Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்னாட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோராலும் எடுத்துவரத் தயக்கம் காட்டும் கருவானாலும் கோமகன் கதை சொன்ன விதமும் எழுத்தோட்டமும் நன்றாக உள்ளது. ஆனாலும் உடைத்து எறிந்த பறையை மீண்டும் அடிக்க ஆரம்பித்தது சொல்ல வந்த செய்தியை துவம்சம் செய்து விட்டது. எங்களுரில் 80துகளின் பின் உடைத்து எறிந்த பறையை இன்று வரை அவர்கள் தொடவே இல்லை. இன்றைய இளையவர்கள் போகும் வேகத்தில் சாதியத்திற்கு ஆயுள் மிகக் குறைவு என்பதே என் கருத்து.

  • Replies 78
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது அவங்க அவங்கள அந்த அந்த இடத்தில வைக்கிறதில தப்பே இல்லை....

அப்ப நான் வட்டா

அவங்க அவங்களை அந்த இடத்தில் வைத்திருப்பதனால்தான் "தேசியம்" என்பது அர்த்தம் அற்றுப் போகிறது. "தமிழ் தேசியம்" என்கின்ற ஒன்றே இல்லை என்று வாதிடுபவர்களுக்கு வலு ஊட்டுகின்ற மிக மோசமான கருத்து. இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள்தான் "தேசியம்" பேசிக்கொண்டும், மற்றவர்களுக்கு துரோகி பட்டம் கொடுத்துக் கொண்டும் ஓடித் திரிபவர்களாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

சாதீயத்தை ஆதரிக்கிறேன், எதிர்க்கிறேன் என்பதற்கு அப்பால் இது குறித்துப் பேச வேண்டிய விடயம் நிறையவே எமது சமூகத்தில்

இருக்கிறது. தமிழ்நாட்டில் 0,2% வீதமான கலப்புத்திருமணங்கள் நடப்பதாகத்தான் அண்மைய ஆய்வு கூறியுள்ளது. அதற்கு

எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் ஈழத்திலும் இந்த சாதீயம் தனது நச்சுவேர்களைப் பரப்பியுள்ளது.

புலம்பெயர்நாடுகளில் இது குறைவாக இருந்த போதும்,அதன் வீரியம் குறைந்த பாடில்லை.

 

அதே வேளை இந்த சாதீயம் குறித்து பேசுபவர்களிடமும் எனக்கு பலத்த கேள்விகள் உண்டு.

மேட்டுக்குடி,வெள்ளாளர்,ஆதிக்க சாதிகள் என்று பேசுபவர்கள், சமூகப்புரட்சி செய்வதாக எல்லாம் பீற்றிக்கொள்பவர்கள் என்றாவது தம்மிலும் கீழானவர்களுடன் தொடர்புகொள்ளத் தயாரா??

 

அடக்கப்படும் சாதீயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தலித்கள் என்றால் அவர்கள் மேட்டுக்குடியில் சம்பந்தம் செய்தால் தான் சமூகப் புரட்சியா?

ஏன் தம்மிலும் கீழானவர்களை அவர்கள் கலப்பு செய்ய விரும்புவதில்லை? இதில் எங்கை சமூகப்புரட்சி இருக்கு?????

அவர்களிடமும் மேட்டுக் குடியாய்,ஆதிக்க சாதியாய் வரத்தான் விரும்புகிறார்களே தவிர சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல,

அந்த வகையில் இதெல்லாம் அந்தளவு விரைவில் மாறக்கூடிய விடையமா என்பது கேள்விக்குறியே?? :icon_idea:

 

பல பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் இருக்கும் ஒரு சமூகவிடையத்தை கதையாக கொண்டுவந்துள்ளீர்கள்,

அந்த வகையில் நன்றி கோமகன் அண்ணா, உங்கள் படைப்புக்கு. :)

 

உங்கள் கருத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது . அதேவேளையில் சாதீயம் மீதுள்ள உங்கள் மன ஆதங்கத்தையும் என்னால் விளங்கமுடிகின்றது . அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகத்தில் அதன் ஆசிரியர் இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினார் < சாதிவெறி பிடித்த பாட்டாளிக்கும் அவனால் ஒடுக்கப்படும் அதே பாட்டாளிக்கும் நடுவில் சுவராகச் சாதியம் இருக்கும் வரை எப்படி உண்மையான ஐக்கியம் அவர்களிடையே எற்படும்???>  இந்தக் கேள்வி உயர்குடிக்கும் பொருந்தும் . இதிலையே நீங்கள் கேட்ட முக்கியமான கேள்வியான திருமணத்திற்கான பதில் அடங்கியுள்ளது . அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் உயர்குடியால் வஞ்சிக்கப்பட்டதன் எதிர்வினையை , உயர்குடிப்பெண்களைக் காதல் வலையில் சிக்கவைத்து தங்கள் பழிவாங்கலைத் தீர்த்துக் கொள்கின்றார்கள்.  இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று . அது தான் உடையாரின் பெறாமகள் விடையத்தில் நடந்தது . மொத்தத்தில் அங்கு சமூகப்புரட்சி நடைபெறவில்லை மாறாக பழிவாங்கல்களே நடைபெற்றது.  நான் அறிய உயர்குடியில் பிறந்த ஆண்கள் சமூக விழிப்புணர்வால் சாதி குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளார்கள் . ஆனால் அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்வு பலரால் ஒதுக்கப்பட்டே இருந்தது .உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

கோ முதலில் கதை எழுதிய விதத்திற்கு நிறைய பாராட்டுக்கள்.அனுபவித்து வாசித்தேன் .

