Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா

Featured Replies

கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா

அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தனிமனித அல்லது சமூகப்பெறுமானங்கள் தொடர்பான மனித நடத்தைகளை விடுப்புக்களாகவும் விரகங்களாகவும் விற்கிற காலம் தோன்றியுள்ளது.

சமுகத்தின் பெறுமானங்களில் ஏற்படுகிற மாற்றங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகும் போக்கை அனேகமான ஊடகங்களின் செய்தியிடலிற் காணமுடிவதில்லை. ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அதனுள் வாழ்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றவேண்டிய தேவை இல்லை என்பதைப்பல ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு சமூகத்தினுள் நிகழும் பண்பாட்டு மற்றும் கலாசார மாற்றங்களை எந்த முறையில் விளங்கிக் கொள்ளலாம் என்ற கேள்வியையும் முன்னதாகவே உங்களின் முன் வைத்து விடுகிறேன்.

இனிச் செய்திக்கு வருவோம்

நான் வாசித்த செய்தியின் சாரம் இதுதான்.

இலண்டனில் இருக்கும் மகளின் அழைப்பின் பேரில் யாழ்பாணத்திலிருந்து இலண்டன் செல்லும் தாய் ஒருவர் அங்கு தனது மகள் தனது கணவனை விட்டுப்பிரிந்து இன்னொருவருடன் வாழ்வதைக் கண்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே யாழ்ப்பாணம் திரும்பிவிடுகிறார். அவர் உடனே ஊர் திரும்பியதன் காரணத்தை அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மாணவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் அந்தத்தாயார் அவர்களுக்கு எதனையும் சொல்ல வில்லை. பின்னர் அத்தாயார் கௌரிவிரதம் இருந்த நாள் ஒன்றில் அவரது கணவன் நிறைந்த குடி போதையில் இருந்த காரணத்திற்காக அவரைக் கண்டித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அவரது கணவன் குடிபோதையில் மகளின் நடத்தையையும் விமர்சித்து சூழவுள்ளவர்களும் அவற்றை அறிந்துகொள்ளும் வகையில் உரத்துப் பேசியிருக்கிறார். சூழ உள்ளவர்களும் உடனே அந்தக்குடும்ப முரண்பாட்டைக் காணொளியாக்கி ஊடகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்த ஊடகமும் அச்சம்பவக் காணொளியை வெளியிடாமல், செய்திக்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்ற தொனி புலப்பட அச்சம்பவத்தைச் செய்தியாக மட்டும் வெளிப்படுத்தி விட்டிருக்கிறது.

எந்தச் சம்பவத்தையும் யாரும் எப்படியும் செய்தியாக்கலாம் . அதற்கான முழு உரிமையும் ஊடகங்களுக்கு இருக்கின்றன. ஆனால் இத்தகைய சம்பவங்களைச் செய்தியாக்கும் போது அதன் பின்னாற் தொழிற்படுகிற கருத்தியலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் ஆரோக்கியமான ஊடக அணுகு முறையாகும்.

இந்தச் சம்பவத்தில் பாத்திரங்களாக இருக்கிற தாய் தந்தை மகள் மகளின் பழைய கணவன் மகளின் புதிய நண்பன் மற்றும் புறநிலையாக இருந்து விடுப்புப் பார்க்கிற மாணவர்கள் ஆகியோருக்கிடையில் இருக்கிற உறவையும் அவர்களுக்கிடையில் இருக்கிற உணர்வுப் போராட்டங்களையும் அவர்களுடைய நடத்தைகளுக்கு காரணமாக இருக்கிற கருத்தியலையும், கலாசாரத்தையும் உன்னிப்பாக அவதானித்துப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகவியலாளனுக்கு அல்லது ஒரு படைப்பாளிக்கு அல்லது ஒரு நெறியாளனுக்கு இந்தச்சம்பவம் எமது தமிழ்ச்சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டு என்பது புரியும்.

நாடகம் ஒன்றிற்கான அல்லது குறும்படம் ஒன்றிற்கான கருவாக இருக்கக்கூடியது இந்தச்சம்பவம். பொறுப்புடன் புரிந்து அளிக்கையாக்கப்பட வேண்டிய கருவான அந்தச்சம்பவம் அது செய்தியிடப்பட்ட முறையினால் வெறும் விடுப்பாகிப் போனது அதிசயமல்ல.

