Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவை சிறப்புப் பட்டிமன்றத்தின் பரிசளிப்பு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனையால் என்ற பதமே அங்கில்லை. தரப்படுத்தலை விட்டுப் பார்த்தால்.. மொக்கனும் பிழைச்சிருப்பான் என்று தான் எழுதி இருக்கீங்க.  சரி.. இனப்பிரச்சனை தான் காரணமுன்னா

இனப்பிரச்சனை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த கடைகள் யாவும் கொழும்பில் முளைக்க முடிந்தது என்றால்.. ஏன் மற்றவர்களால் முடியாது..???!

இவற்றையும் வெளிநாட்டுக்கு ஓடி வந்து அசைல ருசியில் சொன்ன பொய்களையும்.. ஆதாரம் வைச்சுத் தானே பிளேர்க் சொன்னார் 95% தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று..!! அப்போது எங்களால் என்ன செய்ய முடிஞ்சுது..???! :icon_idea::):rolleyes:

நான் கேட்ட கேள்விக்கு ஒன்றும் நீங்கள் பதில் எழுதவில்லை...ஏன் 70ம் ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை விட்டு வந்தவர்கள் அதிகம்?
 
தனிய பொருளாதார‌ப் பிர‌ச்ச‌னை தான் கார‌ணம் என்டால் 70களுக்கு முற்பட்ட காலத்தில் ஊரில் இருந்த பொருளாதார‌த்தில் பின் தங்கிய,படிக்க முடியாத,படிக்காதவர்கள் எல்லாம் ஏன் நாட்டிலேயே இருந்தார்கள்?
அவர்கள் ஏன் புலம் பெயர‌வில்லை?
 
தர‌ப்படுத்தலால் பாதிக்கப்பட்டவன் தான் அதைப் பற்றி எழுதோனும் என்டால் புலியில் சேர்ந்து போராடினவன் தான் போராட்டத்தைப் பற்றி எழுதோனும்.பின்னர் நீங்கள் எப்படி எழுதுவீர்கள் :lol:
 
நான் மக்கள் புலம் பெயர்ந்ததிற்கு இரு கார‌ணங்கள் தான் எழுதியிருந்தேன் 1)தர‌ப்படுத்தல் 2} இனப் பிர‌ச்ச‌னை.தர‌ப்படுத்தலை விடுத்துப் பார்த்தால் என்பதில் நான் குறிப்பது இனப் பிர‌ச்ச‌னைத் தான் மற்றவருக்கு தமிழறிவை போதிக்கும் நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ளுங்கள் :D
 
கல்வி வளர்ச்சி,நாடு அபிவிருத்தி அடைந்து கொண்டு போகும் போது மாணவர்களது கல்வியறிவும்,பல்கலைகழகம் போகும் மாணவர்களது எண்ணிக்கையும் கூடிக் கொண்டு தான் போகும்.
 
மக்கள் இனப் பிர‌ச்ச‌னையிலோ,தர‌ப்படுத்தலிலோ நேர‌டியாக பாதிக்கப்பட்டிருந்தால் தான் அவர்கள் புலத்திற்கு இட‌ம் பெயர்ந்தார்கள் என்றில்லை நாளைக்கு தாங்களோ,தங்கட‌ குடும்பமோ இதால் பாதிக்கப் பட‌க் கூடாது என்ட‌ சுயநலம் தான் கார‌ணம‌தால் தான் இட‌ம் பெயர்ந்தார்கள்
 
தர‌ப்படுத்தலால் பாதிக்கப்படாத உங்களைப் போன்ற மாணவர்கள் எல்லாம் ஏன் புலத்திற்கு ஓடி வந்தீர்கள்?
 
இனப்பிர‌ச்ச‌னையால் வந்தவர்கள் குறைவு என்டால் உங்களை போல படித்தவர்கள் ஏன் திரும்பி போகாமல் இங்கேயே செட்டிலாகிறார்கள்?
 
