Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்னாட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

கோமகன் .சற்று முன்னைய  காலத்தின் ..சாபக்கேடுகளில்  இதுவும் ஒன்று. இக்காலத்தில் இது புலம்பெயர் நாடுகளில் திருமண விடயத்தில் ..கவனிக்க் படுகிறது. இரத்தத் ஓட்டத்தில் ஊறிய ஒன்று .   கதை  மிகவும் விறு விறு பாகவும் ..உணர்வு பூர்வமாகவும் இருந்தது.  கலை எழும்பிய  உணர்வு வேகத்தில் மாரடைப்பு வந்தது  ஒரு பிளஸ் பாயிண்ட் .. உயர் குல  இழி குல த்த்வனும் இறுதியில் போகும் இடம் ஒன்றுதான். ( சுடலை ) ...காமாட்சியின் சமபவம்  நடந்திருக்க சாத்தியம் உண்டு. உணர்வு பூர்வமான் ஒரு கதை .. கோ வுக்கு ஒரு சபாஷ்.............போடலாம். நல்ல ஒரு ;அதிர்வு.

 

என்னைப் பிழைவிடாது எழுதப்பழக்கியவரும் , சர்ச்சைக்குரிய விடையங்களில் தொடர்ச்சியான மௌனங்களைக் காத்த நிலாமதியக்காவின் கருத்து உண்மையிலேயே என்னை அதிர்சியடையவைத்தது . சின்னாட்டி சொல்கின்ற செய்தி பலரது மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு உங்கள் கருத்தே உரைகல் . உங்கள் ஆசீர்வாதமும் விமர்சனமும் என்னை தொடர்ந்து வழிநடத்தும் ஊக்கிகள் . உங்கள் வருகைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா .

 

  • Replies 78
  • Views 6.8k
  • Created
  • Last Reply
 
முயற்சிக்குப் பாராட்டுக்கள் கோமகன். உங்கள் கதையில் நீங்கள் இணைத்த படங்கள் நன்றாக இருக்கின்றன. கரு மற்றும் இதர விடயங்களில் சபேசனனுடையதும் கிருபனுடையதும் கருத்துக்களை ஒத்ததே எனது கருத்துக்களும்.
 
சுகனது பின்னூட்டத்தை இப்போது பார்த்தேன். மிகச் சுருக்கமாகக் காட்டமாக வைத்திருக்கிறார்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற காமாட்சியை சின்னாட்டி ஏறெடுத்துப் பார்த்தான் . அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை . இதில் காமாட்சியின் ஆசைநாயகன் எப்படியிருக்கிறான் என்பதை அறியும் ஆவல் கலந்திருந்ததை அப்பாவி சின்னாட்டியால் அறியமுடியாமல் இருந்தது . “

 உடையாரின் உக்கிரமான தாக்குதலால் காமாட்சி கர்பமாகியிருந்தது அப்பாவி சின்னாட்டிக்குத் தெரிய

வாய்ப்பில்லை . பிள்ளை தன்னால் வந்ததாகவே சின்னாட்டி நம்பிக்கொண்டிருந்தான்

வக்கிரமான எண்ணங்கள் அல்லது வரிகள்.
சாதி என்பது மாறாது மாறவும் தேவையில்லை.உலகம் முழுமையுமே தொழில் சார் சாதிய அமைப்புகளில் இருந்துதான் இயங்கின .இன்று பொருளாதார சமுக கல்வி நோக்கிய முன்னேற்றங்களால் ஏற்றத்தாழ்வுகளை உடைத்து முன்னேற்றப்பாதையில் மேற்கு நாடுகள் வந்துள்ளன.இங்கும் தெருப்பு தைப்பவனும் கொல்லனும் மாடு மேய்ப்பவனும் இன்னும் அனைத்து தொழில் செய்பவனும் இருந்தான். அதை தொழில் சார் கல்வியாக்கினான்.அதன் மூலம் யாரும் எதையும் கற்கலாம் செய்யலாம் என்ற சூழலை உருவாக்கினான்.
நாங்கள் இன்னும் சுத்தப்படுத்தாத கோவணத்துடன் அலைகிறோம்.அதனால் தான் எங்கள் எழுத்துகளும் எண்ணங்களும் கருத்துகளும் நாரி மணக்கிறது.புலம் பெயர் வாழ்வு எங்களை எச்சில் பாத்திரம் கழுவ வைத்தது. மலசலகூடம் கழுவ வைத்தது.வீதி கூட்டவைத்தது.இந்தத் தொழில்களை எதற்காக இங்கு செய்கிறோம் பணம்.இதே தொழிலை அங்கு அவர்கள் செய்ததும் வாழ்க்கைக்காக.மற்றும் 70மற்றும் 80 காலங்களில் மேற்குறிப்பிட்ட ****** ******** சாதிக்காரன்கள் இன்று இருக்கிறானா?மாற்றங்களை எழுத்துகளில் வரையாதீர்கள்
மனங்களில் கொண்டுவாருங்கள்.

