அது இருந்தது. பிற்பாடு, மாவீரர் வாரத்தில் மாவீரர்கள் பற்றிய விருப்பும், உவகையும், நாட்கள் நீட்சியால் குறைவதைக் கருத்தில் கொண்டு தான் அதை 3 நாட்களாக மாற்றினார்கள். ஒரு மாதம் கடைப்பிடிப்போம் என நீங்கள் எழுதுவீர்கள். ஆனால் அந்த ஒரு மாத்ததில் நீங்கள் யாரும் அதைப் பக்திபுர்வமாக நினைவில் கொண்டு யாழில் தேவையற்ற கருத்துக்களை வைக்காமல் இருப்பீர்களா என்ன? கடந்த வரலாற்றில் மாவீரர் நாளில் கூட, என்ன மாதிரியான கதைகளை யாழில் கதைத்தீர்கள் எனப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.. அப்போது எல்லாம் எப்படி உணர்வுபுர்வமாக இருந்தீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி விளங்கப்படுத்தத் தேவையில்லை. எழுதுவதற்கு என்ன வேண்டுமானாலும் வீராப்பாகப் பந்தி வடிவமாக வடிக்கத் தெரியும் என்பது எனக்கும் தெரியும்...

ஏன் நீங்கள் எவ்வளவு பணம் மாவீரர் குடும்பத்திற்கு கொடுத்தீர்கள்?? அவர் ஏன் கொடுக்க வேண்டும்?? ஆயினும்

உண்மையில் இந்த நிகழ்வில் கிடைக்கும் பணத்தில் குறித்தளவு தொகையை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தான் ஒதுக்குகின்றார்.

மாவீரர் வாரம் என்பது அப்படியே மாவீரர்களை நினைச்சுக்கிட்டு.. கண்ணீர் வடிச்சுக்கிட்டு.. விளக்கு கொழுத்தி வைச்சிட்டு.. விரதம்..இருக்கிறதல்ல.

மாவீரர் வாரம் என்பது மாவீரர்களின் நினைவேந்தலோடு மக்களுக்கும் மாவீரர் சார்ந்தவர்களுக்கும் உதவுதலைக் குறிக்கும்.

நான் நினைக்கிறேன்.. நான் சிறியவனாக ஊரில் இருந்ததில் இருந்து மாவீரர் வாரத்தில் முழு வாரமும் தொண்டு செய்திருப்பதை..! ஒரு முறை யாழ் வைத்தியசாலை சுற்றாடலைக் கூட சுத்தம் செய்து கொடுத்திருந்தோம். மாவீரர் குடும்பங்கள் சார்ந்த வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உதவி இருக்கிறோம்..!

மேலும்.. மாவீரர் நினைவேந்தல் நாள் என்பதில் யாரும் யாழில் கூத்தடிக்கல்ல. எழுதப்பட்ட கருத்திற்கு கருத்தெழுதுவதால் மாவீரர் வாரம் நினைவு கூறப்படவில்லை என்பது சுத்த சப்பைக்கட்டு வாதம்..!

என்னைக் கேள்வி கேட்க முதல் நீங்கள் மாவீரர் குடும்பங்களுக்கு எவ்வளவு செய்தீர்கள்.. ஊரில் இருந்தும் இங்கிருந்தும் என்று சொல்வீர்களா. நிச்சயமாக சொல்வேன்.. உங்களை விட நிறையவே நாங்கள் செய்திருக்கிறோம்..! செய்து கொண்டும் இருக்கிறோம்..! அது உங்களுக்காக அல்ல. எங்கள் தோளோடு தோள் நின்ற நண்பர்களும் உறவுகளும் அந்தப் பட்டியலில் இருப்பதாலாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.