Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தேவி - முதல் பாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yaldevi.jpg

சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது!

அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும்புப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினான்.புதிதாக, வேலையில் சேர்ந்தவர்களுக்கு, அந்த வங்கியினது, தலைமைக்காரியாலயத்தில், நடக்கவிருக்கும் பயிற்சிக்காகப் போக வேண்டியிருந்தது. அவனும், அவனது இன்னொரு நண்பனும் அடுத்த நாள் காலை, யாழ்தேவியில் போவது என முடிவு செய்திருந்தார்கள்!

'காங்கேசன் துறையிலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் 'யாழ்தேவி' கடுகதிப் புகையிரதம் இன்னும் சில வினாடிகளில், முதலாவது மேடைக்கு வரும். இதில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் முன்னுக்கும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் பின்னாலும், இணைக்கப் பட்டிருக்கும். இது சாவகச்சேரி, கொடிகாமம், பளை, ஆனையிறவு.. என அறிவித்தல் தொடர்ந்தது.

எதுக்கும் மூண்டாவது பெட்டியில ஏறுங்கோ. நாங்களும் தான் கொழும்புக்கு வாறம்! அதில கொஞ்சம், இடம் இருக்கும்! குரல் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், யாழ்தேவி கூவிய படி புகையிரத நிலையத்துக்குள் நுழைந்து விட்டது! மூன்றாவது பெட்டியும், எங்களுக்கு முன்னாலேயே வந்து நின்றது.

புகையிரதம் வந்ததும், பாய்ந்து விழுந்து கோர்னர் சீட் பிடிக்கிறதுக்கும், ஒரு திறமை வேணும். நாங்களும் விழுந்தடிச்சுக் கொண்டு ஏறிப் பார்த்தால், எல்லாக் கோணர் சீற்றுக்கள்ளையும், ஆக்கள் குந்திக்கொண்டிருக்கினம். ஆக்களைப் பார்த்தால், கொழும்புக்குப் போற மூஞ்சியள் மாதிரியும் தெரியேல்லை. கொஞ்ச நேரத்தில, பத்மினி எண்டு எங்களோட வேலை செய்யிற பிள்ளையும், வேறு ஒரு கிளையில வேலை செய்யிற, அவவிண்ட இன்னொரு சிநேகிதமும், ஆறுதலாக வந்து ஏற, அந்தக் கோணர் சீற்றுக்காரர் இரண்டு பேர் எழும்பி இடம் குடுத்துட்டி, இறங்கிப் போயினம். அவை இரண்டு பேரும் தங்கட அப்பாக்களாம். கோண்டாவில்லில் இருந்து இடம் பிடிச்சுக் கொண்டு வருகினமாம் என்று நாங்கள் கேட்காமலே, எங்களுக்குச் சொல்லிவிட்டு, அந்தக் கோணர் சீற்றுக்களில் அமர்ந்து கொண்டார்கள். எங்களுக்கும், வேறு வழியில்லாமல், கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து கொள்ளப் புகையிரதமும், மெல்ல மெல்ல நகரத் துவங்கியது.

புங்கங்குளம் தாண்ட முந்தியே, நீங்கள் தானே சுகுமார் என்று பத்மினி கேட்டா. ஓமோம், நீங்கள் தானே 'கேள்வியின் நாயகி' என்று சுகுமார் திருப்பிக் கேட்கக் கொஞ்சம் திகைத்துப் போன பத்மினி, வாயைத் திறக்க முன்னம், எனது நண்பன் ' இல்லை, எங்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள், நடக்கேக்கை, நீங்கள் தான் அடிக்கடி, கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிற படியால, நாங்கள் உங்களுக்கு வைச்ச பேர் அது" என்று உதவிக்கு வந்தான். இவவின்ர பேர் மங்களா என்று அறிமுகப் படுத்திவிட்டு,'எப்படி உங்கட வேலைகள் போகுது, என்று, பத்மினி கதையைத் தொடங்க, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் எங்களது பெட்டிகளை, மேலே வைக்க, இடம் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லா இடத்தையும், முருங்கைக் காய்க் கட்டுகளும், பலாப் பழங்களும் ஏற்கெனவே பிடித்து விட்டன போல இருக்க, ஒரு மாதிரிக் கிடைத்த இடைவெளிகளுக்குள், எமது பெட்டிகளைத் திணித்து விட்டோம். பத்மினியின் நண்பியும், நீங்கள், சிங்களம் கதைப்பீங்களே, என்று கேட்டுத் தானும் ஊமையில்லை, என்று தன்னைக் காட்டிக் கொண்டா.

