Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை!

Featured Replies

koththurotti.jpg

ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப்
முட்டை - 1

பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2
லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு
மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக
சிறிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - ஒரு இணுங்கு

(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.)

செய்முறை

ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.

வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை உங்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஒருதரம் செய்து பார்த்தால் பொருட்களின் அளவையும் அவை வேக வேண்டிய நேரத்தையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமானது அடிக்கடி பிரட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஊரில் இந்த மரக்கறிகள் தான் போடுவார்கள். புலத்தில் வேறு மரக்கறிகளும் சேர்க்கிறார்கள்.
நேரம் கிடைக்கும்பொழுது அடிக்கடி செய்வேன். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Edited by நிழலி

முட்டை சாப்பிடவிட்டாலும் உங்கள் கொத்திரட்டியைப்பார்க்க இப்பவே சாப்பிடவேண்டும்போல் இருக்கின்றது... செய்முறைக்கு நன்றி தப்பிலி அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில் கொத்து ரொட்டிக்கு முதலாவது இடம்.smiley-eatdrink022.gif

தப்பிலியின் செய் முறை இலகுவானது போல் உள்ளது.

இவ்வளவு நாளும் செய்த கொத்து ரொட்டிக்கு கோவா போடவில்லை.

இனிச் செய்யும் போது.... கோவா போட்டால் சுவை அதிகமாக இருக்கும் போல் உள்ளது.smiley-eatdrink026.gif

இங்கு வெட்டிய கொத்து ரொட்டியை பைகளில் அடைத்து விற்கிறார்கள்.

ரொட்டி சுட்டு மினக்கெடாமல், வெட்டிய கொத்து ரொட்டியை போட்டு கிளறினால்..... நேரம் மிச்சம்.

இணைப்புக்கு நன்றி தப்பிலி. :)

ஆஹா... :wub: கொத்து ரொட்டி.... ஒரு நாளைக்கு செய்தது பார்த்திட வேண்டியது தான்! இணைப்பிற்கு நன்றி தப்பிலி :) (ஆசைக்கு தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி வாங்கினால் அநியாயத்துக்கு செத்தல் மிளகாயை அரைச்சுப் போட்டு வாய்ல வைக்க ஏலாத அளவுக்கு உறைப்பாய் சில நேரங்களில் இருக்கும் :blink: மட்டன் கொத்து என்று லேபில் இருக்கும் ஆனால் கோழி இறைச்சியும் சேர்த்து கொத்தி இருப்பார்கள் ...<_< )

  • தொடங்கியவர்

முட்டை சாப்பிடவிட்டாலும் உங்கள் கொத்திரட்டியைப்பார்க்க இப்பவே சாப்பிடவேண்டும்போல் இருக்கின்றது... செய்முறைக்கு நன்றி தப்பிலி அண்ணா :D

முட்டை போடாமலும் இதைச் செய்து சாப்பிடலாம் சுஜி. :)

எனக்குப் பிடித்த சாப்பாட்டில் கொத்து ரொட்டிக்கு முதலாவது இடம்.smiley-eatdrink022.gif

தப்பிலியின் செய் முறை இலகுவானது போல் உள்ளது.

இவ்வளவு நாளும் செய்த கொத்து ரொட்டிக்கு கோவா போடவில்லை.

இனிச் செய்யும் போது.... கோவா போட்டால் சுவை அதிகமாக இருக்கும் போல் உள்ளது.smiley-eatdrink026.gif

இங்கு வெட்டிய கொத்து ரொட்டியை பைகளில் அடைத்து விற்கிறார்கள்.

ரொட்டி சுட்டு மினக்கெடாமல், வெட்டிய கொத்து ரொட்டியை போட்டு கிளறினால்..... நேரம் மிச்சம்.

இணைப்புக்கு நன்றி தப்பிலி. :)

எனக்கும் பிடித்த உணவும் கொத்து ரொட்டிதான் சிறி. கொத்து ரொட்டி செய்வதில் நேரமெடுக்கும் காரியம் இந்த ரொட்டி சுட்டு வெட்டுவது. வெட்டிய ரொட்டியை வாங்கிக் கொத்தினால் வேலை இலகுவாக முடிந்துவிடும்.

