Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கோபம் : நடுங்கிய விருதுக்குழு

Featured Replies

இளையராஜாவுக்கும்  ரகுமானுக்கும் உள்ள வித்தியாசமாக நான் நான் கேள்விப்பட்டது


இளையராஜா - Music director; இசை இயக்குனர்(அமைப்பாளர்)
ரகுமான் - Music Composer / Music arranger; இசை தொகுப்பாளர்

இளையராஜா எப்படி இசைக்க வேண்டும் என்று எழுதி கொடுத்து(musical notes or musical tunes)  விடுவாராம். ஆகையால் இங்கே இசைப்பவருக்கு(புல்லாங்குழல் வாசிப்பவர், கீபோர்டு வாசிப்பவர்...) புதிதாக யோசிக்க ஒன்றுமில்லை. அவர் கொடுத்த குறிப்புகளின்படி வாசிக்க வேண்டியதுதான்.

ரகுமான் இசை அப்படி இல்லை. அவர் ஒவ்வொரு இசையையும் வாசிக்க கேட்டு பின்னர் அதை சரிசெய்து இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒழுங்குபடுத்துவார். இதில் ஒவ்வொரு இசைக் கலைஞரும் தன்னுடைய முழு கற்பனைகளையும் வெளிப்படுத்த இடம் உண்டு. இப்பொழுது உள்ள இசை அமைப்பவர்கள் எல்லோரும் இதைத்தான் கடை பிடிக்கிறார்கள்.

முன்பு பாகவதர் இசையை போற்றிப் புகழாதவர்கள் யாரும் கிடையாது. அடுத்து வந்தவர்கள் எம்.எஸ்.விசுவநாதன்  இசையை விரும்பி கேட்டார்கள். பின்பு இளையராஜா. இப்பொழுது ரகுமான், ஹரீஸ் ஜெயராஜ், யுவன் இப்படி.. இது தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறைக்கு ஏற்றவாறு இசை மாறி மாறிப் பயணித்துக் கொண்டே இருக்கும். ஆகையால் ஒருவரை மற்றொருவருடன்

ஒப்பிடுவது என்பது எப்பொழுதும் ஆகாது... ஆகாது..

 

நாம் வாழும் காலத்தில் இரண்டு இசைமேதைகள் அவர்கள் இருவரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள் என்று பெருமைப்படுங்கள். :)
 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • Replies 71
  • Views 6.5k
  • Created
  • Last Reply

வணக்கம் இளம்பிறையன், atonk ,இசைக்கலைஞன் . மற்றும் இந்த திரியில் வந்த அனைத்து உறவுகளுக்கும் . இசை அமைக்கும் பணியில் சொட்டு நீரளவு அனுபவம் எனக்கு உள்ளது என்ற வகையில் இந்த திரிக்குள் மூக்கை நுழைக்கிறேன் .ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் .உண்மையில் .இசைஜானி இளையராஜாவும் .இசைப்புயல் ரகுமானும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இளம்பிறையின் கருத்தில் கூறப்பட்டது போல் அமைப்பாளர், தொகுப்பாளர் என்ற பதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அன்று தொழில் நுட்பங்கள் குறைந்த காலத்தில் ,அன்று உள்ள சூழலுக்கு ஏற்றவாறு இசை அமைப்புகள் நடை பெற்றது .[மிகவும் சவாலான முயற்சி] இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வேறு சூழலில் நடை பெறுகிறது. [மிகவும் சுலபமானது ] ஆனால் இந்த இரண்டு வழிகளிலும் ஒரு பாடலை, அல்லது இசை முயற்சியை செய்வதற்கு அவருக்கு ஒரு தகுதி வேண்டும் .அதாவது இசை அமைப்பாளர் [இசை தெரிந்தவர் எல்லோரும் ஒரு பாடலை அமைக்க முடியாது] இந்த மென்பொருள் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாவிட்டால் ரகுமான் கூட பழைய முறையிலேயே இசை அமைத்திருப்பார்.அதுவும் அவரால் முடியும். என் இன்று இளையராஜா கூட புதிய தொழில்நுட்ப முறையிலேயே இசை அமைக்கிறார் .ஆகவே இந்த புதிய தொழில் நுட்பம் வந்ததினால் சோர்ந்துபோய் ,சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் வாடிப்போய் இருந்த பல புதிய இசை அமைப்பாளர்களுக்கு அது மாபெரும் பாக்கியமாய் அமைந்தது என்பது உண்மையிலும் .உண்மை .ஏனனில் ஓரிரு படைப்பாளர்களுடன் சிறந்த ஓர் இசையை வழங்கமுடியும் ,சந்தர்ப்பங்கள் அமையும் ,............நான் கூறுவது இசை சம்பந்தமாகவே .அந்த மாபெரும் மேதைகளின் குணா அம்சங்களை எள்ளளவும் கதைக்கவில்லை ,அந்த தகுதியும் எனக்கில்லை .நன்றி

Edited by தமிழ்சூரியன்

உங்க கருத்தை வரவேற்கிறேன், இன்று 46 அகவையை கொண்டாடும் றஹ்மானுக்கு நல் வாழ்த்து சொல்வோமா?!!!

