Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழற்பட புலனாய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இங்கு இருவர் குசு குசுக்கின்றார்கள் மெல்லிய எழுத்தில், இதை யாரும் புலனாய்வு செய்வீர்களா, எங்கே நம் சாத், அழையுங்கள் நாயுடன், சண்டாவும் துணைக்கு வந்தால் நல்லது

 

மற்றவைக்கு விளங்காமலிருக்கத்தானே குசுகுசுக்கினம். பிறகேன் நீங்கள் மூக்கை நுளைக்கிறியள். :lol:

 

 

  • Replies 100
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

PRNK_zpsf32141b9.png

 

 

 

 

PRNK_GRID_zpsf4239028.png

 

 

 

படத்தில் இருப்பது வட கொரியாவின் ஒரு இராணுவ நிலையம். இதன் மேலாக‌ ஒரு அமெரிக்க போர் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. விமானத்தின் எச்சரிக்கை மணி அடிக்கிறது. இந்த எச்சரிக்கையின் அர்த்தம் விமானம் குறிவைக்கப்படுள்ளது என்பதாகும். விமானி புறப்படும் போது நீண்ட தூரப் பயணம் காரணமாக‌ தரையைத் தாக்கும் ஒரே ஒரு குண்டை மாத்திரம் பொருத்திக் கொண்டு வந்துள்ளார். அந்தக் குண்டை சரியான இலக்கு மீது போடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம்.
 
இப்போது விமானிக்கு 20 செக்கன் அவகாசமே உள்ளது. குண்டை விமானக் கணனியின் திரையில் தெரியும் இரண்டாவது படதில் உள்ள ஒரு கட்டத்தினை தெரிவுசெய்ய, கணனி குண்டை சரியாக கழட்டி விடும்.
 
கட்டங்கள் இடமிருந்து வலமாக A - J  உம் மேலிருந்து கீழாக 0 ‍- 7 ஆகவும் குறியிடப்பட்டுள்ளது. ( GRID VIEW)
 
சரியான கட்டத்தைத் தெரிவுசெய்து விமானியை தப்ப உதவுங்கள். எங்கு போட்டால் விமானம் தப்பலாம் ? ஏன் ?
 
 
 
இதுவரை பங்கு பற்றியும் ஊக்கம் கொடுத்தும் திரிக்கு உயிர் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகள்.  :)  :)
 
 
  

 

  • கருத்துக்கள உறவுகள்

 E4 இதில்தான் விமான ஏதிர்ப்பு பீரங்கி பொருத்தியிருக்க சந்தர்ப்பமுண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிலும்... E-4 தாக்கினால், விமானி தப்ப சந்தர்ப்பம் உண்டு.
நடுவில் உள்ள கட்டிடம், என்பதால்... ஏவுகணை பாயும் போது, மற்றைய கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க, தனியே அமைத்துள்ளார்கள். பின், சிறிது தூரத்தில் உள்ள கட்டிடத்தில் E- 5, தீயணைப்பு வண்டிகளின்.. தரிப்பிடமாக இருக்கலாம். :)

 

  • தொடங்கியவர்
சரியான விடை உடையார், தமிழ்சிறீ. வாழ்த்துக்கள்.
 
ஆனால் காரணம் தான் சற்றுப் பிழை.
 
sa3bunker1ra5.jpg
 
E4 இல் இருப்பது ரேடார். இது ஒர் குன்று போன்ற ஒரு பங்கரின் மேல் இருக்கிறது. அந்தக் குன்றினுள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூன்று திசைகளில் உள்ள குகைகளில் வைக்கப்பட்டுள்ளன. குகையின் வாசல்கள் திறக்கும் இடங்கள் மூன்று தெளிவாகத் தெரிகின்றன (E3 , D5, F6) . இந்த ரேடாரை அழித்துவிட்டால் ஏவுகணகள் குறிவைப்பது கஸ்டம். 
  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவு விடயமிருக்க இதற்க்குள், நீங்க பதிந்தபின் பார்க்க இன்னும் தெளிவாக இருக்கு, நன்றி ஈசன்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

16839353-police-dog-asking-to-stop-with-

ஈசன், அடுத்த புலனாய்வு படம் எங்கே?