நண்பனும், என்னடாப்பா, இவளவை, அங்கினேக்கை கண்டால், நிமித்திக் கொண்டு போவாளுகள், இப்ப பார்த்தா, வலிய, வலிய வந்து கதைக்கிறாளுகள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான். சரியடாப்பா, நாங்கள் இவளவையோட மினக்கடாம, வெளியாலை பாப்பம் என்று கூறிய படி, வெளியே பார்க்க, அப்போது தான் மழை பெய்து முடிந்ததால், வரணிப் பக்கத்தில் வளர்ந்திருந்த, ஆம்பல் பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. நிரை, நிரையாக வளர்ந்திருந்த தென்னை மரங்களும், எமது, கிராமங்கள் எவ்வளவு அழகானவை என்பதைப், பறை சாற்றிக் கொண்டிருந்தன.

வீட்டை உங்களுக்குக் கலியாணம், கிலியாணம் பேச இல்லையா? பத்மினியின் எதிர் பாராத இந்தக் கேள்வியால், கொஞ்சம் ஆடிப் போய்த் திரும்பிய போது, எங்களோடு பயணம் செய்த ஆச்சியும், தனது நாடியில் சுட்டு விரலை வைத்த படி, ஆச்சரியப் பட்டார்.

இல்லை, எங்களுக்கு வேற பிரச்சனைகள் இருக்கிற படியால, எல்லாத்தையும் முடிச்சுப் போட்டுதான் செய்ய வேணும். இப்ப, என்னத்துக்கு அவசரப் படுவான் என்று, சுகுமார் பதிலளிக்க, ஆம்பிளையள் எல்லாரும் இப்பிடியே நினைச்சால், பொம்பிளைப் பிள்ளையள் என்ன செய்யிறதாம்?

இதென்னடா, பிரச்சனையாப் போச்சு, என நினைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் கலியாணமான சோடி ஒன்று, மண மகனைச் சவூதிக்குத் திருப்பியனுப்புவதற்காகப் பயணம் செய்தது, அவர்களைப் பயணம் அனுப்ப வந்த மாப்பிள்ளையின் மாமிக்காரி, பிள்ளை சொல்லுறதிலையும் ஒரு நியாயம் இருக்குத் தானே தம்பியள் என்று துவங்கியது. இந்த ரயில் பயணங்களில் இப்படியான இலவச ஆலோசனைகளுக்குக் குறைவே கிடையாது என்பதைக் காட்டியது! புது மாப்பிள்ளையும், பட்டப் பகல் எண்டும் பாக்காம, ஏதோ அப்ப தான், முதன் முதலாப் பொம்பிளையைக் கண்டது மாதிரி, அடிக்கடி தனது அன்பைப் பகிரங்கப் படுத்திக் கொண்டிருந்தார்..

எங்களுக்குக் கொஞ்சம் பசிக்கவும் துவங்க, ஆனையிறவு உப்பளம் உதவிக்கு வந்தது. இஞ்சை பார் , எவ்வளவு உப்புக் குவிஞ்சு போய்க் கிடக்குது,என்று சொல்லியபடி வெளியில் பார்த்தான் சுகுமார். வீட்டில கட்டித் தந்த சாப்பாட்டை, எனது நண்பன் எடுத்தான். அவன் தான் எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முட்டைப் பொரியலும், புட்டும், கருவாட்டுப் பொரியலின் மணமும்,கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் மறக்க வைத்தது.

ஆனையிறவு தாண்டியதும், அழகிய வயல் நிலங்கள் பச்சைப் பசேலென்று தெரிந்தன. ஊரில்,புழுதி விதைப்பில, சின்னச் சின்ன வரம்புகளுடன், உயரம் குறைந்த வயல்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு, இந்த வயல்கள், ஒருவித கிழு கிழுப்பை ஊட்டின.

நாங்க என்ன சும்மாவா கேக்கிறம். சீதனம் தருவம் தானே! மீண்டும் பத்மினி!

இதென்ன கோதாரியாக் கிடக்கு, மச்சான். வேற பெட்டியில ஏறியிருக்கலாம் போல!

