Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிக் கதைகள்

Featured Replies

1. முட்டாள் மாற மாட்டான்

 

ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.

 

”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து
வாங்கிக்றீயா”

 

” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்

மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று
கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்

 

“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”

 

கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து
கடையில்லை”

 

“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக்கடையா மாத்திட்டீங்களா”

 

“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”

 

“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”

 

“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”

 

வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார்.
தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும்

 

“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக்
கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே
ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி
சொல்லிடுங்க

 

http://vcmowleeswaran.wordpress.com/

  • தொடங்கியவர்

2. பயம் !

 

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத்திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?"
என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக்
காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

  • தொடங்கியவர்

3. ஹிட்லர்

 

ஜேர்மனியில் ஹிட்லர் கொடி கட்டிப் பறந்த நேரம்.


அந்த நேரத்தில் ஹிட்லரைக் கொல்லச் சதி செய்ததாகப் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் ஒரு பகுதியினரை சிறையில் சித்திரவதை செய்து கொல்லுமாறும், ஏனையோரைச் சுட்டுத் தள்ளுமாறும் உத்தரவிட்டார் ஹிட்லர்.
சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருந்தவர்களில் ஒருவர் ஜெனரல் ரோமல். அவர் ஒரு காலத்தில் ஹிட்லருடன் தோளோடு தோள் நின்று போராடியவர்.


"ஜெனரல் ரோமலுக்கு கருணை காட்டலாம் என நினைக்கிறேன்" என்றார் ஹிட்லர்.
 

"அப்படியானால் அவரை விடுதலை செய்து விடலாமா?" என்று கேட்டனர் அதிகாரிகள். உடனே ஹிட்லர் சொன்னார், " அவரைச் சுட்டுத் தள்ள வேண்டாம். தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்கவும்!" என்றார்.

  • தொடங்கியவர்

4. சுறாவும் கடவுளும்

 

மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் .

 

அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.


எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.


""சரி'' என்றார் கடவுள்.
 

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

 

 


 


5. ஆமை

 

 

 

ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கி அந்தக் கார் விரைந்து
கொண்டிருந்தது. இரு பக்கங்களும் காடுகள் போல் அடர்ந்த
மரங்கள் உயர்ந்திருந்தன.


பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் திடீரென்று "டிரைவர்
...டிரைவர்...ப்ளீஸ் ஸ்டாப்" என்றான். வண்டி ஒரு சிறு குலுக்கலுடன்
நின்றது.


இளைஞன் வண்டியிலிருந்து இறங்கினான். இடப் பக்கம் கரையோரம்
 

ஓர் ஆமை தன் முன்னங்கால்களால் சாலையில் ஏறத் தொடங்கியிருந்தது.
இளைஞன் அந்த ஆமையை கையில் எடுத்தான். ஐம்புலன்களையும்
அடக்கும் துறவியாக ஆமை தன் ஓட்டுக்குள் பதுங்கியது.


ஆமையை சாலையின் வலது புறம் எடுத்து விட்டான். முன்னால் இன்னொரு
ஆமை ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
 

ஒரு சாதனை நிகழ்த்திய சந்தோஷத்துடன் அந்த இளைஞன் டிரைவரை "போப்பா!"
என்றான்.
 

"திருமால் பூமியை காக்க ஆமையாக அவதாரம் செய்தார் தெரியுமா" என்றான்
இளைஞன்.
 

"அப்பா அந்தக் கதை சொல்லி இருக்கிறார், ஸார்!" டிரைவர்.
 

அந்த ஆமையைத் தான் காப்பற்றியது பற்றி, டிரைவரிடம் சொல்ல முயன்று,
தான் தோற்றதை உணர்ந்தான்.


"பூமியில் பணக்காரர்களில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்கள்" என்று
டிரைவர் எண்ணினான்.


ஹோட்டலின் முகப்பில் இறங்கிக் கொண்ட இளைஞன், "வெய்ட் பண்ணு! ஒன்
அவர்ல திரும்பிடுவேன்!" என்று கூறிவிட்டு, உள்ளே நுழைந்து , டேபிளின் முன்னே
அமர்ந்தான்.


பேரர் வந்து கார்டை நீட்டினான்.
 

"இன்றைய ஸ்பெஷல்?"


நட்சத்திர ஆமை சூப் ரெடி ஸார்!"


"நைஸ், கொண்டு வா!"
 