 

நியானி: கருத்தாடலில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
கோமகன் ஒரு நல்ல நாவல் படித்த நிறைவை உங்கள் கதை தந்தது...எனக்கும் கதையின் முடிவில் உட‌ன்பாடு இல்லை...கீழ் சாதிக்கார‌ர்கள் அடிபணிந்து,கடைசி வரை அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ட‌ மாதிரி உங்கள் கதையின் முடிவு இருந்தது.
 
எந்த ஒரு பெண்ணும் தன்னை பலவந்தமாக கற்பழித்தவனது செத்த வீட்டுக்கு தனது கணவனை அனுப்ப மாட்டாள்...இப்படி சில,சில என்னால் காணக் கூடிய குறைகள் உங்கள் கதையில் காணப்படுகிறது.
  • தொடங்கியவர்

சாதியை ஒழிப்பது இலகுவான விடயமல்ல., இன்னும் சில தலைமுறைகளுக்குப் பிறகு சாத்தியப்படலாம்!!  

 

நன்றி கோ பதிவிற்கு. 

 

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு அலைமகள்.

 

  • தொடங்கியவர்

கதையின் இடையில் வருகின்ற வரலாற்று விளக்கம் கதையின் ஓட்டத்தை குழப்புகிறது. தனியாக துருத்திக் கொண்டு நிற்கிறது.

வருங்காலத்தில் சிங்களம் செய்ய இருக்கும் இன அழிப்புக்கு கட்டியம் கூறும் நிகழ்வு என்று கூறியதற்கான காரணமும் புரியவில்லை.

இந்தக் கதையில் வரும் சம்பவங்களை விட மிகக் கொடுரமான விடயங்களை 60, 70களில் வெளிவந்த பல கதைகள் பதிவு செய்திருக்கின்றன. (உதாரணம்: டானியல், டொமினிக் ஜீவா). இவர்கள் கண் முன்னே நடந்தவைகளை எழுதினார்கள். அதே போன்று கோமகனும் இன்றைக்கு நடப்பதை எழுத வேண்டும்.

சாதி இன்றைக்கும் உயிரோடுதான் இருக்கிறது.

1970களில் என்று எழுதி "சாதி" என்பதை இறந்த காலத்திற்கு உரியதாக்குவது தவறு. இது விழிப்புணர்வு இல்லை.

 

இந்தக் கதையில் வரலாற்ரை சிறிது சேர்த்தேன் . காரணம் சொல்லவந்த செய்திக்கு வலுசேர்ப்பதற்கே . அதேவேளையில் , தமக்கிடையே சாதீயமுரண்களையும்,  நசுக்கல்களையும் கொண்ட ஒரு இனத்திற்கு காலம் கொடுக்கப்போகும் தண்டனை , எதிர்காலத்தில்  சாகோதர இனமான சிங்களம் சாதீயத்தின் அடுத்தகட்ட நகர்வான இனவாதத்தை கையில் எடுக்கப்போவதை அந்தசம்பவம் நிரூபித்தது போல்இருந்தது எனக்குறிப்பிட்டேன்( மெலியாரை வலியார் அடித்தால் அந்த வலியாருக்கும் ஒரு வலியார் இருப்பார் என்பது எமது கசப்பான வரலாறு )  . ஈழத்தில் சாதீயத்தை கடுமையாக சாடி தம் எழுத்துக்களில் முத்திரை பதித்தவர்கள் மு.தளயசிங்கம் , டானியல் , அகஸ்தியர் குறிப்பிடத்தக்கவர்கள் .உங்கள் விமர்சனத்தை உள்வாங்கி எனது அடுத்த கதைகளில் நிட்சயம் கொண்டுவரவேன் . உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி சபேசன் .

