Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல்னா என்ன???

Featured Replies

இப்படியே கேள்வியை கல்யாணத்துக்கப்புறமும் கேட்டு கேட்டு ஒவ்வொண்டாய் விட்டு விட்டு எத்தனை பேரை கல்யாணம் செய்யப்போகிறீர்கள்..?இப்படி உங்களால் பாதிக்கப்படுபவர்களின் கண்ணீருக்கு என்ன பதில்? ஒருவரை பேசிப்பழகி வாழ்ந்து மனதை கெடுத்துவிட்டு ஏதோ ஒரு சில காரணம் பிடிக்கவில்லையாம் விட்டு விட்டு போகிறீர்களாம்..என்னவகையான மனிதர்கள் இவர்கள்..? மனித உணர்வுகள் என்ன சடப்பொருளா..? மனிதமனங்கள் என்ன உணர்ச்சியே இல்லாத ஜடங்களா..?வெறும் புணர்ச்சிக்காக இருப்பவையா..?சிலதுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசி உரையாடி மாற்றிக்கொள்ளவேண்டும்...அல்லது நீங்கள் மாறிக்கொள்லவேண்டும்..அதுதான் குடும்ப வாழ்க்கை..காதலும் அதுதான்..உங்கள் சுயநலத்துக்காக இன்னொமொரு நல்லதாய் தேடவேணும் எண்ட சுயநலத்துக்காக நம்பிக்கூட வந்தவர்களை விட்டுவிட்டு ஓடுவது கோழைத்தனம்...இப்படியான மனது ஒன்றுடன் நிறைவடையாது..இன்னொன்றை பிடித்தபின் அதைவிட இன்னொன்று பெஸ்டாய் வர அதனிடம் ஓடும் இதைவிட்டுவிட்டு..இப்படி நீங்கள் சொல்வதுபோல் மலருக்கு மலர்தாவுவதுக்கு பேர் காதல் அல்ல..அது வியாதி..கடைசியில் எயிட்சில் கொண்டுபோய்விடும் வியாதி.. :D

 

 

(இங்கு நீங்கள் நீங்கள் என்று நான் கேட்பது நிழலி என்ர மனிதனை அல்ல..இப்படியான எண்ணங்களை கருத்தை கொண்ட மனிதர்களை..)

சுபேஸ்,

உலகில் மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளையும் வெறுமனே பேசித் தீர்க்கலாம் என்றால் உலகம் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி அல்ல. மீண்டும் நான் சொல்வது இதுதான் நீங்கள் வெறுமனே உணர்ச்சித்தளத்தில் நின்று கொண்டு மனித உணர்வுகளை; முக்கியமாக காதல் / குடும்பம் என்ற கட்டமைப்புகளைப் பார்க்கின்றீர்கள். நான் நடைமுறை சாத்தியங்களைப் பார்க்கின்றேன்.

ஒவ்வாதாயினும் ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பிரச்சனைப்பட்டுக்கொண்டு இருப்பதை விட விட்டு விலகி விடுவது தான் சிறந்தது. வெறுமனே காதலித்து விட்டோம்; கலியாணம் கட்டிவிட்டோம் என்பதற்காக ஒவ்வாது போகும்போது சதா முரண்பட்டுக்கொண்டே இருப்பதை விட முறித்துக் கொண்டு விடுதலே ஆரோக்கியமானது. முரண்பட்டு விலகுவதென்பது இன்னொருவருக்காக அலைவது என்றும் அது ஈற்றில் பாலியல் நோய்களைத்தான் கொண்டுவரும் என்று நீங்கள் கூறுவதில் இருந்தே எந்தளவுக்கு சின்னதொரு வட்டத்தில் நிற்கின்றீர்கள் என்பதை உணர முடிகின்றது. நீங்கள் இருக்கும் சின்ன வட்டத்தில் இருந்து வெளி வந்து பாருங்கள் நியாயமான காரணங்களுக்காக விட்டு பிரிந்து மீண்டும் இன்னொருவருடன் இணைந்து மிகச் சிறப்பாக வாழும் ஆயிரக்கணக்கான காதலர்கள்/ குடும்பங்கள் இருக்கின்றது என்பதை பார்க்க முடியும். நான் நினைக்கின்றேன் இப்படியாக பிரிந்து பின் நல் துணையைத் தேடிக்கொண்டவர்களை நீங்கள் அருவருப்பாகதான் பார்ப்பீர்கள் என்று. ஏனெனில் உங்கள் எண்ணத்தின் அடிப்படை பாலியல் தூய்மை சார்ந்து இருக்கு. உங்கள் குறுகிய வட்டத்தின் படி புணர்ச்சி என்பது ஒன்று தான் குடும்ப / காதல் உறவுகளின் நீட்சியை தீர்மானிக்கின்றது. ஆணுறுப்பு மூலமும் பெண் உறுப்பு மூலம் மட்டும்தான் குடும்பங்களின்/ காதலின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுவதில்லை. அதையும் மீறிய எத்தனையோ விடயங்களினால் தான் அதன் நீட்சி தீர்மானிக்கப்படுகின்றது.

உங்களைப் போன்றவர்களின் குறுகிய சிந்தனைகள் எங்கள் சமூகம் முழுதும் விரவிக் கிடக்கின்றமையால் தான் சதா நேரமும் கீரியும் பாம்புமாக இருந்து கொண்டும் பேருக்காக வாழும் பலர் இன்னமும் இருக்கின்றனர்.  கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் உங்களைப் போன்றவர்கள் போர்த்திய புனிதப் போர்வையை விலக்க முடியாமல் நீதித்துறையைக் கூட நாடாமல் அந்த கொடியவனுக்காகவே சுமங்கலிப் பூசை செய்து கொண்டும் இருக்கின்றனர். தன் மனதை சதா கீறி இரத்தம் வரவழைக்கும் பெண்களை மனவியர்களாகக் கொண்ட கணவர்களும் அதே புனித போர்வையை விலக்க முடியாமல் அதுக்குள்ளேயே ரணப்பட்டு வாழ முற்படுகின்றனர்.

 

காதலும் குடும்ப வாழ்வும் மிகவும் அற்புதமானவை. அதன் அற்புதங்கள் எதிர்பார்ப்புகளாலும் விட்டுக் கொடுப்புகளாலும் தான் நிரம்பி இருக்கு. ஆளையாளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து வாழும் போது மட்டும்தான் அந்த அற்புதம் இன்னும் இன்னும் விரிவடைந்து செல்லும்.

 

"நான் உன்னில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கின்றேன்; நீயும் அப்படி இரு" என்று சொல்லி ஒரு காதல் கதை எழுதினால் கைதட்டி உணர்ச்சிவசப்பட்டு ரசிக்கலாம். ஆனால் அது நடைமுறையில் இனிமையாக இருக்காது.

 

"எனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. உனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. நான் உன் எதிர்பார்ப்புகளில்  என்னால் முடிந்தவற்றை நிறைவேற்றுவேன். நீ உன்னால் முடிந்தளவுக்கு என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று" என்று வாழும் போதுதான் அது இனிமையாகவும் நீட்சியாகவும் பொருள் பதிந்ததாகவும் இருக்கும்.

 

"என் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய எந்தவிதமான அக்கறையையும் காட்ட நீ விரும்பவில்லை என்றால்; உன் எதிர்பார்ப்புகளை தீர்க்க எந்தவிதமான அக்கறையும் காட்டஎனக்கு விருப்பமில்லை என்றால் நானும் நீயும் பிரிவதே மேல்"

 

இதுவே நான் சொல்ல முயல்வதும்; முற்றிலும் நம்புவதும்; நடைமுறையில் சாத்தியமான நன்மைகளை கொண்டு வரக் கூடியதும்.