 

நிச்சயமாக....

ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

 

இந்த மென்பொருள் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாவிட்டால் ரகுமான் கூட பழைய முறையிலேயே இசை அமைத்திருப்பார்.அதுவும் அவரால் முடியும்.

 

 

இவ்வாறு நானும் யோசித்திருக்கிறேன். :)

 

என்னை பொறுத்தவரை இருவருமே நல்ல இசையமைப்பாளர்கள். எனக்கு ரகுமானின் இசை பிடித்திருந்தாலும் பல பாடல்களில் பாடல் வரிகள் பிடிப்பதில்லை. பாடல் வரிகள் நன்றாக அமைந்திருந்தால் சிலவேளை அன்றைய கால மக்களுக்கும் அவர் பாடல்கள் பிடித்திருக்கும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இளைய ராஜா விருதை நிராகரித்தது தவறில்லை. ஏனெனில் இளைய ராஜா ஒரு தன்னிகரற்ற  கலைஞன். நேர்மையாக உள்ளதைக் கூறாமல் பொய் கூறி ஒருவரை அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே. அவரவர்களுக்குரியது அவரவர்களுக்கு ஏற்ற இடத்தில் வைத்து வழங்கப்படுவதுதான் அவர்களுக்கு சிறப்பைக் கொடுக்குமே தவிர, பத்தோடு பதினொன்றாக அவர்களை எண்ணுவது தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்,

ரகுமான் ஒரு திறமையாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் என்ன திறமை என்பதில்தான் வேறுபாடு உள்ளது.

இளையராஜாவின் திறமைகளைப் பட்டியலிட்டால்,

1) இயக்குநர் முன்னே எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மெட்டுக்களைத் தந்தபடியே இருப்பார். இது ஒரு வரமே அன்று, பயிற்சியினால் பெற முடியாதது.

2) எந்த வித வாத்தியத்தின் உதவியும் இன்றி, மனதில் இசைக்குறிப்புகளை இசைமொழியில் எழுதக் கூடியவர். வேறு எந்த இசையமைப்பாளரினாலும் இது முடியாதது. இசைத்துறையில் உள்ள உங்களால் நிச்சயம் இதன் கடினத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

3) பாடலின் பின்னணியில் வரும் இசையை துல்லியமாக அமைக்கக்கூடியவர்.

ரகுமானின் பலத்தைக் கணக்கிட்டால்,

1) இசை ஒலிப்பதிவின் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியவர்.
2) கணினிப் பயன்பாட்டை அதிகரித்தவர்.
3) அயராத உழைப்பைக் கொடுப்பவர். பாடலைச் செதுக்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்பவர். திருப்தி கிடைக்கும்வரை விடமாட்டார்.

ஆக, இருவரின் பலமும், பலவீனமும் வேறு வேறு. இரண்டுக்கும் ஒரு ஒப்பீடும் கிடையாது.

தனிப்பட்ட ரீதியில் இளையராஜாவின் இசைத்திறன் எனக்குப் பிடிப்பதற்குக் காரணம் சுயம்பு போன்ற அவரது இசை உருவாக்கம். இயக்குனரின் கண்களின் முன்பே எல்லாவற்றையும் நடத்திக் காட்டுபவர். இன்று உள்ள இசையமைப்பாளர்கள் மெட்டை ஈமெயிலில் அனுப்புகிறார்கள். அந்த மெட்டுக்கள் எப்படி உருவாகின்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். :D

நான் கனடாவுக்கு வந்த புதிதில், ஒரு தளபாட உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அலுவலகங்களுக்குத் தேவையான மேசைகளை நானே செய்வேன். அப்போது நானும் ஒரு தச்சன். :D

இது சாத்தியமாகக் காரணம் யாரோ புண்ணியவான்கள் பல இயந்திரங்களை வடிவமைத்து நிர்மாணித்திருந்தார்கள். எனது வேலை பலகைகளை உள்ளே விடுவது. அது மேசையின் அளவுக்கு வெட்டி, துளைகள் போடும். கால்கள் செய்யும். ஆக, நான் செய்த தள‌பாடங்கள் பல அலுவலகங்களில் இருக்கும். இதனால் நான் பெருமைப்பட முடியுமா? :rolleyes:

