Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

Featured Replies

'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார்.

 

ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,


'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.

 

உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.


இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை  முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

 

R02(36).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/56781-2013-01-12-09-05-59.html

  • Replies 60
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போதுமான கல்வி அறிவு இல்லாத சமூகங்களிலும் வறுமை உள்ள சமுதாயங்களிலும் பகுத்தறிவு பற்றாக்குறையாகவே உள்ளது.

 

அதனை வைத்து மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான்.

 

அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

ஒன்றை கவனித்தீர்களா, எல்லோறும் கறுப்பு நிறத்தில் உடல் முழுவதியும் மூடி பர்தா அணிந்து உள்ளார்கள், சைவமும் தமிழும் இருந்த ஊரில் இன்று இஸ்லாம், என்ன கொடுமை இது,நான் நினைக்கிறேன், 2020ம் ஆண்டவில் ஈழப் பகுதியில் சைவ மதம் இஸ்லாம் மத்த்தால் முற்றாக ஒழிக்கப்ட்டு இருக்கும், இது கிழக்குப் பகுதிக்கு மட்டும் அல்ல, யாழ்ப்பாணம் வன்னியையும் சேர்த்துத் தான்.

போதுமான கல்வி அறிவு இல்லாத சமூகங்களிலும் வறுமை உள்ள சமுதாயங்களிலும் பகுத்தறிவு பற்றாக்குறையாகவே உள்ளது.

 

அதனை வைத்து மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் இந்த திராவிட./ராமசாமி குரங்குகள் ஒண்டும் சொல்லாதுகள்,ஆனால் சைவ மதத்தவர் ஒரு வழிபாடு செய்தால் உடனே மூட நம்பிக்கை எண்டு சொல்லுதுகள்

அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

இவர்களை எல்லாம் மதம் மாற்றும் பொழுது அப்படி சொல்லித்தான் மதம் மாத்தி இருப்பாங்கள், இவர்களின் முகங்களை பார்க்கும் பொழுதே தெரியவில்லையா, இவர்கள் எல்லம் அண்மை காலத்தில் மதம் மாறியவ்ர்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்
அதேபோல் உங்களுக்குத் தந்த வறுமையையும் எடுத்துவிடுவார். :rolleyes:

 

அதுதான் அல்கா ஹிஸ்புல்லா வடிவில்.. போய்.. சவுதி தனவந்தரிடம் காசு வாங்கி வீடு கட்டிக் கொடுக்கப் போறாரில்ல. மகள் இருந்திருந்தால் கூட இது நடந்திருக்குமா என்ன..!

 

இவர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் என்பது அல்கா தங்களைக் காப்பாற்ற அனுப்பி வைத்த பிணங்கள். அது செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன தாங்கள் நல்லா வாழ்ந்து அல்காவிடம் ஓடோடிப் போயிடனும். பிறகு ஏன் தான் அல்காவை விட்டிட்டு பூமிக்கு வந்து துலையுங்களோ..???!

 

இதுகளை எல்லாம் ஒன்றாச் சேர்த்து ஒரு அணுகுண்டைப் போட்டு நேரா அல்காட்டா அனுப்பிட்டா ஒரு கரைச்சலும் இல்ல..! அங்க வைச்சு அல்கா எல்லாத்தையும் பார்த்துக்குவான்.

 

அறியாமையிலும்.. வறுமையிலும்.. இவர்கள் அல்காவை நம்பிக்கிட்டு இருக்காங்க. இதே இடத்தில்..  பணக்கார முஸ்லீம்கள் அல்காவை விட்டு அப்பால் போய்கிட்டு இருக்காங்க..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்ற மாயை ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாளாக்கி விடுகின்றது என்பதற்கு இந்தத் தாய் ஓர் எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ரிசானாவே தப்பை ஏற்றுக்கொள்ளாதவிடத்து இது எப்படி!

  • தொடங்கியவர்

தனக்கு கிடைக்க உள்ள பணம்/வீடு, உறுதியளிக்கப்பட்ட சவூதி பணக்காரரின் வேண்டுகோளுக்கு அமையவும் இவ்வாறு இந்த தாய் கூறி இருக்கலாம் :rolleyes:  

  • கருத்துக்கள உறவுகள்
தனக்கு கிடைக்க உள்ள பணம்/வீடு, உறுதியளிக்கப்பட்ட சவூதி பணக்காரரின் வேண்டுகோளுக்கு அமையவும் இவ்வாறு இந்த தாய் கூறி இருக்கலாம் :rolleyes:  

 

அதுமட்டும் காரணமல்ல, அகூதா!