குடிகாரக் கணவனின் இம்சைகளைச் சகித்துக்கொண்டு கௌரி விதரம் அனுஸ்டிக்கிற தாய்க்கும் தன்னைச் சந்தேகிக்கிற கணவனை விட்டு விலகித் தன்னை நேசிக்கிற இன்னொருவனோடு சேர்ந்து வாழத் துணிவு கொண்ட மகளுக்கும் இடையில் ஏற்படுகிற இடைவெளி எங்கள் கலாசாரத்தில் உருவாகத்தொடங்கியுள்ள ஒரு வெளி. குடும்பம் என்னும் சனாதனமான மரபான அமைப்பில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் குறித்து அலட்டிக்கொள்ளாமல் அடுத்த தலைமுறை கௌரிவிரதம் அனுட்டிக்கப் போவதில்லை. கணவனுக்காகவே வாழ்கிற கணவனின் விருப்பங்களையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிற தனது சுயத்தைக் கணவனிடம் இழக்கிற பெண்களின் தொகை இனி எமது சமூகத்தில் குறைந்து செல்லும்;செல்லவேண்டும்.

இந்தச் செய்தியை வாசிப்பதற்கு முன் என்னுள் கிடந்து குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் இங்கு பரிமாறவேண்டியது அவசியம்.

சில வாரங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியிற் தொடர்பு கொண்டு தனது மருமகள் வீட்டிற்கு அழையா விருந்தாளியாகச் செல்லவேண்டும் வருகிறாயா என்றார். கடந்த சில மாதங்களாக அவளுடன் தொடர்பேயில்லை தொலைபேசியையும் எடுக்கிறாளில்லை என்ன பிரச்சனையோ தெரியாதென்றார். வருகிறேனென்று ஒத்துக்கொண்டேன்.

மறுநாள் எனது நண்பரின் மருமகள் வீட்டுக்குச் சென்றோம். அழைப்புமணியை அழுத்தினோம். கதவு திறந்தது மெல்லிய சிரிப்புடன் மருமகளின் கணவன் உள்ளே அழைத்தார். அழையா விருந்தாளிகள் நாமென்றாலும் வரவேற்கும் பண்பிற் பிரச்சனை இருக்கவில்லை. மருமகளின் முகத்தில் அச்சமும் மகிழ்வும் ஒன்றாகத்தெரிந்தது.

வழமையான குசல விசாரிப்புக்களின் பின் நிலவிய அமைதியை மருமகளின் கணவரே கலைத்தார். ஆரம்பத்தில் தெரிந்த மெல்லிய சிரிப்பு மறைந்துவிட்டது கோபமும் எரிச்சலும் நிறைந்த முகமொன்று வெளிவந்தது.

“நீங்கள் என்னத்துக்கு வந்திருக்கிறியள் எண்டு எனக்குத் தெரியும். கலியாணம் முடிக்க முதல் பேசிய விடயங்களை- வாக்குறுதிகளை முதல்ல சரியா நிறைவேற்றிப்போட்டு வந்து என்னோடை கதையுங்கோ. உவண்ட அம்மா சொன்னவ ஊரில இருக்கிற காணியையும் வீட்டையும் எழுதித் தாறன் எண்டு அதை இன்னும் செய்யேல்லை. அது மட்டுமில்லை இப்ப எழுத்தித்தாறணெண்டு சொன்ன காணியிலை வீடுமில்லை. எண்டபடியால் வீட்டுக்கான பெறுமதியையும் சேர்த்துக் காசாகத் தரவேணும்.” எனத் தொடங்கினார்.

kal2.jpg

திருமணம் முடித்து 15 வருடங்களின் பின்பும் ஏழு வயதில் ஒரு மகளும் இருக்கிற நிலையில் பெல்யியத்தில் வாழ்கிற என் நண்பரின் மருமகளின் கணவரின் கோரிக்கைகள் எங்கள் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு நியாயமானவையாகத்தான் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு முன்னரேயே எட்டு இலட்சம் ரூபாவையும் இன்னொரு ஒன்பது பரப்புக்காணியையும் சீதனமாகப் பெற்றுக்கொண்ட அவர் இவ்வாறு கேட்பது சரியானதுதான் என்பவர்கள் அதிகம் உள்ள சமூகம் நாங்கள்.

எனது நண்பர் மருமகளின் கணவனின் உரையாடலில் இடையில் நுழைந்து “தம்பி வெளிநாட்டில இருக்கிறவர்களின்ரை காணியைப் பாதுகாப்பு அமைச்சு எடுக்குது இப்ப பாதுகாப்பாக பெற்றோரின் பேரில் இருக்கிற காணியை நீங்கள் வேண்டி என்ன செய்யப்போறியள்” என்று கேட்டார்.