 

  • தொடங்கியவர்

கதையின் முடிவு மோசமான கருத்தை தருகின்றது.

பறையை தூக்கி எறிந்து "புரட்சி" செய்த கதாநாயகன் கடைசியில் ஆதிக்க சாதிக்காரனின் சாவுக்கு பறை அடிக்கிறான். ஆதிக்க சாதிக்காரனே வெல்கிறான். பறை அடிக்க பிறந்தவன் பறை அடிக்கின்ற போதே செத்தும் போகிறான்.

என்னதான் கோமகன் சொல்ல வருகிறீர்கள்???!!!!

 

மன்னிக்கும் பண்பு எமக்கு வரவேண்டும் என்பதை இடித்துச் சொல்லியிருக்கின்றேன் . இந்தப் பண்பு இல்லாததால்தான் நாம் பலதை இழக்கவேண்டி வந்தது .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதையை வாசிச்சன் . என்ன சொல்லிறது எண்டு தெரியேலை . இப்பவும் சாதி இல்லை எண்டு ஆராவது அடம்பிடிச்சினம் எண்டால் அவை வேசம் போடினம் . சபை சந்தியள் , கலியாணத்திலை சாதி பாக்கினம் . இவையள் தரவளி மாறவேணும் . எனக்கு தெரிஞ்ச நாலு நண்பியள் சாதிப்பிரைச்சனையாலை வெறுத்து போய் வேறை இன பெடியளை செய்து சந்தோசமாய் இருக்கினம் . எங்கடை ஊரைலையும் ஒருத்தர் இருந்தவர் .  பருத்திதுறை ஆக்களுக்கு அவரை தெரியும் . அந்தாள் கால்வைக்காத இடம் இல்லை . டீலுகள் நீங்கள் சொன்னமாதிரித்தான் . ஆனா உங்கடை கீறோ கடைசியிலை பறை அடிக்கப் போனது எனக்கு பிடிக்கேலை . உங்கடை துணிச்சலை பாராட்டிறன் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை படித்தபோது எனக்கு 80 களில் பறை அடிப்பதில் புகழ் பெற்ற சுன்னாகம் ரத்தினன் நினைவில் வந்து போனான் கதை எழுதுவதில் முன்னேற்றம் தெரிகிறது தொடருங்கள்.

சபலம் என்பது பொதுவானதுதான். "எங்களின் பிள்ளைகள் உங்கள் வீட்டில், உங்களின் பிள்ளைகள் எங்கள் வீட்டில்" என்பது ஒரு பிரபல்யமான வசனம்.

 

சபேசனின் மேல் கூறிய வசனத்தை  பார்க்கும் பொழுது ...ஒரு வசனத் தொடர் ஞாபகம் வருகிறது. உண்மை சம்பவத்தையொட்டி நகைச்சுவையாக உருவாக்கபட்டதோ உண்மையாகவே நடந்த்தோ தெரியாது....அது என்ன வசனமென்றால்  உடையார் உயர்சாதி அல்லாத வைப்பாட்டியை பார்த்து கூறினாராம்... என்ரை  பிள்ளையும் உன்ரை பிள்ளையும் எங்கடை பிள்ளையும் கூடி விளையாடுதுகள் பார்த்தியோ என்று.....உடுப்பிட்டி தொகுதியின் முன்னாள் அரசியல்வாதி என்ரை பிள்ளையாகவும்  வ்வுனியா தொகுதியின்  முன்னாள் அரசியல்வாதியின்  உறவினர் எங்கடை பிள்ளையாகவும்  அதிகளவு அறிமுக மற்ற இன்னொருவர் உங்கடை பிள்ளையாகவும் அமைந்திருக்கிறார்கள்.....