அதே நேரத்தில், ஊரில் இன்றும் மேசைகளைக் கையால் செதுக்கிச் செய்கிறார்கள். நிச்சயம் அது அவர்களின் கைவண்ணம் என்று பெருமைப்பட முடியும். :rolleyes:

நவீனகால இசை நான் மேசை செய்தது போன்றது. முன்னவர்களின் இசை அவர்கள் தங்கள் கைகளால் செதுக்கியது.

 

இசை, நீங்க கூறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது :o  ஏதோ றஹ்மான் எல்லாவற்றையும் கணனியில் செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீங்க! ஒரு பாடலுக்கான மெட்டை கணனி அமைப்பதில்லை றஹ்மானின் உள்ளத்தில் இருந்து வரும் மெட்டுக்களே, றஹ்மான் தன்னுடன் வேலை செய்யும் கலைஞர்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து அவர்களை வாசிக்க விட்டு அதில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்கிறார்! ரஹ்மான் இசையமையத்த பாடல் இறுவட்டில்  தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்களின் பெயரையும் இணைத்து இருப்பார்,இசைஞானி அப்படி இல்லை!!! :icon_idea:

   

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ராஜா.. இதற்கு முன் ஒரு கருத்திலும் சொன்னேன்.. ரகுமானின் பாடல்கள் ஒரு கூட்டு முயற்சி என்று. மேடை நிகழ்ச்சிகளிலும் "நாங்கள் இந்தப் பாடலைச் செய்தோம்" ( We did this song) என்றுதான் கூறுவார். அதனால் அவர் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களையும் போடுவது நியாயமானதே..

ஆனால் இளையராஜா அப்படியல்ல. ஒரு பாடலின் 100 வீதமான படைப்பும் அவருடையதே. அதனால் அவர் வேறு யாருடைய பெயர்களையும் போடுவதில்லை.

மற்றும்படி, மெட்டுக்களை ரகுமான் கணினி மூலம் பெற்றுக்கொள்கிறாரா, அல்லது சுயமாகவா, அல்லது இரண்டினதும் கலவையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மெட்டுக்களை ஈமெயிலில்தான் அனுப்புகிறார். அதனால் நேரடியாக‌ உள்ளத்தில் இருந்து வருவது என்பதை நம்பமுடியவில்லை. அப்படியானால், இத்தனை வருடங்களில் ஒரு இயக்குநராவது அதைப்பற்றிச் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் ரகுமான் நல்ல ரசனை கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
இளைய ராஜா விருதை நிராகரித்தது தவறில்லை. ஏனெனில் இளைய ராஜா ஒரு தன்னிகரற்ற  கலைஞன். நேர்மையாக உள்ளதைக் கூறாமல் பொய் கூறி ஒருவரை அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே. அவரவர்களுக்குரியது அவரவர்களுக்கு ஏற்ற இடத்தில் வைத்து வழங்கப்படுவதுதான் அவர்களுக்கு சிறப்பைக் கொடுக்குமே தவிர, பத்தோடு பதினொன்றாக அவர்களை எண்ணுவது தவறுதான்.

 

விருதுக்காக இசை அமைப்பதில்லை என்று சொல்லும் இளையராஜா அப்புறம் எதற்கு அவரின் வரவை கெளரவப்படுத்த அளிக்கும் பரிசை... எனக்கு 10 தோட 11 விருது தாறத்துக்கு நீ யார் என்று கேட்ப்பான்..???!

 

1000 ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் போது அந்த உணவை உண்ணாமல்.. உணவளிப்பவர் கோட்டலில் இருந்து பிரியாணி எடுத்துத் தந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பது நீதியா.. தர்மமா..??!

 

இளையராஜாவிடம் இசைத்திறமை இருக்கலாம். ஆனால் ஒரு பொதுப் பண்புள்ள மனது அவரிடம் இருப்பதாக இல்லை. ஈகோ அதிகம் அவருக்கு..! அதுதான் பிரச்சனை. :)

இசை, நீங்க  நன்றாக நகைச்சுவையாய் எழுதுறீங்க! மின்னஞ்சலை றஹ்மான் தானே அனுப்புகிறார்! அது மின்னஞ்சல் தானே தயாரித்த மெட்டல்லவே!!! இசைஞானி  ஏன் அந்த பாடலுக்கு பணியாற்றியவர்கள் பெயர்களை போடவேண்டும் என்று நினைப்பவர்! ஒருவன் தன்னிடம் வாத்தியக்கருவியை வாசிப்பவராக பணியாற்றும்போது அவர்  பெயரை கூறாது!  அப்பாடலுக்கு பணியாற்றியதற்காக பணம் குடுத்த படியால் அது எல்லாம் நான் தான் செய்தேன் எனும் மமதையில் இருந்து அதற்கு உரிமை கொண்டாடுவதையும்  எப்படி ஏற்க முடியும்! 

