Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையாகிறது எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்ச்சியில் ராதிகா சிற்சபைஈசன் தேசக்கொடி போர்த்திய விவகாரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rtathikakodi.jpg

கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான  

ராதிகா சிற்சபைஈசன்  கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம்.

 

சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. 

 

இதெல்லாம் ஒருபுறமிருக்க இளையராஜாவிற்கும் ராதிகா போர்த்திய தேசக் கோடியை ஏற்றுக் கொள்வதில் பெரிதாக  உடன்பாடு இருக்கவில்லை என்பது அரங்கத்தில் இருந்த நாம் அனைவருமே பார்த்த காட்சி தான். 

581277_419018351520368_1718038855_n(1).j

இந்த நிலையில் கனடியத் தமிழர்களின் சார்பில் பாராளுமன்றிற்கு தெரிவானவரும் , சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழர்களுக்காய் பாராளுமன்றில் குரல் கொடுத்தது உள்ளிட்ட பலவற்றின் மூலம் கனடியத் தமிழர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்ற ராதிகாவைப் போன்ற பிரபலங்கள் மேடைகளில் இது போன்று நடந்து கொள்ளலாமா என்பதே தற்போது நம் முன்னிருக்கும் கேள்வி. 

ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் கனடா உள்ளிட்ட மேலை நாடுகள்  பலவற்றில் யார் வேண்டுமானாலும் தேசக் கொடியை தங்கள் உடைகளில் வைத்து தைத்துக் கொள்ளலாம், ஏன் தாங்கள் பயன்படுத்தும் காலணியில் கூட வைத்துக் கொள்ளலாம் என்ற முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது தமிழ் இசைஞாநியான இளையராஜாவிற்கு தேசியக் கொடி போர்த்தியதில் தவறென்ன எனக் கேட்கின்றனர் சிலர்.

 

ஒம். சட்டப்படி அது தவறில்லைதான். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் 90 விழுக்காட்டினரை இந்தச் செயல் உணர்வுரீதியாக காயப்படுத்தியுள்ளதே அதற்கு நாம் என்ன சொல்லப் போகிறோம்.  

எங்கு வேண்டுமானாலும் நாட்டின் தேசியக் கோடியை பயன்படுத்தலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஒரு நாட்டின் தேசியக்கொடி என்பது அந்நாட்டு மக்களுக்கு நான் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்பதால் பெருமைப்படுகிறேன் என்ற எண்ணத்தை உணர்வு ரீதியில் உருவாக்கவும், நாட்டின் அடையாளத்தையும், கௌரவத்தையும் கட்டிக் காக்கவும் தான்.

 

இப்படியான ஒரு சூழலில் அனைத்தும் அறிந்த நம் பாராளுமன்ற உறுப்பினரான நம்மில் ஒருவரான ராதிகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட்டிருக்க வேணாமா. அவர் தனிப்பட்ட முறையில் ஒரு கலைஞர் என்ற வகையில் இளையராஜாவை கௌரவிப்பதானால் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் சிலவற்றைக் கொடுத்து கௌரவித்திருக்கலாம் என உணர்வு ரீதியாக  மக்கள் கேள்வி எழுப்புவதில் தவறென்ன இருக்கிறது.

 

 இசை மேதை என்பதால் அவர் தேசக்கொடி போர்த்தி கௌரவிக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதானால் ஏதாவது ஒரு துறையில் திறமை மிக்க தமிழர்கள் எல்லாம் நாட்டினுள் வரும் போதும் இப்படி தேசக் கோடி போர்த்துவதைச் செய்வீர்களா என ஒருவர் இகுருவி எண்ணிற்கு நேரடியாக அழைத்தே  கேள்வி கேட்டார். நமக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

எப்படியோ நிகழ்ச்சி முடிந்தாகி விட்டது. இளையராஜா கௌரவிக்கப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை சர்ச்சையாக்கும் வகையில் சிறந்த கௌரவமாகவே செய்து விட்டார் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன். 

இனி வரும் காலங்களிலாவது சொந்த விருப்பு , வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு நாடு என்று வருகிற போதும், நாட்டின் அடையாளத்தை பயன்படுத்தும் போதும் நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்வோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாடை தானே போர்த்துவார்கள் .   ஏன் ஒரு பொன்னாடை கிடைக்கவில்லையா?  . தேசிய கொ டியை போர்த்துவது எனக்கு தவறு என் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இளயராஜாவின் இசைமயக்கத்திலும்....கமலின் விசுபரூப மயக்கத்திலும் எமது இளையோர்களில் சிலர்....தேவையற்ற விடயங்களை எழுதி தமிழக உணர்வாளர்களை நோகடித்தார்கள்....அதன் தாக்கம் யழ் பல்கலை மாணவர்கள் கைது விடயத்தில்..எதிரொலித்தது நாம் கண்டோம்...இப்ப பாலச்சந்திரன் விடயத்தில்தமிழகம் பொங்கி எழுகின் றது....அதாவது அனலாய் கொதிக்கின்றது....இவ் வேலையில் ..ஈ.குருவி இப்படி ஒரு வேலையை செய்ய வேண்டிய அவசியம் என்ன....இவர்களும் இன்நிகழ்வு ஏற்பாட்டில் ஒரு அங்கமே.....இப்ப எதற்கு தேவை யில்லாத வேலை....ராதிகா கனடியக்கொடி போர்த்தியதுசிலவேளை பிழையாக இருக்கலாம்....ஆனால் இன்று கனடாவைப் பொறுத்ததவரை .....தமிழ் மக்களின்பிரச்சினையை கனடிய பாராளுமன்றத்தில் ..ஒலிக்க செய்தவர்...செய்யப்போகிறவர்...செய்வார் என்பதற்கு விடை ராதிகாதான்....ராதிகாவின் வயதை ஒத்தவர்களேராஜா னொவென்பரில் பாடா வரவில்லை என்றவுடன்..எமது..தெசிய பிரச்சினையே..கேவலபடுத்தி முகநூலில்  எழுதியும்...இந்தியப் பத்திரிகைகலுக்கு செய்தியும் கொடுத்தார்கள்...இதை யாராலும் மருக்க முடியுமா.....அதனை பாட்டு மோகம்...இசைமோகம் ..என்று பொறுக்கப்பட்டது...அவ்வாரு அந்த மோகத்தில் ராதிகா செய்தது தவறக இருக்கலாம்....இந்த ஒரு சிறிய செயலுக்காக எமது இனத்திற்கு அரும்பணி செய்யும் அவர்சேவையை...கருத்துகணிப்பு செய்து 90 வீதமானவர்..விரும்பவிலஐ என்று ஒரு சோடனை செய்வது யாருக்காக....

