Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்-போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் epdp தொடர்பான செய்திகளை யாழில் போடுவதே தப்பு நன்றி ரதி நல்ல விடையங்களுக்காக குரல் கொடுப்பதற்கு....

  • Replies 71
  • Views 4.4k
  • Created
  • Last Reply

யாழ் போன்ற நாகரீகமான தளத்தில் ஒட்டுக்குழு என்று தலைப்பிட்ட பதிவை கொண்டு வந்து போட்டதே தப்பு

இதில் எது அநாகரிகமானது. 

1.மற்றுக்கருத்துக்கள் தம்மைத்தாம் கருத்து எழுதியே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளி அதேநேரம் எந்த பக்கம் எழுதலாம் என்றதை திடமாக தீர்மானிக்க இயலாத நிலையில் இருக்கும் செய்திகளைப் பதிவது அநாகரீகமா?

2. paramilitary  group என்று சர்தேச செய்திகளில், ஐ.நா அறிக்கைகளில் குறிப்படப்படும் EPDP யை இராணுவ ஒட்டுக்குழு என்று மொழி பெயர்ப்பது அநாகரிகமா?

3. அல்லது அவர்கள் செய்யும் தொழிலுக்கு paramilitary groupe பென்று ஆங்கிலத்தில் கூறிப்பிட்டிருந்தால்தான் அது நாகரிகமாக இருக்கும்.(உ+ம் Doctor)  அதை தமிழில் கூறுவதால் அது அநாகரிகமாக இருக்கிறதா(உ+ம் பரியாரியார்)?

4. அல்லது இது ஒரு அரசசெயல்ப்பாடகத்தான் இருக்கும்(அதாவது குத்தியை வழிக்கு கொண்டுவரும் முயற்சி மட்டுமே), என்றும் எனவே புலம் பெயர்  தேசிய வாதிகள் இதில் தலையிட்டு அரசுக்கும் EPDP க்கும் நிரந்த பிழவு வர வழி வகுக்கத்தக்க வகையில் இந்த செய்தியை பதிந்தது அநாகரிகமா? 

5.ஒரு புறம் குத்தி, இன்னொரு புறம், அரசு, மற்றய புறம் போரினால் தாக்கப்பட்ட   மக்கள், இந்த மூன்றையும் மாற்றுக்கருத்துக்கள் ஒன்றாக காட்ட முயலும் போது, மூன்றையும் பிரித்து வைக்கத்தக்கத்தாக காணப்படும் செய்தியை போடுவது அநாகரீகமா?.

6.குத்தி கூட்டம் செய்யும் கொடுமைகளை பட்டியல் போட்ட செய்தியதை பதிந்தது அநாகரீகமா?

யாழின் தரம் எத்தகையது என்றும் அதற்கு எந்த வழியில் இந்த செய்தி அநாகரீகத்தை கொண்டு வருகிறது என்பதை விளக்கமாக எழுத முடியுமா? யாழில் நாகரீகமில்லாத செய்தி பதியப்படுவது இதுதான் முதல் தடைவையா. இதனால்த்தான் செய்தி பதியப்படுவதில் யாழ் நாகரீகம் பெற்றிருக்கா?

காதலி ஏதோ பெற்றொருடன் நடந்த சண்டைகளின்  கோபத்தில் கேட்டுவிட்டாள்; அவள் கேட்டாள் என்பதற்காக காதலியின் அருமையான பெற்றர்கள் என்ற உணர்வில்லாமல் அவர்களின் கண்களைத்தோண்டி கொலை செய்யும் கறடி மிருகங்களான இளம் தறுதலைகளின் செய்திகள்  யாழின் தொர்டந்த விசாரணைக்கு தோதான திரிகளா? அதில் பலரும் விவாதிக்கும் போது யாழுக்கு நாகரீகம் கணக்க இருக்கு என்று நினைப்பா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில நான் எழுதின பதிலுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா :o  இன்னும் எத்தனை பேர் வரப் போயினமோ :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்ததால் மட்டும் சொந்த  நாட்டுப் பிரச்சனைகளைப் பற்றியோ 

அல்லது அங்கு நடக்கும் அடக்குமுறைகளைப் பற்றியோ மக்களிடம் கப்பம் கேட்கப்படும் 

நிலையைப் பற்றியோ பேசுவதற்கான தகுதியைப் புலம்பெயர்ந்த அவர்கள் இழந்துவிடுகின்றார்கள் என்ற  கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து.

இராணுவத்தினாலும் அவர்களுடன் ஒட்டி வாழும் தமிழ் இனவிரோதிகளினாலும்

ஆயுதத்தினால்  அடக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களுக்காக  நாம் தான்

முதலில் குரல் கொடுக்கவேண்டும்.

உலகத்தின் எந்த மூலையில் தான்  இருந்தாலும் ஈழத்தில் இருக்கும்

தனது சொத்துக்கள் சிங்கள இனவாதிகளினாலும் ஒட்டுக்குழுக்களாலும் 

அபகரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அவன் குரல் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது

என்ன பண்ணாடை ஸ்பெசல் பெர்மிஷன் பெற்று வந்திருக்கிறியள் போல உடனையே நிர்வாகம் அனுமதி கொடுத்து விட்டது :blink::D

வணக்கம் நவரத்தினம்.

