Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் 252 கி.மீ. தண்டவாளத்தை இந்தியா புனரமைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி - யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக திகழ்ந்தது. போரினால் இந்த ரயில் பாதையை முழுவதும் அழிவடைந்து விட்டது.

இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள ரயில் பாதையை மீண்டும் புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புனரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) செலவு செய்கிறது. ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடனாக இந்த தொகை வழங்கப்படுகிறது.

இந்திய அரசு நிறுவனமான `இர்கான்´, இந்த ரயில் பாதையை புனரமைக்கும் பணியில் ஈடுபட உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பணிகள் முடிவடையும் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக இலங்கையில் `இர்கான்´ செயல்பாடுகளை கவனிக்கிற அதன் பொதுமேலாளர் எஸ்.எல்.குப்தா கூறும்போது, "252 நீள ரயில் பாதை திட்டம், 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக மதவாச்சி - மதுசாலை வரையிலான பணிகள் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் முடியும். அதைத்தொடர்ந்து மதுசாலை-தலைமன்னார் பணிகள், ஓமந்தை - பால்லாய் பணிகள் அடுத்த செப்டம்பரில் நிறைவு அடையும். இறுதிக்கட்டமாக பால்லாய் - காங்கேசன்துறை பணிகள் அடுத்த டிசம்பரில் முடியும் என்றார்.

(நக்கீரன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத்தரதேவியிலை கொழும்புக்கு வந்த நான்.........யாழ்தேவி வருமட்டும் காத்திருக்கிறன்.......திரும்பி போக.......

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரதேவியிலை கொழும்புக்கு வந்த நான்.........யாழ்தேவி வருமட்டும் காத்திருக்கிறன்.......திரும்பி போக.......

இந்தியா தண்டவாளம் போட்டு முடிக்க... இன்னும் 150 வருடங்கள் எடுக்கும். அதுவரை...காத்திருக்கவும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தண்டவாளம் போட்டு முடிக்க... இன்னும் 150 வருடங்கள் எடுக்கும். அதுவரை...காத்திருக்கவும். :D

அந்த தைரியத்திலைதான் சொன்னனான். :D

ஈழத் தமிழ் மக்களை (கைக்கூலிகள் தவிர்ந்த) ஏமாற்ற முடியாத இந்திய அரச காட்டுமிராண்டிகள் 3 வருசத்துக்கு முன்பு சொன்னதையே இப்பவும் சொல்லி தமிழ் நாட்டு மக்களை ஏமாற்ற முனைகிறார்கள்.

தமிழக நண்பர் ஒருவர் கடந்தவாரம் சன் செய்திகளில் "போர்க் காலங்களில் இரண்டு தடவை அழிக்கப்பட்ட கிளிநொச்சி மருத்துவமனை இந்திய உதவியுடன் மீள் புனரமைப்பு" என்ற தலைப்பில் வந்த செய்தியை பெருமையுடன் சொன்னார். இந்தியாவில் கூட அப்படியான சுத்தமான மருத்துவமனை இல்லை என்று அந்த சன் நிருபர் நேரடியாக எடுத்த காணொளிகளுடன் அந்தச் செய்தி சொல்லப்பட்டதாம்.

உண்மையில் அந்த மருத்துவமனையை அழிக்க துணைபோன இந்திய அரச பயங்கரவாதிகள் அதை புனரமைக்க உதவியும் செய்யவில்லை. உண்மையில் அந்த மருத்துவமனைக்கு ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படது. அதன் பின்னர் கடந்த மாதங்களில் ஒருசில சில்லறை உபகரணங்களை வழங்கிய இந்திய அரச பயங்கரவாதிகள், சன் செய்தி ஊடாக பெரிய பொய்யைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர்.

