Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???

Featured Replies

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா  ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

http://news.tamilstar.com/2012/12/கோயிலுக்கு-நாம்-ஏன்-செல்/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கதையைக் கேட்டால் கோயிலுக்குப் போனாத்தான் எனெர்ஜி  வரும் என்கிறியள். கோவிலுக்குப் போனவை கனபேர் அறிவு மழுங்கிப் போய் உருப்படியான வேலை எதுக்கும் செய்யாமல், பயனற்றவர்களாக வாழ்வதை என் கண்ணால் கண்டுள்ளேன். அவர்களுக்கு எனெர்ஜி அளவுக்கதிகமாக் கிடைச்சிட்டுதோ??? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேம்புளுக்குள்ள இருக்கிற எனேஜி, அதுகளின்ன இம்போர்டன்ஸ்  பற்றி அறிய கனக்க இங்கிலீஷ், டெக்னிகல் வேர்ட்ஸ் தெரியவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் சிரிப்புக்குரிய விளக்கங்கள்.

விஞ்ஞானம் தெரியாதவர்களால் தெரியாதவர்களிட்காக எழுதப்பட்ட கட்டுரை.

எமது சைவக்கோயில்களுடன் மற்றைய மத வழிபாட்டு தலங்களை ஒப்பீடு செய்வது கூட பயன்தரலாம்.

யூத சினகோக்கிகளில் அவரவர் தமது வருமானத்தில் ஒரு வீதத்தை தருகின்றனர். அந்த மத குருமார்கள் வேலை இல்லாதவர்களுக்கு உதவுகின்றனர் இதனால் அவர்கள் சமூகத்தில் நல்ல வேலை செய்பவர்களும் அதிகம்.

  • தொடங்கியவர்
உங்கடை கதையைக் கேட்டால் கோயிலுக்குப் போனாத்தான் எனெர்ஜி  வரும் என்கிறியள். கோவிலுக்குப் போனவை கனபேர் அறிவு மழுங்கிப் போய் உருப்படியான வேலை எதுக்கும் செய்யாமல், பயனற்றவர்களாக வாழ்வதை என் கண்ணால் கண்டுள்ளேன். அவர்களுக்கு எனெர்ஜி அளவுக்கதிகமாக் கிடைச்சிட்டுதோ??? :D

இப்பொழுது உள்ள புலத்துக் கோவில்களில் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம் . ஆனால் இன்றும் " கோவில் "  என்ற இலக்கணம் குறையாத பல கோவில்கள் தாயகத்திலும் , தமிழகத்திலும் உள்ளன . ஒருமுறை 85களில் நான் தஞ்சை ஆவுடையப்பர் கோவிலுக்குச் சென்றபொழுது ஒரு இனம் புரியாத உணர்ச்சியைப் பெற்றேன் . இந்த முறை சுசீந்திரம் சென்ற பொழுதும் அதே உணர்ச்சியைப் பெற்றேன் சுமே . அத்துடன் எமது முன்னோர்கள் அடிமுட்டாள்கள் இல்லை என்பதும் எனது தாழ்மையான கருத்து .

Edited by கோமகன்

கோமகன்;

நான் கோயில் அமைப்பை பற்றி எதுவும் சொல்ல வரவில்லை. ஆனால் எழுதியவர் அளவிற்கு அதிகமாக கலைச்சொற்கள் பாவித்திருக்கிறார், அத்துடன் தேவையற்ற இடங்களுளில் ஆங்கில சொற்களையும் பாவத்திருக்கிறார்.- பயன்பாட்டில் /பாவனையில் நல்ல தமிழ் சொற்கள் இருக்கும் போது . 

சொல்லவந்ததை இன்னும் இலகுவாக சொல்லியிருக்கலாம் என்று நினைத்தேன்

  • தொடங்கியவர்
டேம்புளுக்குள்ள இருக்கிற எனேஜி, அதுகளின்ன இம்போர்டன்ஸ்  பற்றி அறிய கனக்க இங்கிலீஷ், டெக்னிகல் வேர்ட்ஸ் தெரியவேண்டும்

கிக்கி.... கிக்கி ........சரி......... ஆர்வக்கோளாறில பெடி எழுதிப்போட்டுது . விடுங்கோ எரிமலை :D :D .

  • தொடங்கியவர்
மிகவும் சிரிப்புக்குரிய விளக்கங்கள்.

விஞ்ஞானம் தெரியாதவர்களால் தெரியாதவர்களிட்காக எழுதப்பட்ட கட்டுரை.