படிக்காதவர்கள் தான் ஊருக்குப் போய் ஒன்றும் செய்ய முடியாது...கடையை,கிடையை வைக்கலாம் ஆனால் இன்னுமொரு யுத்தம் அல்லது,நிர‌ந்தர‌ வருமானமில்லை,இங்கே பாகுபாடு இல்லை[படிக்காட்டிலும் படிச்சவனும்,அவனும் ஈக்குவல் தானே!],படிச்சவனை விட‌ படிக்காதவர்கள் முதலாளிகளாகவும் படிச்சவர்கள் அந்த படிக்காதவனின்ட‌ வேலை செய்பவனாகவும் இருப்பார்கள்.இப்படி பல கார‌ணங்கள் இருந்தாலும் ஏன் படித்தவர்கள் ஊருக்குத் திரும்பி போவதில்லை? போக விரும்புவதில்லை?[ஊரில படித்தவர்களுக்கு மரியாதை தானே]
 
படிக்காதவர்களை விடுவம், உங்களை மாதிரி படிக்க வந்தவர்களையும் விடுவம் எதற்காக ஊரில நல்ல வச‌தி,வாய்ப்போட‌ செல்வாக்க இருந்தவர்கள்,நல்ல உத்தியோகத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் புலம் பெயர்ந்தார்கள்?
 
இனப் பிர‌ச்ச‌னையால் இட‌ம் பெயர்ந்தாலும் புலம் பெயர்ந்தவனின் பணம் சிங்கள அர‌சிற்கு தேவைப்படுது அதனால் கொழும்பிலோ,மே.மாகணத்திலோ நம்மவர்கள் முதலீடு செய்ய அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்...அங்கு இருப்பவர்களுக்கு பணம்,வேலை வாய்ப்பு போன்றன கிடைக்கின்றது...இன்னொரு இனப் பிர‌ச்ச‌னை 83ம் ஆண்டு மாதிரி வந்தால் அத்தனையும் அழியும் ஆனால் தமிழன் வெட்ட,வெட்ட தழைப்பான்.
 
மற்றவனைப் பார்த்து இனப் பிர‌ச்ச‌னையால் என்ன பாதிப்பை கண்டாய் என விடுப்பு கேட்கிறதை விட்டு நீங்கள் முதலில் எமது மக்களுக்காய்,நாட்டுக்காய் என்ன செய்தீர்கள் என்று உங்களைப் பார்த்துக் கேளுங்கள்.
 
தர‌ப்படுத்தல்,இனப் பிர‌ச்ச‌னையால் பாதிக்கப் படாமல் புலத்திற்கு படிக்க வந்த நீங்கள் இனப் பிர‌ச்ச‌னை இல்லை என்டால் ஊருக்குத் திரும்பிக் போகலாம் தானே என்று நானும் உங்களைப் பார்த்துக் கேட்கலாம்.
 
ஏன் சொத்துக்கள் உள்ளவர்கள் மட்டும் தான் அசேலம் அடிக்க வேண்டுமா?...உங்கட‌ பிர‌ச்ச‌னை என்பது படிக்காதவன்,ஒன்றும் இல்லாதவன் எல்லாம் புலத்திற்கு வந்து நல்ல வந்திட்டான் என்ட‌ ஒரு வித ஆதங்கம் தான்.
 
பிளேக் எங்கட‌ தலைவர் ஒரு கோழை என்று ஆதார‌த்தோடு சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு சரி என்று ஏற்றுக் கொள்வீர்களா?
 
2000 ஆண்டுகளுக்கு பின்னால் வந்தவர்கள் சிலர் வேண்டுமானால் வெளிநாட்டு மோகம்,வச‌தி வாய்ப்பிற்காக வந்திருக்கலாம்.நீங்கள் மேலே சொன்ன மாதிரி அப்படி வந்தவர்களும் இருக்கிறார்கள் தான் ஆனால் அவர்கள் பெரும்பான்மை இல்லை
 
மக்கள் புலம் பெயர‌ முக்கிய அடிப்படைக் கார‌ணம்;
1)இனப்பிர‌ச்ச‌னை
2)தர‌ப்படுத்தல்
3)பொருளாதார‌
4)வெளிநாட்டு மோகம்,வச‌தி வாய்ப்பு என்பன.
 
இனப்பிர‌ச்ச‌னையால் பாதிப்பு என்பது நேர‌டியாக பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று இல்லை மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
 
நீங்கள் எழுதின மாதிரி தர‌ப்படுத்தலால்,இனப் பிர‌ச்ச‌னையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள் தான் அவர்கள் புலம் பெயராதிற்கு அவர்கள் மண் மீது கொண்ட‌ பற்றுத் தான் முக்கிய கார‌ணம்.
 