 

என்ரை பிள்ளை - உடையாருக்கும் உயர்சாதி மனைவிக்கும் பிறந்த பிள்ளை

 

எங்கைடை பிள்ளை -உடையாருக்கும் உயர்சாதி அல்லாத வைப்பாட்டிக்கும் பிறந்த பிள்ளை

 

உன்ரை பிள்ளை- உயர்சாதி அல்லாத பொம்பளைக்கும்  உயர் சாதி அல்லாத சொந்த கணவனுக்கும் பிறந்த பிள்ளை

கோமகன் உங்கடை கதை பின்னூட்டத்துக்கிடையில் கிசு கிசுக்கள் இணைத்த்தை பொறுத்து கொள்ளவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்காக.. கதையை மேலோட்டமா படிச்சேன். அநேக பதங்கள் புரியல்ல..!

 

காலமாற்றம் ஏற்படுத்திய இடம்பெயர்வுக் கலாசாரம் என்பது எம் மத்தியில் நிறைய சமூக சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. அந்த இடைவெளியில் ஆயிரம் ஏட்டுச்சுரக்காய்கள் சாதிக்க முடியாததை.. ஒரு இடம்பெயர்வு சாதித்துக் காட்டியதை நிஜத்தில் கண்டிருக்கிறோம்.

 

இன்று புலம்பெயர் மண்ணில் சாதியம் அடக்கிவாசிக்கப்படக் காரணம்.. புலம்பெயர் அரசுகள் வழங்கும் ஓரளவு சமத்துவ வாழ்க்கையே. இன்றேல் இங்கும் அந்தச் சாதியம் பேணப்படும். ஆனால் எம்மத்தியில் இப்போ வளர்ந்து வரும் இன்னோர் விடயம்.. வர்க்க வேறுபாடு. இது சாதியத்தின் இன்னோர் வடிவம். பெயர் தான் வேறு. வருவாயின் அடிப்படையில்.. அந்தஸ்து.. தகுதி அடிப்படையில் இது உருவாகிறது..!

 

தாயகத்தில் இடம்பெயர்வு வாழ்வு எல்லாரினதும் தேவைகளை (எல்லாரும் வீட்டை விட்டு ஓடிச்சினம். கல் வீட்டில இருந்த வரும் சரி.. மாடி வீட்டில இருந்த வரும் சரி.. குடிசையில இருந்த வரும் சரி. எல்லோருக்கும் ஒரே வாழ்விடம். அகதி முகாம்...) சமப்படுத்தியதால்.. அங்கு அப்போது சாதியம் முன்னிற்கவில்லை. மனித அடிப்படைத் தேவைகள் மனிதர்களை மனிதர்களாக இனங்காட்டி வாழ விட்டது. ஆனால் இப்போ அங்கும் பழைய குருடி கதவைத் திறவடி கதை தான்..!

 

சாதி என்பது அடிப்படையில்.. ஒரு சமூகத்தில் பின்ந்தங்கிய நிலையில் உள்ளவர்களை வேறுபடுத்திக் காட்டும் மனித சிந்தனையோட்டம். அவர்களிடம் சமனான கல்வி இல்லை. பொருண்மியம் இல்லை. செய்யும்.. தொழில்.. மாறும் சூழலுக்கு விரைந்து இசைவாகும் தன்மை இல்லை... பழக்க வழக்கங்கள்.. உடை நடை பாவனை.. மொழிக் கையாளுகைகளில் உள்ள மாற்றங்கள்.. இவை சாதியச் சாயல்களாக.. இப்போதும் இனங்காணப்படுகின்றன. அவை ஆங்காங்கே கூறுகளாக விடப்பட்டும்.. உள்ளன.

 

ஒரு மேட்டுக்குடி குடும்பம்.. லண்டனில் பொஸ் இடம் என்று சொல்லி அங்கு.. பேர்த்டே பாட்டி நடத்தினால்.. சாதாரண.. பிந்தங்கிய குடும்பம்.. நம்ம உள்ளூர் ஆக்களின்ர மண்டபத்தில் நடத்தும். அங்கே பொஸ் இடத்தில்.. டிஸ்கோ.. இருக்கும். இங்கே லோக்கல் DJ குத்துப்பாட்டு இருக்கும்..!

