Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மட்டுமல்ல.. உள்ளத்தில் உறுதியாக "நாம் தமிழர்.. நமக்கொரு நாடு வேண்டும் " என்று சொல்லுக்கு முன் செயலாற்றுபவர்கள்.. யாராக இருந்தாலும் அணிவகுக்கலாம். அது தவறே இல்லை. இதையே தலைவன் பிரபாகரனும் செய்தார்.!!!! :icon_idea:

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பல இளைய பேச்சாளரை உருவாக்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துக்கள். 

இப்படிப்பட்ட எழுச்சி யாரால் உருவாக்கப்பட்டது ...... தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது யார் என்று யோசித்து பார்த்தால் சீமானின் முக்கியத்க்துவம் புரியும்.  

எங்களுக்கு உதுகள் தேவையில்ல.. தேவை இதோ இது தான்.............. சீமான் அதை வழங்க முன்வந்தால்.. கம்மென்று கைதட்டி.. கூச்சல் அடிச்சிட்டு.. இருப்பம். அங்கால சம்பந்தனும் சுமந்திரனும்.. ஊரை ஏய்ச்சுக் கொண்டிருக்க கணக்குச் சரியா இருக்கும்..! இதையே நாம் இன்று முதன்மை மாற்றுக் கருத்தாக வலியுறுத்துகின்றோம். இதுவே சிங்களத்திடம் மட்டுமல்ல.. உலகம் பூராவும்.. நாம் அடிமை வாழ்வுக்கான உரிமை பெற்று வாழ உதவும். *****************

நியானி: சீண்டும் வரி தணிக்கை

Edited by நியானி

பலருடன் முரண்பட வேண்டிவந்தாலும் மிக கேவலமாக திட்டு கிடைத்தாலும் எனக்கு சரியெனபடுவதை எழுதவேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கு.

சீமானின் விடயம் மட்டுமல்ல இந்த தேசியம் என்று வேஷம் போட்டவர்கள் எமது மக்களையும் போராளிகளையும் எங்கு கொண்டுபோய் விட்டார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை .

மேலே ஒருத்தர் விமர்சனம் ஒன்று வைத்திருந்தார் கிளிநொச்சி விழுந்ததை எப்படி எழுதவேண்டும் என்று .நான் பி பி சி அல்லது சி சி என் செய்தியாளர் அல்ல நடந்ததை விமர்சித்து விபரமாக எழுத ,இறந்ததும் அழிந்ததும் எமது மக்கள் அப்போது கோபம் வராமல் வேறு எங்கு கோபம் வரவேண்டும்.திரும்ப திரும்ப சொல்ல சொல்ல மீண்டும் மீண்டும் பிழையை விட்டால் மொக்குகூட்டம் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது.

எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரித்தவர்களை விட அதை வைத்து ஆதாயம் தேட முனைந்த தமிழ்நாட்டு தலைவர்கள் தான் அதிகம் . தமிழ் நாட்டு மக்கள் எமக்கு செய்த உதவி எந்த ஒரு காலமும் மறக்கமுடியாதது.

குளத்தூர் மணி ,எஸ்.டி சோமசுந்தரம் ,வை கோ இப்படி பல தலைவர்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை.

எனக்கு சீமான் வேஷம் போடுவதாகவே தோன்றுகின்றது அதைதான் எழுதினேன் .வேசமா இல்லையா என காலம் தான் பலருக்கு புரிய வைக்கும் .

உண்மை தான் அர்ஜுன் அண்ணா. புலத்துப் புலிகளைப் பார்க்க நிலமை விளங்கக் கூடியதாக இருக்கிறது. 

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

....எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரித்தவர்களை விட அதை வைத்து ஆதாயம் தேட முனைந்த தமிழ்நாட்டு தலைவர்கள் தான் அதிகம் . தமிழ் நாட்டு மக்கள் எமக்கு செய்த உதவி எந்த ஒரு காலமும் மறக்கமுடியாதது.

குளத்தூர் மணி ,எஸ்.டி சோமசுந்தரம் ,வை கோ இப்படி பல தலைவர்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை....

இது நல்ல நோக்கத்தில், பாராட்டி எழுதப்பட்டதா.. இல்லை, கிண்டலுக்கு எழுதியதா?  :o 

சரி, உங்கள் எதிர்பார்ப்பின் படியே தமிழக மக்கள் சரியான தருணத்தில் எழுச்சிகொண்டோ, அதன் தலைவர்கள் உதவவில்லையென்றே வைத்துக்கொள்வோம். அடுத்து ஈழத்தமிழர்கள் என்ன செய்வதாக உத்தேசம்? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?  தமிழகத்தின் தார்மீக ஆதரவு ஈழ மக்களுக்கு தேவையில்லையா? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணக்க அரசியலில் உன்னதம் அடைய முடிவா? அப்படியொரு தீர்வுத் திட்டம் ஈழத்தவர்களிடம் உள்ளதெனில் யார், எங்கே, எப்பொழுது, எப்படி அளிக்கப் போகிறீர்கள்?

