Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, இந்தத் திரியில் பல இடங்களில் உங்கள் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் நீங்கள் வைத்த எதிர்க்கருத்துக்களையும், அறிவுரைகளையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.  சந்தோசமான விடயம் என்றாலும் சீமான் எமக்காக குரல் கொடுத்த 2008ஆம் ஆண்டில் அவரைக் கருணாநிதியின் அரசு சிறையில் தள்ளியது.  நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், அவருடைய தலைமை, வழிநடத்தல், அரசியல் ஞானம் என்பன அந்நாட்களில் உறுதியாகவும் அவருடைய ஆளுமை சிறப்பானதாகவும் இருந்திருந்தால் அவர், அவருடைய தொண்டர்கள் 24 மணித்தியாலங்களுக்கு மேல் அவரைச் சிறையில் வைத்திருக்க முடியாத நிலையை தோற்றுவித்திருப்பார்கள்.  ஆனால், அன்று அது நடக்கவில்லை.  மாறாகக் கருணாநிதியின் இரும்புக்கரம் பலமானதாக இருந்தது.  அத்தோடு அன்றைய காலகட்ட எழுச்சிக்கு முற்றுமுழுதாக சீமான் காரணமாக இருக்கவில்லை.  
 
அப்படிப்பட்ட சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் தனது கொள்கைகளை மாற்றும் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது.  அந்தளவு ஆளுமையும் சீமானுக்கு இல்லை. 

2008 இல் சீமானால் செய்யமுடியவில்லை.. ஆகவே இன்று அவரால் எதையும் செய்யமுடியாது என்கிற வாதத்தை வைத்துள்ளீர்கள்.. செய்ய முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

ஆனால் 2008 இல் சீமான் தானாகப் போய் பேசிக்கொண்டிருந்த ஒருவரே தவிர அவருக்கென்று ஒரு கட்சியோ, பதிவு செய்த தொண்டர்களோ இல்லை.. நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதே 2010 இல் தான். ஆகவே 2008 இல் நடந்ததைக் காரணங்காட்டி இன்றைய நிலையை ஒப்பிட முடியாது..

மேலும், இன்று ஜெயலலிதா சீமானை உள்ளே தூக்கிப் போட்டாலும் கலவரங்கள் வெடிக்கப்போவதில்லை.. பா.ம.க செய்ததுபோல் பேருந்து எரிப்பு, மரம் வெட்டல் நடைபெறாது என்பதே எனது எண்ணம்..

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply

மிகவும் ஒரு அருமையான திரி. சீமான் வாக்குகளுக்காகக் கோசம் போடுகிறாரா? இல்லை தலைவர்மேல் வைத்திருக்கும் அன்பிற்காகக் கோசம் போடுகிறாரா என்பது இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய விடயம் அல்ல.  ஆனால், அவருடைய கோசமும் அவர் வெளிப்படுத்தும் தோற்றப்பாடும் எவ்வகையான நன்மை, தீமைகளை எமது தேசவிடுதலைக்குக் கொண்டுவரும் என்பதே ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய விடயம். 
 
இங்கே, பலருடைய கருத்துக்கள் சீமானுக்கு எதிராகவும் மற்றவர்களுடைய கருத்துக்கள் அவருக்கு ஆதரவாகவும் இன்னுமொரு சாராரது கருத்துக்கள் அரசியலை விளங்கிக் கொள்ளாத நிலையையும் காட்டி நிற்கின்றன. இந்த இடத்தில், நான் குறிப்பிடவேண்டிய ஒரு விடயம்,
 
இந்த நிகழ்வு நடந்தபோது நான் பிறந்திருந்தேனோ என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால், பல பெரியவர்கள் உறுதிபடக் கூறியதால் அதை இங்கே எழுதுகிறேன்.
 
மாதமோ சித்திரை
 
நேரமோ பத்தரை
 
மக்களோ நித்திரை
 
இங்கு பேசுவது அண்ணாத்துரை
 
என்று, சென்னை மரினாக் கடற்கரையில் தான் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்திற்குத் தாமதமாகச் சென்றதால் அங்கே தூங்கி வழிந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தை உணர்வூட்டி எழுப்புவதற்காக அறிஞர் அண்ணாதுரை மேற்கண்டவாறு கூறினாராம். 
 
அன்று தொட்டு இன்றுவரை, அரசியல் என்று வரும்பொழுது இவ்வாறான அழகுதமிழுக்கும், அடுக்குமொழிகளுக்கும், அடைமொழிகளுக்கும் அடிமைப்பட்டு உணர்ச்சிகளைப் பொங்கவிட்ட அரசியலையே எம் தமிழினம் நடத்தி வந்திருக்கிறது.  இதே பாணியை இன்று சீமானும் கைக்கொள்வதனால் அவர்பின் அணிதிரளவென்று தமிழ்நாட்டு மக்களில் ஒரு சாராரும் ஏன், புலம்பெயர்ந்து வாழும் எம்மவரில் பலரும் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல.  எம் விடுதலைக்காக, சிறந்த ஆளுமையும் மக்கள் ஆதரவும் மிக்க ஒரு தலைவரைத்தான் சர்வதேசமும், சர்வதேசத்திற்கு எமது தேசவிடுதலை விடயத்தில் அவ்வப்போது தடுப்புப் போடலாம் என நினைக்கும் இந்திய அரசும் எதிர்பார்க்கின்றன. 
 
இத்தகைய தகைமைகளோடு எம்மிடையே இருந்த ஒரே தலைவரை அவருடைய அகப்புற யதார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வல்லரசுகளும் இந்திய அரசும் அவர் பெயர், அவர் உருவாக்கிய சீருடை, அவரால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அவர் போராட்டத்தில் கைக்கொண்ட சில வழிமுறைகள் ஆகியவற்றை 1990களின் கடைப்பகுதி முதல் முள்ளிவாய்க்கால் வரை, தமது நலன் கருதி பகிரங்கமாக எதிர்த்தும், கண்டித்தும் வந்திருக்கின்றன.  முள்ளிவாய்க்காலின் பின் சீன அரசுடன் இணைந்து சிறிலங்கா அரசு தம்மை ஏமாற்றுவதை உணர்ந்த பிற்பாடு தாம் எதிர்த்தவையும் கண்டித்தவையும் தமிழீழ மக்களால் மனதார ஏற்றிப் போற்றப்பட்ட விடயங்கள் என்பதை உய்த்துணர்ந்து இருக்கின்றன.  ஆனாலும், தாம் பகிரங்கமாக எதிர்த்த ஒரே காரணத்துக்காக அவற்றை மீண்டும் பகிரங்கமாக நியாயப்படுத்தும் நிலையில் இந்த வல்லரசுகள் இல்லை. 
 