 

(இங்கு நானும் நீங்கள் என்று குறிப்பிட்டது சுபேஸை மட்டும் குறிப்பதற்கு அல்ல. அவரை போன்ற கோடிக்கணக்கானவர்களை குறிப்பதற்கு)

 

 

  • Replies 62
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலும் குடும்ப வாழ்வும் மிகவும் அற்புதமானவை. அதன் அற்புதங்கள் எதிர்பார்ப்புகளாலும் விட்டுக் கொடுப்புகளாலும் தான் நிரம்பி இருக்கு. ஆளையாளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து வாழும் போது மட்டும்தான் அந்த அற்புதம் இன்னும் இன்னும் விரிவடைந்து செல்லும்.

 

 

"எனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. உனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. நான் உன் எதிர்பார்ப்புகளில்  என்னால் முடிந்தவற்றை நிறைவேற்றுவேன். நீ உன்னால் முடிந்தளவுக்கு என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று" என்று வாழும் போதுதான் அது இனிமையாகவும் நீட்சியாகவும் பொருள் பதிந்ததாகவும் இருக்கும்.

 

 

 

 

இதைத்தான் நன் சொல்லவந்ததும்...இந்த விட்டுக்கொடுப்பும்,எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்வது என்பதும்தான் காதல்...விட்டுவிட்டு ஓடிப்போவதல்ல...இது கண்டிப்பாக மனம்விட்டு பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட காதலர்களிடையே உயிர்வாழும்..அங்கு காதலும் வாழும்....ஏமாற்றுவதற்கென்றெ காதலிப்பவர்களைப்பார்த்து நீங்கள் காதலை எடைபோட்டால் அதுகாதலின் தப்பல்ல..இங்கு பலரும் நினைத்திருப்பது காதலென்றால் ஒருத்தங்களை பாத்ததும் ரண்டு நாள் பேசியதும் மூண்டாவது நாள் ஓடிப்போவதும் என்பதாக புரிந்துகொண்டுதான்..அப்படியல்ல..ஒருத்தங்களுடன் பேசிப்பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுப்புடன் ஒத்துவாழ்வோம் என்பதை இனங்கண்டபின் தெளிவாக தங்கள் துணையை இணங்கண்டு காதலிப்பவர்கள் கல்யாணம்செய்கிறார்கள்...குடும்ப வாழ்க்கையின் அர்த்தத்துக்கு உயிர்கொடுக்கிறார்கள்...(உதாரணத்திற்கு நாம்காதலிப்பவளுக்கு படக்கெண்டு கோபம்வரும் கத்துவாள்,திட்டுவாள் ஆனால் பாசக்காறி..பின்னாடி பீல்பண்ணி அழுவாள்,கவலைப்படுவாள் என்று எமக்கு அவளைப்பற்றி தெளிவாகத்தெரிகிறது..அதேபோல் அவளுக்கும் இவன் எனது குணத்தை அறிந்தவன்,என்னுடன் ஒத்துவரக்கூடியவன் என்னைப்போல முற்கோபம் இல்லை என்று தெரிந்து இணங்கன்டு காதலிக்கிரார்கள் என்று வைத்துக்கொளுங்கள்..நிச்சயமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அவர்கள் தெரிவு,காதல் தெளிவானது..)அந்த தெளிவில்லாமல் காதலித்தால் அதற்குபெயர் காதல் அல்ல..அது வெறும் வெளித்தோற்றக் கவர்ச்சியே..இருவரும் ஒவ்வொருவரின் மனதை,ஆசைகளை,விருப்புவெறுப்புக்களை புரிந்துகொண்டு காதலித்திருந்தால் எதுக்கு பிரிவு வரப்போகிறது?

 

நிழலி அண்ணா சொல்வதுபோல் பழகியபின் குணம் பிடிக்கவில்லை என்று பிரியலாம் என்று சொல்வது எல்லாம் காதல் என்ற நிலைக்கே வராதவர்களின் கதைதான்..அல்லது ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்லாமல் பெற்றோர்களால் திருமணம் செய்விக்கப்பட்ட சிலரின் கதைதான்..ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ளாமல்,குணமே தெரியாமல் பிற்கென்ன காதல் அங்கு இருக்காம்..உதெல்லாம் நடப்பது சும்மா பேசிப்பழகும் ஆரம்ப நிலைகளில்தான்..காதல் உண்மையில் இவங்களுடன் நான் கடைசிவரை வாழமுடியும் என்ற தெளிவு பேசிப்பழகும்போது வரும்..அந்த நிலைக்கு அப்புறம்தான் காதலே வரும்..அதுவரை இருப்பதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சியே..காதல் அல்ல..

Edited by சுபேஸ்

நிழலி அண்ணா சொல்வதுபோல் பழகியபின் குணம் பிடிக்கவில்லை என்று பிரியலாம் என்று சொல்வது எல்லாம் காதல் என்ற நிலைக்கே வராதவர்களின் கதைதான்..அல்லது ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்லாமல் பெற்றோர்களால் திருமணம் செய்விக்கப்பட்ட சிலரின் கதைதான்..ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ளாமல்,குணமே தெரியாமல் பிற்கென்ன காதல் அங்கு இருக்காம்..உதெல்லாம் நடப்பது சும்மா பேசிப்பழகும் ஆரம்ப நிலைகளில்தான்..காதல் உண்மையில் இவங்களுடன் நான் கடைசிவரை வாழமுடியும் என்ற தெளிவு பேசிப்பழகும்போது வரும்..அந்த நிலைக்கு அப்புறம்தான் காதலே வரும்..அதுவரை இருப்பதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சியே..காதல் அல்ல..

 

ஆக,பேசிப் பழகி பிறகு தான் காதல் என்று சொல்கின்றீர்கள்...அதாவது இருவரும் தங்களின் checklist இனை சரி பார்த்து அவரவர் எதிர்பார்ப்பு சரியாக இருக்கும் என்று ஓரளவுக்கேனும் உணர்ந்த பின் தான் காதல். இதைத் தான் முதல் பதிலிலேயே சொன்னன் "எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதல் சாத்தியம் இல்லை " என்று... நீங்கள் தான் இல்லை என்று அடம் பிடித்தீர்கள். :)

 

மற்றது, எவ்வளவு பேசிப் பழகியும், கட்டி நாலைந்து வருடங்களின் பின் Reality struck ஆகி ஒவ்வொருவரின் சுயரூபம் தெரிந்து விலகிப் போவர்களும் ஏராளம்; விலகாமல் சதா சண்டை பிடித்துக் கொண்டு வாழ்பவர்களும் ஏராளம். காதலிக்கும் போது ஒருவரின் சுயத்தின் 50 வீதம் கூட வெளிப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தான் நன்கு காதலித்து கலியாணம் செய்கின்றவர்களில் 50 வீதத்துக்கும் மேலானவர்கள் விவாகரத்து வரைக்கும் இன்று செல்கின்றனர்.