“அது உங்கடை பிரச்சனையில்லை அதை ஆமிக்காரன் எடுத்தாலும் பரவாயில்லை உவ்வின்ரை அம்மா எங்கடை கலியாணத்தரகருக்குச் சொன்னதைச் சரியா நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

வெறும் காணி சீதனம் என்ற நிலையில் நின்ற அவரது கோபம் இப்பொழுது அவரது மனைவியின்மேல் திரும்பியது. எனது நண்பரின் மருமகளுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் நாட்டமில்லை என்றார். விருந்தினர்கள் வந்தால் பலகாரம் செய்யத் தெரியாதென்றார் குடும்பவளர்ப்புச் சரியில்லை என்றார். நண்பரின் மருமகளுக்குப் பற்கள் சரியில்லை பழுதாகிவிட்டன என்றார். அதிகாலையில் எழுந்ததும் மனைவியின் பற்களைப் எண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருந்தது. தனது மனைவியின் பற்கள் பழுதானதற்கு மனைவியின் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறையே காரணமென்றார். தான் அறியாமல் அந்தக் குடும்பத்துக்குள் சென்று விழுந்து விட்டேன் என்றார். தங்களுடைய ஊராட்கள் அந்த ஊரில் பெண்ணெடுப்பதில்லை என்றார். எனது நண்பர் தனது மருமகளின் மகளின் படமொன்றை முகப்புத்தகத்தில் பரிமாறியிருந்தார். அதனைப் பார்த்தவர்கள் நாவூறு படுத்தியமையால் தனது மகளுக்குப்பல்லு மிதந்து இப்போது சாப்பிடவே கஸ்டப்படுகிறாள் என்றார்.

அவரது வெறுப்பும் கோபமும் நிறைந்த வார்த்தைகளால் கொதித்துக் கொண்டிருந்த அந்த வரவேற்பறையில் அவரது மனைவி கண்கலங்கி அமர்ந்திருந்தார் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றதென்று அவர் தனது மாமாவிடம் கூறினார். எனது நண்பரின் மருமகளுக்கும் அவரது கணவருக்குமிடையிலான அன்பினதும் பிணைப்பினதும் ஆழத்தின் சாட்சியாக(?) அவர்களுக்கு பிறந்த மகள் இந்த முரண்பாட்டை மொழி அதிகம் புரியாவிடினும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

மேற்குறித்த பிரச்சனைகளைக் காரணம் காட்டியே அவர் தனது மனைவியை அவரது பெற்றோரிடமும் உறவினருடனும் உரையாடவிடாது முற்று முழுதாகத் தடுத்துவிட்டார். தன்னுடைய மனைவி தனக்குப் பிடிகாதவர்களுடன் உரையாடத் தேவையில்லை என்றும் உறுதியாகக் கூறிவிட்டார். (அவரது மனைவிக்கு, அவருக்குப் பிடிக்காதவர்களுடன் தனது கணவரை உரையாட வேண்டாம் என்று கட்டளையிட உரிமையிருக்குமென்றால் இந்த விதியை வேறு ஒரு வகையில் புரிந்து கொள்ளலாம்)

இறுதியாக அவர் இன்னும் ஒன்றையும் தெளிவாகக் கூறினார். இந்த வருடம் மார்கழி 31ம் திகதிக்கு முன்னர் காணியை எழுதித்தருவதுடன் வீட்டுக்குரிய பணத்தையும் தந்துவிட்டுத் தங்களுடனான தொடர்பை முற்று முழுதாக துண்டித்துவிடவும் வேண்டும் என்றார்.

எல்லாம் கிடைத்த பின்பும் ஏன் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று நான் குழம்பிய போது பின்வருமாறு கூறினார் என்ரை பிள்ளைக்கு நாளைக்கு கலியாணம் நடக்கவேண்டும் உங்களோட தொடர்பிலிருந்தால் அது நடக்காது என்றார். நான் ஏன் இப்படிச் சொல்லுறன் எண்டு உங்கள் எல்லாருக்கும் நல்லா விளங்கும் என்றார்.

நான் திரும்பிவரும் வழியில் எனது நண்பரைக்கேட்டேன்: “அவர் ஏன் தன்னுடைய மகளுக்குத் திருமணம் நடக்காதென்கிறார் ”

எனது இன்னொரு மருமகள் கலப்புத் திருமணம் முடித்திருக்கிறாள் என்றார் என் நண்பர்.

