Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராவணனுக்கு வீர வணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீபாவளி கொண்டாடுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
diwali.jpg

[size=4]

தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது.

உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111248

[size=5]இராவணன் ஒரு தமிழ் வீரன்[/size]

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

இராவணன்:

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன

இராமாயணத்தில் இராவணன்:

இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்.

குடும்பம்:

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்

வேத வித்தகன்:

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.

கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)

கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?

இராவணன் நீர்வீழ்ச்சி:

இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை - வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இராவணன் காலத்து ஆலயங்கள்:

இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.

"வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். " இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.

இதைவிட.....இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.

இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.

இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.

இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்.... தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.

இராவணன் வெட்டு:

படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

சிகிரியாக் குன்றம்:

சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்.... இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை:

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.

இராவணன் ஆட்சி:

மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்... அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.

இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:-

- சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.

- ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம் பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்:

- சயம்பன்

- சயம்பனின் மருமகன் யாளிமுகன்

- ஏதி

- ஏதியின் மகன் வித்துகேசன்

- வித்துகேசனின் மகன் சுகேசன்

- சுகேசனின் மகன் மாலியவான்

- மாலியவான் தம்பி சுமாலி

- குபேரன்

இராவணன் ஆட்சி:

அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

http://arunarunjoseph.blogspot.fr/2011/05/blog-post_4745.html

தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்!

தோழர்களே, தாய்மார்களே!

இன்று உங்கள் மத்தியில் இருக்க நேர்ந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சில தாய்மார்கள் என்னைப்பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு நன்றி செலுத்துகிறேன். பெண்களுக்காக இதுவரை நான் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட்டதாக நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் விஷயத்தில் அநேக சீர்திருத்தக் காரியங்கள் செய்ய வேண்டுமென்ற ஆசை வெகு பேரைப் பார்க்கிலும் எனக்கு அதிகமிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் பல நாடகங்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறேன். என்றாலும் அவை அநேகமாக சீர்திருத்த நாடகங்களாகவே இருந்தன.

சென்னையில் மூடநம்பிக்கை அதிகம்:

புராண நாடகங்களுக்கு என்னை அழைப்பதில்லை என்பது மாத்திரமல்லாமல் நானும் அதிகமாகப் போவதில்லை. ஆனால் இந்த நாடகத்திற்கு அழைத்தவர்கள் என்னிடம் இக்கூட்டத்திற்கு இன்று வெகு பெண்கள் இங்கு வருவார்கள் என்றும், இந்த சமயத்தில் பகுத்தறிவு, சீர்திருத்த விஷயங்கள் பற்றிப் பேசலாம் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். அதனாலேயே நான் மிக ஆசையோடு ஒப்புக் கொண்டேன். சென்னை போன்ற நகரங்களில் பெண்மக்களிடம் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுவதென்றால் மிகவும் பயப்படவேண்டியிருக்கிறது. மற்ற ஊர்களைவிடவும் சில கிராமங்களை விடவும்கூட சென்னையில் மூடநம்பிக்கை அதிகமாய் இருக்கிறதைக் காண்கிறேன்.

சாதாரணமாக ஒரு கிழவி, அதுவும் வாலிப காலத்தில் மிக்க ஒழுக்க ஈனமாக நடந்து நைந்து போன ஒருத்தி, கழுத்தில் மஞ்சள் நூலை கத்தையாகக் கட்டி மாலைபோல் போட்டுக்கொண்டு, தலையை விரித்துப்போட்டு, நெற்றியில் ரூபாய் அகலம் மஞ்சளையும் குங்குமத்தையும் அப்பிக்கொண்டு, கையில் ஒரு நெருப்புச் சட்டியை வைத்துக்கொண்டு ஆ... ஊ.... மாரியாயி காளியாயி என்று கத்தினால் எலக்ஷனில் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள்போல் அநேக பெண்கள் ஓடி வந்து அவள் காலில் தண்ணீரை ஊற்றி, அரிசி பருப்பு காய்கறி முறத்தில் வைத்து தேங்காய் பழம் உடைத்து, கற்பூரம் பற்ற வைத்து, விழுந்து கும்பிட்டு வாக்கு கேட்பதையும் ஆசி கூறக் கெஞ்சுவதையும் பார்க்கிறேன். இந்தக் காரியங்கள் மந்திரிகள் வீட்டுப் பெண்கள் கூட செய்கிறார்கள் இந்த மாதிரி மக்களிடம் என்ன சீர்திருத்தம் பேச நான் துணிவு கொள்ள முடியும்?

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே பெரிதும் காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்தமும் பெண்களிடம் இருந்து வந்தால் அதற்குப் பலம் அதிகம்.

இன்று இங்கு நடித்த சகுந்தலை நாடகம் ஒரு மூடநம்பிக்கைக் கதை அல்லாமல் பெண் அடிமைக் கதை அல்லாமல் அதில் படிப்பினையோ, பகுத்தறிவோ என்ன இருக்கிறது? கொஞ்ச நாளைக்கு முன் இப்படித்தான் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடப் பெண்கள், மாணவர்கள் சாவித்திரி சத்தியவான் நாடகம் நடித்தார்கள். அக்கதையில் மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு முரண்பாடு ஏராளமாய் இருந்ததோடு, உலகில் உள்ள விதவைகள் என்பவர்களை எல்லாம் கற்பில்லாதவர்களாக ஆக்கிவிட்டது. இப்படி புராணக் கதைகள் அவ்வளவும் ஒரு படிப்பினையும் இல்லாமல் ஒழுக்க ஈனத்தையும் கற்பித்து விட்டு நம்மை இழிவுபடுத்தியும் விடுகின்றன.