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாடை தானே போர்த்துவார்கள் .   ஏன் ஒரு பொன்னாடை கிடைக்கவில்லையா?  . தேசிய கொ டியை போர்த்துவது எனக்கு தவறு என் படுகிறது.

 

தனிப்பட்ட முறையில் எனக்கும் உடன்பாடில்லை!

 

ஒரு நாட்டின் தேசியக்கொடியின் பின்னால், பலரது தியாகங்களும், கண்ணீர் வரலாறுகளும் மறைந்திருக்கின்றன!

 

ஒரு களியாட்ட நிகழ்ச்சிக்கு, வந்த ஒருவரைக் கவுரவிப்பதற்காக, இதை உபயோகித்தது தவறெனவே நான் நினைக்கிறேன்!

 

மனிதாபிமானத்தின் பிச்சையாகக் கிடைத்தது தான், புலத்துத் தமிழர்களின் சுதந்திரம்! :o

 

அதை அவர்கள், துஸ்பிரயோகம் செய்யக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

கனேடியர்களே பேசாமல் இருக்கிறார்கள்.இதற்குள் ஈகுருவி கருத்து கணிப்பு நடத்துகிறது. ஈகுருவி வியாபாரம் சம்பந்தமாக பத்திரிக்கை வெளியிட்டுக்கொண்டிருந்தது. அரசியலில் ஏதாவது பூகம்பத்தை உண்டாக்கி தான் பிரபல்யம் அடையலாம் என நினைத்ததோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் nunavilaan....தவறு நடக்காத இடமில்லை......அதை இப்ப தூக்கிப் பிடிக்க வேண்டிய காரணம் என்ன?

இளயராஜாவின் இசைமயக்கத்திலும்....கமலின் விசுபரூப மயக்கத்திலும் எமது இளையோர்களில் சிலர்....தேவையற்ற விடயங்களை எழுதி தமிழக உணர்வாளர்களை நோகடித்தார்கள்....அதன் தாக்கம் யழ் பல்கலை மாணவர்கள் கைது விடயத்தில்..எதிரொலித்தது நாம் கண்டோம்...இப்ப பாலச்சந்திரன் விடயத்தில்தமிழகம் பொங்கி எழுகின் றது....அதாவது அனலாய் கொதிக்கின்றது....இவ் வேலையில் ..ஈ.குருவி இப்படி ஒரு வேலையை செய்ய வேண்டிய அவசியம் என்ன....இவர்களும் இன்நிகழ்வு ஏற்பாட்டில் ஒரு அங்கமே.....இப்ப எதற்கு தேவை யில்லாத வேலை....ராதிகா கனடியக்கொடி போர்த்தியதுசிலவேளை பிழையாக இருக்கலாம்....ஆனால் இன்று கனடாவைப் பொறுத்ததவரை .....தமிழ் மக்களின்பிரச்சினையை கனடிய பாராளுமன்றத்தில் ..ஒலிக்க செய்தவர்...செய்யப்போகிறவர்...செய்வார் என்பதற்கு விடை ராதிகாதான்....ராதிகாவின் வயதை ஒத்தவர்களேராஜா னொவென்பரில் பாடா வரவில்லை என்றவுடன்..எமது..தெசிய பிரச்சினையே..கேவலபடுத்தி முகநூலில்  எழுதியும்...இந்தியப் பத்திரிகைகலுக்கு செய்தியும் கொடுத்தார்கள்...இதை யாராலும் மருக்க முடியுமா.....அதனை பாட்டு மோகம்...இசைமோகம் ..என்று பொறுக்கப்பட்டது...அவ்வாரு அந்த மோகத்தில் ராதிகா செய்தது தவறக இருக்கலாம்....இந்த ஒரு சிறிய செயலுக்காக எமது இனத்திற்கு அரும்பணி செய்யும் அவர்சேவையை...கருத்துகணிப்பு செய்து 90 வீதமானவர்..விரும்பவிலஐ என்று ஒரு சோடனை செய்வது யாருக்காக....

 

அப்படியா?  அப்படி அவர் செய்த அரும்பணிகளை இங்கு பட்டியலிட முடியுமா?  ராதிகா பாராளுமன்றத்திற்குத் தெரிவானதே 2011இல்தான்.  அதற்கு முன்னர் இவர் தமிழ் மக்களுக்குச் செய்த சேவைகளையும் கொஞ்சம் பட்டியலிடுங்கள்.

கனேடியர்களே பேசாமல் இருக்கிறார்கள்.இதற்குள் ஈகுருவி கருத்து கணிப்பு நடத்துகிறது. ஈகுருவி வியாபாரம் சம்பந்தமாக பத்திரிக்கை வெளியிட்டுக்கொண்டிருந்தது. அரசியலில் ஏதாவது பூகம்பத்தை உண்டாக்கி தான் பிரபல்யம் அடையலாம் என நினைத்ததோ தெரியவில்லை.

 

நுணாவிலான், இது தமிழ் நிகழ்ச்சியில் நடந்தததனால் கனேடிய ஊடகங்களுக்கு இதுவரை தெரிய வரவில்லை என்று நினைக்கிறேன்.  அப்படித் தெரிய வந்தால் இது பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டின் அதி உன்னதமான குறியீடே அந்நாட்டின் தேசியக் கொடி. அந்தக் கொடி பல அளவுகளில் இருந்தாலும் அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட நீள அகல பரிமாணங்கள் இருப்பது அதற்குரிய சிறப்பியல்பாகும். அது மட்டுமன்றி ஒரு தேசியக் கொடியானது எவ்வாறு கௌரவமாகப் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற விதி முறைகளும் நிர்ணயிக்கப்பட்டவையே. ஒரு தேசியக் கொடியில் இருக்கும் வர்ணங்கள் சின்னங்களை உடைகள் தொப்பிகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கும் ஒரு நாட்டின் தேசியக் கொடியால் இன்னொரு நாட்டுப் பிரஜையைப் போர்ப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. 