யாழ்தேவி, மிக மெதுவாக ஓடத்துவங்கியது.

தம்பி, இப்ப இது முறிகண்டியானைக் கடக்கிறது. யாழ்தேவிக்கும், முறிகண்டியானுக்குப் பயம் தான். அந்தப் புது மாமி, கேட்காமலேயே விளக்கம் தந்தா.

நாங்க சமைச்ச சாப்பாடு இருக்கு. தேவையெண்டால், வெக்கப் படாமல் கேழுங்கோ! மீண்டும் பத்மினியின் சீண்டலுடன், யாழ்தேவி மாங்குளத்தில் ஓய்வெடுத்தது!

வட, வடே!

கச்சான்...... கச்சான்...

இந்தச் சத்தங்களில், ஒரு விதமான சந்தம் மறைந்திருதது போல ஒரு உணர்ச்சி!

மச்சான், கொஞ்சம் கச்சான் வாங்கிக் கொடுப்பமடா, என்ன இருந்தாலும், எங்களை, நம்பித் தானே பயணம் வருகுதுகள்!

நண்பன், இளகிக் கொண்டு வருவதற்கான, முதலாவது அறிகுறி தெரிந்தது!

சுகுமாரும், இவளவையின்ர வாயைக் கொஞ்ச நேரமாவது, பிசியா வைச்சிருக்கிறதுக்காகவெண்டாலும் கச்சான் உதவும் என நினைத்து நண்பனின் ஆலோசனையை ஆமோதித்தான்.

புகையிரதம் வவுனியாவை, நோக்கி ஓடிக்கொண்டிருந்தது!

=இன்னும் ஒரு பாகம் மட்டும் வரும்.... :D

Edited by புங்கையூரன்

வவுனியா தாண்ட ஓடமெடிக்காக அவர்களின் வாய் மூடுமே ! ( எல்லாத் தமிழ் வாய்களும் தான்) :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புங்கை ஒரே கதை கதையா படைக்கின்றீர்கள், கடலை போட தொடங்கீட்டீங்க, இனி.. ம்...ம்.. தொடருங்க...

நான் முதன்முதல் யாழ்தேவியை கண்டது வவுனியாவில்தான் 1992 இல் அதற்குபின் அடிக்கடி பயணம் செய்துள்ளேன். வெள்ளி இரவு ஏறி சாறத்தை பெட்டிகளின் கடைசி பக்கத்தில் விரிச்சுப்போட்டு படுக்கிறது, சனி வவுனியிவில் என் அலுவலை முடித்துக்கொண்டு இரவு திரும்ப அதே இடத்தில் படுக்கை.

என்ன ஒரு வாழ்கை எத்தனை விதமான மனிதர்களை சந்தித்துள்ளேன். அது ஒரு காலம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் கதை எழுதுறியள் புங்கையூரான் கெதியா மிச்சத்தை எழுதுங்கோ

அண்ணன் முதமுதல்லா ரெயில் பணத்த தொட்டிருக்கீங்க . டாடியோட ரெம்பவாட்டி நீல்கிரி எக்ஸ்பிரஸ்சில போயிருக்கேங்க . ஐயோ ரெம்ப போருங்க . ஆனல் ஊட்டி மலை ரெயிலில போறன்னா ரெம்பவே லைக் பண்ணுவேங்க . டாடிகூட அவரோட ஜீப்பில சைரன் அடிக்க போறது ரெம்ப திறிலிங்கா இருக்கும் :) . ராகவன் ஐபிஎஸ் ஓட பொண்ணு போறாளுன்னு ஜெலேர்சியா பாப்பாங்க அண்ணன் :lol::D . உங்க கதைய ரெம்பவே லைக் பண்றேங்க :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் முதமுதல்லா ரெயில் பணத்த தொட்டிருக்கீங்க . டாடியோட ரெம்பவாட்டி நீல்கிரி எக்ஸ்பிரஸ்சில போயிருக்கேங்க . ஐயோ ரெம்ப போருங்க .

என்ன விவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்க.. :(

ரெயில்லை எல்லாம் டாடி கூடவா போறது.. அதுவும் ராகவன் ஐபிஎஸ் ஓட பொண்ணு :o :wub:னு வேறை பறையுறிங்கள் எவன் பக்கத்திலை இருப்பான். :rolleyes::icon_idea:

எங்கள் காலத்து கதைகள் வாசிப்பதில் உள்ள சுகமே தனிதான் .