கதை விவரம்:

சகுந்தலை கதை ஒரு புராணக் கதை என்பது மாத்திரமல்லாமல் ஆரியர் தன்மையை விளக்கிக் காட்டக் கூடிய ஒழுக்கமற்ற வஞ்சகத்தில் இருந்து புறப்படுகிறது. அதாவது ஆரியர்கள் தேவனான இந்திரன் தன் பதவிக்குப் போட்டி போடும் ஆரியரல்லாத ஒருவனை ஏமாற்ற ஒரு ஆரியப் பெண்ணை அனுப்பி, அவள் மூலம் அவனுக்கு காம உணர்ச்சியுண்டாக்கி வஞ்சிக்கிறான். அந்த ஆரியனல்லாதவன் அந்தப் பெண்ணால் ஏமாந்து போகிறான். இந்த ஏமாற்றத்தில் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. இந்தச் சகுந்தலை ஒரு ஆரியனல்லாதவன் ஏமாந்து போனதற்கு அறிகுறியாய் இருக்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த ஆணும் பெண்ணும் சேர்க்கையான உடனே ஒரு குழந்தை பிறந்து விடுகிறது. அது காட்டில் எறியப்பட்டு ஒரு பட்சியால் வளர்க்கப்படுகிறது. பிறகு ஒரு ரிஷியால் வளர்க்கப்படுகிறது. இதுவரை பார்த்தோமானால் இதில் அறிவோ, ஒழுக்கமோ, படிப்பினையோ ஏதாவது இருக்கிறதா? ஏதாவது இருக்குமானால் ஆரியர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதையும், அவர்கள் ஒருவனை ஏமாற்றவோ ஒரு காரியத்தைச் சாதிக்கவோ என்ன என்ன முறைகள் கையாளுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதில் ஒரு படிப்பினை இருக்கலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கும் எத்தனை மூடநம்பிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது பாருங்கள்.

இனி சகுந்தலை கலியாணத்தைக் கவனியுங்கள். ராசகுமாரன் என்கிற காரணத்தால் கண்டதும் காதல் - உடனே கர்ப்பம் - பிறகு வலிய அவனிடம் போய் கெஞ்சுதல், பிறகு என்ன என்னமோ மூடநம்பிக்கை கற்பனைகள். இந்த நாடகத்தில் ஆண் பெண் காதலாடின சில வேடிக்கை தவிர வேறு என்ன லாபம்? அதுவும் வெகு சிறு பச்சிளங் குழந்தைகளை காதலாடச் செய்தோம். குற்றம் சொல்லவில்லை இதை நான் குற்றம் சொல்வதாக யாரும் கருதக் கூடாது. இதன் ஆசிரியர்கள் மிகக் கஷ்டப்பட்டு இச்சிறு குழந்தைகளை இவ்வளவு அருமையாய் நடத்தும்படி கற்பித்த திறத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் பயனில்லாத காரியம் என்றுதான் சொல்லுகிறேன். நமது நாடகக் கதைகள் 100-க்கு 90 இப்படியே இருக்கின்றன. வயிற்றுப் பிழைப்புக்கு நடிப்பவர்கள் எதையோ நடித்து வயிறு வளர்க்கட்டும். இந்த முறை நாடகத்தில் மாத்திரமல்ல; வேறு அனேக காரியங்களில் அரசியல், சமுதாய இயல், பகுத்தறிவு இயல், சுயமரியாதை இயல் என்பவற்றிலும்கூட வயிற்றுச் சோற்றுக்காகவும் சுயநலத்துக்காகவும் எந்த வேஷமும் போடுகின்ற மக்கள் இருக்கிறார்கள். ஆதலால் இன்றைய உலக சராசரி ஒழுக்கத்தில் இதை கெட்டதென்று சொல்ல வரவில்லை. ஆனால் யாதொரு சுயநல உணர்ச்சி இல்லாமல் உற்சாகத்திற்காகவும், கலை உணர்ச்சிக்காகவும் செய்யப்படுகிற காரியத்தில் இக்கேடுகளைப் புகுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் எதிரிகளாகிய ஆரியர்கள் ஆதியில் தாங்கள் நம்மீது வெற்றி பெற்று நம்மை அடிமை கொண்டவுடன் மறுபடியும் அதிலிருந்து மீளாதிருக்கவும், மீளுவதற்கு நினைக்காமல் இருக்கவும் செய்து கொண்ட சூழ்ச்சி பிரசாரங்களில் இக்காரியமும் அதாவது புராணக் கதைகள் நடிப்பதும் ஒன்றாகும்.

இன்று மக்கள் பெயர்கள் எல்லாம் திராவிட எதிரிகளான ஆரிய தெய்வங்கள், ஆரிய முனிகள், ஆரிய ரிஷிகள், ஆரிய அரசர்கள் ஆகியவைகளின் பெயர்களா கவே ஆகிவிட்டன.