புதிதாக இணைந்து கொள்பவர்கள் அன்றே பதில் எழுத முடியும் என விதி மாற்றப்பட்டு பல நாட்களாகின்றது. அவர்களால் புது திரி திறக்க முடியாது, பச்சை குத்த முடியாது மற்றும் நாற்சந்தி பகுதியை பார்க்க முடியாது போன்ற கட்டுப்பாடுகள்தான் இருக்கு.

நன்றி

அனைவரும் டக்கிலஸ் என்ன செய்தார் என்று தான் சொல்கிறார்களே தவிர, தமிழ் மக்களின் காவலாளிகள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிகொள்பவர்கள் என்ன செய்தார்கள் என்று கூறவில்லை? இருந்தால் தானே சொல்லுவதற்கு :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உள்ள ஒரே தெரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்கு போவதுதான்.. கல்லடி ... மற்றும் உட்டாலங்கடி பேச்சு வார்த்தைக்கு போகாமை(அங்கிட்டு கூல் போனால் ரிங்குஸ் மற்றும் புரியாணி போடுவார்கள் இது அவர்களுக்கு பிரியவில்லை..) கூத்தமைப்பு ஒழுங்காக "டக்களஸ் சேவா சங்கம்" என்பதை  ஒப்பன் செய்து சேவை செய்வதை விடுத்து.. அவரு எவ்வளவு ராஜ விசுவாசமாக நடக்கிறார் ஏன் இவர் மேல மெட்ராசில் கேஸ் இருக்கு  ஆனாலும் இவர் கிந்திய பிரதமிரடம் கை குலுக்க முடிகிறதா இல்லையா..?  கூத்தமைப்பு ராஜதந்திரம் எங்கெ போனது...? இது போல பண்ணாடத்தனமாக இனம் குணம் மனம்  என்று போராட படாது..

டிஸ்கி

இது நக்கல் பதிவு

அனைவரும் டக்கிலஸ் என்ன செய்தார் என்று தான் சொல்கிறார்களே தவிர, தமிழ் மக்களின் காவலாளிகள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிகொள்பவர்கள் என்ன செய்தார்கள் என்று கூறவில்லை? இருந்தால் தானே சொல்லுவதற்கு :icon_mrgreen:  :icon_mrgreen:

உங்களுக்கு யாழின் விவாதங்களின் பழைய அனுபவம் இருக்குத்தானே.

லிஸ்ட் ஒன்று போட்டுதந்தால் நல்ல இருக்கும். அனுப்பி கேட்டு பதில் வாங்கித்தர முடியும்.

1.10,000 லறி மண் அள்ளியிருக்கலாம்.

2.700தடவை வாத்தியள் (மாதிரி கன்னத்தில்) வேலை போட்டு கொடுத்திருக்கலாம்.

3. 200 பள்ளிச்சிறுமிகளை கெடுத்துபோட்டு போட்டுதள்ளியிருக்கலாம்.

..............

.................

..............

இப்படி லிஸ்ட் ஒன்று போட்டுத்தந்தால் கூட்டமைப்பிடம் அனுப்பி ஏன் அதை செய்யவில்லை என்று கேட்டு பதில் வாங்கி தர முடியும்.

மற்றும் படி எது அவர்களுக்கு செய்ய முடிந்ததாயிருந்தது என்றால் அது "சீறோ" என்பதுதான் தமிழ் காங்கிரஸ் தொடக்கம், தமிழரசுக்கட்சி, கூட்டணி, கூட்டமைப்பு எல்லாவற்றுக்குமான பதில். 

Edited by மல்லையூரான்

மற்றும் படி எது அவர்களுக்கு செய்ய முடிந்ததயிருந்தது என்றால் அது "சீறோ" என்பதுதான் தமிழ் காங்கிரஸ் தொடக்கம், தமிழரசுக்கட்சி, கூட்டணி, கூட்டமைப்பு எல்லாவற்றுக்குமான பதில். 

:icon_mrgreen:  :icon_mrgreen: ஆகவே மற்றவர்களை குறை கூறுவதை விடுத்து நம்மவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்கவும்

:icon_mrgreen:  :icon_mrgreen: ஆகவே மற்றவர்களை குறை கூறுவதை விடுத்து நம்மவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்கவும்

மோட்டுத்தனமாய் மகிந்தா ஊடகங்களை அடக்கி இலங்கை 162ம் இடத்துக்கு வரவில்லை. அவருக்கு விளங்கும் மேலே போன பதில்களில் என்ன இருக்கு என்று.

மேலுக்கு என்ன ஒவ்வொருவரும் எழுதியிருக்கிறார்கள் என்றதை வாசிக்கமால் வீரக்குட்டிப்பதில் எழுதிப்போட்டு வீட்டுக்கு போக சம்பளம் வராது. 

வடிவாய் மேலே என்ன எழுதியிருக்கு என்று ஒவ்வொருவர் எழுதியதையும் வரிவரியாக வாசிக்கவும். பிழை விட்டு பதில் எழுதிப்போட்டு வீட்டுகு போனால் சம்பளம் இல்லை பிரப்பம் பழந்தான் வீட்டை வரும்.

அது சொல்லித்தந்திட்டன். கவனம். <_<

பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிடாது :lol:

பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிடாது :lol:

 பூனை பாலை கண்ணை மூடிக்கொண்டு குடித்தாலும் தப்பிவிடுகிறது. 