 

இவ்வாறிருக்க இசைஞானி ஒரு இசை மேதை என்பதற்காக கனடிய தேசியக் கொடியால் அவரைப் போர்த்தி கௌரவித்தது கனடாவை அவமதித்ததற்குச் சமன். குறிப்பாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படிச் செய்தது அப்பட்டமான தவறு. இவரது இந்தக் கற்றுக்குட்டித் தனமான செயல் முழுத் தமிழினத்திற்குமே அவப் பெயரைத்தான் கொண்டு வரப்போகிறது.

 

இவர் திருந்துவதாகத் தெரியவில்லை. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலும் பாராளுமன்ற வளாகத்தில் தமிழர்கள் நடாத்திய நிகழ்வொன்றில்  பேசும் போது 33.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கனடாவின் மக்கள் தொகை, 9மில்லியன் என்று புள்ளி விபரம் தெரியாமல் பேசியதால் பிரதான ஆங்கில ஊடகங்களின் கண்டனத்திற்கு உள்ளானார்.

 

நாய் வேடம் பூண்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும் என்பதற்கு ஒப்ப, பாராளுமன்ற உறுப்பினரகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே காரணத்தால் இரண்டு மூன்று தடவைகள் தமிழ் மக்கள் சம்பந்தமாகப் பாராளுமன்றத்தில் பேசியதை, இவர் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் என்று ஊடகங்கள் ஊதிப் பெருப்பிப்பதும் தவறானதே. 2009 ற்கு முன் தமிழீழ தேசியம் சார்ந்து கனடாவில் நடைபெற்ற நிகழ்வுகளில் எத்தனை நிகழ்வுகளில், இவர் பங்கேற்றார் என்றால் அது கேள்விக்குறியே. ஏதோ ஜக் லெய்ரனின் ஆளுமை அலையாலும், இவர் போட்டியிட்ட தொகுதியில் 22 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியீட்டி வந்த பாராளுமன்ற உறுப்பினர் டெரிக் லீ ஓய்வு பெற்றதாலும், லொட்டோ அதிர்ஷ்டம் போல் பதவிக்கு வந்த இவர், கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுகிறார் என்பதே இன்றைய உண்மை.

இவரது தான்தோன்றித் தனமான செய்கைகளால் கனடியத் தமிழ் மக்களுக்கு அவப் பெயரும் என் டீ. பி கட்சிக்கு வீழ்ச்சியும் வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவரது இவ்வாறான செய்கைகள், தகுதியும் திறமையும் உள்ள தமிழர்கள், எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை சூனியமாக்குகின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையாகின்றது. இறுதியாக, ஒரு தமிழனாக இருந்தும் இன்னொரு தமிழ் மகள் அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பற்றி இவ்வாறு எழுத வேண்டி வந்ததையிட்டு வேதனைப் பட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சி....நாங்கள் எப்போதும் கடந்த காலம் பற்றியே பேசுகிறோம்....2011க்கு முதல் எத்தனையோமுறை ஒட்டாவா சென்று பாராளுமுன்றலில் மண்டியிட்டிருப்போம்.....குயீன்ஸ்பார்க்திடலில் அழுது குழறியிருப்போம்....அந்த நேரம் ஏற்படாத மாற்றமெல்லாம்..2011 க்கு பின் ஏற்பட்டதை ஏற்றுகொள்கிறீர்களா இல்லையா....தேசியக்கொடி போர்த்தது பிழையாக இருக்கலாம்....அதற்காக நீங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதுபோல் நடித்து....மற்றவர்களுக்கே  காட்டிக் கொடுப்பீர்கள் போல தெரிகிறது..உங்கள் நோக்கம்தான் என்ன.... பாகன்.....இளையராஜாவை கூப்பிடதும் நீங்கள்...ராதிகாவை கூப்பிட்டதும் நீங்கள்...அவர் கொடி போர்க்கப் போனபோதும் கூடப்போனதும் நீங்கள் தான்.....இப்ப அவர் யாருடைய தயவிலோ வந்து வீழ்ச்சி அடைவார் என்று கைதட்டுவதும் நீங்கள்தான்....உங்கள் நோக்கம்தான் என்ன....பாட்டுக்கரனை பல லட்சம் செலவழித்து கூப்பிட்டு என்ன கண்டீர்கள்...எத்தனை பேர் திருப்தி அடைந்தீர்கள்....உங்கள் மனச்சாட்சிப்படி சொல்லுங்கள்...சரி போனதுதான் போகட்டும் என்று விடாமல்..உள்ள ஒரு தமிழ் பிரதினித்துவத்தையும் பறிக்க குழி தோண்டுகிறீர்களே..கடைசியில் தான் தமிழன் என்று உணர்வதுபோல் வருத்தம் தெரிவிக்கிறீர்கள்....இன்ரைய காலகட்டம் எமக்கு முக்கியமானதொன்று...இவ் வேளையிலொருவரை ஒருவர்  படுகு௳இயில் தள்ளாதீர்கள்...இப்ப ஒற்றுமைதான் முக்கியம்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

நுணாவிலான், இது தமிழ் நிகழ்ச்சியில் நடந்தததனால் கனேடிய ஊடகங்களுக்கு இதுவரை தெரிய வரவில்லை என்று நினைக்கிறேன்.  அப்படித் தெரிய வந்தால் இது பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரலாம்.

 

என்ன 25000 பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி பற்றி கனேடிய அரசுக்கு தெரியாதா?? ஒரு எவ்.எம் வானொலி அல்லாத வானொலியில் இருந்து யாரோ ஒரு அரசியல்வாதி ஓரின சேர்க்கையாளர் என்பது கனேடிய ஊடகங்களுக்கு தெரியும் போது இப்படி விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வு தெரிய நிறையவே சந்தர்ப்பம் உள்ளது. இளையராஜாவின் நிகழ்வு பற்றி மிகப்பெரிய Billboard எங்கோ வைக்கப்பட்டிருந்ததாகவும் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எவரோ செய்திருந்தால் இந்தக்கேள்வி  வந்திருக்குமா?

