Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 வது உலகப் போர் வெடிக்கும் அபாயம்

Featured Replies

மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது.

சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 1 பெண் இறந்ததோடு , துருக்கிப் பொலிசார் ஒருவரும் காயமடைந்தார். இதனை அடுத்து துருக்கி இராணுவத்தினர் சற்று நேரத்துக்கு முன்னர் சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிரியா – துருக்கி எல்லையில் நிலைகொண்டுள்ள சிரிய இராணுவத்தினரைச் சமாளிக்க, மேலதிகமாகப் பல இராணுவத்தை துருக்கி அவ்விடத்தில் குவித்துள்ளது. இதனை அடுத்து பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இந் நிலை தொடர்பாக ஆராய, அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவுக்கு ஆதரவாக, சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், சிரியாவுக்கு எதிராக துருக்கி போரில் இறங்கும் பட்சத்தில் துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் என நம்பப்படுகிறது. இதனால் பாரிய போர் மூழும் ஆபாயம் காணப்படுவதாகவும், இந் நிலையை உடனடியாக தவிர்க்கவே, பல பன்நாட்டு அமைச்சர்கள் அவசர சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகவும் மேலும் அறியப்படுகிறது. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரை அமெரிக்காவே மறைமுகமாக வழிநடத்துவதாக சிரியாவின் அதிபர் கடுமையாகச் சாடியுள்ளார். இருப்பினும் அமெரிக்க இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

http://www.eelamboys.net/archives/575

  • கருத்துக்கள உறவுகள்

யப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, தென்கொரியா............ இந்த நாடுகள் எல்லாம் காரணங்களாக அமையப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, தென்கொரியா............ இந்த நாடுகள் எல்லாம் காரணங்களாக அமையப்போகிறது.

பால் வார்த்தீர்கள்

எனது குறிப்பிலும் இந்த நாடுகளே கணக்கு தீர்ப்பதில் உள்ளன.

ரசியா அதன் கடைசி நாடு.

கணக்கு சரியாகத்தான் வருகிறது

எல்லாம் அடுத்த மேக்குள் முடிந்தால்

முள்ளி வாய்க்காலில் இவர்களால் நாசமாக்கப்பட்ட மக்களுக்கு காணிக்கையாக்கலாம்

DECEMER 2012.ஆழ்ந்த அனுதாபங்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

DECEMER 2012.ஆழ்ந்த அனுதாபங்கள்..........

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எல்லோருக்கும் முன் கூட்டியே :(

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் சொல்லிக் கொண்டிருக்காமல்.. அப்படி ஒரு 3ம் உலகப் போர் மூளும் பட்சத்தில்.. உலக மக்கள் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டி வரும். அது அமெரிக்காவில் இருந்து சிறீலங்கா வரை பரவும்..! உலக மாணவ சமூகம் இதனை வழிநடத்தும் நிலை தோன்றும்.

சும்மா ஆட்சியாளர்கள் ஆயுதத்தை வைச்சு மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பூமியில் மனித இனம் மனிதனாலேயே அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு போராட்ட சூழல் எழுந்தால் அதில் என் பங்களிப்பும் உலக மாணவ சமூகத்தை நோக்கி இருக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலக மாணவ சமூகம் இதனை வழிநடத்தும் நிலை தோன்றும்.

அப்படி ஒரு போராட்ட சூழல் எழுந்தால் அதில் என் பங்களிப்பும் உலக மாணவ சமூகத்தை நோக்கி இருக்கும்..! :icon_idea::)

ஈழமாணவர் பொது முன்னனியோ....GUES....:D

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்போர் ஏற்பட்டால் அதில் சிறிலங்காவின் பெரும் பங்கும் நிச்சயமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமாணவர் பொது முன்னனியோ....GUES.... :D

Global Union of Eelam Students. (GUESs) - (ஈழ மாணவர்கள் உலகக் கூட்டணி) இதுதான் எங்க அமைப்பு. இந்தப் பெயரை யாரும் திருடி விடாமல் பார்த்துக்குங்க..! நாங்க இப்ப ரகசியமாத்தான் செயற்படுறம். தேவையான நேரத்தில தேவையான வடிவில விஸ்வரூபம் எடுப்பம்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப் வெடித்துவிட போகுது.. பேண்டேச் எல்லாம் இங்கிட்டு கம்மியா கிடக்கு...

Syrian shell hits health centre in Turkey

By: AAP | Latest International News | Wednesday October 24 2012 5:53

A shell fired from Syria has hit a health centre in a Turkish border town.

The shell landed 200 metres from the Syrian border in the Reyhanli district of Hatay province, and shattered windows of a building.

Turkey has been retaliating systematically on each occasion that its border with Syria has been violated by mortar bombs or shells. since Syrian fire killed five Turkish civilians on October 3.

It's not clear if Turkey has struck back after this latest incident.

One-time allies Turkey and Syria fell out after Ankara joined Arab and Western countries in urging Syrian President BASHAR AL-ASSED to stop his deadly crackdown on a popular revolt that erupted last year.

http://www.newstalkzb.co.nz/auckland/news/nbint/1288901261-syrian-shell-hits-health-centre-in-turkey

6E67387D-8A33-499C-9C2A-979CAABDEB49_w640_r1_s.jpg

Syria--woman-waving-flag--Getty-Images.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Syrian shell hits health centre in Turkey

By: AAP | Latest International News | Wednesday October 24 2012 5:53

A shell fired from Syria has hit a health centre in a Turkish border town.

The shell landed 200 metres from the Syrian border in the Reyhanli district of Hatay province, and shattered windows of a building.

Turkey has been retaliating systematically on each occasion that its border with Syria has been violated by mortar bombs or shells. since Syrian fire killed five Turkish civilians on October 3.

It's not clear if Turkey has struck back after this latest incident.

One-time allies Turkey and Syria fell out after Ankara joined Arab and Western countries in urging Syrian President BASHAR AL-ASSED to stop his deadly crackdown on a popular revolt that erupted last year.

http://www.newstalkz...entre-in-turkey

6E67387D-8A33-499C-9C2A-979CAABDEB49_w640_r1_s.jpg

இங்கே Liberated Kafranbel.. முன்பு Liberated Vanni.. இதெல்லாம் தன்னிச்சையாக உதித்த வாசகங்களாகத் தெரியவில்லை.. இயக்குநர்கள் யார்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் மாதிரித் தோன்றினாலும், வெடிக்காது. உலக அரசியல் பொருளாதார நிலைகளும் அதற்கு இடம் கொடுக்காது. சிலரின் கருத்துக்களைப் பார்த்தால் வேற யாரும் சண்டையில செத்தா எங்களுக்கென்ன எண்ட மாதிரி இருக்கு :huh: . உலகப் போர் எண்டு வந்தா அதுக்கு கனடா, பிரான்ஸ், அவுஸ், ஜெர்மனி எண்டு விதி விலக்கு இல்லை. எல்லா நாடும் பாதிக்கப்படும், அதுவே மனித குலத்தின் இறுதியாகவும் அமையலாம்.

லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல,

http://www.eelamboys.net/archives/575

ஈராக் நாட்டில மக்கள் புரட்சி தான் காரணமா? அப்பா அமெரிக்கப் படையெடுப்பு காரணம் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.