மருமகளின் கணவரின் நடத்தையினால் ஏற்பட்ட அவமானம் கோபம் மற்றும் கவலை என யாவும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்த எனது நண்பர் மௌனித்திருந்தார்.

இருபது வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் நண்பரின் மருமகளை முறையாக மொழிபடிக்கவோ வேலை செய்யவோ அனுமதிக்காமல் வீட்டுக்குளேயே வைத்திருந்து பின் இப்பொழுது யாருடனும் உரையாடவேண்டாம் என்று கட்டளை இடுமளவுக்கு அவரது கணவர் வளர்ந்திருக்கிறார்.

கடந்த பதினைந்து வருடங்களாக வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு சாதிவெறி மற்றும் ஊர்வெறி கொண்ட அறியாமை நிறந்த உன்மத்தனாக அவர் மாறியிருந்தார். அவர் போன்ற மனிதர்களை எங்கள் சமூகத்தை எங்கு வெட்டிப்பார்த்தாலும் காணலாம்.

ஆண் பெண்ணின் சுயத்தை மதித்தல், சரிசமமாக உரையாடுவதற்கு பெண்ணுக்குள்ள உரிமையை மதித்தல், குடும்பவேலைகளில் இருக்கவேண்டிய பகிர்வு பெண்ணின் சுயவளர்ச்சிக்கான வெளி இருத்தல் பரஸ்பர விட்டுக்கொடுப்பு தொடர்பாடற் சுதந்திரம், அன்பையும் காதலையும் வளர்பதில் பரஸ்பரம் இருக்கவேண்டிய நாட்டம் எனப் பல்வேறு பண்புகளில் எங்களது சனாதனமான குடும்ப அமைப்புக்குள் மாற்றங்கள் ஏற்படவேண்டியுள்ளது. இந்த விடையங்களில் பெண்ணே பலிக்கடாவாக இருக்கும் சூழ்நிலைகள் வெளிப்படும் போது ஊடகங்கள் அவற்றை இனம் கண்கண்டு வெளிப்படுத்துவது எமது சமூகத்தைச் சனநாயகப்படுத்தும்

நான் மேற்சொன்ன எந்த பண்புகளிலும் முன்னேற்றமில்லாத ஒரு குடும்பச் சூழ்நிலையில் உணர்வற்ற மரக்கட்டைபோல வாழும் என் நண்பரின் மருமகளுக்கு என்ன தீர்வு எனக் கேட்ட போது சிலர் அவள் பிரிந்து தனியாக வாழ்வது தான் நல்லதென்றார்கள். ஆனால் அனேகமானவர்கள் எனது நண்பரின் மருமகள் கௌரிவிரதம் பிடித்தால் எல்லாமும் சரியாகிவிடுமென்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?

http://www.globaltam...IN/article.aspx

Edited by நிழலி
எழுதியவர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டேன்

[size=4]புலம்பெயர் வாழ்க்கையில் உள்ள சமூக, பொருளாதார, உள, சுகாதார சிக்கல்கள் பற்றி தனிப்பட்ட ரீதியிலும் இல்லை சமூகரீதியிலும் நாம் திறந்த மனத்துடன் பேசுவது காணாது. எங்கேயும் பெற்றோர்கள் திறந்த மனத்துடன் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழித்து அன்பு பாசத்தை காட்டினால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பதினெட்டு வயதிற்கு மேலே அவர்களின் முடிவை, சரியோ / பிழையோ, ஏற்கும் பண்பும் பெற்றோருக்கு தேவை. [/size]

[size=1]

[size=4]அதேவேளை இன்றைய ஊடகமும் விடயங்களை இலாபகரம் உள்ளதாக செய்திகளை 'வியாபித்து' போடுவதால் "அதையே நாமும் செய்தால் என்ன ?" என்ற மனப்பான்மை வளர்ந்து செல்கிறது. திறந்த பொருளாதார உலகமயமாக்கலில் தாயகமும் இதில் சிக்கிக்கொண்டது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

இது போன்ற சில விடயங்களுக்கு போயிருக்கின்றேன்

என் கோபமெல்லாம் அந்த அப்பாவி மகனில் அல்ல.

எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு கேட்டுக்கொண்டு அதை ஆமோதித்தபடி பேசாமல் அவருடன் தொடர்ந்தும் வாழணும் என்று மயங்கிப்போய் நிற்குதே ஒரு பெண்.

அதன் மீது தான்.