பை த வே நான் கோமகனிற்கு எழுதிய முதல் கருத்தில் தர‌ப்படுத்தல்,இனப் பிர‌ச்ச‌னை போன்ற கார‌ணங்கள் இல்லா விட்டால் மக்கள் புலம் பெயர்ந்து வந்திருக்க மாட்டார்கள்...இப்படியொரு பட்டிமன்றம் நட‌ந்திருக்காது என்ட‌ அர்த்தத்தில் தான் எழுதினேன்...இ.பிர‌ச்ச‌னை என்னும் போது அதை எப்படி மக்கள் பயன்படுத்தி புலம் பெயர்ந்தார்கள் என்பது தான் நான் சொல்ல வந்தது...இனப்பிர‌ச்ச‌னை இல்லா விட்டால் விரைவில் அபிவிருத்தி அடையும் நாடாக இலங்கை இருந்திருக்கும்...ஆனால் நீங்கள் இடையில் புகுந்து கள்ளமாக அசேலம் அடிக்கிறார்கள் அது,இது என தேவையில்லாமல் கதைத்து பதிவு இங்க வந்து நிற்குது.
 
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நியாயமாக எனக்கு தெரிஞ்ச‌ பதில்களை சொல்லியிருக்கிறன் அதே மாதிரி நீங்களும் பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் :)    
  • Replies 124
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனை 1952 இலேயே (உண்மையில் டொனமூர் காலத்திலையே ஆரம்பிச்சிட்டுது) ஆரம்பிச்சிட்டுது.. அப்ப ஏன் ஒருத்தரும் வெளிநாட்டுக்கு ஓடிவரல்ல..??!

தரப்படுத்தல் எப்பவோ ஆரம்பிச்சிட்டுது.. அப்ப ஏன் ஒருத்தரும் வெளிநாட்டுக்கு ஓடிவரல்ல..???!

இதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் தான் உள்ளன.. எம்மவரின் வெளிநாட்டு ஓட்டத்திற்கு.

1.சிறீலங்காவில்.. உள்நாட்டுப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்..உலக நாடுகளின் கரிசணை. இந்தக் கரிசணையை சாட்டாக்கிக் கொண்டு பலர் இடம்பெயர்ந்து அகதி அந்தஸ்துப் பெற வாய்ப்பிருந்ததால் ஓடி வந்தார்கள். இனப்பிரச்சனை தான் இதற்குக் காரணம் என்றால் பலர் 1952 இலேயே ஓடி வந்திருக்க வேண்டும்..!

தரப்படுத்தல் தான் காரணம் என்றால் கேட்டா முறைமை வெட்டுப்புள்ளி வர முன்னர்...அது உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் ஓடி வந்திருக்க வேண்டும்.

அப்படி ஓடி வந்தோர் என்று நோக்கினால்.. அவர்களைக் கைவிரல் விட்டு என்னலாம்.

2. சிறீலங்காவில் இருந்தான ஆட்கடத்தல்களுக்கான வழிமுறைகள் திறந்துவிடப்பட்டமை..!

இத்தனை ஆயிரம் வைத்தால்.. இவரை இன்ன நாட்டு எல்லையில் கொண்டு போய் விடுவோம். நீங்கள் நாட்டில் பிரச்சனை என்று சொல்லி அசைலத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பிரச்சனை என்ற நிலை தோன்றியமை.

அதற்காக அசைலம் அடித்த எல்லோருக்கும் இனப்பிரச்சனை பாதிப்பு.. இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. பலர் எந்தப் பாதிப்பும் இன்றி பொருண்மியம் சார்ந்தும்.. வெளிநாட்டு வாழ்க்கை என்ற ஒன்றை அடையவுமே இடம்பெயர்ந்தனர். அதற்கான வாய்ப்பாக போரையும்.. போர்ச் சூழலால் எழுந்த சர்வதேச அனுதாபங்களையும் பாவித்துக் கொண்டனர். இவை தான் இங்கு எம்மவரில் அநேகரின் வெளிநாட்டு பெயர்வுக்கு முக்கிய காரணம்.

இவர்களுக்கு இனப்பிரச்சனை தான் காரணம் என்றால்.. ஏன் தமிழீழம் கிடைத்தாலும் அங்க போக மாட்டம் என்று பலர் சொல்லினம்..??!

இன்று.. இலங்கையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அங்கு பாவிக்காமல்.. மாணவர்களாக வெளியேறுவோர் பலர் அசைலம் அடிக்க என்ன காரணம்..???! இனப்பிரச்சனையா.. தரப்படுத்தலா..??! இரண்டும் இல்லை. ஏலவே அசைலம் அடித்தவர்கள் ஊட்டிப் பெருப்பித்து வரும்.. வெளிநாட்டு மோகமும்.. அவர்கள் காட்டும் கிரடிட் காட் ஆடம்பர உல்லாசப் பயணங்களுமே..!

