Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப்ரோக்கோலி திக் சூப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரோக்கோலி திக் சூப்

ப்ரோக்கோலி பலவகையான சத்துக்களை கொண்ட ஒரு காய் வகை. பார்பதற்கு பச்சை நிற காளிப்பிலவரை போல தோன்றும் இந்த ப்ரோக்கோலியை வைத்து சூப் செய்வது எப்படி என பார்ப்போம்

தேவையானவை

ப்ரோக்கோலி - 1 பெரிய பூ
கேரட் - 1
உருளை கிழங்கு - 1
சிக்கென் குயூப் - 1 சிறியது
உப்பு - தேவைகேற்ப
பால் - 1 கப்

செய்முறை

குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் போட்டு மை போல அரைக்கவும்.

அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி ஒரு கொதி வந்தததும் இறக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்

 

http://tamil.webdunia.com/miscellaneous/cookery/recipes/1304/02/1130402044_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துச் சத்துக்களும் அடங்கியது இந்த புரோகோலி.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்போது செய்து சுவைத்து பார்த்து பின்னர் எழுதுகின்றேன். 

 

இணைப்புக்கு நன்றி பிழம்பு. 

புறொக்கோலி ஏனைய மரக்கறியோடு சேர்ந்து அவித்துச் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

100_5546.jpg

  • 4 weeks later...

கடந்த இரண்டு நாட்களாக இரவுச்சாப்பாடாக இந்த சூப்பினைத் தான் செய்து சாப்பிட்டேன்.

முதல் நாள்:

இதில் சொல்லப்பட்டு இருக்கும் முறையை ஒன்று விடாமல் பின்பற்றி, Blender இல் அரைத்த பின் ஒரு முட்டையையும் அதனுள் கலந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து பின் இறக்கிக் குடித்தேன். பிள்ளைகளும் ஓரளவுக்கு விரும்பி குடித்தனர்.

இரண்டாம் நாள்:

மேலே சொன்னவற்றுடன், லீக்ஸ், முட்டை கோவா (cauliflower) ஆகியவற்றையும் போட்டு, முட்டை போடாமல் சூப் செய்தேன்.

முக்கிய விடயம்:

இதில் உள்ள செய்முறையில் chicken soup cube இனையும் போடச் சொல்லி இருக்கின்றனர். இந்த cube இல் அரைவாசி பகுதியில் மட்டும் 800 mg அளவு sodium உள்ளது. ஒரு நாளைக்கு ஒருவர் எடுக்க கூடிய sodium த்தின் அளவாக பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவு 1500 mg ஆகும். ஒரு முழு cube இனை போடும் போது அது மட்டுமே 1600 ஆக ஒரு அதிகரிக்கின்றது. எனவே இதனை முற்றாகத் தவிர்ப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தனிய இந்த சூப் மட்டும் தான் குடிச்சீங்களா அல்லது சூப்போடு பாண் சாப்பிட்டிங்களா

 

chicken cube இங்கே சின்ன சைசில் உள்ளது

 

தனிய இந்த சூப் மட்டும் தான் குடிச்சீங்களா அல்லது சூப்போடு பாண் சாப்பிட்டிங்களா

 

chicken cube இங்கே சின்ன சைசில் உள்ளது

 

சூப் மட்டும்தான் குடித்தேன்.

 

இங்கும் chicken cube சின்னன் தான். எந்தெந்த சத்து எத்தனை சதவீதம் என்று போட்டு இருப்பதை ஒருக்கா கவனித்து பாருங்கள். அநேகமானவை அதிக உப்பு கொண்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

சூப் மட்டும்தான் குடித்தேன்.

 

இங்கும் chicken cube சின்னன் தான். எந்தெந்த சத்து எத்தனை சதவீதம் என்று போட்டு இருப்பதை ஒருக்கா கவனித்து பாருங்கள். அநேகமானவை அதிக உப்பு கொண்டவை.