எல்லாம் ஆரிய மயம் சங்கீதம் என்னும் இசையும் வெறும் ஆரியக் கடவுள்கள் பிரார்த்தனைகள் பாட்டாக வந்துவிட்டது. மிக்க ஆபாசமாகவும் விகாரமாகவும் பாடப்படும் பாட்டுகள்கூட ஆரியக் கடவுள்கள் செய்ததாகவும் அவர்கள்மீது பாடினதாகவும் கற்பிக்கப்பட்டு விட்டன. வீட்டில் அழகுக்காக தொங்கவிடும் சித்திரப் படங்கள் முழுமையும் ஆரியக் கடவுள்களாக ஆகி விட்டன. வீட்டில் புழங்கும் துடைப்பக் கட்டை முதல் ஆரியக் கடவுள்களின் பிரதிரூபமாக ஆக்கப்பட்டு விட்டன. பரதம் என்கின்ற நாட்டியக் கலையும் ஆரியக் கடவுள், அக்கடவுள் செய்கை ஆகியவைகளையே கொண்டவைகளாகி விட்டன. பண்டிகைகளும், உற்சவங்களும், உல்லாசங்களும் எல்லாம் ஆரிய பிரசாரமாகவே ஆகிவிட்டன - நமது கலைகள் முழுவதும் ஆரியக் கலப்பாகிவிட்டதுடன் இலக்கியங்கள், இலக்கணங்கள்கூட ஆரியக் கலப்பாகவே ஆகிவிட்டன. தொல்காப்பியம், குறள் முதலியவைகளில்கூட ஆரிய செல்வாக்கும் கலப்பும் ஏற்பட்டு விட்டது என்பது சில ஆராய்ச்சி நிபுணர்களின் கூற்றாக ஆகிவிட்டது. சில நடவடிக்கைகளுக்கு தமிழில் பெயர் சொல்ல வார்த்தைகளே கிடைப்பது கஷ்டமாகி விட்டது. சிலவற்றைத் தமிழில் சொன்னால் கெட்ட வார்த்தைகள், உச்சரிக்கக் கூடாதவைகள் ஆகிவிடுகின்றன. அவற்றையே வட மொழியில் சொன்னால் மதிக்கப்பட்ட வார்த்தைகளாக ஆகிவிடுகின்றன. இப்படியாக தமிழர்களுக்கு இன்று எதுவும் சொந்தம் இல்லாமல், ஆதாரம் இல்லாமல் ஆரியத்தையே கொண்டு வாழும்படியான நிலைமை ஏற்படுத் தப்பட்டு அதிலிருந்து வேறுபடுவது என்றால் மிக்க வேதனைப்படும்படி ஆகிவிட்டது.

நமது இலக்கியம் அழிந்த விதம்:

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவை தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார் இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன என்று, நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய் போடுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளை குப்பையில் எறிந்து விடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.

புத்தகங்கள், அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு, இலக்கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாக சில ஆதாரங்கள் இருந்திருக்கும். அவை அவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமானவைகளாக இருந்திருக்காது இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்து விடுவான். அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத்திற்கும், நவராத்திரியின்போது குப்பை மேட்டுக்கும் போய் சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக்கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவதாக தோழர் உ.வே.சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அச்சாகி வெளிவந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும் அய்யர் இஷ்டப்பட்டதுமாகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக்குமா என்று பாருங்கள்.

இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய் விட்டன. பண்டிதர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தில் ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி, தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழி பெயர்த்து தங்களுடையது போல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களையும், கடவுள்களையும், பழக்க வழக்கங்களையும், தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டன என்று பொருள்பட துணிவுடன் எழுதி இருக்கிறார். மற்றும், இன்றைய பல ஆராய்ச்சியாளரும், இன்று தமிழரிடையுள்ள சமயம் இலக்கியம் இதிகாசம் என்பவை ஆரியர்களுடையன என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டவை என்றும் விளக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் இவை தெரிந்த பின்பும் சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு தீண்டாத மக்களாய் கருதப்பட்ட பின்பும் அவைகளைக் கொண்டாடலாமா என்று கேட்கிறேன். பண்டிகைகள் தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம்கூட ஆரிய பிரசாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும். அதுவும் பல நமது இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன. ஆரிய மதத்தையும் ஆரியக் கொள்கைகளையும் பின்பற்றும்படியும் வலியுறுத்துகின்றன.

நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வர்ணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவிடர்கள், தமிழர்கள் என்றும், நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்பந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றால்தான் நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக்கின்றதே ஒழிய மற்றபடி நாம் ஆரியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்வித பொறுப்பும் வேலையும் முயற்சியும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம். இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழ கொழா வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது. ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில் அய்ரோப்பியர் ஆட்சியில் கூட திராவிடன் ஆரியருக்கு இழிபிறப்பாக இருக்கிறான்.

யாரோ இரண்டொருவர் அடிகளாகவும், சுவாமிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும், பெரியாராகவும், ராஜாவாகவும், மந்திரியாகவும், சர் ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட்டாள்தனமேயாகும். எப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ் பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படுகிறான்.

ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப்பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும் ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும் ஏன் நான் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் சில விஷயங்களில் மாத்திரம் தங்களை திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக்கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்கெட்ட இழி நிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப் பண்டிகைகளைப் பற்றியும், ஆரியக் கடவுள் தத்துவங்களைப் பற்றியும், அவைகள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.

தீபாவளி:

உதாரணமாக சமீபத்தில் வரப் போகும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 15 வருஷ காலமாகவே திராவிடர்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதானது தங்களை ஆரிய அடிமை என்று முத்திரை போட்டுக் கொள்வதாக ஆகுமென்று எழுதியும் சொல்லியும் வருகிறேன். ஆனால் திராவிடர் பெரும்பாலோர் எனது வார்த்தையை மதித்ததாகவோ, நடந்ததாகவோ பெருமை பாராட்டிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன். யாரோ சிலர் நடந்திருக்கலாம். சரியென்று மதித்திருக்கலாம்; அது ஒன்றும் போதாது. தமிழ் மக்கள் அடியோடு தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும். தீபாவளிப் பண்டிகை என்பது ஆரிய புராணக் கதையைச் சேர்ந்ததே ஒழிய மற்றபடி வேறு எந்த ஆதாரத்தையும் பொறுத்ததல்ல. புராண காலம் எது என்று முடிவுக்கு வந்தோமானால் தீபாவளி எப்பொழுது ஏற்பட்டது, எது முதல் கொண்டாடி வரப்படுகிறது என்பது பச்சையாகத் தெரிந்துவிடும். மற்றும், அப்பண்டிகையின் ஆதாரத்தில் சம்பந்தப்பட்ட தேவர்கள் யார், அசுரர்கள் யார் என்பதை சிறிது உணர்ந்தாலும் இப்பண்டிகை திராவிடனுக்கு இழிவைத் தருவதா, மேன்மையைத் தருவதா என்பது விளங்கிவிடும். இந்த ஒரு காரியத்தை நிறுத்தவே நாம் 15 வருடமாகப் பாடுபட்டும் முடியவில்லையென்றால் மற்ற எத்தனையோ காரியங்கள் எப்படி முடிவு பெறப் போகிறது என்று பயப்பட வேண்டியவனாக இருக்கிறேன். விக்கிரக ஆராதனை, கோவில் திராவிடனுக்கு விக்கிரக ஆராதனை என்னும் உருவ வழிபாடும் ஆலயங்கள் என்னும் கோவில்களும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே இன்று ஆரியர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த சமயத்துக்கும் மதத்துக்கும் சேர்ந்த கடவுள்களுக்கு எனக்குத் தெரிந்தவரை உருவம், பெண்டு பிள்ளைகள், பந்துமித்திரர்கள், உற்சவங்கள் கிடையவே கிடையாது. அதிலும் திராவிடனுக்கு இருந்ததாக சொல்லவே முடியாது. திராவிடர்களுக்குக் கோவில்களே கிடையாது என்று பந்தயங்கட்டிக் கூறுவேன். ஆரிய செல்வாக்குப் பெற்ற தொல்காப்பியத்தில்கூட இந்தக் கோவில்கள் இல்லை என்றால் வேறு எதில் இருந்திருக்க முடியும்?

ஆலயம்:

ஆலயம் என்பதற்குத் தமிழில் வார்த்தையே இல்லை. கோவில் என்றால் அரண்மனையே ஒழிய ஆலயம் அல்ல. மலையாளத்தில் கோயில் என்பது அரண்மனைக்குத்தான் சொல்லப்படுகிறது. அங்கு அம்பலம் என்று சொல்லப்பட்டாலும், அம்பலம் என்பதற்கு வெளியிடம் என்றுதான் பொருளே ஒழிய உள் இடம் அல்ல. வடமொழியில் உள்ள ஆலயம் என்பதுகூட கடவுள் வசிக்குமிடம் என்றோ, கடவுள் இருக்குமிடம் என்றோ பொருள் கொண்டது அல்ல. ஆலயம் என்பது கடவுள் இருக்குமிடமானால் தேவாலயம் என்று சொல்ல வேண்டியதில்லை. வடமொழியில் தேவஸ்தானம் என்று சொல்லப்படும் வார்த்தையும் இரட்டை வார்த்தையே ஒழிய ஒற்றை வார்த்தையல்ல. ஆகவே நமக்கு, கோவில்கள் கிடையவே கிடையாது என்பதோடு, கடவுள் இருக்கும் வீடு என்பதற்கு வார்த்தையும் கிடையாது.

அன்பும் ஒழுக்கமும் தொண்டும் கடவுள் தன்மை என்று சொல்லப்படுமானால் கல் - உலோகம் - மரம் - சித்திரம் ரூபமாக கடவுள் இருக்க முடியுமா? இப்படி உள்ள கடவுள் தன்மையில் மேற்கண்ட உயரிய குணங்கள் இருக்குமா? உண்டாகுமா? என்று பாருங்கள். இந்தக் கோவில்கள், இந்த உருவங்கள் ஆகிய வைகளில் திராவிடனுக்கு லாபமா?

ஆரியனுக்கு லாபமா இவற்றால் திராவிடன் செலவு செய்துவிட்டு இழிவையையும் அடைகிறான். ஆரியன் லாபமும் பெற்று விட்டு மேன்மையையும் அடைகிறான்.