வெளியே காரை ஓட்டி வந்த டிரைவர் , அந்த இளைஞனின் ஜீவகாருண்யத்தை
பற்றி வியந்து சக டிரைவரிடம் விவரித்து கொண்டிருந்தான்

  • தொடங்கியவர்

6. கட்டிலும் மனைவியும்

 

மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள்தான் என்னை எப்படியாவது குணப்படுத்தவேண்டும் என்றார்.


உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாக சொல்லுங்கள்? என்று கேட்டர் டாக்டர். இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போல் தோன்றுகிறது. கட்டிலை விட்டு கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாரும் இல்லை.பயம் போவதற்காக நான் கட்டிலின் கிழேயே படுத்துக் கொள்கிறேன். இப்போது கட்டிலின் மேலே யாரோ படுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறி மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருக்கிறது என்றான்.


உங்களை குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல்
என்ன இரண்டாண்டுகள் வந்து பார்க்க வேண்டும் என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் 1000 ரூபாய் கட்டணம் தர வேண்டும் என்ன சொல்கிறீர்கள்? என்றார் டக்டர்.
 

நிறைய செலவாகும் போல இருக்குதே? என்னால் இவ்வளவு தொகையை புரட்ட முடியுமா என்று தெரியவில்லை, எதற்கும் என் மனைவியை கேட்டு விட்டு அடுத்த வாரம் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டர் அவர்.
 

ஒரு வாரம் கழித்து டாக்டருக்கு போன் வந்தது. அதில் அவர், டக்டர் என் மனைவி என் நோயையை
குணப்படுத்தி விட்டாள் என்றார்.
 

டாக்டரால் அதை நம்பமுடியவில்லை. எப்படி? என்று கேட்டார்.
 

என் மனைவி நான் படுக்கும் கட்டிலின் கால்களை வெட்டிவிட்டாள் என்று பதில் வந்தது.

 

 

  • தொடங்கியவர்

7. மெல்லிய நூல்

 

ஒருவன் இன்னொருவனிடம் மிகவும் மெல்லிய நூல் நூற்றுக்கொண்டு வரும்படி கூறினான். அதன்படி அவன் மெல்லிய நூல் நூற்றுக் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பார்த்து விட்டு அவன் “இந்த நூல் மெல்லிய தாக இல்லை. இதைவிட மெல்லியதாக அல்லவா நான் கேட் டேன்” என்றான். அதற்கு நூல் நூற்றவன் “இந்த நூல் உங்களுக்கு மெல்லிசாக இல்லையா! அப்படி என்றால் இதோ இந்த நூலைப் பாருங்கள். இது உங்களுக்குப் பிடிக்கும்” என்று கூறிவிட்டு ஒரு வெற்றிடத்தைக் காட்டினான். முதலாவது ஆள் என்ன, ஒன்றையும் காணோமே” என்றான்.

 

இரண்டாவது ஆள் “உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதிலிருந்தே இந்த நூல் மெல்லி சானது என்பது தெரியவில்லையா? என் கண்ணுக்கும் கூட நூல் தெரியவில்லை!” என்று கூறினான்.

 

முதலாவது ஆள் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த முட்டாள் இன்னும் கொஞ்சம் இப்படி மெல்லிசாக நூல் தயாரிக்கும்படி கூறி, அதற்கும் சேர்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனான்.

 

Tolstoy

பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து இணையுங்கள் நிழல் .

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிக்கதைகள் நன்றாயிருக்குது...நிழலியின் சொந்த ஆக்கமோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நிழலி

தலைப்பிற்கேற்ப சிறியதாகவும் குட்டி குட்டியாகவும் ரசனையாகவும் எளிதில் மனதில் பதியக்கூடியவையாகவும் உங்கள் கதைகள் உள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நல்லவிசயம் ,நன்றி ..நிழலி!   குட்டிக்கதை சொல்லேக்கை எல்லாத்தையும் ஒரேயடியாய் அவிட்டுவிடக்கூடாது... :D

  • 1 month later...
  • தொடங்கியவர்

பின்னூட்டங்களுக்கு நன்றி. இதில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் யாரோ ஆட்களால் எப்பவோ எதற்கோ எவருக்கோ சொல்லப்பட்டவை. ஒன்றுமே என்னுடையது இல்லை.

 

---



8. கை மேல்  பலன்

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.


இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.


மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.


சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.


சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.


மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

  • 1 year later...
  • தொடங்கியவர்

9 மனிதன்

கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும், பின் திருமணம்
செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான் .