இரண்டாவது கதையின் கரு ,

புதிய வார்ப்புகள்  கதாநாயகி மாதிரி வில்லனை குத்திவிட்டு ஓடுவதுபோல படமாக்காமல் யதார்ர்தமாக முடித்ததற்கு நன்றி .கதை என்பது யதார்த்தமாக உண்மையாக இருக்கவேண்டும் போதனையாக இருக்ககூடாது.அதற்கு போதகர்கள் இருக்கின்றார்கள் .

விஸ்பரூபத்திற்கு எதிர்ப்பு வந்தது போல உங்கட கதைக்கும் எதிர்ப்புகள் தான் கிளம்புது .உண்மைகளை ஏற்றுகொள்ள இங்கு எவருக்கும் விருப்பமில்லை .சாதிய விடயத்தில் நாம் ஒரு துளிதானும் இன்னமும் அடுத்த படிக்குபோகவில்லை .சின்னாட்டியும் அவன் மனைவியும் போல் தான் அங்கு தாழ்த்தபட்படவர்களின் வாழ்க்கை .தொடர்ந்து எழுதுங்கள் .

சொந்த வாழ்க்கையையே பொய்யாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கெல்லாம் கதை எழுத முடியாது .

 

போதனை தேவையில்லை. கதையின் முடிவையும் புரட்சிகரமாக மாற்ற வேண்டியதில்லை. எனினும் கதை சொல்லியாகிய கோமகன் கதையில் வரும் காமாட்சி என்ற பாத்திரத்தின் சோரம் போன செயலுக்கு சரியான விளக்கம் தரவில்லை. பத்துப் பரப்புக் காணிக்காக படுக்கை விரித்ததையும், இறுதியில் சின்னாட்டியும் அவள் உடையாரை ஆசை நாயகனாக கருதுவது போன்ற வசனங்கள் எல்லாம் காமாட்சிக்கும் சின்னாட்டிக்கும் உள்ள பிணைப்பு உறுதியானது அல்ல என்பது மாதிரியான தோற்றத்தைத் தருகின்றது.

 

அடுத்ததாக கதையின் முடிவில் பல ஆண்டுகள் பறையைத் தூக்காத சின்னாட்டி ஏன் உடையாருக்குப் பறை அடித்தார் என்பதற்கான உளவியல் காரணங்கள் சரியாகத் தரப்படவில்லை.   "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்தலாகும்" என்பது ஒரு வலிமையான காரணமாக இருக்காது.

 

பலத்த பீடிகையோடு எழுதப்பட்ட கதை உண்மைச் சம்பவமாக இருந்தாலும் பாத்திர வார்ப்பில் முரண்பாடுகளையும், முக்கிய திருப்பத்தில் கதை சொல்லலில் உள்ள போதாமையைம் காட்டுகின்றது.

அவற்றை நிவர்த்தி செய்திருந்தால் நிச்சயம் இது ஒரு சிறந்த கதையாக வந்திருக்கும்.

 

 

 

அர்ஜுன் சொல்வது போன்று தாழ்த்தப்பட்டவன் கடைசி வரை அடங்கி இருப்பதே இன்று வரையான யதார்த்தமாக இருக்கட்டும். ஆனால் கதையோ பறை அடித்தே சாகின்றவனை "மறக்கத் தெரிந்த பண்பாளன்" என்று விழிக்கின்றது. இங்கேதான் பிரச்சனை வருகின்றது.

கேள்விகள் கதாசிரியரின் பார்வை பற்றியதே!

உயர்சாதிக்காரனுக்கு தொண்டு செய்து செத்தால் சொர்க்கம் அடையலாம் என்கின்ற மனுதர்ம சாத்திரமே இங்கே தெரிகிறது. மற்றையபடி கதை யதார்த்தத்தை சொல்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அவங்க அவங்க தான் இவங்க இவங்க தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைகளை ஒரு குறித்த பகுதியினர் செய்வதால் வரும் பிரச்சனைகளை சொல்லியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. 

இன்று அங்குள்ள பிரச்சனை, எவளவு பேருக்கு பறை மேளம் தளம் கேட்கத் கூடிய வசதி உள்ளது? ஒவ்வொரு பிரச்சினைகளினதும் விளைவுகள் முழுமையாக வெளிவர பல காலம் செல்லும் என்பதர்ற்கு இந்த பறை மேளக்காரர் குறைந்து வருவதும் ஒரு நல்ல உதாரணம்.

புலம் பெயந்த இடத்தில் சாதி குறையுதோ அன்றி கூடுது என்றில்லை. அதன் பாதிப்பு சிலவேளை தெரியாமல் இருக்கலாம் ஆனால் அது இருக்கிறது. எனக்கு தெரிய பல ஆண்கள் பெண்கள், பிற இனத்தவர்களை திருமணம் முடித்துள்ளார்கள்- தமக்கேற்ற ஆண் , பெண் துணை கிடைக்காமல். அவர்களை நாங்கள் "சாதி கொடுமையால்" பாதிக்கபட்டவர்கள் என்று கருதாமல் விட்டால், சாதி இங்கே இரண்டொழிய (இங்கே) வேறு ஏதும் அல்ல பாப்பா. 