எமது தேசத்திற்கான தீர்வு என்று வரும்பொழுது, ஐ.நா. சபை, அமெரிக்க வல்லரசு, சில சமயங்களில் இந்திய அரசு ஆகிய காரணிகளோடு ஈழத்தமிழர் தரப்பு பேரம் பேசவேண்டிய நிலை ஏற்படும் என்பதே இன்றைய யதார்த்தம்.  அப்படியான நிலை ஏற்படும்பொழுது, “நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை.  வன்முறை மற்றும் மனிதஉரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை.  ஆனால், ஜனநாயக வழியில் தமது சுதந்திரத்தை நியாயமாகக் கோரி நிற்கும் ஒரு இனக்குழுமத்திற்கு நியாயத் தீர்ப்பு வழங்கவே வந்திருக்கின்றோம்.  உன்னுடைய வாக்குறுதிகளை நம்பி இனிமேலும் ஒரு இனத்தின் அழிவிற்கு உடந்தையாக நாம் விரும்பவில்லை.  நீயும் இதுவரை, உன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.” என சிறிலங்காவிடம் கூறிவிட்டு, தீர்ப்பையும் வழங்கித் தாமும் தப்புவதற்கு ஐ.நா. சபையும் அமெரிக்க வல்லரசும் அதற்கு ஆதரவான அரசுகளும் முயலும். 
 
மேற்கூறிப்பிட்ட யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இன்று எம்மிடையே இருக்கும், தோன்றவிருக்கும் தலைமைத்துவங்களையும் ஈழஆதரவு அமைப்புகளையும் சர்வதேச அரசுகளும் அமெரிக்க வல்லரசும், ஏன் ஐ.நா. சபையும் நோக்குகின்றன.  இது இன்றைய நிதர்சனமாக இருக்கின்ற காலகட்டத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும், கொடுக்கவிருக்கும் ஈழத்தமிழர் தலைமைகளையும் வல்லரசுகளும், சர்வதேசப் புலனாய்வுத் துறைகளும் கண்காணித்து வருகின்றன. ஆகவே, சீமானுடைய கோசங்கள் எமது விடுதலைப் பயணத்தை பின்தள்ளுவனவாகவே இருக்கின்றன. 
 
சீமான் செய்வது அவருக்கு நியாயமாக இருந்தாலும் எமது தேசவிடுதலை என்று வரும்பொழுது அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம்மவர்களும் வன்முறைப் பேச்சுக்களை உள்வாங்கி அவற்றை வரவேற்பவர்களாகவும் வன்முறை விரும்பிகளாகவும்தான் பார்க்கப்படுவார்கள்.  இதனைத்தான் இந்தத் திரியில் கருத்துக்களைப் பதிந்த சில கருத்தாளர்கள் தங்களால் இயன்றவரையில் தெளிவாக்க முயன்றிருக்கிறார்கள்.  ஆனாலும், இவர்கள் மேல் இருக்கின்ற தனிப்பட்ட கோபதாபங்கள் காரணமாகவோ, அல்லது இவர்கள் அவ்வப்போது வைக்கின்ற கருத்துக்களின் மேம்பட்ட பொருட்செறிவை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலோ பலரும் விதாண்டாவாதப் போக்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பது வேதனையான விடயம்.  இவர்களுக்கு சீமான்மேல் தனிப்பட்ட அன்பு இருக்கலாம்.  அது பாராட்டப்படவேண்டிய விடயமும் அவரது தனிமனித உரிமையும் என்பதையும் நான் மறுக்கவில்லை.  ஆனாலும், பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் பார்க்கும் யாழ்களத்தின் திரிகளில் சீமான் போன்றவர்களை ஆதரிக்கின்ற கருத்தாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் யாழ்களத்தில் தீவிரவாதம் வளர்க்கப்படுகின்றது எனும் தோற்றப்பாட்டைக்கூட உருவாக்கலாம்.  
 
இங்கே இந்தத் திரியில்எழுதப்பட்டிருக்கும் விடயம் ஒரு சாதாரண ஊழல் அரசியல்வாதி பற்றியதல்ல.  மாறாக, ஒரு தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தேசத்தைச் சாராத ஒரு அரசியல்வாதி இன்னொரு தேசத்திலிருந்து தன்னுடைய நம்பிக்கைக்கும் ஆசாபாசாங்களுக்கும் ஏற்ப எடுக்கும் அரசியல் செயற்பாடுகளை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றன.  ஆகவே, அவருடைய கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்களாக புலம்பெயர்ந்திருக்கும் நாம் பார்க்கப்படுவது எமது தேசவிடுதலைக்கு ஆரோக்கியமானதாக தென்படவில்லை.  நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், சீமான் தமிழ்நாட்டிலிருக்கும் ஒரு அரசியல்வாதி என்பதாகும்.  அவர் தனது கட்சியின் கிளைகளை சர்வதேசமெங்கும் நிறுவ விரும்புவது அவருடைய தனிப்பட்ட உரிமையும் அவரது கட்சிக் கொள்கையும் என்பதை நான் ஏற்றுக் கொண்டாலும் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், தமிழ்நாட்டுக்கு உரித்தான அவருடைய கட்சியின் தொண்டர்கள் ஈழத்தமிழர்களாக இருப்பது சர்வதேச அரசியல்வாதிகளால் வித்தியாசமாக நோக்கப்படுகிறது.  தமிழ்நாட்டுக் கட்சியொன்றின் கிளையில் பெரும்பான்மையாக ஈழத்தமிழர்கள் இணைந்திருப்பது எதற்காக என்ற கேள்வி இங்கு பரவலாக புலம்பெயர்தேச அரசியல்வாதிகளிடையே காணப்படுகிறது.  இதிலும், சீமானின் தீவிரவாதத்தன்மையான ஈழத்தமிழ் கோசம் அவர் கட்சியின் தொண்டர்களாக புலம்பெயர் நாடுகளில் செயற்படுபவர்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்குமளவிற்கு புலம்பெயர்தேச அரசியல்வாதிகளைத் தள்ளியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
 
இந்த நிலைதான், சீமானால் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதகமான நிலை.  இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.  எமக்கான ஒரு தலைமை சர்வதேசத்துடன் உறுதிபடத் தமிழீழத்திற்காகப் பேரம் பேசும்வரை, உணர்ச்சிகளை முன்னிறுத்தி அரசியல் நடாத்தும் சீமான் போன்ற அரசியல் தலைவர்களை தூரத்தில் வைத்திருப்பது எமது இனத்தின் விடுதலையை துரிதப்படுத்தும்.  இவர் போன்ற தமிழக அரசியல்வாதிகளின் கோசங்களை நாம் மனதாரப் பாராட்டிவிட்டுப் பகிரங்கமாகப் புகழ்வதை நிறுத்துதல் எமது விடுதலையை நோக்கிய அரசியலுக்கு உரமூட்டுவதாகவே அமையும்.
 
