Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகம், முகமூடி பற்றிய ஒரு சிறு பதிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரைக்கும் கிருபனுக்கும் அவர‌து கருத்திற்கு அவர‌து பட‌த்திற்கும் கொஞ்ச‌ம் கூட‌ப் பொறுத்தமில்லை...நான் கிருபன் இன்னும் கொஞ்ச‌ம் வயசானவராக,கொஞ்ச‌ம் கட்டையாக,தாடி வைத்துக் கொண்டு எதிர் பார்த்தேன்...அவர‌து கருத்துக்களில் இருக்கும் தைரியம் அவர‌து பட‌த்திற்கு இல்லை.

என்னுடைய கருத்துக்கள் ஸ்ரைலாக இல்லை என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.. :icon_mrgreen:

கட்டையாகவும், வயசானவராகவும், தாடியுடனும் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தது கொஞ்சம் ஓவர்..எதிலும் அதிகம் எதிர்பார்க்காமல் வாழப் பழகிவிட்டீர்கள் போலிருக்கின்றது! <_<

இன்னுமொருவன், ரதி

....அடியேனின் கருத்துகளை வைத்து எப்படியான முகத்துடன் இருப்பேன் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? ஏற்கனவே என் மூஞ்சியை பார்த்த சிலரும் உங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னால் என் ஆவலும் பூர்த்தியாகும்.

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் நீஎங்கள் படம் போடாட்டிலும் எனது மனதில் உங்கள் படம்

இன்னுமொருவன் - உங்களுக்கு ஒரு 40 - 45 வயசு வரும். குறுந்தாடி எதிர்பாக்கிறேன் (பெரிய தத்துவமேதைகளில் அநேகமானவர்கள் தாடி வச்சிருக்கினம் :rolleyes: ) தலைமயிர் அடர்த்தி குறைவு/முன்/பின் வழுக்கை. உயரமானவர். நடுத்தர வயது தொந்தி இருக்கும். கழுத்திலே எப்போதும் ஒரு பை. அதனுள் ரெண்டு புத்தகம், உங்கள் கிண்டில், ipad/மடிக்கணணி :icon_idea: . கண்ணாடி பாவிப்பீர்கள். BB பாவிப்பவராக இருப்பீர்கள். மேற்கத்தேய உடை உடுத்தும் பாணி.

மொத்தத்தில, 'ஒரு புல்லாங்குளல் அடுப்பூதுகிறது' என்ற படத்தில வாற மௌலிக்குத் தலையை வழுக்கையாக்கி அதில என்னைக் கண்டிருக்கிறியள். பாசக்காரப் பயலுகள் :D

- சில நாட்களின் முன்னர் நாற்பது வயதை ஒருவாறு தொட்டுள்ளேன் எனவே அது சரி

- உயரம் வெறும் 5 அடி 11 அங்குலம். பெருசா ஒன்றும் உயரமில்லை.

-குறுந்தாடி-- உண்மை, தாடி முளைக்கத் தொடங்கிய நாளில் இருந்து அது இருக்கிறது

--வழுக்கை -- அறவே இல்லை. காட்டைத் தலையில வச்சிருக்கிறமாக்கும்.

-- தொந்தி --இல்லை அதை வர அனுமதிப்பதில்லை.

-- எப்போதும் ஏதேனும் ஒரு பையும் அதனுள் புத்தகங்கள், கின்டில் முதலியனவும் இருப்பது உண்மை.

-- கண்ணாடி -- என்றும் பாவித்ததில்லை. புத்தகம் படிச்சாக் கண்ணு கெட்டுத்தான் போகணும் என்று இல்லை

--மேற்கத்தேய உடை - சரி

--பிளக்பெரி -- பலவருட இம்சையினைத் தொடர்ந்து, தற்போது சில மாதங்களாக ஒருவாறு அதில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன்.ஆனால் விரைவில் மீண்டும் அதை காவித்திரிந்தே தீரணும்.