 

இங்கு தான் வேறுபாட்டுக்கான கிளை அரும்புகிறது. அது அப்படியே தனி விருட்சமானால் நாளை இதுவும் ஒரு சாதியமாகி நிற்கும்..!

 

எனவே தேவை என்ன என்றால்.. சாதியம் வெளிப்படையா கதைக்கிற வீரதீரர்கள் அல்ல. அதைக் கதைக்க வீரம் அவசியமில்லை. சொற்களின் கோர்வையே அவசியம்... இதுவல்ல தேவை. உண்மையில்.. சாதிய அடிப்படை கிளம்பக் காரணமாக உள்ள சமூக வேறுபாடுகளை கிள்ளி எறிவதே..??! அதை யார் செய்வார்..??!

 

குறிப்பாக சுமே அக்கா சொல்லி இருக்கா.. தன்ர பிள்ளைகள் படிப்பும் குணமும் பார்க்கும் என்று..! படிப்பை அளவிடலாம்.. கடதாசிகள் உள்ளன. குணத்தை எதைக் கொண்டு அளவிடுவினம்..???! சிலர் அதனை சாதியைக் கொண்டு அளவிடுகினம்.. சிலர் பணத்தைக் கொண்டு அளவிடுகினம்.. சிலர் குடும்பப் பின்னணியைக் கொண்டு அளவிடுகினம்..??! இப்படிப் பல அளவீடுகள். உண்மையில் அதனை சூழலும் உயிரியலும் (ஜீன்கள்) தான் தீர்மானிக்கின்றன..! அவற்றை எப்படி கணிப்பது..???!

 

அடிப்படையில் சுமே அக்காட பிள்ளைகள் மறைமுகமா குணம் பார்ப்பினம். அது தான் ஊரில சாதி என்றிருக்குது இங்கே வர்க்கமாக..(Class) பொஸ்.. என்ற தொனியில் இருக்குது. high class.. middle class.. lower class... இப்படி புலம்பெயர் நாடுகளிலும் உள்ளன.

 

நான் அவதானித்திருக்கிறேன். high class வெள்ளைகள்.. lower class வெள்ளைகளிடத்தில் திருமண பந்தம் வைப்பதில்லை. யுனியில் கூட அவர்கள் அவர்களோடு கூட்டத்தினரோடு அவர்களுடைய பொழுதுபோக்கோடு..கோல்ப் மைதானத்தில். lower class அவர்கள் அவர்களோடு கூட்டத்தோடு கால்பந்தோடு கால்பந்து மைதானத்தில்..!

 

மனித சமூகத்தில் சின்னச் சின்ன விடயங்கள் கூட அந்தஸ்தை தீர்மானிக்கும் நிலை உள்ளது. ஊரில சாதி இருக்கு.. இஞ்ச இல்லை என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம். இங்க ஊரில சொல்லுற வடிவில அது இல்லையே ஒழிய .. ஆனால் அதே காரணிகளோடு வேறு வடிவில இருக்குது..!

 

எல்லாவற்றிற்கும் காரணம்.. மனித மனங்களுக்குள் புகுத்தப்பட்டுள்ள.. இது மேலானது.. அது கீழானது.. இது விலை உயர்வானது.. அது மலிவானது.. இது நாகரிகமானது.. அது அநாகரிகமானது என்ற எண்ணப்பாடுகளே.!  இதனை விலங்குகளிடத்தில் காண்பது அரிது..! எனவே வெறும் ஏட்டுச் சுரக்காய்களால் அன்றி.. மனிதர்களிடையே அவர்களால்.. ஏலவே கட்டி அமைக்கப்பட்டுள்ள பாகுபாட்டியல்.. சிந்தனையில்.. சித்தாந்தங்களில்.. ஏற்படுத்தப்படும் மாற்றம் ஒன்றே.. இந்த சாதி.. வர்க்கம் கடந்து மனிதன் இயல்பாக கலக்கும் நிலையை பிறப்பிக்கும்..!

