Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேம்பிரிச் காற்றே...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேம்ப்றிச் அனுபவம் அருமை, உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிகிறது. இடர்கள் வரும், குறிப்பாக கேலிகளாக . உறுதியுடன் தொடருங்கள். இதை சொல்லும்போது ஒருபழைய ஞாபகம், ஒரு தொழிற்சாலை கண்டீனில் மதியஉணவு ஓய்வுக்கு இருக்கும் பொது 15, 20 பேரளவில், அன்றைய உள்ளூர் பேப்பரில் ஒரு தமிழரின் படம் போட்டு அவர் ஒரு தொழிலாளியாக இருந்து மருத்துவத்துறைக்கு அனுமதி கிடைத்தது பற்றி முன்பக்கத்தில் போட்டிருந்தது. எங்களவர்களின் விமர்சனம்?? அவரின் வயது, பென்சன், ஏழுவருடபடிப்பு ........ பெரும்பாலானவர்களின் பார்வை எதிமறயாகவே இருந்தது. கேட்கவே கோபமேவந்தது......

 

நன்றி மலையான் தங்கள் கருத்திற்கு.

 

படிப்புக்கு வயதும் இல்லை எல்லையும் இல்லை..! இதுதான் என் நிலைப்பாடு..! மற்றவர்களின் கருத்தை நான் அதில் நியாயம் இல்லாத பட்சத்தில் செவிமடுப்பதில்லை மலையான்.. அதனால்.. என்னுடைய தனிப்பட்ட முடிவுகளில் வெளியார் செல்வாக்குச் செய்ய வாய்ப்பு மிக மிக மிக மிக மிக.......... குறைவு. :)

  • கருத்துக்கள உறவுகள்

கேம்பிரிட்ஜ் காற்றை யாழூடாக சுவாசிக்க வைத்ததற்கு நன்றிகள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேம்பிரிட்ஜ் காற்றை யாழூடாக சுவாசிக்க வைத்ததற்கு நன்றிகள் :D

 

நீங்களும் சுவாசிக்க வேணும் என்ற விருப்புத் தானே ஆக்கமாக உருவெடுத்தது.. வாத்தியார். நன்றி உங்கள் கருத்திற்கும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கேம்பிரிஜை போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆசை தூண்டியமைக்கு நன்றி...சுத்திக் காட்டத் தான் அங்கு ஒருவர் இருக்கிறாரே :)

  • கருத்துக்கள உறவுகள்

நகருக்கும் வந்தனான்.

 

575461_10151255845212944_1289291875_n.jp

 

இந்த மீன் தொட்டியை தெரியுதா..கிருபண்ணா.  அங்க போனன்... ஜக் அண்ட் ஜோன்ஸ் போய் ஸ்ரடண்ட் டிஸ்கவுண்டில கொஞ்சம் உடுப்பு வாங்கினன்...! மலிவா இருந்திச்சுது.

 

Lion Yard பக்கம் மாதிரி இருக்கு, ஆனால் மீன் தொட்டிகளில் நாட்டமில்லை என்பதால் சரியாகத் தெரியவில்லை.

நான் 2005 இல் கேம்பிரிட்ஜ் யூனிக்கு போனனான் அப்போது எனது 2 கசின்ஸ் படித்துக் கொண்டு இருந்தவை அங்கை. நல்ல  இடம் பழைய கட்டிடங்கள் என்றாலும்!  

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லை தொட வாழ்த்துக்கள்  நெடுக்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போயிருந்தேன் 2008 இல்.ஆனால் எனக்கு அந்த அமைதி ஏனோ பிடிக்கவில்லை.
ஆனால் கிருபன் படகுச் சவாரி பற்றிக் குறிப்பிட்டது அந்த ஏரி தான் போலும்.
கற்பதற்கும், முயற்சிக்கும் வயது ஒரு எல்லையே இல்லை நெடுக்ஸ். உங்கள்
முயற்சி வெற்றி பெறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lion Yard பக்கம் மாதிரி இருக்கு, ஆனால் மீன் தொட்டிகளில் நாட்டமில்லை என்பதால் சரியாகத் தெரியவில்லை.