 

கார் ஓடுவதை பார்த்துக்கொண்டு பக்கத்தில் இருப்பதற்கும், காரை ஓடுவதற்கும் வித்தியாசம் இருக்கப்பு. :icon_mrgreen:

 

 

காதலிக்காமல் இருந்து பார்
உலகம் அழகாய்த் தெரியும்

காதலிக்காமல் இருந்து பார்
நீ விரும்புவதை மட்டும் நீ உண்பதால்
உணவும் சுவையாயிருக்கும்

காதலிக்காமல் இருந்துபார்
நீ விரும்புவதை மட்டும் நீ உடுத்துவதால்
நீ அழகாய் இருப்பாய்

காதலிக்காமல் இருந்துபார்
உனக்குப் பிடித்தவர்களுடன் மட்டும் நீ பழகுவதால்
மனிதர்களும் இனிப்பார்கள்

காதலிக்காமல் இருந்துபார்
நீ நீயாய் இருப்பாய்.

நீ நீயாய் வாழ
காதலிக்காமல் இரு.

 

காதலர் தினத்திற்கு முக புத்தகத்தில் படித்ததில் பிடித்தது .

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)
 
love.jpg
 
 
“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை மறப்பாய்.”
“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை நினைப்பாய்.”
காதலையும்,  வாழ்க்கையையும்,  மனித மனங்களையும், மனதின் தேடுதலையும், மனதின் ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.
 
ஆனால், வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.

காதல் என்பது இவ்வளவு தானா என்ன?
காதல் எவ்வளவு உயர்வானது?!
 
எதிர்கால  வாழ்க்கைக்காக, பார்த்து, ரசித்து, சிரித்து, மயங்கி, உலகே காலடியில் என்று இறுமாந்திருந்த  காதலை மறக்க முடியுமா? கவிதையா இது..? ச்ச்சீசீசீசீ எனறு தோன்றியது. ஆனால், அதுவே இன்று, சிலவற்றை படித்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, வாழ்க்கையில் அடிப்பட்டு, உலகை உணர ஆரம்பித்த பின்  கவிதையின் பொருள் உண்மையென்றே தோன்றுகிறது.
 
 
உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும்?! மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று பார்த்தால்  காதல் கூட அப்படித்தான் என்றே தோன்றுகிறது.
 
நான் பார்த்த காதலும், காதலர்களும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது.  காதலியாக அல்லது காதலனாக  பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக அல்லது கணவனாக  பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.
 
நீ  இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவனும் சொன்னாள்… அவளும்  சொன்னான்… ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் . அது நடந்ததா?! இல்லையே… ஆனாலும் வாழ்கிறோம்.
 
பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்களாக இருப்பவர்கள் ?!.  ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். அவன் அல்லது அவள்  போன பின்னால் எல்லாமே  விட்டு போய் விடவில்லை.
 
அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறோம். சினிமாவை ரசிக்க்கிறோம். இடை இடையே அவள்(ன்) ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடமோ அல்லது தன் மழலை செல்வத்திடமோ பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. 
 
பின் … “அவனி(ளி)ல்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி வாழ்வதாக” தோன்றுகிறது.
 
அப்படியெனில் காதல்..?
 
காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா..? இப்படித் தான் எதையாவது நினைத்து நாம் வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
 
இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ,  விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.
 
“எழுதுங்கள் இவன் கல்லறையில் –
 அவள் இரக்கமில்லாதவன் என்று… ”
 பாடுங்கள் இவன் கல்லறையில் –
 இவன் பைத்தியக்காரன் என்று,” 
என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?
 
போய் விட்டான்(ள்) அடுத்து என்ன செய்வது? எதிர்காலம், வேலை, குடும்பம், தங்கை, பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், ஆனால், உண்மை வேறு தானே?
 
ஏதோ ஒன்று, அவனை(ளை) விட்டு  விலகும்படி தூண்டியது என்பதே உண்மை. காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.
ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது? பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நாமாக விலகினால் நமக்கது கௌரவம். இல்லையென்றால், காயப்பட வேண்டியிருக்கும்.
 
யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும்? யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை அவனு(ளு)க்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துங்கள்.
 
வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது.  கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. அதனால், மனசை தேற்றிக் கொள்ள வேண்டும். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.
 
உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.

http://rajiyinkanavugal.blogspot.ca/2012/05/blog-post_09.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இங்கு கருத்தெழுதிய பச்சை குத்தியவர்களில் நேரடியாக கருத்துக்கூறாததால் அர்ஜுன் அண்ணாவை தவிர்த்து மற்றையவர்களில் காதலுக்கு எதிராக எழுதியவர்கள் எல்லாம்
 
1)முன்னர் பண்ணுக்கு பலரை காதலித்து திரிந்தவர்கள்,அல்லது காதலித்தவரை கைப்பிடிக்கமுடியாமல் போனவர்கள் இப்பொழுது இன்னொரு வாழ்க்கையை காதலிக்காமலே அமைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்த தேவை இல்லாமல் காதலை பொய் என்று எழுதுகிறார்கள்.. :D
 
 
அல்லது
2)காதலிக்க முயற்சி செய்தும் ஒரு பொண்ணும் மாட்டாமல் கடைசிவரை தனியவே இருப்பவர்கள் அல்லது பெற்றோர்மூலம் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அந்த கோபத்தில் காதலித்து கல்யாணம் செய்தவர்களை பார்த்து பெருமூச்சுவிடுபவர்கள்.. :D
 
அல்லது
3)அம்பிமாதிரி காதலிக்கவே தெரியாத பொண்ணுகள்/பசங்கள் என்றாலே வெக்கம்பிடித்தவர்கள்.. :D
 
அல்லது
4)வெறும் உடர்க்கவர்ச்சியால் வந்தகாதலை காதல் என்று நினைத்து ஏமாந்தவர்கள்... :D
 
இவர்கள்தான் இப்படி மூர்க்கமாக காதல் எதிர்ப்பு சங்கத்தில் இணைந்துகொன்டு காதல் பொய் என்று சொல்லிக்கொன்டு திரிகிறார்கள்..நுணா அண்ணா இனைத்த கட்டுரைபோன்று கட்டுரை எழுதுபவர்களும் இதில் ஒன்றை சேர்ந்தவர்கள்தான்...கிடைக்காவிட்டால் இப்படித்தான் ஏதாவது சமாளிப்புக்கேசன் எழுதவேண்டும்..எத்தனையோ காதலில் வென்று வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் இருக்கின்றன..நானும் பின்னர் அவற்றை தேடி இணைக்கிறேன்..எத்தனையோ என் நண்பர்கள் பலர் தெளிவாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்தவர்கள் இன்று மிகமிக மகிழ்ச்சியாக கண்முண்ணாலேயே வழும் உதாரணங்களாய் இருக்கிறார்கள்..ஏன் யாழிலேயே தும்பளையான்,மணிவாசகன்போன்ற பலர் இருக்கிறார்கள்..காதல் என்றதும் பொய்யாக காதலித்தவர்களை மட்டும் பார்க்காதீர்கள்..உண்மையாக நேசித்தவர்களையும் பாருங்கள்..எல்லாத்திலும் தப்பானவர்கள் இருப்பதுபோல் இதையும் தப்பாக பயன்படுத்துபவர்கள் இருக்கலாம்..அதற்காக உண்மையானவர்களை மறந்துபோகமுடியாது..எனவே உங்கள் துணையை உங்கள் குணத்துக்கு ஏற்றவராக உங்களை புரிந்துகொள்ளக்கூடியவராக தெளிவாக திட்டமிடுங்கள்,காதலியுங்கள்,கைப்பிடியுங்கள்,வாழ்க்கை அதைவிட இனிமையாக இருக்கவே முடியாது..
 