 

ஓ தகவலுக்கு நன்றி...இனி மேல் கவனித்து பார்க்கிறேன் இப்ப வீட்டில இல்லை

ஓ தகவலுக்கு நன்றி...இனி மேல் கவனித்து பார்க்கிறேன் இப்ப வீட்டில இல்லை

 

ரதி,

 

இதே மாதிரி Instant noodles களையும் ஒருக்கால் பார்த்து வாங்குங்கள். சீனாவில் இருந்து வருகின்ற அல்லது சீன உணவு முறை என்று வருகின்ற அநேக நூடுல்ஸ் களில் 60% இற்கும் மேற்பட்ட Sodium இருக்கும். மிகவும் அபாயமான வீதம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

 

இதே மாதிரி Instant noodles களையும் ஒருக்கால் பார்த்து வாங்குங்கள். சீனாவில் இருந்து வருகின்ற அல்லது சீன உணவு முறை என்று வருகின்ற அநேக நூடுல்ஸ் களில் 60% இற்கும் மேற்பட்ட Sodium இருக்கும். மிகவும் அபாயமான வீதம் இது.

 

ம்ம்...உண்மை தான் நான் அநேகமான நேரங்களில் மகி நூடில்ஸ் பைக்கட் தான் வேண்டிப் பாவிக்கிறது.இனி மேல் பார்த்திட்டு நிப்பாட்டோனும்

ம்ம்...உண்மை தான் நான் அநேகமான நேரங்களில் மகி நூடில்ஸ் பைக்கட் தான் வேண்டிப் பாவிக்கிறது.இனி மேல் பார்த்திட்டு நிப்பாட்டோனும்

 

Are maggi noodles harmful for health

http://wiki.answers.com/Q/Are_maggi_noodles_harmful_for_health#page2

 

 

The Truth Behind The 2 Minute Maggi Noodles!!

 

http://www.active8health.net/the-truth-behind-the-2-minute-maggi-noodles/

 

 

 

 

சிக்கன் கட்டிகளுக்குப் (cube) பதிலாக அரிசி மா அல்லது கடலை மா போன்று வேறு மாவகைகளையும் பயன்படுத்திப் பாருங்கள்.   எந்த சுவை பிடிக்கிறதோ அதனை இங்கு குறிப்பிடுங்கள்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஒடியல் மாவ போட்டு கூழாக்கி குடிங்கையா....

  • கருத்துக்கள உறவுகள்

சோளமாவு போட்டால் திக்காகவும்,சுவையாகவும் வரும்

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சூப்பை எனது  வீட்டுக்காறி   கன காலமாக செய்து தருவார்.

அதற்குள்  எலும்பகளையும் (கோழி அல்லது மாடு)   போட்டுவிடுவார்.

 

 

இரவில்  சாப்பிட்டால்  விடிய உடல் நன்றாக இருக்கும்.

  • 4 years later...

உடல் எடையை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
உடல் எடையை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்
 
தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - அரை ஸ்பூன்.

201710170901202077_1_broccolisoup._L_sty

செய்முறை :

வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ப்ரோக்கோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு தண்ணீர் விட்டு  5 நிமிடம் வேக விடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

நன்றாக கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி.

http://www.maalaimalar.com/

  • 2 weeks later...

புரோக்கோலி ரெசிப்பிக்கள்

 

dot3(1).jpgபுரோக்கோலி சூப்  

dot3(1).jpgபுரோக்கோலி உருளைக்கிழங்கு வறுவல் 

dot3(1).jpgபுரோக்கோலி பாஸ்தா  

dot3(1).jpgபுரோக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

dot3(1).jpgபுரோக்கோலி பருப்பு ரசம் 

dot3(1).jpgபுரோக்கோலி பாலக் கூட்டு

dot3(1).jpgபுரோக்கோலி பீஸ் புலாவ்  

dot3(1).jpgபுரோக்கோலி லெமன் போஹா

dot3(1).jpgபுரோக்கோலி ஹாட் சாஸ் 

dot3(1).jpgபுரோக்கோலி பிரியாணி

p31.jpg

புரோக்கோலி பார்ப்பதற்கு, காலிஃப்ளவர் போல இருக்கும். ஆனால், பச்சை நிறத்தில் இருக்கும். புரோக்கோலிகளை வைத்து செய்யப்பட்ட ரெசிப்பிக்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

