Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபது வருடங்களாக இல்லாத நவம்பர் மாவீரர் மாதம் தேவையா?

Featured Replies

[size=1]resize_20121105185512.jpg[/size]

[size=4]நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.

கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை:

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகெங்கும் அனுசரிக்கப் பட்டுவருகிறது. இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கனடாவிலும்,தமிழகத்திலும் சிலரால் முன் வைக்கப் பட்டுள்ளது.

கனடியத் தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு மாதமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள், அப்படியே நினைவு கூறும் பட்சத்தில், மற்றவர்கள் மீது தங்கள் அபிப்பிராயத்தை வலிந்து திணிக்க்க் கூடாதென கேட்டுக்கொள்கிறது

ஜனநாயக நாட்டில் மிரட்டலா?

ஜனநாயக கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும், அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகள் விடுவதும், மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும், தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும், தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்துவதும் ஜனநாயகக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடியத் தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால், இப்படியான சந்தர்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோருடைய ஜனநாயக உரிமைகளையும் தனி நபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு பேரவையின் செய்தித்தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளையை david@canadiantamilcongress.ca. என்ற இமெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

வரும் 2013 ம் ஆண்டு ஃபெட்னா விழாவை கனடியத் தமிழர் பேரவைதான், முதன் முறையாக கனடாவில் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

செய்தி மூலம்: Tamil Source

  • Replies 55
  • Views 5k
  • Created
  • Last Reply

[size=4]

நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
[/size]

[size=4]சரியான கூற்று !

கனடியத் தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு மாதமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள், அப்படியே நினைவு கூறும் பட்சத்தில், மற்றவர்கள் மீது தங்கள் அபிப்பிராயத்தை வலிந்து திணிக்க்க் கூடாதென கேட்டுக்கொள்கிறது
[/size]

[size=4]சரியான கூற்று ![/size]

[size=4]

ஜனநாயக கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும், அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகள் விடுவதும், மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும், தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும், தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்துவதும் ஜனநாயகக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடியத் தமிழர் பேரவை நம்புகிறது.
[/size]

[size=4]மிரட்டுவது கண்டிக்கப்பட வேண்டியது.

ஆதலால், இப்படியான சந்தர்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோருடைய ஜனநாயக உரிமைகளையும் தனி நபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்ல கருத்து. [/size]

மாதங்கள் வருடங்கள் ஆகலாம்.

புலிகள் கூட நடமுறை சிக்கல்களை உணர்ந்து தான் மாவீரர் வாரம் என்று கொண்டாடினார்கள் ஆனால் மக்களை மந்தைகள் என்று நினைக்கும் நிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் மாற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாவீரர்களுக்கான புனித மாதம் என்பதை ஏற்றுக் கொண்ட மக்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் எமது கருத்து...

போராட்ட காலத்திலும்.. மாவீரர் நாள்.. மாவீரர் வாரம் இரண்டுக்குமாக மக்களை தயார்ப்படுத்தும் நோக்கில் கார்த்திகை முன்னர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தற்போது.. எமது விடுதலைப் போராட்டம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள இவ்வேளையில் போராட்ட நியாயங்களும் தியாகங்களும் எதிரிகளால் குதறப்படும் நிலையும்.. அநியாயத்துக்கு எம்மிடையே உள்ள ஒரு சில கூட்டத்தினரால் அது விவாத மற்றும் வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளமையும் கூட கார்த்திகை மாதம் புனிதமாதமாக்கப்படுவதன் தேவையை உணர்த்தி நிற்கிறது.

லண்டனில்.. இருக்கும்.. பிரிட்டனின் போர் வீரர்களுக்கான ஒரு நினைவுத்தூபியில் தினமும் மக்கள் பூக்கொத்து வைத்துச் செல்வார்கள். அப்படி ஒரு பக்குவமான நிலைக்கு எம்மவர்கள் வரும் வரை இவை அவசியம்..!

எம் மக்கள் மத்தியில் உள்ள காட்டுமிராண்டித்தனமானவர்களிடம் சுயநலவாதிகளிடமும்.. கூட நாம் எமது மாவீரர்களின் தியாகங்களுக்கான நியாயங்களைக் கொண்டு செல்லவும் அவர்களின் மனச்சாட்சியை தட்டுவிக்கவும் இந்த வகையான அணுகுமுறைகள் அவசியம்.