ஒரு இடத்தில் நாலு ஆண் சகோதரங்களுடன் தனியே ஒரு பெண்ணாக பிறந்தது

இதைவிட கொடூர கணவனைக்காக்க

தனது சகோதரர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என பயந்து சொல்லுது.

அவர் இந்த யென்மத்தில திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே நீங்கள் அவரைத்திருத்த முயற்சிக்கவேண்டாம். அவர் உங்களை ஏதும் வம்புபுக்கிழுத்தாலும் நீங்கள் திருப்பி ஏதும் செய்யாதீர்கள் என்று.

எங்க போய் முட்டுவது...........???

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் விலங்கினை உடைத்து வெளியே வர வேண்டும்

வெறும் காணி சீதனம் என்ற நிலையில் நின்ற அவரது கோபம் இப்பொழுது அவரது மனைவியின்மேல் திரும்பியது. எனது நண்பரின் மருமகளுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் நாட்டமில்லை என்றார். விருந்தினர்கள் வந்தால் பலகாரம் செய்யத் தெரியாதென்றார் குடும்பவளர்ப்புச் சரியில்லை என்றார். நண்பரின் மருமகளுக்குப் பற்கள் சரியில்லை பழுதாகிவிட்டன என்றார். அதிகாலையில் எழுந்ததும் மனைவியின் பற்களைப் எண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருந்தது. தனது மனைவியின் பற்கள் பழுதானதற்கு மனைவியின் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறையே காரணமென்றார். தான் அறியாமல் அந்தக் குடும்பத்துக்குள் சென்று விழுந்து விட்டேன் என்றார். தங்களுடைய ஊராட்கள் அந்த ஊரில் பெண்ணெடுப்பதில்லை என்றார். எனது நண்பர் தனது மருமகளின் மகளின் படமொன்றை முகப்புத்தகத்தில் பரிமாறியிருந்தார். அதனைப் பார்த்தவர்கள் நாவூறு படுத்தியமையால் தனது மகளுக்குப்பல்லு மிதந்து இப்போது சாப்பிடவே கஸ்டப்படுகிறாள் என்றார்.

அவரது வெறுப்பும் கோபமும் நிறைந்த வார்த்தைகளால் கொதித்துக் கொண்டிருந்த அந்த வரவேற்பறையில் அவரது மனைவி கண்கலங்கி அமர்ந்திருந்தார் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றதென்று அவர் தனது மாமாவிடம் கூறினார். எனது நண்பரின் மருமகளுக்கும் அவரது கணவருக்குமிடையிலான அன்பினதும் பிணைப்பினதும் ஆழத்தின் சாட்சியாக(?) அவர்களுக்கு பிறந்த மகள் இந்த முரண்பாட்டை மொழி அதிகம் புரியாவிடினும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

இப்படியான நடத்தைகளும் துன்புறுத்தல்களும் சுரண்டல்களும் எமது கலாச்சாரம் பண்பாட்டினது ஒரு பகுதி. பண்பாட்டு அடிப்படையில் வரதட்சணை என்பதை நாம் சீர்திருத்தியதில்லை. எமது சமூகம் எந்த விதத்தில் நாகரீகம் அடைந்துள்ளது என்பது கேள்விக்குறி. இந்தக்கணவனின் செயல் எமது சமூகத்தில் இயல்பு என்னுமொரு சமூகத்தில் ஒரு சைக்கோ நோய். அதுக்கு ஏதாவது பெயர் இருக்கும். சட்டங்களில் பல பிரிவுகளில் இது குற்றம்.

அடிமைத்தனத்தை இயல்பாகக் கொண்டுள்ள இந்தப் பெண் இவரைவிட்டு வெளியெ வந்து எவ்வளவு தூரம் நிம்மதியாக இருப்பார் என்பது தெரியாது. ஏனெனில் எம்மில் பாதிக்கு மேற்பட்டவர்களின் வாழ்வை இப்டித்தான் வாழ் என்று நிர்பந்திப்பது சமூக இறுக்கமே. பிரிந்த பின் இந்தப் பெண்ணிடம் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும் என்பதும் அதை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதும் பிரச்சனைக்குரிய விசயம்.