எமக்கான ஒரு தீர்வை நாம் சர்வதேசத்திடம் முன்வைக்கும்போது, அந்தப் பேச்சுவார்த்தை மேசையில் சீமானுக்கு அவர் ஈழத்தமிழர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்திற்காக சர்வதேசம் எந்த நிலையிலும் அவருக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என்ற உண்மையையும் நாங்கள் இங்கே உணர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.  இதற்குச் சிறந்த உதாரணம் சோனியா காந்திக்கு மறுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் பதவி.
 
துளசி, இந்தத் திரியில் பல இடங்களில் உங்கள் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் நீங்கள் வைத்த எதிர்க்கருத்துக்களையும், அறிவுரைகளையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.  சந்தோசமான விடயம் என்றாலும் சீமான் எமக்காக குரல் கொடுத்த 2008ஆம் ஆண்டில் அவரைக் கருணாநிதியின் அரசு சிறையில் தள்ளியது.  நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், அவருடைய தலைமை, வழிநடத்தல், அரசியல் ஞானம் என்பன அந்நாட்களில் உறுதியாகவும் அவருடைய ஆளுமை சிறப்பானதாகவும் இருந்திருந்தால் அவர், அவருடைய தொண்டர்கள் 24 மணித்தியாலங்களுக்கு மேல் அவரைச் சிறையில் வைத்திருக்க முடியாத நிலையை தோற்றுவித்திருப்பார்கள்.  ஆனால், அன்று அது நடக்கவில்லை.  மாறாகக் கருணாநிதியின் இரும்புக்கரம் பலமானதாக இருந்தது.  அத்தோடு அன்றைய காலகட்ட எழுச்சிக்கு முற்றுமுழுதாக சீமான் காரணமாக இருக்கவில்லை.  
 
அப்படிப்பட்ட சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் தனது கொள்கைகளை மாற்றும் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது.  அந்தளவு ஆளுமையும் சீமானுக்கு இல்லை.  ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இன்றுவரை இந்திய அரசையும் சிறிலங்கா அரசையும் ஒரே தருணத்தில் ஆட்டம் காண வைத்த தமிழ்நாட்டு அரசியல்வாதியென்றால் அது மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.  அவருடைய ஆளுமையும் மக்கள் பலமும் சீமானுக்கு எள்ளளவும் இல்லை.  இதுதான் உண்மை.  குறைந்த பட்சம், வை.கோ. அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட இவரால் ஏற்படுத்த முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. 

இவர் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதோடு நிறுத்திக் கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களிடையே தன்னுடைய அரசியலை புகுத்தாமல் இருந்து கொள்வது தற்போதைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு நன்மை தரும்.

இதைத்தானே இந்த திரியின் மாற்றுக்கருத்தாய் கொண்டு இந்த திரியை இவ்வளவு தூரம் நீள விட்டிருக்கிறார்கள் ................இந்த நேரத்தில் இது தேவையா யாழ் வாணன் .......

பையன்! தமிழ்நெற்தான் இந்த ஒலிப்பதிவை வெளியிட்டது என்பது எனக்கு தெரியும். அது வெளிவந்த பொழுது இந்த ஒலிப்பதிவு யாழ் களத்திலும் இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட ஞாபகம் இருக்கிறது.

இந்த ஒலிப்பதிவிலேயே சூசையுடன் உரையாடுபவர் இதை ஊடகங்களுக்கு கொடுக்கலாமா என்று கேட்பது, அதற்கு தளபதி சூசை ஒருவித சலிப்புடன் சம்மதிப்பதையும் காண்கிறோம்.

ஆகவே இது தமிழ்நெற்றில் வந்தது பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எந்த ஊடகத்தில் முதலில் வந்தது என்பது பற்றி கேட்கவும் இல்லை.

நான் கேட்பது, இந்த ஒலிப்பதிவின் முழுமையான வடிவம் எங்கே? தணிக்கை செய்யப்பட்ட ஒரு ஒலிப்பதிவை வைத்துக் கொண்டு போராட்டத்தின் பொறுப்பை புலிகள் தம்மிடம் தந்ததாக பரப்புரை செய்வது நியாயமா? இவைகளே என்னுடைய கேள்விகள்.

நான் என்னவோ கேட்க, நீங்கள் மீண்டும் மீண்டும் வேறு என்னவோ பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்

அதை விட, விடுதலைப் புலிகளே நியமித்திருந்தாலும் கூட நாம் சீமானை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. விடுதலைப் புலிகளால் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டவரும், தொடர்ந்து போராட்த்தை முன்னெடுப்பார் என்று சுட்டிக்காட்டப்பட்டவராக கருதப்பட்ட கேபியை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய நடவடிக்கைகள்தான் காரணமாக அமையுமே தவிர, விடுதலைப் புலிகள் நியமித்தார்கள் என்பது எல்லாம் காரணமாக முடியாது. அதுவும் பலர் போன்று இவரும் எடுத்த புகைப்படங்கள், தணிக்கை செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் போன்றவைகளை வைத்து சீமானை வாரிசாக்குவதற்கு முயற்சிக்கும் திட்டங்கள் ஒரு போதும் பலனளிக்காது.

சீமானுடைய செயற்பாடுகளே அவர் பற்றிய முடிவுக்கு வருவதற்கு உதவும். நல்ல முடிவுக்கு வரக் கூடியதாக அவருடைய நடவடிக்கைகள் இல்லை என்பது என்னுடைய கருத்து

யாழ்வாணன் அண்ணா, பல இடங்களில் அல்ல, இரு இடங்களில். தான் நான் எனது கருத்தை எழுதினேன். :D

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் அவரது புலம்பெயர் கட்சித்தொண்டர்கள் என்று நீங்கள் சொன்னது உங்கள் கருத்து. :D நாங்கள் அவ்வாறான மனநிலையில் கருத்துகளை எழுதவில்லை. தமிழீழ விடுதலைக்காக தமிழக மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் அனைவர் முயற்சிகளையும் தான் வரவேற்கிறோம். "சீமான் அண்ணா உட்பட பலர்" என்ற பதத்தை நான் பயன்படுத்தியதை எனது கருத்தில் நீங்கள் பார்க்கலாம். :)
 