 

மற்றும்படி.. சாதி பற்றி கதைச்சால் அது புரட்சி.. முற்போக்கு..பகுத்தறிவு என்பதெல்லாம் வெறும் காதில பூச்சுத்தல்.  சாதி மாறி கலியாணம் செய்தால் எல்லாம் சரியாகிடும்.... அது புரட்சி என்பது எல்லாம் ஒரு விதமான.. விளம்பரம் தேடும்.. அரசியல் தேடும்.. புகழீட்டம் செய்யும்..  தந்திரமே அன்றி வேறல்ல..!

 

இந்தப் பூமிப்பந்தில்.. அண்டம் காக்கையும்.. அரிசிக் காகமும்.. சாதி பார்க்கிறதில்லை... இனக்கலப்பதும் இல்லை..! காரணம்.. அது இயற்கையின் தெரிவு..! காசு பணத்தின் தொழிலின் அந்தஸ்தின் படிப்பின் குணத்தின் தெரிவல்ல..!

 

என்னைப் பொறுத்த வரை இந்த பாகுபாட்டியலால் தன்னைத் தானே உயர்த்தியும் தாழ்த்தியும் வியாபாரம் விளம்பரம் ஆதாயம் பெற்று வாழப் பழகிவிட்ட  மனிதன் இலகுவில்.. மாறமாட்டான்..! உயர்வு எண்ணத்தால் உயர்ந்தும்.. தாழ்வு எண்ணத்தால் மனிதன் தாழ்த்தப்பட்டும் இருக்கிறான் என்றால் அதற்கும் மனிதனே காரணம். நிறத்தால்.. வர்க்கத்தால்.. சாதியால்.. மதத்தால்.. மொழியால்.. எல்லையால் என்று இந்தப் பாகுபாடுகள் மனிதரில் மிக அதிகமாக உள்ளன. அவையே அவனை அழிக்கவும் செய்கின்றன. மறைமுகமாக.. மாற்றங்களோடு.. வாழ வைக்கவும் செய்கின்றன. :icon_idea::)

 

மற்றும்படி ஒரு கால ஓட்டத்தின் விம்பமாக இந்த ஆக்கத்தைப் படித்துச் செல்லலாம்.

 

கோமகன் இதுதான் என்னால் இங்கு தரக்கூடிய விமர்சனம். (10- 15 நிமிடங்கள் செலவழிச்சிருக்கிறன்.) :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும்படி ஒரு கால ஓட்டத்தின் விம்பமாக இந்த ஆக்கத்தைப் படித்துச் செல்லலாம்.

ஆம்..இதுதான் இந்த பதிவை நான் படித்தபோது உணர்ந்தது..கதை என்பதைவிட தான் கண்டவற்றை ஒரு சாட்சியாக அப்படியே பதிந்திருக்கிறார் என்பதுதான் இந்தப்பதிவில் நான் உணர்கிறேன்..நல்ல பதிவு கோமகன் அண்ணா..தொடர்ந்து எழுதுங்கள்..

  • தொடங்கியவர்

சபேசனின் கருத்தோடும் கேள்விகளோடும் ஒத்துப் போகமுடிகின்றது. சாதியத்தை எதிர்க்கின்றேன் பேர்வழி என்று சாதியத்தை ஆதரிக்கின்ற கதையின் கரு. பாலச்சந்தரும் புரட்சியான கதைக்களத்தைத் தேர்ந்துவிட்டுப் இறுதியில் சமரசம் செய்வதுபோல சின்னாட்டியும் உடையாருக்கும் பறை மேளத்தை அடிக்கின்றார். அந்தச் செய்கைக்கு ஒரு விளக்கமும் இல்லை.

 

அதுபோலவே உடையாரை உச்சிக்கொண்டு திரிந்த காமாட்சி பத்து பரப்புப் செம்பாட்டுத் தோட்டக் காணிக்காக  சோரம் போவதும் சாதி குறைந்த பெண்கள் மீதான கேவலமான பார்வையைத்தான் காட்டுகின்றது. மொத்தத்தில் இந்தக் கதை மூலம் சில சாதிய உரையாடல்களை மட்டும்தான் அறியமுடிந்தது. 