தெளிவாக தம் வாழ்க்கை துணையை திட்டமிடாதவர்களும்,தம்காதலில் தமக்கே நம்பிக்கை இல்லாதவர்களும்,தம் கட்டிய துணையைக் காதலிக்க தெரியாதவர்களும் இப்படித்தான் எழுதிக்கொண்டு திரிவார்கள்..அவர்களை விட்டுவிடுங்கள்..பாவம் அவர்கள்..
 
நானும் மனசுக்கு பிடிச்ச பெண்ணைதான் காதலிச்சு கட்டிக்குவேன்..சலெஞ் பண்ணிக்கிறன்.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவனைக் கேட்டால், 

சென்றுவிடு என்பான்!

சென்றவனைக் கேட்டால்,

வந்து விடு என்பான்!

தொட்டு விடும் ஆவி,

பட்டுவிடும் மேனி!

 

-கண்ணதாசன் 

  • கருத்துக்கள உறவுகள்

தாய் பிள்ளைகளைக் காதலிக்கின்றாள்..

தந்தை குடும்பத்தைக் காதலிக்கின்றார்..

குழந்தைகள் பெற்றோரை கூடப்பிறந்தோரைக் காதலிக்கின்றார்..

விஞ்ஞானிகள் அறிவியலைக் காதலிக்கின்றார்..

ஆன்மீகவாதிகள் கடவுளைக் காதலிக்கின்றார்..

அகிம்சாவாதி அமைதியைக் காதலிக்கின்றார்..

புரட்சியாளன் விடுதலையைக் காதலிக்கின்றார்..

போராளிகள் தேசத்தைக் காதலிக்கின்றார்..

கவிஞர்கள் மொழியைக் காதலிக்கின்றார்..

சூழலியலாளர்கள் சுற்றுச் சூழலை காதலிக்கின்றார்..

ஆண்கள் பெண்களைக் காதலிக்கின்றார்..

பெண்கள் ஆண்களைக் காதலிக்கின்றார்..

நான் இயற்கையைக் காதலிக்கின்றேன்..

 

அடிப்படையில் காதல் என்பது உடலும் மூளையும் கூட்டிணைந்து செயற்பட்டு உணரக் கூடிய கண்..தொடுகை காண முடியா.. ஒரு உணர்வு.

 

கண் காண முடியா.. தொடுகை உணர முடியா.. உணர்வில்.. பொய்.. களவு.. உண்மை.. சுத்தம் கண்டுபிடிப்பது மிகக் கடினம்..! இதற்கென்று விசேட கருவி ஒன்றை அறிவியல் தந்தால் அன்றி.. எது எத்தனை சதவீத உண்மைக் காதல் என்பது நிறுவிட முடியாத லாஜிக்..! அந்த வகையில்.. அடுத்தவரிடத்தில்.. உண்மையில்.. காதல் இருக்கோ இல்லையோன்னு தெரியாமல்.. தன் சார் உணர்வதில் உணர்வதைக் கொண்டு எழும்.. ஒரு நம்பிக்கையில குருட்டுவாங்கில தான் மனித வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்குது. எனவே.. இதில் நான் அந்த அனுபவத்தால.. உசத்தி நீ உசத்தி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்வது.. சரியாப் படாது.

 

Love is Blind..! என்று சொல்வோரும் உண்டு.. அதேவேளை.. Love is god என்று சொல்வோரும் உண்டு. நான் தனிப்பட்ட முறையில்.. இரண்டாவதை உச்சரிக்கிறேன்.. உணர்கிறேன்..! :):icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் வந்து பார்த்த ஒரு அருமையான கருத்தாடல்

தேவையானதும் கூட.

 

நானும் கொஞ்சம்  ஊற்றிவிடுவோம்

 

பெற்றோரும் சுயநலங்களோடு  வளர்ப்பது அதிலும் ஆண்பிள்ளை  என்றால் பிறந்த உடனேயே  பொறுப்புக்களை ஏற்படுத்திவிடுவது  தாயகத்தில் அன்று இருந்தது தானே.

இன்றும் செய்ய  பெற்றோர் தயாராக  இருந்தாலும் இன்றைய தலைமுறை அந்த பொறுப்பை எடுக்காது என்பதே நிலை.

நான் இங்கு பலமுறை குறிப்பிட்டது தான்

எனது தலைமுறையுடன் பலவும் முடிவுக்கு வருகிறது.

அதில்  இதுவும் ஒன்று.

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். :blink:  


 

 காதல் இல்லாமல் காமம் உண்டு. ஆனால் காமம் இல்லாமல் காதல் மாத்திரம் வருமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். :blink:  

 

 காதல் இல்லாமல் காமம் உண்டு. ஆனால் காமம் இல்லாமல் காதல் மாத்திரம் வருமா? :unsure:

 

 

இந்த சந்தேகம் தங்களுக்கு வரலாமா?

 

பிடிச்சிருக்கு என்பதற்குள் எதுவெல்லாம் அடங்கியுள்ளது என்று பார்த்தால் பதில் கிடைக்கும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். :blink:  

 

 காதல் இல்லாமல் காமம் உண்டு. ஆனால் காமம் இல்லாமல் காதல் மாத்திரம் வருமா? :unsure:

i

வரும் என்று தான் சொல்லுகிறார்கள், தப்பிலி. :D

 

சிறையாரு மடக்கிளியே, இங்கே வா தேனொடு பால்.

முறையாலே உணத்தருவேன், மொய்பவளத்தோடு தரளம்,

துறையாரும் கடற்றோணி புரத்தீசன் இருக்குமிடம்,

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் கூறாயோ!.  

இந்த சந்தேகம் தங்களுக்கு வரலாமா?

 

பிடிச்சிருக்கு என்பதற்குள் எதுவெல்லாம் அடங்கியுள்ளது என்று பார்த்தால் பதில் கிடைக்கும் :wub:

 

தனிப்பட்ட முறையில் எல்லாம் கலந்ததுதான் என்று உணர்கிறேன்.  

காதல் புனிதமானது, காதல் வேறு காமம் வேறு என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். இது எந்தளவுக்கு உண்மை?

i

வரும் என்று தான் சொல்லுகிறார்கள், தப்பிலி. :D

 

சிறையாரு மடக்கிளியே, இங்கே வா தேனொடு பால்.

முறையாலே உணத்தருவேன், மொய்பவளத்தோடு தரளம்,

துறையாரும் கடற்றோணி புரத்தீசன் இருக்குமிடம்,

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் கூறாயோ!.  

 