அன்று தொட்டு இதுதான் எம்மவரின் நிலை. இனப்பிரச்சனை.. தரப்படுத்தல் என்பவை பாதித்த மக்களில் அநேகர் இப்போதும் தாய் மண்ணில் தான் உள்ளனர்..! :icon_idea:

இத்தோடு இக்கருத்துப் பகிர்வை இத்தலைப்பில் நிறைவு செய்து கொள்கிறோம். ஒன்றையே மாறி மாறி எழுதுக்கிட்டு இருப்பீங்க. எல்லாவற்றிற்கும் பதில் ஒன்று தான். :lol:

Edited by nedukkalapoovan

கேட்ட கேள்விக்கு பதில் எழுதாமல் இப்படித் தான் சலாப்புவீங்கள் எனத் தெரியும் :lol:  :D  :icon_idea:

சாத்திரி இணைத்த படத்தை படுக்க முதல் ஒருக்கா திருப்பி பார்ப்பம் என்று வந்தால் அதைக்காணவில்லை .

நெடுக்ஸ் ,ரதி அக்கா சண்டை பட்டிமன்றத்திற்க வந்து பக்கத்தை திறக்கவே பயமுறுத்துது .

அடுத்ததாக கங்காரு தேசத்து இளஞிகளின் கனவு நாயகன் , கட்டிளங் காளை தும்பளையான் தான் வாங்கிய காருடனேயே மேடை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்  :lol:  :D  . இவருக்குப் பரிசனை வழங்க அவரது கல்லூரித்தோழன் கவிதை இங்கே காத்திருக்கின்றார் :) :) .

395738_3321083305145_1725645276_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் பங்கு பற்றிய அனைவருக்கும், சிறப்பாக இருந்திச்சு அனைவரின் வாதங்களும்

இதோ தனது கல்லூரித்தோழனை கட்டளம்காளை ஆரத்தழுவ  :D  :lol: .  கல்லூரித்தோழனோ கல்லூரி நினைவுகளை கவிதை வடித்தபடியே நினைவுப் பரிசை வழங்குகின்றார்  :)  :) .

38373738.jpg

அடுத்ததாக கனடாவின் சிந்தனையாளன் வெல்லக்கட்டியாக இனிக்கப் பேசும் கரும்பை மேடைக்கு அழைக்கின்றோம் . இவருக்குப் பரிசை வழங்க பெண்கவிதாயினி வல்வை சகாறா அவர்கள் இங்கே காத்துக் கொண்டிருக்கின்றார்கள் :) :) .

sugar+cane+nov+20+2010+-007.JPG

இதோ பெண்கவிதாயினி வல்வை சகாறாவிடம் மகிழ்ச்சி பொங்கப் பரிசினைப் பெற்றுக் கொள்கின்றார் கரும்பு அவர்கள் :) :) .

93096394.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கவிதாயினி என்றாலே பெண் தானே, கோமகன்?

பிறகேன் பெண் கவிதாயினி? :D

கவிதாயினி என்றாலே பெண் தானே, கோமகன்?

பிறகேன் பெண் கவிதாயினி? :D

அதூஊ ஆனைக்கும் அடி சறுக்கும் புங்கை

அடுத்ததாக சுவாமி நாதனாம் , அனுபவப்பழமாம் குமாரசாமி ஐயாவை மேடைக்கு அழைக்கின்றோம்  :D  :D  . இவருக்கு விருதினை வழங்க மீண்டும் ரதி மேடையில் தயாராக இருக்கின்றார் :) :) .

1135836817_761622e428_b.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்ததாக சுவாமி நாதனாம் , அனுபவப்பழமாம் குமாரசாமி ஐயாவை மேடைக்கு அழைக்கின்றோம்  :D  :D  . இவருக்கு விருதினை வழங்க மீண்டும் ரதி மேடையில் தயாராக இருக்கின்றார் :) :) .

1135836817_761622e428_b.jpg

தாத்தாவுக்குப் போட்ட படம் சூப்பர். :)

ஹலிவூட்டில் தன்னும் இப்படி தும்பை பூ போல  அழகான வெள்ளை வெளேர் என்ற ஒரு தாடியுடன் கண்களில் இருந்து ஞான ஒளி கறங்கும் பார்வையுடனான போஸ் ஒன்றை கொடுக்கத்தக்க நடிகர்கள் அருந்தல் தான் என்றாலும் இதை பிரசுரித்தவர்கள் மேட்டுக்குடி துவேசிகளா எனச் சந்தேகம் எழுவதால் யாழ் மேட்டுக்குடி துவேச இணையத்தளம் என்பது நிறுவப்படுகிறது. :lol:

இதோ அன்புத் தங்கையை ஆரத்தழுவியவாறே ஆனந்தக் கண்ணீர் பெருக பரிசினைப்பெறுகின்றார் குமாரசாமி ஐயா அவர்கள் :lol::D :D .

