Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

CIMG5609.jpg

வேலி

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது.

"கதியால்" என் அப்பு போட்டது.

"கம்பி" என் அப்பா போட்டது.

"மட்டை "என் அண்ணா வரிந்தது.

அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான்.

ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு.

என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை.

என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார்.

நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார்.

இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான்.

அப்ப எங்க “பிழை” நடந்தது?

எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே.

எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே.

எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம்.

எவனடா எங்களின் வேலியை தள்ளி விழுத்தினது?

எவனடா எங்களின் முற்றத்துக்கு வந்தது?

வேலி விழுந்துபோனதால் “ நாய்கள்” உள்ளே வரலாம்.

நாய்களோடு சேர்ந்து “ நரிகளும்” உள்ளே வரலாம்.

அந்த நரிகளோடு சேர்ந்து சில “பன்றிகளும்” உள்ளே வரலாம்.

நாய்களையும் நரிகளையும் பன்றிகளையும் துரத்திவிட்டு

கெதியில வேலையை அடைக்கவேணும்.

வேலி ஒழுங்கா இருந்தால்த்தான் 

வீடு அறுக்கையா இருக்கும்.

கிணத்தடி வேலி விழுந்து போனால் 

அக்கா “மானத்தோடு” குளிக்கவும் ஏலாது.

ஒழுங்கையால போற வாறவன் எல்லாம்

எட்டிப் பாத்து விட்டுத்தான் போவான்.

அது அவன்ர பிழையில்லை 

எங்கட பிழை.

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

இந்த முறை வேலி அடைக்கும் போது

கதியால்களை கொஞ்சம் ஆழமாக போடவேணும்.

கொஞ்சம் கூடவா பக்கத்தில பக்கதிலயும் போடவும் வேணும்.

முள்ளுக்கம்பி கம்பி நாலு வரி கூடவும் போடவேணும்.

இன்னும் கொஞ்சம் உயரமாவும் போடவேணும்.

பனம் மட்டை வரியும் போது இன்னும் கொஞ்சம் இறுக்கமா

கிட்ட கிட்ட வரியவேணும்.

நான் சொல்ல வேண்டியதில்லை அது “அண்ணனுக்கு” தெரியும்.

அவனுக்கு துணையா “ நானும்” இருக்கோணும்.

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

கெதியில வேலி அடைக்கவேணும்.

தமிழ்ப்பொடியன்

உள்ளே நுழைந்த நாய்களையும் நரிகளையும் பன்றிகளையும் கலைத்து அல்லது ஒழித்து விட்டு வேலியை வடிவா போடுங்கோ தமிழ்ப் பொடி  வாழ்த்துக்கள் இணைப்பிற்கு  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமுள்ள முள்ள  சிலேடைக் கவி வரிகள். பாராட்டுக்கள்.  விரைவாக அடைக்கவேண்டும். யார் செய்வார்கள்...............?

  • தொடங்கியவர்

உள்ளே நுழைந்த நாய்களையும் நரிகளையும் பன்றிகளையும் கலைத்து அல்லது ஒழித்து விட்டு வேலியை வடிவா போடுங்கோ தமிழ்ப் பொடி  வாழ்த்துக்கள் இணைப்பிற்கு  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

பக்கத்து வீ(நா)ட்டுக்காரன் தான் வேலியை பிரிச்சு இந்த நாய்ளையும் பன்றிகளையும் நரிகளையும் உள்ள விட்டது.

முதல்ல அவனை ஒரு வழி பண்ண வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தயார்தான். ஆனால் உள்ளுக்குள் வந்த அந்நிய விலங்குகளை வைத்துக்கொண்டேவா வேலை அடைப்பது. அடைப்பதற்கு கம்பியும் இல்லை மட்டையும் இல்லை. எதைக்கொண்டு அடைப்பீர் வேலி  தமிழ்ப் பொடியன்?????

  • தொடங்கியவர்

அர்த்தமுள்ள முள்ள  சிலேடைக் கவி வரிகள். பாராட்டுக்கள்.  விரைவாக அடைக்கவேண்டும். யார் செய்வார்கள்...............?

யாரும் வரமாட்டாங்கள். போனமுறையும் நாங்கள் தான் அடைச்சனாங்கள். இந்தமுறையும் நாங்கள் தான் செய்ய வேணும்.

என்ன இந்த முறை கம்பியில “கரண்டு” பாய்ச்ச வேணும். கதியாலுகள “கருங்கல்லில” போடவேணும்.அப்பதான் கொஞ்சம் “உறுதியா” வேலி இருக்கும். போன முறை சில “கதியாலுகளை” கறையான் அரிச்சுப்போட்டுது.