  • தொடங்கியவர்

கோமகன் கதையைக் கொண்டு சென்ற விதம் அருமை. ஆனால் காமாட்சியின் விடயம் தான் கொஞ்சம் இடிக்குது. தெளிவாகச் சொல்லப்படவில்லை.

 

 

ஜீவா என் பிள்ளைகள் எம்மிலும் (கீளானவர்கள்) என நீங்கள் குறிப்பிடும்

எவரைக்  காதலித்தாலும் அவர்களுக்கு மனபூர்வமாக மணம் முடித்துக்

கொடுக்க நானும் என் கணவரும் தயாராகவே உள்ளோம். நான் இதை உங்கள் திரிக்காக

மட்டும் எழுதவில்லை.

நான் நினைக்கிறேன் எம் அடுத்த தலைமுறை

கல்வியையும் குணத்தையும் மட்டுமே பார்க்கும் என்று. எம்மதும், எமக்கு

முந்தியதும் தான் உதை தூக்கிப் பிடிப்பார்கள் என்று.

 

 

காமாட்சியின் விடையம் எவ்வாறு சொல்லப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் சுமே ??? அன்றையகாலப்பகுதிகளில் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றன . அதையே இந்தப்பாத்திரம் மூலம் வெளிப்படுத்தினேன் . உங்கள் இரண்டாவது கருத்துக்கு எனது பதில் , புலத்தில் இரண்டாவது தலைமுறைக்கும் இந்த விசம் பரவி விட்டது என்பதுதான் . வேண்டுமானால் நான்காம் ஐந்தாம் தலைமுறைக்கு இது சாத்தியப்படலாம் . உங்கள் வருகைக்கும் கருத்த்துக்கும் மிக்க நன்றிகள் சுமே .

 

Edited by கோமகன்

கிருபனுடன் நானும் உடன்படுகிறேன் .எப்படி காமாட்சி உடையாரை ஆசை நாயகனாக கருதுவார்.

ஆண்களுக்கு மனதில் ஒரு எண்ணம் இருக்கு. எப்படி என்றாலும் பலவந்தப்படுத்தி ஒரு பெண்ணுடன் உறவு கொண்டுவிட்டால்   பின் அந்த பெண் அந்த உறவை நினைத்து தன்னை விரும்புவார் என்று .

சுத்த மடத்தனமான சிந்தனை .

ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது அவங்க அவங்கள அந்த அந்த இடத்தில வைக்கிறதில தப்பே இல்லை....

அப்ப நான் வட்டா

 

இதே கருத்துதான் தமிழர்கள் குறித்து சிங்களவர்களிடம் இருக்கின்றது. ஒருவன் என்னுமொருவனை அடிமைப்படுத்துவது தவறில்லையேல் அந்த ஒருவனை மற்றவன் அடிமைப்படுத்துவதும் தவறில்லை. பெயர்கள் மட்டும் மாறுபடும் ஒன்று சமூக ஒடுக்குமுறை மற்றது இன ஒடுக்குமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் கருத்தை அவதானித்திருந்தேன். இப்படியான வெறி பிடித்தவர்கள் தற்போதைய இளைஞர்களில் அதிகம் இல்லை என்பதால் அலட்டிக்கொள்ளவில்லை.

 

 

கேமகன் உங்கள் முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள்.

சாதீய ஒடுக்குமுறையை செய்பவர்கள் மீதான ஒரு குற்ற உணர்வை இக் கதை ஏற்படுத்த முனைகின்றது. கதையின் முடிவை அவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகின்றது. இதுவும் ஒருவகையான விழிப்புணர்வு சார்ந்தது. உங்கள் எழுத்து அனுபவம் விமர்சனங்கள் ஊடாக செப்பனிடப்பட்டு  சமூகம் சார்ந்து அதன் நுண் அரசியல் சார்ந்த பல படைப்புகள் எதிர்காலத்தில் உங்களால் முன்வைக்க முடியும். அதிகம் வாசித்து அதனிலும் அதிகம் அனுபவர்களுடன் கலந்து மிகச் சிறிதளவாக எதிர்காலத்தில் எழுதுங்கள்.

 

குறை ஒன்றும் இல்லை திரு மூர்த்தி கண்ணா என்ற ஒரு கர்நாடக சங்கீதப் பாடல். ஆகா ஓகோ என்று புகழப்படும் பாடல். அப்படி நூறு கீர்த்தனைகள். அந்த நிறைக்குள் பல நூறாயிரம் தலித்துக்களின் அவலக்குரல்கள் வேதனைகள் உள்ளடங்கியுள்ளது. அதை உங்களால் உணர முடிந்தால் பல நல்ல படைப்புகள் சாத்தியம். உடையாரின் அகம் சின்னாட்டியின் அகம் இவைகளை வெளிப்படுத்தும்போது ஒடுக்குபனுக்கு தண்டனையாகவும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டவனுக்கு நீதியாகவும் இருத்தல் அவசியமாகின்றது. இதற்குள் சமரசங்களுக்கு இடமில்லை என்பதில் தெளிவும் உறுதியும் அவசியம்.

 

புறத்தோற்றத்தை நேர்த்தியாக ஊடறுத்து சின்னாட்டியின் ஆத்மா அழகானது. உடையாரின் ஆத்மா அருவருப்பானது என்ற உண்மை தெளிவாக முன்வைக்கப்படும்போது மாற்றங்கள் சாத்தியம்.