  • கருத்துக்கள உறவுகள்

One more opportunity knocked my door, drive my cousin to Panchathan Inn recording studio. It was a late night recording at 11.00pm, the studio had undergone changes, and close to the studio entrance there was a new waiting room. I was asked to sit in that room. Whenever someone opened the door I was able to listen to the track in a very low volume. I heard orchestral hits, tight drum grooves and vocals with lot of reverb.

After 15 minutes or so, suddenly Mr. Viramuthu walked out from the studio. I stood up, he asked me to sit. He then took the seat next to me, my lucky star shines again and I am now sitting next to the Iconic lyric writer from Tamil Nadu. He then asked me in English “Are you Anu’S brother?” I nodded my head and then he asked are you from Delhi, for which I replied in a low voice, “தமிழ்ல பேசலாம் சார்” [i can talk in Tamil Sir], then I had some guts to talk and congratulated him for all the songs he penned right from late 70’s till now. With a grin he nodded his head and then went back inside. One more time an opportunity to hear the tight drum grooves and vocals with lot of reverb.

After about 30 minutes, door opens and no audio bleed this time and I see few walking out, I spot A.R. Rahman in the middle, and to my surprise he said “HI” “How Are You?” I said I am fine. He then started talking to Viramuthu and I still remember, ARR was saying to Viramuthu that he should be calling “Hariharnan” as he has been missing his calls. I was watching this all with amazement. You might wonder what is so amazing about it, true but for a 23 year old watching 2 giants of Tamil Cinema speak is nothing but amazement.

Then someone walks near ARR and whispers something, ARR goes inside. That “somebody” was Noel James working at the Studio and ARR’s long time buddy. Noel requested me to join him in the reception, he told me director would be here anytime and he might not like anyone being around. In the reception as though we were long time friends, Noel and I had a long discussion about music, keyboard etc. We spoke about Pink Floyd to Phil Collins to Whitney Houston and a lot about new keyboards. I still remember that evening conversation. We even started refereeing ARR as “our man” and I did get to know few little things about ARR’s work flow. At around 1.00am I had the presence of mind to get Noel’s phone number.

Tamil film music has tracks that are remembered just for its uniqueness. “முத்து குளிக்க வரீர்களா”, “நின்னுக்கோரி வர்ணம்” are few examples. The song that was recorded that night was in the same league -> “Konjam Nilavu” Movie: “Thiruda Thiruda” directed by Mani Rathnam.

The song was all about A.R. Rahman’s rich music, Anupama’s dominant vocals and P.C. Sriram’s camera work. Later when the movie came out the rumor was that PC would use state of the art devices like akelaa cranes for the filming the song. Honestly I am yet to see a singer who could reproduce this song with perfection. The song format was western – verses and chorus. The chorus lines [male vocals] were done by Noel James. I was able to spot familiar sounds from Korg M1/O1W keyboards. Apart from the songs, the uncelebrated feature of the “Thiruda Thiruda” was Rahman’s Background music. The background score by Rahman was well above his all previous movies. For example the French horn theme sounds in Sivaji; Rahman had composed similar stuff way back for Thiruda Thiruda. This movie generated a lot of expectations in me and I was waiting eagerly for its Audio launch.

courtesy SrikanthD

வணக்கம் இசை 
நீங்கள் எப்படி கணனியில் இசையை உருவாக்குகிறார்கள் என்று நீண்ட விளக்கம் கொடுத்து இருந்தீர்கள் . மேலே உள்ள பத்திகளில் சிவப்பாக நான் அடையாள படுத்தியிருக்கும் கருவி பற்றி உங்களுக்கு சில வேளைகளில் 

தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால்  இதனை பற்றி வாசித்துப்பாருங்கள்  

http://en.wikipedia.org/wiki/Korg_01/W

இதனை கணணி மூலம் இயக்கமுடியாது ஆனால் ஏற்கனவே உருவாக்கிய இசையமைப்பை சேமித்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆகவே அந்த இசையமைப்பும் ஏற்கனவே இசையமைக்கப்பட்டிருக்க வேண்டும் 

கணனியில் Loops, Pitch-bend,auto time and tempo adjust,render music,mute and invert channels, enveloping, channels swap, time stamp,auto grove  இப்படியான நகாசு வேலைகள் எனக்கும் தெரியும். 