"சீமான் போன்றவர்களை ஆதரிக்கும் கருத்தாளர்கள் முன்வைக்கும் கருத்துகள்  யாழ்களத்தில் தீவிரவாதம் வளர்க்கப்படுகின்றது எனும் தோற்றப்பாட்டைக்கூட உருவாக்கலாம்" என்று நீங்கள் கூறியது நகைப்புக்கிடமானது. :icon_idea:

சீமான் அண்ணா ஈழத்தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற ஆராய்ச்சி எதற்கு? அவர் தமிழக மக்களை தமிழீழ ஆதரவாளராக மாற்றி வருபவர்களில் ஒருவர் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. தமிழக மக்களில் ஏற்படும் மாற்றம் தமிழகத்தை மாற்றும், அது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
 
இதிலும், சீமானின் தீவிரவாதத்தன்மையான ஈழத்தமிழ் கோசம் அவர் கட்சியின் தொண்டர்களாக புலம்பெயர் நாடுகளில் செயற்படுபவர்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்குமளவிற்கு புலம்பெயர்தேச அரசியல்வாதிகளைத் தள்ளியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள். யார் அந்த புலம்பெயர் அரசியல்வாதிகள் என்றும் சொன்னால் நல்லாயிருக்கும். :icon_idea:

அப்படிப்பட்ட சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் தனது கொள்கைகளை மாற்றும் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது.  அந்தளவு ஆளுமையும் சீமானுக்கு இல்லை.  ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இன்றுவரை இந்திய அரசையும் சிறிலங்கா அரசையும் ஒரே தருணத்தில் ஆட்டம் காண வைத்த தமிழ்நாட்டு அரசியல்வாதியென்றால் அது மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.  அவருடைய ஆளுமையும் மக்கள் பலமும் சீமானுக்கு எள்ளளவும் இல்லை.  இதுதான் உண்மை.  குறைந்த பட்சம், வை.கோ. அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட இவரால் ஏற்படுத்த முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. 

நீங்கள் எவ்வாறு எதிர்காலத்தை உறுதியாக கணிப்பிடுவீர்கள்?

இங்கு தனியே சீமான் அண்ணா இந்திய மத்திய அரசின் கொள்கைகளை மாற்றுவார் என்று நாங்கள் சொல்லவில்லை. மாணவர்கள் உட்பட பலர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒன்றிணையும் போது தமிழகத்தில் மாற்றங்கள் உருவாகும். இந்திய அரசியலையும் அது மாற்றக்கூடிய நிலைக்கு இட்டுச்செல்லவும் கூடும்.

தனி ஈழத்துக்காக, தமிழர் நலனுக்காக போராடுகின்ற  கட்சிகளை ஒன்றிணைக்கப்போவதாக மாணவர்களே கூறியுள்ளார்கள். போராடுவது, செயற்படுத்துவது அனைத்தும் தமிழகத்தில் நடைபெறும்போது குறைபிடிப்பதற்கு மட்டும் எம்மில் பலர் முயல்கிறோம்.

Edited by துளசி

அதை விட, விடுதலைப் புலிகளே நியமித்திருந்தாலும் கூட நாம் சீமானை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. விடுதலைப் புலிகளால் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டவரும், தொடர்ந்து போராட்த்தை முன்னெடுப்பார் என்று சுட்டிக்காட்டப்பட்டவராக கருதப்பட்ட கேபியை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய நடவடிக்கைகள்தான் காரணமாக அமையுமே தவிர, விடுதலைப் புலிகள் நியமித்தார்கள் என்பது எல்லாம் காரணமாக முடியாது. அதுவும் பலர் போன்று இவரும் எடுத்த புகைப்படங்கள், தணிக்கை செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் போன்றவைகளை வைத்து சீமானை வாரிசாக்குவதற்கு முயற்சிக்கும் திட்டங்கள் ஒரு போதும் பலனளிக்காது.

சீமானுடைய செயற்பாடுகளே அவர் பற்றிய முடிவுக்கு வருவதற்கு உதவும். நல்ல முடிவுக்கு வரக் கூடியதாக அவருடைய நடவடிக்கைகள் இல்லை என்பது என்னுடைய கருத்து

சுத்தி சுத்தி ஒன்றையே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். சீமான் அண்ணா தான் தான் புலிகளின் தலைவர் அல்லது ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர் என்று சொன்னாரா? 

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட, விடுதலைப் புலிகளே நியமித்திருந்தாலும் கூட நாம் சீமானை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. விடுதலைப் புலிகளால் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டவரும், தொடர்ந்து போராட்த்தை முன்னெடுப்பார் என்று சுட்டிக்காட்டப்பட்டவராக கருதப்பட்ட கேபியை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய நடவடிக்கைகள்தான் காரணமாக அமையுமே தவிர, விடுதலைப் புலிகள் நியமித்தார்கள் என்பது எல்லாம் காரணமாக முடியாது. அதுவும் பலர் போன்று இவரும் எடுத்த புகைப்படங்கள், தணிக்கை செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் போன்றவைகளை வைத்து சீமானை வாரிசாக்குவதற்கு முயற்சிக்கும் திட்டங்கள் ஒரு போதும் பலனளிக்காது.

சீமானுடைய செயற்பாடுகளே அவர் பற்றிய முடிவுக்கு வருவதற்கு உதவும். நல்ல முடிவுக்கு வரக் கூடியதாக அவருடைய நடவடிக்கைகள் இல்லை என்பது என்னுடைய கருத்து

2009 நீங்கள் என்ன குழந்தை பிள்ளையா...அந்த ஒலி நாடா வரேக்க சும்மா பம்மி கொன்டு இருந்துட்டு இப்ப ஆதாரம் தாங்கோ தேவாரம் சொல்லுங்கோ என்று அடம் பிடிக்கிறீங்கள்...அப்ப சீமான் பெரிய ஆள் இல்லை தானே..இப்ப அவர் பல மக்களால் மதிக்க போற்ற படுர மனிதன் ஆக்கி விட்டாரே என்ற வயித்து எரிச்சலில் சொல்லுறிங்களா அது போலி ஒலி நாடா என்று....அந்த ஒலி நாடா சூசை அண்ணா உயிரோடு இருக்கேக்கையே வெளி வந்து விட்டது...இதுக்கு மிஞ்சியும் ஆதாரம் தாங்கோ அது இது என்று சொல்லி நேரத்தை வின் அடிக்காதைங்கோ....

பையன்! மன்னிக்கவும். உங்களுக்கு விளங்கவில்லை என்று எனக்கு புரிகிறது. நான் என்ன ஆதாரம் கேட்டேன்? போலி ஒலி நாடா என்று எங்கே சொன்னேன். நான் கேட்பது முழுமையான ஒலி வடிவம்.

