Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளுடன் ஒரு நிமிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே,

அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்......

யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம்

வாழ்க யாழ்

என்றும் உங்களில்

ஒருவன்

சுண்டல்

Edited by SUNDHAL

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதனை அவதானித்தேன் சுண்டல். அத்துடன்... புதிதாக இணைபவர்கள் பலரும் தமிழக உறவுகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

....எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்......

இங்கு சிறிதே மாறுபடுகிறேன்.

நீங்கள் இந்திய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதிந்தால் ஈழத்தின் அவலங்கள், செய்திகள் அனைத்தும் தமிழகத்திற்கு சரிவர சென்றடையாத சூழல் உருவாகும். தமிழக தமிழர்களுக்கு செய்திகளை அறிய, ஆயிரம் வழிமுறைகள் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு...?

பதியுங்கள்..ஆனால் தேனில் குழைத்துத் தரும் மருந்தாக ஈழத்தின் செய்திகளை அவசியம் புகுத்திப் பரப்புங்கள்.

இல்லையெனில், பிழைக்கப்போன தமிழர்களுக்கு, இலங்கையில் தனிநாடு தேவையாயென பலரும் 'பேக்கு'களாக இங்கே 'ஞே'யென முழித்துகொண்டிருப்போம்... !

தேவையா?

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்!

அண்மையில் இணைந்த ஒரு உறவு, தமிழீழத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வழிவகைகளை ஆராய்வதாகக் கதையளந்தபடி வந்து சேர்ந்து, இப்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற தொனியில், கருத்துக்களைப் பகிர ஆரம்பித்துள்ளது!

இப்படியான கள உறவுகளால், மற்றவர்களின் இரத்தக் கொதிப்பை அதிகரிக்க முடியுமேயன்றி, வேறு எதுவும் உருப்படியான பயனும் ஏற்படாது! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருத்து வன்னியன் அண்ணா ஊர் புதினம் பகுதியில் தொடர்ந்தும் இலங்கை செய்திகளே இடம் பெரும் உலக செய்திகள் பகுதியில் அதிக இந்திய செய்திகளும் வரும் போது ஒரே இடத்தில் அனைத்து செய்திகளையும் பார்க்கக்கூடிய களமாக யாழ் இருக்கும்

உதாரணமாக பாரதிய ஜனதா தேர்தலில் திடீர் திருப்பம் என்ற செய்தி 520 தடவைகள் பார்கபட்டிருக்கு இப்பிடி பல செய்திகளை அறிந்து கொள்ள பலதளங்கள் இருந்தாலும் வாசகர்கள் யாழை நாடி வரும் போது இப்பிடியான இணைப்புக்கள் அவர்களை அதிகம் கவரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக இந்திய செய்திகளை வாசிக்க வரும் தமிழக மக்கள் அப்பிடியே இலங்கைத்தமிழர்களின் அவலத்தையும் செய்திகளின் ஊடக படித்துவிட்டு செல்வார்கள்

அப்பிடி படித்து விட்டு செல்பவர்களால் நிச்சியமாக ஒரு மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்த முடியும் அவர்கள் படித்த செய்திகளை நண்பர்களுடன் உறவினர்களுடன் அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு ஆதரவு அலையை கட்டி எழுப்பலாம் ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுகின்றோம் அவளவே :D

  • கருத்துக்கள உறவுகள்
அதிக இந்திய செய்திகளை வாசிக்க வரும் தமிழக மக்கள் அப்பிடியே இலங்கைத்தமிழர்களின் அவலத்தையும் செய்திகளின் ஊடக படித்துவிட்டு செல்வார்கள்.

:icon_idea:

புரிதலுக்கு நன்றி, சுண்டல். :)

ஈழத்தமிழர்களின் துயரம் இன்னும் உலகிற்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது...

இன்னும் ஓங்கி உரத்துச் சொல்ல, பல்வேறு வடிவங்களில் பரப்புரை அத்தியாவசியம்.