60006495.jpg

அடுத்ததாக பிரபல ஊடகவியலாளரும்  , யாழ் இணையத்தின் புலநாய் புகழ் சாத்திரியை :lol::D மேடைக்கு அழைக்கின்றோம் . இவருக்கு நிழலி பரிசு வழங்கத் தயாராக இருக்கின்றார் :) :) .

dogue-de-bordeaux-dog-harness-dog-tracki

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக சுவாமி நாதனாம் , அனுபவப்பழமாம் குமாரசாமி ஐயாவை மேடைக்கு அழைக்கின்றோம்  :D  :D  . இவருக்கு விருதினை வழங்க மீண்டும் ரதி மேடையில் தயாராக இருக்கின்றார் :) :) .

1135836817_761622e428_b.jpg

என்ட‌ அண்ணா ஒன்றும் அப்படி வயசானவர் இல்லை மிஞ்சி,மிஞ்சிப் போனால் 45 க்கு உள்ளே தான் இருக்கும் :D
  • கருத்துக்கள உறவுகள்

அழகான வடிவமைப்பில் உருவாக்கி அனைவருக்கும் வழங்கும் 

சான்றிதழ்களுக்கு நன்றி கோமகன்    

துள்ளல் நடையுடன் வந்த சாத்திரி லாவகமாக ஒரே ஜம்பில் மேடையில் தாவ :o :o  நிழலி, சாத்திரியை வியப்புடன் பார்த்தவாறே பரிசினை வழங்குகின்றார் :lol: :lol: :D .

90795186.jpg

Edited by கோமகன்

அடுத்ததாக இறுதி நிகழ்வாக  எதிரணித்தலைவர் யாழ் வாலியை மேடைக்கு அழைக்கின்றோம் :D :D . இவரிற்கு பரிசினை வழங்க இணையவன் இங்கே மேடையில் தயாராக இருக்கின்றார் :) :) .

p72a.jpg
 
இதற்கு என்ன பெயர்?

ஆள் மாறாட்டமா அல்லது யாழ் மாறாட்டமா?

Edited by மல்லையூரான்

இதோ வெற்றி நடை போட்டு வந்து இணையவனைக் கண்டு வாயடைத்து நிற்கும் யாழ்வாலியை :lol: :lol: . முதுகில் தட்டி சிறப்புப் பரிசை வழங்குகின்றார் இணையவன் :)  :)  .

30893195.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ட‌ அண்ணா ஒன்றும் அப்படி வயசானவர் இல்லை மிஞ்சி,மிஞ்சிப் போனால் 45 க்கு உள்ளே தான் இருக்கும் :D

என்னை நேரை பாத்துட்டு மயங்கிவிழக்கூடாது தங்கச்சி :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில், இந்த நினைவுப் பரிசு என்பது வெற்றி தோல்வி என்பதையும் கடந்து யாழ் இணையம் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து எமக்களித்த ஓரு *மதிப்புமிக்க ஏற்றுக்கொள்ளலாகவே கருதுகின்றேன். அந்தவகையில் அனைவருக்கும் எனது நன்றி. :)

*மதிப்புமிக்க ஏற்றுக்கொள்ளல் = கௌரவ அங்கீகாரம்

அடுத்ததாக கனடாவின் சிந்தனையாளன் வெல்லக்கட்டியாக இனிக்கப் பேசும் கரும்பை மேடைக்கு அழைக்கின்றோம் . இவருக்குப் பரிசை வழங்க பெண்கவிதாயினி வல்வை சகாறா அவர்கள் இங்கே காத்துக் கொண்டிருக்கின்றார்கள் :) :) .

sugar+cane+nov+20+2010+-007.JPG

இதோ பெண்கவிதாயினி வல்வை சகாறாவிடம் மகிழ்ச்சி பொங்கப் பரிசினைப் பெற்றுக் கொள்கின்றார் கரும்பு அவர்கள் :) :) .

93096394.jpg

நன்றி! கருத்துக்கள் கூறியவர்கள், பங்கெடுத்தவர்கள், வாசித்து உற்சாகம் வழங்கியவர்கள், ஒருங்கிணைத்து செயற்படுத்தியவர்கள், அத்துடன் கோமகன், சுமேரியர் அக்காவிற்கும், அனைவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.