சரி..........  ஒரு விவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் ,  ஒரு ஆவுடையப்பர் கோவிலைப் போலவோ , ஒரு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவோ அல்லது ஒரு கங்கைகொண்ட சோழபுரம் போலவோ , ஏன் இன்றய சந்ததியினால் தொழில்நுட்பங்கள் பெருகிய இன்றைய காலகட்டத்தில் செய்யமுடியாதுள்ளது றாசி 82 ??

ஏன் கட்டவேண்டும்? உலகில் அரைவாசிக்கும் மேலானவர்கள் பசியும் பட்டினியும் கொண்டு படிக்க உருப்படியான பாடசாலைகளே இல்லாத நேரத்தில் ஏன் பணத்தைக் கொட்டி ஒன்றுக்கும் பிரயோசனமில்லாமல் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டும்?

உங்கள் கருத்தின்படி பார்த்தால் உலகில் வரலாற்றுச் சின்னங்கள் , கலைப்பொக்கிசங்களே இருக்கக்கூடாது என்பீர்கள் போல் உள்ளது . உலகில் அன்றும் இன்றும் ஏழ்மையும் வறுமையும் இருந்ததொன்று . அது இன்றுமட்டும் உலகை ஆட்டிப்படைக்கவில்லை . இதில் விகிதாசாரங்கள் சிறிது வேறுபடலாம் . அன்றய முன்னோர்கள் தங்கள் இனக்குழுமம் சார்ந்த பல சரித்திர சாட்சிகளை எமக்கு விட்டுச்சென்றனர் . அன்றும் அவர்களுக்கு இதே பிரைச்சனைகள் இருந்திருக்கின்றன . ஆனால் அவை இன்று பெறுமதிமிக்கவைகளாக எமது சந்ததிகளால்  பார்கப்படுகின்றது . வருங்கால சந்ததிகளுக்கு நாங்கள் இன்னென்ன காரணிகளால் நாங்கள் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ஒரு கல்வெட்டு எழுதிவிட்டுப் போகலாமா ?? வருகைக்கும் கருத்திற்கும்  நன்றி நிழல் .

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்களை நிலை நிறுத்தவே பிரமாண்டமான கோயில்கள், அரச மாளிகைகள் தேவை. கட்டடக் கலைகளின், சிற்பக் கலைகளின் தரம் மிகவும் வளர்ந்துதான் உள்ளது.  அதற்கென கலையம்சம் நிரம்பிய பல பொதுக் கட்டடங்கள், காட்சியகங்கள் உலகெங்கும் இருக்கின்றன.

கோவில்களைக் கட்டித்தான் வரலாற்றையும், கலைகளையும் பின்னால் வரும் சந்ததிக்கு விட்டுச் செல்லவேண்டிய அவசியம் இன்று இல்லை. மனிதன் குகை ஓவியங்களை படைக்க தொடங்கிய பின்னான வளர்ச்சியடைந்த முறைதான் இது.  இயற்கையாலும் படையெடுப்புகளாலும் இலகுவில் அழிந்திட முடியாமல் பாதுகாக்க கட்டிடக் கலையும் ஓவியமும்  மட்டுமே அன்று இருந்தன. ஆனால் இன்று விஞ்ஞானம் இவற்றை பாதுகாக்க பல நூற்றுக்கணக்கான வசதிகளைத் தந்து இருக்கும் போது மினக்கெட்டு எவரும் பிரமாண்டக் கோவில்களையும் சிலைகளையும் மத வழிபாட்டு தலங்களையும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன் அன்று இருந்த வறுமையின் அளவை விட இன்று இருக்கும் அளவு மிகப் பிரமாண்டமானது. ஒரு பக்கம் அளவுக்கதிகமாக செல்வம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரைச் சென்றடைந்து இருக்க மறுபக்கம் வறுமைக்குரியவர்களின் வளர்ச்சியும், பற்றாக்குறையும் பெருகி வழிகின்றன. இப்படியான நிலையில் பிரயோசனமற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு இனம் அதிக வளத்தை பிரயோகித்தல் ஒரு முட்டாள் சமூகமாகத்தான் மாறிவிடும்.