ஏனோ வாசிக்க கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கு .கொக்குவிலில் யாழ்தேவி நிற்பதில்லை என நினைக்கின்றேன் .கோண்டாவில் அடுத்து யாழ்பாணம் தான் .பொதுவாக காங்கேசன்துறையில் போய்த்தான் கோனார்சீட் பிடிப்பார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் அருமையான பதிவினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சி தான்,இரசிக்கும்படி உள்ளது தொடருங்கள்.

நான் இலங்கையில் இருக்கும் வரை ரயில் பயணம் மேற்கொண்டதே இல்லை.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா தாண்ட ஓடமெடிக்காக அவர்களின் வாய் மூடுமே ! ( எல்லாத் தமிழ் வாய்களும் தான்) :D

கருத்துக்கு நன்றிகள், ஈசன்!

வவுனியாவுக்குப் பிறகு, இங்கிலிசிலை அறுக்கப் போறாளுகளோ தெரியாது! :D

என்ன புங்கை ஒரே கதை கதையா படைக்கின்றீர்கள், கடலை போட தொடங்கீட்டீங்க, இனி.. ம்...ம்.. தொடருங்க...

நான் முதன்முதல் யாழ்தேவியை கண்டது வவுனியாவில்தான் 1992 இல் அதற்குபின் அடிக்கடி பயணம் செய்துள்ளேன். வெள்ளி இரவு ஏறி சாறத்தை பெட்டிகளின் கடைசி பக்கத்தில் விரிச்சுப்போட்டு படுக்கிறது, சனி வவுனியிவில் என் அலுவலை முடித்துக்கொண்டு இரவு திரும்ப அதே இடத்தில் படுக்கை.

என்ன ஒரு வாழ்கை எத்தனை விதமான மனிதர்களை சந்தித்துள்ளேன். அது ஒரு காலம்

நன்றிகள், உடையார்!

நான் எங்க கடலை போட்டன்! கச்சான் தான் போடுறன்! :D

யாழ் தேவி, திரும்ப வந்தாலும், அனுபவங்கள் அந்தக்காலத்தான் மாதிரி இருக்குமென நினைக்கவில்லை!

நல்லாத்தான் கதை எழுதுறியள் புங்கையூரான் கெதியா மிச்சத்தை எழுதுங்கோ

நன்றிகள்,மொசோ!

வவுனியாவில, தண்டவாளத்தை ஆரோ, கழட்டிக்கொண்டு போட்டாங்களாம்!

திருத்தினவுடன, யாழ் தேவி, பயணத்தைத் தொடரும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் முதமுதல்லா ரெயில் பணத்த தொட்டிருக்கீங்க . டாடியோட ரெம்பவாட்டி நீல்கிரி எக்ஸ்பிரஸ்சில போயிருக்கேங்க . ஐயோ ரெம்ப போருங்க . ஆனல் ஊட்டி மலை ரெயிலில போறன்னா ரெம்பவே லைக் பண்ணுவேங்க . டாடிகூட அவரோட ஜீப்பில சைரன் அடிக்க போறது ரெம்ப திறிலிங்கா இருக்கும் :) . ராகவன் ஐபிஎஸ் ஓட பொண்ணு போறாளுன்னு ஜெலேர்சியா பாப்பாங்க அண்ணன் :lol::D . உங்க கதைய ரெம்பவே லைக் பண்றேங்க :) :) .

அட! நீங்க நம்ம, ராகவன் சாரோட, பொண்ணா? முதலே சொல்லி இருக்கலாமில்ல! :o

நீல்கிரி எக்ஸ்பிரஸ்ஸில போகும் போது தானே, அந்த அழகிய தேயிலைத் தோட்டங்கள் தெரியும்!

கருத்துக்கும், லைக்குக்கும், நன்றிகள், தங்கையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் காலத்து கதைகள் வாசிப்பதில் உள்ள சுகமே தனிதான் .

ஏனோ வாசிக்க கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கு .கொக்குவிலில் யாழ்தேவி நிற்பதில்லை என நினைக்கின்றேன் .கோண்டாவில் அடுத்து யாழ்பாணம் தான் .பொதுவாக காங்கேசன்துறையில் போய்த்தான் கோனார்சீட் பிடிப்பார்கள் .

நன்றிகள், அர்ஜுன்!

