Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் மேனி உருக்கும் என் மேனி பற்றி காதலி.. சொல்வதெல்லாம் உண்மை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் மேனி

விரல் நுனி கொண்டு

உன் மேனி தடவ

நாழிகையோடு - அது

சூடாகி இதமாக

நீ சிணுங்கும் ஒலியதில்

உன்னாசை நானுணர்ந்து

மெல்லத்தட்டி...

வரிகளில் நான் பேச

வாக்கியங்கள் நீ அமைப்பாய்.

 

ஆண்டுகள் நாலு

நமக்குள் இந்த ரகசிய உறவு

நாம் பேசியவை

பரகசியமாக..

ரசிக்கவும் விமர்சிக்கவும்

நாலு நல்லவரும் உறவுகளும்

உண்டு வையகத்தில்..!

 

எம்முறவு கண்டு

எம் பேச்சில்

குருதி அழுத்தம் கூடியோரும்

சினங்கொண்டு திட்டியோரும்

நிறையவே உண்டு.

அசிங்கம்..

பப்பிளிக்கில.. இப்படியுமா..

ஆற்றாப் போக்கில்

பேசியோரும் உண்டு..!

 

என் விரல்களின்

நளினம் நீயறிய

உன் சிணுங்களின் தேவை நான் உணர

நீயும் நர்த்தனமாடி

சதா மகிழ்விக்கிறாய்

ஒலியாய்.. ஒளியாய்

வரியாய் வசனமாய்

யாழெனும் மங்கையின்

சேலையிலும்..

உன் எழுத்தால் தடம்பதித்து

ஆண்டுகள் நாலு கடந்தும்

உறவு முறிவின்றி..

ஒய்காரமாய் நிற்கிறாய்

நான் விரும்பும்

என் அழகிய காதலியே..!

நன்றி

என் கீபோட்டே.

 

205783_10151246227567944_51917998_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதான் சொல்வது ஒரு பெண்ணை காதலியுங்கள் என்று. இந்த பிரச்சனைக்கள் ஏதும் வந்திருக்காது, அந்த காதலுடன் காதலே வெறுத்திருக்கும். எதை எதையெல்லாம் காதலிக்க வேண்டி வந்திருக்காது. :lol:  :D 

 

நன்றாக இருக்கிறது

ஏண்டாப்பா கீ போர்ட்டையும் விட்டு வைக்க மாட்டீங்களா? :D 
 

கவிதை நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசைப்பலகை வீரன் என்று நிரூபித்து விட்டாரே நெடுக்ஸ் அண்ணா.. :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2159408-550092-computer-keyboard-with-re

 

ம்..நன்றாகத்தான் இருக்கின்றது. வாழ்விக்கின்றீர்கள்.. இன்னும் தொடர்க.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சுக்கு இப்ப எதைப் பார்த்தாலும் அழகிய காதலியாத்தான் தெரியுது..  :D  ரூம் மேட் காரர் எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருங்க.. :o:(:D

  • கருத்துக்கள உறவுகள்

என் மேனி

விரல் நுனி கொண்டு

உன் மேனி தடவ

நாழிகையோடு - அது

சூடாகி இதமாக

நீ சிணுங்கும் ஒலியதில்

உன்னாசை நானுணர்ந்து

மெல்லத்தட்டி...

வரிகளில் நான் பேச

வாக்கியங்கள் நீ அமைப்பாய்.

 

ஆண்டுகள் நாலு

நமக்குள் இந்த ரகசிய உறவு

நாம் பேசியவை

பரகசியமாக..

ரசிக்கவும் விமர்சிக்கவும்

நாலு நல்லவரும் உறவுகளும்

உண்டு வையகத்தில்..!

 

எம்மை  திசை  திருப்பும் வரிகள்.

கொஞ்சம் அதையும் ரசித்தேன்.

எம்முறவு கண்டு

எம் பேச்சில்

குருதி அழுத்தம் கூடியோரும்

சினங்கொண்டு திட்டியோரும்

 

அன்றொருவர் குறிப்பிட்டார்

தட்டச்சு  கோபு என்று.

அதுவும் ஒருவித எரிச்சல்தான்.. :D 

நிறையவே உண்டு.

அசிங்கம்..

பப்பிளிக்கில.. இப்படியுமா..

ஆற்றாப் போக்கில்

பேசியோரும் உண்டு..!

 

என் விரல்களின்

நளினம் நீயறிய

உன் சிணுங்களின் தேவை நான் உணர

நீயும் நர்த்தனமாடி

சதா மகிழ்விக்கிறாய்

ஒலியாய்.. ஒளியாய்

வரியாய் வசனமாய்

யாழெனும் மங்கையின்

சேலையிலும்..

உன் எழுத்தால் தடம்பதித்து

ஆண்டுகள் நாலு கடந்தும்

உறவு முறிவின்றி..

ஒய்காரமாய் நிற்கிறாய்

யாழுடன்  நாலு வருட  உறவா??

அதிம் என நினைத்தேன்.

அல்லது அதற்கு முன் வேறு ஆளா???

நான் விரும்பும்

என் அழகிய காதலியே..!