புலநாய்களை, கண்டபடி காக்க வைக்காதீர்கள்...

கடிச்சு.... குதறிப் போடுவம் ஆமா....

 

 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஒரு நாட்டின் உளவுத் தலைவர் இன்னொரு நாட்டில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் மீது ஒரு கொமாண்டோ தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார். அவர் திட்டம் இப்படி அமைகிறது.
 
இவர்களின் சரக்கு விமானம் ஒன்று இலக்கு நாட்டின் விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு சமுத்திர ஆய்வை நிறைவு செய்து கொண்டு வருவதாக தரையிறங்கும். அப்படி இறங்குவதற்கு முன்பாக அந்நாட்டின் மீது பறக்கும் போது தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் ஊரின் மேலாகப் பறந்து 7 கொமாண்டோக்கள் பரஷூட் மூலம் குதிப்பார்கள். இவர்கள் தரையிறங்கிய விமானம் மீண்டும் எரிபொருளை நிரப்பிக் கொண்டு தம் நாட்டுக்கு பறக்க ஆரம்பிக்கும் வரை பதுங்கி இருப்பார்கள்.
 
விமானம் கிளம்பிவிட்டதாக தகவல் வந்ததும் இலக்கை நோக்கி நகர்ந்து தீவிரவாதிகளைத் தாக்கி அழித்த பின் தம் ஆயுதங்களை ஒழித்து விட்டு உல்லாசப் பிரயாணிகள் போல் நட்பு நாட்டு பாஸ்போர்ட்டில் அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் சாதாரண பயணிகள் விமானத்தில் எஸ்கேப் ஆவது.
 
இப்படி ஒரு திட்டத்தில் இருக்கும் ஒரு பிரச்சனை பயணத் தூரம் காரணமாக சரக்கு விமானத்திற்கான எரிபொருள்.
 
இதை ஒரு விமானப் பொறியியலாளர் விமானத்தினுள் இன்னுமொரு தாங்கியைப் பொருத்தி நிவர்த்தி செய்யலாம் என்று சொல்கிறார். தாங்கியின் அளவை பயணத்தூரம் தீர்மானிக்கும்.
 
உங்கள் வேலை ஆகக்குறைந்த ஒரு வழி பயணத்தூரத்தை கணித்து நம் பொறியியலாளருக்கு உதவுவதே.
 
இங்கே முதலாவது படம் உளவுத்துறை பொறியியலாள‌ரின் கார் சாவிக் கோர்வை.
 
இரண்டாவது படம் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கும் காட்டில் எடுக்கப்பட்ட படம். 
 
(உதாரணமாக தூரம் 2100 km என்றாலும் 3000 km என்றும் 2900 km என்றாலும் 3000 km என்றும் கூறலாம் )
 

 

key_zps7f2813b6.jpg

 

 

 

m4_zpsa4eb156c.jpg

 

 

 

 

.

 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

மடகாஸ்கர் தீவில் மட்டுமே அந்த மரம் இருக்கு.. அதைவைத்து எரிபொருள் அளவைக் கணிக்கலாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பாக்கவே விடை கண்டுபிடிக்க மனமில்லை ஈசன். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், எந்த நாட்டுக் கார் எண்டு பிடிபடுகுதில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கிடும் வாள்களிரண்டும். ஈராக் அல்லது இஸ்லாம் மதத்தோடு சம்பந்தப் பட்டிருக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், இன்னும் கொஞ்ச தரவுகளைத் தாருங்கள்.