இல்லை, இது எங்கள் ஈழ நாட்டுப் பிரச்ச்னை, நாங்களே தீர்த்துக்கொள்வோமென நீங்கள் கருதினால், உங்கள் விடயத்தில் தமிழகத்தின் பங்கையும் அவர்களின் எல்லைக் கோட்டையும் வரையறுத்துக் கூறினால், தமிழகமும் சிறிது தெளிச்சி பெற்று, மிகக் கவனமாக இனி நடந்துகொள்ளும்.

திட்டத்தை விளக்குவீர்களா?

இந்தத் திட்டத்தையெல்லாம் சொல்லுமளவுக்கு இங்குள்ள எவருக்கும் லாயக்கில்லை.. அதனால் நீங்கள் குழம்பத் தேவையில்லை ராஜவன்னியன் அண்ணா.. :D சொல்ல வேண்டிய தேசியத் தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஈழவிடுதலை என்பது அந்த நிலத்தில் உள்ள தமிழ்மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை என்று.

அந்த தேசியத்தலைவரை என்றுமே ஏற்காத மற்றும் அன்று ஏற்று இன்று எற்காத,  சிலர்தான் இங்கே ஒலி எழுப்பிக்கொண்டிருப்பவர்கள். ஜீவா அப்படியல்ல.. அவர் சிறிது குழப்பத்தில் உள்ளார்.. தமிழக நிலை குறித்து மேலும் தெளிவு ஏற்படுத்தவேண்டிய பணி உங்களுடையது..

We want to hear straight from the horse's mouth! :D

  • கருத்துக்கள உறவுகள்
seemann.jpg fb
  • தொடங்கியவர்

இது நல்ல நோக்கத்தில், பாராட்டி எழுதப்பட்டதா.. இல்லை, கிண்டலுக்கு எழுதியதா?  :o

சரி, உங்கள் எதிர்பார்ப்பின் படியே தமிழக மக்கள் சரியான தருணத்தில் எழுச்சிகொண்டோ, அதன் தலைவர்கள் உதவவில்லையென்றே வைத்துக்கொள்வோம். அடுத்து ஈழத்தமிழர்கள் என்ன செய்வதாக உத்தேசம்? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?  தமிழகத்தின் தார்மீக ஆதரவு ஈழ மக்களுக்கு தேவையில்லையா? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணக்க அரசியலில் உன்னதம் அடைய முடிவா? அப்படியொரு தீர்வுத் திட்டம் ஈழத்தவர்களிடம் உள்ளதெனில் யார், எங்கே, எப்பொழுது, எப்படி அளிக்கப் போகிறீர்கள்?

இல்லை, இது எங்கள் ஈழ நாட்டுப் பிரச்ச்னை, நாங்களே தீர்த்துக்கொள்வோமென நீங்கள் கருதினால், உங்கள் விடயத்தில் தமிழகத்தின் பங்கையும் அவர்களின் எல்லைக் கோட்டையும் வரையறுத்துக் கூறினால், தமிழகமும் சிறிது தெளிச்சி பெற்று, மிகக் கவனமாக இனி நடந்துகொள்ளும்.

திட்டத்தை விளக்குவீர்களா?

தமிழ் நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை அனுபவித்ததன் விளைவுதான் அந்த நன்றி .பணம்,பொருள் ,இருப்பிடம் அத்தனையும் ஏனென்று கேட்காமல் தமிழன் என்ற ஒன்றிற்காக அள்ளி தந்தவர்கள்  அவர்கள் .இயக்க மோதல்களும் ராஜீவ் கொலையும் அதை அப்படியே திருப்பி போட்டுவிட்டது .

இன்று வந்திருக்கும் இந்த மாற்றம் எந்த ஒரு அரசியல்வாதியாலும் ஏற்படுத்தப்பட்டதல்ல.(அவர்களுக்கும் ஒரு சிறு பங்கு உண்டு ) எமக்கு நடந்த அவலத்தால் ஏற்பட்டது .தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் இது ஏற்பட்டுள்ளது .தமிழ் நாட்டில் தாக்கம் கொஞ்சம் அதிகம் .

சிறிலங்கா அரசு இறுதி போரில் செய்த அட்டூளியமும் அதை தொடர்ந்து இன்றுவரை அது தொடரும் அடாவடித்தனமும் தான் இன்று உலகம் எம்மை திரும்பி பார்ப்பதற்கு காரணம் .யுத்தம் முடிய சிறிலங்கா அரசு சரணடைந்த போராளிகளையும் மக்களையும் மனிதாபிமானமாக நடாத்தி தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் வைத்திருந்தால் இவை எதுவுமே நடைபெற்றிருக்க சாத்தியமில்லை .