ரதி,

இங்கு சமூக அழுத்தம் பற்றியும் பார்க்கவேண்டும். Self-Respectஇன் அவசியம் உள்ளது. யாழ் இணையத்திலேயே இவ்விடயங்களில் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளேன். பிறகு ஒருசமயம்வரும்போது விரிவாக ஓர் பதிவிடுகின்றேன். உனது நிலை கீழிறங்கினால் நாயும் மிதிக்கும்/மதிக்காது எனும் பொருளில் யாரோ இங்கு கையெழுத்தும் வைத்துள்ளார்கள். சமூக அழுத்ததிற்கு ஈடுகொடுப்பதற்கு பல நாடகங்கள் ஆடவேண்டியதேவையும் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது.

இன்னும் ஒருவனின் எழுத்து சிந்தனையைத் தூண்டியது, ஆனால் சிக்மனின் பல மனோ ததுவக் கருத்தியல்கள் இன்று மறுதலிக்கப்பட்டுள்ளன.

மெசப்பத்தேமியத் தமிழர் , உங்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் செயற்படுபவரா?

யாழ்க் களத்தில் சிலரை நேரில் சந்தித்து இருக்கிறேன். பலரையும் சந்திக்க விருப்பம்.ஆனால் பலர் தாம் கட்டியமைத்த பாத்திரங்கள் சிதைந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

இதில் முக்கியமான விடயம் தம்மைப் பற்றிய மிதமின்ச்சிய பாத்திரப்படைப்பை உருவாக்கிக் கொள்வோரே நேரில் சந்திக்கப் ப்யப்படுவார்கள். பாதுகாப்பு என்பது சிறிலங்கா செல்வதானால் பிரச்சினை தான், அதைத் தவிர்த்து விட்டு ஓரழவு பரிச்சயம் நீண்ட காலமாக இருப்பவர்கள் சந்திப்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன்.

என்னைப் பற்றி எவ்வாறானா பாத்திரப் படைப்பு உள்ளது என்று அறிய விருப்பம்.பல காலம் நான் திரிகளில் எழுத வில்லை.ஆனால் யாழ்க் கள மூத்த உறுப்பினர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

இன்னும் ஒருவன் நீங்கள் வேறு இடங்களில் வேறு பெயர்களில் எழுதுகிறீர்களா ? உங்களது கருத்துக்கள் வலைப் பதியும் ஒரு நண்பரின் எழுத்துக்களைப் போலும் உள்ளது.

  • தொடங்கியவர்

இன்னும் ஒருவன் நீங்கள் வேறு இடங்களில் வேறு பெயர்களில் எழுதுகிறீர்களா ? உங்களது கருத்துக்கள் வலைப் பதியும் ஒரு நண்பரின் எழுத்துக்களைப் போலும் உள்ளது.

இல்லை, யாழைத் தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை (யாழிலும் இன்னுமொருவன் என்ற பெயரில் மட்டுமே ).

ப்றொயிட்டின் பல கருத்துக்கள் சர்ச்சைக்குட்பட்டவை என்பது உண்மை தான். ஆனால், பல விடயங்கள் எவர் முதலில் சொன்னார், கட்டமைத்தார் என்பதற்கப்பால் எமது கொமன்சென்சுக்குச் ஏற்புடையதாகவே இருக்கும். அவ்வாறு இருப்பவை அவற்றை முதலில் சொன்னவர் சர்ச்சைக்குட்படுவதால் சிந்திக்கக்கூடாதனவையாக ஆகாது என்பது எனது அபிப்பிராயம்.

....ஆனால் பலர் தாம் கட்டியமைத்த பாத்திரங்கள் சிதைந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

இதில் முக்கியமான விடயம் தம்மைப் பற்றிய மிதமின்ச்சிய பாத்திரப்படைப்பை உருவாக்கிக் கொள்வோரே நேரில் சந்திக்கப் ப்யப்படுவார்கள்.