ஆனல் பன்னடை போய் பிடித்து வைத்திருப்பதெல்லாம் கள்ளு முட்டிக்குள் கண்ணைதிறந்து கொண்டு குடிச்சும், வரம்பில்லாமல் குடித்து போதை ஏறி, முட்டிக்குள் விழும் பூச்சி புளுக்களை மட்டுமே.

பூனை பன்னடையில் விழாது.

Edited by மல்லையூரான்

புலம்பெயர்ந்தவர்களுக்கு ஈழத்தில் நடக்கின்ற ஊழல்களை, கொள்ளைகளை, கொலைகளை தட்டிக் கேட்பதற்கு அனைத்து உரிமையும் உண்டு.

ஆனால் சண்டமாருதன் சொன்னது போன்று புலம்பெயர்நாடுகளில் நடக்கின்ற கொள்ளைகளையும் ஊழல்களையும் தட்டிக் கேட்காமல் வாய்மூடி இருப்பவர்களும், அப்படியான அமைப்புக்களுக்கு துணை போகின்றவர்களும் டக்ளஸ் பற்றி பேசுவதற்கான அருகதையை இழக்கிறார்கள்.

புலம் பெயர் மக்கள் கேட்கும் உரிமையை இழந்து விட்டார்கள் என்பதால்த்தான் இது அரசு போட்டுக்கொடுத்த லிஸ்ட் என்று முதலில் குறிப்பிடீர்களோ? அல்லது துணக்கு சண்டமாருதன் வந்தவுடன் விளக்கத்தை மாற்றிநீர்களோ.

ஸ்ரீலங்கன்கள், அந்த நாடுமாதிரியே  மகிந்தா ராஜபக்சாவும். மோகன் பீரிசும் தான் உலகம் எங்கும் என்று நினைத்து அந்த நாடுமாதிரியே வெளியே போனாலும் தட்டித்தான் கேட்பார்களோ. கோட்டுப் பக்கம் போக மாட்டர்களோ. 

அப்போ புலம் பெயர் தமிழர் கேட்கும் உரிமை இழந்து விட்டார்கள் என்ற துணிச்சலால்த்தான்  "போரினால் பாதிக்க பட்ட மக்கள்" அந்த நீண்ட லீஸ்ட் போடத்தக்க கைங்ககரியங்களில் குத்தியர் இறங்கினாரா.

களவு எடுத்தவன் சிறைக்கு போய் தட்டிக்கேட்க  முடுயாத நிலையில் இருந்தால் கள்வனின் பெண்டாடி சிறைகாவளிகளானவர் கையில் வதையும் போது கள்ளவ்ன் கேட்க கூடாது என்பதான் உங்கள் நியாயமா.

புலம் பெயர் மக்கள் கேட்கும் உரிமையை இழந்தனால் குத்தியர் இப்படி செய்கிறார் என்பதா புதிய விளக்கம்?.

சண்டமாருதனின் கருத்துக்கு விளக்கம் சொல்ல ஏர்கனவே அரசு வெளிவிட்ட நோட்டிசு என்று கூறியவர் ஒருவர் உரிமையை இழந்திருக்க மாட்டாரா?

ஏன்தான் இந்த தேவை இல்லாத திருகுதாள ஒருவருக்கு ஒருவான  லோயர் வேலையோ?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் டக்கிளஸ் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்கிற கேள்வி இருக்கிறது. நிச்சயமாக அதற்கான பதில் தமிழ் மக்களாக இருக்க முடியாது.ஆவர் பிரதிநிதித்துவப்படுத்துவது இனவாதச் சிங்கள அரசை மட்டுமே. ஆகவே அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார், தமிழினக் காவலாளிகள் என்ன செய்தார்கள் என்று ஏதோ அவர் தனது சொந்தப்பணத்தில் செலவு செய்ததாகப் பேசுவது வேடிக்கை. 

இங்கே தமிழினக் காவலாளிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையா அல்லது புலம்பெயர் தமிழரையா?? இருவருமே தமிழினத்திற்கு உதவ முடியாத நிலையில்த்தான் நீங்கள் ஆதரிக்கும் டக்கிளசும் அவர் பிரதிநித்துவம் செய்யும் சிங்கள இனவாத அரசும் வைத்திருக்கின்றன. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், சிங்கள இனவாத் அரசு சரித்திரகாலம் தொட்டு தமிழருக்கு ஏதாவது நல்ல காரியம் ஒன்றைச் செய்ததாக உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?? அப்படியிருக்க அந்த அரசை பிரதிநித்துவம் செய்யும் ஒருவரால் மட்டும் தமிழ் மக்களுக்கு நண்மைகள் செய்யமுடியும் என்று நீங்கள் புலம்புவது எப்படிச் சாத்தியம் ?

அண்மையில் நடந்த விடயம் ஒன்று உங்களுக்கு நினைவிலிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யவென சிங்கள அரசு நிதி ஒரு தொகையை ஒதுக்குவதாகக் கூறியிருந்தது. இதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் பலமுறை மனுக்கொடுத்தும் இறுதிவரை அவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பணம் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. கடைசியில், "உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வேண்டாமென்று ஒதுக்கியதால் அப்பணம் மீண்டும் திறைசேரிக்கே வந்துவிட்டது " என்று அரசு ஒரு அறிவித்தலை விடுத்தது. நடந்தது என்னவென்றால் பணம் ஒதுக்கப்படுவுமில்லை, அது கொடுக்கப்படவுமில்லை. ஆனால் ஒதுக்கப்படாத பணத்தினை வைத்து தேசியக் கூட்டமைப்பின் மூக்கை உடைத்துவிட்டதாக அரசு நினைத்துக்கொண்டது.