  • தொடங்கியவர்

அண்ணன் தயார்தான். ஆனால் உள்ளுக்குள் வந்த அந்நிய விலங்குகளை வைத்துக்கொண்டேவா வேலை அடைப்பது. அடைப்பதற்கு கம்பியும் இல்லை மட்டையும் இல்லை. எதைக்கொண்டு அடைப்பீர் வேலி  தமிழ்ப் பொடியன்?????

பாத்தியளோ இப்பவும் “அண்ணன்” அடைப்பான் எண்டுதான் நினைக்கிறியள். ஏன் இந்தமுறை நீங்கள் அடைச்சால் என்ன? 

உள்ள வந்ததுகளை கலைச்சுப்போட்டுத்தான் வேலி அடைக்கவேணும்.

யார் சொன்னது கம்பியும் மட்டையும் கதியாலும் இல்லையெண்டு.

கவனமா பாருங்கோ கீழ விழுந்துபோய்த்தான் கிடக்குது.

திருப்ப எடுத்து கவனமா அடைச்சால் சரி.

என்ன சில கதியாலுகள் மட்டும் “கறையான்” பிடிச்சிட்டுது.கவனிக்காமல் விட்டிட்டம்.அஅதுதான் நாங்கள் விட்ட பெரிய பிழை.

  • போடவேணுமெடா தமிழ்பொடிய வேலி.போடும் வேலி பண்ணிகளுக்கும் எருமைகளுக்கும் மட்டுமல்ல நம்மளோடையே கூட இருந்து நடித்துக்கொண்டும் குளிபறிக்கும் எட்டப்பனுகலுக்கும்தாண்டா.எருமைகளாலும் பண்ணிகளாலும் வந்த அழிவைவிட நாங்கள் நம்பி இருந்த எங்கள் கூட இருந்த எட்டப்பன்கள் அழித்ததான் பேரழிவெடா.அவன்களுக்கு வேலியை எப்படிப் போடுவது என்பதுதான் இன்னும் தெரியேல்லை.முதல்ல இவங்களை எங்கடை எல்லைக்கு வெளியில புடிச்சுக்கொண்டுபோய் விட்டிட்டு கதியாலை போடவேணும்.

கவிதைக்கு நன்றி நண்பா. :)
எங்கட வளவு வேலியை நாங்கள்தான் அடைக்கோணும். இந்தமுறை நிச்சயமா பலமா அடைப்பம்.
 
CIMG5609.jpg

வேலி

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது.

"கதியால்" என் அப்பு போட்டது.

"கம்பி" என் அப்பா போட்டது.

"மட்டை "என் அண்ணா வரிந்தது.

அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான்.

ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு.

என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை.

என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார்.

நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார்.

இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான்.

அப்ப எங்க “பிழை” நடந்தது?

எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே.

எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே.

எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம்.

எவனடா எங்களின் வேலியை தள்ளி விழுத்தினது?

எவனடா எங்களின் முற்றத்துக்கு வந்தது?

வேலி விழுந்துபோனதால் “ நாய்கள்” உள்ளே வரலாம்.

நாய்களோடு சேர்ந்து “ நரிகளும்” உள்ளே வரலாம்.

அந்த நரிகளோடு சேர்ந்து சில “பன்றிகளும்” உள்ளே வரலாம்.

நாய்களையும் நரிகளையும் பன்றிகளையும் துரத்திவிட்டு

கெதியில வேலையை அடைக்கவேணும்.

வேலி ஒழுங்கா இருந்தால்த்தான் 

வீடு அறுக்கையா இருக்கும்.

கிணத்தடி வேலி விழுந்து போனால் 

அக்கா “மானத்தோடு” குளிக்கவும் ஏலாது.

ஒழுங்கையால போற வாறவன் எல்லாம்

எட்டிப் பாத்து விட்டுத்தான் போவான்.

அது அவன்ர பிழையில்லை 

எங்கட பிழை.

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

இந்த முறை வேலி அடைக்கும் போது

கதியால்களை கொஞ்சம் ஆழமாக போடவேணும்.

கொஞ்சம் கூடவா பக்கத்தில பக்கதிலயும் போடவும் வேணும்.

முள்ளுக்கம்பி கம்பி நாலு வரி கூடவும் போடவேணும்.

இன்னும் கொஞ்சம் உயரமாவும் போடவேணும்.

பனம் மட்டை வரியும் போது இன்னும் கொஞ்சம் இறுக்கமா

கிட்ட கிட்ட வரியவேணும்.