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு யாரும் வேண்டாம் அண்ணா தமிழக மக்களினுடைய ஆதரவு முழுமையாக கிடைத்தாலே போதும் மலையையும் முழுமையாக அசைக்கலாம் எந்த ஒரு மாற்றமும் உடனடியாக கிடைக்காது நம்பிக்கையுடன் பயணிப்போம் 1980 களில் இருந்த ஆதரவை மீளவும் பெற போராடுவோம் அடிமேல் அடியெடுத்து வைக்கின்ற பொழுது முழு தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் என்ன இந்தியா செய்தியில் அதிக அக்கறையாக இருக்கிறீங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்க்கு உங்களை போன்ற தமிழர்களின் அதரவு தேவை எமக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அவர்களை எமது ஆதரவாளர்களாக மாற்றினால் அதுவே மிகப்பெரிய உதவி ஒவொரு வரும் ஒரு நாலு பேரை மாற்றினால் எமது இலக்கை அடையலாம்

சுண்டல் என்ன இந்தியா செய்தியில் அதிக அக்கறையாக இருக்கிறீங்கள்?

அய்யோ புத்ஸ் அண்ணா நீங்க நினைக்கிற மாதிரிநான் இந்திய பொண்ணு ஒருத்தரையும் இன்னும் லவ் பண்ணல இனி பண்ணின்னா உங்களுக்கு சொல்லாமலா :D :d

  • கருத்துக்கள உறவுகள்
அதற்க்கு உங்களை போன்ற தமிழர்களின் அதரவு தேவை எமக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அவர்களை எமது ஆதரவாளர்களாக மாற்றினால் அதுவே மிகப்பெரிய உதவி ஒவொரு வரும் ஒரு நாலு பேரை மாற்றினால் எமது இலக்கை அடையலாம்

அப்படி எண்ணிதான் அலுவலகத்தில் சிலபேரை (இவர்கள் வட இந்தியர்கள்) மாற்றினேன்...

ஆனால் எமக்குப் பின்னால் அவர்கள் (பெரும்பாலும் வட இந்தியர்கள், சூடானிகள், எகிப்தியர்கள் மற்றும் அரபிகள்) தமிழர்களை வேடிக்கையாக அழைப்பது, "புலிகள் குரூப்".

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் மட்டும்தான் தன் தனித்தன்மையை  இழந்து மற்றவருக்காக எல்லாம் செய்வது. எமக்கானத்தில் எம்மவர் பற்றிய விடயங்கள் தான் முன்னிலைப்படுத்தப் படவேண்டுமே தவிர மற்றவரை வரவைப்பதற்காக எல்லாக் குப்பைகளையும் யாழில் கொண்டுவந்து கொட்டுவது தவறு. சிலநேரங்களில் அதிக குப்பைகல்லால் நல்ல திரிகள் பின்னுக்குப் பொய் பாக்காது தவருகிராத். தமிழ் ட்நாட்டுத் தமிழர்களுக்கு அங்கே  போதிய ஊடகங்கள் உள்ளன. ***

எங்களுக்கு எங்களின் ஆதரவுதான் முதல் வேணுமே தவிர, தாயகத்தில் உள்ள மக்கள் ஆசைப்பட்டாலன்றி எவருமே எமது விடுதலையை எமக்குத் தர முடியாது.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்புக்கான சுண்டலின் முதன்மைக் கருத்தை வரவேற்கிறேன். ஏலவே உலக நடப்பு பகுதியில் இந்திய தேர்தல்கள் என்ற உப பகுதியுள்ளது. அதேபோல் தமிழகப் புதினங்கள்.. என்ற ஒரு உப பிரிவு அங்கு அமைந்தால்... சிறப்பாக இருக்கும். அது பெரிய மாற்றம் என்பதிலும் தமிழக உறவுகளை வெறுமனவே தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதிலும் அந்த சொல்லாடலுக்கு இசைவாக.. உறவாடலை பலப்படுத்த... புரிந்துணர்வுகளை அதிகரிக்க பயன்படுத்த முடியும். யாழிற்கும் அதன் இலக்குகளில் ஒன்றை அதிகமாக எட்ட உதவும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் மட்டும்தான் தன் தனித்தன்மையை இழந்து மற்றவருக்காக எல்லாம் செய்வது. எமக்கானத்தில் எம்மவர் பற்றிய விடயங்கள் தான் முன்னிலைப்படுத்தப் படவேண்டுமே தவிர மற்றவரை வரவைப்பதற்காக எல்லாக் குப்பைகளையும் யாழில் கொண்டுவந்து கொட்டுவது தவறு. சிலநேரங்களில் அதிக குப்பைகல்லால் நல்ல திரிகள் பின்னுக்குப் பொய் பாக்காது தவருகிராத். தமிழ் ட்நாட்டுத் தமிழர்களுக்கு அங்கே போதிய ஊடகங்கள் உள்ளன. ***

எங்களுக்கு எங்களின் ஆதரவுதான் முதல் வேணுமே தவிர, தாயகத்தில் உள்ள மக்கள் ஆசைப்பட்டாலன்றி எவருமே எமது விடுதலையை எமக்குத் தர முடியாது.