அடுத்து திட்டம் பற்றியும் தமிழ் நாட்டின் பங்கு பற்றியும் கேட்டிருந்தீர்கள் ,இங்குதான் உங்கள் அறியாமை வருகின்றது ,ஏதோ தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் கையில் தான் எமது மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது என்ற எண்ணமே பிழை யானது.இலங்கையில் தமிழர்களுக்கு என  அரசியல் கட்சிகள்  இருக்கின்றன அவர்கள் அந்த மக்களுக்கான அரசியலை செய்கின்றார்கள் ,அங்கிருக்கும் மக்களே அது யாரெனவும் தீர்வு எதுவேனவும் தீர்மானிப்பார்கள் .

உதவி செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை குரல் கொடுங்கள் வேண்டாம் என்றவில்லை அரசியல் செய்யுங்கள் அதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள் .

குறிப்பு -தமிழ் நாட்டிலேயே எமக்கு இணையாக பல பிரச்சனைகள் இருக்கு(அணு உலை ,தண்ணீர் ) அதையோன்றும் தீர்கமுடியவில்லை நீங்கள் எங்கள் பிரச்னையை தீர்க்க போகின்றீர்கள் என்பது மிக வேடிக்கை நண்பரே .தேவை வரும் போது நாங்களும் உங்களுக்கு குரல் தருகின்றோம் தோழரே.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா போன்றவர்களின் எழுத்துக்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் தினமுரசில் பாத்தது தான்.... அதாவது பாராட்டுவது மாதிரி பாராட்டி விஷத்தை கக்குவது..... சோ அர்ஜுன் அண்ணாக்கு சொல்லிகொள்ளுவது புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள்....

மற்றது சீமான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் வெறும் 3 மில்லியன் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து சம்பாதிக்க தேவை இல்லை.....

75 மில்லியன் தமிழர்களிடம் அரசியல் நடாத்தினாலோ இல்லை ஜாதி அரசியல் நடத்தியோ இல்லை திரியுலகின் மூலமோ கோடி கோடியாக சம்பாதிக்கலாம்......

இப்பொழுது புலி எதிர்ப்பு ஆதரவாளர்களை உறுத்துவது சீமானின் வளர்ச்சியும் எழுச்சியும் ஆகவே அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு நட்பாசையில் எழுதி தள்ளிகின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

Seeman-su-7.jpg

Seeman-su-6.jpg

Seeman-su-5.jpg

இவை சுவிஸுக்கு வந்த போது எடுத்த படம். ஆயிரம் விண்ணாணம் கதைத்தாலும், எனக்கும், உங்களுக்கும், எல்லாருக்கும் புரியும் இந்தப் படங்கள் சொல்லும் சேதி.

அதை விட சீமானை விட அன்றிலிருந்து இன்று வரை குரல் கொடுக்கும் வைகோ,நெடுமாறன் முதல் திரைமறைவில் செயற்படும் குப்பன்,சுப்பன் வரை இருக்கும் போது சீமானுக்கு மட்டும் பிரச்சனை என்பதை காமடியாகத்தான் எடுக்க முடியும். அதிமுக, திமுக விலும் தான் முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், அதுக்காக அவர்களுமா இப்படி படம் காட்டிக்கொண்டு திரிகிறார்கள்?

பிரபாகரனுடன் சேர்ந்து எடுத்த படத்தைக் காட்டித்தான் சீமான் பிழைப்பு நடத்தும் போது குறிப்பிட்ட போராளி அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அறியாமை என்று சொல்வதை நினைத்து எங்கை போய் முட்ட? இல்லை பிரபலமையக் கூடிய அளவுக்கு அதுக்கு முன்னர்  சீமான் சினிமாவிலும் கூட கோலோச்சினா

இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சீமான் மட்டுமல்ல, இளையராஜா கனடாவுக்கு வந்தபோது, இதை விடப் பலர் பாதுகாப்புக்குச் செய்திருந்தனர். அவரை நெருங்கவே முடியாதளவு செய்தார்கள் என அறிந்து கொண்டிருந்தேன்.

இதில் சீமானின் ஏற்பாடு இருக்கமா என்பது ஐயமே. தவிர, இப்படிச் சீமானுக்கு ஏற்பாடு செய்திருப்பினும் அதில் தவறு கிடையாது.

ஏனெனில் சீமான் தொடர்பான பாதுகாப்பு அக்கறை என்பது, அண்ணன் முத்துக்குமார் எவ்வித பாதுகாப்பும் இன்றி நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்டதின் பின்னர் ஏற்படுத்தப்பட்டது. உண்மையில் நாம் தமிழரின் பின்னணியில் அதன் வளர்ச்சிக்குத் துணை நின்றவர் அண்ணன் முத்துக்குமார். அவர் ஒரு காலத்தில் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலாக இருந்தவர் மட்டுமல்ல, இறுதி யுத்தத்தின் போது, மக்களுக்காக உணவு அனுப்ப கடுமையாக உழைத்தவர். ஆனாலும் கருணாநிதி அரசின் சதியும், பறிப்பாலும் அது முழுமையாகச் சென்றடையவில்லை.