நீங்கள் சொல்வது சரி தான்! யாழ் தேவி, கோண்டாவில்லில், தான் நிக்கிறது! மாற்றியுள்ளேன்!

கதை கொஞ்சம் தொய்யிற மாதிரித் தான் கிடக்கு! எல்லாம் இந்த இரண்டு பெட்டையளாலையும் தான்! :D

மீண்டும் அருமையான பதிவினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சி தான்,இரசிக்கும்படி உள்ளது தொடருங்கள்.

நான் இலங்கையில் இருக்கும் வரை ரயில் பயணம் மேற்கொண்டதே இல்லை.. :(

வணக்கம் ஜீவாத் தம்பி! கறிவேப்பிலை மரத்தை, வெட்டியெறிந்த போது, உங்கள் கடை தான் நினைவுக்கு வந்தது!

கருத்துக்கு நன்றிகள்!

இலங்கையில் ரயிலே ஏறாதபடியால், நீங்கள் பால்குடியாகவே, ஊரை விட்டு வெளிக்கிட்டீங்கள் போல! :D

"ஆனையிறவு தாண்டியதும், அழகிய வயல் நிலங்கள் பச்சைப் பசேலென்று தெரிந்தன. ஊரில்,புழுதி விதைப்பில, சின்னச் சின்ன வரம்புகளுடன், உயரம் குறைந்த வயல்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு, இந்த வயல்கள், ஒருவித கிழு கிழுப்பை ஊட்டின"

"அப்போது தான் மழை பெய்து முடிந்ததால், வரணிப் பக்கத்தில் வளர்ந்திருந்த, ஆம்பல் பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. நிரை, நிரையாக வளர்ந்திருந்த தென்னை மரங்களும், எமது, கிராமங்கள் எவ்வளவு அழகானவை என்பதைப், பறை சாற்றிக் கொண்டிருந்தன."

நீங்களும் போரியல் இலக்கியத்தை தொட முயற்சி செய்கின்றீர்கள் என நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன் . எனெனில் தலைப்பு " யாழ்தேவி " . உங்கள் கதையின் ஆரம்பம் செங்கைஆழியானின் " கிடுகுவேலியைத் "தொடமுயல்கின்றது என எண்ணுகின்றேன் . யாழ் மண்ணும் அதுசார்ந்த வாழ்வியலும் யாழ்தேவியுடன் இரண்டறக்கலந்தது . கோயில் திருவிழாக்களில் திறந்த மார்பில் இரட்டைப்பட்டு புலிப்பல் சங்கிலி மின்ன " லாஸ்ற் நைற் மெயிலில் வந்தனான் " என்று பீற்றிக்கொள்ளும் யாழ்மத்தியதரத்து , கொழும்பில் பவிசான கொர்ணமேந்தில் உயர்பதவிகளை வகிக்கும் டமிழ்ஸ்சின் தெரிவும் யாழ்தேவியே . இறுக்கமான உறுவுப்பிணைப்பை வெளிப்படுத்தும் யாழ்ப்பாணியின் தெரிவும் யாழ்தேவியே . இந்தக் குணாம்சங்களைக் கொண்ட தேன்கூட்டில் விதி விளையாடியது . தேனீக்கள் திசைமாறின . இந்தத் தேனீக்களது இறுக்கமான உறவுப் பிணைப்புகளின் குணாம்சங்கள் " புலத்துப் பணம் " என்ற புல்லுருவி ஊடுருவி நன்றாகவே அலைக்கழித்து , அவைகளின் " தேனீ " என்ற பதம் இடம்மாறிப்போயின .

நீங்கள் குறிப்பிட்ட அழகியல் காட்சிகள் 80களுக்கு முந்தியவை என்றே எண்ணுகின்றேன் . தமிழன் போரடித்த நெல்லு வெளிகளும் , அவனின் சொத்தான பாலை , முதிரை , கொண்டல் , பனைகள் இல்லாத கந்தக நெடிநிரம்பிய வெற்றுப்பாலைவனங்களே போனவருடம் என்கண்முன்னே பரந்து விரிந்திருந்தது . செங்கால் நாரைகளுக்கும் , கூளைக்கடாக்களுக்குமே இந்தக் கந்கநெடி பிடிக்கவில்லை . இயற்கை அன்னையை வல்லுறவுப் படுத்தியதில் இருபாலாருக்குமே பங்கு உண்டு என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றேயாக வேண்டும் . உங்கள் கதையின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் :) :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பனும், என்னடாப்பா, இவளவை, அங்கினேக்கை கண்டால், நிமித்திக் கொண்டு போவாளுகள், இப்ப பார்த்தா, வலிய, வலிய வந்து கதைக்கிறாளுகள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான். சரியடாப்பா, நாங்கள் இவளவையோட மினக்கடாம, வெளியாலை பாப்பம்

சிவாஜியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்கள் மாதிரி இருக்கு.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் புகையிரத பயணத்தை நினைவூட்டியமைக்கு நன்றி புங்கையூரான்...நான் யாழ்தேவியில் பயணம் செய்ததில்லை ஆனால் புகையிரதத்தில் பயணித்திருக்கிறேன்...ஒரு தடவை ரிக்கெட் புக் பண்ணாமல் போய் கதவுக்கு அருகில் இருந்தும் பயணித்திருக்கிறேன்...போன வருடம் போன போது கூட அடம் பிடித்து ஆசை தீர‌ புகையிரதத்தில் பயணம் செய்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீவாத் தம்பி! கறிவேப்பிலை மரத்தை, வெட்டியெறிந்த போது, உங்கள் கடை தான் நினைவுக்கு வந்தது!

கருத்துக்கு நன்றிகள்!

இலங்கையில் ரயிலே ஏறாதபடியால், நீங்கள் பால்குடியாகவே, ஊரை விட்டு வெளிக்கிட்டீங்கள் போல! :D

வெட்டினதை எனக்கு பார்சல் பண்ணிவிட்டிருக்கலாமே அண்ணா? :rolleyes:

என்ன செய்ய உங்களதும்,கோமகன் அண்ணாவினதும் பின்னூட்டங்களை படிக்க அடுத்த சந்ததியாகிய நாம் பலதை எழுத்தில் தான் தரிசிக்க வேண்டியுள்ளது,சொந்த ஊரில்,யாழ்ப்பாணத்தில் கூட 95% வீதமான இடங்கள் தெரியாது, பெருந்தெருவில் பயணித்து விட்டு ஊர்பார்த்ததாய் "புழுகி"த்திரியும் கூட்டத்தில் ஒருவனே.. :(:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழையநினைவுகளை மீட்டிச்சென்ற புங்கையூரனுக்கு நன்றிகள். :D

கரிக்கோச்சியிலை போய்வந்த ஆக்கள் ஆரும் இஞ்சை இருக்கிறியளோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

பழையநினைவுகளை மீட்டிச்சென்ற புங்கையூரனுக்கு நன்றிகள். :D

கரிக்கோச்சியிலை போய்வந்த ஆக்கள் ஆரும் இஞ்சை இருக்கிறியளோ? :)

யாழ் தேவியக் கூட கண்ணால கண்டதில்லை இதில கரிக்கோசிக்கு எங்க போறது :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குணாம்சங்களைக் கொண்ட தேன்கூட்டில் விதி விளையாடியது . தேனீக்கள் திசைமாறின . இந்தத் தேனீக்களது இறுக்கமான உறவுப் பிணைப்புகளின் குணாம்சங்கள் " புலத்துப் பணம் " என்ற புல்லுருவி ஊடுருவி நன்றாகவே அலைக்கழித்து , அவைகளின் " தேனீ " என்ற பதம் இடம்மாறிப்போயின .

அருமையான கருத்து, கோமகன்!

இந்தப் பிணைப்பின் இறுக்கத்தை, யாரென்று தெரியாதவர்களைக் கூட, உரிமையுடன் தட்டிக் கேட்கும், அந்த உறவின் மூலவேரைத் தான் இரண்டாவது பாகத்தில், தொடலாம் என்று எண்ணுகின்றேன்!

நானும், அண்மையில் போன போது, அனுராதபுரத்திலிருந்து, தொடங்கும் அழிவுகளைத் தான், அவதானித்துக் கொண்டிருந்தேன்! பற்றைகளுக்குள் மறைந்து கிடந்த, செல்லடி பட்ட கட்டிடங்களும், வீடுகளும், நகை போடாததால், கலியாண வீடுகளில், தங்கள் சேலைத்தலைப்பால், கழுத்துக்களை இழுத்து, இழுத்து மறைக்கும் எமது பெண்களைத் தான் நினைவு படுத்தியது!

