Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்குச் சொந்தமான 120 கோடி ரூபா சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது!

Featured Replies

LTTE.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 120 கோடிரூபா பெறுமதியான சொத்துக்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது.

 

மேலும், http://tamilworldtoday.com/archives/13450

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 120 கோடிரூபா பெறுமதியான சொத்துக்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது.

இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்தவாரம் இந்தச் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

காணிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத்தொழிற்சாலைகள், மீன்பிடி இழுவைப்படகுகள் என்பன சுவீகரிக்கப்பட்டுள்ள இந்த 1.2 மில்லியன் ரூபா சொத்துகளில் அடங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வார இதழுக்குத் தெரிவித்துள்ளார்.

இவை ஏலத்துக்கு விடப்பட்டு, அந்த நிதி திறைசேரிக்கு மாற்றப்படவுள்ளதாகவும் பெரும்பாலான இந்தச் சொத்துகள் கொழும்பில் உள்ளதாகவும், ஏனையவை பிற இடங்களில் இருப்பதாகவும், அந்த அதிகாரி கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்ட மூன்றுமாடி குடியிருப்பு ஒன்றும், கொட்டாஞ்சேனை ஜெம்பெட்டா வீதியில் உள்ள அச்சகம் ஒன்றும், வன்னியில் ஈழநாதம் அச்சகமும் சுவீகரிக்கப்பட்டுள்ள சொத்துகளில் அடங்கியுள்ளன.

Thanks http://tamilworldtoday.com/archives/13450

 

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகளின் சொத்தா.. தமிழர்களின் சொத்தா..???! தமிழனைக் கொன்றதும் இல்லாமல் அவனைக் கொன்றதற்கான கூலியையும் சிங்களம் அவனிடமே பெற்றுக் கொள்ளும் கொடூரம் இது..! :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் பொதுமக்கள் ஒளித்து வைத்த நகைகளும் இதற்குள் அடங்குகின்றதா 

அல்லது அவை கோத்தா மற்றும் ஒட்டுக்குழுக்களின் பைகளை நிரப்பிவிட்டனவா  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தி இனக்கலவரம் எண்ட போர்வையிலை  தமிழனிட்டை ரயிலை மறிச்சு கொலை பாலியல் வல்லுறவு செய்து கொள்ளையடிச்சாங்கள் , வசுவை மறிச்சு காதறுத்து கழுத்தறுத்து கொள்ளையடிச்சாங்கள்..... தேத்தண்ணிக்கடை,பலசரக்குகடையளை அடிச்சுடைச்சு ஏப்பம் விட்டாங்கள்.....இப்ப புலிகள் எண்டு அடுத்த கொள்ளை..........தமிழன் இல்லாட்டி சிங்களவன் எப்பவோ சோறுதண்ணியில்லாமல் செத்திருப்பான்......சேர்.பொன் இராமநாதன் தொடக்கம் கொசுறு வரலாறுகளை பிரட்டிப்பாத்தால் உள்ளது வெளிக்கும்......2009ம் ஆண்டு நிகழ்வுக்கும் நாதாரி தமிழன் இல்லாட்டி சிங்களவனுக்கு கோவணம் தான்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... ம்.... போராட்டம் எண்டு ஒண்டு வந்திராவிட்டால்....

இங்க கருத்து எழுதுற எல்லாரோட கதையும் கோவணம்தான்....

அதயும் மறுக்கமுடியாதுங்கோ.... :lol::D:icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மைத்துனரின் கிளிநொச்சியில் இருக்கின்ற மாடிவீட்டின்  உறுதிப் பத்திரத்துடன்  நாலாம் மாடிக்கு வரச்சொல்லி விட்டார்கள் 

ஆள் இப்போது புலம்பெயர் தேசத்தில் குடும்பம் ஊரில் பெரும்பாலும் பறிமுதலாகலாம் .இத்தனைக்கும் அவர் சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீடு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... ம்.... போராட்டம் எண்டு ஒண்டு வந்திராவிட்டால்....

இங்க கருத்து எழுதுற எல்லாரோட கதையும் கோவணம்தான்....

அதயும் மறுக்கமுடியாதுங்கோ.... :lol::D:icon_idea:

 

அதில்லை பாருங்கோ......