அப்படி வந்த ஆட்கள் யாராவது  வந்து விளக்கம் சொல்கிறார்களா என்று பார்ப்போம். :D

  • கருத்துக்கள உறவுகள்

 காதலிலும் பலவகைகள் உண்டுதானே. பள்ளிப் பருவத்துக் காதல் உணர்வுகளை மட்டுமே
பார்க்கும். உயர்வு தாழ்வு சரி பிழை எதுவும் பார்க்காது. பல்கலைக்
கழகத்திலோ அல்லது படித்து முடியும் தருவாயில் வரும் காதல் உணர்வுகள்
கடந்து எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்.  சிலருக்கு தானாக
ஒருவர்மேல் காதல் வரும்.சிலருக்கு எதிர்ப்  பாலார் காதலைச் சொன்ன
பின் காதலிக்கத் தோன்றும். பேசிச் செய்யும் திருமணத்திலும் காதல் வரும்.
ஆனால் அதில் காதலை மீறி கடமை கட்டுப்பாடுகள் எல்லை மீறாமைகள் எனப் பல
தடைகளும் வரும். காதலுக்கு காமமும் தேவை எனினும் காமம் இல்லாத காதலும்
நிறைய உண்டு.
எனது நண்பன் ஒருவன் இருக்கிறான். திருமணம் செய்யவேண்டும்
என்னும் நோக்கற்று இருந்தான்.கொழும்பில் இருந்த பெண் ஒருவரை அவரின்
குடும்பம் சக்கையாக உறிஞசி தம் அலுவலைப் பார்த்துக் கொண்டு திருமணமும்
செய்யாது வைத்திருந்தனர். இந்தப் பெண்ணை இவனுக்கு முன்பே தெரியும்.
எப்பவாவது அப்பெண்ணுடன் தொலைபேசியில் கதைப்பான். அவரின் நிலை அறிந்து நான்
உனக்கு கடைசிவரை துணையாக இருப்பேன். ஆனால் பிரமச்சரியத்தைக் கடைப்பிடித்த
என்னால் உறவு வைக்க முடியுமா என்று தெரியவில்லை. சேர்ந்து வாழ்வோம் என்று
இருவரும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக
காதலிக்கிறார்கள். இன்னும்
ஸ்பொன்சர் கிடைக்கவில்லை. இருவருக்கும் பருவம் தாண்டிய வயது. அப்பெண்ணுடன்
நான் கதைத்தபோது அவர் எனக்கு உடல் சார்ந்த தேவவைகள் இல்லாவிடினும் அவர்
என்னில் அன்பாக இருக்கிறாரே அது போதும் என்றார். நீங்கள்
நினைக்கலாம் இருவருக்கும் வேறு வழி இல்லை. அதனால் ஒன்றாக இருக்கப்
போகின்றார்கள் என. அப்படி அல்ல அந்தப் பெண்ணும் நல்ல ஒரு வேலை செய்துகொண்டு
கை நிறையச் சம்பாதிக்கும் ஒருவர். தனியவே வாழலாம். ஆனாலும் இருவருக்கும்
இடையில் ஏற்பட்ட அன்புதான் இருவரையும் நெருங்க வைத்திருக்கிறது.

சிலருக்கு
மனதில் கணவன்மேல் வெறுப்போ குறைகளோ இருந்தாலும் காமம் பாலம் போன்று
பிரிக்காது தொடரவைக்கும். நிழலி சொல்வதுபோல் காதலும் காமமும் இல்லாவிடில்
சேர்ந்து வாழ்தல்  பயனர்ரதுதான். சிலர் எலாவற்றையும் பொறுத்துக் கொண்டு
பிள்ளைகளுக்காகச் சேர்ந்து வாழ்வார். ஆனால் இது மற்றவர்களுக்காக வாழும்
போலி வாழ்க்கையே அன்றி இருவருக்குமே நின்மதி தரா வாக்கை. அப்படியானவர்கள்
பிரிந்து வாழ்வதே மேல். ஆனால் எம் சமூகக் கட்டுப்பாடுகள் எம்மனதில் ஆழமாக
வேரூன்றி விடதனால் சிலர் மீற அல்லது மீள முடியாது துன்பப்படுகின்றனர்.

காதல்  உலகில் மிகைப்படுத்தப் படுகின்றது.ஆனால் யதார்த்த வாழ்க்கையில் அப்படி அல்ல.

தமிழ் தேசியத்தை விமர்சித்தால் தமிழ் தேசியத்தை எதிர்க்கினம் என்று சொல்வது போலத்தான் காதலின் பரிமாணங்களை விமர்சித்தால் உடனேயே காதலை எதிர்க்கினம் என்று சொல்வதும். எதையும் வெறுமனே  உணர்ச்சி மயமாக பார்க்காமல் நடைமுறை சாத்தியங்களினூடாக பார்ப்பதே சரி.

 

எனக்கு என்றால் சுபேஸ் இந்த திரிமூலம் யாருக்கோ தூது விடுகின்றார் போல இருக்கு. ஆளும் களத்துக்கு வெளியே இருக்கும் ஆளுக்கு போல.. பாவம் பிளைச்சுப் போகட்டும்.... :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்றால் சுபேஸ் இந்த திரிமூலம் யாருக்கோ தூது விடுகின்றார் போல இருக்கு. ஆளும் களத்துக்கு வெளியே இருக்கும் ஆளுக்கு போல.. பாவம் பிளைச்சுப் போகட்டும்.... :icon_mrgreen:

 

ஒரு ஆண்பிள்ளையை  கரைசேர்த்த புண்ணியம் எமக்கு கிட்டட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்
What is love? Five theories on the greatest emotion of all
  •  
  •  
A-Bulgarian-couple-kiss-i-008.jpg
Looking for answers in Sofia's central mall, Bulgaria. Photograph: Valentina Petrova/AFP/Getty Images

"What is love" was the most searched phrase on Google in 2012, according to the company. In an attempt to get to the bottom of the question once and for all, the Guardian has gathered writers from the fields of science, psychotherapy, literature, religion and philosophy to give their definition of the much-pondered word.

The physicist: 'Love is chemistry' Jim-Al-Khalili-Jim-Al-Kha-003.jpgJim Al-Khalili

Biologically, love is a powerful neurological condition like hunger or thirst, only more permanent. We talk about love being blind or unconditional, in the sense that we have no control over it. But then, that is not so surprising since love is basically chemistry. While lust is a temporary passionate sexual desire involving the increased release of chemicals such as testosterone and oestrogen, in true love, or attachment and bonding, the brain can release a whole set of chemicals: pheromones, dopamine, norepinephrine, serotonin, oxytocin and vasopressin. However, from an evolutionary perspective, love can be viewed as a survival tool – a mechanism we have evolved to promote long-term relationships, mutual defence and parental support of children and to promote feelings of safety and security.

• Jim Al-Khalili is a theoretical physicist and science writer

The psychotherapist: 'Love has many guises' Philippa-Perry.jpgPhilippa Perry

Unlike us, the ancients did not lump all the various emotions that we label "love" under the one word. They had several variations, including:

Philia which they saw as a deep but usually non-sexual intimacy between close friends and family members or as a deep bond forged by soldiers as they fought alongside each other in battle. Ludus describes a more playful affection found in fooling around or flirting. Pragma is the mature love that develops over a long period of time between long-term couples and involves actively practising goodwill, commitment, compromise and understanding. Agape is a more generalised love, it's not about exclusivity but about love for all of humanity. Philautia is self love, which isn't as selfish as it sounds. As Aristotle discovered and as any psychotherapist will tell you, in order to care for others you need to be able to care about yourself. Last, and probably least even though it causes the most trouble, eros is about sexual passion and desire. Unless it morphs into philia and/or pragma, eros will burn itself out.

Love is all of the above. But is it possibly unrealistic to expect to experience all six types with only one person. This is why family and community are important.

• Philippa Perry is a psychotherapist and author of Couch Fiction

The philosopher: 'Love is a passionate commitment' julian_baggini_140x140.jpgJulian Baggini

The answer remains elusive in part because love is not one thing. Love for parents, partners, children, country, neighbour, God and so on all have different qualities. Each has its variants – blind, one-sided, tragic, steadfast, fickle, reciprocated, misguided, unconditional. At its best, however, all love is a kind a passionate commitment that we nurture and develop, even though it usually arrives in our lives unbidden. That's why it is more than just a powerful feeling. Without the commitment, it is mere infatuation. Without the passion, it is mere dedication. Without nurturing, even the best can wither and die.