2009இல் எமக்கு முழுமையான ஒலிவடிவம் வேண்டும் என்று கேட்கின்ற தேவை இருக்கவில்லை. 2009இல் வந்த ஒலிவடிவம் மக்களின் அவலங்களை பற்றி மட்டும் கூறும்படியாக தணிக்கை செய்து வெளியிடப்பட்டிருந்தது. அன்றைக்கு அதுதான் தேவை.

அந்த ஒலிவடிவம் அப்படியே மக்களின் அவலங்களோடு நின்றிருந்தால், நாமும் மிகுதி எங்கே என்று கேட்டிருக்க மாட்டோம்.

ஆனால் ஓரிரு ஆண்டுகள் கழித்து இரண்டு நிமிடங்களாக இருந்த ஒலிப்பதிவு ஐந்து நிமிடங்களாக வருகிறது. அதை ஒரு அமைப்பு தன்னுடைய சுய அரசியலுக்கு பயன்படுத்துகிறது. வேறொரு தரப்பு கேபி பற்றியும் அதில் இருக்கிறது என்று சொல்கிறது.

இந்த இடத்தில்தான் நாம் கேள்வி கேட்கத் தொடங்குகிறோம். இப்பொழுதாவது புரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

் .

எங்கட விசிலடிச்சான் குஞ்சுகள் தான் பாவம் பஞ்சியிலாமல் அடுத்த ஒருவரை தேடுவார்கள் தமிழிழம் பிடிக்க ஏனெனில் தாங்கள் போராட இவர்கள் என்றும் தயாரில்லை .

ஆரும் பிடிச்சு தருவான் உங்களுக்கு நாடு இப்படியே பார்த்துக்கொண்டு இருங்கோ .

இதை அர்ஜுன் அவர்களின் வழமையான எழுத்து என்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள்.

அனால் இவை தற்கால உண்மைகள்.

முன்னின்று போராடி அர்ஜுன் அவர்கள் 5-10 ஈழம் எடுத்திருப்பதுபோல் . சீமான் எல்லாம் பிடிப்பார் புலிகள் ஈழம் பிடிப்பார் என்று அடுத்தவரை பார்த்து நிற்காது. அர்ஜுன் அவர்கள் போல் ஏன் உங்கள் ஒருவராலும் தனியாக முன்னின்று போராட முடியவில்லை.

ஏமாற்றுபவன் ஏமாற்றட்டும் உண்மையான ஒருவன் வருவான் என்று அன்றுதொடக்கம் சலிக்காமல் நிற்கிறீர்களே தவிரே. அர்ஜுன் போல் களத்தில் யார் குதித்தீர்கள்?

இங்கு எதை வேண்டுமானாலும்  எழுதலாம். இனியாவது போய்  போராட பழகுங்கள். அல்லது எப்படி போராடுவது என்று அர்ஜுன் அவர்களுடன் பேசி கேட்டு அறியுங்கள். 

2009இலேயே சீமான் தரப்பு இந்த ஒலிநாடாவை தமது சுயஅரசியலுக்கு பயன்படுத்தியிருந்தால், அன்றைக்கு கேட்டிருப்போம். இன்றைக்குத்தான் இந்த ஒலிப்பதியை தமது சுயநலனுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் இன்றைக்கு கேள்வி கேட்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பையன்! மன்னிக்கவும். உங்களுக்கு விளங்கவில்லை என்று எனக்கு புரிகிறது. நான் என்ன ஆதாரம் கேட்டேன்? போலி ஒலி நாடா என்று எங்கே சொன்னேன். நான் கேட்பது முழுமையான ஒலி வடிவம்.

2009இல் எமக்கு முழுமையான ஒலிவடிவம் வேண்டும் என்று கேட்கின்ற தேவை இருக்கவில்லை. 2009இல் வந்த ஒலிவடிவம் மக்களின் அவலங்களை பற்றி மட்டும் கூறும்படியாக தணிக்கை செய்து வெளியிடப்பட்டிருந்தது. அன்றைக்கு அதுதான் தேவை.

அந்த ஒலிவடிவம் அப்படியே மக்களின் அவலங்களோடு நின்றிருந்தால், நாமும் மிகுதி எங்கே என்று கேட்டிருக்க மாட்டோம்.

ஆனால் ஓரிரு ஆண்டுகள் கழித்து இரண்டு நிமிடங்களாக இருந்த ஒலிப்பதிவு ஐந்து நிமிடங்களாக வருகிறது. அதை ஒரு அமைப்பு தன்னுடைய சுய அரசியலுக்கு பயன்படுத்துகிறது. வேறொரு தரப்பு கேபி பற்றியும் அதில் இருக்கிறது என்று சொல்கிறது.

இந்த இடத்தில்தான் நாம் கேள்வி கேட்கத் தொடங்குகிறோம். இப்பொழுதாவது புரிகிறதா?

http://www.youtube.com/watch?v=O5Dg-V9Dt5k&feature=player_embedded இந்த ஒலி நாடா..நான் 2009ம்பதே கேட்டு விட்டன் நீங்கள் அப்ப கேக்காததுக்கு நான் ஒன்றும் செய்ய ஏலாது.....சூசை அண்ணா அப்பவே சொல்லி விட்டார் சீமான் அண்ணாவிடம் எல்லாத்தையும் குடுத்துட்டுப் போறோம் என்று...இந்த காணொளீயை சுண்டலிடம் கேலுங்கோ அவர் முதல் தரம் எப்ப கேட்டவர் என்று...சுண்டல் கேட்ட படியாய் தான் இதை இங்கை இணைத்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழத்தமிழனுக்குக் கிடைத்த ஒரு வரம்.

அவருடைய ஆதரவைப் பெற்று அவரூடாக இன்னும் தமிழக மக்களிடையே

விழிப்புணர்வுகளை ஊட்டி அவரின் அரசியல் பாதையில் ஈழத் தமிழர்களும் சமாந்தரமாகப்

பயணிக்கும் சந்தர்ப்பத்தில் காலம் கடந்தாலும் ஒரு நாள் சீமானின் எழுச்சியால்

ஈழ மக்களுக்கு தமிழக அரசியல் மாற்றத்தினூடாக நிச்சயமாக விடிவு கிடைக்கும் 

என்பது எனது கருத்து.

சர்வதேசம் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என தடை செய்ததன் பின்னணியில் 

இந்திய அரசியல் ஆழமாக ஊடுருவியிருந்தது.

இந்திய அரசியல் மாற்றம் தமிழகத்தினூடாக ஏற்படும் காலத்தில் 

சீமானின் அரசியல் செல்வாக்கு அங்கு பலமானதாக இருக்கும்.

மற்றும்படி சீமான் செய்யும் அரசியல் தீவிரவாதம் என்பதெல்லாம் வீண் விவாதங்கள்.