தாயகத்தில் உள்ள மக்கள் ஆசைப்பட்டதனால் தான் 60000 க்கு மேற்பட்ட போராளிகள் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1000 க்கணக்கான கோடி சொத்துகள் என்று தமிழன் இழந்தான் இப்பொழுதாவது அவர்கள் சற்று ஆறி இருக்கட்டும் அந்தப்பணியை நாங்கள் கொண்டு நடத்துவோம் நான்கு பக்கமும் இரும்பு கரங்களால் நசிக்கப்படிருக்கும் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும் என்று எதிர்பாக்காமல் அவர்களுக்கு தேவையான உள வள சக்தியை கொடுக்க வேண்டியது நாமும் தமிழக மக்களும் தான்

தலைவர் பிரபாகரன் ஒரு பேட்டியில் சொன்னது போல தமிழக முதல்வர் MGR இவளவு தூரத்திற்கு எமக்கு உதவி இருக்கா விட்டால் எங்களால் இவளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது என்று

ஆக அப்பொழுது எமது போரட்டத்திற்கு அடி எடுத்து கொடுத்ததே தமிழகம் தான் பயிற்சி ஆயுதம் மருத்துவம் போராளிகளுக்கான தங்குமிடம் Etc etc

http://m.youtube.com/watch?v=ASx21WL03y0

தமிழக மக்கள் MGR மற்றும் அரசியல் தலைவர்களை பற்றி மாண்புமிகு தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டியை ஒளி வடிவில் காண

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது.

அப்படியே தமிழிழம் கிடைத்த பின்னர் தான் கலியாணம் என்று சபதம் எடுத்தாலும் நல்லது சுண்டல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே கட்டியாச்சு அண்ணா இனி too late :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீதான  சுண்டலின் அக்கறைக்கு  நன்றிகள்.

செய்திகள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன் கருத்துக்களத்தில் எழுதுபவர்களும்  தமிழக   உறவுகள் இதை வாசிப்பார்கள் என்ற  பொறுப்புடன் கருத்துக்களை  பகிரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னால் சரி நாங்கள் செய்ய தயாராக இருக்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா செய்திகளை முதலில் கொஞ்சம்,கொஞ்சமாய் இணைக்கத் தொடங்கி பிறகு முற்று முழுதாக இந்திய களிப்பூட்டும் செய்திகளை போட்டு தேசியத்தை மறப்பதற்கு உதவி செய்வோம் ^_^
 
அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்......

எங்கள் செய்திப்பிரிவினர்?

+++

ஏலவே வருகின்ற குப்பைகள் போதவில்லையோ?

அவ்வாறு இல்லாமல்,

ஒவ்வொருவரும் தாம் வாழ்கின்ற நாடுகளின் செய்திகளை வெறுமனே வெட்டி ஒட்டாமல், சிறிது விளக்கமும் தந்து பகிர்ந்துகொண்டால் நல்லது. (அகூதா வழங்குகின்ற டொரொன்டோ செய்திகள் போல்)

அண்மையில் இணைந்த ஒரு உறவு, தமிழீழத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வழிவகைகளை ஆராய்வதாகக் கதையளந்தபடி வந்து சேர்ந்து, இப்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற தொனியில், கருத்துக்களைப் பகிர ஆரம்பித்துள்ளது!

இப்படியான கள உறவுகளால், மற்றவர்களின் இரத்தக் கொதிப்பை அதிகரிக்க முடியுமேயன்றி, வேறு எதுவும் உருப்படியான பயனும் ஏற்படாது! :o

ஓர் கருத்துடன் நீங்கள் முரண்பட்டால் நீங்கள் உங்கள் முரண்பாட்டை, காரணங்களை விபரிக்கலாம். இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இருக்கின்றார்கள் அல்லவா? புலமைப்பரில் பரீட்சை தொடக்கம், க.பொ.சா, க.பொ.உ பரீட்சைகளில் நல்ல தேர்ச்சிபெறும் மாணவர்களிற்கு வாழ்த்து கூறுகின்றீர்கள், இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று வெற்றிபெறும் வீரர்களை பாராட்டுகின்றீர்கள். இவர்கள் எல்லோரும் இலங்கை அரசின் கல்வித்திணைக்களம், இலங்கை அரசின் விளையாட்டு அமைச்சு இவற்றின் வழிகாட்டுதலில்தானே செயற்படுகின்றார்கள்? யாழ் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகங்கள், இன்னோரன்ன கல்விநிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், வைத்தியசாலைகள், இலங்கை அரசின் வழிகாட்டுதலிலும், கட்டுப்பாடிலும்தானே இயங்குகின்றன?