நான் சொல்ல வேண்டியதில்லை அது “அண்ணனுக்கு” தெரியும்.

அவனுக்கு துணையா “ நானும்” இருக்கோணும்.

நிமிர்ந்து நின்ற வேலி - இன்று

மல்லாக்காய் கிடக்கிறது.

கெதியில வேலி அடைக்கவேணும்.

தமிழ்ப்பொடியன்

கவிதைக்குப் பாராட்டுக்கள் தமிழ் பெடி .  எனது புத்திமதி கேட்டு நடந்ததிற்கும் டபுள் நன்றி :lol: :lol: :icon_idea: .

நீங்கள் முதல்  போட்டது முள்முருங்கை வேலி

சுற்றவர  குத்த வெட்டிவிட்டாங்காள்  மரம்  காலி

திருப்பி போட நிற்பது   பப்பா மரத்தில வேலி

பார்க்கத்தான்  உயரம் ஆனால் உள்ளுக்க  சோத்தி

சும்மா  வேலி  சண்டையில உயிரை விடாமல்

வேலியே இல்லாமல் நட்பாய் வாழ பழகுங்கோ

நாலு  உலகம்  படிச்சு  நாகரீகம் அடைந்து

அக்கா ஆசை தீர குளிக்க யக்கூசி கட்டுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனங்களின்ரை மனோபாவத்தை வேலியாலை கொண்டுவந்திருக்கிறியள் தமிழ்பொடியன் . வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லவருவது எனக்குப்புரிகிறது

நான் இதற்கு என்ன  சொல்வேன்

இங்கு அது எல்லோருக்கும் தெரியும்

கண்டதும் வந்துபோக

கண்ணுவைக்க

காற்றோட்டமாக விடுங்கள் என்று

கடைசிவரை சொல்லமாட்டேன்

பறவைகள் கூட  கூடுகட்டி வாழும்போது

என் வீட்டு  வளவுக்குள்

என் அனுமதியின்றி

எவரும் வருவதை

எப்படி விரும்பமுடியும்???

நீங்கள் முதல்  போட்டது முள்முருங்கை வேலி

சுற்றவர  குத்த வெட்டிவிட்டாங்காள்  மரம்  காலி

திருப்பி போட நிற்பது   பப்பா மரத்தில வேலி

பார்க்கத்தான்  உயரம் ஆனால் உள்ளுக்க  சோத்தி

சும்மா  வேலி  சண்டையில உயிரை விடாமல்

வேலியே இல்லாமல் நட்பாய் வாழ பழகுங்கோ

நாலு  உலகம்  படிச்சு  நாகரீகம் அடைந்து

அக்கா ஆசை தீர குளிக்க யக்கூசி கட்டுங்கோ.

வேலியே போடத்தெரியாமல்  வேலி போடுறோம் என்று சாப்பிட்டே காலம் கழித்தவர்களும்  வேலியப் போடா விடாமல் காட்டிக் கொடுத்தவர்களும்  இருக்கும் பொழுது முள் முருங்கை வேலி ஆவது போட்டு 30 வருஷம் கட்டிக் காப்பற்றினான்களே அதுவே பெரிய விஷயம்  :lol:

எங்கடை சனங்களின்ரை மனோபாவத்தை வேலியாலை கொண்டுவந்திருக்கிறியள் தமிழ்பொடியன் . வாழ்த்துக்கள் .

எப்படி? எனக்கு புரியவில்லை.நான் நினைக்கிறேன் நீங்கல் இந்த கவிதையை தவறாக விளங்கி கொண்டிருக்கிறீர்கள் அல்லது நாங்கள் தவறாக விலங்கி கொண்டிருக்கிறம் என்று? எது சரி என்பதை தமிழ் பொடியன்தான் சொல்லவேணும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான 'சிலேடைக் கவி', தமிழ்ப்பொடியன்! :D

வேலி அறுக்கையாத் தான் இருந்தது. ஆனால், நிலத்துக்கு அடியில இருந்த கறையான்களைக் கவனிக்காம விட்டிட்டம்!

அதுகள், வேரில வாய் வைக்கிறபோது தான் முழிச்சுப்பாத்தம்!

எல்லாமே பிந்திப் போச்சு!

இப்ப கக்கூசுக்கே வழியில்லாம இருக்கிற நிலையில, யக்கூசி கட்டச் சொல்லிச் சில சனம் சொல்லுது! :wub:

தலையைக் கொண்டுபோய் வேலியில முட்டலாமெண்டால், இப்ப வேலியும் இல்லை,எங்களுக்கு! :o

நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு.