தேசியச்செயற்பாட்டாளர்  என்பதால் கல் எறிகின்றோமா?

 

பாவம்

இதையும் வாங்கட்டும்

இதுவும் கடந்து  போகும்

அவரின் சேவைகள் தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இளையவர் என்பதால் சில விடயங்களைச் செய்துவிடுகிறார். இது வருத்தத்திற்கு உரியது. முன்பு ஒருமுறை பாராளுமன்றத்திலும் தவறான ஒரு தகவலைச் சொல்லி சிக்கலுக்கு ஆளானார். சரியாகத் தெரியாத விடயங்களைச் சொல்லும்போது "என நினைக்கிறேன்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.

 

ஒருமுறை நிலக்கீழ் சுரங்கங்களில் வேலை செய்த ஊழியர்கள் சிலர் அங்கு நிகழ்ந்த ஒரு விபத்தொன்றில் இறந்துவிட்டார்கள். இவர்கள் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதற்கு எங்கள் நிறுவனத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் கனேடிய தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை விடப்பட்டது.

 

அதற்கு அவ்வாறு செய்யமுடியாது என பதில் தரப்பட்டது. அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கான விதிமுறைகள் அரசியல் வழிகாட்டு ஒழுங்குமுறையில் உள்ளதாம். எனவே கொடி போர்த்துவது பாரதூரமான விடயமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. இவ்விடயத்தை நமக்குள்ளேயே வைத்திருப்பது நல்லது.

Edited by இசைக்கலைஞன்

வியட்நாம் போரில் அமெரிக்க படைகளின் குண்டு வீச்சில் எரிகாயங்களுடன் உயிர் தப்பி நிர்கதியாக நிர்வாணமாக வீதியல் ஓடிய ஒரு சிறுமியின் புகைப்படம் வியட்நாமின் தலைவிதியை மாற்றியது. பாலச்சந்திரனின் படமும் சிறீலங்காவின் தலைவிதியை மாற்றி ஈழம் உருவாக வழிசமைக்க வேண்டும்.ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம்? கணனிகளில் தட்டுவதற்காக கதிரைகளில் குந்துவதற்கு முன் தயவு செய்து ஒரு நிமிடம் ஒரே நிமிடம் நாங்கள் எல்லோரும் இது பற்றி யோசிச்சிருப்போமேயானால்  தாயக நிலைமை தலை கீழாக மாறியிருக்கும். பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை. இதை மறந்து இன்னும் தமிழ் சமூகத்தை நாங்கள் கூறு போடுவோமாக இருந்தால் எங்களைப் போன்ற கேடுகெட்ட  மனிதர்கள் வேறு யாரும் இரக்க முடியாது.



ராதிகா செய்தது தவறு என்று உங்களுக்கு பட்டால் நேரடியாக அவருக்கு தெரிவியுங்கள்.அவரை நெறிப்படுத்தி எங்கள் தாயக நலன் சார்ந்து இன்னும் அதிகமாக உழைப்பதற்கு உந்துதலாக இருங்கள். விமாசனம் என்றபெயரில் தடைக்கல்லாக இருக்காதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிவா சின்னப்பொடி அண்ணா

 

இந்த நிகழ்வாவது எம்மை  ஒன்று   சேர்க்கணும்

எமது தனிப்பட்ட வெறிகளை  மறந்து தாயக நலன் கருதி இலட்சியம் நோக்கி  எல்லோரும் நகரணும்.

 

பழையபடி ஒரே லட்சியம் நோக்கி  பயணிப்போமென இந்த சின்னஞ்சிறு பிஞ்சின் அந்த மூடாத கண்முன்

ஒவ்வொருவரும் சபதமெடுத்துக்கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இருந்தாலும் தமிழனுக்குரிய டீபோல்ட் பழக்கவழக்கங்களை மாத்தேலாது. :D 

 

கொடி குடை ஆலவட்டம் கண்ணாடி குஜா தூக்கிறது, கால்ல விழுறது, காக்கா பிடிக்கிறது, ஜால்ரா அடிக்கிறது, பொன்னாடை போத்திறது.

அதன் அடிப்படையில பிள்ளை உணர்ச்சி வசப்பட்டு கையில கிடைச்ச கனடாக் கொடியைப் பொன்னாடையாக நினைச்சு போர்த்தி விட்டிட்டிது.  :lol: 

 

<_< அத மறந்து மன்னிச்சி விட்டிடுவம் :D 

இந்த கேடு கெட்ட சனம் எப்ப திருந்துங்ளோ தெரியாது. ஏதும் பிரச்சனை என்டால், ஏற்பாட்டாளர்களை கேளுங்கோ தயவு செய்து, வீணாக மக்களை குளப்பாதெங்கோ தயவு செய்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகன், உங்கட ஸ்டான்டக்கு உங்க ஒருவரும் கிட்ட நிக்கேலாது.....

எங்கட சமூகத்தில இருந்து வந்த முதலாவது பாராளுமன்ற உறுப்பினர்...அப்படி வாறது எப்படி கரைசல் என்று தெரிந்தால், சும்மா சப்பைக்கட்டு கதை கதைக்க மாட்டீர்கள்...

எங்கட ஆக்கள் கனபேர்..எல்லாக்கூத்தும் அடித்தும் செய்முடியாததை, அவர் செய்திருக்கிறார்...அது எந்தளவு கடினம், அவவின் உடைய பின்னணி தெரிந்தால் கதைக்க மாட்டீர்கள்...

உங்க கனபேர் தகுதியோட கனபேர் இருக்கினம்..கள்ளமட்டை அடிக்கவும், வால்பிடிக்கவும் .....வேற வேற வேலைகளுக்கும் ....அவைகள் எல்லாருக்கும் ஒவ்வொரு கப் .......வாங்கி கொடுங்கோ.

அதை விட்டுவிட்டு..லோட்டோ வும் கிட்டோவும் -

இதை பெரிதுபடுத்துவதால் ஆக போவது ஒன்றுமில்லை .