 

உங்கள் பணி தொடரட்டும்.

  • தொடங்கியவர்

ஒரே ஒரு நின்மதி.புலத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்களுடன் சாதியம் பற்றி பேசியுள்ளேன். பலருக்கு அதை பற்றி தெரியாது. இன்னும் சிலர் இந்தியா இலங்கை போன்ற இடங்களில்  சாதியம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.எப்படியானவர் உங்களின் காதலனாக/காதலியாக, கணவனாக/மனைவியாக வரவேண்டும் என கேட்ட போது சாதியம் பற்றி எவரும் பேசவில்லை.  நன்றி கோமகன் உங்கள் பதிவுக்கு.

 

உங்கள் கருத்தில் ஓரளவே என்னால் உடன்படமுடிகின்றது . அதற்கு இன்னும் நாங்கள் இரண்டு தலைமுறையாவது கொடுக்கவேண்டும் . ஏனினில் இந்தப்பதிவிலேயே ஒர் கருத்து இளயதலைமுறையைச் சேர்ந்தவரால் காட்டமாக வைக்கப்பட்டிருக்கின்றது . புலத்தில் முற்றுமுழுதாகவே சாதீயம் ஒழிந்தது என்று சொன்னால் எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும் . உங்கள் நேரத்திற்கும் வருகைக்கும் மிக்கநன்றிகள் நுணா .

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் கருத்தை அவதானித்திருந்தேன். இப்படியான வெறி பிடித்தவர்கள் தற்போதைய இளைஞர்களில் அதிகம் இல்லை என்பதால் அலட்டிக்கொள்ளவில்லை.

நல்லதுவே அதுல இருந்து ஒரு நூறு இளைஞன கொண்டாந்து தாழ்த்தப்பட்ட பொண்ணுங்களுக்கு கட்டி கொடுங்கவே......

எலே மீண்டும் சொல்லுறேன் வே இவங்க இவங்க தா அவங்க அவங்க தான் வே இந்த சிவப்பு சித்தாந்தம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் எடுபடாதுவே

  • தொடங்கியவர்

என்னைப்பற்றி எழுதியதால் நிர்வாகம் இத் திரியை நீக்கனும்  :D

 

சாதீயம் புலத்தில் பார்ப்பதாக தெரியவில்லை, ஆனா புதுவியாதி தொட்டிருக்கு, போட்டி போட்டு ஓப்பிட்டு பார்க்கும் குணம்

 

ஐயோ சிவசத்தியமாய் உங்களை நினைச்சு நான் இதை எழுதேலை உடையார் :o:lol: . உங்களை நான் பரிசுகெடுத்துவனே . இவர் சிதம்பரப்பிள்ளை  உடையார் . புது வியாதியான போட்டி போட்டுக்கொண்டு ஒப்பீடு செய்வதென்றால் எதன் அடிப்படியில் ??? புலத்தில் சாதியங்கள் இல்லையென்றால் இளையோரிடம் குழுமச்சண்டைகள் ( காங் பைற்றேர்ஸ் ) எவ்வாறு எமது தலைமுறையால் உருவாக்கப்பட்டது ???

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதுவே அதுல இருந்து ஒரு நூறு இளைஞன கொண்டாந்து தாழ்த்தப்பட்ட பொண்ணுங்களுக்கு கட்டி கொடுங்கவே......

எலே மீண்டும் சொல்லுறேன் வே இவங்க இவங்க தா அவங்க அவங்க தான் வே இந்த சிவப்பு சித்தாந்தம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் எடுபடாதுவே

 

அப்படி எல்லாம் செய்யவேண்டிய தேவை இல்லை. அதிகமான இப்போதைய இளைஞர்களும் இளைஞிகளும் கற்காலத்தில் வாழவில்லை என்பதாலும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் சாதிகளைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை என்பதாலும் சிவப்புப் புரட்சிக்கு அவசியம் இல்லை.

 

எனினும் குகையை விட்டு இன்னும் வெளியே வராத சுண்டலைப் போன்ற ஆதிகால மனிதர்கள் ஒரு சிலர் இப்போதும் இருக்கின்றார்கள். அவர்கள் குண்டுச் சட்டியில் குதிரையோட்டிக் கொண்டே இருப்பார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏலே நாங்க குண்டு சட்டிக்குள்ள குதிரையும் ஓடுவம் முடிஞ்சா யானைய தூக்கிட்டு வந்து அதுவும் ஓட்டுவம்லே..... ஆமாலே நாங்க காட்டு வாசிங்க தான்வே சிவப்பு சித்தாந்தம் எல்லாம் இந்தியாலயே எடுபடலவே நம்ம யாழ் பாணத்தில எடுபடாதுவே நமக்கு நம்ம ஜாதி சனம் தான் முக்கியம்வே நாளிக்கு நாங்க நம்ம சொந்தங்க முன்னாடி போறாது இல்லையாவே? ஊர விட்டே தள்ளி வைச்சிடுவாவே.....

  • கருத்துக்கள உறவுகள்

சாதீயம் என்பது, ஒரு குப்பை மாதிரி! அதைக் கிளறக் கிளற, துர்நாற்றத்தைத் தவிர வேறு எதுவும் வராது!

 

அதை அப்படியே விட்டு விட்டால், உக்கிப்போகும் என நினைக்கிறேன்!