மாவீரர் மாதம் என்பது மாதம் முழுவதும்.. காலம் முழுவதும்.. மாவீரர்களை நினைந்துருகும் மக்களுக்கு மட்டும் உடையதானதல்ல.. மாறாக மாவீரர்கள் போராளிகள் சார்ந்து மக்களை அதிகம் விழிப்புணர்வு பெற வைக்கும் மாதமும் அது ஆகி நிற்கிறது. அதேபோல்.. எமது போராட்ட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் படிக்கும் மாதமும் ஆகியுள்ளதோடு.. உலகிற்கு நாம் ஒரு ஆணித்தரமான செய்தியைச் சொல்லும் மாதமாகவும் இது அமைந்து நிற்கிறது. அதுமட்டுமன்றி இந்த புனித மாதக் கருதுகோள் என்பது எமது போராட்ட வரலாறு சந்ததிக்கும் கடத்தப்பட அவசியம்.

மாவீரர் நாள்.. மாவீரர்கள் நினைவுச் சுடர் ஏற்றி அவர்கள் முன் இலட்சிய உறுதிச் சத்தியம் செய்யும் நாளாகியுள்ளது.

மாவீரர் வாரம் என்பது மாவீரர் நாள் நோக்கி மக்களை குறிப்பாக மாவீரர் குடும்பங்கள்.. போராளிகள்.. குடும்பங்களை அதிகம் தயார்ப்படுத்த உதவும் நாட்கள். அத்தோடு இவர்களுக்கான கவனிப்புக்களை நலத்திட்டங்களை கூர்மைப்படுத்தும்..மற்றும் செயற்படுத்தும் வாரமுமாகும்.

என்னைப் பொறுத்த வரை கார்த்திகை புனித மாதமாவது.. நிச்சயம் அவசியம்.

மத ரீதியாக இஸ்லாமியர்களுக்கு ஒரு நோன்பு மாதம்.. இருப்பது போல.. அதை விட அதிக புனிதத் தன்மையோடு.. எமது மாவீரர்களுக்கான இந்த மாதம்...அமையனும்..வரலாற்றில்... என்பதே எங்கள் எதிர்பார்ப்பு..!

இந்த கார்த்திகை புனித மாதம்.. தனிநபர்களின் நாளாந்த வாழ்க்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத போது ஏன் கார்த்திகை புனித மாதமாக மாவீரர் நினைவு கூறும் மாதமாவதை விவாதப் பொருளாக்க வேண்டும்..??! எங்களைப் பொறுத்தவரை இப்படியான விவாதங்கள் மாவீரர்களையும் தியாகங்களையும் அவமதிப்புக்கு உள்ளாக்கும் செயல்களாகவே தெரிகின்றன..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மாவீரர் மாதம் என்பது மாவீரர் வாரத்தையே அர்த்தமற்றதாக்கும் ஒரு எதிர்மறை உத்தி. சிலர் மாதத்தை திணிக்க முற்படி பலர் வாரத்தில் உள்ள பற்றுதல்களில் இருந்தும் தம்மை விடுவித்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு மாதமும் வேண்டாம் !! வாரமும் வேண்டாம் !! வருடத்தில் ஒரு நாள் - ஒரேயொரு நாள் அனைத்து தமிழ் மக்களும் இதயசுத்தியுடன் நம் இனிய மாவீரர் தெய்வங்களுக்கு ஒரு புனிதமான உன்னதமான முறையில் அஞ்சலி செய்தால் போதும். இதற்கு அப்பால் நாங்கள் எதைச் செய்தாலும் அவை அனைத்தும் அவரவர் தகமைக்கும் வசதிக்கும் மிஞ்சியதாகவே அமைய நாளடைவில் அதுவும் எங்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்ட பின் அனைத்தையும் கைவிடும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. எங்கள் உணர்ச்சிகளையும் தேசபக்தியையும் மாவீரர் மேல் வைத்திருக்கும் அளப்பரிய மதிப்பையும் தமக்குச் சாதகமாக்கி இன்று சீன் போடும் நிறையப்பேர் எங்கள் மத்தியில் உலாவருகிறார்கள். மாவீரர் தினம் கொண்டாடும் விவகாரத்தில் பல்வேறு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கடந்த வருடங்களில் கற்றுக்கெண்ட பாடங்கள் ஒருபுறம் இருக்க எவரும் இதை இல்லையென்று மறுக்கமுடியாத அளவிற்கு என்னிடம் காத்திரமான ஆதாரங்கள் உள்ளன. தமிழ் மக்களே கவனமாயிருங்கள் அந்த மாவீரத் தெய்வங்களை மட்டுமல்ல எங்களையே கூவி விற்றுவிடுவார்கள் இந்த கயவர்கள்.