ஆஹா... :wub: கொத்து ரொட்டி.... ஒரு நாளைக்கு செய்தது பார்த்திட வேண்டியது தான்! இணைப்பிற்கு நன்றி தப்பிலி :) (ஆசைக்கு தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி வாங்கினால் அநியாயத்துக்கு செத்தல் மிளகாயை அரைச்சுப் போட்டு வாய்ல வைக்க ஏலாத அளவுக்கு உறைப்பாய் சில நேரங்களில் இருக்கும் :blink: மட்டன் கொத்து என்று லேபில் இருக்கும் ஆனால் கோழி இறைச்சியும் சேர்த்து கொத்தி இருப்பார்கள் ...<_< )

நானும் அலுப்பாக இருந்தால் சிலவேளை கடைகளை வாங்கிச் சாப்பிடுவதுண்டு. நன்றாக இராது. நாங்களே செய்தால் எங்களின் ருசிக்கேற்ப தயாரித்துக் கொள்ளலாம். வெட்டிய ரொட்டி இருந்தால் மிக இலகுவாகச் செய்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

நன்றி சுவி. காளான் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். செய்து பார்க்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தப்பிலி!

கொத்து ரொட்டி சைவமாக வேணுமெண்டால் முட்டையை தவிர்த்து இறைச்சிக்கு பதில் சோயா அல்லது காளான் போட்டுச் செய்தாலும் ருசியாக இருக்கும்! :)

சுவி, கொத்து ரொட்டியை மச்சமாக சாப்பிடுவதே சுவையானது.

சைவமாக சாப்பிட வேணுமென்றால்.... இட்டலி, தோசை, உப்பு மா சாப்பிடுவதே பொருத்தமானது.

அந்தந்த சாப்பாட்டுக்கு... என்ன, என்ன கூட்டுச் சேரவேணுமென்று ஒரு விதி முறை இருக்கு. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து புரோட்டா பதிவுக்கு நன்றி தோழர்.. தப்பிலி.. :)

  • தொடங்கியவர்

கொத்து புரோட்டா பதிவுக்கு நன்றி தோழர்.. தப்பிலி.. :)

நன்றி தோழர்.

முன்பெல்லாம் நிறைய சமையல் குறிப்புகள் இணைப்பீர்கள். இப்ப கலியாணக் கனவுளில் மூழ்கித் திளைக்கிறீர்கள் போல. :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்.

முன்பெல்லாம் நிறைய சமையல் குறிப்புகள் இணைப்பீர்கள். இப்ப கலியாணக் கனவுளில் மூழ்கித் திளைக்கிறீர்கள் போல. :D

ரொம்ப சரி தோழர் ..:D அவளுக்கு சமையல் துறை அவ்வளாவாக தெரியாது.. இந்த துறையில் கூடுமானவரை பயிற்சிகள் அளிக்க உத்தேசித்துள்ளேன் :D

டிஸ்கி

சில மாதங்கள் மட்டும் தான்...மேலதிக விபரங்களுக்கு எனது திருமணத்திற்கு வருதாக இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்க தோழர்

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, கொத்து ரொட்டி செய்முறைக்கு நன்றி. கோவா போடும் முறை இப்போ தான் அறிகிறேன்.

  • தொடங்கியவர்

தப்பிலி, கொத்து ரொட்டி செய்முறைக்கு நன்றி. கோவா போடும் முறை இப்போ தான் அறிகிறேன்.

நன்றி நுணா.

ஊரில் கடைகளில் செய்யும் பொழுது பார்த்த முறையைத்தான் எழுதினேன். கோவா தாளிக்கப்பட்டு மற்றைய பொருட்களுடன் கலந்து விடுவதால் வெளியே அதிகம் தெரிவதில்லை.

  • 1 year later...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.
ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.
அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.
அதனை, வாங்கிச் செய்வோம். இணைப்பிற்கு, நன்றி அலை.

கொத்துரொட்டி நன்றாகத் தான் இருக்கும்.. என்ன  தகரம் உரசும் உரசலில் 'தகரச் சத்து 'தான் கூடப்போகின்றது :huh:

  • தொடங்கியவர்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.

ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.

அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

அதனை, வாங்கிச் செய்வோம். இணைப்பிற்கு, நன்றி அலை.

கொத்து ரொட்டிக்குப் பாவிக்கும் ரொட்டி செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. நிறைய எண்ணெய் விட்டுக் குழைத்து, ரொட்டி தட்டும் பொழுதும் நிறைய எண்ணெய் விட்டு பிரட்டிப் பிரட்டி வீச வேண்டும். காற்றில் வீசாமல் மேசையில் வைத்தே இலகுவாக வீசலாம்.

 நிறைய எண்ணெய் போடுவதால் அந்த ரொட்டி உடலிற்கு நல்லதல்ல.  அதனால் நான் சாதாரண ரொட்டி செய்து மெல்லியதாக வெட்டிப் பாவிப்பேன்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்
வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?
  • தொடங்கியவர்

வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=82595

இணைப்புக்கு நன்றி. :)

Edited by துளசி

இன்னொரு திரியில் இணைப்பு போட்டிருந்தமைக்கு நன்றி. அதனால் தான் பார்க்க முடிந்தது. தப்பிலி அண்ணாவின் சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது. :)

நானும் சாதாரண ரொட்டியை சிறு துண்டுகளாக வெட்டி மரக்கறி கொத்து ரொட்டி செய்திருக்கிறேன்.

எனக்கு சைவ உணவுகள் தான் சமைக்க தெரியும். அதுகூட சுவையாக செய்ய தெரியாது. யாழிலுள்ள பல சமையல் இணைப்புகளை சேமித்து வைத்து சிறிது காலத்தின் பின் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். :)

நன்றி துளசி.  மட்டுக்கள் யாராவது மற்றத் திரியை இதற்குள் போட்டுவிவீர்களா?

கொத்து ரொட்டிக்குப் பாவிக்கும் ரொட்டி செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. நிறைய எண்ணெய் விட்டுக் குழைத்து, ரொட்டி தட்டும் பொழுதும் நிறைய எண்ணெய் விட்டு பிரட்டிப் பிரட்டி வீச வேண்டும். காற்றில் வீசாமல் மேசையில் வைத்தே இலகுவாக வீசலாம்.

 நிறைய எண்ணெய் போடுவதால் அந்த ரொட்டி உடலிற்கு நல்லதல்ல.  அதனால் நான் சாதாரண ரொட்டி செய்து மெல்லியதாக வெட்டிப் பாவிப்பேன்.

நீங்கள் முன்பு restaurant இல் வேலை செய்துள்ளீர்கள் போலிருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அலைமகள்

எனக்குப் பிடித்த சாப்பாட்டில், முதலிடத்தை பிடித்திருப்பது கொத்து ரொட்டிதான்.
ஆனால் அந்த ரொட்டி செய்யும் முறை மட்டும், எங்களுக்கு சரி வருவதில்லை.
அதனால் கடையில்... கொத்து ரொட்டியை வெட்டிய படி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.
அதனை, வாங்கிச் செய்வோம். .

கொத்துரொட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.

தமிழ்சிறி அண்ணை  பக்கத்திலை  இத்தாலி உணவகம் இருந்தால் 

அவர்களிடம் சென்று கொஞ்சம் பிசா செய்யும் மாவைக் கேட்டு வாங்குங்கள் 

அந்த மாவும் ரொட்டிக்கு நல்லது. சிலர் ஈஸ்ரைக் குறைத்துப் பாவிப்பார்கள் 

அப்படியானால் நீங்கள் கொஞ்சம் ஈஸ்ரைச்சேர்ந்து இன்னொருதரம் பிசைந்து விடுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைகளில் வாங்கும் ரொட்டி எத்தனை நாட்களுக்கு முன்
செய்ததோ.பழுதாகாமல் இருக்க என்ன மருந்து  போட்டு அடைத்தார்களோ என்று
தெரியுமா எமக்கு. அதனால் நாமே ரொட்டி செய்வது சுகாதாரமானது. அதைவிட நாமே
செய்யும் ரொட்டி கடைகளில் வாங்குவதைவிட இருமடங்கு சுவையாக இருக்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.