 

 உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கிருபன் .

 

அப்புறம்????

  • தொடங்கியவர்

அப்புறம்????

 

உங்களை ஏமாற்றுவது எனது நோக்கமல்ல . எனது கதையில் உங்கள் விமர்னங்களையே எதிர்பார்ப்பேன் . இந்தக்கதையை நான் எனது மன அரிப்புக்காக எழுதவில்லை .  நீங்கள் உங்கள் பார்வையில் விமர்சனத்தை வைத்தீர்கள் . காமாட்சியின் பாத்திரம் பற்றி ஏற்கனவே எனது பதிலில் கூறியுள்ளேன் .  சின்னாட்டி பறையடித்ததும்  நீங்கள் கூறிய குறளின்படியே அமைத்திருந்தேன் . ஆனால் உங்களின் பார்வையில் முடிவு வேறாகத் தெரிகின்றது . உங்கள் விமர்சனம் நான் எப்படி கதை எழுதவேண்டும் . என்பதை எனக்கு இடித்து சொல்கின்றது அதை நிட்சயம் கவனத்தில் கொள்வேன் .

 

புங்கையூரன் தலைமுடி திருந்துபவரின் சாதியை பற்றி எழுதியதிற்காக, அந்த கருத்தை நீக்கிய நியாயினி, இதில் இவ்வளவு சாதிகளை பற்றி எழுதியும் நீக்காமல் இருப்பது ஏனோ? ஏந்த சாதியையும் இழுத்து கதைப்பது மன்னிக்க முடியாதது. இப்படி கதைப்பவர்கள் தான் அதில் ஊறி உப்பி போயுள்ளார்கள்.

 

சாதீயத்தை வெளிக்கொணருபவர்களுக்கு யாழ் இடங்கொடுக்கத்தொடங்கிவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

நாய் களுக்கே ஜாதி இருக்கும் போது அதை ஜாதியால் வகைபடுத்தி இருக்கும் போது

மனுஷாளுக்கு ஜாதி இஉக்கிரதில என்னங்க தப்பு? எதையுமே தப்பா பாத்தா தான் தப்பு அந்த அந்த தொழில் செய்றவங்கள அவங்கள அந்த அந்த வகைபடுத்தி சொல்லுவதற்க்காக உருவாக்கப்பட்டதே ஜாதி

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன அறுவாவ தீட்ட வேண்டியது தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்களின் பார்வையில் முடிவு வேறாகத் தெரிகின்றது.

 

 

முடிவை இலட்சியக் கதைகள் போன்று ஆக்கவேண்டியதில்லை. எனினும் முடிவைத் தீர்மானித்துக் கதை எழுதும்போது அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சம்பவங்களும் பாத்திரப் படைப்புக்களும் இருக்கவேண்டும். இல்லையேல் கதையின் காத்திரம் குறைந்துவிடும்.

 

சிறந்த கதைசொல்லியாக கோமகன் வரவேண்டும் என்பதுதான் விருப்பம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சாதியம் என்பது எங்கள் மக்களது இரத்தத்தில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயம்

அது புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்வது எங்களது சாபக்கேடு 


மேலாளர் என நினைப்போர்  ஒரு பகுதியை அவர்களது 

தொழில்  சார்ந்து கீழோர் என  ஒதுக்கி வைப்பது  மிகக் கேவலமான விடயம்.

 

கோமகன் தனது கதையில் கூற வரும் செய்தி என்ன என்று விளங்கவில்லை.

சில இடங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தெரிகின்றது.


ஊரில் சாதி பார்த்தவர்கள் பலரும் அவர்களது தொழிலை மேற்கு நாடுகளில் தாங்களே செய்யும்போதும்  அதை உணராமல் செய்துவிட்டு மீண்டும் முரங்கை மரத்தில் ஏறுவார்கள்  

 

  • தொடங்கியவர்

கோ முதலில் கதை எழுதிய விதத்திற்கு நிறைய பாராட்டுக்கள்.அனுபவித்து வாசித்தேன் .