இந்த ஆண்டு சிங்கள அரசும் தமது மாவீரர் வாரத்தை கொண்டாடுகிறது. படையினரின் வெற்றி மற்றும் மகிந்தவின் பிறந்த நாள் போன்றவைகளை உள்ளடக்கியதாக நவம்பர் 12இலிருந்து 19 வரை கொண்டாடுகிறார்களாம்.

ஆகவே தமிழர்களினதும் சிங்களவர்களினதும் மாவீரர் வாரங்கள் வரக் கூடியவாறு "மாவீரர் மாதம்" கொண்டாடுவது எனக்கும் சிறப்பான யோசனையாகத்தான் படுகிறது.

வாழ்க தமிழ் சிங்கள சகோதரத்துவம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர். கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர்.- NEWS

கனேடிய தமிழ் பேரவைக்கு என் வாழ்த்துக்கள். புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் கனேடிய தமிழர் பேரவையின் நிலைபாட்டை உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். மேற்க்கு நாடுகளின் ஜனநாயக சட்டங்களுக்கும் மாவீரர்களின் அபிலாசைக்கும் எதிராக கட்டைப் பஞ்சாய்த்து வழிமுறைகளில் ஈடுபட யாரையும் அனுமதிக்க்க்கூடாது.

*இளையராஜாவை எதிர்ப்பதன் மூலம் பலகோடி தமிழ்நாட்டு இளையராஜா ரசிகர்களை எம் போராட்டத்துக்கு எதிராக மாற்றுவது

*காலம் காலமாக போற்றப்படும் மாவீரர் வாரத்தின் புனிதத்தை கெடுக்க எம் போராட்ட வரலாற்றில் இல்லாத மாவீரர் மாதம் என்ற ஒன்றை உருவாக்கி நாட்களை பரவலாக்கி மக்களை சலிப்புற வைத்து ர்ண்டுமாவீரர் தினக் கொண்டாட்டங்களால் குழம்பியும் சோர்ந்தும் போயிருக்கும் மக்களின் உளவியலை இன்னும் இன்னும் சிதைப்பது.

இவைதான் இங்கு ஒரு சில தேசியப் பற்றுள்ளவர்கள் போல் நடித்துக்கொள்ளும் போலிகளின் உள்நோக்கம்.மக்கள் இவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.இந்தப் போலிகளின் திட்டம் அரங்கேற ஒரு போதும் இடமளிக்காதீர் மக்களே.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வேளையில் இப்படி ஒரு தலைப்பு தேவைதான ?

இப்படியான தலைப்புக்கள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தவே உதவும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மாவீரர் தினத்தை யாரும் நினைவு கொள்ளலாம். அது மாதமாக இருந்தால் என்ன ,வாராமா இருந்தால் என்ன. நற்பணிகளை செய்வதே மாவீரர் மாதத்தின் சிறம்பம்சம், தாயகத்தில் மாவீரர் மாதத்தில் பல சிரமதான பணிகள் இடம் பெறும். கடைசி வாரம் சிறப்பு வாரம் அவ்வளவுதான்

ஒரு காலத்தில் மாவீரர் குடும்பங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களின் சகல தேவைகளையும் போராளிகள் நிறைவேற்றினார்கள், அது மாவீரர் மாதத்தில் தான் நடை பெறும்

*இளையராஜாவை எதிர்ப்பதன் மூலம் பலகோடி தமிழ்நாட்டு இளையராஜா ரசிகர்களை எம் போராட்டத்துக்கு எதிராக மாற்றுவது

*காலம் காலமாக போற்றப்படும் மாவீரர் வாரத்தின் புனிதத்தை கெடுக்க எம் போராட்ட வரலாற்றில் இல்லாத மாவீரர் மாதம் என்ற ஒன்றை உருவாக்கி நாட்களை பரவலாக்கி மக்களை சலிப்புற வைத்து ர்ண்டுமாவீரர் தினக் கொண்டாட்டங்களால் குழம்பியும் சோர்ந்தும் போயிருக்கும் மக்களின் உளவியலை இன்னும் இன்னும் சிதைப்பது.