 

வெறும் ஆணாதிக்கத்தில் ஊறிப்போன மதத்தில் பிறந்ததன் விளைவு!

 

வேறு வழியில்லை, இந்தத் தாய்க்கு!

சுதந்திர கட்சி சிராணி தன்னை காப்பாற்றேலாமல் தவிக்கிறா. இந்த ஏழை மனிசியை போய்குறை சொல்லி என்ன. 

 

ஹிஸ்புல்லாதான் வீட்டுக்கு வந்த கண்கண்ட "அல்லா".

 

இலங்கையில்  முஸ்லீம் பெண்கள் மொட்டாக்கு போட்டு அடையாள அட்டை படம் எடுக்க கூடாதென்றவர் இல்லையா கோத்தா.

 

தனது பெண்ணை அல்லாதான் கொண்டு போனார் என்றணிந்த பெண்ணை பேசவைத்து சவுதியில் இருக்கும் ஷரியா சட்டங்களா அல்லது சிராணியை பதவி நீக்கியிருக்கும் இலங்கை சட்டங்களா?

 

சரிதான், உடலை கொண்டுவரத்தன்னும் ஷரியா சட்டமா இடம்கொடுக்க மறுத்தது? இன்று அந்த பெண்ணுக்கு இலவச வீடுகட்டிக்கொடுக்கவரும் சவுதி தனவந்தர் (பெயர் சொல்ல வெக்கப்படும் ஹிஸ்புல்லாவும் இலங்கை அரசும்) அன்று இந்த பணத்தை போட்டு அப்பீல் எடுக்க ஷரியா சட்டம் மறுத்ததா?

 

அப்பன் ஆரொ பெண்ணொடு இதயம் போட்டு என்று கட்டிபிடிச்சுகொண்டு பட்டுத்திருக்கிறானாம். இந்த அவலத்திற்குள் வந்து பங்கெடுத்தால் அவனுக்கு இதயம் வலிக்குமாம்.

 

இந்த பெண்ணுக்கு இனி தேவையான இறைச்சி கிடக்கும் போலை. இதில் புத்தம் என்ன, சைவம் என்ன, முகமதியம் என்ன, பெரியார் என்ன? "ஏழைகள் வாழ்வது கண்ணிரிலே" என்று கூறிக்கொண்டு நினைவு வந்து தொண்டைக்குள் விக்கும் போது ஒரு துளி கண்ணீரை உகுத்திவிட்டு ஒவ்வொரு துண்ட்டாக ஒவ்வொரு நாளும் காச்சி சாப்பிடட்டும். 

 

அது சரியாதான என்று அல்லா பார்த்துகொள்ளட்டும்.

 

 

 

 

 

Edited by மல்லையூரான்

எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான்.

 

அந்த குழந்தையின் உயிரையும் அல்லா தான் எடுத்தான் என்று சொல்லி விட்டு ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்கியிருக்கலாம் தானே. முஸ்லிம் நாடான சவூதியே அவ்வாறு நினைக்காத போது இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு மூட நம்பிக்கையுடன் உள்ளார்களே.

கடவுளை நம்பலாம். ஆனால் கடவுளை பைத்தியக்காரத்தனமாக இப்படி நம்ப கூடாது.

மதம் என்ற மாயை ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாளாக்கி விடுகின்றது என்பதற்கு இந்தத் தாய் ஓர் எடுத்துக்காட்டு.

 

உண்மை தான் அண்ணா.

திராவிட கண்மணிகளே எங்கே போய் விட்டீர்கள், வந்து உங்கட பகுத்தறிவை காட்டுங்கோவன், இல்லை அவர்களை இஸ்லாம் மதம் ஒஇன்பற்றும் தமிழர்கள் என்று மன்னித்த் விட்டீர்களா????/

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குழந்தையின் உயிரையும் அல்லா தான் எடுத்தான் என்று சொல்லி விட்டு ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்கியிருக்கலாம் தானே. முஸ்லிம் நாடான சவூதியே அவ்வாறு நினைக்காத போது இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு மூட நம்பிக்கையுடன் உள்ளார்களே.

கடவுளை நம்பலாம். ஆனால் கடவுளை பைத்தியக்காரத்தனமாக இப்படி நம்ப கூடாது.

 

உண்மை தான் அண்ணா.

 

கேட்டாளே , ஒரு கேள்வி? :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=114805#entry848364 இந்த கட்டுரையில் உள்ள விடயங்கள் பல உண்மைகளை சொல்லுகின்றன....

ஷரிய சட்டங்கள் மனிதனை திருத்துவதுக்கு எண்று ஒரு இந்திய (குஜராத்தி) இஸ்லாமியர் விளங்கப்படுத்தினார் ...   

