Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு ரிக்கற் எல்லாரும் புக் பண்ணிட்டாங்களாம்

 

இங்கையுமா :o :o :lol::icon_idea: ???? நல்லாய்தான் கொண்டுபோறியள் ஜீவா . தொடருங்கோ .

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 13

 

miss%20you%20shahbano%20the%20sensationa

 

நேரம் நெருங்க நெருங்க இனம் புரியாத உணர்வுகள் இதயத்தைக் கிழித்து சல்லடையாக்கிக் கொண்டிருந்தன

சேர்த்து வைத்த இன்பங்கள் எல்லாம் கந்து வட்டிக்காரனின் மீட்டர் வட்டி போல என்னைக்  கரைத்துக் கடன்காரனாக்கிக் கொண்டிருந்தது. அவள் விழிகளில் விளிக்கும் நொடிகளை மறந்து கயல்களில் வழியும் கண்ணீர்த்துளிகளை மறைத்து போலிப் புன்னகையைச் சிந்தின உதடுகள். இன்னும் எத்தனை கணங்கள் இப்படியே???

 

"வா குட்டிமா மாடிக்குப் போய் காயப் போட்ட உடுப்புகளை எடுத்துக்கொண்டுவருவம்"

 

"மொட்டைமாடியில் இருவர்கைகளும் இறுக்கிக் கொண்டன, வார்த்தைகள் பேச மறுக்கும் போது கண்கள் மட்டும் என்ன செய்யும் பாவம்? நான்கு கண்களிலும் காட்சிப்பிழை.

நமக்கே புரிந்த மொழியில் மௌனம் மட்டும் பேசிக்கொண்டது." நேரம் போனதே தெரியாமல் இருந்த எம்மை..

 

"என்ன பிரியா உடுப்பெடுக்க வந்தனிங்களோ" என்றது மேல் வீட்டு அங்கிளின் குரல்

 

"ஆமா அங்கிள் .. "

 

"அதுக்கு அவரையும் கூட்டிட்டு வந்திருக்கிறியா?" சிரித்தார்.

 

"ஆமா அங்கிள் நாளைக்கு அவர் ஊருக்கு போறார்."

 

"சரி நீங்கள் உடுப்பை எடுங்கோ நான் இந்த பதி வச்ச பூக்கன்றுக்கு தண்ணி விட்டிட்டு வாறேன், அவரையும் கூட்டிக்கொண்டுவந்து வீட்டை இருக்கிற படங்களைக் காட்டு என்றார்"

 

அவர் ஒரு ஓய்வு பெற்ற சித்திர ஆசிரியர், வீட்டில் அழகான படங்களை வரைந்து வைத்திருந்தார்.

ஒவ்வொரு படமும் எத்தனையாம் ஆண்டு, எப்ப வரைந்தது என்று விளக்கங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரது மனைவியும் தான் செய்த கைவினைப் பொருட்களைக் காட்டிக்கொண்டிருந்தார்.

 

"பிரியா அவருக்கு ஏதும் படம் வரையணும் என்றால் சொல்லு நான் வரைஞ்சு தாறேன்"

 

வேண்டாம் அங்கிள், அங்கையே அவங்க ஊர் ஆக்கள் வரைவாங்கள். எனக்கு என்னோடை படம் ஒன்றை வரைஞ்சு குடுத்தவர், தேவை இல்லை அங்கிள். சரி அங்கிள் நாங்கள் போட்டு வாறம்.

 

"அவர்களிடம் இருந்து விடை பெற்று வரும் போது மாமா,ஆன்டி எல்லாரும் வந்திருந்தார்கள் கொஞ்ச நேரம் இருந்து கதைத்து விட்டு, பார்த்துப் போயிட்டு வாங்க .. போய் கோல் பண்ணுங்க, அங்கை எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கோ, நேரத்துக்கு எல்லாம் சாப்பிட வேணும், உடம்பைப் பார்த்துக்கோங்க .." "பை.."!!

 

கூட இருந்த எல்லாரும் விலகும் போது இருள் போல வீட்டிலும் சோக அலைகள் பரவ ஆரம்பிக்கின்றன..