அன்று நாம் பார்த்த சீமான் தனிமனிதன் 

இன்று நாம் பார்க்கும் சீமான் தமிழக மக்களிடையே பலத்த எதிர்பார்ப்புக்களுடன்

வளர்ந்துவரும் ஒரு அரசியல்வாதி.

சீமானால் ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் தீங்கு வரப்போவதில்லை என்பதில் எனக்கு 

நிறையவே நம்பிக்கை உண்டு. 

இந்தப் பதிவையும் இது போன்ற இன்ன பல பதிவுகளையும் பார்க்கின்ற போது என் மனதில் எழும் ஒரு கேள்வியை மீளவும் இங்கே பதிகிறேன்.

தமிழீழ மக்களின் இன்னல்கள் களையப்பட வேண்டுமென்மதற்காக கடும் பிரயத்தனம் எடுத்து மிகப் பிரயாசையுடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற 'இன அபிமானிகள்' ஒரு சிலர் யாழ் களத்திலும் பிற இடங்களிலும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் வைப்பதில் தவறொன்றுமில்லை ஆனாலும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அடக்குமுறைகள் சிங்கள இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஏராளமான செய்திகள் களத்தில் பதியப்படுகின்றன. அவை குறித்த கருத்துப் பகிர்வுகள் இங்கே இடம்பெறுகின்றன.

ஆனால் அத்தகைய பதிவுகளில் வந்து இந்த நபர்கள் கருத்துக்கள் எதையுமே முன்வைத்ததை நான் காணவில்லை. ( இப்போது கேட்டால் அவற்றையும் கண்டிக்கிறோம் என்று ஒற்றைச் சொல்லில் பதிலளிப்பார்கள்)

மாறாக இது போன்ற தலைப்புகளில் புகுந்து தமிழ் மக்களின் ஆதரவு சக்திகளுக்கெதிரான விமர்சனங்களை பக்கம்பக்கமாக அள்ளி வீசுகிறார்கள்.

இதுவே இந்த நபர்கள் குறித்த சந்தேகத்தை பல கள உறவுகளிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

பின்வரும் விடயங்கள் குறித்தும் ஏராளமான பதிவுகள் களத்தில் பதியப்பட்டுள்ளன. இவை கண்ணில் படவில்லையா? அல்லது அவை தற்போதைய நிலையில் அவசியமான பிரச்சினைகள் அல்ல என்று இவர்கள் கருதுகிறார்களா?

உதாரணத்திற்குச் சில விடயங்கள்

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சிங்கள அரசின் நடவடிக்கைகள்

தமிழ் பெண்களைப் படையில் இணைத்தல் (ஆண்கள் இணைக்கப்படவில்லை)
 
உதயன் பத்திரிகை மீதான தாக்குதல்.

மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களில் கழிவு எண்ணெயுடன் சென்று நடத்தும் அராஜகங்கள்

சிங்களப் படையினராலும் அரசாலும் குடியேற்றப்பட்டு வரும் புத்தர்சிலைகள்

இப்படியான தலைப்புகளில் பக்கம் பக்கமாக கருத்தெழுத இவர்கள் வருவதில்லை.

தெளிந்த அரசியல் பார்வையும் இரவு பகல் பாராது தமிழ் மக்களின் விடிவிற்காகப் போராடும் குணமும் கொண்ட போராளிகளின் இந்த விடயங்கள் குறித்த கருத்துப் பகிர்வுகள் எங்களை வழிநடத்தும்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தி... தூங்கி கிடந்த தமிழகத்தை தட்டி எழுப்பின பெருமை சீமான் அண்ணாவுக்கே...காலப் போக்கில் நீங்கள் சொன்னது போல் சீமான் அண்ணாக்கு மக்கள் ஆதரவு கூடும்.... அந்த மனிதன் எங்களுக்காக எத்தனை தரம் ஜெயிலுக்கு போனவர் எத்தனை துன்பத்தை பட்டவர்..அவர போய் ஒரு சில பச்சோந்திகள் விமசிப்பது நல்லாவே இல்லை...அவர விமசிப்பவர்கள்...அவரை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்.....ஒரு ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு சீமான் அண்ணா நல்ல அழகாய் பதில் சொல்லி இருந்தார்..அது எல்லாம் இதுங்களுக்கு எங்கை தெரியப் போக்குது...நான் பெரிது நீ சிரிது என்று நினைக்கிர கூட்டத்தை :o

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவையும் இது போன்ற இன்ன பல பதிவுகளையும் பார்க்கின்ற போது என் மனதில் எழும் ஒரு கேள்வியை மீளவும் இங்கே பதிகிறேன்.

தமிழீழ மக்களின் இன்னல்கள் களையப்பட வேண்டுமென்மதற்காக கடும் பிரயத்தனம் எடுத்து மிகப் பிரயாசையுடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற 'இன அபிமானிகள்' ஒரு சிலர் யாழ் களத்திலும் பிற இடங்களிலும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் வைப்பதில் தவறொன்றுமில்லை ஆனாலும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அடக்குமுறைகள் சிங்கள இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஏராளமான செய்திகள் களத்தில் பதியப்படுகின்றன. அவை குறித்த கருத்துப் பகிர்வுகள் இங்கே இடம்பெறுகின்றன.

ஆனால் அத்தகைய பதிவுகளில் வந்து இந்த நபர்கள் கருத்துக்கள் எதையுமே முன்வைத்ததை நான் காணவில்லை. ( இப்போது கேட்டால் அவற்றையும் கண்டிக்கிறோம் என்று ஒற்றைச் சொல்லில் பதிலளிப்பார்கள்)

மாறாக இது போன்ற தலைப்புகளில் புகுந்து தமிழ் மக்களின் ஆதரவு சக்திகளுக்கெதிரான விமர்சனங்களை பக்கம்பக்கமாக அள்ளி வீசுகிறார்கள்.

இதுவே இந்த நபர்கள் குறித்த சந்தேகத்தை பல கள உறவுகளிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

பின்வரும் விடயங்கள் குறித்தும் ஏராளமான பதிவுகள் களத்தில் பதியப்பட்டுள்ளன. இவை கண்ணில் படவில்லையா? அல்லது அவை தற்போதைய நிலையில் அவசியமான பிரச்சினைகள் அல்ல என்று இவர்கள் கருதுகிறார்களா?

உதாரணத்திற்குச் சில விடயங்கள்

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சிங்கள அரசின் நடவடிக்கைகள்

தமிழ் பெண்களைப் படையில் இணைத்தல் (ஆண்கள் இணைக்கப்படவில்லை)

உதயன் பத்திரிகை மீதான தாக்குதல்.

மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களில் கழிவு எண்ணெயுடன் சென்று நடத்தும் அராஜகங்கள்

சிங்களப் படையினராலும் அரசாலும் குடியேற்றப்பட்டு வரும் புத்தர்சிலைகள்

இப்படியான தலைப்புகளில் பக்கம் பக்கமாக கருத்தெழுத இவர்கள் வருவதில்லை.

தெளிந்த அரசியல் பார்வையும் இரவு பகல் பாராது தமிழ் மக்களின் விடிவிற்காகப் போராடும் குணமும் கொண்ட போராளிகளின் இந்த விடயங்கள் குறித்த கருத்துப் பகிர்வுகள் எங்களை வழிநடத்தும்...

மணி இதுகளை பற்றி கதைச்சால்  அங்கை உள்ளவைக்கு ஏதாவது குடுக்கவேணும் உதவி  செய்யவேணும்.அதைவிட இந்த கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறேல்லையோ.  அதுதான் சீமானை பற்றி  பக்கம் பக்கமா எழுதிறம்.இது கூட விளங்காத அப்பாவி பிள்ளையா இருக்கிறீங்களே

சாத்திரி

ஒண்டை விட்டிட்டியள்!

இதுகளைப் பற்றி எங்கடை மனசிலை படுறதை எழுதினால் `அவையள்` கோவிப்பினம். பிறகு நாங்கள் படாத பாடு பட்டு பழசை எல்லாம்மறக்க பண்ணி சம்பாதிச்சு வைச்சிருக்கிற நல்ல பேர் என்னாகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே,

முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களையும் உள்ளடக்கி நோக்குகையில் ஈழத்தமிழர்களுக்கென்று சில எதிர்பார்ப்புகள் (இனவிடுதலை சார்ந்தது மட்டும்) தமிழக மக்களிடமிருந்தோ, அதன் அரசியல் தலைவர்களிடமிருந்தோ இருக்கிறது.

நீங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய மிக முக்கிய எதிர்பார்ப்பு விடயங்களை....

உதாரணமாக,

  • ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தமிழக அரசியல்வாதி யார்?
  • தமிழக தமிழர்களின் ஈழம் சார்ந்த ஆதரவு நிலை போதுமானதா?
  • 2009ல் தமிழக தமிழர்களின் நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
  • ஈழத்தமிழர்களுக்கு தமிழக தமிழர்களின் ஆதரவு தளம் தேவையா? இல்லையா?

இன்ன பிற விடயங்களை பட்டியலிட்டு, யாழ் களம் அனுமதிக்கும் பட்சத்தில் இங்கே ஒரு கருத்துக்கணிப்பை நடத்தலாமே?

ஒரு தெளிவு பிறக்குமில்லையா? :)

ஏன் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக அனைவரும் அல்லாட வேண்டும்?

கள உறவுகள் யாராவது இதனை முன்னின்று நடத்துமாறு வேண்டுகிறேன்.

நன்றி!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் அண்ணா நிறைய பேர் கள்ள Id வைச்சிருக்காங்க வந்து குத்துவாங்க அண்ணா.... இங்கு சில வெத்துவேட்டுகளின் கதையை விட்டு எமது தேசிய தலைவரே தெளிவா சொல்லி இருக்கார் தமிழக மக்களின் ஆதரவு என்பது என்றும் எப்பொழுதும்

எங்கேயும் ஈழத்தமிழர்களுக்கு வேண்டும் என்று அவருடைய அந்த ஆசையை விடவா இவர்களின் வாக்கு உங்களுக்கு

முக்கியமா இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் அண்ணா நிறைய பேர் கள்ள Id வைச்சிருக்காங்க வந்து குத்துவாங்க அண்ணா.... இங்கு சில வெத்துவேட்டுகளின் கதையை விட்டு எமது தேசிய தலைவரே தெளிவா சொல்லி இருக்கார் தமிழக மக்களின் ஆதரவு என்பது என்றும் எப்பொழுதும் எங்கேயும் ஈழத்தமிழர்களுக்கு வேண்டும் என்று அவருடைய அந்த ஆசையை விடவா இவர்களின் வாக்கு உங்களுக்கு முக்கியமா இருக்கு?

நீங்கள் சொல்கிறீர்கள்..மற்றவர்களின் நிலை தெரியவில்லையே திரு.சுண்டல்?

எனக்கென்னவோ திரு.பிரபாகரன் இப்பொழுது வந்தால்கூட, "எம்மை இந்த இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டாயே..?" என பலர் அவர்மீது பாயக்கூடும் என்றே தோன்றுகிறது. :lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய தமிழர்களை பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கின்றீர்கள்...... அதனால் தான் நாடற்று சுதந்திரமா தங்கள் ஊரில் தங்கள் தாயகத்தில் வாழ நாதியற்று நாடு நாட அலையுறான்( நான் உட்பட) இதுக்குள்ள பெரிய பெருமை வேற.... :D

இதுக்கே இப்பிடி எண்டா ஒரு நாடு கிடைச்சா எப்பிடி எல்லாம் அடிபடுவானுங்க என்று யோசிச்சு பாருங்க? அதனால சிங்களவனுக்கு அடிமையா வாழுறதே பெட்டெர்....

இல்லைனா இவனுங்களே ஒருத்தன ஒருத்தன அடிச்சு கடிச்சு குதறி கொண்ணுப்புடுவாங்க....

இப்ப புரிதா ஏன் அதிகமா ஜனனாஇயகத்த கொடுக்காமல் போராட்டம் நடைபெறும் போது ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டுடன் ஒரே இயக்கம் ஒரே கொள்கை என்று இருந்தார்கள் என்று.... நினைச்சு பாருங்க போராட்ட காலத்தில் அதிகமா ஜனனாயகத்த கொடுத்திருந்தா ஊருக்கு ஒரு இயக்கம் நாளுக்கு ஒரு

பேச்சு எனிட்டு திரிஞ்சிருப்பாங்க....

இலங்கை தமிழர்களை பொருத்தவரை சர்வாதிகாரம் தான் சரி அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்கிறீர்கள்..மற்றவர்களின் நிலை தெரியவில்லையே திரு.சுண்டல்?

எனக்கென்னவோ திரு.பிரபாகரன் இப்பொழுது வந்தால்கூட, "எம்மை இந்த இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டாயே..?" என பலர் அவர்மீது பாயக்கூடும் என்றே தோன்றுகிறது. :lol:

.

என்னாது தோன்றுதா????