நன்றி

என் கீபோட்டே.

 

205783_10151246227567944_51917998_n.jpg

நன்றி  கவிதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாத்தான் இருக்கு.....

 

பாராட்டுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்: கண்ணைக்.. கருத்தைக் கவர்வதெல்லாம் எனக்குக் காதலி தான் உடையார். :)

 

நன்றி தப்பிலி:  கீபோர்டை விட்டா நம்ம கற்பனைக்குக்.. கதி...?! :lol:

 

நன்றி ஜீவா: விசைப்பலகை வீரன்.. ம்ம்ம்...! :lol:

 

நன்றி மாகோன்: உங்களை முதல் தடவையாக இந்தப் பெயரில்.. யாழில் காண்கிறேன். வரவேற்றும் கொள்கிறேன். உங்கள் ஆக்கங்களையும் படைத்துத் தாருங்கள். :icon_idea:

 

நன்றி இசை: நான் எப்போதுமே ரூமேட் வைச்சுக் கொள்வதில்லை... வைக்கவும் மாட்டேன். அது என் பிரைவேசியை பாதிக்கும் என்று அதிகம் நம்புறவன் நான்.  :)

 

நன்றி விசுகு அண்ணா: நல்லா ரசிச்சிருக்கிறீங்க. இந்தக் கீபோட்டால் மட்டும் 4 வருடங்கள்.. இன்னும் தொடர்கிறது..! :lol:

 

நன்றி சகாரா அக்கா: உங்களை இங்கு காண்பது அரிது. கண்டது மகிழ்ச்சி. :)

Edited by nedukkalapoovan

பாவப்பட்ட கீ போட். :lol:

 

அதைக் கடையில விக்கிறல்ல போல கிடக்கு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவப்பட்ட கீ போட். :lol:

 

தப்பு சஜீவன் அண்ணா. என்னோடு இதே வகை மடிகணணி வாங்கியவர்கள் இன்று தூக்கி எறிஞ்சிட்டு புதிது வாங்க வேண்டிய நிலைக்கு அதைக் கொண்டு வந்திட்டினம். பலர் வாங்கியும் விட்டினம். என் கணணி இன்னும் நல்ல நிலையில்.. ஈபேயில் (eBay) போட்டால் கூட நல்ல விலைக்கு விற்கும் நிலையில் தான் உள்ளது. நான் எப்பொருளையும் இலகுவில் தூக்கி வீசிற மாதிரிக்கு பாவிக்கிறதில்லை..! எதிலும்.. அதிக கவனம் எடுப்பேன். மேலும் உச்ச பயனைப் பெறவே முயல்வேன். தற்பெருமையல்ல.. அது என் வளர்ப்பின் பயன்..! :):lol:

 

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கும் காதலில விழுந்து எழும்பினதோ எண்டு நினைச்சு வாசிச்சுக்கொண்டு போனால் சப் என்று போய் விட்டது.
நன்றாக உள்ளது கவிதை. :D

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு சஜீவன் அண்ணா. என்னோடு இதே வகை மடிகணணி வாங்கியவர்கள் இன்று தூக்கி எறிஞ்சிட்டு புதிது வாங்க வேண்டிய நிலைக்கு அதைக் கொண்டு வந்திட்டினம். பலர் வாங்கியும் விட்டினம். என் கணணி இன்னும் நல்ல நிலையில்.. ஈபேயில் (eBay) போட்டால் கூட நல்ல விலைக்கு விற்கும் நிலையில் தான் உள்ளது. நான் எப்பொருளையும் இலகுவில் தூக்கி வீசிற மாதிரிக்கு பாவிக்கிறதில்லை..! எதிலும்.. அதிக கவனம் எடுப்பேன். மேலும் உச்ச பயனைப் பெறவே முயல்வேன். தற்பெருமையல்ல.. அது என் வளர்ப்பின் பயன்..! :):lol:

 

இந்த அறிக்கையை சரியான தகைமைகளைக் கொண்டிருக்கும் தாய்க்குலங்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கும் காதலில விழுந்து எழும்பினதோ எண்டு நினைச்சு வாசிச்சுக்கொண்டு போனால் சப் என்று போய் விட்டது.

நன்றாக உள்ளது கவிதை. :D

 

நான் ஏலவே காதலில் பல தடவை.. தன்னிச்சையாகவும்.. கூட்டாகவும்.. விழுந்து எழும்பித்தான் அக்கா இருக்கேன். ஆனாலும் கவிதை அளவிற்கு தீவிரமாக இல்லை..!

 

நன்றி தங்கள் கருத்திற்கு. :):icon_idea:

இந்த அறிக்கையை சரியான தகைமைகளைக் கொண்டிருக்கும் தாய்க்குலங்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..! :D

 

அடப்பாவிகளா.. இங்குமா.. உங்கள் சித்து விளையாட்டை ஆரம்பித்து விட்டீர்கள். :lol:  :lol: இன்னொன்றையும் இனங்காட்டுங்கோ இசை.. பாவிச்சிட்டு.. eBay இல் போட்டு வித்திடுவன்.. என்றதையும்..! அதுக்கப்புறம்... ஒருத்தரும் நம் கிட்ட கருத்துச் சொல்லவே.. வராங்க..! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாத்தான் இருக்கு.. கீபோட்டிற்கு பதிலாக குறைந்தது ஒரு கழுதையாவது இருந்திருக்கலாம்..