• Julian Baggini is a philosopher and writer

The romantic novelist: 'Love drives all great stories' Jojo.jpgJojo Moyes

What love is depends on where you are in relation to it. Secure in it, it can feel as mundane and necessary as air – you exist within it, almost unnoticing. Deprived of it, it can feel like an obsession; all consuming, a physical pain. Love is the driver for all great stories: not just romantic love, but the love of parent for child, for family, for country. It is the point before consummation of it that fascinates: what separates you from love, the obstacles that stand in its way. It is usually at those points that love is everything.

• Jojo Moyes is a two-time winner of the Romantic Novel of the Year award

The nun: 'Love is free yet binds us' Catherine-Wybourne-003.jpgCatherine Wybourne

Love is more easily experienced than defined. As a theological virtue, by which we love God above all things and our neighbours as ourselves for his sake, it seems remote until we encounter it enfleshed, so to say, in the life of another – in acts of kindness, generosity and self-sacrifice. Love's the one thing that can never hurt anyone, although it may cost dearly. The paradox of love is that it is supremely free yet attaches us with bonds stronger than death. It cannot be bought or sold; there is nothing it cannot face; love is life's greatest blessing.

• Catherine Wybourne is a Benedictine nun

http://www.guardian.co.uk/commentisfree/2012/dec/13/what-is-love-five-theories

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை விமர்சித்தால் தமிழ் தேசியத்தை எதிர்க்கினம் என்று சொல்வது போலத்தான் காதலின் பரிமாணங்களை விமர்சித்தால் உடனேயே காதலை எதிர்க்கினம் என்று சொல்வதும். எதையும் வெறுமனே  உணர்ச்சி மயமாக பார்க்காமல் நடைமுறை சாத்தியங்களினூடாக பார்ப்பதே சரி.

அதே நடைமுறைச்சாத்தியங்களினூடாகத்தான் காதலை பொசிற்றிவாக பார்க்கிறேன் நான்...எதையும் எதிர்மறையாகப்பார்த்தால் எதிர்மறைதான்..எல்லாம் எங்கள் பார்வையிலும் நடைமுறைப்படுத்தல்களிலும் தெரிவுகளிலும் இருக்கு..சரியானதை இனங்கண்டு தெளிவாக இருந்தால்..நெக்கற்றிவாக பேசவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாது வாழ்வில் என்பது என் கருத்து..

 

நீங்கள் காதலின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்..மற்றப்பக்கத்தை பார்க்கவே மறுக்கிறீர்கள்..அப்புறம் எப்படி பேசுவீர்கள்..?

 

 

எனக்கு என்றால் சுபேஸ் இந்த திரிமூலம் யாருக்கோ தூது விடுகின்றார் போல இருக்கு. ஆளும் களத்துக்கு வெளியே இருக்கும் ஆளுக்கு போல.. பாவம் பிளைச்சுப் போகட்டும்....  :icon_mrgreen:

 

ஒரு ஆண்பிள்ளையை  கரைசேர்த்த புண்ணியம் எமக்கு கிட்டட்டும்  :D

 

ஆகா...புரளியைக் கிளப்பி விடுறதென்பது இதுதான்போல..அடப்பாவி அண்ணண்களா..நான் என் கருத்தைதான் கூறினேன்..இதற்கு இப்படி ஒரு அர்த்தத்தை எந்த அகராதியில் தேடிப்பிடித்தீர்களோ.. :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# படித்ததில் பிடித்தது #

(ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...)

10 வயதில் : 
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் : 
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் : 
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் : 
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...” 

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். 
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை. 


வழி-பரிமேலழகர் பரி 

Thanks to Kungumam Thozhi.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காதலைப் பற்றிய பொன்மொழிகள்:-
 
(1)காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.
 
(2)ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.
 
(3)இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.
 
(4)காதல் என்பது அழகான கனவு.
 
(5)காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
 
(6)காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.
 
(7)காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.
 
(8)சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.
 
(9)நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் இணைக்கும் விடையங்களுக்காக சொல்கிறேன்...தற்போதைய காலத்தில் இயல்பான அன்போடு பழகுவார்கள்,அல்லது காயப்படுத்த மாட்டார்கள் என்று எல்லாம் நம்ப முடியாது.என்னை பொறுத்த மட்டில் குழந்தைகளை தவிர வேறு யாரிலும் அன்பு வைப்பது சுத்த வேஸ்ட்.

 

9.ற்கு உரிய பதில் இப்போது எல்லாம் சிரிக்க வைக்க மாட்டார்கள் காலம் முழுக்க அழட்டும் என்றுட்டு விட்டுட்டு எஸ்கேப் ஆகிறவர்கள் தான் அதிகம்..ஆண்,பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ்,

உலகில் மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளையும் வெறுமனே பேசித் தீர்க்கலாம் என்றால் உலகம் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி அல்ல. மீண்டும் நான் சொல்வது இதுதான் நீங்கள் வெறுமனே உணர்ச்சித்தளத்தில் நின்று கொண்டு மனித உணர்வுகளை; முக்கியமாக காதல் / குடும்பம் என்ற கட்டமைப்புகளைப் பார்க்கின்றீர்கள். நான் நடைமுறை சாத்தியங்களைப் பார்க்கின்றேன்.

ஒவ்வாதாயினும் ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பிரச்சனைப்பட்டுக்கொண்டு இருப்பதை விட விட்டு விலகி விடுவது தான் சிறந்தது. வெறுமனே காதலித்து விட்டோம்; கலியாணம் கட்டிவிட்டோம் என்பதற்காக ஒவ்வாது போகும்போது சதா முரண்பட்டுக்கொண்டே இருப்பதை விட முறித்துக் கொண்டு விடுதலே ஆரோக்கியமானது. முரண்பட்டு விலகுவதென்பது இன்னொருவருக்காக அலைவது என்றும் அது ஈற்றில் பாலியல் நோய்களைத்தான் கொண்டுவரும் என்று நீங்கள் கூறுவதில் இருந்தே எந்தளவுக்கு சின்னதொரு வட்டத்தில் நிற்கின்றீர்கள் என்பதை உணர முடிகின்றது. நீங்கள் இருக்கும் சின்ன வட்டத்தில் இருந்து வெளி வந்து பாருங்கள் நியாயமான காரணங்களுக்காக விட்டு பிரிந்து மீண்டும் இன்னொருவருடன் இணைந்து மிகச் சிறப்பாக வாழும் ஆயிரக்கணக்கான காதலர்கள்/ குடும்பங்கள் இருக்கின்றது என்பதை பார்க்க முடியும். நான் நினைக்கின்றேன் இப்படியாக பிரிந்து பின் நல் துணையைத் தேடிக்கொண்டவர்களை நீங்கள் அருவருப்பாகதான் பார்ப்பீர்கள் என்று. ஏனெனில் உங்கள் எண்ணத்தின் அடிப்படை பாலியல் தூய்மை சார்ந்து இருக்கு. உங்கள் குறுகிய வட்டத்தின் படி புணர்ச்சி என்பது ஒன்று தான் குடும்ப / காதல் உறவுகளின் நீட்சியை தீர்மானிக்கின்றது. ஆணுறுப்பு மூலமும் பெண் உறுப்பு மூலம் மட்டும்தான் குடும்பங்களின்/ காதலின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுவதில்லை. அதையும் மீறிய எத்தனையோ விடயங்களினால் தான் அதன் நீட்சி தீர்மானிக்கப்படுகின்றது.