 

ஒரு மனிதன், இன்னொரு மனிதனைக் கீழே வைத்திருப்பது மனிதத்தின் அடிப்படைப் பலவீனம் அல்லது இயல்பாக இருக்க வேண்டும் ! மெலியன வீழ்வதும், வலியன வாழ்வதும் என்ற இயற்கைக் கோட்பாட்டில் இருந்து இது வந்திருக்கக் கூடும்!

 

குழுமங்கள் தங்களை வலிமைப்படுத்துவதன் மூலமே, தங்களை இந்தக் குப்பையிலிருந்து விடுவித்துக் கொள்ளமுடியும்! கல்வி, பொருளாதாரம் போன்றவை, இதற்காக உபயோகிக்கப்படலாம்!

 

வெள்ளை, கறுப்பு எனத் தங்களுக்குள் அடிபடுபவன் நாளை அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததும், தங்களுக்குள் அடிபட இன்னொரு காரணத்தைத் தேடிப்பிடிப்பான் என்பது மட்டும் நிச்சயம்!

 

வெள்ளைகள் தங்களுக்குள் யூதர்,கிறிஸ்தவர்கள் என அடிபடுகிறார்கள்!

கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் கத்தோலிக்கர்கள், கத்தோலிக்கமல்லாதவர்கள்  என்று அடிபடுகிறார்கள்!

 

புலத்துத் தமிழர்கள் இடையிலும், அவர்கள் வாழும் புற நகரங்களை அடிப்படையாக வைத்து ஒரு கோடு கீறப்படுகின்றது! ஒருவர் போகும் கோவிலை வைத்தே அவர்களது அந்தஸ்தும் நிர்ணயிக்கப் படுகின்ற நிலை கூட இப்போது காணப்படுகின்றது!!

 

ஆக, இவை அனைத்துக்கும் அடிப்படை பொருளாதாரமே அன்றி வேறெதுவும் இல்லை!

 

துணி துவைப்பவனை வண்ணான் என ஒதுக்கித் தள்ளும் கூட்டம், அவன் அதை ஒரு பிரபலமான வியாபாரமாக மாற்றிவிட்டால், அவனை வண்ணான் என்று அழைக்கப் போவதில்லை. அவன் வீட்டுக்கு வரும்போது, சிரட்டையில் தேநீர் ஊற்றிக் கொடுக்கப்போவதுமில்லை! அப்படிக் கொடுத்தாலும், அவனும் அதைக் குடிக்கப்போவதில்லை!

 

காந்தி இவர்களைக் 'ஹரிஜன்' (கடவுளின் குழ்கந்தைகள்') என்று அழைத்தார். ஆனால் அண்மையில் 'குறைந்த சாதி' யைச் சேர்ந்த பெண்ணொருவர் வன்புணர்வுக்குப் பின்பு, சுருக்கிட்டிக் கொல்லப்பட்ட போது, அவரை ஒரு 'ஹரிஜன்' கொல்லப்பட்டார் என்ற அளவுக்குத்தான், ஐம்பதாண்டு கால முன்னேற்றம் இருக்கிறது.மற்றும்படி எதுவும் மாறிவிடவில்லை. ஏனெனில் அவர்களின் பொருளாதாரநிலைமை, இந்தக்கால கட்டத்தில் பெரிதாக மாறி விடவில்லை என்பதுதான் காரணமாகும்!!  

 

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

கதைக்கு நன்றி  கோ

 

ஆனால் கதை ஒட்டவில்லை

மறைந்துபோன சாதிகளை   மீள  எடுத்து நாமே விடுகின்றோம் போலுள்ளது.

அத்துடன் எந்த மனிதரையும் இங்கு நல்லவராக தெளிந்தவராக காட்டவில்லை.

எல்லாமே தப்பானவர்கள் தான்.

மனைவியை அடிப்பதற்கு தனது தொழிலை எறிந்துவிட்டுப்போவது

துரோகம்  செய்தவன் அநியாயம் செய்தவனுடன் உடன்கட்டை ஏறுவது என்பன  கதைக்கான பெரும் பின்னடைவு.

 

எதையோ  சொல்ல வெளிக்கிட்டு தடுமாறி  அதை சொல்லாது விட்டது தெரிகிறது.

சிவப்புக்காறர்களால் சமுதாயம் திருந்தியது என்பதைவிட.

 

 

 

 

In Bhagalpur,Bihar a women ( from lower strata of the society) was raped and hanged to a tree brutally.

NO MEDIA ATTENTION.

NO SOCIAL MEDIA ATTENTION.

PLEASE HELP DRAW MEDIA ATTENTION TOWARDS IT.

Do people from lower strata deserves no attention and JUSTICE??

We request all to contact media people, and draw their attention towards this.