இன்று வணிக நோக்கங்களுக்காகவும், கலை நிகழ்சிகளுக்காகவும் கட்டப்படும் பல் வடிவ கட்டடங்களே அழகியல் நிரம்பிக் காணப்படுகின்றன. இவையும் நாளைக்கு இன்றைய கலை வளர்ச்சியை உலகுக்கு எடுத்துச் சொல்லும்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே.................என்ற வாக்கியம் கூட உண்மையான தத்துவத்தை ,பேருண்மையை கூறி நிற்கிறது ....................மனிதனின் மாண்பும் ,அவன் அன்பும் ,அவன் இரக்கமும் இல்லாத சமூகத்திலிருந்து நீ விலகி வாழ் என்ற அர்த்தமே உள்ளடங்கியுள்ளது ...................இது எனது கருத்து மட்டுமே ....நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
கோயில் என்பது ஒரு மன அமைதிக்கான இட‌ம்...ஜயரும்,பிராமணரும் காசை தேடி அலைபவர்களாக இருக்கலாம்[அவர்களும் மனிசர் தானே!]...கோயில்கள் மூலம் தான் கலை,பண்பாட்டை,கலாச்சார‌த்தை கட்டிக் காக்க முடிகிறது...கட‌வுள் நம்பிக்கை இருக்கிறது/இல்லை என்பது வேறு விட‌யம் ஆனால் கோயில் என்பது ஒவ்வொருத்தர் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த விட‌யம்
 
ரதி,

கோவில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. கோமகன் கேட்டு இருந்தார் ஒரு ஆவுடையப்பர் கோவிலைப் போலவோ , ஒரு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவோ அல்லது ஒரு கங்கைகொண்ட சோழபுரம் போலவோ  ஏன் இப்ப கட்டுவதில்லை என்று; அதற்குத்தான் பதில்.

அத்துடன், கோவில் போனால் மன நிம்மதி அடையும் என்பதையும் ஏற்பதுக்கு கடினமாக இருக்கு. கோவிலுக்கு போய் மேலும் Stress இனைக் கூட்டிக் கொள்கின்றவர்களைத் தான் அதிகம் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்துடன், கோவில் போனால் மன நிம்மதி அடையும் என்பதையும் ஏற்பதுக்கு கடினமாக இருக்கு. கோவிலுக்கு போய் மேலும் Stress இனைக் கூட்டிக் கொள்கின்றவர்களைத் தான் அதிகம் பார்க்கின்றேன்.

வணக்கம் நிழலி அண்ணா,

மேற்கூறியதற்குக் காரணமும் மனிதன் தான், Globalization ற்குப் பிறகு தான், சேவைகள் கூட வியாபாரமாக்கப்பட்டது. விற்கவும்,வாங்கவும், விற்கப்படவும், வாங்கப்படவும் வேண்டிய ஏதுநிலையை இந்த முதாலிளித்துவ சமூகம் திணித்துள்ளது. ஜம்பது பவுண் நகையும்,ஆடம்பர வேட்டி சேலையும் கட்டிக்கொண்டுதான் கோவிலுக்கோ,பள்ளிவாசலுக்கோ, சேர்ச்சுக்கோ வரவேண்டும் என்று எந்த சமயமும் சொன்னதில்லை ஆனால் மனிதன் தன்னை நாகரீகமடைந்தவனாக காட்டிக்கொள்ளவும், தன்னுடைய பவுசைகாட்டவும் இப்படி செய்தானே தவிர கோவில்களில் குற்றம் சொல்வதில் என்ன நியாயம்?

அய்யருக்கு தெட்சணை குடுத்தால் தான் சாமி தரிசனம் செய்யலாம் என்று அய்யரும் சொன்னதில்லை கடவுளும் சொன்னதில்லை ஆனால் இதைக்குடுத்தவன் தான் அய்யரையும்,கடவுளையும் விலை பேசுகிறான். ஒருத்தன் குடுத்ததால் கேட்குறான், அவன் குடுக்குறான் நானும் குடுத்தால் தான் கடவுளை கும்பிடலாம் போல என்ற நிலையை ஏழையிடம் உருவாக்கிறான். மனிதன் தன் சுயநலங்களை அரங்கேற்றும் பலிபீடங்களாய் கோவிலை மாற்றினான் என்பதே உண்மை. ஆனால் இன்றும் பலரின் பசியை இப்படியான கோவில்கள் தான் போக்குகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

  • தொடங்கியவர்
அதிகாரங்களை நிலை நிறுத்தவே பிரமாண்டமான கோயில்கள், அரச மாளிகைகள் தேவை. கட்டடக் கலைகளின், சிற்பக் கலைகளின் தரம் மிகவும் வளர்ந்துதான் உள்ளது.  அதற்கென கலையம்சம் நிரம்பிய பல பொதுக் கட்டடங்கள், காட்சியகங்கள் உலகெங்கும் இருக்கின்றன.