போராடும் இயல்பு வரவேணும். அதுக்கு முதல் வீட்டுக்குள் இருக்காமல் வேலைக்குப்பேய் தன்னுடைய தேவைகளை தானே பூர்த்திசெய்யும் நிலை வரவேணும். தான் வாழ்வதற்காக தானே உழைக்கும் நிலை ஒன்றுதான் ஆரம்பம். ஒருவனுக்கு அடிமையாய் இருப்பது அடிமைப்படுத்துவதும் குற்றம். அளவுக்கு மீறி மனைவிமீது அன்புவைத்திருப்பது என்று வேலைக்கு அனுப்பாமல் இருப்பது பிள்ளை வளர்ப்பைக் காட்டி வேலைக்கு அனுப்பாமல் இருப்பதும் அடிமைப்படுத்துதலில் தொடர்ச்சியே. ஒரு சமூகத்தை நியாயமான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தன் வயிற்றுப் பசியை தானே எதிர்கொள்ளவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும். அதன் பின் அவர்கள் வாழ்க்கை மாறும் என்பது எனது அபிப்பிராயம்.

[size=4]உண்மையான பார்வை என்னவாக இருக்கவேண்டும்:[/size]

[size=1]

[size=4]வீட்டில் இருவரும் வேலைசெய்ய வேண்டுமா?[/size]
[/size]

[size=1]

[size=4]இதனால் வரும் நன்மை தீமைகளை முழுமையாக உணர்கின்றோமா? [/size]
[/size]

[size=1]

[size=4]புலம்பெயர் வாழ்வில் தேவைகளை நாமாக அதிகரிக்கின்றோமா? [/size]
[/size]

[size=1]

[size=4]பின்னர் அதற்கு பணம் தேடி இருக்கும் மகிழ்ச்சியை தொலைக்கின்றோமா? [/size]
[/size]

[size=4]ஒரு பெண்ணடிமை சமூகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு அந்த தளைகளிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிது கிடையாது. அப்படியே மீண்டு வந்தாலும் இந்த சமூகம் அவர்களுடன் சமமாக உறவாடது. ஏனெனில் அவள் உறவாடும் சமூகம் அதே மனநிலையை கொண்டுள்ளது. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் இந்த சமூகத்தில் எவ்வளவு பாலியல் துன்புறுத்தலுக்கு,கேலி கிண்டலுக்கு உள்ளாக வேண்டி உள்ளது என்பதை நாமும் காண்கிறோம்(புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் கொஞ்சம் விதிவிலக்கு) அதற்க்கு பயந்தே பல பெண்கள் வாழ்நாள் முழுதும் சங்கடங்களை அனுபவித்தே சாகிறார்கள். இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கது. இந்த ஒடுக்குமுறைகளை பார்க்கும் பையனுக்குஆண் என்றால் இப்படித்தான் இருக்கணும் போல என்ற உளவியல் சிந்தனை விதைக்கப் படுகிறது. அதேபோல பெண்ணுக்கும் நாம் அடங்கியே தான் போக வேண்டும் என்ற சிந்தனையும் விதைக்கப்படுகிறது. வெகு சிலருக்கே எதிர்மறை எண்ணங்கள் தோன்றக் கூடும். இந்த சிந்தனையின் எச்சங்கள் தான் நாம். ஆண்கள் தன் பழைய காதலி பற்றி பெண்களிடம் / மனைவியிடம் கதைக்க முடியும். அவர்களும் அதை கேட்டு இயல்பாகவே இருப்ப்பார்கள். ஆனால் எத்தனை ஆண்களால் தன பழைய காதலன் பற்றி கதைக்கும் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியும் அல்லது இயல்பாக வாழ முடியும். [/size][size=1]

[size=4]இங்கு சமூக மாற்றம் மெதுவாகவே நிகழும். அந்த மாற்றத்தை பெண்களுக்கு கொடுக்கவல்லது ஒன்று படிப்பறிவு மற்றொன்று சுய சம்பாத்தியம். [/size][/size]

நாட்டில் உள்ள நிலை வேறு. சுதந்திரமான வெளி நாட்டிலும் அந்தப் பெண் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப் பெண்ணே வெளியே வரலாம். இப்படியானவர்களுக்கு உதவி செய்யப் போய் எனது மூக்குதான் உடைபட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து பெண்களை மீட்க வேண்டும்.பெண்கள் வெளியால் வர‌ வேண்டும்.வேலைக்கு போக வேண்டும்.அவர்கள் அப்படி இருக்க வேண்டும்,இப்படி இருக்க வேண்டும் என எழுதுகின்ற ஆண்கள் தங்களுக்கு என்று வாழ்க்கையில் வரும் போது எவ்வளவு சுய நலமாய் இருப்பார்கள் என எனக்கு நன்றாகத் தெரியும்.