 

அப்படியானால்  ஆயிரக்கணக்கான வருடங்களாக சவுதி அராவிபியாவில் ,களவுகளும்,  பாலியல் குற்றங்களும் , கொலைகளும் குறைந்து எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமே அங்கு குற்றங்களே இல்லையா எண்று கேடேன்..  அவர் பதில் ஒண்றும் சொல்லவில்லை...  வேறு யாரும் முடிந்தால் சொல்லுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையைக் கொன்றாலும் தாயைக் கொன்றாலும் மதம் என்ற போர்வைக்குள்

முஸ்லீம்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றார்கள்.

 

ஷரி ஆ வறுமையில் வாடும் முஸ்லீம்களுக்கு மட்டும் தான்

பணக்கார அரேபியர்களுக்கு அது செல்லாது

சுதந்திர கட்சி சிராணி தன்னை காப்பாற்றேலாமல் தவிக்கிறா. இந்த ஏழை மனிசியை போய்குறை சொல்லி என்ன. 

 

 

ரிசானாவின் கதியே சிராணிக்கும் நேர்ந்துள்ளது -மனோ கணேசன்

 
 

page2.jpgரிசானா நாபீக்கிற்கு நேர்ந்த கதியே பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கும் நேர்ந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதம நீதியரசர் ஒருவரை நியமித்தால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகளும் நீதவான்களும் அறிவித்துள்ளனர்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை காரணமாக நாடாளுமன்றின் உன்னத தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://nerudal.com/nerudal.54442.html

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
ஷரிய சட்டங்கள் மனிதனை திருத்துவதுக்கு எண்று ஒரு இந்திய (குஜராத்தி) இஸ்லாமியர் விளங்கப்படுத்தினார் ...   

 

அப்படியானால்  ஆயிரக்கணக்கான வருடங்களாக சவுதி அராவிபியாவில் ,களவுகளும்,  பாலியல் குற்றங்களும் , கொலைகளும் குறைந்து எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமே அங்கு குற்றங்களே இல்லையா எண்று கேடேன்..  அவர் பதில் ஒண்றும் சொல்லவில்லை...  வேறு யாரும் முடிந்தால் சொல்லுங்கள்...

 

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

 சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

 

சவுதிதான் சரியான அரசு. வாற போறவைக்காக ஷரியா சட்டம் போட்டு கழுத்து வெட்டுது. <_<

 

கொலையை தாய் தான் செய்தார என்பதும், அதனால்த்தால் அவர் பிரேத பரிசோதனையை, மரணவிசாரணையை முடக்கினார என்பதும் கலைஞன் எழுப்பியிருக்கும் சந்தேகம். அந்த கருத்துக்கும் பதில் அளிக்க முடியுமா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114413#entry846083

 

அந்த குடும்பம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு,   குழந்தையின் தாயார் கொடுமைப்படுத்தியதால் அந்த கோபத்திற்காக சிறுமி,குழந்தையை திருகிக் கொன்றாள் என்பதாகும்.சவுதி நாடு செல்வந்தர்கள் செய்வது சாதாரண குற்றங்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்க மறுப்பதால்  ரிசானாவின் பெற்றார்களுக்கு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய தாய் மீது வழக்கு தொடர்ந்து நட்ட ஈடு பெற ஒரு வழியுமில்லை. 

Edited by மல்லையூரான்

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

 

உண்மையில் சவூதிக்கு வேலைக்கு செல்பவர்களை தான் அங்குள்ள மக்கள் பலவிதமாக கொடுமைப்படுத்துவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சவூதி அரசாங்கமே இப்படி நடக்கும் போது அங்குள்ள மக்கள் நிச்சயம் வன்முறை உணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

சவுதிதான் சரியான அரசு. வாற போறவைக்காக ஷரியா சட்டம் போட்டு கழுத்து வெட்டுது. <_<

 

கொலையை தாய் தான் செய்தார என்பதும், அதனால்த்தால் அவர் பிரேத பரிசோதனையை, மரணவிசாரணையை முடக்கினார என்பதும் கலைஞன் எழுப்பியிருக்கும் சந்தேகம். அந்த கருத்துக்கும் பதில் அளிக்க முடியுமா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114413#entry846083

 

கொலையை தாய் தான் செய்தார் என்று கலைஞன் அண்ணா குறிப்பிடவில்லை.