அன்றைய அதிகாரம் அரசனிடமும் கோயில்களிலும் இருந்தது உண்மை . ஆனால் , இன்றைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் கலைவடிவங்களைப் பேணிப்பாதுகாத்தா ?? பாபிலோனிய நாகரீகத்தின் எச்சசொச்சங்கள் இந்த அதிகாரங்களால் துடைத்து எறியப்பட்டதையும் வரலாறு கண்டது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் சில கோயில்களுக்குச் சென்றபோது இனம்புரியாத ஒரு புத்துணர்ச்சியை அனுபவித்திருக்கிறேன். திருச்சி அருகே உள்ள திருவாசி அதில் ஒன்று. போனால்தான் தெரியும். விளக்குவது கடினம். :unsure:

தமிழகத்தில் சில கோயில்களுக்குச் சென்றபோது இனம்புரியாத ஒரு புத்துணர்ச்சியை அனுபவித்திருக்கிறேன். திருச்சி அருகே உள்ள திருவாசி அதில் ஒன்று. போனால்தான் தெரியும். விளக்குவது கடினம். :unsure:

 என் வீட்டு வைரவர் கோவில் & ஊர்க் கோவில்களில் இருக்கும் புத்துணர்ச்சி வேறு எந்த கோவிலிலும் வந்தில்லை

தமிழர்களின் வரலாறையும் கோயில்களையும் பிரிப்பது நடமுறைக்கு பொருந்தாது. எமது இருப்பும் இழப்பும் ஆக்கமும் அழிவும் இதற்குள்ளாகவே பெருமளவு புதையுண்டு கிடக்கின்றது. காலச் சுழற்ச்சியில் சமயப்போர்கள் நீண்ட வரலாற்றை தன்னகத்தே வைத்திருக்கின்றது. சைவமும் நவீனசைவமும் முரண்பட்டதன் விழைவிலேயே சைவம் இந்துவாக மாறியதும் நவீனசைவம் பெரியாரியமாக மாறியதும் நடந்தது. காலத்துக்கேற்ப திருந்த மறுத்த இனம். தனது சொத்துக்களை பேணவோ புனரமைக்கவோ மறுத்த இனம். எல்லாம் கைமீறிப்போய்விட்டநிலையில் இன்று நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
கோவிலுக்கு ஏன் போக வேண்டும்?

அது,அந்தந்த வயதைப் பொறுத்தது! :D

  • கருத்துக்கள உறவுகள்
அன்றைய அதிகாரம் அரசனிடமும் கோயில்களிலும் இருந்தது உண்மை . ஆனால் , இன்றைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் கலைவடிவங்களைப் பேணிப்பாதுகாத்தா ?? பாபிலோனிய நாகரீகத்தின் எச்சசொச்சங்கள் இந்த அதிகாரங்களால் துடைத்து எறியப்பட்டதையும் வரலாறு கண்டது .

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக வழியில் ஆட்சி செய்யும் அரசுகள் கலைகளை வளர்க்க குறிப்பிட்டளவு நிதிகளை ஒதுக்குகின்றன. எனினும் வரலாற்றை அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்கு ஏற்ப புனைவதைத் தடுப்பதற்கு ஆதாரமாக உள்ளவற்றை அழிக்கும் ஜனநாயமற்ற செயற்பாடுகளை இலங்கையில் புலிகளின் சின்னங்களை அழித்த சிங்கள இனவெறி அரசுமுதல், ஆப்கானிஸ்தானில் புத்தரின் பிரமாண்டமான உருவத் தோற்றங்களை அழித்த தலிபான்கள் வரை காணலாம்.

பிரமாண்டமான கோயில்கள், மத வழிபாட்டுத்தலங்கள் கலையம்சத்துடன் இருந்தாலும், அவற்றுக்கான தேவைகள் அதிகாரத்தையும், செல்வக்கொழிப்பையும் நிலைநிறுத்தவே என்பதே எனது கருத்து.

கோயில்கள் தமிழர்களோடு பின்னிப் பிணைந்தவை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, அவை எளிமையாக இருக்கும்போதுதான் புனிதத்தை உணரமுடிகின்றது என்பதையும் கவனிக்கவேண்டும். உதாரணத்திற்கு இலண்டன் நீஸ்டனில் இருக்கும் கலையம்சம் நிரம்பிய ஸ்ரீ ஸ்வாமி நாராயணன் மந்திரைவிட வேல்ஸ் பகுதியில் எளிமையாக இருக்கும் முருகன் கோயில் பல பக்தர்களுக்குப் பிடிக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.