 

"இந்த நாட்கள் மட்டும் இப்படியே நின்றுவிட்டால் என்ன? நமக்காக இந்த சூரியன் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாத என்று மனம் ஏங்கியது".

 

அதிகாலை நாலரை மணிக்கு விமானம் 2:45க்கு வரச்சொல்லி காருக்குச் சொல்லி இருந்தோம்.

 

சந்தோசமான தருணங்களில் எல்லாம் விரைவாய்ச் சுழன்றிடும் கணப்பொழுதுகள். இன்று நம் வேதனைகளை அதிகரிப்பதில் என்ன சுகம் கண்டனவோ தெரியவில்லை நகர மறுத்து அடம்பிடித்தது.

 

"வாங்கோ நாங்கள் உடுபுகளை அடுக்கி வச்சிட்டு இருப்பம்."

 

ம்ம்ம்ம்ம்ம்ம்..

 

"இது அண்ணாக்கு, இது அண்ணிக்கு , இது குட்டி பசங்களுக்கு, இது உங்க பங்களாதேஸ் பிரண்டுக்கு, இது, இது ...

என்று ஒவ்வொருத்தருக்கு உரியதையும் தனித்தனியாக அழகாய் ஒழுங்கு படுத்தி அடுக்கி முடித்ததும், என் கான்ட்பாக்கில்

என் ஆவணங்களையும் எடுத்து வைத்து விட்டு வந்தோம்."

 

"சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்கோ நான் சமைச்சு வைக்கிறேன் சுடச் சுட சாப்பிடுங்கோ என்றா அத்தை."

 

குளிச்சு முடிச்சு,சுவாமி கும்பிட்டு வந்து சாப்பிட்டு இருக்கும் போது.

 

"குட்டிமா நைட் தூங்கப் போறியா"?

 

"இன்னைக்கு தூக்கம் வருமா"??

 

"அப்ப வா உனக்கு போட்டோ காட்டுறேன், விடிய விடிய பேசிட்டு இருப்போம்."

 

அவளுடைய உடுப்புக்களை விட அதிகம் அவள் அலுமாரியில் இருந்த புத்தகங்கள்.

அதிகம் டயறி எழுதும் பழக்கம், நான் புத்தகங்களை தேடும் போது டயறி கண்ணில் பட எடுத்தேன்.

 

"இதை இப்ப படிக்காதையடா கொண்டுபோய் படி என்று 2011,2012 இரு ஆண்டுகளின் டயறியை எடுத்து என் கான்ட் பாக்கில் திணித்து விட்டு" ஒரு சுமை ஆல்பம் எடுத்திட்டு வந்தாள்."

 

அத்தைக்கு குட் நைட் சொல்லிவிட்டு எமது அறையில் வந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டோம்.

 

"என் மார்பில் சாய்ந்தவளின் தலையை நான் வருடிக் கொண்டிருக்க,

பிறந்த பிள்ளையில் இருந்து நம் திருமணம் வரை எடுத்த போட்டோவிலிருந்து, வாழ்வின்

அத்தனை முக்கியமான தருணங்களிலும் எடுத்த ஆயிரக்கணக்கான புகைப்படங்களையும்,பதிவுகளையும் சொல்லிக்கொண்டிருந்தாள்."

 

"பேச்சுக்கள் மௌனமாக போர்வைக்குள் ஒழிந்து கொண்டோம்." அலாரத்து மணி எம்மை அவசரப்படுத்த

2மணி போல எழுந்து தயாராகி விட்டு வந்ததும். எல்லா இடமும் சோக அலைகள் பரவ முகங்களில் கவலை ரேகைகள் படர்ந்தன.. நான் இருந்த ஒவ்வொரு இடங்களையும் திரும்ப பார்த்துக்கொண்டேன்."

 

"இன்பத்தில் திளைத்த கணங்கள் மறந்து

அவள் நினைவுகளில் கண்களில் கண்ணீர் உகுத்தது"..