அதன் பின்பு நாம் தமிழரின் வளர்ச்சியில் முத்துக்குமார்  பணி அளப்பெரியது. சீமான் கூட இவரையே மதித்தார். அவரின் சொல்லுக்கு அமைவாகவும் இயங்கினார்.  ஆனால் எதிரிகளின் சதியால் அவரை இழந்தோம். அந்த நிலமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்

மற்றும்படி சிங்க நடையாக, அல்லது எந்த நடையானாலும் யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் சொன்ன வைகோவுக்கும் இப்படிப் படையணி வைத்திருக்கின்றார். வைகோவின் பாதுகாப்புக்கு அவர்கள் தான் கூட நிற்பார்கள். இது ஒருவகை மக்களின் ஆதரவைப், பிரமிப்பை ஏற்படுத்துவதற்கான செயல்.

ஒரு காலத்தில் புலிக்கொடியே தமிழகத்தில் பிடிக்க முடியாத நிலமையை மாற்றி, தலைவர் படத்தையும், மாவீர்ரகளையும் எல்லோர் மனதிலும் கொண்டு வரச் செய்தவர்களில் சீமானின் பங்கு முக்கியமானது. இன்று வரை அவர் தலைவர் படத்தை தன் கட்சியின் கொடியில் போடுவதற்குக் காரணம், அது பாவித்தால், ஆதரித்தால் இந்தியாவில் யாராவது குற்றம் என்று நினைக்கின்ற மக்களின் மனங்களில் பயத்தை நீக்குவதற்காக.

என்னுமொன்று, நாம் தமிழரின் தலைவராக தேசியத்தலைவரையே அவர்கள் சொல்லுகின்றனர். சீமான் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே.  அதனால் தான் சோத்துப் பார்சலுக்கு இப்படி ஒரு கடுப்பு....

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை  நோக்கி   கைகாட்ட இங்கு  எவருக்கும்  அருகதை கிடையாது

அவர் எமக்காக செலவளிக்கும் நேரத்தில் ஒரு துளியைக்கூட இங்கு எழுதுபவர்கள் எமது மக்களுக்காக செலவளிப்பது கிடையாது.

சீமான் வருமானத்துக்காக செய்கின்றார் என்று சொல்பவர்கள்

எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை இங்கு எழுதவும்.

  • தொடங்கியவர்

டக்கிலசை  நோக்கி   கைகாட்ட இங்கு  எவருக்கும்  அருகதை கிடையாது

அவர் எமக்காக செலவளிக்கும் நேரத்தில் ஒரு துளியைக்கூட இங்கு எழுதுபவர்கள் எமது மக்களுக்காக செலவளிப்பது கிடையாது.

டக்கிளஸ்  வருமானத்துக்காக செய்கின்றார் என்று சொல்பவர்கள்

எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை இங்கு எழுதவும். :icon_mrgreen:

Edited by arjun

இப்படி கேட்டீர்கள் என்றால் அவர்கள் கூசாம நாலு பொய்யை எழுதிவிட்டுப் போவார்கள் விசுகு அண்ணா. :)

இப்படியான தலைப்புக்களில் மாதுகள்.. சிலர்.. அளிக்கும் கருத்துகள்.. விருப்பு வாக்குகளை வாய் பார்க்கின்ற போது.. தலைசுற்றுகிறது..! எத்தனை வகை மனிதர்களை பிரபாகரன் என்ற ஒரு நாமம்.. இணைத்து வைத்திருந்துள்ளது என்பதையும் இன்று அத்தனை வேடதாரிகளும் வேடம் கலைப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது..! நம்மவர்களே இப்படி இருக்கும் போது..????! :):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசை  நோக்கி   கைகாட்ட இங்கு  எவருக்கும்  அருகதை கிடையாது

அவர் எமக்காக செலவளிக்கும் நேரத்தில் ஒரு துளியைக்கூட இங்கு எழுதுபவர்கள் எமது மக்களுக்காக செலவளிப்பது கிடையாது.

டக்கிளஸ்  வருமானத்துக்காக செய்கின்றார் என்று சொல்பவர்கள்

எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை இங்கு எழுதவும். :icon_mrgreen:

உங்கள் மதிப்பை  நீங்களே சொல்கிறீர்கள்

டக்லசு மாமா எனது தொகுதியில் இருப்பவர்

அவர் என்ன  செய்கின்றார்  என்று உங்களைவிட எனக்குத்தெரியும்

அத்துடன் 7 வாக்கோடு பாராளுமன்றம் சென்று அமைச்சராகி அதிசயத்தில் இடம் பெற்றவர் அவர்.