முற்றிலும் உண்மை.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன், ரதி

....அடியேனின் கருத்துகளை வைத்து எப்படியான முகத்துடன் இருப்பேன் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? ஏற்கனவே என் மூஞ்சியை பார்த்த சிலரும் உங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னால் என் ஆவலும் பூர்த்தியாகும்.

நிழலி நீங்கள் ஒரு பத்திரிகையாளனுக்குரிய அத்தனை குணாதிசயங்களும் உங்களுக்கு இருக்கும்...கட்டையாக,கொஞ்ச‌ம் தொந்தியுட‌ன்,கண்ணாடி போடுவீர்கள்[உங்கள் பின் புறப் பட‌ம் அவாட்டரில் பார்த்தேன்.]...உங்களுக்கும் பெண்கள் மீது ர‌ச‌னை இருக்குது ஆனால் உங்கட‌ ர‌ச‌னையும்,சாஸ்திரியினதும் வித்தியாச‌ம் :lol: ...உங்களுக்கு கர்வம் அதிகம் இருக்கும்,உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என நினைப்பீர்கள்...கோபம் அடிக்கடி வரும் என்று நினைக்கிறேன்.சில நேர‌ங்களில் அவச‌ர‌ப்பட்டு பிழை விடுவதை தவிர்த்து பார்த்தால் 90% மட்டு பதவிக்கு பொருத்தம்...கணக்க அளம்பிட்டனோ தெரியாது :unsure: ...உங்கட‌ முகத்திற்கும்,உங்கட‌ கருத்துக்களுக்கும் நிச்சயமாய் தொட‌ர்பு இருக்கும் அதாவது ஓர‌ளவுக்காவது யாழில் வேச‌ம் போடாமல் உண்மையை எழுதுபவர்களில் என்னைப் பொறுத்த உங்களுக்கு முதலிட‌ம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இத் திரியில் ஒருத்தரும் எழுதக் காணோம் :unsure: ...எழுதச் சொன்ன நிழலியின் பேச்சு,மூச்சை காணோம்...நான் தான் ஓவராக எழுதியிட்டனோ அல்லது இன்னுமொருவன் வந்து எழுதும் மட்டும் நிழலி காத்திருக்கிறாரோ :D

இத் திரியில் ஒருத்தரும் எழுதக் காணோம் :unsure: ...எழுதச் சொன்ன நிழலியின் பேச்சு,மூச்சை காணோம்...நான் தான் ஓவராக எழுதியிட்டனோ அல்லது இன்னுமொருவன் வந்து எழுதும் மட்டும் நிழலி காத்திருக்கிறாரோ :D

நேற்று உங்கள் பதிலைக் கவனிக்கவில்லை

நிழலி நீங்கள் ஒரு பத்திரிகையாளனுக்குரிய அத்தனை குணாதிசயங்களும் உங்களுக்கு இருக்கும்...கட்டையாக,கொஞ்ச‌ம் தொந்தியுட‌ன்,கண்ணாடி போடுவீர்கள்[உங்கள் பின் புறப் பட‌ம் அவாட்டரில் பார்த்தேன்.]...உங்களுக்கும் பெண்கள் மீது ர‌ச‌னை இருக்குது ஆனால் உங்கட‌ ர‌ச‌னையும்,சாஸ்திரியினதும் வித்தியாச‌ம் :lol: ...உங்களுக்கு கர்வம் அதிகம் இருக்கும்,உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என நினைப்பீர்கள்...கோபம் அடிக்கடி வரும் என்று நினைக்கிறேன்.சில நேர‌ங்களில் அவச‌ர‌ப்பட்டு பிழை விடுவதை தவிர்த்து பார்த்தால் 90% மட்டு பதவிக்கு பொருத்தம்...கணக்க அளம்பிட்டனோ தெரியாது :unsure: ...உங்கட‌ முகத்திற்கும்,உங்கட‌ கருத்துக்களுக்கும் நிச்சயமாய் தொட‌ர்பு இருக்கும் அதாவது ஓர‌ளவுக்காவது யாழில் வேச‌ம் போடாமல் உண்மையை எழுதுபவர்களில் என்னைப் பொறுத்த உங்களுக்கு முதலிட‌ம் :)

90% சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள். நேரே பார்த்து எழுதிய மாதிரி இருக்கு.

