Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்!

deepam-tv1-300x225.jpg

புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு  உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன.

தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்டது. இதனால் தீபம் தொலைக்காட்சி நோர்வேயிலுள்ள மக்களவையைச் சார்ந்த உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களாக இவர்களது பொறுப்பில் இயங்கிவரும் தீபம் தொலைக்காட்சி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டது. ஏறக்குறைய முப்பது ஊழியர்களைக் கொண்ட தீபம் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. தொலைக்காட்சி ஊழியர்கள் தமது உழைப்பிற்கான பணத்தைக் கோரியபோது நிர்வாகத்தினர் தம்மிடம் பணம் இல்லை எனத் கைவிரித்துள்ளனர். அதே வேளை சட்டரீதியாக நிறுவனத்தை மூடும் நடவடிக்கை எதனையும் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகிறது.

இதனிடையே தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் புலம் பெயர் நாடுகளில் தீபம் ஊடாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் எதிரொலியாகவே ஊதியங்கள் வழங்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

srm-last-300x199.jpg

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார்.

1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம்

பல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது.

புதிய தலைமுறையின் புலம்பெயர் வருகை உண்மையானதாயின் அது ஆபத்தானதும் கூட..

ஈழத் தமிழர்களின் உணர்வுபூர்வமான தேசியப் பிரச்சனை மனிதாபிமானமற்ற அவமானகரமான வியாபாரப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து இயங்கிவந்த தீபம் தொலைக்காட்சி சேவை ஏதோ மாற்றங்களை உருவாக்கிய ‘புரட்சிகர’ தொலைக்காட்சியல்ல. ஆயினும் ‘புதிய தலைமுறையின்’ ஊடாக இலங்கை இந்திய உளவுத்துறைகள் சீரழிந்துபோன புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியலைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.

பிரித்தானிய சட்ட வரைமுறைகளுக்கு ஒப்ப சட்டப்படி வேலை நீக்கம் செய்யப்படுகிறன்வர்கள் தமது வாழ்க்கைக்கான அடிப்படை உதவித் தொகையாக வேலையற்றோருக்கான சமூக உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும். தீபம் தொலைக்காட்சி ஊழியர்களை சட்டரீதியாக வேலை நீக்கம் செய்யாதிருப்பதால் அவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையிலுள்ளனர். மாதந்த ஊதியத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் கடன் கலாச்சார்த்துள் மூழ்கியுள்ள பிரித்தானிய சமூகத்தில் ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமை என்பது குடும்பங்களின் வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
 
http://inioru.com/?p=35397
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளர்களை நடுத்தெருவில் தள்ளிய தீபம் தொலைக்காட்சியின் ‘தமிழ் உணர்வு’ நிர்வாகம்

தீபம் தொலைக்காட்சி ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சனைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொலைகாட்சி ஊடகம். போலித் தேசியம் தொழிலாளர்களை எவ்வாறு ஒட்டச் சுரண்டும் என்பதை தீபம் தொலைக்காட்சி முன்னுதாரணமாக முன்வைத்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகளாக வந்த பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கத்தி நுனியில் நடப்பதைப் போன்றது. சாமான்ய உழைப்பாளி ஒருவரின் மாதாந்த ஊதியம் அவரது குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுகளுக்கே போதுமானதாக இருப்பதில்லை. ஒருவர் வேலையிழந்ததும் அக்குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவில் ஒருபகுதிக்கான செலவீனங்களை கவனித்துக்கொள்வதற்காக அரசாங்கத்தால் சமூக உதவித்தொகை வழங்க்கப்படும். வேலையிழந்தவர் புதிய வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளும் வரை அந்த உதவித்தொகையே அவர் வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பயன்படுகிறது.

இவ்வாறான ஒரு முறைமை ஏற்கனவே காணப்படுவதால் பாதுகாப்பிற்கான சேமிப்புப் பணம் என்பது மத்தியதர வர்க்கத்தின் கீழணிகள் மத்தியில் காணப்படுவதில்லை. தீபம் தொலைக்காட்சியின் தொழிலாளர்கள் இந்த சமூக உதவித்தொகையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைக்கு அதன் ‘தமிழ் உணர்வு மிக்க’ நிர்வாகம் தள்ளியுள்ளது.

தீபம் தொலைகாட்சி இலங்கை அரச சார்பு எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சி, மற்றும் விஜை தொலைகாட்சி போன்ற தமிழகத்தின் கலைக் குப்பைகளின் தரகுகளாக செயற்படத் தீர்மானித்த பின்னரே தொழிலாளர்களை தெருவிற்குத் துரத்தியது. இதனால் அது தற்காலிகமாகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தொழிலாளர்களுக்கு வேலை நீக்கக் உத்தரவை வழங்கவில்லை. வேலை நீக்கப்பத்திரமின்றி பிரித்தானிய அரசிடம் சமூக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கக்கூட இயலாத நிலையில் தொழிலாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்களின் நாளந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.