உங்களைப் போன்றவர்களின் குறுகிய சிந்தனைகள் எங்கள் சமூகம் முழுதும் விரவிக் கிடக்கின்றமையால் தான் சதா நேரமும் கீரியும் பாம்புமாக இருந்து கொண்டும் பேருக்காக வாழும் பலர் இன்னமும் இருக்கின்றனர்.  கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் உங்களைப் போன்றவர்கள் போர்த்திய புனிதப் போர்வையை விலக்க முடியாமல் நீதித்துறையைக் கூட நாடாமல் அந்த கொடியவனுக்காகவே சுமங்கலிப் பூசை செய்து கொண்டும் இருக்கின்றனர். தன் மனதை சதா கீறி இரத்தம் வரவழைக்கும் பெண்களை மனவியர்களாகக் கொண்ட கணவர்களும் அதே புனித போர்வையை விலக்க முடியாமல் அதுக்குள்ளேயே ரணப்பட்டு வாழ முற்படுகின்றனர்.

 

காதலும் குடும்ப வாழ்வும் மிகவும் அற்புதமானவை. அதன் அற்புதங்கள் எதிர்பார்ப்புகளாலும் விட்டுக் கொடுப்புகளாலும் தான் நிரம்பி இருக்கு. ஆளையாளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து வாழும் போது மட்டும்தான் அந்த அற்புதம் இன்னும் இன்னும் விரிவடைந்து செல்லும்.

 

"நான் உன்னில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கின்றேன்; நீயும் அப்படி இரு" என்று சொல்லி ஒரு காதல் கதை எழுதினால் கைதட்டி உணர்ச்சிவசப்பட்டு ரசிக்கலாம். ஆனால் அது நடைமுறையில் இனிமையாக இருக்காது.

 

"எனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. உனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. நான் உன் எதிர்பார்ப்புகளில்  என்னால் முடிந்தவற்றை நிறைவேற்றுவேன். நீ உன்னால் முடிந்தளவுக்கு என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று" என்று வாழும் போதுதான் அது இனிமையாகவும் நீட்சியாகவும் பொருள் பதிந்ததாகவும் இருக்கும்.

 

"என் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய எந்தவிதமான அக்கறையையும் காட்ட நீ விரும்பவில்லை என்றால்; உன் எதிர்பார்ப்புகளை தீர்க்க எந்தவிதமான அக்கறையும் காட்டஎனக்கு விருப்பமில்லை என்றால் நானும் நீயும் பிரிவதே மேல்"

 

இதுவே நான் சொல்ல முயல்வதும்; முற்றிலும் நம்புவதும்; நடைமுறையில் சாத்தியமான நன்மைகளை கொண்டு வரக் கூடியதும்.

 

(இங்கு நானும் நீங்கள் என்று குறிப்பிட்டது சுபேஸை மட்டும் குறிப்பதற்கு அல்ல. அவரை போன்ற கோடிக்கணக்கானவர்களை குறிப்பதற்கு)

 

facebook-lego-like.jpg

 

காலையில் வந்து பார்த்த ஒரு அருமையான கருத்தாடல்

தேவையானதும் கூட.

 

நானும் கொஞ்சம்  ஊற்றிவிடுவோம்

 

பெற்றோரும் சுயநலங்களோடு  வளர்ப்பது அதிலும் ஆண்பிள்ளை  என்றால் பிறந்த உடனேயே  பொறுப்புக்களை ஏற்படுத்திவிடுவது  தாயகத்தில் அன்று இருந்தது தானே.

இன்றும் செய்ய  பெற்றோர் தயாராக  இருந்தாலும் இன்றைய தலைமுறை அந்த பொறுப்பை எடுக்காது என்பதே நிலை.

நான் இங்கு பலமுறை குறிப்பிட்டது தான்

எனது தலைமுறையுடன் பலவும் முடிவுக்கு வருகிறது.

அதில்  இதுவும் ஒன்று.

 

facebook-lego-like.jpg

 

இந்த பின்குறிப்பே அவசியமில்லாதது என நினைக்கின்றன்.  கருத்துகளில் சண்டையிட்டால் ஒருவர் பிரிந்து போய்விடுவார் என்றால் அவரது நட்பை முறிப்பது தான் சரி.மற்றப்படி சதம் பெறுமதி இல்லாத கருத்தாடல்கள் என்று எதுவுமில்லை. மனித சமூகம் முன்னோக்கி செல்வதே கருத்தாடலகளின் மூலம் தான்.

 

நான் எழுத எண்ணி நினைத்து படித்துக்கொண்டு போகும் போதே அதே கருத்தை நிழலி அண்ணா எழுதிவிட்டார்.

 

"நட்பென்றால் என்ன என்று தெரியாதவருடன் நட்பு பாராட்டுவதே அசிங்கம்."

 

அப்படி ஒரு நட்பை விலத்தி நட மச்சி, உனக்கு தெரிந்ததை, உன்னுடைய கருத்தை நீ எழுது மச்சி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெரூடா,மார்க்ஸ்,எட்வர்ட்,எட்டாம் தெரு காதல்....

 

 

காதலில் மிதந்து நனைபவர்கள் ,காதலை சொல்ல முடியாமல் தேக்கி கொண்டவர்கள்,காதலை சொல்லி கடி வாங்கியவர்கள்,காதலி கைக்கூடியும் காதல் கைக்கூடாமல் போன கதையின் நாயகர்கள்,காதலை கொலைவெறியோடு எதிர்ப்பவர்கள் என பூமியின் சகல  நபர்களுக்கும் காதலோடு ஒரு  தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.எத்தனை சினிமா எடுத்து பழதாக்க பார்த்தாலும் காதல் புதிதாகத்தான் இருக்கிறது ;இன்னமும் சொல்வதென்றால் புதிராகவும் தான் .

 

எங்க ஊரில் ஏன் எல்லா ஊரிலும் ஒரு பழமொழி சொல்வார்கள் -களவும் கற்றுமற .அது திருடுவதை  குறிக்கிறது அப்படின்னு  யாரவது சொன்னால்   நம்பாதீர்கள் .காதலை ஊருக்கு தெரியாமல் ஒரு த்ரில்லோடு  பண்ண வேண்டும் என நம்மவர்கள் சொல்லித்தந்து போன ரகசியம் அது .யோசித்து பாருங்களேன் - சொல்லாத சொல்லாத உங்கள் மனசுக்கு  நெருக்கமான எத்தனை உணர்வுகளை காதல்  பதிந்து விட்டு போயிருக்கிறது ? நம்மை சத்தமே இல்லாமல் ஆக்கிரமித்துக்கொள்ளும் அதன் அடாவடிக்கு அவ்வளவு ஆனந்தமாக ஒப்புதல் தருகிறோம் நாம் ?