உயரம் அதிகம் இல்லை (5 அடி 3.5 அங்குலம்), மனிசி தரும் சாப்பாட்டால வந்த தொந்தி இருக்கு, 12 வயதில் இருந்து கண்ணாடி போடுகின்றேன். எதை வைத்து பெண்கள் மீதான எனது ரசனையும் சாஸ்திரியின் ரசனையும் வேறு என்று சொல்கின்றீர்கள் என தெரியவில்லை..வெளிப்படையாக சொன்னால் அது ரசனையா அல்லது ஆசையா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு. :) ..என் மனைவியையும் சகோதரியையும் தவிர வேறு எவரும் எனக்கு தலைக்கனம் இருக்கு என்று சொன்னதில்லை..ஆனால் பொதுவாக வேலைத் தளத்தில் மேலாளர்களுடன் அடிக்கடி முரண்படுகின்றேன் என்று குறைபட்டுக் கொள்வார்கள். மிக அதிகமாக கோபம் வரும். Short temper என்பது அதிகமாக இருப்பதால் அதைக் குறைக்க ஒரு முறை Meditation பழகப் போய் பின் அவர்களுடனும் சண்டை பிடித்து வெளியே வரவேண்டி வந்தது.. எனக்கு இருக்கும் பெரிய குறை இது. பொதுவாக எந்த விடயத்திலும் ஓரளவுக்காவது வேசம் போடாமால் வெளிப்படையாக இருக்கவும் எழுதவும் விரும்புவதுண்டு. அதனையும் மீறி கள்ளத் தனமாக பல விடயங்களை ஒளித்தும் வைத்துள்ளேன். முக்கியமாக நான் செய்யும் பல விடயங்களை யாழில் எழுதக் கூடிய கலாச்சார சூழ்நிலை இல்லை. :D

நான் நேரில் பார்த்த யாழ் கள உறவுகளைப் பற்றியும் அவர்களைப் பார்க்க முதல் இருந்த விம்பத்துக்கும் உருவத்துக்கும் இடையிலான வேறுபாட்டை பின்னர் எழுதுகின்றேன். முக்கியமாக அர்ஜுன், விசுகு, வல்வை சகாறா, இணையவன் ஆகியோரைப் பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எந்த விடயத்திலும் ஓரளவுக்காவது வேசம் போடாமால் வெளிப்படையாக இருக்கவும் எழுதவும் விரும்புவதுண்டு. அதனையும் மீறி கள்ளத் தனமாக பல விடயங்களை ஒளித்தும் வைத்துள்ளேன். முக்கியமாக நான் செய்யும் பல விடயங்களை யாழில் எழுதக் கூடிய கலாச்சார சூழ்நிலை இல்லை. :D

அதுதானே. வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடையில் இருக்கிற புண்ணை நடையில் காட்டுகிறதா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா- இவருக்கும்,இவர‌து எழுத்திற்கும் முந்தி நெருங்கிய தொட‌ர்பு இருந்தது ஆனால் அந்த தைரியம்,கம்பீர‌ம் போன்றவற்றை இப்ப காண முடியவில்லை.

ரதி சத்தியமான வார்த்தைகள் அவை எங்கே போய் தொலைந்தன என்று தேடிக் கொண்டிருக்கின்றேன். :(

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சத்தியமான வார்த்தைகள் அவை எங்கே போய் தொலைந்தன என்று தேடிக் கொண்டிருக்கின்றேன். :(

முகம் தெரிந்தவுடன் சற்று பம்முவது வாடிக்கை..! :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஒரு விம்பத்தை உருவாக்குவது என்பதில் அதை உருவாக்க முயலுபவரின் பங்கு அரைப்பங்கு அல்லது அதிலும் குறைவானது தான். மிகுதி, பார்வையாளர்களில் இருக்கிறது. எவ்வாறு ஒரு நாவலை எழுதுவர் வாசிப்பவர் என்ற இருவர் சார்ந்து அந்நாவலின் பாத்திரங்கள் உருவாகின்றனவோ அதுபோன்று தான் இதுவும்.