இவைதான் இங்கு ஒரு சில தேசியப் பற்றுள்ளவர்கள் போல் நடித்துக்கொள்ளும் போலிகளின் உள்நோக்கம்.மக்கள் இவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.இந்தப் போலிகளின் திட்டம் அரங்கேற ஒரு போதும் இடமளிக்காதீர் மக்களே...

போலிகள் போலிகள் என்று நீங்கள் கூறுவதை விடுத்து ஆதாரத்துடன் போலிகளை இனங்காட்டினால் தானே நாமும் விலத்தி நடக்கலாம்...

மாவீரர் தினத்தை யாரும் நினைவு கொள்ளலாம். அது மாதமாக இருந்தால் என்ன ,வாராமா இருந்தால் என்ன. நற்பணிகளை செய்வதே மாவீரர் மாதத்தின் சிறம்பம்சம், தாயகத்தில் மாவீரர் மாதத்தில் பல சிரமதான பணிகள் இடம் பெறும். கடைசி வாரம் சிறப்பு வாரம் அவ்வளவுதான்

ஒரு காலத்தில் மாவீரர் குடும்பங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களின் சகல தேவைகளையும் போராளிகள் நிறைவேற்றினார்கள், அது மாவீரர் மாதத்தில் தான் நடை பெறும்

போலிகள் போலிகள் என்று நீங்கள் கூறுவதை விடுத்து ஆதாரத்துடன் போலிகளை இனங்காட்டினால் தானே நாமும் விலத்தி நடக்கலாம்...

என்ன தெரியாதமாதிரி அக்ற் பண்ணுறீங்க.வேறயார்.நீங்க ஓடி ஒடி முண்டு கொடுக்குரவங்கதான். :lol: :lol:

[size=1]

[size=4]அது ஒரு நாளோ இல்லை ஒரு வாரமோ இல்லை ஒரு மாதமோ இல்லை ஒரு வருடமோ - அது அவரவர் உரிமை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் கூட தனி மனிதர் உரிமை. [/size][/size]

[size=1]

[size=4]மூன்று வருடங்களுக்கு முன்னராக விடுதலைப்புலிகள் பலவேறு தந்திரங்கள் / போர்க்குற்றங்கள் மூலமாக வெற்றிகொள்ளப்பட்டனர். இருந்தும் சிங்களம் பலவேறு நெருக்கடிகளுக்கு இன்று முகம் கொடுத்து நிற்கின்றது. [/size][size=4]காரணம் அவர்கள் தமது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காதது. [/size][/size][size=1]

[size=4]ஒரு காரணம் புலம்பெயர் தமிழர்கள்.பலவேறு நேரங்களில் பிரிந்து நிற்கும் எம் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வு - மாவீரர் தினம். [/size]

[size=4]இதை அகற்றுவதில் தாயகத்தில் வெற்றிகண்டுள்ளது சிங்களம். நிச்சயம் அது புலம்பெயர் தேசங்களிலும் இல்லாமல் செய்ய பாடுபட்டு வருகின்றது. "எல்லாம் முடிந்துவிட்டது" மேற்கொண்டு 'ஒற்றுமையாக நாட்டை கட்டி எழுப்புவோம்' என்ற மந்திரத்தை முன் வைக்கின்றார்கள். இருநூறு வருடங்களாக இல்லாத மாவீரர் தினம் எதற்கு? எனவும் கேட்கலாம். [/size]

[size=4]இன்று விடுதலைப்புலிகள் இல்லாத காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் எமது மாவீரர்களை நினைவு கூருவது மிக மிக முக்கியமானது. [/size][/size]

[size=6]இன்று விடுதலைப்புலிகள் இல்லாத காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் எமது மாவீரர்களை நினைவு கூருவது மிக மிக முக்கியமானது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

155371_361882240572117_284089685_n.jpg

F B நன்றி

சுத்த சுயநலமான கருத்து.ஒருத்தருக்கு வக்காலத்து வாங்குவதற்காக எதையும் மாற்ற தயங்கமாட்டார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.நீங்கள் மாவீரர் நாள் 28ம் திகதி கொண்டாடலாம் என்று அவர் சொன்னால் இதேகருத்தைதான் எழுதுவீர்கள்.இதுதான் கருத்து விபச்சாரம் என்பது.