 

காட்டிக் கொடுத்து அவளைக் கலங்க வைக்க மனம் இயங்கவில்லை அதனால் வழமை போலவே பேசிக்கொண்டிருந்தேன்.

 

கார் ட்றைவர் வந்திட்டேன் என்று சொல்லி தகவல் சொல்ல போனில் அழைத்தான்,

 

ஆவணங்களை எல்லாம் சரி பார்த்து விட்டு காரில் போய் ஏறிக்கொள்கிறோம், "நினைவுகளைச் சுமந்தவாறு"....

 

தொடரும்.......

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ம்ப பீலிங்க்ஸா  இருக்கு  :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு  எப்போதும்  சோகம் தான் . பிரிவுகள் வருவது மீண்டும்  இணைவதற்காக ..
.

விரைவில் ஜெர்மனிக்கு அவள் வந்து விட  வாழ்த்துக்கள்.

செல்லும்போது சாதாரணமாக சென்றாலும் பிரியும் போது மனம் அழும். உண்மையில் எனக்கும் கண் கலங்குகிறது. :(

 

இப்பகுதியை வாசிக்கும் போது நீங்களும் உங்கள் மனைவியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று தான் நினைக்க தோன்றுகிறது... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே மனம் கனத்து விட்டது பாவம் பிரியா.

அருமையான தொடர் ஜீவா.  உங்களின் தொடரை வாசித்தபோது, எனக்கு எனது சின்ன வயது ஞாபகங்கள்தான் தாலாட்டின.  அதுவும் பொங்கல், தீபாவளி சீசனில் இந்தியாவில் நின்றால் சொல்லி வேலையில்லை.  அது ஒரு கனாக்காலம்.  :(  :(  :(

 

 

உங்கள் பிரிவையிட்டு மிகவும் கவலையளிக்கிறது.  நிச்சயம் விரைவில் பிரியாவுக்கு விசா கிடைக்கும். :)  :)  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ம்ப பீலிங்க்ஸா  இருக்கு  :(

 

இன்பம்,துன்பம் எல்லாம் சேர்ந்தது தானே அண்ணா வாழ்க்கை,

எல்லாவற்றையும் அனுபவித்து தானே ஆக வேண்டும். :(

 

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் சோக கீதம பாடுறீங்கள். காத்திருக்கும் காதலுக்கு காத்திரம் அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிவு  எப்போதும்  சோகம் தான் . பிரிவுகள் வருவது மீண்டும்  இணைவதற்காக ..

.

விரைவில் ஜெர்மனிக்கு அவள் வந்து விட  வாழ்த்துக்கள்.

 

நன்றி நிலா அக்கா,

உங்கள் கருத்த்உப் பகிர்வுக்கு ... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு ரிக்கற் எல்லாரும் புக் பண்ணிட்டாங்களாம்

 

இங்கையுமா :o :o :lol::icon_idea: ???? நல்லாய்தான் கொண்டுபோறியள் ஜீவா . தொடருங்கோ .

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா தான் இப்போதைய ட்ரென்ட் டா போட்டுது .. என்ன செய்ய? :o

 

நன்றி கோமகன அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இவ்வாறான பிரிவு அனுபவம் உண்டு ஜீவா.. :( கண்கள் கலங்கியதுதான்.. :unsure:  இப்பவெல்லாம் மண்டைதான் கலங்கும்.. :lol: :lol: :lol:

எனக்கும் இவ்வாறான பிரிவு அனுபவம் உண்டு ஜீவா.. :( கண்கள் கலங்கியதுதான்.. :unsure:  இப்பவெல்லாம் மண்டைதான் கலங்கும்.. :lol: :lol: :lol:

 

:lol:  :lol:  :lol:

 

விடுங்கப்பா. அந்த நேரத்து 'பீலிங்ஸ்' அவனவனுக்குத்தான் தெரியும்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லும்போது சாதாரணமாக சென்றாலும் பிரியும் போது மனம் அழும். உண்மையில் எனக்கும் கண் கலங்குகிறது. :(

 

இப்பகுதியை வாசிக்கும் போது நீங்களும் உங்கள் மனைவியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று தான் நினைக்க தோன்றுகிறது... :rolleyes:

 

உண்மை தான் . :(

உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

நன்றி துளசி சிஸ்டர். :)

எனக்கே மனம் கனத்து விட்டது பாவம் பிரியா.