 

  • தொடங்கியவர்

டங்குவார் வீட்டில் சின்னப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.  :D  :icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10,000 km

 

வந்தியர்! பொழிப்புரை வேணும். :D

வந்தியர்! பொழிப்புரை வேணும். :D

 

பொறியிளாலர்களுக்கு வாசிக்க நேரமிருக்காது, அதுதான் தூரம் மட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

வந்தியின் விடை சரி. எனக்கு 9,951km வந்திச்சு. பொறியியலாளரின் கார் லாடா எனவே அவரின் நாடு ரசியா. மடகஸ்கார் கார்டூன் பார்த்ததன் மூலம் மரத்தை அடையாளம் கட்டுபிடித்தேன். (மடகஸ்கார் 1,2,3 எத்தினையோ தரம் திருப்ப திருப்ப பார்த்து விட்டேன். சாதாரண படங்களை விட Anime அதிகம் பிடிக்கும்)

 

  • தொடங்கியவர்

mad_rus_zpsee7e3b2c.jpg

 

 

 
ஆகக் குறைந்த தூரமே கேள்வி.
 
ரஷ்யாவின் தெற்கில் உள்ள டகஸ்தானிலிருந்து ( மகச்சக்லா விமான நிலையம் ) மடகஸ்காரின் மையப்பகுதி 6800 கிமீ வருகிறது. ஆகவே விடை 7000 கிமீ.
 
லாடா காரை கண்டுபிடித்த தும்பளையானுக்கு வாழ்த்துக்கள். 
மடகஸ்காரை கண்டு பிடித்த டங்குவுக்கும் வாழ்த்துக்கள்.
 
முயற்சித்த எல்லாருக்கும் ஒரு கதலி வாழப்பழம் இனாம்.  :)
 
 
 
$(KGrHqJHJBgF!0+OnTpbBQRk7LWBTQ~~60_35.J
 
 
 
Baobab-Trees-Reflected-in-Wetlands-Moron
  

 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

Red-Banana-435kandy.jpg

 

ஈசன், குடுக்கறது தான்.. கொடுக்கிறீர்கள் கப்பல் வாழைப்பழம் கொடுத்தால்... என்னவாம். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

Red-Banana-435kandy.jpg

ஈசன், குடுக்கறது தான்.. கொடுக்கிறீர்கள் கப்பல் வாழைப்பழம் கொடுத்தால்... என்னவாம். :D

அந்த சிகப்பு பழத்துக்கு என்ன பெயர் சிறியர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிகப்பு பழத்துக்கு என்ன பெயர் சிறியர்

 

செவ்வாழைப்பழம் நந்தன். ஆனால்... அவ்வளவு சுவையாக இராது.

செவ்வாழைப்பழம் நந்தன். ஆனால்... அவ்வளவு சுவையாக இராது.

சுவை இல்லையா ......உண்மைதான் ..அதனால் தான் பெண்களின் இதழை செவ்வாளைக்கு ஒப்பிட்டு எம் கவிகள் கவி வடித்தார்கள்  .................... :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க.

அந்தாளின்ர திரியையாவது விட்டு வைக்கக்கூடாதா?

 

ஒருத்தர் வாழைப்பழம் என்கிறார்

இன்னொருத்தர் செவ்வாய் என்கிறார்

மற்றவர் செவ்விதழ் என்கிறார்

கூட்டிக்ழித்துப்பார்த்தால்..............

 

வேண்டாம்  இன்று வெள்ளிக்கிழமை...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுவை இல்லையா ......உண்மைதான் ..அதனால் தான் பெண்களின் இதழை செவ்வாளைக்கு ஒப்பிட்டு எம் கவிகள் கவி வடித்தார்கள்  .................... :lol:  :D 

 

தமிழ் சூரியன்! செவ்வாழைக்கு ஒப்பிட்டது சுவை கருதி அல்ல. அழகு கருதி. செவ்வாழையின் அழகில் மயங்கித்தானே நந்தனே பெயரைக் கேட்டது. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.