அவருக்கு  வக்காலத்து வாங்குவதன் மூலம் தமிழருக்கு என்ன  செய்யப்போகின்றீர்கள் என்பதை சொன்னதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
கொள்கைகளை வகுப்பதோடும் பரப்புரை செய்வதோடும் மட்டுமல்லாது அதை செயலில் காட்டவேண்டும் என்ற எங்கள் தேசிய தலைவரின் வரிகளை முதலில் சொல்லிக்கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் எங்களுக்கு இட்ட கொள்கை விதிப்புகள் என்ன தெரியுமா...

தொடர்-1:
*மது,புகை பிடித்தல்,போதை பாக்கு & போதை பொருள்களை அறவே தொட கூடாது.
ஏனென்றால், இவைகள் நம்உணர்வை மழுங்க செய்துவிடும்.
தொடர்-2:
*சாதி,மத உணர்வுகள் அறவே இருக்க கூடாது.
'நான் தமிழன்' என்னும் பெருமையும்,செரு க்கும் மட்டுமே இருக்க வேண்டும்.
தொடர்-3:
*'இந்தியன்','திராவிடன்' எனும் மாயையிலிருந்து விடுபட வேண்டும்.
சாதி.மத அமைப்புகளில் கட்டாயம் இணையவோ,அதனை ஆதரிக்கவோ கூடாது.
தொடர்-4:
*தேசிய தலைவர் அவர்களை தவிர,வேறு எவரையும், 'தலைவர்' என ஒரு போதும்
அழைக்கவோ,மனதில் நினைக்கவோ கூடாது.
தொடர்-5:
*சீமானை, 'தலைவர்' என ஒரு போதும் அழைக்க கூடாது.
'அண்ணன்' என்றோ,மூத்தோர் 'தம்பி' என்றோ உறவு முறையில் தான் அழைக்கவேண்டும்.
தொடர்-6:
*தேசிய தலைவரையோ, 'புலிகள்' எனும் மாவீரர்களையோ,எவ ருடனும் ஒப்பிட்டு பேச கூடாது.
அவர்களை ஒரு போதும் விமர்சிக்க கூடாது.
தொடர்-7:
*நடிகர்,விளையாட்டு வீரர்களை ,'தலைவர்' என முன்னிறுத்தி பேச கூடாது.
ஏனென்றால்,இவை 'தமிழன்' எனும் உணர்வை சிதைக்கும்.
தொடர்-8:
*தேசிய தலைவர்,போராளிகள ்,புரட்சியாளர்க ள் படமிட்ட சீருடை, கருநிற உடை
ஏதேனும் ஒன்றுடன் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
தொடர்-9:
*நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களில்,பங்கெடுக்கும்
பொது,குடும்பத்த ினருடனும்,நண்பர ்களுடனும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தொடர்-10:
*கட்சியின் எந்த நிகழ்வையும் மாவீரர்களுக்கு அகவணக்கம், வீரவணக்கம்
செலுத்தி,உறுதிமொழி ஏற்ற பின்னரே துவங்க வேண்டும்.
தொடர்-11:
*கட்சியின் கொடியை தலையில் சுற்றுவதோ,கைகளி ல் கட்டுவதோ அறவே
கூடாது.கொடியை கைகளில் ஏந்தி மட்டுமே நிற்க வேண்டும்.
தொடர்-12:
*நாம் தமிழர் போராளிகள், உணர்வாளர்களை 'சார்' என்று அழைக்காமல்,'தோழ ர்'
என்றோ.'அய்யா' என்றோ அழைக்க வேண்டும்.
தொடர்-13:
*நாம் தமிழர் போராளிகள்,கையெழ ுத்தை தமிழிலேயே இட வேண்டும்.
நம் தாய்மொழியில் ,நம்கையெழுத்தை இடுவது தான் பெருமை.
தொடர்-14:
*அலைபேசியில் பேச துவங்கும் போது கட்டாயம் 'ஹலோ' எனும் வார்த்தையை
தவிர்த்து,'வணக்கம்' என்றே துவங்க வேண்டும்.இது மிக அவசியம்.
தொடர்-15:
*தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பெயரை சொல்லாமல்,'தேசி ய தலைவர்' என்றோ,
'ஈழத்து அண்ணன்' என்றோ அழைக்க வேண்டும்.
தொடர்-16:
*அன்றாடம் பயன்படுத்தும்,'தேங்க்ஸ்','சா ரி' என்பதனை முற்றிலும்