 

:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான தொடர் ஜீவா.  உங்களின் தொடரை வாசித்தபோது, எனக்கு எனது சின்ன வயது ஞாபகங்கள்தான் தாலாட்டின.  அதுவும் பொங்கல், தீபாவளி சீசனில் இந்தியாவில் நின்றால் சொல்லி வேலையில்லை.  அது ஒரு கனாக்காலம்.  :(  :(  :(

 

 

உங்கள் பிரிவையிட்டு மிகவும் கவலையளிக்கிறது.  நிச்சயம் விரைவில் பிரியாவுக்கு விசா கிடைக்கும். :)  :)  :)

 

இங்கு அனைவருக்குமே இந்தியா நல்ல பரீட்சயம் போல, பலரும் பலவித நெருக்கங்களையும்,அனுபவங்களையும் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் இப்போ..

 

நன்றி தமிழச்சி அக்கா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எல்லோரும் சோக கீதம பாடுறீங்கள். காத்திருக்கும் காதலுக்கு காத்திரம் அதிகம்.

 

நன்றி சஜீவன் அண்ணா,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இவ்வாறான பிரிவு அனுபவம் உண்டு ஜீவா.. :( கண்கள் கலங்கியதுதான்.. :unsure:  இப்பவெல்லாம் மண்டைதான் கலங்கும்.. :lol: :lol: :lol:

 

அந்தந்த நேரம் அதையதை அனுபவிப்பம். முதலும் நீங்கள் சொல்லி இருந்தீர்கள் மாம்ஸ்,

அதனால் அந்த வலியும்,வேதனையும் உங்களுக்கு நன்றாகவே புரியும்.

 

ஒரு வேளை அப்பவும் யாழ் இருந்தால், மண்டை கலங்குற அனுபவத்தையும் எழுதுறேன். :unsure:

 

நீங்களும் எழுதினால் தானே மாம்ஸ் வளரும் பிள்ளையளுக்கு உதவும். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த நேரம் அதையதை அனுபவிப்பம். முதலும் நீங்கள் சொல்லி இருந்தீர்கள் மாம்ஸ்,

அதனால் அந்த வலியும்,வேதனையும் உங்களுக்கு நன்றாகவே புரியும்.

 

ஒரு வேளை அப்பவும் யாழ் இருந்தால், மண்டை கலங்குற அனுபவத்தையும் எழுதுறேன். :unsure:

 

நீங்களும் எழுதினால் தானே மாம்ஸ் வளரும் பிள்ளையளுக்கு உதவும். :rolleyes::D

 

ஏன்? நல்லா இருக்கிறது பிடிக்கேலையா? :unsure:

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்? நல்லா இருக்கிறது பிடிக்கேலையா? :unsure:

:lol:

 

 

பொது அறிவை வளர்த்துக்கலாம் என்றாலும் விடமாட்டியள் போல ... :rolleyes::lol::icon_idea:

உங்கள் பயண அனுபவம் நல்ல விறுவிறுப்பாகவும், சுவையாகவும் இருக்கிறது. தொடர்ந்து வசித்து வருகிறேன்.

ஜீவா! நீங்கள் கதை எழுதும் விதம் மிக அருமை. இக் கதையுடன் நிறுத்தாது தொடர்ந்தும் எழுதுங்கள்!!  நாங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம். தொடருங்கள்!!

நான் பத்துவருடங்களுக்கு முதல் இந்தியாவில் திருமதியை கைப்பிடித்து விட்டு திரும்புகின்ற போது ஏற்பட்ட மனக்கீறலில் நீங்கள் நிற்கின்றீர்கள் . ஆனால் பெரிய எதிர்பார்புகள் இல்லாது நடந்துகொண்டால் ஓரளவு மனவலிகளில் இருந்து தப்பலாம் . தொடரைத் தொய்யாது தந்த ஜீவாவிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .... (இறுதிப் பகுதி)

 

என் மனத்தின் வேகத்தை அறிந்து கொண்டானோ என்னவோ, ஆளரவமற்ற சாலையில் விரைந்தான்.