Reported via : Prabhat Bhardwaj ( Advocate, Patna High Court)

ABP News NDTV Aaj Tak Tehelka

 

மறந்து போன சாதீயங்களை மீள எடுத்துவிடுகின்றோம் என்கின்றீர்கள் . மனதை தொட்டுச்சொல்லுங்கள் முற்றாக மறக்கப்பட்டதா ???  அப்படியென்றால் அண்மையில் தாயகத்தில் ஓர் பிரபல மகளிர் கல்லூரியின் அதிபரினுடைய பதவி உயர்வானது அவரது சாதீயத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்டு உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றதும் பத்திரிகை செய்தியாக இதே யாழ் இணையத்தில் வெளி வந்ததே ?? அதேவேளையில் கேடுகெட்ட இந்தியாவின் ஓர் மானிலத்தில் தாழ்த்தப்பட்ட ஓர் பெண் உயர்குடிகளால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு அரைநிர்வாண நிலையில் சுருக்கிட்டு கொலைசெய்யப் பட்ட படங்களும் வெளியாகின . ஆக சாதீயம் இன்றும் பல்வேறு உருவங்களில் மனிதனை ஆட்டிபடைக்கின்றது . இதைத்தான் சின்னாட்டி சொல்லவிளைகின்றது . இதிலிருந்து மீளுவதற்கு நாங்கள் என்னசெய்யவேண்டும் அதை ஆராய்தால் நல்லது என நான் நினைக்கின்றேன் . மேலும் அன்றய காலகட்டங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகள் சாதீயவிடயத்தில் மூர்கமாகவே இருந்தன . அதை சிவப்பு எழுத்தில் எழுதி இந்தக்கதைக்கு சிவப்புச்சாயம் போடமுற்படும் உங்கள் குறுகியமனப்பான்மை கண்டிக்கத்தக்கது . மேலும் என்னைப்பொறுத்தவரையில் தீங்கு செய்தவனுக்கு அதிகபட்டச தண்டனை என்பது " மன்னிப்பு " என்பதே . அதையே சின்னாட்டி செய்திருக்கின்றான் . இயற்கையாக சுடலைக்குப்போன உடையாருக்கும் , மன்னித்தலால் உயர்ந்த சின்னாட்டியனது மரணம் , மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்பதைச் சொல்லியுள்ளேன் .( இதில் தனிப்பட்ட நட்பை போட்டு குளப்ப வேண்டாம்) உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் விசுகர் .

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் அண்மையில் தாயகத்தில் ஓர் பிரபல மகளிர் கல்லூரியின் அதிபரினுடைய பதவி உயர்வானது அவரது சாதீயத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்டு உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றதும் பத்திரிகை செய்தியாக இதே யாழ் இணையத்தில் வெளி வந்ததே ??

அது சாதி பிரச்சனையா? அமைச்சரின் அதிகார பிரச்சனையா?
  • தொடங்கியவர்

அது சாதி பிரச்சனையா? அமைச்சரின் அதிகார பிரச்சனையா?

 

இன்னும் ஏன் இந்த சாதிவெறி??? ஏன் இந்த அரசியல் தலையீடு?.....

 

Monday, December 3, 2012

 

அண்மைக் காலமாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபரை முடிவு செய்வது தொடர்பாக பல பிரச்சனைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தரம் குறைந்த அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாடசாலை சமூகத்தின் பெரும் பகுதியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை தகுதி உள்ளவர் சாதியத்தின் அடிப்படையில் நியமனம் பெறமுடியாது போன துர்ப்பாக்கிய செயல்களும் அரங்கேறியுள்ளது.

தற்போது உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு திருமதி.கௌரி சேதுராஜா நியமிக்கப்பட்டுள்ள போதும் இவரிற்கு அதிபர் தகுதி குறைவாகவே உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் திருமதி.நவமணி சந்திரசேகரம் அனைத்து தகுதிகளும் இருந்தும் தனக்கு ஏன் அதிபர் நியமனம் கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இப் பிரச்சனையோடு அவர் என்னிடம் வந்த போது நான் உடனடியாக இப்பிரச்சனையை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இது குறித்து நாம் அவரிடம் கேள்வி எழுப்பிய போது கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆளுநர்களுக்கான 15வது மகாநாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும் கூட பெரும் முயற்சி எடுத்து ஆளுநரினடம் குறித்த பிரச்சனை பற்றி பேசி ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டேன். இதன்படி கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அந் நேரத்தில் தற்செயலாக மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராஜா அவர்களையும் சந்திக்க முடிந்தது.

அதிபர் திருமதி. நவமணி சந்திரசேகரம்; அனைத்து தகுதிகளும் இருந்தும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாக இருந்தும் அவருக்கு நியமனம் வழங்க முன் வராதது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது ஓய்வுபெறுவதற்கு குறைந்தது 3 வருடங்கள் இருந்தால் மட்டுமே மாற்றம் பெற முடியும் என்று சுற்றறிக்கையில் உள்ளதாக முன்வைத்துள்ளார். ஆனால் வடமாகாண பாடசாலைகளின் அதிபர் இடமாற்றத்திற்கான சுற்றறிக்கையின் படி குறித்த அதிபர் விரும்பின் மாற்றம் செய்யலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நேரத்தில் எதேர்ச்சையாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சத்தியசீலன் அவர்களும் அங்கு வருகை தந்தார். இவர்களின் பதில்களில் திருப்தியின்மையால் இப் பிரச்சனையை ஆளுநருக்கு விளக்கிக் கூற முடிவெடுத்தேன்.

முன்னர் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அதிபர் பதவியை கொடுக்க மறுத்த அதிகாரிகள் அதே சுற்றறிக்கையில் ஒரு பாடசாலையில் தொடர்ந்து 7வருடங்கள் சேவையாற்றிய அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாக சட்டமூலமாக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த அதிபர் இமையாணன் அரச தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடந்த 1995ம் ஆண்டு முதல் இன்று வரை அதாவது 17வருடங்கள் அதிபராக இருந்தும் இடமாற்றம் செய்யப்படாதது ஏன்?....