தவிர்த்து,'நன்றி','மன்னி யுங்கள்'என்பவைகளையே பயன்படுத்த வேண்டும்.
தொடர்-17:
*நம் கட்சி தோழர்களிடம் பேசும் போது,கட்டாயம் பிற மொழி கலப்பு
இல்லாமல்,தமிழில ேயே உரையாட வேண்டும்.
தொடர்-18:
*அலைபேசி எண்ணை, தமிழில்தான் பிறரிடம் கூற வேண்டும்.
கூறும்போது ,'பூஜ்யம்' என்று சொல்லாமல்,'சுழியம்' என சொல்ல வேண்டும்.
தொடர்-19:
*ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது , பிற மொழி கலப்பை தவிர்த்து, தமிழிலேயே
உரையாட வேண்டும்.
அது,இரவு 10-11மணியாக கூட இருக்கலாம்.
தொடர்-20:
*வாரம் ஒரு முறையாவது கட்டாயம் 'தமிழர்களின் புனித நூல்' திருக்குறளை
படிக்க வேண்டும்.
அது, நம்மை வழி நடத்தி செல்லும்.
தொடர்-21:
*"செயலே எனக்கு பிடிக்கும்" என்ற நம் தேசிய தலைவரின் கூற்று போல,நம்
உணர்வையெல்லாம் செயலிலே காட்ட வேண்டும்.
தொடர்-22:
*மாவீரர்கள்,தமி ழ்த்தேசிய போராளிகள்,புரட்சியாளர்கள் ஆகியோரின் நினைவு
நாள் & பிறந்த நாளை எழுச்சியோடு நினைவு கூற வேண்டும்.
தொடர்-23:
*நாம் தமிழர் போராளிகள்,மேடை ஏறி பேச ஒரு போதும் தயங்க கூடாது.
இனத்தின் விடியலுக்காக முழங்க வேண்டியது நம் கடமை.
தொடர்-24:
*நாம் தமிழர் போராளிகள்,சிறை செல்ல ஒரு போதும் அஞ்ச கூடாது.
இனத்தின் விடியலுக்காக சிறை செல்வதே நமக்கு பெருமை.
தொடர்-25:
*ஏர்டெல்,தினமலர் போன்றவைகளை கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.
நம் இனத்திற்கு எதிராக எவன் நின்றாலும் ,அவனை தூக்கி எறிவோம்.
தொடர்-26:
*நம் கட்சி தோழர்கள்,பேச்சா ளர்,எழுத்தாளர்,சிந ்தனையாளர்,செயல்வீரர் என
பல்வேறு கோணங்களிலும் பரிணமிக்க வேண்டும்.
தொடர்-27:
*நம் கட்சி தோழர்கள், ஒரு போதும் வன்முறை பாதைக்கு செல்ல கூடாது.
ஆனால்,ஆயுதம் ஏந்தி போராடவும் தயாராக இருக்க வேண்டும்.
தொடர்-28:
*நம் கட்சி தோழர்கள், பிறருக்கு 'முன்னோடியாக', பெண்களை மதித்து போற்ற
வேண்டுமே தவிர,கேலி,கிண்ட ல்,ஒருபோதும் செய்ய கூடாது.
தொடர்-29:
*நம் கட்சி தோழர்கள்,பிறரின் உடல் குறையை வைத்தோ, பிறரின் உடல் ஊனத்தை
வைத்தோ கேலி,கிண்டல் செய்கிற வேலைகளில் ஈடுபட கூடாது.
தொடர்-30:
*நம் கட்சி தோழர்கள்,கட்சி பணிகளிலும்,சமுதாய பணிகளிலும் ஈடுபடும் போது
,கடமைக்கு செய்யாமல்,அர்ப் பணிப்புடன் செயல்பட வேண்டும்.
தொடர்-31:
*பேசுகிற போதும்,எழுதுகிற போதும் வடமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
ஆரியர்களின் மொழி,தமிழர்களாகிய நமக்கு எதற்கு..?
தொடர்-32:
*நம் கட்சி நிகழ்வுகளுக்கு பதாகைகள் அடிக்கும்போது ,தேசிய தலைவரின்
படத்துடன்,புரட் சி மொழிகளும் அவசியம் இடம் பெற வேண்டும்.
தொடர்-33:
*பதாகைகளில்,சீமான் படம் இடும்போது,எழுச் சியோடு கையை உயர்த்தியுள்ள
படங்களையோ,ஆவேசமாக பேசுகிற படங்களையோ இடவேண்டும்.
தொடர்-34:
*நம் கட்சி தோழர்கள், பிறருக்கு முன்னோடியாக,மூடநம்பிக்கைகளை
உடைத்தெறிந்து, பெரியார் காட்டிய பகுத்தறிவு வழியில் செல்ல வேண்டும்.