அதேபோல இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவென இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியில் எத்தனை சதவிகிதம் தமிழ் மக்களுக்குச் சென்றுள்ளதென்பது உங்களுக்குத் தெரியுமா?? நீங்கள் ஆதரிக்கும் டக்கிளசும் அவர் பிரதிநித்துவம் செய்யும் அரசும் அப்பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியுமா?? இது இப்படியிருக்க, புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களுக்கு உதவவில்லை ஆனால் டக்கிளஸ் உதவுகிறார் என்று புலம்புகிறீர்கள். இந்தியா உற்பட சர்வதேச நாடுகள் கொடுக்கும் பணத்தினையே தனது பைக்குள் போட்டுக்கொண்டு மீதியை சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கொடுக்கும் அரசு புலம்பெயர் மக்களின் பணத்தை அப்படியே தமிழ்மக்களுக்குக் கொடுத்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களாக்கும். 

புலம்பெயர் மக்களின் சொத்துக்களைக்கூட விடாமல் அபகரித்துவரும் ஒரு அரசு, அவர்களால் வழங்கப்படும் பணத்தை மட்டும் அப்படியே மக்களுக்குப் பாவிக்கப்போகிறது என்று சொல்கிறீர்கள்? நல்ல விடயம்தான்.

புலிகள் மக்களைக் கொன்றார்கள், ஆகவே டக்கிளஸ் கொல்வது தவறில்லை என்கிறீர்கள். புலிகள் தமது வயிற்றை வளர்ப்பதற்காக மக்களைக் கொல்லவில்லை.  புலிகளால் கொல்லப்பட்டவர்கள் ஒன்றில் அரசியல் ரீதியாக அவர்களுடன் முரண்பட்டவர்கள் அல்லது தமிழ் இனத்தின் இருப்பிற்கு எதிராகச் செயற்பட்டவர்கள். புலிகள் ஒருவரையும் பணத்திற்காகக் கொல்லவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, புலிகளை மக்கள் நேசித்தார்கள். சரியோ பிழையோ அவர்கள் காட்டிய திசையில் மக்கள் பயணித்தார்கள். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் அபார வெற்றிபெறச் செய்தார்கள்.  முழு அரச இயந்திரமும், இராணுவ ஒடுக்குமுறையுனூடான தேர்தல் தில்லுமுள்ளுகள் ஊடாகவும் அரசால் இறக்கப்பட்ட நீங்கள் ஆதரிக்கும் டக்கிளஸ் தோற்றுத்தான் போனார். அப்பொழுதாவது உங்களுக்கு விளங்கியிருக்கும் அவருக்கிருக்கும் ஆதரவு. 

முதலில் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தமக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்யக்கூடிய அமைதியான சுதந்திரமான சூழலை நீங்கள் ஆதரிக்கும் டக்கிளஸும் மற்றும் அவர் பிரதிநித்துவம் செய்யும் சிங்கள இனவாத அரசும் ஏற்படுத்தித் தருமா என்கிற கேள்விக்குப் பதில் தாருங்கள். பின்னர் அங்கே தெரிவுசெய்யப்படுபவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

50,000 ஆக்கிரமிப்பு இராணுவத்தையும், 20,000 சிங்கள பொலீஸாரையும், புலநாய்வாளர்கள் என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான கொலைக் கும்பல்களையும் வைத்துக்கொண்டு அரசியல் நடத்தும் நீங்கள் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதென்பதை தேர்தல் வைத்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்கிற கேள்வியை உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுப் பாருங்கள். 

Edited by ragunathan

சூப்பர் ரகு அண்ணா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய மாகாணசபை நிர்வாகத்தினை தாங்கள் வென்றெடுத்தால் அரசுடன் இணைத்து வடக்கு மாகாணத்தினையே வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவோம் என அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவினை செயலதிபராக கொண்ட ஈழமக்கள் சனநாயக கட்சியினர் கூறலாம். ஆனால் தற்போதுவரை ஆளுனருடன் இணைந்து வடமாகாணத்தின் நிர்வாக பொறிமுறைகள் யாவற்றினையும் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதற்கு மேலாக அக்கட்சியினரால் மேலதிகமாக ஒரு துரும்பினைக்கூட நகர்த்தமுடியவில்லை. தங்களது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசசபைகளில் தீர்மானங்களினை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொள்ளும் நிலப்பறிப்புக்கு அங்கீகாரம் வழங்கிவருவதே கசப்பான நடைமுறை உண்மையாகும். மாகாணசபையிலும் இது போன்ற செயற்பாடுகளினை தவிர்த்து மக்கள் நலன்சார், உரிமைசார் விடயங்களினை அவர்களால் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் அக்கட்சியினருக்கோ செயலதிபருக்கோ விருப்பம் இருந்தாலும் அவர்களால் அதனைச்செய்ய முடியாதவாறு தங்கத்திலான விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றார்கள். தங்களது செஞ்சோற்றுக் கடனையும் மீறி அவ்விலங்கினை உடைக்க முயற்சிப்பதனால் ஏற்படக்கூடிய இருப்புக்கான அச்சுறுத்தல்களினை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. சிங்கள தேசியவாத அரசியற் தலைமைகள் ஏனைய தேசிய இனங்களின் தலைமைகளினை இத்தகைய தங்கத்திலான விலங்குகள் பூட்டி வைத்திருக்கவே விரும்புகின்றன'''''''''''''''''' நன்றி புதினப்பலகை....நன்றிGari