பண்டிதர்கள் இதைச் சொன்னால் நமது பண்டிதர்கள் கடவுள் போச்சு, கோவில் போச்சு, கலைகள் போச்சு என்று மாய்மால அழுகை அழுகிறார்கள். இந்தப் பண்டிதர்களைவிட ஆரியர்கள் ஆயிரம் பங்கு மேல் என்று சொல்லலாம். நமது கோவில்கள் என்பவைகள் எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்கு முன் ஏற்பட்டவைகள் அல்ல.

இன்றுள்ள திராவிடர் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிட பட்டம், பதவி வேட்டைகாரர்கள் பலர் எப்படி தன்மானமற்று ஆரியர்களுக்கு உதவியாகவும் உளவாளிகளாகவும் இருந்து வருகிறார்களோ, எப்படி ஆரியர்களுக்கு கோவிலும் சத்திரமும் வேதபாடசாலையும் தர்மப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல் தான் திராவிட மன்னர்கள், திராவிட செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அனேக காரியங்களைச் செய்தார்கள்.

இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்குக் கூலியாளாக இருந்துகொண்டு கொஞ்சம் நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங்களைக்கூட ஆரியமயமாக்க உடந்தையாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக்கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ அது போலவேதான் அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அனேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றி விட்டுப் போய் விட்டார்கள்.

இவற்றை அடியோடு அழித்துத்தான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய பழுது பார்த்துச் சரி செய்யக் கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. உருவ வணக்கம் முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டும். கோவில் உற்சவம் முதலியவைகளுக்கு உள்ள ஆதிக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும். சைவமும் வைணவமும் அறிவுள்ள திராவிட மக்களையும் ஆரியத்திற்கு நிரந்தர அடிமைப்படுத்தினது சைவமும் வைணவமும் தானே ஒழிய வேறல்ல. ஏனெனில், திராவிடர்கள் வேதத்தையும் மனுதர்மசாஸ்திரத்தையும் ஒழிக்கச் சம்மதித்தாலும் சைவ, வைணவ புராண சமயத்தையும் புராண மரியாதையையும் ஒழிக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள் போல் காணப்படுகிறது.

இராமாயணம், பாரதம், பாகவதம், பக்த விஜயம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலாகியவைகளை நீக்கி விட்டால் திராவிடர்களுக்கு இப்படிப்பட்ட உருவக் கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத திராவிட மக்களுக்கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது.

திராவிட நாட்டில் 100-க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களும் நாமும் ஒன்று என்று எண்ணிக் கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய் நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்தவர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாக இருக்கிறோம். அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.

உற்சவம்:

இந்த மாதத்தில் பல ஆயிரக்கணக்கான பேர்கள் ஆண் பெண் இணையாய் திருப்பதிக்குப் போய் தாங்கள் சம்பாதித்த அரும் பொருளையும் கொட்டிக் கொடுத்து, தலையையும் மொட்டை அடித்துக் கொண்டு வருகிறார்கள். அழகான புதுக் கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட மொட்டை அடித்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். ரயிலில் நிற்பதற்கும்கூட இடமில்லாமல் கூட்டம் போகிறது.

இவற்றால் என்ன பயன்? எந்த ஆரியனாவது இப்படி பணம் கொட்டிக் கொடுத்து ஜோடி ஜோடியாய் தலை மொட்டையடித்துக் கொண்டு வருகிறானா? இனி அடுத்த மாதத்திற்கு திருவண்ணாமலைக்குக் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அங்கு மக்கள் சாப்பிடத்தகுந்த அருமையான வெண்ணெயையும், நெய்யையும் டப்பா டப்பாவாய், குடம் குடமாய் நெருப்பில் கொட்டப் போகிறார்கள்.

இதற்கு ஏதாவது அறிவான சமாதானம் உண்டா? நெய் சாப்பிடக் கிடைக்காத மக்கள் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள்? இவர்களை வஞ்சித்து நெய்யை நெருப்பில் கொட்டுவதில் என்ன பயன்? ஆரியர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சூத்திரன் நெய், பால் சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அதனால்தான் ஆரியர் உண்டு மீந்த நெய்யை நெருப்பில் கொட்டுவதற்காக ஹோமமும், கிருத்திகையும் ஏற்படுத்தினார்களோ என்னமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. வேறு ஆதாரம் என்ன வேண்டும்? இல்லாவிட்டால் எந்த மனிதனாவது வெண்ணெயையும் நெய்யையும் நெருப்பில் கொட்டுவானா? நமது முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு என்னதான் ஆதாரம் வேண்டும்? கொஞ்சம்கூட மனம் பதறாமல் அள்ளி அள்ளி நெருப்பில் நெய்யைக் கொட்டுவதும், அதை பல ஆயிரக்கணக்கான மக்கள் கண் குளிரப் பார்ப்பதும் ஒரு உற்சவமாயிருந்தால் ஒரு யோக்கியமான அரசாட்சி இருக்குமானால் இந்தக் கொடுமையை அரை நாழிகை சகித்துக் கொண்டு இருக்குமா என்று கேட்கிறேன்.