A.R Rahman's சிறப்பான இசையமைப்பான ரோஜா படத்தில் எந்த கணணியும் இசையமைக்க உதவவில்லை என்பதற்கு இது சாட்சி. தற்போது அவர் கணணிகளை பாவிக்கலாம் 

ஆனால் அவர் பிரபல்யம் அடைந்த போதில் அவர் தொழிநுட்பம் கூடிய இசைக்கருவிகளை  உபயோகித்தார் அன்றி கணணிகளை அல்ல .

இக்கருத்தை அவர் முற்றுமுழுதான கணணி இசையமைப்பாளர்/composer எனும் கருத்துகள் அதிகரித்ததனாலேயே  எழுதுகிறேன் அன்றி 

இசைஞானியுடன் ஒப்பிடவல்ல .....ஆனால் ஒன்று நெற்றிக்கண் திறப்பினும் இசைஞானி செய்தது குற்றமே  

Edited by Atonk

  • தொடங்கியவர்

குமுதமில் இளையராஜாவை கேளுங்கள் என்கிற பகுதி தொடராக வெளியாகிவருகிறது. 

இந்தவார இதழில் சாருவின் விமர்சனங்கள் குறித்து வாசகர் ஒருவருடைய கேள்விக்கு மிக காட்டமான ஒரு பதிலை அளித்துள்ளார் ராஜாசார்.

***

குமுதத்தில் வந்த கேள்வி பதில் -

சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?

“ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

***

இந்த பதிலை படித்த போது நிறையவே அதிர்ச்சியாக இருந்தது. ராஜாசார் எப்போதும் தன்னை ஆன்மீக குருவாகவும், அமைதியின் வடிவாகவுமே முன்னிறுத்தி கொள்பவர். ஆனால் அவருடைய பதிலிலோ ஒருவித ஆணவமும் அகந்தையும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. 

ஏதோ எஸ்பிபி கூட ராஜாசாரை பெயரை உபயோகித்து புகழ்தேட முனைந்ததாக குறிப்பிடுகிறார். அவருடைய பாடல்களை பாடி பிழைப்பு நடத்துவதாக இசைக்குழுக்களை பற்றி சொல்கிறார். அவருடைய பெயரை பயன்படுத்தி பலரும் புகழ்தேடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார். உண்மையில் கடைசியாக இளையராஜா இசையமைத்து சூப்பர் ஹிட்டான படம் எதுவென்று கடந்த பத்தாண்டுகளில் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசியாக அவருடைய பெயரை முன்னிறுத்தி வெளியிடப்பட்ட அஜந்தா என்கிற படம் அரை நாள் கூட தியேட்டர்களில் நிற்கவில்லை. 

எனக்கும் ராஜாவின் இசை பிடிக்கும்தான் என்றாலும், ஒரு எழுத்தாளன் விமர்சகன் இன்னொரு படைப்பை முன்வைத்து தன்னுடைய விமர்சனத்தை ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறான். அதை ராஜா படித்தாரா என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் ஏதோ தன்னைப்பற்றி எழுதிதான் அவர் புகழ்தேட நினைக்கிறார் என்பது போல எழுதுவது நிச்சயம் தவறானது. சாருவின் மீது அநேக விமர்சனங்கள் இருந்தாலும் இதை ஏற்க முடியாது.

 

 Athisha Vino

இசை, நீங்க  நன்றாக நகைச்சுவையாய் எழுதுறீங்க! மின்னஞ்சலை றஹ்மான் தானே அனுப்புகிறார்! அது மின்னஞ்சல் தானே தயாரித்த மெட்டல்லவே!!! இசைஞானி  ஏன் அந்த பாடலுக்கு பணியாற்றியவர்கள் பெயர்களை போடவேண்டும் என்று நினைப்பவர்! ஒருவன் தன்னிடம் வாத்தியக்கருவியை வாசிப்பவராக பணியாற்றும்போது அவர்  பெயரை கூறாது!  அப்பாடலுக்கு பணியாற்றியதற்காக பணம் குடுத்த படியால் அது எல்லாம் நான் தான் செய்தேன் எனும் மமதையில் இருந்து அதற்கு உரிமை கொண்டாடுவதையும்  எப்படி ஏற்க முடியும்! 