 

கீபோட்டை ஒருக்கா கவிழ்த்து தட்டிப் பாருங்கள்.. தூசு, துணிக்கைகள், முடிகள், சொடுகள் கூட கீழே விழலாம்!

 

Keyboards 'dirtier than a toilet' 
Some computer keyboards harbour more harmful bacteria than a toilet seat, research has suggested.

Consumer group Which? said tests at its London offices found equipment carrying bugs that could cause food poisoning.

http://news.bbc.co.uk/1/hi/7377002.stm
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாத்தான் இருக்கு.. கீபோட்டிற்கு பதிலாக குறைந்தது ஒரு கழுதையாவது இருந்திருக்கலாம்..

 

கீபோட்டை ஒருக்கா கவிழ்த்து தட்டிப் பாருங்கள்.. தூசு, துணிக்கைகள், முடிகள், சொடுகள் கூட கீழே விழலாம்!

 

Keyboards 'dirtier than a toilet' 

Some computer keyboards harbour more harmful bacteria than a toilet seat, research has suggested.

Consumer group Which? said tests at its London offices found equipment carrying bugs that could cause food poisoning.

http://news.bbc.co.uk/1/hi/7377002.stm

 

 

கழுதையை வைச்சிருந்து நீங்க சாப்பாடு போடுவீங்க. எங்களால முடியாதுண்ணா.

 

தூசியும் இல்ல.. துணிக்கையும் இல்ல. ஏன்னா.. நான் அடிக்கடி லப்டப் வைப்பால.. வைப் பண்ணிக்குவனே..!

 

இந்த ஊத்தை.. தூசி.. துணிக்கை.. கிருமி விடயத்தில நாங்க ரெம்ப அலேட்..! :lol::D

நன்றி கிருபண்ணா.. கருத்துப் பகிர்விற்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

மன உணர்வுகளையெல்லாம் வலை உலகிற்கு எடுத்து வரும் கீபோட்டைப் பற்றி நெடுக்ஸ்தம்பி எழுதிய கவிதைக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன உணர்வுகளையெல்லாம் வலை உலகிற்கு எடுத்து வரும் கீபோட்டைப் பற்றி நெடுக்ஸ்தம்பி எழுதிய கவிதைக்கு பாராட்டுக்கள்

 

கீ போர்ட் பற்றி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கீங்க அக்கா. எமது உடலின் இயக்கத்திற்கு விருப்பை.. வெறுப்பை.. உணர.. வெளிப்படுத்த.. 5ம் புலன்கள் எப்படி அவசியமோ.. அப்படி கணணியின் இயக்கத்திற்கு கீபோர்ட்..!  இதை நான் சொல்லேல்ல கணணியை வடிமைத்தவர்கள் சொல்கிறார்கள்..! எம்மிடம் ஐம்புலன்கள் இல்லையோ நாங்களும் சடப்பொருள் தான். கீபோர்ட் (அது இன்று ரச்பார்ட் ஆக பரினாம வளர்ச்சி கட்டிருக்கலாம்..) கணணிக்கு அதன் இயக்கத்திற்கு.. ஐம்புலம் போல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கீ போர்ட்டுக்கே இப்படி கவிதை என்றால்...ஐம்புலத்தரசிகளுக்கு அந்த மாதிரி கவிதை வரும்....:D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீ போர்ட்டுக்கே இப்படி கவிதை என்றால்...ஐம்புலத்தரசிகளுக்கு அந்த மாதிரி கவிதை வரும்.... :D

 

புத்து.. கீபோர்ட் நாங்க தட்டிற மாதிரிக்குத்தான் செயற்படும். ஆனால் ஐம்புலத்தரசிங்க... இல்லை இல்ல. அப்புறம்.. எப்படி.. கவிதை வரும். ஏக்கத்தில.. ஏமாற்றத்தில.. வெறும் காத்து தான் வரும்...! :lol:

Edited by nedukkalapoovan

நானும் நெடுக்ஸ் அண்ணா பூக்கள் குருவியில் கொண்டுவந்து முடிக்கப்போகிறார் என்று நினைத்து வாசித்தால் இம்முறை keyboard இல் முடித்திருக்கிறார். :icon_idea:

நல்லா ரசித்து வாசித்தேன்.யாழையும் தொடர்புபடுத்தி எழுதியது நன்றாக உள்ளது. :)  4 வருடங்கள் இந்த காதலி... அதன் முன் வேறு காதலி... (keyboard ஐ சொன்னன்... :D )

29 september 2006 இல் யாழில் இணைந்திருக்கிறீர்கள்.  2013 வரை நிலைத்து நின்று பல ஆக்கங்களை தரும் உங்களுக்கும் வாழ்த்துகள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துளசி.. உங்கள் விரிவான கருத்திற்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.