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் கட்சிக்கு ஏறக்குறைய 20 சதவீத ஆதரவு இருக்கின்றது. ஜனநாயகச் சூழலில் இது ஒரு பலமான ஆதரவே.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏறக்குறைய 30 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. மதிமுக, பாமக, காங்கிரஸ் ஏறக்குறைய 5 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி அதை விடக் குறைவான ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேற்குநாடுகளில் ஆளகின்ற கட்சிகளே 20 தொடக்கம் 30 வரையான ஆதரவையே கொண்டிருக்கின்றன.

டக்ளஸ் நாம் எளிதில் அலட்சியப்படுத்த முடியாத ஒருவர். அவரை பலவீனப்படுத்துவது என்றால் அது மகிந்தவின் கட்சியாலேயே முடியும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

கள்ளவோட்டு ஆதரவு மட்டுமே

ஆமாம் மகிந்த போட விடாட்டில் அதுவுமில்லை

முதலில் டக்கிளஸ் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்கிற கேள்வி இருக்கிறது. நிச்சயமாக அதற்கான பதில் தமிழ் மக்களாக இருக்க முடியாது.ஆவர் பிரதிநிதித்துவப்படுத்துவது இனவாதச் சிங்கள அரசை மட்டுமே. ஆகவே அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார், தமிழினக் காவலாளிகள் என்ன செய்தார்கள் என்று ஏதோ அவர் தனது சொந்தப்பணத்தில் செலவு செய்ததாகப் பேசுவது வேடிக்கை. 

டக்கிலஸ் அவர்கள் அம்பாந்தோட்டையில் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகவில்லை :icon_mrgreen: , இது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. தமிழ்மக்கள் வாக்களித்து அவர் அமைச்சராக இருப்பதால் அவர் தமிழ்மக்களின் ஒருபகுதியினரை அல்லது வாக்களித்த தமிழர்களை பிரதிநிதிதுவபடுத்துகின்றார். இதை மறுக்கமுடியாது. டக்கிலஸ் அவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு அரசியல் செய்கின்றார் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிகொள்பவர்கள் யதார்த்தத்தை உணராமல் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையை மறந்து புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் விருப்புகளுக்கு ஏற்ப செயற்படுகின்றனர் இதனாலேயே இவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. வரட்டு கௌரவங்களும் மோட்டுத்தனமான கொள்கைகளும் எம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படாது. சொந்தபணத்தில் தான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றால் புலிகள் எவ்வளவோ செய்திருக்கலாம் ஆனால் ஏன் செய்யவில்லை? மக்களிடம் பணம் புடுங்குவதிலும் வரி அறவிடுவதிலும் தான் அவர்கள் காலம் கழிந்தது.

இங்கே தமிழினக் காவலாளிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையா அல்லது புலம்பெயர் தமிழரையா?? இருவருமே தமிழினத்திற்கு உதவ முடியாத நிலையில்த்தான் நீங்கள் ஆதரிக்கும் டக்கிளசும் அவர் பிரதிநித்துவம் செய்யும் சிங்கள இனவாத அரசும் வைத்திருக்கின்றன. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், சிங்கள இனவாத் அரசு சரித்திரகாலம் தொட்டு தமிழருக்கு ஏதாவது நல்ல காரியம் ஒன்றைச் செய்ததாக உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?? அப்படியிருக்க அந்த அரசை பிரதிநித்துவம் செய்யும் ஒருவரால் மட்டும் தமிழ் மக்களுக்கு நண்மைகள் செய்யமுடியும் என்று நீங்கள் புலம்புவது எப்படிச் சாத்தியம் ?

புலம்பெயர் தமிழர்கள் எப்பொழுதும் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் காவலாளிகளோ அல்லது பிரதிநிதிகளோ ஆகாமுடியாது. நீங்கள் தமிழ் மக்களின் காவலாளிகள் என்று உங்களை நீங்களே கூறுவீர்களாயின் தமிழ் மக்களை எங்கே அல்லது எப்பொழுது காப்பாற்றினீர்கள் என்று கூறமுடியுமா? மாறாக புலிகள் தமிழ்மக்களை பகடைகாயாக்கி தாமும் கொன்று சிங்களவனையும் கொல்ல வைத்ததுதான் மிச்சம். அப்பொழுதுகூட எவராவது தமிழர்களை யத்த பிரதேசங்களில் இருந்து விடிவியுங்கள் என்று குரல் கொடுத்தீர்களா? ஒருவராவது ? இல்லை ஏனென்றால் உங்களுக்கு மக்களின் மீது அக்கறையில்லை மாறாக என்னவிலை கொடுத்தேனும் புலிகளை காப்பாற்ற வேண்டும், அவர்கள் புலம்புவதை நாமும் புலம்பிதிரியவேண்டும்.  நாம் இங்கு சிங்கள இனவாதத்தை பற்றி கதைக்கவில்லை அவர்கள் யார் என்பதையும் நாம் நன்றாக அறிவோம். இங்கு விவாதத்துக்குரியது என்னவென்றால் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழர்களால் என்ன செய்யமுடிந்தது என்பதே.