[size=1]

[size=4]உங்கள் உயரிய பண்பான கருத்திற்கு நன்றிகள். ஆனால் அதை நீங்கள் கனேடிய தமிழர் பேரவைக்கு கூறியதாகவே நான் பார்க்கின்றேன். [/size][/size]

[size=4]

நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
[/size]

[size=1][size=4]இருநூறு வருடங்களாக இல்லாத மாவீரர் தினம் எதற்கு? எனவும் கேட்கலாம். [/size][/size]

யார் கேட்பார்கள் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை மாவீரர்களை உண்மையாக பூசிக்கும் எவரும் இக்கேள்வியைக் கேட்கமாட்டார்கள்.

யார் கேட்பார்கள் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை மாவீரர்களை உண்மையாக பூசிக்கும் எவரும் இக்கேள்வியைக் கேட்கமாட்டார்கள்.

[size=4]அதற்கான பதிலை அந்த பந்தியிலேயே இணைத்திருந்தேன், பாருங்கள். [/size]

இதை அகற்றுவதில் தாயகத்தில் வெற்றிகண்டுள்ளது சிங்களம். நிச்சயம் அது புலம்பெயர் தேசங்களிலும் இல்லாமல் செய்ய பாடுபட்டு வருகின்றது. "எல்லாம் முடிந்துவிட்டது" மேற்கொண்டு 'ஒற்றுமையாக நாட்டை கட்டி எழுப்புவோம்' என்ற மந்திரத்தை முன் வைக்கின்றார்கள். இருநூறு வருடங்களாக இல்லாத மாவீரர் தினம் எதற்கு? எனவும் கேட்கலாம்.

[size=5]இதை அகற்றுவதில் தாயகத்தில் வெற்றிகண்டுள்ளது சிங்களம். நிச்சயம் அது புலம்பெயர் தேசங்களிலும் இல்லாமல் செய்ய பாடுபட்டு வருகின்றது. "எல்லாம் முடிந்துவிட்டது" மேற்கொண்டு 'ஒற்றுமையாக நாட்டை கட்டி எழுப்புவோம்' என்ற மந்திரத்தை முன் வைக்கின்றார்கள். இருநூறு வருடங்களாக இல்லாத மாவீரர் தினம் எதற்கு? எனவும் கேட்கலாம்.[/size]

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரமே போதுமானது . இங்கு என்ன சிரமதானம் செய்யப்போறியாலா அல்லது மாவீரர் குடும்பத்தை கூப்பிட்டு மரியாதை செய்யப்போறியலா ஒண்ணுமே இல்ல மாவீரர் தினம் முடிந்ததவுடன் கல்லாவைத்தான் பாக்கப் போறியல் .புலத்தில் தலைவர்கள் கூடிப்போனதால் வந்த வினை இது .

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் முடிவு எடுத்த ஒவ்வொன்றாக இப்பிடியே மாற்றிக்கொண்டு வாருங்கள் ஒரு காலத்தில் அவரையே யார் என்று கேட்க உதவும்

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

"மாவீரர் காலாண்டு" என்று ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று மூன்று மாதங்களையும் பிரகடப்படுத்தி விட்டால் என்ன?

டிசம்பர் மாதத்தில் பல தமிழ் மன்றங்கள் கிறிஸ்மஸ் விழாக்கள் செய்வார்கள். அவற்றையும் ஒரு கை பார்த்து அள்ளி விடலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 20 வருடத்திற்குப் போவான் முள்ளி வாய்க்கால் முடிந்தே 3 வருடம் முடிந்திட்டுது 2 மாவீரர் இடையில் வந்தும் போச்சுது அப்பவெல்லாம் இப்படியொரு சிந்தனை வரேல்ல போல :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.