Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழற்பட புலனாய்வு

Featured Replies

.

நிழற்பட புலனாய்வு

 

 

 

படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும்.  :icon_idea:
 
 
கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும்.  :)
 
 
 
சரி.. முதலாவது.
 
 
 
 
1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?
 
 
5E3A4597E98649C6B2B7BB0ECAFF2D11.jpg

Edited by nunavilan

  • Replies 100
  • Views 7.9k
  • Created
  • Last Reply

கொழும்பு?

  • கருத்துக்கள உறவுகள்

படம் எங்கே எடுத்தது என்றால், நீங்கள் எங்கே எடுத்தது என்பதையும் சொல்ல வேண்டுமா? இங்கே தான் . கடைசிப்படம்... http://www.matrixgames.com/forums/tm.asp?m=2460775&mpage=1&key=

  • தொடங்கியவர்
சரி..
 
இங்கு கண்டுபிடிப்பதற்குரிய காரணங்கள் தான் முக்கியம்.  :icon_idea:  :icon_idea:
 
அடுத்தமுறை image shag / some image server இன் மூலம் தரவேற்றுகிறேன்.
 
URL இருப்பதால் தானே இலகுவாகிறது.  :)


பஞ்சி காரணமாக தரவேற்றாமல் விட்டுவிட்டேன். 



அதில் இருக்கும் விசயங்களைப் பட்டியல் இடுங்கள்.  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டோ என்பது ஆங்கிலச்சொல் ஆங்கிலத்தில் எழுதப்படுவது தவிர்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பல அறைகளுடன் கூடிய மாடிக் கட்டிடம் ஒன்று காணப்படுகிறது. பக்கத்தில் கடற்கரை உள்ளதால் 
காற்றில் பிரித்தானிய, அமெரிக்கக் கொடிகள் பறக்கின்றன. இரண்டே இரண்டு சிற்றுந்துக்கள் காணப்படுவதால் அங்கு எதுவும் நடைபெறவில்லை.

  • தொடங்கியவர்
சரி..
 
1. பிரித்தானியக் கொடி அமெரிக்கக்கொடியை விட சற்று உயரமாகப் பறக்கின்றது. 
 
ஆகவே இடம் பிரித்தானியாவுக்குச் சொந்தம்.
 
2. தென்னை மரங்கள் பின் புலத்தில். 
 
- ஆகவே அயனமண்டலப் பிரதேசம்.( Tropical )
 
3. படம் நிலமட்டத்திற்கு அண்மையில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் பின்னால் கடல் தெரிவதால்..
 
‍   - இடம் கடல் மட்டத்தில் இருந்து உயரம் குறைவாக இருக்க வேண்டும்.
 
 
4. கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் தரைப்பகுதி ( Floor ) 1 1/2 அடிக்கு அதிகமாக‌ அளவுள்ள கொன்கிரீட்டால் பலமாகப் போடப்பட்டுள்ளது.  அத்தோடு 3 க்கு மேற்பட்ட கொன்கிரீட் தூன்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
‍ - ஆகவே இது குண்டுவீச்சுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய இராணுவ கட்டிடம்.
 
5. தெருவின் ஓரத்தில் இருக்கும் மழைநீர் ஓடும் துளைகள்..
 
 - பொதுவாக மழைநீர் கான்கள் தெருமட்டத்தில் திறக்கும். கான் கிண்டும் அளவிற்கு நிலம் ஆழமில்லாதப்டியால் துளை போட்டுள்ளார்கள்.
 
6. அமெரிக்க பிரித்தானிய கொடிகள் கூட்டாகப் பறப்பதால் இரண்டு நாடுகளும் சம்பந்தப் பட்டுள்ளன.
 
இவற்றை சேர்த்துப்பார்த்தால்..
 
கடலோடு, கடல் மட்டதிலும் அதிகம் உயரமில்லாதா, இராணுவ, அமெரிக்க‌ பிரிட்டன் கூட்டு , பிரிட்டன் சொந்தம், அயனமண்டல...
 
இப்படியான இடங்கள்:
 
1. பிலிப்பைன்ஸ்
2. டியகோ கார்சியா
3. கியூபா
 
பில்ப்பைன்ஸ், கியூபா போன்றவை பிரிட்டனுக்குச் சம்பந்த மில்லாதவை.
 
ஆகவே டியகோ கார்சியா.
 
டியகோ கார்சியாவின் சராசரி உய்ரம் கடல் மட்டத்தில் இருந்து 4 அடிகள் மாத்திரமே.
 
படம் அமெரிக்க படைத்தள அலுவலகம்.
 
 
 ********************************************************
 
 
சுமேரியாவில் கண்டெடுத்த இரண்டு உடைந்த சட்டித் துண்டுகளை வைத்து நாம அங்கிட்டு இருந்து தான் இங்கிட்டு வந்தோம் என்று எழுதுபவரிடம் கூடுதலாக எதிர்பார்த்தேன்.  :D
 
 
சோபா, தூயவன், பெருமால், சித்தன் , மெசோ நன்றிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுவராசியமான தலைப்பு ஈசன்.
தொடர்ந்து படங்களை, இணையுங்கள்.... துப்புத் துலக்க ஆவலாயுள்ளோம்.Searching_Emoticon.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள் ஈசன்.

  • தொடங்கியவர்

ஆந்திரா பொலிஸார் நக்ஸலைட் தீவிரவாதி ஒருவர் எந்த நாட்டுக்ச் சென்று வந்தார் என்பதைக் கண்டுபிடிப்பதில் உங்கள் உதவியை நாடியுள்ளனர். அவரின் கணனியில் இருந்து 8 படங்களை ஒன்றுசேர்த்து பின்வரும் படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கண்டுபிடியுங்கள்.. காரணத்தோடு.  :icon_idea:

 

 

AP_zps45d6aed0.png

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் 2 - ராஜஸ்தான்.
படம் 4 - காஷ்மீர்.
ப‌டம் 5 - தமிழ் நாட்டின் கொடைக்கானல், ஊட்டி பகுதியாக.. இருக்கலாம்.
ஃபோட்டொ புல‌னாய்வு, தொட‌ரும்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், நல்ல திரி ஒன்று!