கொலைஞர் கருணாநிதி புகழ் பாடும் சன் நிறுவனம் தமிழக மக்களை ஏமாற்ற போலிச் செய்திகளை எப்படி தெரிவிக்கின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றிகளும் வாழ்த்துகளும்...இப்பொழுதெல்லாம் ஈழத்தில் வாடும் எம் மக்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றும் விடயங்களை யார் செய்தாலும் வரவேற்கும் நிலையிலேயே மனம் இருக்கிறது..யார் செய்கிறார்கள் என்று பார்க்கும் மனநிலையெல்லாம் கப்பலேறிப் போய் கனகாலம் ஆகிவிட்டது...அந்தமகளின் போராட்டத்தில் குளிர்காய்ந்தவர்கள் எல்லாம் அந்த மக்களை கைவிட்ட நிலையில் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவைக்கும் விடயங்களை யார் செய்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வாழ்த்துகிறது மனது...இவர்களைப் போன்ரவர்கள் செய்த துரோகங்கள் எல்லாம் மனதில் கிடந்து குமைந்தாலும் வறுமையில் வாடும் அந்த மக்களினதும் குழந்தைகளினதும் புன்னகைகள் நினைவுகளில் முன்னால் வந்து எல்லாவற்ரையும் மறக்கடித்துவிடுகிறது...[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தண்டவாளம் போட்டு முடிக்க... இன்னும் 150 வருடங்கள் எடுக்கும். அதுவரை...காத்திருக்கவும். :D

இந்தியா ரயில்வே துறையை அப்பிடி சாதரணமா எடை போடதிங்கன்னா.......உலகிலையே அதிக ஊழியர்களை கொண்ட one of the மிகப்பெரிய நிறுவனம் அது பல சாதனைகளை தன்வசம் வைத்திருப்பது பல திறமையான ஊழியர்கள் அதிகாரிகளை கொண்டது இந்தியா ரயில்வே இல் வேலை செய்தவர் என்றால் வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை எடுப்பது மிக சுலபம்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான அதனுடைய வருமானம் மட்டும் சுமார் 20 .16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

அதே ஆண்டுக்கான எல்லா செலவுகளும் போக லாபம் 1 .82 பில்லியன் டாலர்கள் இந்த காலத்தில் எந்த அரசு துறை இப்பிடி லாபத்தில் இயங்குகின்றது?

1 .4 மில்லியன் பேர் வேலை செய்கின்றர்கள்

115000 கில்லோ மீட்டர் தூர அளவை கொண்ட ரயில் பாதையை உடையவர்களுக்கு 250 km போடுவதெல்லாம் வெறும் சுண்டக்காய் விடையம்

7500 ரயில் நிலையங்களும்

தினமும் 20 மில்லியன் பேரை காவிச்செல்கின்றது அதாவது ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை அது.

:D

  • கருத்துக்கள உறவுகள்

அதனால என்ன சொல்ல வாறன் எண்டா கண்டிப்பா யாழ் தேவி odum நம்ம கும்ஸ் தாத்ஸ் தான் சொன்ன சொல்ல காப்பாற்றுவார? போவாரா மாட்டாரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாவமன்னிப்பா ? :rolleyes:

உத்தரதேவியிலை கொழும்புக்கு வந்த நான்.........யாழ்தேவி வருமட்டும் காத்திருக்கிறன்.......திரும்பி போக.......

வெளிநாட்டில் ஒரு தேவியையும் சந்திக்கவில்லையோ ? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாவ மணிப்பெல்லாம் இல்லை இலைங்கையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்ற அதிகார போட்டியில் இலங்கைக்கு கிடைக்கின்ற ஒரு நன்மை அவளவு தான் ஆனாலும் போட்டியில் சீன தான் முன் நிற்கிறது :D

இந்தியாவின் பாவமன்னிப்பா ? :rolleyes:

வெளிநாட்டில் ஒரு தேவியையும் சந்திக்கவில்லையோ ? :D:lol:

வெளிநாடுக்கென்று வந்திட்டாலே அப்புறம் என்ன தினம் தினம் மூ தேவிய தான் சந்திக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

