Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நோ பயர் சோன்' - 90 நிமிட திரைப்படம் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது

Featured Replies

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின.

110803140722_srilankavideo_channel4_304x

போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையிலேயே படத்துக்கு No Fire Zone என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போர்க் குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குனர் கேலம் மெக்கரே.

சேனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.

"இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும். போர்க் குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அங்கே நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும்" என்றார் கேலம் மெக்கரே.

சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பது குறித்தும் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களை உருவாக்கவும் இந்தத் திரைப்படம் வழிகோலும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130216_nofirezonechanel.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சேனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.

என்ன கொடுமைசார் இது? :D

  • தொடங்கியவர்

போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும்"

- இயக்குனர் கேலம் மேக்கரே

CallumMacrae_01.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்;

எனக்கெண்டால் கிளி கிளி என்று கிழிக்க போறார் போல இருக்கு..

  • தொடங்கியவர்

ஆவணப்படத்தை எடுத்தமை மட்டுமல்ல சாதனை. அதனை எப்பொழுது எங்கே வெளியிடல் வேண்டும் என்ற கலையையும் அழகாக நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த ஆவணப்படத்துடன் ஐ.நா. செயலாளர் நாயகம் ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிடல்வேண்டும்!

நடிகர்களின் பட்டியலில்

நம்பியார் ஒன்று,

நம்பியார் இரண்டு,

பொல்லாத நாராயன்,

சூர சங்கார மேனன்

......

......

.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையாவது சிறிலங்காவை போர் குற்ற நாடக அறிவிக்க எதாவது நடக்குமா ?

  • தொடங்கியவர்

கடந்த காலங்களில் நாம் கண்ட அனுபவம் பற்றி பரப்புரை ரீதியாக என்ன செய்யலாம்:

  • சில இடங்களில் பின்னூட்ட கருத்துக்களை வைக்கும் தேவை இருக்கும்.

  • யார் யாரின் கவனத்திற்கு இதை கொண்டுவர வேண்டும்?

  • நன்றி கடிதம் எழுதுதல் நன்று

  • வேறு?
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்களின் பட்டியலில்

நம்பியார் ஒன்று,

நம்பியார் இரண்டு,

பொல்லாத நாராயன்,

சூர சங்கார மேனன்

......

......

.....

தமிழர்களின் வாழ்வில் இந்திய தோஷம் இருக்கும்வரை விடிவே கிடையாது இப்போது வேண்டியதெல்லாம் தோஷத்துக்கான பரிகாரமே 

  • கருத்துக்கள உறவுகள்

No Fire Zone - Trailer

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

  • தொடங்கியவர்

அம்னெஸ்டி இன்ரநசனலினை சேர்ந்த யோலண்டா போஸ்டர், அதே நாள் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் சார்பாக 'பாலியல் வன்முறை' பற்றிய அறிக்கையும் சமர்பிக்கப்படும் என கூறியுள்ளார்.

Yolanda Foster of Amnesty International will release their “UNHRC submission under Item 4”, at this event and Human Rights Watch will be distributing a report on “Sexual Violence” being published by them on the same day. 

http://www.thesundayleader.lk/2013/02/17/unhrc-voting-members-to-attend-gtf-event/

  • தொடங்கியவர்

இதற்கு ஒரு கிழமைக்கு முன்னராக சர்வதேச நெருக்கடிகள் அமைப்பின் சார்பாக ' சிறிலங்காவின் சர்வாதிகார ஆட்சி' என தலைப்பிடப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்படும்.

The International Crisis Group will be advocating a new report “Sri Lanka’s Authoritarian Turn” being published in the week prior.

http://www.thesundayleader.lk/2013/02/17/unhrc-voting-members-to-attend-gtf-event/

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாக்கும் முயற்சியில் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகளை விட சனல் 4 எடுக்கும் முயற்சிகள் அளப்பரியவை.அவர்களுக்கு நாங்கள் ஊக்கம் குடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாக்கும் முயற்சியில் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகளை விட சனல் 4 எடுக்கும் முயற்சிகள் அளப்பரியவை.அவர்களுக்கு நாங்கள் ஊக்கம் குடுக்க வேண்டும்.

இன்டர் சிட்டி பிரெஸ் மத்தியூ லீயையும், மறக்ககூடாது, புலவர்!

channel 4 க்கு மீண்டும் நன்றி....

இன்டர் சிட்டி பிரெஸ் மத்தியூ லீயையும், மறக்ககூடாது, புலவர்!

உண்மை தான்...
 
  • தொடங்கியவர்

திரைக்கு வருகிறது இலங்கையின் “கொலைக்களம்”
February 17, 2013

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின.

போரின்போது ‘தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையிலேயே படத்துக்கு No Fire Zone என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போர்க் குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குனர் கேலம் மெக்கரே.

“போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும்”

சேனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும்.
போர்க் குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், அங்கே நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும் என்றார் கேலம் மெக்கரே.

சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பது குறித்தும் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களை உருவாக்கவும் இந்தத் திரைப்படம் வழிகோலும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

போர்க் குற்றம் தொடர்பாக வந்த சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காக இலங்கை அரசு படிப்பினைகள் ஆணைக்குழுவை நியமித்தது.ஆனால் போர்க் குற்றம் தொடர்பாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை, போர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, சிலருக்கு ராஜாங்கப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் பல விமர்சனங்களை முன்வைத்த இலங்கையின் கொலைக்கள ஆவணத் தயாரிப்பாளர்கள் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை ஆழுத்தமாக பதிவு செய்யவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டு தற்கொலைத் தாக்குதல்களை இந்தப் படத்தில் காட்டியுள்ளதாகத் தெரிவித்த இயக்குனர் கேலம் மெக்கரே, “விடுதலைப் புலிகள் மோசமான பல காரியங்களை செய்தார்கள் என்பதற்காக, தாம் அதை விட மோசமான காரியங்களை செய்யலாம் என்று சர்வதேச சட்டங்களின படி நடப்பதாக உறுதியளித்துள்ள ஒரு அரசு சொல்லுமேயானால் அது மிகவும் வியப்பான ஒன்று” என்றார்.

இலங்கை அரசு கடந்த காலங்களில் தொடர்ந்து தமக்கு பதிலளிக்காத நிலையில், இந்தப் படத்திற்காக அரசின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்றும் கேலம் மெக்கரே தெரிவித்தார் .

http://www.alaikal.com/news/?p=122627

  • தொடங்கியவர்

கவனிக்கவும் : இளகிய மனம் மற்றும் பலவீனமான இதயத்தை கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்

NO FIRE ZONE......
சேனல் 4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம்..
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்....
இதுவரை வெளியாகாத புதிய காட்சிகளின் சிறப்புத் தொகுப்பு...
புதிய தலைமுறையில் மட்டும்..

இதை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களையும் அம்னெஸ்டி இன்ரநசனல் ஊடாக மக்கள் பதிந்துள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.