ராதிகா எம் பி ஆனாபின் அவர்பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது காரணம் சகல தமிழ் தரப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு உருவாகிவிட்டது ,இதனால் தேசியவாதிகளுக்கு பெரும் கோபம்.இதற்குள் விசுகர் என்ன நடக்குது என தெரியாமல் தேசிய செயர்பாட்டாளர் என்றபடியால் கல் எறியாம்.

ஒரு  தமிழ் கனேடிய எம் பியாக அவரை மதிப்பதுதான் எல்லோருக்கும் நல்லது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்வாயன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ராதிகா தமிழர் என்பதற்காக நாங்களும் தவறுகளுக்கும் தவறான வழி நடத்தலுக்கும் உடந்தையாகலாமா?



நீங்கள் கூறியது போல்,

”2011க்கு முதல் எத்தனையோமுறை ஒட்டாவா சென்று பாராளுமுன்றலில் மண்டியிட்டிருப்போம்.....குயீன்ஸ்பார்க்திடலில் அழுது குழறியிருப்போம்....அந்த நேரம் ஏற்படாத மாற்றமெல்லாம்..2011 க்கு பின் ஏற்பட்டதை ஏற்றுகொள்கிறீர்களா இல்லையா.”





2004 சுனாமியின் பின் ஜிம் கரிஜியானிஸ் வன்னி சென்றதை மறந்து விட்டீர்களா? 2009ல் பொப் றே சிறீ லங்கா செல்ல முயன்று அனுமதி மறுக்கப் பட்டதை மறந்து விட்டீர்களா? இல்லை 2009 மார்ச் மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் அன்றைய கனடிய வெளி விவகார அமைச்சர் லோறன்ஸ் கனன் எங்கள் (தமிழர்கள்) சார்பாக சிறீ லங்காவைக் கண்டித்ததை மறந்து விட்டீர்களா?



இவையெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட 2011 அதாவது ராதிகா தெரிவாகுமுன் நடந்தேறியவை, இவற்றையெல்லாம் எம் ஈழத் தமிழருக்கான குரல் கொடுப்பாகப் பார்ப்பதற்கு உங்கள் மனம் ஒப்பவில்லையா?

கீழுள்ள இணைப்புகளை வாசித்துப் பாருங்கள் இந்நாட்டின் அரசியல் சமூக கலாச்சரம் உங்களுக்குப் புரியும்.

Ana Bailao has violated her constituents' trust and should resign

 

http://www.torontosun.com/2013/01/28/ana-bailao-has-violated-her-constituents-trust-and-should-resign

Toronto police officer charged with drunk driving

http://news.nationalpost.com/2010/12/20/toronto-police-officer-charged-with-drunk-driving



ராதிகாவை விடக் குறைந்த பதவி நிலைகளில் உள்ள இவர்களுக்கே இந்த நிலைமையென்றால் ராதிகாவின் செயலை சற்று யோசித்துப் பாருங்கள்.

யாழ் போன்ற உயர் நிலையிலுள்ள ஒரு பொதுத் தளத்தில், தமிழர் என்பதற்காக ராதிகாவின் தவறான செயல்களுக்கு வக்காலத்து வாங்கி மற்றவர்களைக் குழப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


எரிமலையாக வெடிக்கும் வொல்கானோவிற்கு, இவருக்கு முன்னும் பின்னும் (இன்றுவரை) எம்மவர்களில் யார் யார் எந்தெந்தக் காலகட்டத்தில் அரசியலில் நுழைய முயன்று அவர்களுடைய தகுதியின்மையாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழிகளாலும் அவர்கள் பற்றிப் பிடித்த கட்சிகளே அவர்களைத் தூக்கியெறிந்ததை நானறிவேன். அவர்களின் பெயர்களையும் பின்னணிகளையும் பட்டியலிட்டு எம் இனத்தை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை. அதே வேளை, ராதிகா, தானாக என்.டி.பி.யில் இணைந்தது போல், தேர்தலிலும் அநாவசியமான வால்களை (தமிழ் அமைப்புக்களை) சேர்க்காது என்.டி.பி. கட்சியின் உதவியுடன் மட்டும் இவர் வென்றிருப்பாராக இருந்தால் உங்களுடைய வாதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான். இவருடைய சிறு பிராயம் முதல் முழுப் பின்னணியும் எனக்கும் தெரியும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.


நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதைக் கூறியதும் ஒரு தமிழனே.

சாட்சாத் சிவனுக்கே அந்த நிலைமை என்றால் சாதாரண மானிடப் பிறப்பான ராதிகாவிற்கு விதிவிலக்குத் தேவையில்லை.

 

இன்று கனடாவில் எங்களுக்குத் தேவைப்பட்டிருப்பது நீங்கள் குறிப்பிட்டது போல், கள்ள மட்டை அடிக்காத, வால் பிடிக்காத, தேசியத்தை உயிராக மதித்து மேடையும் பதவியும் பறிபோகும் என்று பயப்பிடாமல் சீசிஸ் முதற்கொண்டு ஸ்ரீபன் கார்ப்பர் வரை எமது தாயகத்தின் விடுதலைக்காக ஓங்கி அறைந்தாற் போல் நேர்வழியில் சென்று புள்ளி விபரங்களுடன் வாதிடக்கூடிய தகைமையும் ஆளுமையும் தகுதியும் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே அல்லாமல் முதற் தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அல்லது முதல் தமிழ் ஆண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயருள்ளவர்கள் அல்ல. இதைத்தான் கனடாவும் சர்வதேச சமூகமும் எம்மினத்திடம் எதிர்பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா செய்தது தவறு என்பதே எனது கருத்தும். பொதுவாக விளையாட்டு வீரர்கள்
மட்டும் வெற்றிபெற்றபின்னர் கொடியால் போர்த்துவதை கண்டிருக்கிறேன்.

 

Usain.jpg

 

Susanthika.jpg
 

 

ஒருவர் இறந்த பின்னர் அந்நாட்டுக் கொடியால் அவரது சவப்பெட்டியை சுற்றுவதற்கு
அனுமதி உண்டு. அவுஸ் கொடியை கையாள வேண்டிய விதம் கீழுள்ள இணைப்பில் உள்ளது.
ஒரு நாட்டின் அதியுயர் மரியாதை கொடிக்கு வழங்கப்படுகிறது. கொடியை  அவமதித்தால் சட்டப்படி வழக்கும் தொடர முடியும்.