நியானி: தேவையற்ற வசனம் தணிக்கை

Edited by நியானி

அர்த்தமுள்ள கவி, மனசு வலிக்கும் கரு. 

:( ம்ம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள். நல்ல வேலி போடேக்க நாங்களும் நிண்டு போடவேணும். வாழ்த்துக்கள் தமிழ் பொடியன்.

  • தொடங்கியவர்

நல்ல அருமையான 'சிலேடைக் கவி', தமிழ்ப்பொடியன்! :D

வேலி அறுக்கையாத் தான் இருந்தது. ஆனால், நிலத்துக்கு அடியில இருந்த கறையான்களைக் கவனிக்காம விட்டிட்டம்!

அதுகள், வேரில வாய் வைக்கிறபோது தான் முழிச்சுப்பாத்தம்!

எல்லாமே பிந்திப் போச்சு!

இப்ப கக்கூசுக்கே வழியில்லாம இருக்கிற நிலையில, யக்கூசி கட்டச் சொல்லிச் சில சனம் சொல்லுது! :wub:

தலையைக் கொண்டுபோய் வேலியில முட்டலாமெண்டால், இப்ப வேலியும் இல்லை,எங்களுக்கு! :o

 நன்றி அண்ணை..!!!

உண்மைதான் வேலி அறுக்கையாத்தான் இருந்தது.கறையானுகளைத்தான் கவனிக்காமல் விட்டிட்டம்.100% உண்மை.

அண்ணை சிலதுகள் “குதர்க்கமா” பேசியே பப்ளிசிட்டி தேடுவாங்கள்.அதை நீங்கள் மாத்த வெளிக்கிட்டால் நீங்களும் அவையளோட சேர்ந்திடுவியள். கலர் கலரா கருத்து சொல்லியே மடக்கிப்போடுவாங்கள்.கவனம்.

யக்கூசி கட்டசொன்ன அறிவுக்கொழுந்தை குடும்பத்தோட கொண்டுபோய் வன்னியில வேலியில்லாத வீட்டில விட்டு விட்டு வாங்கோ. அவர் அங்க உள்ள நாய்களோடும் பண்டிகளோடும் “ஒற்றுமையா” கூடிப்பழகட்டும்.

அப்ப தெரியும்.

பு.மு / பு.பி எண்டு காலம் பிரிச்ச  சிலரின்ர “மரமண்டையில” இதுகள் எல்லாம் ஏறாது.

கவிதைக்கு நன்றி நண்பா. :)

எங்கட வளவு வேலியை நாங்கள்தான் அடைக்கோணும். இந்தமுறை நிச்சயமா பலமா அடைப்பம்.

வேலியில போன ஓணானை இழுத்துக்கொண்டு வந்து விட்டிட்டாய் மச்சி.

என்ர பாட்டுக்கு “facebook" கவிஞனாக இருந்தன். யாழுக்கு வரச்சொன்னாய்.

சந்தோசம் தானே....!!! :D

ஆரையும் பிழை சொல்லிக் கொண்டிருக்கேலாது. இறுக்கமா தான் வேலி போட்டனாங்கள். சூறாவளி கொஞ்சம் ஓங்கி அடிச்சதால வேலி கொஞ்சம் லூசா போட்டுது. அது லூசா இருந்ததைக் கண்டதும் போறவன் வாறவனெல்லாம் வேலியில உதைய வெளிக்கிட்டிட்டான்...

பண்ணிகளுக்கும் நரிகளுக்கும் எருமைகளுக்கும் வீட்டுக்குள சாப்பாடு போடாம விட்டா அதுகள் தானாவே போயிடும். இல்லாட்டி அடிச்செண்டாலும் கலைக்க வேணும். கவலைப் படாதீங்கோ... வேலி விழுந்ததில நாங்கள் கவலைப் பட்டதை விட அதைக் கஸ்ரப்பட்டு அடைச்ச அண்ணனுக்கு தான் வலி அதிகம். இப்ப எங்களுக்கு அனுபவம் இருக்கெல்லோ... இனி வேலியை நல்ல ஆழமா புதைச்சு போடுவோம்.சூறாவளி வந்தாலும் ஆட்டம் காணாத மாதிரி...

அட....கொஞ்சம் பொறுங்கோ வாறன்... வேலி வேண்டாமெண்டும் யக்கூசி கட்டச் சொன்னவருக்கும் நான் அங்க போய் பதில் சொல்லப் போறன்..