இப்படியே அடுத்து அடுத்து எத்தனை பண்டிகைகளும் உற்சவங்களும் வரப் போகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். இவைகளால் நமது புத்தி பாழாவது எவ்வளவு? பொருள் பாழாவது எவ்வளவு? நேரம் பாழாவது எவ்வளவு? பணம் பாழாவது எவ்வளவு? இவ்வளவு முட்டாள்தனமான காரியங்களும் கெட்ட பலன்களும் திராவிடர்களுக்கு அல்லாமல் உலகில் வேறு யாருக்காவது இருந்து வருகிறதா?

நமது பண்டிதர்கள் இதற்காக என்னவாவது செய்கிறார்களா? ஸ்தல புராணங்கள் விற்கவும், புராண இதிகாசங்களுக்குப் புதிய தத்துவார்த்தம் எழுதி அவைகளை நிலைக்க வைக்கவும், அவைகளைக் கொண்டு புண்ணிய காலட்சேபம் பண்ணவும் இவைகளை உபயோகித்துக் கொள்கிறார்களே தவிர, கண்டித்துப் பேசி மக்களுக்கு அறிவூட்டுகிறார்களா? இப்படியே இருந்தால் என்று திராவிடனின் விடுதலை நாள் வரக் கூடும்?

------------------------------------

13.10.1940 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சவுந்தர்ய மஹாலில் சகோதரிகள் சங்கீத கழகத்தின் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய உரை-"குடிஅரசு" - சொற்பொழிவு - 27.10.1940

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21622:2012-10-17-00-51-14&catid=42:periyar&Itemid=127

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தொலைபேசியில் தீபாவளி வாழ்த்து சொன்னார்கள்

நான் தமிழன் தைப்பொங்கல் மட்டும்தான் நான் கொண்டாடுறது நீங்கள் தீபாவளி கொண்டாடுறனியளோ எண்டு கேட்டோண்ணையே பாதிபேர் தொலைபேசியை துண்டிச்சிட்டினம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது பாட்டனார் சொல்லிதந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே என்று தொடங்கும் போதே தெரிது இதை எழுதினவர் ஒன்றில் கம்யூனிஸ்ட் இல்லை திராவிடர் கழக கண்மணி ஒண்டு என்று கறுமம்

.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவில் [size=4]PhD[/size] செய்வதற்காக எழுதப்பட்ட [size=4]Research Thesis [/size]ஐ புத்தக வடிவில் வாசித்திருக்கிறேன்.

அங்கு ஆராயப்பட்ட விடயம் திருக்கோணச்சரத்தின் தோற்றம் பற்றியது.

அங்கு கூறப்பட்ட விடயம் லங்காபுரி இலங்கை அல்ல என்பது தான்.

ஆகவே சபேசன் இது [size=4]RSS[/size] ஆட்களின் கருத்தல்ல.

சுமோ,

இராவணன் இலங்கையை ஆண்டான் என்பதற்கோ அல்லது அவன் தமிழன் என்பதற்கோ போதிய கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை. கல்வெட்டுக்களில் ஐதீகங்கள் பதிவாகியிருக்கலாம். ஐதீகங்கள் வரலாற்று ஆதாரங்கள் அல்ல.

இலங்கையின் பழங்குடிகள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் கட்டப்பட்டதே கோணேச்சரம்.

ஆரியக்குடிகள் சில ஆயிரம் ஆண்டுகள் வட இந்தியாவில் வாழ்ந்து பூர்வீக திராவிடருடன் பலத்த அளவில் இனக்கலப்பு நிகழ்ந்த நிலையில் தோன்றிய இலக்கியமே இராமாயனம். தூய ஆரிய இனம் இந்தியாவில் இல்லை.

இராமன் கருமை. இராவணன் கருமை. இருவரும் திராவிடர்.

சீதையும் திராவிடளே. ஏனென்றால் சீதை இராவணன் மகள்.

எம்முடைய பழைய வில்லனான ஜே.என். டிக்ஸிட் ஐப் பாருங்கள். இவர் ஒர்

மாராத்திய பிராமணர். ( தீட்சிதர்). ஆரியர் போல் சிகப்பா ?

jn_dixit_20050328.jpg

ஒரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை யாருக்குமில்லை, கொண்டாடுவது விடுவது அவரவர் பிரச்சனை.

இந்த தினத்தில் மட்டும் எத்தனை ஏழைகள் & பிச்சைகாரர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். புது உடுப்பே காணாத பலர் அன்றுதான் யாரோ உதவியால் கிடைக்கிறது. முதலாலி கூட அன்றுதான் போனஸாக கொடுக்கிறான்.

பல பணக்கார முதலைகள் அன்றுதான் தான தர்மம் என பகட்டுக்கு மேனிக்கு ஏழைகளுக்கு உதவி செய்கின்றார்கள்.

கொண்டாடுவது முக்கியமில்லை அது எப்படி மற்றவர்களுக்கு பயன்படுகின்றது என்பதே முக்கியம்.

நான் எத்தினமும் கொண்டாடி பல வருடங்கள் நினைவு தெரிந்தபின், ஆனா மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லவோ & அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளவோ தயங்கியது இல்லை.