அண்மையில் நடந்த விடயம் ஒன்று உங்களுக்கு நினைவிலிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யவென சிங்கள அரசு நிதி ஒரு தொகையை ஒதுக்குவதாகக் கூறியிருந்தது. இதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் பலமுறை மனுக்கொடுத்தும் இறுதிவரை அவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பணம் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. கடைசியில், "உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வேண்டாமென்று ஒதுக்கியதால் அப்பணம் மீண்டும் திறைசேரிக்கே வந்துவிட்டது " என்று அரசு ஒரு அறிவித்தலை விடுத்தது. நடந்தது என்னவென்றால் பணம் ஒதுக்கப்படுவுமில்லை, அது கொடுக்கப்படவுமில்லை. ஆனால் ஒதுக்கப்படாத பணத்தினை வைத்து தேசியக் கூட்டமைப்பின் மூக்கை உடைத்துவிட்டதாக அரசு நினைத்துக்கொண்டது.

அதேபோல இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவென இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியில் எத்தனை சதவிகிதம் தமிழ் மக்களுக்குச் சென்றுள்ளதென்பது உங்களுக்குத் தெரியுமா?? நீங்கள் ஆதரிக்கும் டக்கிளசும் அவர் பிரதிநித்துவம் செய்யும் அரசும் அப்பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியுமா?? இது இப்படியிருக்க, புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களுக்கு உதவவில்லை ஆனால் டக்கிளஸ் உதவுகிறார் என்று புலம்புகிறீர்கள். இந்தியா உற்பட சர்வதேச நாடுகள் கொடுக்கும் பணத்தினையே தனது பைக்குள் போட்டுக்கொண்டு மீதியை சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கொடுக்கும் அரசு புலம்பெயர் மக்களின் பணத்தை அப்படியே தமிழ்மக்களுக்குக் கொடுத்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களாக்கும். 

புலம்பெயர் மக்களின் சொத்துக்களைக்கூட விடாமல் அபகரித்துவரும் ஒரு அரசு, அவர்களால் வழங்கப்படும் பணத்தை மட்டும் அப்படியே மக்களுக்குப் பாவிக்கப்போகிறது என்று சொல்கிறீர்கள்? நல்ல விடயம்தான்.

பணத்தினை பற்றி கதைக்காதீர்கள், யார்தான் பணம் கொள்ளையிடவில்லை.  புலிகள் மற்றும் அவர்கள் முகவர்கள் அடிக்காத கொள்ளையா மற்றவர்கள் செய்கின்றார்கள் :icon_mrgreen:  ?

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் நாம் எளிதில் அலட்சியப்படுத்த முடியாத ஒருவர். அவரை பலவீனப்படுத்துவது என்றால் அது மகிந்தவின் கட்சியாலேயே முடியும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

அதாவது ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்கி அரசியல் செய்ய வேணும் அதுதான் ஜனநாயகம்...........அதுசரி இனி ஆட்சியாளர்கள் முன்னாள் புலி உறுப்பினரை வைத்து அரசியல் செய்ய போகினம் போல கிடக்குது.....அது தான் டக்கிளஸின் புலம்பெயர் ஆதரவாளர்கள் கோபத்தின் உச்சில் இருக்கினம் போலகிடக்குது....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எனது நெருங்கிய நண்பன் ஒருவன் 2011ம் ஆண்டு தமிழ் ஈழம் போய் இருந்தான்...நண்பனின் அப்பா ஒரு பலசரக்கு கடை வைத்து வியாபாரம் நடத்துறவர்..2011ன்டில் ஒரு தேர்தல் நடந்தது..அப்ப டக்கிளஸ்சின் ஆக்கள் வந்து கொஞ்ச பேப்பர் குடுத்தினமாம் கடைக்கு வார மக்களிடம் இதை குடுக்க சொல்லி நண்பனின் அப்பா ஓம் தாங்கோ என்று சொல்லி அந்த பேப்பர வேன்டி போட்டு..கடைக்கு சாமான் பேண்ட வார மக்களிடம் அந்த பேப்பருக்கை சீனி பருப்பு சுத்தி குடுத்தாராம்...அவன் தொலை பேசி பண்ணி சொல்ல என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை :D ....டக்களசின் அரசியல் மக்கள் மத்தியில் செல்லாத ........

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் கட்சிக்கு ஏறக்குறைய 20 சதவீத ஆதரவு இருக்கின்றது. ஜனநாயகச் சூழலில் இது ஒரு பலமான ஆதரவே.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏறக்குறைய 30 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. மதிமுக, பாமக, காங்கிரஸ் ஏறக்குறைய 5 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி அதை விடக் குறைவான ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேற்குநாடுகளில் ஆளகின்ற கட்சிகளே 20 தொடக்கம் 30 வரையான ஆதரவையே கொண்டிருக்கின்றன.