 

பிரேத பரிசோதனை செய்யப்படாததால் ரிசானா குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே ரிசானா குழந்தைக்கு பால் பருக்கும் போது தவறுதலாக மரணம் சம்பவித்திருக்க சந்தர்ப்பம் உள்ளது என்ற அர்த்தத்தில் கலைஞன் அண்ணா கூறியுள்ளார்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

தவறான தகவல் அங்கு உள்ளவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல .வறுமைகொட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அதிகம்..முக்கியமாக சியா முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்..

தீர்ப்பை முழுமையாக ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் தாயின் சுயவிருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கு விடயம் என்ன என்றால் பல்லாயிரம் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயமாக குரல் கொடுத்தது மனிதநேயத்திற்காகவும், நீதி நியாயத்திற்காகவுமே என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். நாளை இன்னோர் அப்பாவிப்பெண்ணிற்கு இப்படியானதோர் நிலமை தொடர்ந்தும் சவூதி அரேபியாவில் தொடரக்கூடாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது. குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு வழங்கப்படும் தண்டனை சர்வதேசட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டதாய் அமையவேண்டும். தான்தோன்றித்தனமாக தலைவெட்டி எறிவதற்கு மனிதசமுதாயம் மண்ணோடு மண்ணாக ஊர்ந்து வாழும் புழுக்களோ பாம்போ அல்ல. நவீன தொழில்நுட்ப, விஞ்ஞான யுகத்தில் அனைத்து விஞ்ஞான, தொழில்நுட்ட செளகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு வெறும் ஐந்தாம் நூற்றாண்டு வியாக்கியானங்களின் அடிப்படையில் மட்டும் சட்டங்களை கதைப்பதும், பிரயோகிப்பதும் முட்டாள்தனமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இன்னோர் அப்பாவிப்பெண்ணிற்கு இப்படியானதோர் நிலமை தொடர்ந்தும் சவூதி அரேபியாவில் தொடரக்கூடாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது. குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு வழங்கப்படும் தண்டனை சர்வதேசட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டதாய் அமையவேண்டும். தான்தோன்றித்தனமாக தலைவெட்டி எறிவதற்கு மனிதசமுதாயம் மண்ணோடு மண்ணாக ஊர்ந்து வாழும் புழுக்களோ பாம்போ அல்ல. நவீன தொழில்நுட்ப, விஞ்ஞான யுகத்தில் அனைத்து விஞ்ஞான, தொழில்நுட்ட செளகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு வெறும் ஐந்தாம் நூற்றாண்டு வியாக்கியானங்களின் அடிப்படையில் மட்டும் சட்டங்களை கதைப்பதும், பிரயோகிப்பதும் முட்டாள்தனமானது.

இது தொடரும் கலைஞன்.இந்த சட்டம் ஒரு தனிமனிதனால் நிறை வெற்றப்படவில்லை...இஸ்லாமிய சட்டம் ஆகவே இப்படியான சட்டங்கள் வேறு நாடுகளிலும் வெகுவிரைவில் அமுல்படுத்த இஸ்லாமியர் முயற்சி செய்யக்கூடும்.....

கொலையை தாய் தான் செய்தார் என்று கலைஞன் அண்ணா குறிப்பிடவில்லை.

நானும் கலைஞன் அதைதான் சொன்னார் என்று சொல்லவில்லை. கலைஞன் சிறுமிதான் கொலை செய்தார் என்பதில் இருக்கும் சந்தேகத்தை பெற்றோர் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததில் வைத்து எழுப்பியிருக்கிறார். இது பெற்றோர் குழந்தையை என்ன நிலைமையில் சிறுமியிடம் கையளித்தனர் என்ற கேள்வியை எழுப்பும்.  சாதரண சிறுவர் இருமல் மருந்தையே குழந்தை ஒன்றுக்கு அதிகளவு பருக்கிவிட்டு அதை சிறுது நேரத்தில் இன்னொருவர் கையில் கொடுத்து பாலைப் பருக்கு என்று கட்டளை இட்டால், பால் பருக்குபவர் நியாமான ஆபத்தில் அகப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. பிரேத பரிசோதனையில் Overdose நிரூபிக்கப்படும் வரை பால் பருக்கியவருக்கு தன் மீதே சந்தேகம் வர நிறைய சந்தர்ப்பம் இருக்கிறது. 

 

வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் இருப்பவை குரோத மலையாளத்தவர் மொழி பெயர்த்தவை. மலையாளி அந்த வழக்கு உலக பிரசித்தி பெற்ற பின்னரும் தன்னை வெளியேகாட்ட முயவில்லை. சிறுமி வீட்டில் வைத்து அடிக்கப்பட்டும், பொலிஸ்ரேசனின் வைத்து அடிக்கப்பட்டும் குற்றம் ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறாள். பிள்ளையை பொறுப்பேற்றவுடன் தாயும், பொலிசும் குழந்தை இறந்தாக முடிவுக்கு வராமல் கொலை செய்யப்பட்டதாக முடிவெடுத்திருந்தார்கள். இதை கலைஞன், அவர்களின் பழிவாங்கும் இயல்பை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அதுவே கூட சரியா என்பதுதான் சந்தேகம்.