காலமெனும் நதி, கரையுடைத்து ஓடி விட்டது! அது தன்னோடு, கரையில் இருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டே நகர்ந்து போனது!

மீண்டும் நன்றிகள், கோமகன்!

சிவாஜியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்கள் மாதிரி இருக்கு.. <_<

ஐயா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி! :icon_idea:

கருத்துக்கு நன்றிகள், கிருபன்!

ஊர் புகையிரத பயணத்தை நினைவூட்டியமைக்கு நன்றி புங்கையூரான்...நான் யாழ்தேவியில் பயணம் செய்ததில்லை ஆனால் புகையிரதத்தில் பயணித்திருக்கிறேன்...ஒரு தடவை ரிக்கெட் புக் பண்ணாமல் போய் கதவுக்கு அருகில் இருந்தும் பயணித்திருக்கிறேன்...போன வருடம் போன போது கூட அடம் பிடித்து ஆசை தீர‌ புகையிரதத்தில் பயணம் செய்தேன்

நன்றிகள், ரதி!

ஒரு பொம்பிளைப் பிள்ளை, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்கிறது, அவ்வளவு நல்லாயில்லை!

எதுக்கும், கிருபனுக்கு எழுதிய கருத்தை, மீண்டும் இணைக்கிறேன்!

ஐயா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி! :o

வெட்டினதை எனக்கு பார்சல் பண்ணிவிட்டிருக்கலாமே அண்ணா? :rolleyes:

என்ன செய்ய உங்களதும்,கோமகன் அண்ணாவினதும் பின்னூட்டங்களை படிக்க அடுத்த சந்ததியாகிய நாம் பலதை எழுத்தில் தான் தரிசிக்க வேண்டியுள்ளது,சொந்த ஊரில்,யாழ்ப்பாணத்தில் கூட 95% வீதமான இடங்கள் தெரியாது, பெருந்தெருவில் பயணித்து விட்டு ஊர்பார்த்ததாய் "புழுகி"த்திரியும் கூட்டத்தில் ஒருவனே.. :(:icon_idea:

அடுத்த முறை, வெட்டியெறியும் போது, பதிவுத் தபாலில், பார்சல் வரும்! :D

பழையநினைவுகளை மீட்டிச்சென்ற புங்கையூரனுக்கு நன்றிகள். :D

கரிக்கோச்சியிலை போய்வந்த ஆக்கள் ஆரும் இஞ்சை இருக்கிறியளோ? :)

குமாரசாமியண்ணை, அடுத்த நாள், கொழும்புக் கோட்டையில இறங்கி, உடனடியாச் சேட்டு மாத்தின ஆள் போல கிடக்கு! :D

கருத்திட்டமைக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி! :icon_idea:

கருத்துக்கு நன்றிகள், கிருபன்!

நேரடியாகக் கேட்காததால் உய்த்து அறிந்ததை வைத்துச் சொல்லும் உண்மை..

யாழ்ப்பாணத்தில் ஒரு நாளும் ரயிலைக் கண்டதில்லை. முதன் முதலாக யாழைவிட்டு விமானத்தில் கொழும்பு வந்த பின்னர், புறக்கோட்டைப் பக்கம் போனபோது ரயிலைக் கண்டேன்.. ஆனால் சிறுவனாக இருந்தும் வியப்புடன் ரசித்துப் பார்க்கும் நிலையில் அப்போது எனது நிலை இல்லை.. அதன் பின்னர் திரும்பவும் ஊருக்கு (விமானத்தில்!) போய் மீண்டும் கொழும்பு வந்தபோது மதவாச்சியில் இருந்து கொழும்பு நோக்கி ஒரே ஒரு தடவை மாத்திரம் இலங்கையில் ரயிலில் பயணம் செய்திருக்கின்றேன். அது யாழ்தேவியாகக் கூட இருந்திருக்கலாம். எனினும் இராணுவத்தினரினதும் அந்நியமான சிங்களவர்களுடனும் பிரயாணம் செய்ததால் ஒரு வார்த்தைகூட தமிழில் பேசமுடியாத பயத்துடன் அந்தப் பயணம் இருந்தது.. இந்தப் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதலாம்!

மேலும் சிவாஜியின் பழைய படங்களை புலம்பெயர்ந்த பின்னர்தான் அதிகம் பார்க்கமுடிந்தது.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.