இப்படியான நடத்தைகளும் துன்புறுத்தல்களும் சுரண்டல்களும் எமது கலாச்சாரம் பண்பாட்டினது ஒரு பகுதி. பண்பாட்டு அடிப்படையில் வரதட்சணை என்பதை நாம் சீர்திருத்தியதில்லை. எமது சமூகம் எந்த விதத்தில் நாகரீகம் அடைந்துள்ளது என்பது கேள்விக்குறி.

இங்கு 'சீதனம்' தொடர்பாக முன்பு வந்த திரியில் கூட பெரும்பாலான ஆண் கருத்தாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். பெரும்பான்மையான பெண் கருத்தாளர்கள் கருத்துக் கூட தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்தார்கள்.

பொதுவாக தங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி எதனையும் பயன்படுத்துவதுதான் எமது குறிக்கோள். புலம் பெயர்ந்து வந்து நல்ல பண்பாட்டை எல்லாம் ஒதுக்கி விட்டு சீதனத்தைக் காவித் திரிவது சுயநலத்திற்காகத்தான். இதை கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதுதான் அதிகம் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், நிழலி!

இப்படியான கணவர்கள், பெரும்பாலும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள்!

எந்த நேரத்திலும், ஒரு பதில் தாக்குதலை, எதிர்நோக்கும் 'திராணி' இல்லாதவர்கள்!

இந்தப் பெண், தனது குழந்தையையும், அழைத்துக் கொண்டு,தனியாகப் போய், வாழ்வது தான் உசிதமானது!

மனைவி, ஒருமுறை, திருப்பியடித்தால், இவர்களால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாது!

மூன்றாவது, தலைமுறையும், இந்த 'நச்சுச் சுழலில்' சிக்கிவிடக்கூடாது எனின், அவள் தனியாகப் போய்த் தனக்கொரு வாழ்க்கையை, அமைத்துக் கொள்வதே, எல்லோருக்கும் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

ப‌கிர்விற்கு ந‌ன்றி நிழ‌லி.

ஏற்க‌ன‌வே சுபேஸ் ஒரு பெண்ணின் க‌தையை இங்கே எழுதிய‌ வேளையில் நான் சொன்ன‌தைத் தான் இப்ப‌வும் சொல்கிறேன் ந‌ம்புகிறேன். பெண்க‌ளை ஆண்க‌ளுக்கு அடிமையாக‌ வைத்திருக்கும் ம‌ர‌பை நாம் பெண்குழ‌ந்தைக‌ளைச் சிறுவ‌ய‌தில் இருந்தே வ‌ள‌ர்க்கும் முறைமையினால் தான் மாற்ற‌ வேண்டும். ந‌ல்ல‌ முறைசார் தொழில் சார் க‌ல்வியும் எப்ப‌வும் தனியாக‌ நிற்க‌க் கூடிய‌ ப‌யிற்சியும் கொடுக்க‌ வேண்டும். இது த‌ன்ன‌‌ம்பிக்கையை ம‌ட்டும‌ல்லாம‌ல் பொருளாதார‌ ப‌ல‌த்தையும் எங்க‌ள் பெண்க‌ளுக்குக் கொடுக்கும். என‌வே இப்ப‌ அப்பாமார்க‌ளாக‌வும்,அம்மாக்களாக‌வும் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் இந்த‌ பெண்கொடுமையை இல்லாதொழிப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பை வைத்திருக்கிறார்க‌ள். Case by case ஆக‌ இத‌ற்கு முடிவு காண்ப‌து இய‌லாத‌ காரிய‌ம். என் குடும்ப‌த்திலும் இப்ப‌டி ஒரு சோக‌க் க‌தை இருக்கிற‌து. கொஞ்ச‌ம் அறிவான‌ என் ச‌கோத‌ரிக‌ளில் ஒருவ‌ரைக் கையெழுத்து ம‌ட்டும் போட‌த் தெரிந்த‌ ஒருவ‌ருக்கு பெரிய‌வ‌ர்க‌ள் சாதி ம‌த‌ம் பார்த்துக் க‌ட்டி வைத்தார்க‌ள். இப்ப‌ வ‌ள‌ர்ந்த‌ பிள்ளையும் உள்ள‌ நிலையில் வீட்டில் ஒவ்வொரு திரும‌ண‌ம் ந‌டை பெறும் போதும் அவ‌ருக்கும் சீத‌ன‌ம் "ரோய‌ல்டி" மாதிரிக் கொடுக்க‌ வேண்டும். ச‌கோத‌ர‌த்தை "விட்டு விட்டு வா நாம் பார்க்கிறோம்" என்று யாரும் சொல்ல‌ முடிய‌வில்லை. குடும்ப‌ மான‌ம், அவ‌ர‌வ‌ர் குடும்ப‌ச் சுமைக‌ள் என்று ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள். எல்லாவ‌ற்றையும் பார்த்துக் கொண்டு வ‌ள‌ரும் பிள்ளை மிக‌வும் ப‌க்குவ‌ப் ப‌ட்டிருக்கிறான் என்று ம‌ட்டும் என‌க்குப் புரிந்த‌து. அவ‌னோடு த‌க‌ப்ப‌னின் பாவ‌ங்க‌ள் க‌ழுவப் ப‌ட்டுப் போய் விடும் என‌ ந‌ம்பிக் கொண்டிருக்கிறோம்!