 

உடனடி ஆவேசம் தீர்ந்து ஏழு வருடங்களின் பின்னரும், நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் கிடைத்து நடந்தவையாக கூறப்பட்டதை பெற்றார் நன்கு விளங்கிக்கொண்ட பின்னரும், அந்த பெண்ணும் விபரம் தெரியாத சிறுமியாயினும் அந்தவயதில் குடும்பத்தை காப்பாற்ற பொய்சொல்லி தான் தொழில் தேடி வந்தாள் என்ற பரிதாப உண்மை தெரிந்த பின்னரும், கெட்டு நொந்த உருவமுடைய தாய் தந்தையர் நேரில் சென்று மன்றாடிய பின்னரும், தொண்டர் நிறுவனங்கள் கொலையாக இருந்தாலும் மன்னிப்பு கொடுக்கலாம் என்று மனித தன்மையை விளங்கப்படுத்திய பின்னரும், கொலைக்கு பணத்தை ஏற்று அந்த பிள்ளையும் வாழவிடலாம் என்பதை சிந்திக்க முடியாமல் போனவர்கள்,கலைஞ்ஞன்பேழுப்பிய சந்தேகமான  ஊணுக்கு ஊண் தான் கேட்டார்கள் என்பது நம்ப முடியாததொன்று 

 

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருடத்தின் பின்னர்தான் சீரான ஆரம்ப விசாரணைகளே தொடங்கியிருக்கிறது. பலநாடுகளில் கொலைக்கு மரண தண்டனை உண்டு. கொலை நிரூபிக்கப்பட்டதாயின், அதில் ஷரியா தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற புது விவாதம் தேவையானது போல் இல்லை. 

 

பால் கொடுத்தபோது விக்கி,புரக்கடித்து குழந்தை திணறியதாக சிறுமி எழுதிய தபாலில் இல்லை. பால் வெளியே வழிந்ததாகத்தான் இருக்கிறது. வெளியே போய் வந்த தாய், வெளியே போகும்போது பொறுப்பாக பாலைக் கொடுத்துவிட்டுப்போயிருந்தால் அதன் பின்னர் 6-7 மணித்தியாலங்களுக்கு பால் கொடுத்திருக்க வேண்டிய தேவை வராது.

 

சிறுது நேரத்தில் திரும்பி வந்த தாய் உடனே பிள்ளையைப் பார்க்கவில்லை. ஏதாவது சதி செய்த்துவைத்துவிட்டு சென்றுவிட்டு வந்து வேலைக்காரியை அடித்தாவா என்பது கேள்வி. கோட்டில் மலையாளி செய்த மொழி பெயர்பை மறுக்க சிறுமிக்கு  பிற்காலம் சந்தர்ப்பம் இருக்கவில்லை.  மறுப்பு தெரிவிக்கத்தக்கவற்றை தெரிந்தெடுத்தவர்கள் சமூக ஆர்வலர்களே. அவர்களின் நோக்கம் மன்னிப்பு கேட்டு தண்டணையை குறைத்து தலையை காப்பாற்றுவதே அல்லாமல் எதிர்த்துவாதாடி வழக்கை வெல்வதல்ல.(இதுதான் பல அமெரிக்க வழக்குகளில் நடந்தவை. பொலிசால் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வழக்கு சோடிக்கப்பட்டுவிட்டால், குற்றத்தை ஒப்புகொள்ளும் படி பலதடவைகள் வழக்கறிஞ்ஞர்கள் ஆலோசனை வழங்கி தண்டனையை குறைத்து சிறை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் 40 ஆண்டுகளின் பின்னர் DNA பரிசோதனை மூலம் வெளியே வந்து தனக்கும் தனது வழக்கறிஞ்ஞருக்கும் இடையில் நடந்த சம்பாஷ்னைகளயும், தான் ஏன் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பதையும் கூறியிருந்தார்)  குழந்தையை தான் பொறுப்பேற்கும் போது குழந்தை சுகநல வெளிப்பாடுகளை காட்டியிருந்தது என்பது சிறுமியிடம் செய்யப்பட்ட குறுக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்ததா? சிறுமிக்கு குழந்தையின் சுக நலவெளிப்பாடுகளை அளக்கத்தக்க ஆற்றல் இருந்ததா? 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.