உங்களிற்கு இரத்தக்கொதிப்பை ஏற்படுத்தும்வகையில் அவர் எதை எழுதினார் என்று காண்பியுங்கள், நானும் வாசித்துப்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா செய்திகளை முதலில் கொஞ்சம்,கொஞ்சமாய் இணைக்கத் தொடங்கி பிறகு முற்று முழுதாக இந்திய களிப்பூட்டும் செய்திகளை போட்டு தேசியத்தை மறப்பதற்கு உதவி செய்வோம் ^_^

களிப்பூட்டும் செய்திகளால் தான் தேசியம் மறக்கடிக்கப்படும் என்றால் அப்பிடி ஒரு தேசிய பற்றாளர்கள் எமக்கு தேவையே இல்லை தேசியம் என்பதும் உணர்வு என்பதும் இரத்தத்தில் ஊறிய ஓன்று அது செய்திகளால் மாற்றப்படும் என்பது வெறும் சப்பைக்கட்டு ........ எத்தனயோ தேச உணர்வாளர்கள் வார விசுமுறை நாட்களில் BBQ பார்ட்டி birthday பார்ட்டி அது இது என்று அப்புறம் திரைப்படம் என்று போகின்றார்கள் ஆனால் தேசியம் என்று வந்தால் தீவிரமாக செயல்படுவார்கள் உங்கள் கடுத்தை ஏற்க முடியாமைக்கு மனம்வருந்துகின்றோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் செய்திப்பிரிவினர்?

+++

ஏலவே வருகின்ற குப்பைகள் போதவில்லையோ?

அவ்வாறு இல்லாமல்,

ஒவ்வொருவரும் தாம் வாழ்கின்ற நாடுகளின் செய்திகளை வெறுமனே வெட்டி ஒட்டாமல், சிறிது விளக்கமும் தந்து பகிர்ந்துகொண்டால் நல்லது. (அகூதா வழங்குகின்ற டொரொன்டோ செய்திகள் போல்)

மக்கள் எதனை விரும்பி படிகின்றார்களோ எதற்கு ஆதரவு இருக்கின்றதோ அது தடைகளை தகர்த்து யாழின் ஊடாக எடுத்து வரப்படும் உங்கள் பார்வையில் குப்பையாக இருப்பது இன்னொருவர் பார்வையில் மாறுபடும் இனினும் அதிகமாக இந்திய மற்றும் தமிழக செய்திகளை நான் எடுத்து வருவேன் பிழம்பு அண்ணா மட்டும் எத்தனயோ பணி சுமைகளுக்கு மத்தியில் அதை செய்துகொண்டு இருக்க முடியாது யாழின் நீண்ட கால உறுப்பினன் என்ற முறையில் எனக்கு யாழின் பரந்து பட்ட வளர்ச்சியே முக்கியம் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு அல்ல

களிப்பூட்டும் செய்திகளால் தான் தேசியம் மறக்கடிக்கப்படும் என்றால் அப்பிடி ஒரு தேசிய பற்றாளர்கள் எமக்கு தேவையே இல்லை தேசியம் என்பதும் உணர்வு என்பதும் இரத்தத்தில் ஊறிய ஓன்று அது செய்திகளால் மாற்றப்படும் என்பது வெறும் சப்பைக்கட்டு ........ எத்தனயோ தேச உணர்வாளர்கள் வார விசுமுறை நாட்களில் BBQ பார்ட்டி birthday பார்ட்டி அது இது என்று அப்புறம் திரைப்படம் என்று போகின்றார்கள் ஆனால் தேசியம் என்று வந்தால் தீவிரமாக செயல்படுவார்கள் உங்கள் கடுத்தை ஏற்க முடியாமைக்கு மனம்வருந்துகின்றோம்

நல்ல கொள்கை ,கேட்கவே புல்லரிக்குது .

தேனி செய்தியை யாழில் இணைக்கலாமா என கேட்டபோது பதில் மற்ற மாதிரி இருந்ததாக ஞாபகம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.