 

நல்ல ரசனை.  வேண்டாம் அழுதுடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை, நீங்க  நன்றாக நகைச்சுவையாய் எழுதுறீங்க! மின்னஞ்சலை றஹ்மான் தானே அனுப்புகிறார்! அது மின்னஞ்சல் தானே தயாரித்த மெட்டல்லவே!!! இசைஞானி  ஏன் அந்த பாடலுக்கு பணியாற்றியவர்கள் பெயர்களை போடவேண்டும் என்று நினைப்பவர்! ஒருவன் தன்னிடம் வாத்தியக்கருவியை வாசிப்பவராக பணியாற்றும்போது அவர்  பெயரை கூறாது!  அப்பாடலுக்கு பணியாற்றியதற்காக பணம் குடுத்த படியால் அது எல்லாம் நான் தான் செய்தேன் எனும் மமதையில் இருந்து அதற்கு உரிமை கொண்டாடுவதையும்  எப்படி ஏற்க முடியும்! 

 

ராஜா,

வாத்தியக்காரரின் பெயர்களைப் போடுவது என்றுமே மரபாக இருந்ததில்லை. உதாரணமாக, எங்கே நிம்மதி பாடலில் நூறு வாத்தியக்கலைஞர்கள் வாசித்தார்கள் எனப் படித்திருக்கிறோம். அந்த நூறுபேரின் பெயர்களையுமா போடமுடியும்? :unsure:

ரகுமான் சில பெயர்களைப் போடுவதற்குக் காரணம் வேறு. இடம்பெறும் அந்தப் பெயர்களுக்குச் சொந்தக்காரர்களே அந்த இசையின் சிலபகுதிகளை உருவாக்கியவர்களாக இருப்பார்கள். ஆகவே ரகுமான் அவர்களது பெயர்களைப் போடுவது முறைதானே.?

இந்தக் காரணத்துக்காக இளையராஜாவுக்கு மமதை என்றால் எம்.ஏஸ்.விக்கும் மமதைதான். கே.வி. மகாதேவனுக்கும் மமதைதான்.

மற்றது மின்னஞ்சலில் அனுப்புவது பற்றியது. அதை எவ்வாறு அவர் உருவாக்குகிறார் என்பது தெரியாது. அதேபோல ஜி.வி. பிரகாஷ் எப்படி உருவாக்குகிறார் என்றும் தெரியாது. :D யுவன் எப்படி உருவாக்குகிறார் என்றும் தெரியாது. கவுண்டமணி சைக்கிள் றிம்மை தட்டித் தட்டி நேராக்குவதுபோல் இரவு பகலாக மூளையைக் கசக்கி உருவாக்குகிறார்களோ என்பது என் ஐயம். :D வெளிப்படைத்தன்மை இவர்களில் இல்லாததால் என்னால் இவர்களின் வேலைத்திறன்களை நம்பமுடியவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி

இவ்வளவுக்கு நீண்டு போகுதா??

 

எம்.ஏஸ்.வியையும்

 

 கே.வி. மகாதேவனையும் எவருடனுமே ஒப்பிடமுடியாது.

 

(ஏதோ நம்மால  முடிந்ததுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.....) :lol:

இன்னரும் அதிகமாகவே தக்கவைத்திருக்கலாம் சினிமா என்ற மோகத்திற்குள் முழுகி இருக்காது விட்டிருந்தால்.

ஆம் இப்படி கூறுபவர்கள் தமிழகத்தில் அரசியலில் நிறையவே உண்டு. அதனால் தான் தமிழகம் இன்று தமிழர்களுக்காக எதுவுமே செய்யமுடியாத நிலையில் உள்ளது.

 

  செயலாளர் நாயகம் போன்ற எங்களுக்குள் உள்ள அழுக்குகளை மட்டுமே கண்டு கொண்டு வாழ்த்தும் ஆளேச்சே  நீங்கள். உங்களுக்கு எங்கள் கலை பற்றியோ இல்லை கலாச்சாரம் பற்றிய முதலைக்கண்ணீர் கூட வராது!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114485#entry846413

 

வாழ்த்துவது வேறு மறைமுகமாய் ஒன்றாய் இயங்குவது வேறு. டக்ளஸ் வெளிப்படையான அழுக்கு ஆனால் அழுக்குகளின் சுயரூபங்கள் வெள்ளை வேட்டிசட்டையுடன் தேசீயம் பேசுவதை விட டக்ளஸ் மோசமானவர் இல்லை. கடந்த நவம்பரில் கனடாவில் நடக்க இருந்த இளையராஜா இசைநிகழ்சியை குழப்புவதில் தாங்கள் முன்வைத்த கருத்திலேயே தங்களை நன்கு அறிவோம்.