 

http://www.itsanhonour.gov.au/symbols/docs/australian_flags_excerpt.pdf

  • கருத்துக்கள உறவுகள்

பாகன் ..உங்களை யாரென்று விளங்கிக்கொண்டேன்..நன்றி...ராதிகா  கொடி போர்த்தியதை நான் சரியென்று சொல்லவில்லை..அதுவும் ராஜாவிற்கு போர்த்தினதில் உடன்பாடே இல்லை....உங்கடை கதையின் படிபார்த்தால்...உங்கடை கட்சியின் மூலாம் m.p ஆனால்தமிழராகிய அனைவருமே சந்தோசப்படுவம்....அதற்குத்தான் உங்க கட்சி இடம் தருகுதில்லையே...ஏன்.. mp..bop rae..போன விடயங்களை நாம் அனைவரும்தான் வரவேற்றோமே.. மறுக்க வில்லையே.எம் மினத்தைப்பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியிலும் இருந்து m.p க்கள் வரவேண்டும்....ராதிகாவைப்போல் பலர் எம்முடைய இனத்தின் விடுதலைக்கை உழைக்க வேண்டும்...அதை விட்டு விட்டு உள்ள ஒரு m.p பத்வியையும் பறிக்கிற மாதிரி கதைக்கக்கூடாது....ராதிகா வெற்றி பெற்ற நேரமும் இப்படி பல கதைகள் வந்தன...இப்ப நீங்களும் பல கதை கதைக்கிறியள்...நானோ ஆரம்ப கால முதல் liberal ஆதரவாளன்தான் ..இப்பதான்  சிந்திக்கிறேன்...செயல்படுகின்றேன்..இப்ப பிரச்சினை கொடி போர்த்தது பிழை .. இது இப்ப பெரிய பிரச்சினை யல்ல....இப்ப எங்கடை விடிவுதான் முக்கியம்...தமிழ் நாட்டை பாருங்கோ..எவ்வளவு கொந்தளிக்கிறார்கள் என்று...அப்படி செயல் படுங்கோ...அதை விட்டிட்டு...மற்றவையின்ரை பழைய சரித்திரம் தெரியும் என்று ....மார் தட்டுவதால் பிரயோசனம் இல்லை....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சரித்திரம் இருக்கும்..இதை பெரிதுபடுத்துவதால் எம் இனம்தான் அழியும்......எதையும் மறப்போம்..எம்மினத்தின் விடுதலைக்காய் ஒன்றாய் செயல் படுவோம்..இதுதான் இன்றையதேவை....கொடிப் பிரச்சினையல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகன்,


 

மன்னிக்கவும், உங்கட கருத்துக்களை பார்க்கும் போது  கொழும்பு 7, இல் இருந்து வந்தவர் போல கதைக்கிறீர்கள்..இத்தகைய கதைகள் ஒரு வெற்றிகரமான ஒரு குடியேறியாக வaள எந்த வகையிலும் உதவாது.


 

நான் அந்தளவு எழுதிய பிற்பாடும், லக்கும்/மட்டையும் என்றீர்கள் என்றால் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.


 

உங்களை மாதிரி ராதிகா ஹை ஸ்கூல் போனதில் இருந்து என்ன செய்தவ என்று தெரியாது- நேர இருந்து பார்த்தவன் அல்ல. ஆனால் அவருடைய வெற்றியில் இருந்து ஒரு குடியேறி என்ன தகவலை எடுக்க முடியும் என்று அறிவதற்குரிய அனுபவம் உண்டு.


 

அடிப்படையில் சேரகூடாத கூட்டங்களுடன் சேரக்கூடாது ...இங்கே யாழில் உள்ளது மாதிரி விசர் கூட்டங்களில் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லுகிறமாதிரி தேசியத்தை சொல்லிக்கொண்டுதான் எலேச்டின் இல் நிற்கவேண்டும் என்றால்., சுயேச்சையாக தான் நிற்க வேண்டும்-முதலில் அப்படியும்  நிற்க விடுவார்களோ தெரியாது-.

கனடாவில எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் தனித்து நின்று ஒரு பிரதி நிதியை தெரிவு செய்யக்கூடியவாறு செறிவாக இல்லை என்பதை விளங்க வேண்டும்...தேசிய கட்சிகள் உடன் சேர்ந்து, தமிழர் கூடுதலாக இருக்கிற இடங்களில் போட்டி போட வேண்டும்...அதன் பிறகு முதலில் சரியான கட்சியை  தேரிய வேண்டும், எங்கட ஆக்கள், கிம் கரியன்ஸ் நல்லம் எண்டு லிபரல் சேர்ந்தால்- அவர் நல்லவர், ஆனால் அவர் எப்ப தன்னுடைய இடத்தை விட்டுத்தருவார்? இப்படி கனக்க எழுதலாம்..


 

நீங்களே சொன்னீர்களே, லய்டன் இன் தனிப்பட்ட செல்வாக்கு என்று; அதுதான் ...அதை எடுக்க வேண்டும், காப்பர் உடன் 2 படம் எடுத்தவுடன் கோன்சவடிவ் இல போட்டி போட சிட் தரமாட்டார்கள், தந்தாலும் காப்பர் வந்து விசேட கவனமெடுத்து எங்களுக்காக கதைக்க மாட்டார்...இப்படி கனக்க ...


 

மற்றது, உது எல்லாம் முடிந்த பிறகு, நம்மாக்களுக்கு , தேசியம், தமிழ் தாயகம், தன்னச்சி, புங்குடுதீவு, நெடுந்தீவு, சித்தப்பா, பெரியப்பா, அந்த பள்ளிக்கூடம், இந்த பள்ளிக்கூடம் , பழைய மாணவர் சங்கம் ..........இப்படியே போய்  தானும் தனக்கு வோட்டு போட்டு,-கோயிலுக்கும் ஒரு நேத்தியை வைச்சுப்போட்டு இருக்க வேண்டும்- ..நான் என்னுடைய பிளான்ஐ சொல்லிபோட்டன் போல கிடக்கு..:(


 

மிச்சத்திர்ற்கு பிறகு வாறன்...