யாழில், நான் அவதானித்த மற்றும் கருத்துப் பகிர்ந்த உறவுகள் அனைவரைச் சார்ந்தும் எனக்கும் விம்பம் இருக்கிறது. நீங்கள் ஊகிக்கக்கூடியது போல எல்லா விம்பவும் கொஞ்சம் இலக்கியத்தனமாகத் தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லி அடி வாங்கத் தயாரில்லை என்பதால் உதாரணத்திற்கு மிகமிகச் சிறிதாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்,

தும்பளையான்: தும்பளையான் பற்றி எனக்கு ஓரே ஒரு விம்பம் தான். அந்த விம்பத்திற்கு முகம் இல்லை. புலத்தில் தெருவின் இருமருங்கும் நீண்டுயர்ந்த மரங்கள் இருக்கும் ஒரு சாலை ஏற்றம். அதில், ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டுசெல்வதற்கு மாறாகத் தள்ளிக்கொண்டு செல்லும் ஒரு இளைஞன். காலநிலை இலையுதிர் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரிந்தவுடன் சற்று பம்முவது வாடிக்கை..! :icon_mrgreen:

முகமில்லாமல் இருக்கும்வரை எதையும் எழுதலாம். பொய்களைக்கூட கூச்சமின்றி சொல்லலாம் முகம் தெரியும்போது உண்மைகளைக்கூட அவதானமாகத்தான் சொல்லவேண்டும். :(

அவாட்டரில் எனது முகத்தை போடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .............ஆனால் அதை நீங்கள் பார்த்து பேய் அறைந்தது போல் உறைந்து போக எனக்கு விருப்பமில்லை :D :D .. ஏற்கனவே ஒரு சில உறவுகள் skype ஊடாக இந்த உண்மையை அறிந்திருப்பார்கள் .......... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே முகத்தை போடாமல் சில காலமாக யாழில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.முகத்தை போட்டாலும் போடாவிட்டாலும் எனது எழுத்தில்(கருத்துக்களில்) பெரிய மாற்றம் இருக்கும் என நினைக்கவில்லை.

ஊரில் உள்ள பெற்றோரை அடிக்கடி பார்க்கப்போவதால் முகத்தை மறைத்தலே தற்போதைக்கு பாதுகாப்பானது.

நேரடியாகவே பேசும் பழக்கம் உள்ளதால் சில நல்ல நண்பர்களை உருவாக்க முடிந்தது.இதனால் சிலருக்கு மனக்கஸ்டம் கொடுத்துள்ளேன் என்பதை நினைத்து அவர்கள் வருந்தியதை விட நான் கூட வருந்தியுள்ளேன். அதே நேரம் வாழ்வின் உச்சிக்கு போக மிகுந்த கஸ்டப்பட நேர்ந்தது(அரசியல் தெரியாததால்).இருந்தாலும் அதிக மனத்தைரியத்தை தந்தது.

நல்லதொரு திரி .

என்னை பொறுத்தவரை யாழில் பலரின் முகம் அவர்களை நேரில் சந்திக்கும் போது எமக்குள் உருவாக்கிய விம்பத்துடன் மாறுபடலாம் ஆனால் அவர்கள் மீதான கருத்தியல் மாறாது என்றுதான் நம்புகின்றேன் .ஒரு கொஞ்ச நேரம் கதைக்க தொடங்க புறத்தோற்றம் மறைந்து எமது கருத்துக்கள் தான் உரையாட தொடங்கிவிடும் .(Hardware எப்படியும் இருக்கலாம் software இல் தான் முழு விசயமும் ) . எமக்கான பரஸ்பர உணர்வை தீர்மானிப்பது எமக்கான கருத்தியல் நிலைபாடுதான் ,அது அரசியல் ,இலக்கியம் ,வாழ்க்கை எதுவாகவும் இருக்கலாம் .