புலியள் இருக்கேக்கையே வெளிநாடுகளிலையிருந்து புலிகளை திட்டினசனம்.....

அவங்கள் அழிஞ்ச பிறகும் அவங்களை திட்டித்திட்டியே வாழ்க்கையை கொண்டு போகுதுகள்....

அதை நினைச்சு கொடுப்புக்கை சிரிக்கிறன். :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதையேன் கேப்பான்....

புலிக்கொடுரமைய பற்றி விலாவாரியா சொல்லி...

விசா எடுத்தவங்களெல்லாம் ...

புலிக்கு சாமரம் வீசின கதையும் இருக்குதுதானேங்கோ.... :lol::D:icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலர் செய்ததுக்கு........ஒட்டுமொத்த விடுதலைப்போராட்டதையே நளினம் செய்யிற நீங்கள் எங்கையோ போயிட்டிங்கள் போங்க... :icon_idea:  :D  :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை நியாய படுத்த தானே இத்தனை கூத்தும்... :lol: :lol:

எல்லாரும் புலிய சாட்டித்தான் விசா எடுத்தவை...
எண்டா.... பாருங்கோவன்....

போர் முடிஞ்சு நாலு வருசம்.... இங்க என்ன நடக்குது????

சந்திரிக்கா.... மங்கள சமரவீரவ கட்டிப்புடிச்ச ஆர்ப்பரிக்கிறதும்....

யூஎன்பிக்கு வால்பிடிக்கிறதும்....

நேரத்துக்கு தகுந்த மாதிரி TNA கு துரோகி பட்டம் சூட்டுறதும்....

2005 மகிந்தா வ கொண்டுவர என்ன வென்ன கதையெல்லாம் ....
சென்னவங்க வெண்டு சிந்திச்சு பாருங்கோ.... :lol: :lol: :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

mathivathanam.....மாத தொடக்கம்....நீங்கள்...உண்மையான உழைப்பாளி  (கடின உழைப்பழி இல்லை..கதை சொல்லி வாங்கிற ) என்பதை காட்டுறியள்....இதாலைதான் இலங்கை அரசாங்கமே ஓடுது...நிறையத்தான் ..வருகுதுபோலை....

'சிந்தித்து பாருங்கோ ' உந்த கதை எங்களுக்கு பிடிக்காது .

அண்மையில் வெளியான அமெரிக்க அறிக்கைக்கு கொடுக்கப்படும் பதில்தான் இது . இதே மாதிரியே முன்னர் மிசேல் சிசன் வெளிவிட்ட அறிக்கைகளுக்கும் அரசு பதில் கொடுத்தது நமக்குத்தான். அதாவது இது அமெரிக்காவை அடி பணியவைக்கும் செய்திகள். நடந்த விடையம், அமெரிக்கா  தனது அறிக்கையில் புலிகளின் பண வலையமைப்பற்றி அரசு கவலை படுகிறது; ஆனால் அமெரிக்கா அதை பற்றிக் கவலைப்படாமல் அரசுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திவிட்டது  என்ற மாதிரித்தான் சொல்லப்படிருந்தது. அது அரசுக்கு சந்தோசமாக இருக்கவில்லை. என் எனில் அது அரசின் வார்த்தைகளில் அமெரிக்கா சந்தேகத்தை உண்டாக்குவது போலிருந்தது.  அமெரிக்கா "புலிகள் இன்னமும் பண வலையமைப்புகளை வைத்திருக்கிறார்கள்" என்று திட்டவட்டமாக சொல்லி அதை கண்டுபிடிக்க அரசுக்கு உதவதயாராக இருக்கிறது என்று சொல்லியிருந்தால் அரசு இப்படி தமிழ் மக்களை உடமைகளை சுவீகரித்து சிங்களவருக்கு ஏலம் போட்டிருக்காது(கடைசி அவசரம் அவசரமாக இந்தகிழமையில் செய்து முடித்திருக்காது)

Edited by மல்லையூரான்

போராட்டத்தை நியாய படுத்த தானே இத்தனை கூத்தும்... :lol: :lol:

எல்லாரும் புலிய சாட்டித்தான் விசா எடுத்தவை...

எண்டா.... பாருங்கோவன்....