 

உலகின் எத்தனையோ உன்னதங்களை காதல் தான் தந்திருக்கிறது ;காரல்  மார்க்ஸ் எனும் எளிய ஏழை மீது எல்லையில்லா காதல் கொண்ட  அரசகுல மாது ஜென்னி    பால் வாங்க காசில்லாத   தருணத்தில் கூட  சுருட்டு வாங்கித்தந்து அவரை காப்பாற்றியதன் முடிவான  விளைவே மலதனம் .அரசன் பதவி துறந்து எளிய மனிதனாக நடைபோட்ட கதை காதல் தந்தது தான் .    எட்டாம்  எட்வர்ட் அந்த மன்னர் .கொஞ்சம் நிதானித்து பார்த்தால் ஏதோ ஒரு மாற்றத்தை காதல் பதித்துவிட்டு போயிருக்கிறது .எத்தனை பேர் அவரின் காதலின் நினைவுகளை ரகசியமாக தேக்கி வைத்து அவஸ்தைப்படுகிறார்கள் .எங்கோ ஒரு தருணத்தில் மீண்டும் காதலித்த பொழுதுகள் எட்டிப்பார்க்கிற பொழுது வெயில் பெய்த வெப்பமழையில் நனைந்த இளவயது பொழுதை போல சொல்ல முடியாத ஒரு உணர்வில் நனைந்து துவட்ட மனமில்லாமல் அப்படியே கிடக்க நினைக்கிற பொழுது நிஜம் கொஞ்சம் பின்னந்தலையில் படார் என்று அடிக்கிறது 

 

காதல் என்பது ஒரு முறை என்பதும்.ஒரே ஒருவரிடம் என்பதும் இன்றைக்கு அவுட் டேட்டட் என பலர் கருதுகிறார்கள் .ஒரு காதலுக்கு ஒரு சமயத்தில் உண்மையாக இருத்தல் தான் உன்னதம் .காதல் கைகூடா விட்டால் ,கூடிய வாழ்க்கையில் ஜாலியாக கரம் கோர்த்து பரவசமடைய தயாராகும் பாக்கியவான்களே நிஜ காதலர்கள் .உருகி துன்பத்தில் அப்படியே புரண்டு எழுந்தால் அழகாக காதல் மீண்டும் வந்து உங்கள் அழுத நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளுமா ?நிதர்சனங்களை சந்திக்க திராணி உள்ளவர்களே காதலிக்க உகந்தவர்கள் .

 

ஓஷோவிடம் கடவுள் எங்கிருக்கிறார் என கேட்டார்கள் ,"வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் கடவுள் நிறைந்து இருக்கிறார் !"என்றார் .எந்த போலித்தனமும் இல்லாமல் காதல் தான்  தன் பொழுதுகளை கொண்டாடுகிறது .கெட்டித்து போன நெஞ்சங்கள் என நாம் நினைக்கும் யாவருக்குள்ளும் மென்மையான காதல் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறது ;,"இவர்கள் இப்படித்தான் !"என பிம்பங்கள் குத்தி குத்தி எத்தனை காதல்களை தொண்டைக்குழிக்குள் சூழல் கத்தி சொருகி கொல்கிறது சுற்றுப்புறம் என எண்ணுகிற பொழுது இந்த படுகொலைகளுக்கு ஏன் இபிகோ இல்லை என்றே மனசு படபடக்கிறது .

 

வேகமாக ரேசர் பைக்கில் போகும் இடத்தில இருந்து நடை பாதையில் கரம் கோர்த்து சுற்றும் இடங்களில் எல்லாமும் காதல் விரவிக்கிடக்கிறது .கொஞ்சம் நில்லுங்க ;காதல் கல்யாணத்துக்கு முன் ஏன் சுகமாக இருக்கிறது ?மற்றவரின் கருத்தை எண்ணவோட்டத்தை மதித்து விட்டுக்கொடுக்கிற ஒரு விஷயம் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது .அடைந்த பின்பு அதனருமை அவ்வளவே என ஏன் ஆகிப்போகிறோம் நாம் ?கச்சிதமான காதலராக இருப்பதற்கு வயது தடையே இல்லை .மனசு தான் காரணம் .ஏன் சினிமாக்கள் எண்பது வயதில் ரோஜாப்பூ தரும் அழகான பெரியோர் காதலை காட்டுவதில்லை .சண்டைகளால் நிரம்பியது வாழ்க்கை என்கிற மனோபாவம் ஏன் நமக்குள் விளைந்தது ?கனமாகத்தான் இருக்கிறது -நிச்சயம் காதல் அப்படி செய்ய சொல்லித்தரவில்லை .நமக்குள் தான் கோளாறு .

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும்,சாலை ஓரத்திலும் காதலின் அடையாளங்களை கடந்து செல்கிறோம் .நம்மில் இருந்த காதலை தொலைத்து விட்டோம் என என்றைக்காவது பதறி இருக்கிறீர்களா ?பதறுங்கள் பாஸ் .காதலிப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது .காதலை ப்ரியம் என்றும் சொல்லலாம் .பிரியங்களை எதோ சேட்டிடம் அடமானம் வைத்து விட்டோமில்லையா நாமெல்லாம் ?காதலர் தினத்தன்று குறுஞ்செய்தி அனுப்பும் நீங்கள் என்றைக்காவது கடிதத்தில் காதலை கொட்டி இருக்கிறீர்களா ?கொட்டி பாருங்கள் -அற்புதமாக இருக்கும் .மகாகவி பைரன் எம்மாவுக்குபோஸ்ட் செய்யாமலே விட்ட கடிதங்களுக்கும் நீங்கள் சொல்ல நினைத்ததை எழுதாத கடிதத்துக்கும் என்ன வித்தியாசம் ?உங்கள் மனைவியை /கணவரை மனசார காதலியுங்கள் ;இருப்பதை,நினைப்பதை  சொல்லுங்கள்.  

 

பேனாவை எடுங்கள் ;முதல் சந்திப்பை பற்றி நினைவு கூறுங்கள் -எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன் என உருகுங்கள் .எல்லா தவறும் உங்கள் மேலேயே என பழி போட்டுக்கொள்ள முடியமென்றால் செய்யுங்கள் ,கொஞ்சமாக அன்பை,கண்ணீரை,முத்தத்தை,அற்புதமான ஊடல்களை பேனா மையில் கரைத்து கொட்டுங்கள் .அடடா இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்க முடியும் உங்கள் பிரியமான உறவுக்கு ?

 

காதலின் காலடிகள் பதித்து விட்டுப்போன தடத்தில் நடக்கும் குழந்தைகள் தான் எல்லாரும் ;வாழ்க்கையின் வேக ஓட்டத்தில் குழந்தைமையை தொலைத்து எதிலோ நிலைத்து நின்று விடுகிறோம் .காதல் .காற்றில் ஒலிக்கும் எதோ ஒரு பழைய பாடல் கரைவது போல துன்பியலான உணர்வுகளை கரைய விடுங்கள் ;ஜிலீர் என்று காதலை மீண்டும் வரவேற்கலாம் .எந்த வயசிலும் உங்களுக்கானவரை காதலிக்கலாம் .நெருடாவின் கவிதை ஒன்றோடு முடித்தால் உசிதம் என விண்ணப்பம் போடுகிறது காதல் :

 

 

நிழலுக்கும் ஆன்மாவுக்கும் 

இடையே ரகசியமாக உன்னை 

இருட்டின் சங்கதிகளை 

விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன் 

பூவாத மலரை நேசிப்பதை போல 

உன் மீது ப்ரியம் கொள்கிறேன் 

மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை  சேமிக்கிறேன் 

சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன் 

உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை 

என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம் 

நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன்.......

 

பூ.கொ. சரவணன்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலுக்கும் ஆன்மாவுக்கும் 

 

இடையே ரகசியமாக உன்னை 

 

இருட்டின் சங்கதிகளை 

 

விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன் 

 

பூவாத மலரை நேசிப்பதை போல 

 

உன் மீது ப்ரியம் கொள்கிறேன் 

 

மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை  சேமிக்கிறேன் 

 

சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன் 

 

உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை 

 

என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம் 

 

நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன்.......

 

முதலில் நிழலி  எழுதியபோது சந்தேகம் மட்டுமே இருந்தது

இப்பொழுது

நிச்சயப்படுத்தப்படுகிறது

சந்தேகமே இல்லை

அது தான்........ :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.