அத்தோடு அதிபர்களை நியமிப்பதற்கு நேர்முகப் பரீட்சை பத்திரிகை விளம்பரம் என்பன செய்யப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள போதும் எந்தவிதமான பத்திரிகை விளம்பரங்களோ நேர்முகப் பரீட்சைகளோ இன்றி ஒரு அதிபர் நியமிக்கப்பட்டது எப்படி?

அத்தோடு அதிபர் நியமனம் பெறமுடியாமல் இருக்கும் திருமதி. நவமணி சந்திரசேகரம் அவர்கள் தகுதியுடையவரே என்பதற்கான சான்றுகள் பின்வருமாறு.

உடுப்பிட்டி நாவலர் சனசமூகத்தைச் சேர்ந்த இவர் 1978ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக ஆரம்பித்தவர். அதன்பின் 1982-1989 வேறு பாடசாலைகளில் பணியாற்றி பின் 1989ம் ஆண்டு மீண்டும் இமையாணன் அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு வந்தார்.

பின்னர் 1993ம் ஆண்டு உப அதிபராக பதவியுயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து 1995ம் ஆண்டு 4ம் மாதம் 17ம் திகதியிலிருந்து அதே பாடசாலையில் அதிபர் நியமனம் பெற்றார். அத்துடன் 1997ல் அதிபர் தரம் 2-1 இனை பெற்றுள்ளார். அதன் பின் 2004ம் ஆண்டு அதிபர் தரம் 1 இனை பெற்றுள்ளார்.

கல்வி மாணிப்பட்டத்தை 1.3.2010ல் பெற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு வெற்றிடம் வந்தவுடன் தனது விருப்பத்தையும் விண்ணப்பத்தையும் தெரிவித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இவரை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லை. அங்கிருந்த உதவி அதிபரை 'performing Principal' ஆக நியமித்தார்கள். அதிகாரிகள் இவரை நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தால் திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கு 4 வருட சேவை இருந்திருக்கும். இது வடமராட்சி வலய பணிப்பாளர் திரு. செல்வராஜாவின் திட்டமிட்ட புறக்கணிப்பாகும்.

அதேவேளை தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் திருமதி.கௌரி சேதுராஜா வின் தகுதிகள் பின்வருமாறு. இவர் உடுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியின் பகுதித் தலைவராக கடமையாற்றியவர். இவருக்கு அண்மையில் தான் அதிபர் தரம் 2-2 கிடைக்கப் பெற்றுள்ளது என்பதோடு அதிபராக சேவையாற்றிய அனுபவம் இவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் முதன் முதல் அதிபராக பதவி ஏற்கும் இவருக்கு 1AB தரம் உள்ள பாடசாலை கிடைத்திருப்பது எப்படி?

இப்படி பலவகைப்பட்ட சட்டத்திற்கு புரள்வான செயற்பாடுகள் நடைபெற்றிருப்பதை அறிந்தபின்பே இதற்குள் அரசியல் தலையீடு இடம்பெற்றது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதிபர் இடமாற்றத்திற்கான சுற்றறிக்கையின் பிரகாரம் திருமதி. கௌரி சேதுராஜாவிற்கு இரு தகுதிகள் தான் உள்ளன. அவையாவன அவரின் சேவைக்காலமும் பட்டதாரியும். ஆனால்

திருமதி. நவமணி சந்திரசேகரம் 3 வருட சேவைக்காலத்திற்கு பதிலாக இன்னும் 20 மாதங்கள் உள்ளன. இதைத் தவிர மற்ற எல்லா தகுதிகளும் உள்ளன.

செய்யவேண்டிய வேலைகளை குறித்த நேரத்தில் சரியாக செய்து முடிக்காத அலட்சியப்போக்கும் இப்போதும் சாதியத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரியும் அசமந்தப்போக்கு மட்டுமே எனது அரசியல் தலையீட்டிற்கு காரணம். அது மட்டுமல்லாது அரசியல் வாதிகள் சுயநல வாதிகள் என்ற போக்கே மக்கள் மத்தியில் காணப்படுகின்ற போது நாம் பொது நலத்திற்காக செய்கின்ற செயல்களும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றது. அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக நியாயமான முறையில் செய்யுமிடத்து எமது அரசியல் தலையீடுகள் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை. நாம் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து வைத்த பின் அரசியல் தலையீடு அதிகார ஆதிக்கம் என்றெல்லாம் அரசியல் வாதிகளை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. எது எப்படி இருப்பினும் இந்தக் காலத்திலும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற ஒரு நிலை துர்ப்பாக்கியமானதே.. இருப்பினும் தகுதியுடைய ஒரு அதிபருக்கு உரிய பதவி கிடைக்கப் பெறுவதில் சாதியம் எந்த வகையிலும் தலையீடு செய்ய முடியாது.

இறுதியாக எனது ஆளுநரின் சந்திப்பில் ஆளுநர் அவர்கள் திரு.சத்தியசீலனை அழைத்து திருமதி. நவமணி சந்திரசேகரத்தை 23.11.2012 ற்கு முன்னர் அவரை நியமிக்கும் படி கூறியிருந்தார். அப்படி இருந்தும் இதுவரை திரு.சத்தியசீலன் அவர்கள் நியமிக்கவில்லை.