* புரோக்கோலி ரெசிப்பிக்களை வழங்கியவர் சங்கீதா


புரோக்கோலி சூப்

தேவையானவை:

மீடியம் சைஸ் புரோக்கோலி - 1  

ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்

சூப் செய்ய:

எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1

பூண்டு - இரண்டு பல் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 1 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

வெஜிடபிள் ஸ்டாக் அல்லது தண்ணீர் - 3 கப் 

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

p32.jpg

செய்முறை:

புரோக்கோலியைப் பூக்களாகப் பிரித்து எடுத்து, தண்ணீரில் அலசி வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி புரோக்கோலியைச் சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வதக்கித் தனியாக வையுங்கள். அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். இதில் பூண்டு, உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.  வதக்கி வைத்திருக்கும் புரோக்கோலி, வெஜிடபிள் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து, குறைவான தீயில் இருபத்தி ஐந்து நிமிடம் வேக விடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்து சாஃப்டாக வரும் போது அடுப்பை அணைத்து ஆற விடவும். பிறகு பருப்பு கடையும் மத்தால் கலவையைக் கடையவும். அடுப்பில் கடாயை வைத்து கடைந்த கலவையை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து உப்பு, மிளகுத்தூள் போட்டு நான்கு முதல் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.


புரோக்கோலி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 3 (நீளமாக நறுக்கவும்)

மீடியம் சைஸ் புரோக்கோலி - 1 (சற்று நீளமான பூக்களாக‌ நறுக்கிக் கொள்ளவும்)

பெரிய வெங்காயம் - 1 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

நசுக்கிய பூண்டுப் பல் - 2

கறிவேப்பிலை- சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

p34.jpg

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, கடலைப்பருப்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை மிதமாக்கி மூடி போட்டு மூன்று நிமிடம் நன்கு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்ததும், அதில் புரோக்கோலியைச் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு கிரிஸ்பியாகும் வரை வதக்கி இறக்கிப் பரிமாறவும்.


புரோக்கோலி பாஸ்தா

தேவையானவை:

பாஸ்தா - அரை கப்

மெல்லிய வட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 

புரோக்கோலி - அரை கப் (நறுக்கிய பூக்கள்)

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌

p35.jpg

செய்முறை:

பாத்திரத்தில் பாஸ்தாவைச் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விடவும். இதனை அடுப்பில் ஏற்றி வெந்ததும் தண்ணீர் இறுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது பாஸ்தா பாக்கெட்டில் உள்ள செய்முறையின்படி வேக வைத்து நீர் இறுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தீயைக் குறைத்துக் கலக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து தீயை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு புரோக்கோலியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதில் சோயா சாஸை சேர்த்து  ஒரு நிமிடம் வதக்கி, வெந்த பாஸ்தா, தேவையான அளவு உப்பு சேர்த்து, மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும். கலவையோடு பாஸ்தா நன்கு ஒட்டி வரும் போது அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


புரோக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

தேவையானவை:

பஜ்ஜி மிளகாய் - 5

கடலைமாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

புரோக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்:

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

புரோக்கோலி - அரை கப் (பூக்களாகப் பிரித்துக் கொள்ளவும்)

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

p36.jpg

செய்முறை:

பஜ்ஜி மிளகாயைக் கழுவி ஈரம் போக துடைத்து, தனியே வைக்கவும். ஸ்டஃபிங் செய்வதற்குத் கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும். தேவையானவை பட்டியலில் உள்ள மற்ற பொருட்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை சிறிது சிறிதாகக் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவாகக் கரைத்து வைக்கவும். ஒரு பஜ்ஜி மிளகாயை எடுத்து நடுவில் நீளமாகக் கீறி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு, புரோக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கை நிரப்பி வைக்கவும். இப்படி அனைத்து மிளகாயின் உள்ளேயும் ஸ்டஃபிங்கை நிரப்பவும். அடுப்பில் வாணலியை வைத்து, பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் தீயை மிதமாக்கவும். ஸ்டஃப் செய்த மிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து, மெதுவாக எண்ணெயில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் மறுபுறத்தை வேக வைத்து எடுத்து, ஆறியதும் ‘கெட்சப்’ அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.