 

 

 

 

 

 

நான் கனடாவுக்கு வந்த புதிதில், ஒரு தளபாட உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அலுவலகங்களுக்குத் தேவையான மேசைகளை நானே செய்வேன். அப்போது நானும் ஒரு தச்சன்.

இது சாத்தியமாகக் காரணம் யாரோ புண்ணியவான்கள் பல இயந்திரங்களை வடிவமைத்து நிர்மாணித்திருந்தார்கள். எனது வேலை பலகைகளை உள்ளே விடுவது. அது மேசையின் அளவுக்கு வெட்டி, துளைகள் போடும். கால்கள் செய்யும். ஆக, நான் செய்த தள‌பாடங்கள் பல அலுவலகங்களில் இருக்கும். இதனால் நான் பெருமைப்பட முடியுமா?

நவீனகால இசை நான் மேசை செய்தது போன்றது. முன்னவர்களின் இசை அவர்கள் தங்கள் கைகளால் செதுக்கியது.

 

 ஆகா என்னொரு அற்புதமான விளக்கம். இதன் பின் எனக்கு கூற ஒன்றுமில்லை யுவராணர் :D . நான் இந்த வழக்கில் இருந்து துண்டை காணோம் ,துணியை காணோம் என்று ஒதுங்குகிறேன் யுவராணர். :D

 

அப்படியே பணம் அச்சிடும் நவீன இயந்திரம் யாராவது புண்ணியவானாக கண்டு பிடித்திருந்தால்   கூறுங்கள்...... :D  :D

 

இசை உங்கள் பரந்த இசைப்பார்வைக்கு நன்றிகள் .உங்கள் கருத்துக்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில்.எனது சிறிய இசை அனுபவத்தை கொண்டு அந்த மாபெரும் மலைகளை பற்றி என்னால் கூறமுடியாது .

 Loops, Pitch-bend,auto time and tempo adjust,render music,mute and invert channels, enveloping, channels swap, time stamp,auto grove  இப்படியான நகாசு வேலைகள் எனக்கும் தெரியும். 

உங்கள் திறமைகளுக்கு வாழ்த்துக்கள் .உங்களுடன் நிச்சயம் ஒரு முறை தொடர்புகொள்வேன் .நன்றிகள் Atonk .

  • கருத்துக்கள உறவுகள்
Atonk, on 08 Jan 2013 - 13:11, said:snapback.png

உங்கள் திறமைகளுக்கு வாழ்த்துக்கள் .உங்களுடன் நிச்சயம் ஒரு முறை தொடர்புகொள்வேன் .நன்றிகள் Atonk .

தமிழ் சூரியன் 

இவளவும் தெரியும்(ஆனால்  இதில் ஒன்றுமேயில்லை :blink: ) என்று போட்டதனால் என்னால் இசையமைக்க முடியும் என்று அர்த்தம் இல்லை(உண்மையாகவே நம்மால  முடியாதுப்பா  :D ) 
கணணி இசையில் தான் கூட பாடலாம் என்று இசை தெரிவித்திருந்ததனால் மட்டுமே இதனை இணைத்தேன் .உண்மையில் இசை மிகப்பெரிய பாடகராக இருக்கலாம்  :icon_idea:
அதனை அவர் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் .
எனக்கு தெரிந்திருக்கும் இந்த நகாசு வேலைகள் கணனியில் ஓரளவு திறமை கொண்ட பெரும்பாலனோரிட்கு  தெரிந்திருக்கும் 
இதனை(கொஞ்ச English வசனங்களை ) தெரிந்து கொண்டு நான் இந்த இசை கடல்களின் இசையை விமர்சிக்க முடியாது . அதற்கு எனக்கு தகுதியும் இல்லை அருகதையும் இல்லை 
ஆனால் அவர்களின் குணநலன்களை வியந்து பாராட்டமுடியும் அவ்வளவுதான் . நீங்கள் அவர்களின் இசையை பார்க்கிறீர்கள் நான் அவர்களில் உள்ள மனிதர்களை பார்க்கிறேன் 
  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானுக்கு தன்ட இசை மேல் இருந்த நம்பிக்கையை விட கடவுள் மேல் இருந்த நம்பிக்கை தான் அதிகம் அது தான் இசையை நம்பாமல் அல்லாவை நம்பி மதம் மாறினார் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114485#entry846413

 

வாழ்த்துவது வேறு மறைமுகமாய் ஒன்றாய் இயங்குவது வேறு. டக்ளஸ் வெளிப்படையான அழுக்கு ஆனால் அழுக்குகளின் சுயரூபங்கள் வெள்ளை வேட்டிசட்டையுடன் தேசீயம் பேசுவதை விட டக்ளஸ் மோசமானவர் இல்லை. கடந்த நவம்பரில் கனடாவில் நடக்க இருந்த இளையராஜா இசைநிகழ்சியை குழப்புவதில் தாங்கள் முன்வைத்த கருத்திலேயே தங்களை நன்கு அறிவோம்.