யாழில் பல கருத்துக்களை தாங்கள் வாசிப்பதில்லை போல் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாணன் அண்ணா, பல இடங்களில் அல்ல, இரு இடங்களில். தான் நான் எனது கருத்தை எழுதினேன். :D

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் அவரது புலம்பெயர் கட்சித்தொண்டர்கள் என்று நீங்கள் சொன்னது உங்கள் கருத்து. :D நாங்கள் அவ்வாறான மனநிலையில் கருத்துகளை எழுதவில்லை. தமிழீழ விடுதலைக்காக தமிழக மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் அனைவர் முயற்சிகளையும் தான் வரவேற்கிறோம். "சீமான் அண்ணா உட்பட பலர்" என்ற பதத்தை நான் பயன்படுத்தியதை எனது கருத்தில் நீங்கள் பார்க்கலாம். :)

"சீமான் போன்றவர்களை ஆதரிக்கும் கருத்தாளர்கள் முன்வைக்கும் கருத்துகள்  யாழ்களத்தில் தீவிரவாதம் வளர்க்கப்படுகின்றது எனும் தோற்றப்பாட்டைக்கூட உருவாக்கலாம்" என்று நீங்கள் கூறியது நகைப்புக்கிடமானது. :icon_idea:

சீமான் அண்ணா ஈழத்தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற ஆராய்ச்சி எதற்கு? அவர் தமிழக மக்களை தமிழீழ ஆதரவாளராக மாற்றி வருபவர்களில் ஒருவர் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. தமிழக மக்களில் ஏற்படும் மாற்றம் தமிழகத்தை மாற்றும், அது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள். யார் அந்த புலம்பெயர் அரசியல்வாதிகள் என்றும் சொன்னால் நல்லாயிருக்கும். :icon_idea:

நீங்கள் எவ்வாறு எதிர்காலத்தை உறுதியாக கணிப்பிடுவீர்கள்?

இங்கு தனியே சீமான் அண்ணா இந்திய மத்திய அரசின் கொள்கைகளை மாற்றுவார் என்று நாங்கள் சொல்லவில்லை. மாணவர்கள் உட்பட பலர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒன்றிணையும் போது தமிழகத்தில் மாற்றங்கள் உருவாகும். இந்திய அரசியலையும் அது மாற்றக்கூடிய நிலைக்கு இட்டுச்செல்லவும் கூடும்.

தனி ஈழத்துக்காக, தமிழர் நலனுக்காக போராடுகின்ற  கட்சிகளை ஒன்றிணைக்கப்போவதாக மாணவர்களே கூறியுள்ளார்கள். போராடுவது, செயற்படுத்துவது அனைத்தும் தமிழகத்தில் நடைபெறும்போது குறைபிடிப்பதற்கு மட்டும் எம்மில் பலர் முயல்கிறோம்.

//சீமான் அண்ணா ஈழத்தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற ஆராய்ச்சி எதற்கு? அவர் தமிழக மக்களை தமிழீழ ஆதரவாளராக மாற்றி வருபவர்களில் ஒருவர் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. தமிழக மக்களில் ஏற்படும் மாற்றம் தமிழகத்தை மாற்றும், அது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.//
 
அது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படியானால் நடக்கலாம் நடக்காமல் விடலாம். அதாவது கேள்விக்குறியாக இருக்கும் ஒரு விடயத்திற்காகக் கோஷம்போடுபவருக்கு வக்காலத்து வாங்க நான் தயாராயில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் நல்லது.

தமிழகத்தின் ஆதரவு எமக்குத் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.   அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்து கொண்டே வந்திருக்கிறது.  அதற்கு சீமானுடைய செயற்பாடுகளும் பெரியளவில் பங்காற்றுகின்றன என்று நினைப்பதுதான் மகா தவறு. 
 
//அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள். யார் அந்த புலம்பெயர் அரசியல்வாதிகள் என்றும் சொன்னால் நல்லாயிருக்கும். //
 
துளசி, நான் குறிப்பிட்டிருப்பது புலம்பெயர் அரசியல்வாதிகளை அல்ல.  மாறாக, புலம்பெயர் தேச அரசியல்வாதிகளை.  அந்த வகையில், நான், கனடாவின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல்வாதிகளோடு தான் எமது தேச விடுதலை சம்பந்தமகாக தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருபவன். நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக இதற்கு மேல் இந்தக் களத்தில் அவர்கள் பெயர் குறிப்பிட்டு எழுத வேண்டிய கடப்பாடு எனக்கில்லை.
 
மேலே குறிப்பிட்டதைக் கூட ஒரு கள உறவுக்குத் தரவேண்டிய மரியாதைக்காகவே எழுதுகிறேன் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
 
உங்கள் குழந்தைப் பிள்ளைத்தனமான கேள்விக்குப் பதில் வேண்டுமானால், நீங்கள் எப்போதாவது கனடா வரும் பட்சத்தில் அறிவியுங்கள் ஒரு அரசியல்வாதியிடம் அல்ல பலரிடம் கூட்டிச் சென்று எனது கூற்றை நிரூபிக்கிறேன்.
 
//இங்கு தனியே சீமான் அண்ணா இந்திய மத்திய அரசின் கொள்கைகளை மாற்றுவார் என்று நாங்கள் சொல்லவில்லை. மாணவர்கள் உட்பட பலர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒன்றிணையும் போது தமிழகத்தில் மாற்றங்கள் உருவாகும். இந்திய அரசியலையும் அது மாற்றக்கூடிய நிலைக்கு இட்டுச்செல்லவும் கூடும்.//
 
துளசி, நீங்களே சொல்லாமல் சொல்கிறீர்கள் சீமானால் தனியாகச் செய்ய முடியாது என்று.  அவ்வாறான ஆளுமை இல்லாத ஒருவரை நாம் ஏன் கோபுரத்தில் வைக்க வேண்டும்?    மீண்டும் சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.  இவரது இந்தப் பிரச்சாராத்தால் வை.கோ. போன்றவர்களுக்கு இருக்கும் ஆதரவையும் இவர் மழுங்கடிக்கவே பார்க்கிறார்.
 
27236101501620531352912.jpg

27236101501620531202911.jpg
 
27236101501620531152911.jpg
 
இந்தப் படங்களைப் பார்த்த பின்னராவது முடிவெடுங்கள்.  நாம் எப்படியான தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்துவிடவேண்டுமென்று. 

எமது தலைவரின் பரமபக்தன், தான், என்று பிரச்சாரம் செய்து புலம்பெயர் மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அம்மக்கள் வாழும் நாடுகளிலும் ஒரிருவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வரும் நிலையைத் தான் சீமான் தோற்றுவிக்கிறார்.  
 
இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால், அரசியலுக்கு மட்டும் உங்களைப் புரிந்திருக்கிறது. 
 
சீமானின் விடயத்தில்"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது." என்றது தான் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் துளசி.

Edited by யாழ்வாணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.