இரண்டாவது கதையின் கரு ,

புதிய வார்ப்புகள்  கதாநாயகி மாதிரி வில்லனை குத்திவிட்டு ஓடுவதுபோல படமாக்காமல் யதார்ர்தமாக முடித்ததற்கு நன்றி .கதை என்பது யதார்த்தமாக உண்மையாக இருக்கவேண்டும் போதனையாக இருக்ககூடாது.அதற்கு போதகர்கள் இருக்கின்றார்கள் .

விஸ்பரூபத்திற்கு எதிர்ப்பு வந்தது போல உங்கட கதைக்கும் எதிர்ப்புகள் தான் கிளம்புது .உண்மைகளை ஏற்றுகொள்ள இங்கு எவருக்கும் விருப்பமில்லை .சாதிய விடயத்தில் நாம் ஒரு துளிதானும் இன்னமும் அடுத்த படிக்குபோகவில்லை .சின்னாட்டியும் அவன் மனைவியும் போல் தான் அங்கு தாழ்த்தபட்படவர்களின் வாழ்க்கை .தொடர்ந்து எழுதுங்கள் .

சொந்த வாழ்க்கையையே பொய்யாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கெல்லாம் கதை எழுத முடியாது .

 

அதைத்தான் நான் முதலிலேயே குறிப்பிட்டுள்ளேன் . உண்மைகள் வலிப்பதால் அந்த உண்மைகளைப் பேசாது நல்ல பிள்ளையாக இருப்பது  , எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலாகும் என்று . வருகைக்கும் கருத்துக்கும்நன்றி அர்ஜுன் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழிப்புலன் இழந்தவன் கொக்குக்கு விளக்கம் சொல்வது போலத்தான் உள்ளது இங்குள்ள தணிக்கை யாளர்களின் வேலையும்.இந்தக்கதையில் பலதடவைகள் பாவிக்கப்பட்ட சாதியின் பெயர்கள்  நான் எழுதும் போது நீக்கப்பட்டுள்ளது.எழுத்துகளில் சாதியை நீக்கி என்ன பயன் நியானி.மேலே உள்ள கதையை வாசித்து விளங்கி தணிக்கை செய்யுங்கள்.

படைக்கும் ஆக்கங்களில் சுட்டப்படும் சாதிப் பெயர்கள் கதையோட்டத்திற்கு தேவையாக இருக்கலாம் என்பதனால் நெகிழ்வுத்தன்மை காண்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கருத்தாடலில் வெளிப்படையாக சாதிப் பெயர்களைச் சுட்டிநிகழ்த்தப்படும் உரையாடல்கள் சாதீயத்தை பற்றிய ஆக்கபூர்வான கருத்தாடலுக்குத் தேவையற்றது என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை.

  • தொடங்கியவர்

எல்லோராலும் எடுத்துவரத் தயக்கம் காட்டும் கருவானாலும் கோமகன் கதை சொன்ன விதமும் எழுத்தோட்டமும் நன்றாக உள்ளது. ஆனாலும் உடைத்து எறிந்த பறையை மீண்டும் அடிக்க ஆரம்பித்தது சொல்ல வந்த செய்தியை துவம்சம் செய்து விட்டது. எங்களுரில் 80துகளின் பின் உடைத்து எறிந்த பறையை இன்று வரை அவர்கள் தொடவே இல்லை. இன்றைய இளையவர்கள் போகும் வேகத்தில் சாதியத்திற்கு ஆயுள் மிகக் குறைவு என்பதே என் கருத்து.

 

எனது கதை உங்களைக் கவர்ந்தது இந்தக் கதைக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது போல . ஏனெனில் காவலூர் மண் இலக்கியத்தால் செழிப்புற்ற மண் . அதில் காவலூர் எஸ் ஜெகநாதன் எனது அண்ணை வடகோவை வரதறாஜன் காலத்தில் எழுதிய அண்ணையின் நண்பர் . உங்கள் விமர்சனங்களை உள்வாங்கி வருங்காலங்களில் எனது கையை நகர்த்துகின்றேன் . உங்கள் வருகைக்கு நன்றி காவலூர் கண்மணி .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.