Edited by Justin

பெண்களின் பல பிரச்சனைகளுக்கு அவர்களேதான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் வெளிஉலகை அறிந்து கொள்வதில் நாட்டம் காட்டுவதில்லை. முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்கு படிக்க, வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் வீட்டிலிருக்கவே அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் ஒரு சிறியவட்டத்திற்குள்ளேயே வாழப் பழகி விடுகிறார்கள். பிள்ளை வளர்ப்பைப் பலர் காரணம் காட்டினாலும் அது சும்மா ஒரு சாக்குப் போக்காகவே இருக்கிறது. நான் அவதானித்தவரையில் வேலைக்குப் போகும் தாய்மாரின் பிள்ளைகளே அதிக உத்வேகத்துடனும் கடின உழைப்புடனும் கல்வி, வேலை போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்கள். தாய் வீட்டிலிருந்து பார்த்த பிள்ளைகள் சாதாரண அளவிலேயே இருக்கிறார்கள். ஒரு பெண், வேலைக்குப் போகும்போது, பல வேலைகளை குறைந்தளவு நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். அதனால் அவரின் ஆற்றல் மேம்படுகிறது. இதனால் அவரது பிள்ளைகளின் ஆற்றலும் மேம்படுகிறது. அதுமட்டுமின்றி, அவர் வேலைக்குப் போவதால், அவ்வேலையிடங்களில் பிள்ளை வளர்ப்பு, பிள்ளைகளின் கல்வி போன்றவற்றை அவரோடு கூட வேலை செய்பவர்களோடு கலந்துரையாடுவதால் அவைகளைப் பற்றிய அறிவும் கூடுகிறது. ஆனால், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இவ்வாறான விடயங்கள் குறிப்பிட்டளவிலேயே தெரிந்திருக்கிறது. வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்கள் எவ்வளவு நேரத்தைத் தங்கள் பிள்ளைகளோடு செலவழிக்கிறார்கள்? அவர்கள் சமையலிலும் வீட்டு வேலைகளிலும்தான் நேரத்தைச் செலவழிக்கிறார்களே தவிர, பிள்ளைகளோடு அல்ல. இவர்களால் ஒரு அளவுக்கு மேல் பிள்ளைகளோடு அளாவளாவவும் முடியாது. இதற்குக் காரணம், அந்தப் பெண்களின் அறியாமையே.

பொருளாதாரத்திற்காக மட்டும்தான் வேலைக்குப் போகவேண்டுமென்பதில்லை. வேலைக்குப் போவதால் பலதரப்பட்ட விடயங்கள் பற்றிய அறிவும் வளரும். பெண்கள் வேலைக்குச் சென்று, அனுபவத்தைப் பெற்றிருந்தால்தான் ஒரு அவசரத்திற்கும் கைகொடுக்கும். பிள்ளை வளர்ப்பிற்காகப் பெண்கள் வீட்டிலிருக்க முடிவெடித்திருந்தாலும் இடைக்கிடை வேலைக்குச் சென்று வருவதே சிறந்தது.

ஜஸ்ரின், நீங்கள் கூறியது போன்று எனது நெருங்கிய உறவினர்களும் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் நாட்டில் மூன்று பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர், இங்கு கனடாவில் ஒரு பெண்பிள்ளையை நன்றாகப் படிப்பித்து வளர்த்திருக்கிறார். இவர்கள் இருவரது பொருளாதாரமும் கல்வியும் எம்மைவிடக் குறைவுதான். ஆனால், மிகவும் தைரியமாகக் கணவர்மாரை விட்டுப் பிரிந்து அவர்களின் எந்தவித உதவியுமின்றி வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன் என்று இந்தக் காலத்தில.. பொண்ணுங்களா. சுத்த நடிப்பு..!

இப்ப பெரும்பாலானவை இப்படித் தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.