 

படங்கள் படங்கள் கொஞ்சம் சின்னனாக் கிடக்கு! அதிலையும் அரைவாசியை, உங்கட இலக்கங்கள் சாப்பிட்டுப் போட்டுது! :o முயற்சிக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C8

 

ஆனால் காரணம் சொல்ல மாட்டேன். உள்ளக புலனாய்வு அறிக்கைகளை எல்லாம் இப்படி பலர் முன்னிலையில் பகிரக் கூடாது.. ^_^:wub::D:lol::icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Photo --- புகைப்படம்

  • கருத்துக்கள உறவுகள்

Photo --- புகைப்படம்

புகைப்படம்- கறுப்பு வெள்ளைப் படம்! (புகை=கறுப்பும், வெள்ளையும்)

 

நான் நினைக்கிறன் நுணா, நிழற்படம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்! :icon_idea:

  • தொடங்கியவர்
சில படங்கள் திசை திருப்புவதற்காக இணைக்கப்பட்டவை.
 
C1 - செவ்வாய்க்கிரக நிலம்.
C2 - ராஜஸ்தான் பாலைவனம் (இந்தியா)
C4 - தாஜ்மஹால் கோபுரம் (இந்தியா)
C8 - ஆக்ரா வீதி (இந்தியா)
 
இந்தியா ஆந்திராவாசிக்கு வெளிநாடல்ல.செவ்வாய்க் கிரகமும் வெளிநாடல்ல.
இப்படங்கள் குளப்புவதற்காக இணைக்கப்பட்டவை.
 
ராஜஸ்தான் படம் தலைப்பாகை, பல்லக்கு என்பவற்றை வைத்தும், மினரட் என்னும் கோபுரத்தை வைத்து தாஜ்மகாலையும், நிழல் குடை டிரக்டர், பின்னால் வரும் லொறி, ஆட்கள் என்பவற்றை வைத்து C8  இந்தியா என்பதையும் ஊகிக்கலாம்.
 
நாசாவின் செய்வாய்ப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இலகுவாக C1 ஐ அடயாளம் காண முடியும்.
 
ஆகவே உங்கள் புலனாய்வை மிகுதியான படங்களின் மேல் திருப்புங்கள்.  :)
  • கருத்துக்கள உறவுகள்

மலை, பாலைவனம் என்பதால் ஆப்கான் ஆக இருக்கலாம். ஆனால் நச்சலைட்டுக்கு அங்கே என்ன வேலை. நீங்கள் நச்சலைட்டும், தலிபானுக்கும் தொடர்பு எனப் புதுக்கதை கிளப்புகின்றீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டன் நாடு என நினைக்கிறேன்.. :D

  • தொடங்கியவர்

மலை, பாலைவனம் என்பதால் ஆப்கான் ஆக இருக்கலாம். ஆனால் நச்சலைட்டுக்கு அங்கே என்ன வேலை. நீங்கள் நச்சலைட்டும், தலிபானுக்கும் தொடர்பு எனப் புதுக்கதை கிளப்புகின்றீர்கள்!!

 

 

நக்ஸல் பாரி அறவழிப் போராட்டகுழுவின் கொள்கைகளுக்கு தோழமையுள்ள பிரதேசத்தில் தான் அந்த நாடு உள்ளது.  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இது கோபி பாலைவனத்தின் மஞ்சள் நதிக்கு அண்மையில் இருக்கும் ஓர் இடமாக இருக்கலாம்.  :unsure: 

  • தொடங்கியவர்
1. பின் புலத்தில் உயர்ந்த மலைத்தொடருடன் கூடிய வெண்மணல் பாலைவனம்.
 
ஆப்கானில் மலைத்தொடருடன் கூடிய பாலைவனம் உள்ளது. இவை வெண்மணல் அற்றவை. மத்திய கிழக்கில் ஜோர்தானில் மலைகளுடன் கூடிய பாலைவனம் உள்ளது. ஆனால் இது வெண்மணல் அற்றது. சீனாவில் மலைகளுடன் கூடிய வெண்மணல் பாலைவனம் உள்ளது.
 
 
2. உயர்ந்த கிளைகளைக் கொண்ட மரங்கள் அதிகமாகவும் ஈச்சை மரங்கள் குறைவாகவும்.
 
மத்திய கிழக்கு பாலைவனத்தில் ஈச்ச மரங்களே அதிகம். சீன கோபி பாலைவனத்தில் சிறிய விவசாய மரங்கள் உண்டு.
 
 
3. கட்டிட அமைப்பு. சீன கூரை அமைப்போ, அரேபிய கட்டிட அமைப்போ காணப்பட வில்லை. ஸ்பானிய பெரிய வளைந்த ஜன்னல் அமைப்புள்ள மாடிக்கட்டிடம் தெரிகிறது.
 
 
ஆகவே இது..
 
1. மத்திய கிழக்கல்ல‌
2. ஆப்கான் அல்ல.
3. சீனா அல்ல.
 
பின் எது ?
 
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாடின் பாலைவனச் சோலை.
 
hotels-huacachina-oasis.jpg
  • தொடங்கியவர்

Spanish Windows, door ( old south american / Latino styles)

 

8831fc230f689265_0457-w406-h406-b0-p0--m

  • கருத்துக்கள உறவுகள்

ஃப்ளோரிடா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.