 

உங்கட கதையள பார்கையில் உரில சொல்லுவினம், சந்திரனை பார்த்து  எதோ குலைத்தது என்று என்று சொல்லுவினம் ...சரியான உதாரணமாய் இருக்கிறேன் என்று நினைத்து  சந்தோசப்படுங்கோ ...

தமிழிச்சி....நாங்கள் எப்போதும் கடந்த காலம் பற்றியே பேசுகிறோம்....2011க்கு முதல் எத்தனையோமுறை ஒட்டாவா சென்று பாராளுமுன்றலில் மண்டியிட்டிருப்போம்.....குயீன்ஸ்பார்க்திடலில் அழுது குழறியிருப்போம்....அந்த நேரம் ஏற்படாத மாற்றமெல்லாம்..2011 க்கு பின் ஏற்பட்டதை ஏற்றுகொள்கிறீர்களா இல்லையா....தேசியக்கொடி போர்த்தது பிழையாக இருக்கலாம்....அதற்காக நீங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதுபோல் நடித்து....மற்றவர்களுக்கே  காட்டிக் கொடுப்பீர்கள் போல தெரிகிறது..உங்கள் நோக்கம்தான் என்ன.... பாகன்.....இளையராஜாவை கூப்பிடதும் நீங்கள்...ராதிகாவை கூப்பிட்டதும் நீங்கள்...அவர் கொடி போர்க்கப் போனபோதும் கூடப்போனதும் நீங்கள் தான்.....இப்ப அவர் யாருடைய தயவிலோ வந்து வீழ்ச்சி அடைவார் என்று கைதட்டுவதும் நீங்கள்தான்....உங்கள் நோக்கம்தான் என்ன....பாட்டுக்கரனை பல லட்சம் செலவழித்து கூப்பிட்டு என்ன கண்டீர்கள்...எத்தனை பேர் திருப்தி அடைந்தீர்கள்....உங்கள் மனச்சாட்சிப்படி சொல்லுங்கள்...சரி போனதுதான் போகட்டும் என்று விடாமல்..உள்ள ஒரு தமிழ் பிரதினித்துவத்தையும் பறிக்க குழி தோண்டுகிறீர்களே..கடைசியில் தான் தமிழன் என்று உணர்வதுபோல் வருத்தம் தெரிவிக்கிறீர்கள்....இன்ரைய காலகட்டம் எமக்கு முக்கியமானதொன்று...இவ் வேளையிலொருவரை ஒருவர்  படுகு௳இயில் தள்ளாதீர்கள்...இப்ப ஒற்றுமைதான் முக்கியம்...

 

அல்வாயன், நீங்கள் கனடாவிற்குப் புதிது போல் தெரிகிறது.  90களிலிருந்தே கனேடிய அரசியல்வாதிகள் எமக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  முள்ளிவாய்க்கால் நேரத்திலும் அவர்கள் கண்டன அறிக்கைகள் விட்டனர் என்பதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.  உங்களைப் போன்றவர்களுக்கு, நீங்கள் சும்மா குந்தியிருக்க சர்வதேசமும் மற்றைய நாடுகளும் உங்களுக்குத் தமிழீழத்தைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரவேண்டும்.  கனேடிய அரசியல்வாதிகளை எம்மினத்திலிருந்து விலத்தி வைத்ததே எம்மவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரைக்கும் கனேடிய அரசியல்வாதிகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். 

தமிழ் தெரியும் என்பதற்காக இவ்வாறு அதிகப்பிரசங்கித்தனமாக வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்.  நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை.  இவரின் இந்த விடயத்தை திங்களன்றே என்னால் ஆங்கில ஊடகங்களில் வரச் செய்திருக்க முடியும்.  நான் இளையாராஜாவின் நிகழ்ச்சி பற்றி வேறு திரிகளில் கருத்தெழுதியிருந்தேன்.  அவற்றில் எதிலும் இவ்விடயம் பற்றி நான் எதுவுமே எழுதவில்லை.  இதனை இங்கு வந்து இணைத்ததும் நானல்ல. 

நுணாவிலான், இந்த நிகழ்ச்சியில், கனேடியக் குடியுரிமை, குடிவரவு, பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி, மற்றும் லிபரல் கட்சிக்குத் தலைமைத்துவத்திற்குப் போட்டியிடும் ஜஸ்ரின் ரூடோ போன்றோரும் கலந்திருந்தனர்.  அப்படியிருக்கும்போது, இந்நிகழ்ச்சி பற்றிக் கனேடிய அரசிற்குத் தெரியாது என நான் எப்படிக் குறிப்பிட முடியும்? நான் குறிப்பிட்டது இவர் தேசியக் கொடி போர்த்திய விடயம் கனேடிய ஊடகங்களுக்குத் தெரிய வரவில்லை என்றே.  தயவு செய்து கருத்துக்களை முழுவதுமாக வாசித்து விட்டு எழுதுங்கள்.  ஒரு மட்டுறுத்தினராக இருக்கும் நீங்களே இவ்வாறாக மேலெழுந்தவாரியாக வாசித்துக் கருத்துக்களை வைக்கலாமா?

ராதிகாவிற்கு எமது தேசிய செயற்பாட்டாளர்கள் 90களிலிருந்தே பல தடவைகள் அழைப்பு விடுத்தும் தேசியச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தவர் என்பதை நான் இங்கு பதிய விரும்புகிறேன்.  இவர் என்.டி.பி. கட்சியில் சேர்ந்த பின்னர், ஜக் லேய்ற்றனின் வாலாகத்தான் எமது தேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு இவருக்கு இங்குள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் உதவிகள் செய்தன என்பதையும் இங்கு பதிவிட விரும்புகிறேன். அதனால், அனைத்து அமைப்புகளுக்கும் உதவ வேண்டிய கடமை இவருக்கு உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""ராதிகாவிற்கு எமது தேசிய செயற்பாட்டாளர்கள் 90களிலிருந்தே பல தடவைகள் அழைப்பு விடுத்தும் தேசியச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தவர் என்பதை நான் இங்கு பதிய விரும்புகிறேன்.  இவர் என்.டி.பி. கட்சியில் சேர்ந்த பின்னர், ஜக் லேய்ற்றனின் வாலாகத்தான் எமது தேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு இவருக்கு இங்குள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் உதவிகள் செய்தன என்பதையும் இங்கு பதிவிட விரும்புகிறேன். அதனால், அனைத்து அமைப்புகளுக்கும் உதவ வேண்டிய கடமை இவருக்கு உண்டு.""""