இதில் சொல்லப்படிருப்பதை அதிகபட்சம் கடைபிடிக்கும் தம்பிகளில் நானும் ஒருவன். இன்னும் சொல்லிக்கொண்டே போவதைவிட வீண்விமர்சனங்களை கண்டுகொள்ளாது 2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
942393_450258478393310_642663319_n.jpg
 
நன்றி முகநூல்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கேட்டீர்கள் என்றால் அவர்கள் கூசாம நாலு பொய்யை எழுதிவிட்டுப் போவார்கள் விசுகு அண்ணா. :)

இப்படியான தலைப்புக்களில் மாதுகள்.. சிலர்.. அளிக்கும் கருத்துகள்.. விருப்பு வாக்குகளை வாய் பார்க்கின்ற போது.. தலைசுற்றுகிறது..! எத்தனை வகை மனிதர்களை பிரபாகரன் என்ற ஒரு நாமம்.. இணைத்து வைத்திருந்துள்ளது என்பதையும் இன்று அத்தனை வேடதாரிகளும் வேடம் கலைப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது..! நம்மவர்களே இப்படி இருக்கும் போது..????! :):rolleyes:

இங்கு நடக்கும் தாக்குதல்களைப்பார்க்கும்போது

பிரபாகரன் தான் எமது கடைசித்தலைவன்  என்பது தெரிகிறது. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

944770_132850336907579_5901906_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு இந்த காணொளிகள் போதும் என்று நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்திருக்கும் இந்த மாற்றம் எந்த ஒரு அரசியல்வாதியாலும் ஏற்படுத்தப்பட்டதல்ல.(அவர்களுக்கும் ஒரு சிறு பங்கு உண்டு ) எமக்கு நடந்த அவலத்தால் ஏற்பட்டது .தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் இது ஏற்பட்டுள்ளது .தமிழ் நாட்டில் தாக்கம் கொஞ்சம் அதிகம் .

சிறிலங்கா அரசு இறுதி போரில் செய்த அட்டூளியமும் அதை தொடர்ந்து இன்றுவரை அது தொடரும் அடாவடித்தனமும் தான் இன்று உலகம் எம்மை திரும்பி பார்ப்பதற்கு காரணம் .யுத்தம் முடிய சிறிலங்கா அரசு சரணடைந்த போராளிகளையும் மக்களையும் மனிதாபிமானமாக நடாத்தி தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் வைத்திருந்தால் இவை எதுவுமே நடைபெற்றிருக்க சாத்தியமில்லை .

இதில் சிவப்பில் இடப்பட்டதற்கு மட்டும்

இன்று தமிழகத்தில் நடக்கும் போராட்டம்

அது மாணவர்கள் போராட்டம் வரை

அவலத்தால் வந்தது

அடாவடித்தனத்தால் வந்தது என்றால்

ஏன் அவர்கள் வேறு தலைமைகளையோ சின்னங்களையோ தலைவர்களையோ எடுத்தக்கொள்ளாது புலிகளையும் புலிக்கொடியையும் எடுத்து முன் செல்கிறார்கள்.?????

அடுத்து திட்டம் பற்றியும் தமிழ் நாட்டின் பங்கு பற்றியும் கேட்டிருந்தீர்கள் ,இங்குதான் உங்கள் அறியாமை வருகின்றது ,ஏதோ தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் கையில் தான் எமது மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது என்ற எண்ணமே பிழை யானது.இலங்கையில் தமிழர்களுக்கு என  அரசியல் கட்சிகள்  இருக்கின்றன அவர்கள் அந்த மக்களுக்கான அரசியலை செய்கின்றார்கள் ,அங்கிருக்கும் மக்களே அது யாரெனவும் தீர்வு எதுவேனவும் தீர்மானிப்பார்கள் .

இப்படி அந்த தலைவர்களோ மக்களோ  ஒரு   போதும்  சொன்னதில்லையே

ஓடி ஓடி அவர்களை  சந்திக்கத்தானே  செல்கிறார்கள்???

உதவி செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை குரல் கொடுங்கள் வேண்டாம் என்றவில்லை அரசியல் செய்யுங்கள் அதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள் .

அதெப்படி நீங்கள் சொல்வதை  எல்லாம்  செய்யவேண்டும்

ஆனால் அவர்களாச்செய்ய  உங்கள் அனுமதி  வேண்டும்???

குறிப்பு -தமிழ் நாட்டிலேயே எமக்கு இணையாக பல பிரச்சனைகள் இருக்கு(அணு உலை ,தண்ணீர் ) அதையோன்றும் தீர்கமுடியவில்லை நீங்கள் எங்கள் பிரச்னையை தீர்க்க போகின்றீர்கள் என்பது மிக வேடிக்கை நண்பரே .

தேவை வரும் போது நாங்களும் உங்களுக்கு குரல் தருகின்றோம் தோழரே.

********************************

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

943589_453009144792747_1890168036_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சீமான் மட்டுமல்ல, இளையராஜா கனடாவுக்கு வந்தபோது, இதை விடப் பலர் பாதுகாப்புக்குச் செய்திருந்தனர். அவரை நெருங்கவே முடியாதளவு செய்தார்கள் என அறிந்து கொண்டிருந்தேன்.

இதில் சீமானின் ஏற்பாடு இருக்கமா என்பது ஐயமே. தவிர, இப்படிச் சீமானுக்கு ஏற்பாடு செய்திருப்பினும் அதில் தவறு கிடையாது.