போர் முடிஞ்சு நாலு வருசம்.... இங்க என்ன நடக்குது????

சந்திரிக்கா.... மங்கள சமரவீரவ கட்டிப்புடிச்ச ஆர்ப்பரிக்கிறதும்....

யூஎன்பிக்கு வால்பிடிக்கிறதும்....

நேரத்துக்கு தகுந்த மாதிரி TNA கு துரோகி பட்டம் சூட்டுறதும்....

2005 மகிந்தா வ கொண்டுவர என்ன வென்ன கதையெல்லாம் ....

சென்னவங்க வெண்டு சிந்திச்சு பாருங்கோ.... :lol: :lol: :icon_idea:

உண்மையில் உங்களுக்கு இதனால் இவ்வளவு சந்தோசம் பொங்கி வந்ததென்றால் ....நீங்கள் ஒரு மனுஷன் பாருங்கோ .................. :lol:    :D    :icon_idea:   :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சொத்துக்கள் என்பது ஈழத் தமிழர்களின் சொத்துக்கள்

 

சிங்களவன் பயங்கரவாதம் என்ற போர்வையில் எல்லாவற்றையும்

சுருட்டிக்கொண்டு செல்கின்றான்

 

இதற்குள் சிலபேருக்கு நக்கலும் நளினமும் வேறை.

 

இப்போதுதான் புலிகள் இல்லையே நீங்கள் முன்னுக்கு வந்து தமிழருக்கு எதாவது செய்யலாமே.

 

புலிகளின் சொத்துக்கள் என்பது ஈழத் தமிழர்களின் சொத்துக்கள்

 

சிங்களவன் பயங்கரவாதம் என்ற போர்வையில் எல்லாவற்றையும்

சுருட்டிக்கொண்டு செல்கின்றான்

 

இதற்குள் சிலபேருக்கு நக்கலும் நளினமும் வேறை.

 

இப்போதுதான் புலிகள் இல்லையே நீங்கள் முன்னுக்கு வந்து தமிழருக்கு எதாவது செய்யலாமே.

அது து து து து .......................கேள்வி வாத்தியார் ..............

இதில் நாம் செய்யத்தக்கது குறைவு. நேற்று பல கோவில்களை அரச கூலிகள் அடித்து நொறுக்கி அவற்றில் காணப்படும் சிறிய தகடுகளை திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

இது மூன்றாம் தடவையாக என்று நினைக்கிறேன், அமெரிக்காவிடும் அறிக்கைகளுக்கு துட்டகைமுனு அரசு தமிழர்களை பழிவாங்கிறது. அமெரிக்க தான் அறிக்கைவிடும் பொது கவனமாக இருக்க வேண்டும். அல்லது அறிக்கைவிட்ட பின்னர் தமிழரை பாதுக்காக்க தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொருக்காலும் அமெரிக்கா தன்னை நேர்மை மாதிரிக்காட்ட தமிழருக்கு முதுகு புண்ணாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் சொத்துக்கள் என்பது ஈழத் தமிழர்களின் சொத்துக்கள்

 

சிங்களவன் பயங்கரவாதம் என்ற போர்வையில் எல்லாவற்றையும்

சுருட்டிக்கொண்டு செல்கின்றான்

 

இதற்குள் சிலபேருக்கு நக்கலும் நளினமும் வேறை.

 

இப்போதுதான் புலிகள் இல்லையே நீங்கள் முன்னுக்கு வந்து தமிழருக்கு எதாவது செய்யலாமே.

 

 

அதுக்குதான் ....

முன்னாள் புலிகள் ...

கருணா .... பிள்ளையான் .... கே பி ... டக்கி .... எண்டு பலர் இருக்கிறார்களே ....

ஒட்டுக்குழு ....

ஓணான் குழு  ....

எண்டு பட்டமளிப்பு வேற நமக்கு தேவையா???? :lol::D:icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அவருக்கு பொருத்தமான பெயரை தானே வைக்கலாம். :lol:

 

ஒட்டுக்குழு ....

ஓணான் குழு  ....

எண்டு பட்டமளிப்பு வேற நமக்கு தேவையா???? :lol::D:icon_idea:

 

இதைவிட எந்த பெயர் தேவையென்று சொன்னால்தானே, தெரியும், சொல்லுங்க :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.