நீங்கள் முதல்  போட்டது முள்முருங்கை வேலி

சுற்றவர  குத்த வெட்டிவிட்டாங்காள்  மரம்  காலி

திருப்பி போட நிற்பது   பப்பா மரத்தில வேலி

பார்க்கத்தான்  உயரம் ஆனால் உள்ளுக்க  சோத்தி

சும்மா  வேலி  சண்டையில உயிரை விடாமல்

வேலியே இல்லாமல் நட்பாய் வாழ பழகுங்கோ

நாலு  உலகம்  படிச்சு  நாகரீகம் அடைந்து

அக்கா ஆசை தீர குளிக்க யக்கூசி கட்டுங்கோ.

சுத்திவர வேலி குத்தினது எண்டால் விலகியெல்லோ போயிருக்கோணும்... அடுத்தவன்ர வளவு வேலியில வந்து முதுகு சொறிஞ்சா குத்தும் தான். 

அடுத்த வேலி போட முதலே எதுக்கு முந்திரிக் கொட்டை மாதிரி நிக்கிறியள்... நாங்கள் பப்பாவில வேலி போடுறதுக்கு முட்டாள்கள் இல்ல..எங்கட பரம்பரையில இதுவரைக்கும் பப்பாவில வேலியடைச்சதா சரித்திரமும் இல்ல... வேலியடைக்க பஞ்சைப்படுற சோம்பேறிகள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ... அடைக்கிறவையையாவது விடுங்கோ.. இப்பவே இப்ப்டிக் கதக்கிறீங்கள் எண்டால்.. வேலி விழேக்க நீங்கள் புதினம் பார்த்த ஆளாத்தான் இருந்தியளோ தெரியாது...

என்னது... வேலி வேண்டாமோ... இப்பிடி கோபம் வாறமாதிரி பகிடிவிடக் கூடாது பாருங்கோ... வீடு வளவெண்டால் வேலி இருக்க வேணும்.. ஆனால் நாங்கள் படலையும் நல்லா பெரிசா தான் போடுவம்... நட்பா பழகிறதுக்கு படலையால வாங்கோ... நாங்களும் படலையால போய் தான் நட்பா பழகுவம்....

ஹ்ம்... நாலு உலகம் படிச்சு நாகரீகம் அடைஞ்சாலும் கிணத்தடியில நிண்டு காத்தாடக் குளிக்கிற சுகம் யக்கூசில வராது பாருங்கோ... அதெல்லாம் உங்களுக்கு தெரியாது பாருங்கோ.. உப்பிடியே நாகரீகம் நாகரீகம் எண்டு யக்கூசில கிடவுங்கோ... ஒருநாளைக்கு உங்கட பைப் உடைஞ்சு போனால் கிணறும் இல்லாமல் நாறுவியள்...

அருமையான பதில் பூங்கோதை. நெத்தியடி...!!! :lol:

வேலி எப்பாடா விழும் எண்டு பாத்துக்கொண்டிருந்து நாய்களோடும் நரிகளோடும் உள்ளே போகும் “சிலதுகளை”

திருத்தவே முடியாது. 

சொல்லித் திருந்திருந்துவார் சிறியர்.

சொல்லாமல் திருந்துவர் பெரியர்.

சொல்லியும் திருந்தார் எளியர். :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஆரம்பத்திலையே பிழை விட்டிட்டியள் பாருங்கோ..

பூட்டனிலை ஆரம்பிச்சு அண்ணனிலை கொண்டுவந்து முடிச்சிருக்கிறியள் தலைமுறைகளுக்கிடையில் இருந்த distance ஐ

கவனிச்சிங்களோ? அதுக்கதுக்குனு ஒரு காலம் இருக்கெல்லே, கதியாலும் குடை சாயப்பார்க்கும்லே..

அதைத்தான் விடுங்கோ வேலி போட்டால் மட்டும் சரியோ, இடைக்கிடை கறையான் அரிச்சால் தட்டி விட்டு, கதியாலுக்கு தண்ணி ஊத்தி,சாம்பல் போட்டு,கழிவு ஓயில் ஊத்தி விட்டு, மழை,சூறாவளி வரும் என்று தெரிந்தால் கதியால் "பாறாமல்" இருக்க முண்டுகொடுத்து.. சப்ப்பாபா................(கண்ணைக்கட்டுதே)

எவ்வளவு வேலை இருக்கு, அதை எல்லாம் பார்க்காமல் விட்டிட்டு இப்ப போய் நாய் வருது, நரி வருது , பன்னி வருது னா????

வரத்தானே செய்யும்.

"வேலி போடுறது சுகம், அதை பராமரிக்கிறது தான் கஸ்டம்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.