புரோக்கோலி பருப்பு ரசம்

தேவையானவை:

மீடியம் சைஸ் புரோக்கோலி - 1 (பூக்களைத் தனியாக‌ப் பிரித்து வைக்கவும்)

துவரம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 1 (கைகளால் மசிக்கவும்)

புளிக்கரைசல் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

ரசப்பொடி தயாரிக்க‌:

சீரகம் - 2 டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

பூண்டு - 3 பல்

p38.jpg

செய்முறை:

துவரம் பருப்பை நன்கு அலசி, மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிருதுவாகும் வரை வேக வைக்கவும். வெந்த பிறகு தண்ணீர் மிச்சம் இருந்தால் கொட்டிவிட வேண்டாம். ரசத்தில் சேர்த்துக் கொள்ளலாம். புரோக்கோலிப் பூக்களை தண்ணீரில் அலசி, சின்னதாக நறுக்கி வைக்கவும். ரசப்பொடிக்குக் கொடுத்ததை இடித்து வைக்கவும். தக்காளியைப் புளிக்கரைசலுடன் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இடித்த ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து, சில‌ நிமிடம் வதக்கவும். இதில் புரோக்கோலியைப் போட்டு, சிறிதளவு உப்புத் தூவி சில நிமிடம் வதக்கவும். மூடி போட்டு தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடம் வேக விடவும். இப்போது புரோக்கோலி பாதி வேக்காடு வெந்திருக்கும். மூடியைத் திறந்து வெந்த துவரம் பருப்பு, தக்காளி புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் (பருப்பு வெந்த தண்ணீரை இதில் சேர்க்கலாம்), மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, தீயை மிதமாக்கி மூடி போட்டு வேக விடவும். ரசம் கொதி வரும் போது கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி போட்டு தீயை முற்றிலும் குறைத்து, பத்து நிமிடம் வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்துப் பரிமாறவும்.


புரோக்கோலி பாலக் கூட்டு

தேவையானவை:

பாசிப்பருப்பு - அரை கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 2 கப்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

புரோக்கோலி - ஒரு கப்

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

துருவிய தேங்காய் - கால் கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1 (பாதியாக உடைக்கவும்)

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

p40.jpg

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூளுடன் சேர்த்து வேக விடவும். பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் வெங்காயம், தக்காளி, புரோக்கோலி, பாலக்கீரை, அரைத்த தேங்காய்க் கலவை சேர்த்துக் கலக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். வெந்தததும் எடுத்துத் தனியாக வைத்து விட்டு, அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.


புரோக்கோலி பீஸ் புலாவ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்

மீடியம் சைஸ் புரோக்கோலி - 2 (பூக்களைச் சின்னதாக‌ப் பிரித்துக் கொள்ளவும்)

பச்சைப் பட்டாணி - அரை கப்

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5 அல்லது 6

இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - சிறிது

தாளிக்க: 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கறுஞ்சீரகம் - சிறிதளவு

கிராம்பு - 4 அல்லது 5

பட்டை - 2 ஸ்டிக்

ஏலக்காய் - 3

பிரியாணி இலை - 1

p41.jpg

செய்முறை:

பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி, தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றைச் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், சிறிது கொத்தமல்லித்தழை, சிறிது புதினா சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். இதில் இஞ்சி- பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி தோல் சுருங்க வதக்கவும். இதில் பச்சை பட்டாணி, புரோக்கோலி, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை மிதமாக்கி, பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து இரண்டு நிமிடம் மெதுவாகக் கிளறவும். வழக்கமாக இரண்டு கப் பாஸ்மதி அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால், தேங்காய்ப்பால் இரண்டு கப் இருப்பதால், இரண்டு கப் தண்ணீர் மட்டும் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். வெந்ததும் மூடியைத் திறந்து மீதம் இருக்கும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.