மனிதன் கவலைகள் மறந்து சந்தோஷமாக இருக்கவே இந்தினங்கள் எல்லாம். அத்துடன் அப்படிப்பட்ட நாட்களில் ஏழைகளுக்கு உதவ பலர் வருவார்கள், தங்கள் பாவங்களை கழுவ.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில்... தீபாவளி கொண்டாடியுள்ளேன்.

பின்பு அது, தமிழ் மன்னன் இராவணனை அழித்த தினம் என்று அறியவந்த பின், கொண்டாடுவதில்லை.

சிறிய வயதில் பாடப் புத்தகத்தில் இருந்ததைத்தான் நம்பினேன். அண்மையில் விடயம் அறிந்த பின் யாருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்வதில்லை.

இந்தக் கதையின் நம்பகத்தன்மை தெரியாவிட்டாலும், உண்மையில் நடந்த விடயங்களை வைத்து ஊதிப் பெருப்பித்தும் இதிகாசங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிறிலங்காவில் மே 18 ஐ பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட நாளாக கொண்டாடக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அதைப் பாடப் புத்தகத்தில் வைத்து பரப்புரை செய்து பாடசாலைகளிலும் விழாக் கொண்டாடப் பழக்கி விட்டால், எங்கட எதிர்காலச் சந்ததியும் அதைக் கொண்டாடும்.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கருத்தைப் பகிர்ந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.[/size]

[size=5]இத் திரியில் ஆரியர் பற்றி கேட்டகப்பட்ட கேள்விக்கு ஆரியர் யார் என்னும் திரியில் பதில் உள்ளது.முதலில் கருத்தேளுதியவர்கள் பார்க்கமாட்டார்கள் என்பதற்காக புதிய திரியில் எழுதியுள்ளேன் மன்னிக்கவும்.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

இராவணனும் இராமாயணமும்

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேஸ்வரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூஷிப்பது சிவ தூஷனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி:

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீ~ணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்;டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீ~ண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும். எமது மக்கள் விபீஷணனைப் போன்று கோடாரி காம்புகளாக மாறக்கூடாது. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும் மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீஷணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விஜயனின் விஜயத்துடன் ஆரம்பிக்கின்றது.

http://tamilnation.c...pathipillai.htm

Edited by சொப்னா

ராவணன் தமிழன்

[size=2]

378537_401821663219264_1476394167_n.jpg

[size=3]இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்

1. உடற்கூறு நூல்[/size]

[size=3]2. மலை வாகடம்

3. மாதர் மருத்துவம்

4. இராவணன் – 12000

5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்

6. இராவணன் வைத்திய சிந்தாமணி

7. இராவணன் மருந்துகள் - 12000

8. இராவணன் நோய் நிதானம் - 72 000

9. இராவணன் – கியாழங்கள் – 7000

10. இராவணன் வாலை வாகடம் – 40000

11. இராவணன் வர்ம ஆதி நூல்

12. வர்ம திறவுகோல் நூல்கள்

13. யாழ்பாணம் – மூலிகை அகராதி

14. யாழ்பாணன் – பொது அகராதி

15. பெரிய மாட்டு வாகடம்

16. நச்சு மருத்துவம்

17. அகால மரண நூல்

18. உடல் தொழில் நூல்

19. தத்துவ விளக்க நூல்

20. இராவணன் பொது மருத்துவம்

21. இராவணன் சுகாதார மருத்துவம்

22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்

23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000

24. இராவணன் பொருட்பண்பு நூல்

25. பாண்ட புதையல் முறைகள் – 600

26. இராவணன் வில்லை வாகடம்

27. இராவணன் மெழுகு வாகடம்

* * * * * * * * * * * * * * * * * * * * *

"இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு

தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே"

-திருநீற்றுப்பதிகம்-

இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே[/size][/size]

நன்றி முக நூல்

ராவணன் தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணன்,முருகன்,இராவணன் ஆகியோர் திராவிடர்...கிருஸ்ணன் பல அவதாரம் எடுத்துள்ளார் அதில் ஒரு அவதாரமாக வட இந்தியாவில் இராமனாக தோன்றியிருக்கலாம்[இராமன் சிவப்பு,கிருஸ்ணன் கறுப்பு]

...இராவணன் சிவ பக்தன்,இராமன் வைணவர் என்டால் இராவணனை,இராமன் கொல்லும் போது ஏன் சிவன் இராவணனைக் காப்பாற்றவில்லை?...இராவணனில் பிழை இருப்பதாலா அல்லது சிவனிலும் பார்க்க இராமன் பெரியவனா?