 

 

அக்கா நீங்கள்  பொய்  சொல்லுகிறீர்கள்..பொருந்தவாவது சொல்லுங்கள்.
 

90ம் ஆண்டு ராதிகாவிற்கு 9 வயது. 9 வயது பிள்ளை என்ன தேசிய செயற்பாடு செய்ய வேண்டும்? செய்து இருக்கலாம் ? (Rathika Sitsabaiesan (Tamil: ராதிகா சிற்சபை ஈசன்) (born December 23, 1981))

 

ஆகக் குறைந்தது, இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வரும் வரையாது ஒருவரது திறமையை மதிக்க பழகுங்கள் ..இல்லை என்று சொன்னால் நாங்கள் இழுத்து பிடிக்க முடியாது.
 

நான் வந்தது 2000 பிறகு, ஆனாலும் அதுக்கு முந்தி உங்கட மொழியில "தேசிய"  செயற்பாட்டு ஆலர்களார் இருந்த  கொஞ்ச பேரை தெரியும்..அவை ஒருத்தரும் இப்படி சொல்லவில்லை..இனி சந்திக்கும் போது கேக்கிறன்/ சந்தர்பம் வந்தால்-ஆனால் அதுவல்ல இப்ப உள்ள முக்கிய விடயம்.  


 

நன்றி வணக்கம்

""ராதிகாவிற்கு எமது தேசிய செயற்பாட்டாளர்கள் 90களிலிருந்தே பல தடவைகள் அழைப்பு விடுத்தும் தேசியச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தவர் என்பதை நான் இங்கு பதிய விரும்புகிறேன்.  இவர் என்.டி.பி. கட்சியில் சேர்ந்த பின்னர், ஜக் லேய்ற்றனின் வாலாகத்தான் எமது தேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு இவருக்கு இங்குள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் உதவிகள் செய்தன என்பதையும் இங்கு பதிவிட விரும்புகிறேன். அதனால், அனைத்து அமைப்புகளுக்கும் உதவ வேண்டிய கடமை இவருக்கு உண்டு.""""

 

 

அக்கா நீங்கள்  பொய்  சொல்லுகிறீர்கள்..பொருந்தவாவது சொல்லுங்கள்.

 

90ம் ஆண்டு ராதிகாவிற்கு 9 வயது. 9 வயது பிள்ளை என்ன தேசிய செயற்பாடு செய்ய வேண்டும்? செய்து இருக்கலாம் ? (Rathika Sitsabaiesan (Tamil: ராதிகா சிற்சபை ஈசன்) (born December 23, 1981))

 

ஆகக் குறைந்தது, இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வரும் வரையாது ஒருவரது திறமையை மதிக்க பழகுங்கள் ..இல்லை என்று சொன்னால் நாங்கள் இழுத்து பிடிக்க முடியாது.

 

நான் வந்தது 2000 பிறகு, ஆனாலும் அதுக்கு முந்தி உங்கட மொழியில "தேசிய"  செயற்பாட்டு ஆலர்களார் இருந்த  கொஞ்ச பேரை தெரியும்..அவை ஒருத்தரும் இப்படி சொல்லவில்லை..இனி சந்திக்கும் போது கேக்கிறன்/ சந்தர்பம் வந்தால்-ஆனால் அதுவல்ல இப்ப உள்ள முக்கிய விடயம்.  

 

நன்றி வணக்கம்

 

வொல்கானோ, இவர் 90களின் பிற்பகுதிகளில் இங்கு மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.  உலகத்தமிழர் இயக்கக் கலை பண்பாட்டுக் கழகத்தினர், இவரை நாடகங்களில் நடிப்பதற்கு பல அழைப்புகள் விடுத்தனர்.  ஆனால், இவர் முற்றாக மறுத்துவிட்டார்.  இவர், கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்கள் பலவற்றிலும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை கலை விழாக்களிலும் நாடகங்களில் நடித்திருக்கிறார்.  நீங்கள் விசாரிக்கும்போது, 1990களின் பிற்பகுதி மற்றும் 2000 ஆரம்பத்தில் உலகத்தமிழர் இயக்கக் கலை பண்பாட்டுக் கழகத்தில் இருந்தவர்களிடம் விசாரிக்க மறக்காதீர்கள்.

 

எனக்கும் இது முக்கிய விடயமாக இருக்கவில்லை.  ஆனால், இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  எனக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களை மட்டுமே நான் இந்தக் களத்தில் எழுதுவதுண்டு.  எனக்கு இவரைப் பற்றி நன்றாகத் தெரிந்ததனால் மட்டுமே இங்கு குறிப்பிட்டேன். 

 

திறமை இருப்பவரை மதிப்பதற்கு நான் என்றுமே பின்னின்றதில்லை.  ஆனால், எல்லாவற்றையும் சொதப்பும் ஒருவரை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை.  இவரின் ஒவ்வொரு செயற்பாடும் இவர் சார்ந்த கட்சியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கனேடியத் தமிழ் சமூகத்தையும் பாதிக்கும் என நீங்கள் உணரவில்லையா?  இவ்வாறு இவர் தொடர்ந்து சிறுபிள்ளைத் தனமாக நடப்பாராயின், எதிர்காலத்தில் கட்சிகள் தமிழர்களை உள்வாங்கத் தயங்குவார்கள் என உங்களுக்கு விளங்கவில்லையா?  ஏற்கனவே கனேடிய அரசியல் மட்டத்தில் தமிழர்களை உள்வாங்கத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்கும்போது, நாம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் எம்மை குழிக்குள்ளேயே தள்ளுகிறோம்.  தயவு செய்து, குறுகிய வட்டத்திற்குள் நிற்காமால் தூரநோக்கிலும் சிந்தித்துப் பாருங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.