எனவே மக்களே இன்று ஆளுநர் ஒரு சிங்கள இனத்தவராக இருந்து எம் குறைகளை நிவர்த்தி செய்கையிலும் இந்த ஆதிக்க சக்தியாளர்கள் வழிவிடுவதாகத் தெரியவில்லை. எனவே இவர்கள் கையில் முழு அதிகாரங்களும் வந்தால் எமது சமூகக் குறைபாடுகளையும் சமூக நீதிகளையும் யார் தீர்த்து வைப்பார். இந்தப் போராட்டம் தொடரும் மக்களின் பூரண ஒத்துழைப்புடன்.....

நன்றி

திரு. நடராஜா தமிழ் அழகன்

வடமாகாண இணைப்பாளர் - விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்

இணைச் செயலாளர் – அ.இ.சி.த. மகாசபை

 

http://www.ilankainet.com/2012/12/blog-post_921.html

 

அத்துடன் இதையும் வாசியுங்கள்:

 

http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1591-2012-12-05-19-50-06

  • கருத்துக்கள உறவுகள்

துணி துவைப்பவனை வண்ணான் என ஒதுக்கித் தள்ளும் கூட்டம், அவன் அதை ஒரு பிரபலமான வியாபாரமாக மாற்றிவிட்டால், அவனை வண்ணான் என்று அழைக்கப் போவதில்லை. அவன் வீட்டுக்கு வரும்போது, சிரட்டையில் தேநீர் ஊற்றிக் கொடுக்கப்போவதுமில்லை! அப்படிக் கொடுத்தாலும், அவனும் அதைக் குடிக்கப்போவதில்லை!

இதுக்கு என்னிடமும் ஆதாரம் உண்டு.ஏன் வம்பு :rolleyes: கல்வியும் பொருழாதாரமும் எல்லாத்தையும் களுவிப்போடும்.

  • தொடங்கியவர்

எம் சமுதாயத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினையை கருவாக எடுத்த தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

 

இந்தக் கதைக்கு  என் பக்கமும் சில விமர்சனங்கள் இருக்கு. ஆனால்... அப்புறமாக எழுதுகின்றேன்.  :)            

 

அதுதான் எனக்கும் யோசினையா கிடக்கு  :unsure:  . ஒரு ரைப்பாய் கருத்து வைச்சிருக்கிறியள் :lol: . எக்கணம் வில்லங்கமாய்தான் உங்களிட்டை இருந்து கருத்து வரப்போகுதோ :huh::unsure::icon_idea: ???

 

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் உங்கள் பதிவிற்கு.

 

முதலில் எங்களை நாங்கள் அறியாத எழுபதுகளுக்கு கூட்டி சென்றமைக்கும், எம்மினத்தின் நாங்கள் கேள்விபட்டதை மீண்டும் ஒருமுறை சாட்டை அடியாக தந்தமைக்கும் நன்றிகள். நீங்கள் கதை நகர்த்திய விதம் எனக்கு சின்ன வயதில் படித்த செங்கையாழியானின் கதைகளை ஞாபகபடுத்தின.

 

இருந்தாலும் உங்கள் மீது சில விமர்சங்களையும் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.

 

முதலாவதாக புங்கையூரான், சுமோ சொன்னது போல உங்கள் கதையின் கருவுக்கும், அது ஏற்படுத்த போகும் தாக்கத்துக்கும் வீரியம் குறைப்பதாகவே காமட்ச்சியின் பாத்திரம் அமைகிறது. பத்து பரப்பு காணிக்கு கூட சோரம் போகாத எத்தனையோ பெண்கள் எல்லா குடியிலும் இருக்கிறார்கள் என்பது எனது வாதம்.

 

இரண்டாவது நீங்கள் உங்கள் முழுகதையையும் தடித்த எழுத்துக்களில் எழுதாமல், சாட்டையாக, அல்லது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய இடங்களை மட்டும் தடித்த எழுத்துக்களில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

 

மொத்தத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க கூடிய இன்னொரு எழுத்தாளன் எங்கள் மத்தியில் இருக்கிறான் என்பதில் பெருமை அடைய வைத்திருக்கிறது உங்கள் கதை.

 

பகல் இந்தக் காமாட்சியின் பாத்திரத்தில் எனக்கும் பெரியளவில் உடன்பாடில்லை . ஆனால் இப்படியான சம்பவங்கள் முற்றுமுளுதாக நடக்கவில்லை என்று சொன்னால் அது எம்மை நாமே ஏமாற்றிகொள்கின்ற விடையமாகும் . ஒழுக்கம் என்பது இருபகுதிகளுக்கும் தேவையானது  ஒன்று . ஒருபக்கம் ஏழ்மையை காட்டி ஒழுக்கத்தை தனதாக்கும் சாதீயம் , தனது பக்கத்தில் பணத்திமிரில் அதே ஒழுக்கத்தை கோட்டை விடுகின்றது  . அத்துடன் இன்றைய இளயவர்களும் இப்படியான எமது கோணல்களை அறியவேண்டும் என்பதற்காகவே  காமாட்சி பாத்திரத்தை குறைகளுடன் இணைத்திருத்தேன் . அத்துடன் உங்கள் வேண்டுகோளை ஏற்று எழுத்துருவிலும் மாற்றம் செய்துள்ளேன் . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பகலவன் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.