இராவணனைக் கொண்ட‌ நாள் தான் தீபாவளி சொல்பவர்கள் சமயத்தை வடிவாகத் தெரியாதவர்கள்.அல்லது வட‌ இந்தியர்களது கதையைக் கேட்டு கண்ட‌ பாட்டுக்கு எழுதுகிறார்கள்...நர‌காசுர‌ன் என்பவன் கொடிய அர‌க்கன் அத்தோடு ஒரு நாட்டின் அர‌ச‌ன். அவன் நான் தான் கட‌வுள் தன்னைத் தான் கும்பிட‌ வேண்டும் என கட்டளை இடுகிறான்.அவனது மகன் தான் பிர‌கலாதன்.அவன் சிறந்த சிவ பக்தன்.மகன் சிவனைக் கும்பிடுவதைக் கண்ட‌ நர‌காசுர‌ன் மகனிட‌ம் யார் சிவன் என கேட்க் அவன் சிவன் தூணீலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என சொல்ல நர‌காசுர‌ன் தூணை உடைக்க போக அதில் இருந்து தோன்றி நர‌காசுர‌னை அழித்த நாள் தான் தீபாவளி...இது பற்றி ஊரில சின்ன வயசில படித்த சமயப் பாட‌த்தில் இருக்குது...இராமனுக்கும் தீபாவளிக்கும் சம்மந்தமே இல்லை.வட இந்தியர்கள் கொண்டாடுவதற்கு வேறு கார‌ணங்கள் இருக்குமோ தெரியாது...ஆனால் மற்றவர்களது கதையை கேட்டு எங்களுடைய பார‌ம்பரியம்,சம்பிர‌தாயம் ஆகியவற்றை மாற்ற முயல்கிறோம்.

தீபாவளி இப்ப கொண்டாடுவதா இல்லையா என்பது அல்ல பிர‌ச்ச‌னை தீபாவளி தமிழர் திருநாளா எனக் கேட்டால் ஆம் என்பதே பதில்

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணன்,முருகன்,இராவணன் ஆகியோர் திராவிடர்...கிருஸ்ணன் பல அவதாரம் எடுத்துள்ளார் அதில் ஒரு அவதாரமாக வட இந்தியாவில் இராமனாக தோன்றியிருக்கலாம்[இராமன் சிவப்பு,கிருஸ்ணன் கறுப்பு]

...இராவணன் சிவ பக்தன்,இராமன் வைணவர் என்டால் இராவணனை,இராமன் கொல்லும் போது ஏன் சிவன் இராவணனைக் காப்பாற்றவில்லை?...இராவணனில் பிழை இருப்பதாலா அல்லது சிவனிலும் பார்க்க இராமன் பெரியவனா?

இராவணனைக் கொண்ட‌ நாள் தான் தீபாவளி சொல்பவர்கள் சமயத்தை வடிவாகத் தெரியாதவர்கள்.அல்லது வட‌ இந்தியர்களது கதையைக் கேட்டு கண்ட‌ பாட்டுக்கு எழுதுகிறார்கள்...நர‌காசுர‌ன் என்பவன் கொடிய அர‌க்கன் அத்தோடு ஒரு நாட்டின் அர‌ச‌ன். அவன் நான் தான் கட‌வுள் தன்னைத் தான் கும்பிட‌ வேண்டும் என கட்டளை இடுகிறான்.அவனது மகன் தான் பிர‌கலாதன்.அவன் சிறந்த சிவ பக்தன்.மகன் சிவனைக் கும்பிடுவதைக் கண்ட‌ நர‌காசுர‌ன் மகனிட‌ம் யார் சிவன் என கேட்க் அவன் சிவன் தூணீலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என சொல்ல நர‌காசுர‌ன் தூணை உடைக்க போக அதில் இருந்து தோன்றி நர‌காசுர‌னை அழித்த நாள் தான் தீபாவளி...இது பற்றி ஊரில சின்ன வயசில படித்த சமயப் பாட‌த்தில் இருக்குது...இராமனுக்கும் தீபாவளிக்கும் சம்மந்தமே இல்லை.வட இந்தியர்கள் கொண்டாடுவதற்கு வேறு கார‌ணங்கள் இருக்குமோ தெரியாது...ஆனால் மற்றவர்களது கதையை கேட்டு எங்களுடைய பார‌ம்பரியம்,சம்பிர‌தாயம் ஆகியவற்றை மாற்ற முயல்கிறோம்.

தீபாவளி இப்ப கொண்டாடுவதா இல்லையா என்பது அல்ல பிர‌ச்ச‌னை தீபாவளி தமிழர் திருநாளா எனக் கேட்டால் ஆம் என்பதே பதில்

ரதி, ராமன் கறுப்புங்கோ!

பிரகலாதன் வணங்கியது, சிவனையல்ல! விஷ்ணுவை!

விஷ்ணு தான் நரசிம்ம அவதாரமாகத் தூணில் இருந்து வெளிப்பட்டு, இரணியவர்மனின், வயிற்றைக் கிழித்ததாகக் கதை என எண்ணுகின்றேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, ராமன் கறுப்புங்கோ!

பிரகலாதன் வணங்கியது, சிவனையல்ல! விஷ்ணுவை!

விஷ்ணு தான் நரசிம்ம அவதாரமாகத் தூணில் இருந்து வெளிப்பட்டு, இரணியவர்மனின், வயிற்றைக் கிழித்ததாகக் கதை என எண்ணுகின்றேன்! :D

எனக்கு பிரகலாதன் சிவனை வணங்கினான் என்று ஞாபகம் :lol: ...சரி உங்கள் கதைப்படி பிரகலாதன் வணங்கியது விஸ்னு என வைத்து கொண்டாலும் நரகாசுரன் செத்த நாள் தானே தீபாவளி ...ஏன் இப்போது எல்லோரும் அதை மாத்த முயற்சிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எலே யாருலே மாத்த முயற்சிக்கிராவ? நூத்தில ஒரு வீதம் கூட இல்லவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.