புரோக்கோலி லெமன் போஹா

தேவையானவை:

அவல் - ஒன்றேகால் கப்

புரோக்கோலி - ஒரு கப் (சின்னச் சின்னப் பூக்களாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 2 (இரண்டாக உடைக்கவும்)

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 7 அல்லது 8

எலுமிச்சை - 1

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

p42.jpg

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் புரோக்கோலியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை இறுத்து புரோக்கோலியை குளிர்ந்த நீரில் அலசி தனியே எடுத்து வைக்கவும். அவலை அலசி தண்ணீர் இறுத்து தனியாக வைக்கவும். எலுமிச்சையைப் பிழிந்து, சாறு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விட்டு, இத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,  வெங்காயம் சேர்த்து, வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு புரோக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டி முன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் அவல், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து இறக்கும் போது எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை கலந்துப் பரிமாறவும்.


புரோக்கோலி ஹாட் சாஸ்

தேவையானவை:

சிறிய சைஸ் புரோக்கோலி - 2 (சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்)

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டுப் பல் - 4

ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

சாஸ் தயாரிக்க:

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

சில்லி கார்லிக் சாஸ் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்

வினிகர் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

இடித்த மிளகு - சிறிது

கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஐஸ் தண்ணீர் - அரை கப்

உப்பு - சிறிதளவு

p43.jpg

செய்முறை:

சாஸுக்கு தேவையானதை எல்லாம் ஒரு பவுலில் போட்டு மிக்ஸ் செய்யவும். அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும் ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஊற்றி, பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து தீயைக் குறைத்து வாசனை வரும் வரை வதக்கவும். தீயை அதிகரித்து வெங்காயம், புரோக்கோலியைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். இதில் கலந்து வைத்துள்ள  சாஸ் கலவையைச் சேர்த்து லேசாக திக்காக ஆகும் வரை கலக்கவும். இதனை ஃப்ரைடு ரைஸோடு சேர்த்துச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.


புரோக்கோலி பிரியாணி

தேவையானவை:

சேமியா - ஒன்றரை கப்

மீடியம் சைஸ் புரோக்கோலி - 1 (சின்னச்சின்ன பூக்களாக வெட்டவும்)

நசுக்கிய இஞ்சி - 2 சின்ன துண்டு

நசுக்கிய பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 4 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கியது)

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

கிராம்பு - 3

பட்டை - 2

ஏலக்காய் - 2

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

புதினா- சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

பிரியாணி இலை - 1

உப்பு - தேவையான அளவு

p44.jpg

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, சிறிது எண்ணெய் விட்டு சேமியாவை கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும். அடுப்பில் நான்-ஸ்டிக் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டுப் பொரிந்ததும் கடலைப்பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து லேசாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.  பிறகு, தக்காளியைச் சேர்த்து மசியும் வரை நன்கு வதக்கவும். இனி புரோக்கோலி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது  வறுத்த சேமியாவைச் சேர்த்து வதக்கி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

2013´ம் ஆண்டு, பிழம்பு இணைத்த...  "ப்ரோக்கோலி சூப்" எனது கண்ணில்  படாமல் போனது, ஏன்? :rolleyes:
தமிழரசு, மயூரன், நிழலி (அப்போ... பிழம்பு யார் என்று ஒருவருக்கும் தெரியாது :grin:)  தமிழச்சி, சுண்டல், ரதி, விசுகு...
 எல்லோரும்... கருத்து எழுதியிருப்பதை,  இப்போ... பார்க்கும்  போது, ஆசையாக உள்ளது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 27.4.2013 at 2:34 PM, விசுகு said:

இப்படி ஒரு சூப்பை எனது  வீட்டுக்காறி   கன காலமாக செய்து தருவார்.

அதற்குள்  எலும்பகளையும் (கோழி அல்லது மாடு)   போட்டுவிடுவார்.

இரவில்  சாப்பிட்டால்  விடிய உடல் நன்றாக இருக்கும்.

விசுகு அண்ணா.... உங்கள் இளமையின், ரகசியத்தை சொன்னமைக்கு,  நன்றி அண்ணா.  :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.