ஏனெனில் சீமான் தொடர்பான பாதுகாப்பு அக்கறை என்பது, அண்ணன் முத்துக்குமார் எவ்வித பாதுகாப்பும் இன்றி நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்டதின் பின்னர் ஏற்படுத்தப்பட்டது. உண்மையில் நாம் தமிழரின் பின்னணியில் அதன் வளர்ச்சிக்குத் துணை நின்றவர் அண்ணன் முத்துக்குமார். அவர் ஒரு காலத்தில் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலாக இருந்தவர் மட்டுமல்ல, இறுதி யுத்தத்தின் போது, மக்களுக்காக உணவு அனுப்ப கடுமையாக உழைத்தவர். ஆனாலும் கருணாநிதி அரசின் சதியும், பறிப்பாலும் அது முழுமையாகச் சென்றடையவில்லை.

அதன் பின்பு நாம் தமிழரின் வளர்ச்சியில் முத்துக்குமார்  பணி அளப்பெரியது. சீமான் கூட இவரையே மதித்தார். அவரின் சொல்லுக்கு அமைவாகவும் இயங்கினார்.  ஆனால் எதிரிகளின் சதியால் அவரை இழந்தோம். அந்த நிலமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்

மற்றும்படி சிங்க நடையாக, அல்லது எந்த நடையானாலும் யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் சொன்ன வைகோவுக்கும் இப்படிப் படையணி வைத்திருக்கின்றார். வைகோவின் பாதுகாப்புக்கு அவர்கள் தான் கூட நிற்பார்கள். இது ஒருவகை மக்களின் ஆதரவைப், பிரமிப்பை ஏற்படுத்துவதற்கான செயல்.

ஒரு காலத்தில் புலிக்கொடியே தமிழகத்தில் பிடிக்க முடியாத நிலமையை மாற்றி, தலைவர் படத்தையும், மாவீர்ரகளையும் எல்லோர் மனதிலும் கொண்டு வரச் செய்தவர்களில் சீமானின் பங்கு முக்கியமானது. இன்று வரை அவர் தலைவர் படத்தை தன் கட்சியின் கொடியில் போடுவதற்குக் காரணம், அது பாவித்தால், ஆதரித்தால் இந்தியாவில் யாராவது குற்றம் என்று நினைக்கின்ற மக்களின் மனங்களில் பயத்தை நீக்குவதற்காக.

என்னுமொன்று, நாம் தமிழரின் தலைவராக தேசியத்தலைவரையே அவர்கள் சொல்லுகின்றனர். சீமான் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே.  அதனால் தான் சோத்துப் பார்சலுக்கு இப்படி ஒரு கடுப்பு....

நான் இந்தத் தலைப்பில் கருத்தெழுவதில்லை என்று அன்புறவு ஒருவரிடம் சொல்லி இருந்தேன்.

இருந்தும் என் கருத்தை மேற்கோள் காட்டியதால் பதிலிடுகிறேன். வண்ணமிட்ட குறிப்புக்களை சரியா என்று பாருங்கள், நான் இடம் மாறி வந்திட்டனோ என்று திகைச்சுப் போனேன், மற்றும் படிக்கு சில நதி மூலம், ரிஷி மூலம் என்ன என்று எனக்குத் தெரியும் ஆனால் அவை எழுதுவதால் ஆகப் போவதும் எதுவும் இல்லை, ஆகவே இந்தத் திரியில் மேலும் கருத்தாடுவதைத் தவிர்க்கிறேன் . :icon_idea:

 வண்ணமிட்ட குறிப்புக்களை சரியா என்று பாருங்கள், நான் இடம் மாறி வந்திட்டனோ என்று திகைச்சுப் போனேன்,

http://mullivaikkalmay18.blogspot.ca/2011/02/blog-post_3504.html

http://tamilthesiyam.blogspot.ca/2011/03/blog-post_6138.html

http://tamilthesiyam.blogspot.ca/2011/02/blog-post_3312.html

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=48948

நான் இந்தத் தலைப்பில் கருத்தெழுவதில்லை என்று அன்புறவு ஒருவரிடம் சொல்லி இருந்தேன்.

இருந்தும் என் கருத்தை மேற்கோள் காட்டியதால் பதிலிடுகிறேன். வண்ணமிட்ட குறிப்புக்களை சரியா என்று பாருங்கள், நான் இடம் மாறி வந்திட்டனோ என்று திகைச்சுப் போனேன், மற்றும் படிக்கு சில நதி மூலம், ரிஷி மூலம் என்ன என்று எனக்குத் தெரியும் ஆனால் அவை எழுதுவதால் ஆகப் போவதும் எதுவும் இல்லை, ஆகவே இந்தத் திரியில் மேலும் கருத்தாடுவதைத் தவிர்க்கிறேன் . :icon_idea:

சொன்னது சரி!

முத்துக்குமாரன் என்பது தமிழகத்தில் ஒருவரின் பெயர் மட்டுமல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி அண்ணா& மணிவாசகன் அண்ணா.

தவறுக்கு வருந்துகிறேன். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.