டக்ளஸ் நாம் எளிதில் அலட்சியப்படுத்த முடியாத ஒருவர். அவரை பலவீனப்படுத்துவது என்றால் அது மகிந்தவின் கட்சியாலேயே முடியும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

டக்கிலஸ் என்ற நபருக்கு ஜனநாயக ஆதரவு என்ற கூற்று முழு பொய்.  அந்த விபரம்  வந்திருக்கும் இடத்தை சுட்டிக்காட்டாமல் இன்னொரு (வி)யூகம்  எழுதி யாரும் நம்ம மாட்டர்கள். அரசு இவ்வளவு காலமும்  வன்முறையால் ஏற்றி வைத்திருந்தும் குத்தியை வைத்து அரசு தமிழ் பிரதேசங்களில் ஊடுருவ முடியவில்லை என்பதால் இப்போது கையை விடப் போகிறதாகும். ஆனல் அதற்காக அரசு இவரை அழிக்கிறது என்று கூற முடியாது. வன்முறையால் அரசு இவரைத் தூக்கிப் பிடிக்காவிட்டால் இவரை அடுத்த நாள் பொதுச்சனம் வீட்டுக்குள் உள்ளட்டு அடித்து சாகடித்துவிடும். இவரால் கொல்லப்பட்டத்தாக சந்தேகிக்கும் உறவினர்கள் இவரை தெருவில் இறங்க விடமாட்டார்கள். மேலும் அரசு தான் இவரை கைவிட்ட பின்னரும் இவரின் வழக்குகளை கோட்டுக்கு கொண்டு வராது. இதானல் கைவிட்ட பின்னரும் பாதுகாக்குமே அல்லாது அழிக்காது. பாதுகாக்காவிட்டால் கோடு ஒன்றில் நடக்கத்தக்க ஒரு வழக்கிலேயே குத்தியால் அரசை போர்க்குற்றவாளியாக காட்ட முடியும். குத்திக்கு வக்கில் நடந்தவை தெரியும். அதாவது அரசால் குத்தியை அழிப்பதை விட குத்தியால் அரசை அதைவிடப்பலமான முறையில் அழிக்க முடியும். எனவே அரசு குத்தியை தொடர்ந்து பாதுகாக்கும். 

தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருக்கும் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, கூட்டணி, கூட்டமைப்பு என்பவற்றிம் ஜனநாயக  ஆதரவை அரசு 65 வருடங்கள் முயன்றும் இன்னமும் அசைக்க முடியவில்லை. இதை கிழக்கிலும் வடக்கிலும் வன்முறை குடியேற்றத்தால் மட்டும்தான் மெல்ல மெல்ல் மாற்ற முடிகிறது. எனவே குத்திக்கு 20% ஜனநாயக ஆதரவு இருப்பதாகவும் அதை இனி அரசு அழித்துவிடும் என்பதும் சோடனைக் கதை. அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும் ஜனநாயக ஆரதரவு என்பது இன்று கட்டி எழுப்புவதும், அடுத்த நாள் அழித்துவிடுவதும் என்பது உண்மை இல்லாதவை என்பது. ஜனநாயக ஆதரவு அந்த கட்சியின் பிழைகளால் மட்டும்தான் அழியும் மற்றயவை எல்லாம் வன்முறையால் வருவதும் போவதும் மட்டுமே. குத்தி தேடி வைத்திருப்பவை ஒட்டுக்குழு இராணுவத்தால் மட்டுமே. 

போன தேர்தலில் ஆமி எத்தனை வோட்டு போட்டது என்ற கணக்கு அரசுக்கு தெரியும். வாக்கு எண்ணும் போது எத்தனை வாக்கு குத்திக்கு கூட்டி எண்ணப்பட்டது என்பது அரசுக்கு தெரியும். அவர் உண்மையில் எத்தனை வாக்கு பெற்றார் என்றதும் அரசுக்கு தெரியும். இதனால் தேவானந்தா ஜனநாயகத்தில் எங்கே என்பது அரசுக்கு தெரியும். இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதாலும், 20% வாக்கு என்பது தேர்தல் தில்லு முல்லு என்பதாலும், மேற்சொல்லபட்ட கருத்தில், அரசு மட்டும்தான் அவரை வன்முறையால் ஏற்றி வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. மற்றவை எல்லாம் பொய். அரசு குத்தியை வன்முறையால் ஏற்றி வைத்திருக்கலாம். அதே வன்முறையால்  இறக்கி வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்ற வாக்குகளை தவிர வடக்கில் எந்த வாக்கும் அரசுக்கு இல்லை. குத்திக்கு அரசு போட்ட வன்முறை வாக்குகளை தவிர எதுவும் இல்லை(குடியேற்ற வாக்குக்கள் கூட குத்திக்கு கிடைக்கா).

இதனால் இவர் அரசுக்காக எத்தனையோ கொலைகள் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டும்  ஒரு முதல் அமைச்சர் வேட்பாளருக்கு அரசு இவரை விட்டு விட்டு மலையகத்திலிருந்து ஸ்ரீரங்கன் வரைக்கும் தடவி பார்த்துவிட்டது. அரசு அங்கயனை கூட தேர்தலுக்கு கணக்கெடுக்கவில்லை. அரசுக்கு தெரியும் இது கிழக்கு மாகாணம் அல்ல கக்கீமை வைத்து சுத்தி விட என்பது. இதில் ஒவ்வொரு வோட்டும் அரசுக்கு எதிராக மட்டும்தான் விழும் என்பது அரசு தனது கருத்துக்கணிப்புகளில் சரியாகத்தான் கண்டு வைத்திருக்கிறது. எனவே முதல் அமைச்சர் பதவி ஒருவருக்கும் கொடுக்க முடியாத நிலையில் அரசு தேர்தலை நடத்த முடியாமல் தவிக்கிறது. 