பாவ மணிப்பெல்லாம் இல்லை இலைங்கையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்ற அதிகார போட்டியில் இலங்கைக்கு கிடைக்கின்ற ஒரு நன்மை அவளவு தான் ஆனாலும் போட்டியில் சீன தான் முன் நிற்கிறது :D

வெளிநாடுக்கென்று வந்திட்டாலே அப்புறம் என்ன தினம் தினம் மூ தேவிய தான் சந்திக்கணும்

:lol: :lol: :lol:

அந்த தைரியத்திலைதான் சொன்னனான். :D

:D:lol: :lol: :lol:

வெளிநாட்டில் ஒரு தேவியையும் சந்திக்கவில்லையோ ? :D:lol:

:D :D

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிமா காலத்துக்கு பிறகு அங்கை ஓடுற ரயில்முழுக்க சீனாக்காரன் செய்துகுடுத்தது......பெயர் மட்டும்தான் சிங்களவன் வைச்சது....பண்டாரநாய்க்கா மண்டபமும் சீனன் தான் புண்ணியத்திலை கட்டிக்குடுத்தவன்......கூட்டிகழிச்சுப்பாத்தால் சீனாக்காரன் சிறிலங்காவுக்கு கனக்க நல்லது செய்திட்டான்...அந்த நன்றியுணர்ச்சி சிங்களவருக்கு கட்டாயம் இருக்கும்.....இருக்கணும்.அதுதான் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

அதனை விட இலங்கைக்கு அதிகம் உதவி செய்ற நாடு ஜப்பான் இலங்கை பாடு கொண்டாட்டம் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சரியாகத்தான் பங்கிடுகிறது

யாருக்கு என்ன வேலை

இந்தியாவுக்கு வீதி போடுதல்

சீனாவுக்கு அணுஆயுதம்............ :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு இதில் முன் அனுபவம் உண்டு. ஏற்கனவே 1988/89 இலும் போட்டவை தானே. இப்ப திரும்பி போடினம். ஏன் தான் இவைக்கு சிங்களவனுக்கு இவ்வளவு பயமோ..???! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு இதில் முன் அனுபவம் உண்டு. ஏற்கனவே 1988/89 இலும் போட்டவை தானே. இப்ப திரும்பி போடினம். ஏன் தான் இவைக்கு சிங்களவனுக்கு இவ்வளவு பயமோ..???! :D:lol:

இமயமலையில் இருந்து மாத்தறை மட்டும் தண்டவாளம் போடுகிற ஒரு முயற்சிதான்......

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயிருந்து, வந்தது, இந்த 252 கிலோ மீட்டர்கள்?

ஓமந்தை வரையும் தான் தண்டவாளம், ஏற்கெனவே இருக்குதே?

ஆக ஒரு நூறு கிலோமீட்டர் தான் மிஞ்சி, மிஞ்சிபோனாப். போடா வேண்டியிருக்கும்!

அதுக்குத் தான், இவ்வளவு எடுப்பும்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் இந்தியா 100 km போடுறத்திக்கு 250 தான் கணக்கு காட்டுவினம் மிச்சம் எத்தின பேருக்கு கமிஷன் வெட்டனும் தெரியுமா

இமயமலையில் இருந்து மாத்தறை மட்டும் தண்டவாளம் போடுகிற ஒரு முயற்சிதான்......

இமய மலையும் மாத்தறையும் சீனாவின் உறுதியான பிடியில்!

இந்தியக் காட்டுமிராண்டிகள் வெறும் கொட்டாவி விடலாம்!!!

இந்தியா யாழ்பாணத்துக்கு தண்டவாளம் போட சீனா அஸ்ஸாமுக்கு தண்டவாளம் போடுறான்.

இந்த தண்டவாளம் மாதிரி தான் இந்திய-இலங்கை உறவு ஓட்டுறமாதிரி இருக்கும் ஆனால் ஒட்டாது . இது இந்தியாவுக்கு எப்போ தான் புரியபோகுதோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.