இருபது,இருபத்தைந்து நிமிடங்களிலேயே விமான நிலையம் வந்துவிட்டோம். பயணப் பொதியை எடுத்துத் தந்தவன்.

 

"இறங்குறிங்களா இல்லை இதிலையே திரும்ப வாறிங்களா என்றான் அத்தையிடம்"

 

அத்தையின் முகம் பிரியாவை நோக்கித் திரும்பியது.

 

"இந்த நேரம் பஸ்ஸும் கிடைக்காது,  வேறை கோல் டாக்‌ஷிக்கு வெயிட் பண்ணுறதை விட நீங்கள் போயிடுங்க அத்தை என்றேன்."

 

"அவள் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருந்தாள் இந்த முறை உங்களை நான் சிரிச்சுக் கொண்டு வழி அனுப்ப வேணும் என்று.."

 

எனக்குத் தெரியும் பேசினாள் அவள் உடைந்து விடுவாள், அதை என்னாலும் தாங்க முடியாது, அதனால் பேசவோ, தாமதிக்கவோ விடவில்லை. " அத்தை உடம்பை பார்த்துக் கொள்ளுங்கோ,நேரத்துக்கு மருந்தைப் போடுங்கோ, மாதம் மாதம் செக்கப்புக்கு போங்கோ... சரி அத்தை போட்டு வாறேன். போனதும் கோல் பண்ணுறேன்." அத்தையிடமிருந்து விடை பெறும் போது..

 

"என் கை பிடித்த வாறே கொஞ்ச தூரம் வரை நடந்து வந்தாள்..

ஐ லவ் யூ பிரியா

 

"லவ் யூ ஸோ மச் ...............(ஜீவா)"

 

உடம்பை பார்த்துகோங்க, நேரத்துக்கு சாப்பிடவேணும் சரியா, விமானத்திலை ஏற முதல் எனக்கு கோல் பண்ணி சொல்லிடுங்க சரியா?" சில நொடி மௌனம் .........

 

"ஐ மிஸ் யூ குட்டிமா"

 

"மிஸ் யூ ரூ பேபி.."

 

"டேக் கேர்"

 

"பை"

 

"பை"

 

miss-you-15h.jpg

 

என் கைகளில் இருந்து அவள் பிடி நழுவும் போது..

 

"வலியாகவும், வலிக்கும் இடம் அறியாத போதும்

வாட்டியது அவள் நினைவு.."

 

வாசலில் இருந்த பொலிஸ் பாஸ்போட்டையும்,ரிக்கற்றையும் பார்த்துவிட்டு உள்ளே அனுமதித்தான்.

கட்டார் எயார்வேஸ் கவுண்டரில் பாஸ்போட்டை குடுத்துவிட்டு பயணப்பொதியை பெல்ட்டில் வைத்து விட்டு போர்டிங் கார்ட்டை வாங்கி கொண்டு நடக்கிறேன், இமிக்கிரேசனை நோக்கி..

 

இந்த முறை எந்தக் கேள்விகளும் இல்லை. முகத்தையும், பாஸ்போட்டையும் பார்த்து விட்டு ஒரு குத்து, விசயம் முடிஞ்சுது.

உடற்சோதனை எல்லாம் முடிந்ததும், இனி விமானத்தில் ஏறுவது தான் தாமதம்.

 

"அவளிடம் போன் பண்ணி சொல்லிவிட்டு வரவும், கட்டார் எயார் வேய்ஸ் விமானம் புறப்பட அரைமணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பு வந்தது."

 

இருக்கையில் அமர்ந்ததும் என்னவள் தந்து விட்ட டயறி ஞாபகம் வர புரட்டிப் படிக்கத்தொடங்குகிறேன்.

 

"முதலில் மேலோட்டமாக தட்டும் போது ஒவ்வொரு கலர் கலராக எழுதி,படங்கள்,ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி அழகாக இருந்தது.