 

FB

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி என் கண்ணில் இத்தனை நாட்கள் படவில்லையே. நால்லாக இருக்குக் கதைகள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

9 மனிதன்

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்

மனிதனாகவும், பின் திருமணம்

செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்

போல குடும்பப் பாரம் சுமந்தும்,

குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்

நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,

கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்

போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான் .

 

FB

 

 

இன்று  தான் பார்த்தேன்

எனக்கான  பதிவு வரும்வரை என்னை  இந்தப்பக்கம் அழைத்து வரவில்லையோ  என்னவோ....

இனி  குரங்கின் நிலையா  எனக்கு...

 

நன்றாக உள்ளது

தொடர்க.......

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக.  ஊரில் கதைக்கின்றபோது 'ஒரு கழுதை வயசாச்சு' என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன்!

 

இண்டைக்கு, நிழலியின்ர கதையைப் பார்த்த பிறகு தான், விசயமே விளங்குது!  :D

 

தொடருங்கள்  நிழலி....!

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் ஒவ்வொன்றும்  சுப்பர்ப்...! தொடருங்கள் நிழலி...!! :D :D

  • 1 month later...
  • தொடங்கியவர்

10. மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!

 

சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர்.

 

அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான்.

 

இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள்.

அவள் ஒரு நாள் மகன் அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரம்” ஒன்றைச் சொன்னார்.

 

இந்த மூன்று முட்டை மந்திரத்தைப் பயன்படுத்தித்தான் நட்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். அதாவது, யாரிடம் நட்பு கொள்ள விரும்புகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த முட்டையை எப்படி உண்கிறார்களோ அதன்படி அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்றார்.

 

அனந்தாவுடன் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர். எனவே, அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளைக் கொடுத்தான்.

 

அவன் ஒரு முட்டையைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிடமே திருப்பிக் கொடுத்தான்.

இதை அவன் அம்மாவிடம் தெரிவித்தான்.உடனே அவள், “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளைக் கொடுத்துள்ளான். இவன் நெருங்கிய நட்பு உனக்கு வேண்டாம்” என்றார்.

 

சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளைப் படிக்கும் போது வணிகர் மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது.

அனந்தா, அவனிடம் மூன்று முட்டைகளை கொடுத்தான்.

அவன் மூன்று முட்டைகளையும் வாங்கி முழுதாகச் சாப்பிட்டு விட்டான்.

 

இதைப் பற்றி அனந்தா தாயிடம் தெரிவித்தான்.

அவன் தாய், “மகனே, அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பு வேண்டவே வேண்டாம்” என்றார்.

 

அடுத்து இன்னொரு மந்திரி மகனின் நட்பை விரும்பி அவனிடம் மூன்று முட்டைகளைக் கொடுத்தான் அனந்தா.

ஆனால் அவனோ, அந்த மூன்று முட்டையும் அவனிடமே திருப்பி அளித்தான்.

இதைத் தாயிடம் தெரிவித்த போது, “மகனே, அவன் உன்னை முழுமையாக மதிக்கவேயில்லை... அவன் நட்பை வேண்டாம் என்று ஒதுக்கி விடு” என்றாள்.

 

அனந்தா ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

 

அவன் வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டி விட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகு வெட்டியின் மகன் விநோதன் இவன் வயதுடையவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடச் சென்றான்.

அனந்தா விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் .

அவனுக்கும் மூன்று முட்டைகளைத் தட்டில் வைத்தான்.

விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டையாகச் சாப்பிடலாம் என்றான்.

 

அனந்தா விநோதனின் செயலைத் தாயிடம் தெரிவித்தான்.

தாய் மகிழ்ந்தாள். பின்னர், “மகனே, அவன் விறகு வெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னைச் சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவன் உன்னிடம் நட்பு பாராட்டுகிறான். இது தான் நட்பின் முக்கியத் தேவை. அவனுடைய நட்பை உடனடியாக ஏற்றுக் கொள்” என்றார்.

 

இளவரன் அனந்தாவுடன் விநோதனுக்கும் அனைத்துக் கல்வி, போர் முறைகளையும் கற்றுக் கொடுக்க ராணி உத்தரவிட்டாள். இருவரும் அனைத்திலும் தேர்ச்சி பெற்றனர். பின்னர் அனந்தா அரசனானான். விநோதன் அந்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். இருவரும் இணைந்து நாட்டில் நல்லாட்சி வழங்கினர்.

 

-இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.