இனி நான் சந்தித்த யாழ் உறுப்பினர்களை பற்றி -

சகாறாவை எனக்கு வானொலியூடாக பல வருட பரீட்சயம் ,அந்த முதல் தமிழ் வானொலியில் நான் ஒரு சிலரின் படைப்புகளையே விரும்பி கேட்பேன் அதில் சகாறா அக்காவிற்கு முதன்மை இடம் .நான் மட்டுமல்ல எனது குடும்பத்தினர் கூட.குறிப்பாக எனது அம்மா .அப்போது எனக்குள் அவர்களை பற்றி இருந்த விம்பம் முற்றிலும் மாறுபட்டது ,நடுத்தர வயதான மிக விளக்கமான ஒரு சோத்து ஆன்டி,பின்னர் வானொலிகள் உடைந்து சிதற எல்லாம் மறந்துபோய்விட்டது .பின்னர் யாழில் வந்து (15 வருடங்கள் இருக்கும் ) அவர்களின் ஆக்கங்கள் வாசிக்க ஆரம்பித்து Scarborough civic centre இல் கண்டேன் ,அப்போதும் அது அவர்கள் தான் என்று நிட்சயமாக தெரியாது இருந்தும் தான் அந்த நிகழ்விற்கு போவதாக யாழில் எழுதியதால் அப்படி நம்பினேன்.குளிருக்கு முழு நீலசாம்பல் நிற ஜாக்கெட் (லண்டன் ஸ்பிரிங் ஜாக்கெட் மாதிரி ) போட்டிருந்ததாக ஞாபகம் .நான் எதிர்பார்த்ததை விட இளமையாக மெல்லியதாக அழகாக? இருந்தார் .

பின்னர் அடுத்த நாள் தான் அந்த நிகழ்விற்கு சென்றிருததாக எழுத கட்டாயம் அவர்கள் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன் ,பின்னர் ஒரு ஊர்வலத்திலும் குயின்ஸ் பார்க்கில் கண்டேன் கதைக்கவில்லை.பின்னர் நிழலி வீட்டு சந்திப்பு .ஆனால் அங்கு என்னை அவர்களுக்கு இன்னார் தெரிந்ததை விட தெரியாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன் .

மற்றவர்கள் பற்றி பின்பு எழுதுகின்றேன்

  • 2 weeks later...

ஈச‌ன்- இவர் வந்து லவ்வபில்[lovable boy] :lol: போய் இவர‌து பட‌த்திற்கும்,எழுத்திற்கும் சம்மந்தம் இருக்கும் என நினைக்கிறேன்...மென்மையானவராக இருப்பார்

இன்று தான் பார்த்தேன். (இன்னுமொருவன் எழுத்துகள் என்றால் கொஞ்சம் சீரியஸாக இருக்கும். அதனால் கொஞ்சம் வாசிக்கப் பின்னடிப்பது வழக்கம்.)

முதலாவது நன்றிகள். என்னைப் பிடித்திருப்பதற்கு. மற்றப்படி [size=4]BOY[/size] எல்லாம் கிடையாது, குடும்பஸ்தன்.

மென்மை பலவீனம் அல்ல. அது ஒரு கொடை !

என்னுடன் படித்த, அல்லது ஜூனியர் மாணவிகளுக்கு என்னைப் பிடிக்கும். சிலர் தூதும் விட்டார்கள். தற்சமயம் பழைய பிளாஷ்பக் போட்டு பெருமூச்சு விடுவதுதான் மிச்சம்.

உங்கள் படத்தைப் பார்த்தால் (ஏற்கனவே ஒரு முறை கேட்டது போல்) உங்கள் எழுத்துக்களுக்கு பொறுந்துகிறதா என்று சொல்லமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.