 

ஒவ்வொரு பக்கத்தைப் படிக்கும் போதும் அவள் மீதான காதலும்,நேசமும்,மரியாதையும் அதிகரித்துக் கொண்டே போனது.

நான் மறந்து போன சின்னச் சின்ன விடையங்களைக் கூட பதிவு செய்திருந்தாள், சண்டை போட்டது , கோவப்பட்டதிலிருந்து

அத்தனையும், அத்தோடு கவிதைகளும் கூட..

 

"ஆண் என்ற விம்பம் நொருங்கிய கணம் அது, ஆக்கள் இருக்கிறார்களே என்பதையும் மறந்து

காட்டாற்று வெள்ளம் கல்லணையை உடைத்துப் பாய்ந்தது போல

என் கண்களை உடைத்துக் கண்ணீர் பெருகியது.."

 

"அந்த நொடியே அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. கடலலையின் ஆர்ப்பரிப்புக்கள் போல கொந்தளித்தன உணர்வுகள்.

நடைபிணமாய்ப் போனேன் அந்த நொடி.. வெறுமை என்னை ஆட்கொண்டது."

 

எல்லாரும் விமானத்தில் ஏறி விட்டார்கள் அது கூட எனக்குத் தெரியாது.

" இறுதி அழைப்பு டோஹா செல்லும் கட்டார் எயார்வேய்ஸ் பயணி ..........(ஜீவா) கேட் நம்மர் 4 க்கு வரச் சொன்ன அழைப்பு தான்

சுயநினைவுக்கு மீட்டு வந்தது".

 

பிஸ்னஸ் கிளாசுக்கு அடுத்து தான் எனது இருக்கை. 10K.. சாளரத்தின் அருகில் என்பதால் வசதியாய்ப் போய்விட்டது.

ஆனால் இந்த முறை எதையும் ரசிக்கும், வேடிக்கை பார்க்கும் மனநிலை இருக்கவில்லை.

"அவள் நினைவுகளில் கண்களை மூடிக்கொண்டேன்."

 

சென்னையில் அரைமணி நேரம் தாமதமானதால் டோஹாவில் தரிப்பதற்கு நேரமே இருக்கவில்லை, ஜேர்மனி செல்லும் பயணிகளை மட்டும் விரைவாக இறக்கி விமான நிலையத்தில் விட்டார்கள்.

எல்லா வித சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறிய சில மணிநேரங்களில் புறப்பட்டு விட்டது.

 

காலையில் விமானத்திலும் ஏதும் சாப்பிடததால் பசி வயிற்றைக் கிள்ளியது.

மதிய நேரச் சாப்பாட்டை முடித்து விட்டு மீண்டும்

"அவள் டயறியில் தொலைந்து விடுகிறேன்."

 

"கால நதிகளைக் கடந்த காரீயப் படுக்கைகளாய்- நம்

காதல் நினைவுகளைச் சுமந்திருக்கும் அவளின் கையேட்டுக் குறிப்பு"..

 

விமானத்திலிருந்து இறங்கியதும் பனிபடந்த ஜேர்மனி வரவேற்றது.

 

"இதுவரை மெத்தை நனைத்த என் மேனி

இனி கண்ணீரை ஒற்றிக் கொள்ளும் அவள் நினைவுகளில்."

 

முற்றும்.

 

 

 

 

 

 

பாராட்டுகள் ஜீவா, 

 
ஆரம்பத்திலிருந்து உங்கள் இருவரின் நட்புடனும் , புரிந்துணர்வுடனும் கூடிய காதலை ரசித்தேன். கண் பட்டு விடாமல் காலம் முழுவதும் இதே காதலுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

யாழில் ஒரு சிறந்த எழுத்தாளன் உருவாகிவிட்டான் என்பதை கட்டியம் கூறும் படைப்பு இது. உங்கள் காதலை காதலை போலவே உங்கள் வாழ்க்கையிலும் தடைகளை தகர்த்து மென்மேலும் முன்னேற மனசார வாழ்த்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.