இந்த வசனம் அரசின் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே சொல்கிறது."அவரை பலவீனப்படுத்துவது என்றால் அது மகிந்தவின் கட்சியாலேயே முடியும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது" . சில மிரட்டல் தேவைகளுக்காக   அரசு உள்ளே என்ன திட்டம் தீட்டுகிறது என்பதை வெளிவிட விரும்பி சொல்லும் வசனம். கிளிநொச்சி நோட்டிசுகளும் மிரட்டல் நோக்குக்காக கிளறிவிட்ட புதுப் புரளியாக இருக்கலாம் .  அரசு சார்பானவர்கள் இதை முற்கூட்டியே தெரிந்தும் வைத்திருக்கலாம். அரசு தேர்தலை சுயாதீனமாக நடத்தாமல், குத்திக்கு இருக்கும் ஜனநாயக ஆரவை(அப்படி ஒன்று இருந்தால்) அழித்துவிட்டுத்தான் தேர்த்லை நடத்தப் போகிறது என்பதை நாம் கூற முடியாது. அது அரசினால் அறிவுறுத்தப்படும் பிரச்சாரிகளினால் தான் சொல்ல முடியும். எனவே இந்த வசனம் சரியா இல்லையா என்பதை இன்னுமொரு  அரசால் அறிவுறுத்தப்படுபவர்தான் சொல்லலாம்.  

பிள்ளையானை எத்தனையோ வருடம் முதல் அமைச்சர் பதவில் வைத்திருந்து கிழக்கில் எத்தனயோ கள்ள வோட்டுகள் போட்டும் கடந்த தேர்தலில்  பிள்ளையானுக்கு ஒருதொகுதியும் கிடைக்கவில்லை. (இப்படியான ஒரு நிலைதான் குத்திக்கும். வடமாகாணத்தேர்தலில்- ஒரு வாக்கும் எடுக்க மாட்டார்.)அதனால் வெல்லாத பிள்ளையான் ஒருவனை மட்டும் அரசு அவனது கட்சியில் வென்றான் என்று அறிவித்தது. அப்படிக் கழிதவிட்ட பின்னரும் பாதுகாக வேண்டிய தேவை இருப்பத்தால் ஆலோசகராக வைத்திருக்கிறது. ஆனால் உலகம் முழுதும் தெரியும் பிள்ளையான் சொல்லத்தக்க ஆலோசனைகள் என்ன என்பது. அது மாதிரியே குத்தி தேர்தலின் பின்னர் ஒரு ஆலோசகராகலாம்.  ஆனால் இதில் குத்தி அழிக்கபடவில்லை. 

குத்திக்கு 20% ஆதரவு வடக்கிலிருக்கு என்ற புதிய (வி)யூகத்தை அரசுக்கு தெரிந்திருக்குமானால் அது போடும் புதிய வியூகமான சிங்கள குடியேற்றத்திற்கு செலவிடும் பணத்தை தானும் தனது தமிழ் அடிவருடியும் பங்கிட்டிருப்பார்கள்.

இதில் இரண்டு விடயங்கள் வெளிவருகிறதாக இருக்கலாம். வெளிநாடுகள் அரசு மீது ஒட்டுகுழுக்களை அரசியலில் வைத்துஇருப்பது தொடரபாக அழுத்துதம் கொடுக்கின்றனவாக இருக்கலாம். இது கூட்டமைப்பில் போராளிக்கட்சிகள் சந்திக்கும் இடபாடுகளுக்கு ஸ்மாந்தரமாக் ஐருக்கலாம். மற்ற்யது அரசு பிள்ளையான் கருணா விடயத்தில் வன்முறையால் தமிழ் மக்களிடம் வாக்கு வாங்க முடியாது என்றதை கற்றுவிட்டது. 

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் கட்சிக்கு ஏறக்குறைய 20 சதவீத ஆதரவு இருக்கின்றது. ஜனநாயகச் சூழலில் இது ஒரு பலமான ஆதரவே.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏறக்குறைய 30 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. மதிமுக, பாமக, காங்கிரஸ் ஏறக்குறைய 5 சதவீத ஆதரவை கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி அதை விடக் குறைவான ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேற்குநாடுகளில் ஆளகின்ற கட்சிகளே 20 தொடக்கம் 30 வரையான ஆதரவையே கொண்டிருக்கின்றன.

டக்ளஸ் நாம் எளிதில் அலட்சியப்படுத்த முடியாத ஒருவர். அவரை பலவீனப்படுத்துவது என்றால் அது மகிந்தவின் கட்சியாலேயே முடியும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கி

ஒரு தொகுதி ஆதரவை வைத்து வைத்து , ஒரு மாநில கட்சிகளுடன்  ஒப்பிட  முடியாது .  இலங்கை  முழுவதும்  கணக்கில்  கொண்டால் , அவருடைய ஆதரவு  1 or 2% தான்  இருக்கும் .

வேந்தன் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் இலங்கை முழுவதும் என்று பார்த்தால் எந்தத் தமிழ் கட்சியும் 10 வீதமளவில்தான் வருவார்கள். தேர்தல் நடக்க இருக்கின்ற வட மாகாணம் என்று நான் இதைப் பார்க்கலாம். வன்னி மாவட்டங்களில் ஈபிடிபிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை என்பதனால், 20 வீதம் என்பது 15 வீதமாக குறைய வாய்ப்பு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.