 

அங்குள்ள.. பிரதான சொப்பிங் சென்ரர்... Lion Yard என்று தான் நினைக்கிறேன்... பெயரைக் கவனிக்கல்ல..!

 

மேலும் கேம்பிரிச் போன அனுபவங்களைச் சொன்ன... மற்றும் கருத்துச் சொன்ன ரதி அக்கா.. அலை அக்கா.. சுமே அக்கா..  நந்தன்.. இசைக்கலைஞன் எல்லோருக்கும் கேம்பிரிச் காற்று வாங்கியதற்கு நன்றி. :)

வாழ்த்துக்கள் ,

வெளிநாட்டு பல்கலைகழகங்களில்  அதுவும் கேம்பிரிட்ஜ்,ஒக்ஸ்போட் ,ஹவாட் போன்றவற்றில் படிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ,

 

வெளிநாட்டு பல்கலைகழகங்களில்  அதுவும் கேம்பிரிட்ஜ்,ஒக்ஸ்போட் ,ஹவாட் போன்றவற்றில் படிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் .

 

வாழ்த்துக்கு நன்றி அர்ஜூன் அண்ணா..

 

கேம்பிரிச்.. ஒக்ஸ்பேர்ட் எல்லாத்திலும் திறம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு அவர்களின் பழமை.. நீண்ட வரலாறு.. சாதனைகள்.. உலகப் பிரபல்யங்களை உருவாக்கிய பின்னணி.. என்று உலகில் ஒரு மிக கெளரவமான நிலை இருக்கே தவிர இன்றைய நிலையில்..  பாடப்பரப்புகள் விடயத்தில்... அவர்களை விடவும் திறமையாக போதிக்கும்.. ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.. ஆற்றலை வளர்க்கும் பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நெடுக்கர்! எண்ணங்கள் இனிதே ஈடேற என் வாழ்த்துக்கள். அமைதியிலும் பழமையிலும் பாடங்கள் அதிகமிருக்கும். விட்டால் திரும்பி வராது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா, மகிழ்ச்சியான செய்தி. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் ஸ்கொலிலே கேம்பிரிஜ் போய்  பொறியியல் முடித்தவர். பயங்கர மண்டைக்காய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கர்! எண்ணங்கள் இனிதே ஈடேற என் வாழ்த்துக்கள். அமைதியிலும் பழமையிலும் பாடங்கள் அதிகமிருக்கும். விட்டால் திரும்பி வராது.

 

உண்மை. எங்க அம்மம்மாட்ட (அப்பம்மா பற்றி தெரியாது ஏன்னா.. நாங்க பிறக்கேக்கையே அவா இறைவனடி சேர்ந்திருந்திட்டா :( ) இருந்த சமயோசித அறிவை அம்மாவிடம் காணவில்லை. அம்மாவிடம் இருந்த அலசல் அறிவை.. இன்றைய இளம் பெண்களிடம் காண முடியவில்லை..! இன்று எல்லாம் அவசரம்... கூகிள்.. யாகூ.. தேடல் சொல்வதே நியாயம் என்ற கணக்கில வாழ்க்கை போய்க்கிட்டு இருக்குது. அன்று 100 பேர் பல்கலைக்கழகம் போனால் 50 பேர் விஞ்ஞானியானார்கள். இன்று 100,000 போய் 1000 பேர் ஆகிறார்கள்...! இவற்றையும்.. சிந்திச்சுப் பார்க்கிறனான்... கு.சாண்ணா. சும்மாவா சொன்னாங்க.. old is gold என்று. நன்றி உங்கள் கருத்திற்கு.  :)

வாழ்த்துக்கள் அண்ணா, மகிழ்ச்சியான செய்தி. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் ஸ்கொலிலே கேம்பிரிஜ் போய்  பொறியியல் முடித்தவர். பயங்கர மண்டைக்காய்.

 

நன்றி தும்ஸ். நம்ம கூட்டுகள் சிலரும்.. ஏலவே போய் படிச்சு.. இப்ப ஒருவர் கலாநிதியாகி.. தாயகத்தில் விரிவுரையாளராக உள்ளார். இன்னிருவர் இங்கிலாந்தில் உள்ளனர்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போயிருந்தேன் 2008 இல்.ஆனால் எனக்கு அந்த அமைதி ஏனோ பிடிக்கவில்லை.