 

நீங்கள் டக்ளசிற்கு வக்காலத்து வேண்டுவதை பார்த்தால் அவரின் தேவைக்காக செயப்படும் ஒருவர் போல உள்ளது  ^_^

ரகுமானுக்கு தன்ட இசை மேல் இருந்த நம்பிக்கையை விட கடவுள் மேல் இருந்த நம்பிக்கை தான் அதிகம் அது தான் இசையை நம்பாமல் அல்லாவை நம்பி மதம் மாறினார் :)

 

ரகுமானின் தந்தை இறந்த காலப்பகுதியில் ரகுமான் கூட கடவுள் நம்பிக்கையை கைவிட்டிருந்தார். பின்னர் இஸ்லாமிய concert க்கு சென்ற போது அவர் தனக்கு மன அமைதி கிடைப்பதாக நம்பினார்.

பின்னர் அவரது சகோதரி நோய் வாய்ப்பட்டிருந்தமை தான் அவர் மதமாற்றத்துக்கு காரணம். அது கூட ஒரு முஸ்லிம் ஒருவரின் ஆலோசனையின் படி அல்லாவை வணங்கினார். அது அவரவர் நம்பிக்கை.

அவர் தனது இசை மேலும் நம்பிக்கை வைத்துள்ளார். அதற்காக இசை மேல் நம்பிக்கை வைத்து சகோதரியை காப்பாற்ற முடியாது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. இசையை நம்பாமல் அல்லாவை நம்பி மதம் மாறினார் என்று கூற முடியாது. இசையையும் நம்பினார். அல்லாவையும் நம்பினார் என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் 

இவளவும் தெரியும்(ஆனால்  இதில் ஒன்றுமேயில்லை :blink: ) என்று போட்டதனால் என்னால் இசையமைக்க முடியும் என்று அர்த்தம் இல்லை(உண்மையாகவே நம்மால  முடியாதுப்பா  :D ) 
கணணி இசையில் தான் கூட பாடலாம் என்று இசை தெரிவித்திருந்ததனால் மட்டுமே இதனை இணைத்தேன் .உண்மையில் இசை மிகப்பெரிய பாடகராக இருக்கலாம்  :icon_idea:
அதனை அவர் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் .
எனக்கு தெரிந்திருக்கும் இந்த நகாசு வேலைகள் கணனியில் ஓரளவு திறமை கொண்ட பெரும்பாலனோரிட்கு  தெரிந்திருக்கும் 
இதனை(கொஞ்ச English வசனங்களை ) தெரிந்து கொண்டு நான் இந்த இசை கடல்களின் இசையை விமர்சிக்க முடியாது . அதற்கு எனக்கு தகுதியும் இல்லை அருகதையும் இல்லை 
ஆனால் அவர்களின் குணநலன்களை வியந்து பாராட்டமுடியும் அவ்வளவுதான் . நீங்கள் அவர்களின் இசையை பார்க்கிறீர்கள் நான் அவர்களில் உள்ள மனிதர்களை பார்க்கிறேன் 

 

சரியாகச் சொன்னீர்கள் Atonk.

 

இசை என்று வரும்போது நான் தனிமனிதர்களைப் பார்ப்பதில்லை. அவர்களின் தயாரிப்பை மட்டுமே பார்க்கிறேன். உணவகத்துக்குச் சென்றால் சாப்பாடு எப்படி என்று மட்டுமே நாம் பார்ப்பதுபோல... சமைத்தவர் யார், அவர் இதர சமையல்காரர்களை மதிக்கிறவரா என்பதில் எமக்கு அக்கறை வருவதில்லைதானே.. :D

 

முதலில் அவர்கள் தெய்வம்.. நாங்கள் எதுவும் சொல்லக் கூடாது என்கிற மனநிலையில் மாற்றங்கள் வரவேண்டும். எதையுமே கேள்விக்கு உட்படுத்தும்போதுதான் நன்மை, தீமைகளை ஆராயமுடியும். அதனால் அந்த இசை வல்லுநர்களுக்கு நாம் தீமை ஏதும் செய்துவிடப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.