ஆனால் கிருபன் படகுச் சவாரி பற்றிக் குறிப்பிட்டது அந்த ஏரி தான் போலும்.

 

 

லண்டனில் அம்புலன்ஸ், பொலிஸ் சைரனுக்குள் வாழ்ந்தவர்கள் அமைதியான இடங்களில் பாதுகாப்பை உணரமாட்டார்கள். திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல உணர்வு வந்து மீண்டும் சைரனுக்குள் வாழ விரும்புவார்கள் என்பது தெரிந்ததுதானே.

 

மற்றது கேம்பிரிட்ஜில் ஏரி கிடையாது.  அகலம் அதிகமில்லாத ஆறு மட்டும்தான் நகரின் மேற்கு, வடக்குப் பகுதிகளினூடாக ஓடுகின்றது.

 

படித்து முடிக்கும் முன்னரே கேம்பிரிட்ஜில் முதலாவது  நேர்முகத் தேர்வுக்கு  கோடை காலத்தில் வந்திருந்தேன். ரயில் நிலையத்தில் இருந்து நகரூடாகப் போகும்போதே மனதைக் கவர்ந்துவிட்டது. இன்ரவியூ செய்தவரே தனது காரில் என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டது முடிவைச் சொல்லியிருந்தது. வேலை தொடக்கம், இரவு டின்னரின் பின்னர் 2 - 3 மணிநேரம் கொக்ரயில் குடிப்பது வரை எல்லாமே கேம்பிரிட்ஜில்தான் பழகியது.

 

எனது ஃபோனில் எடுத்தது!

 

25042011206.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மலையான் தங்கள் கருத்திற்கு.

 

படிப்புக்கு வயதும் இல்லை எல்லையும் இல்லை..! இதுதான் என் நிலைப்பாடு..! மற்றவர்களின் கருத்தை நான் அதில் நியாயம் இல்லாத பட்சத்தில் செவிமடுப்பதில்லை மலையான்.. அதனால்.. என்னுடைய தனிப்பட்ட முடிவுகளில் வெளியார் செல்வாக்குச் செய்ய வாய்ப்பு மிக மிக மிக மிக மிக.......... குறைவு. :)

 

 

படிப்பிற்கு வயசில்லை ஆனால் படிப்பே வாழ்க்கையில்லை :)
  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் தமிழர்கள் அவர்களை விட அதிகமாக இருந்தனர். இது ஒன்றும் நானாக வளர்த்துக் கொண்டதல்ல. சிங்களம் என்னுள் விதைத்துக் கொண்டது
தமிழனிடம் எனக்கு பிடித்ததே இதுதான்.....கல்விக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...இன்னுமொரு தமிழன் கேம்பிரிட்ஜ் பட்டதாரி .......
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகுச் சவாரிக்கு ஏற்ற இடம் அமஸ்ரடாம்,சுவிஸ் போன்ற இடங்கள் தான். இது எதோ காய்ந்து போன ஆறு போல் உள்ளது கிருபன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகுச் சவாரிக்கு ஏற்ற இடம் அமஸ்ரடாம்,சுவிஸ் போன்ற இடங்கள் தான். இது எதோ காய்ந்து போன ஆறு போல் உள்ளது கிருபன். :D

 

கிளிகள் இல்லாத உங்கட ஊரில் காகம்தானே கிளியாக இருக்கும் :icon_mrgreen:  

 

 

பாட்டிக்கு தடியூண்டிப் போகும் படகுச் சவாரிக்கும், சும்மா ஏறி இருந்து ஏரியையும் கரையையும் பார்க்கும் படகுச் சவாரிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் உங்கள் கருத்திற்கு.

 

நன்றி கிருபண்ணா.. படப் பகிர்விற்கு.

 

ரதி அக்கா.. எனக்கு படிப்பு வாழ்வின் ஒரு அங்கம்..! அப்படித்தான் எல்லாருக்கும் இருக்கனுன்னு அவசியம் இல்லைத் தானே. அவரவர் தேவைக்கு ஏற்றபடி அது அமையுது..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.