http://inioru.com/?p=35889

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்நாடுகளில் உரியமுறையில் ஊழியர்பதவிநீக்க ஆவணமின்றி உதவிகளைப்பெறவோ முடியாதென்பதை நிர்வாகம் அறியாதவிடயமா? கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அப்ப இனி தீபம் சபா நாவலன் மற்றும் புலம்பெயர் பெண் உரிமைவாதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். போன்றவர்களை வைத்து அரசியல் ஆய்வுகள் ஒன்றும் செய்யாது போல அதான் தீபம் மீது சேறடிக்கிறார்கள். புலம்பெயர் நிறுவனகள் எல்லாம் மக்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறதா என்று ஆய்வு செய்து இனிஒரு செய்தி போடுமா அல்லது தங்கள் சகாக்களை பணி நீக்கம் செய்யும் தீபம்புதிய நிர்வாகம்  மட்டும் தான் இவர்களது இலக்கா? இனிமேல் நாம் புலம்பெயர் நிறுவனங்கள் பற்றி யாழில் செய்தி எழுதலாமா? உதாரணம் நான் ஜி டிவி பற்றி செய்தி போட்டால் யாழ் நிர்வாகம் விடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்தை டக்லசுக்கு வித்தாச்சு.அவர் தான் இப்ப தீபத்தை நடத்துகிறார் :lol: கொஞ்ச காலத்திற்கு முன்பு கொஞ்ச பேர் யாழில் எழுதிச்சினம்.பிறகு கேபி வேண்டிட்டார் :D என்டும் எழுதிச்சினம்.பாவம் தீபம் :)

கனடாவிலும் பல ஊடகங்களை டக்ளஸ் தான் நடத்துகிறார்.  ஒருசில அமைப்புகளுக்குள்ளும் அவருடைய ஆட்கள்தான் இருக்கிறார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சி டக்ளஸ், ஜிரிவி கேபி என்று வாங்கிவிட்டார்களா? அப்படியானால் தமிழர்கள் சன்ரீவி, விஜய் ரீவி, ஜெயா ரீவி என்று பொழுதுபோக்கு சனல்களையும் டான் ரீவியையும் பார்ப்பதைப் பற்றிக் குறை கூறக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திவால் நிலைக்காண காரணங்கள் தொடர் நாடகங்களையும் புதிய சினிமா தமிழ் படங்களையும் "முதன்முதலாக எமது tv யில்"மூலம் போகுமாப் போல கத்தும் விளம்பரங்களின் அல்லை தொல்லையின்றி பார்க்க கூடியவாறு youtubeல் கிடைக்கும்போது சந்தாதாரரின் எண்ணிக்கை குறைவடையும், மற்றும் கார்ட்(card sharing)மூலம் இலவசமாய் இலவசமாய் பார்க்கலாம் என்றநிலையில்(இந்த முறை மூலம் sky போன்ற பெரும் நிறுவனங்களே தடுக்க முடியாமல் இருக்கின்றன ) புதிய சந்தா சேர்வு குறைவடையும் மற்றும் நடுநிலைமை என்று  தமிழ் தேசியஎதிர்பாளர்களை குரைக்கவைத்து அதை மே18 பின் நொந்து போய்இருந்தவர்களிடம் கொடுப்புக்குள் சிரித்தவாறு அனஸ் பேட்டி என்று தீபத்தில் போட்டது போன்றவைகளும் இந்த சரிவுக்கு காரணம் மற்றும் சட்டிலைற்tv தொழில் நுட்பம் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்த ஒன்றாகவே எதிர்வு கூறப்படுகிறது. சிறிது காலத்தில் வால்வு ரேடியோக்களை பார்பது போன்று சட்டிலைற் சட்டிகளை பார்க்கும்நிலை வரும் வெகுவிரைவில் நிற்க்க தீபம் ஊழியரின் விளக்கம் பின்வருமாறு உள்ளது.

வணக்கம்.

தீபம் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகம் மீதான அதிர்வு கண்ணனின் ஜால்ரா எமக்கு ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. காரணம், அதிர்வு கண்ணன், தீபம் தொலைக்காட்சியின் புதிய முதலாளிகளில் ஒருவருக்கு மச்சான் முறை. அதனால் ஜால்ரா அடிக்கிறார். அடிக்கட்டும். அது அவரது உரிமை. ஆனால் அவரது கருத்துப்படி பார்த்தால் தமிழ்க் கடைகளில் ஒழுங்காக சம்பளம் கொடுக்கப்படவில்லைத்தானே, அதனால் தீபத்திலும் சம்பளம் கொடுக்கப்படாவிட்டால் அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்பதுபோல் சொல்கிறார். அப்படியாயின் அவரது மச்சான் இப்போது ஒரு தமிழ்ப் பலசரக்குக் கடையையா வாங்கியுள்ளார் ?

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று புதிய முதலாளிகள் சொன்னது ஆதாரபூர்வமாக ஒலிப்பதிவாக உள்ளது. வேண்டுமானால் வெளியிடுவோம். இறுதியாக புதிய நிர்வாகம் சொன்னது, ஏப்ரல் மாத சம்பளத்தின் 50 வீதத்தை மே மாதம் 15 ஆம் திகதியும் (நாளை மறுதினம்), மிகுதி 50 வீதத்தை இம்மாதம் இறுதியிலும் தருவதாகவும், மே மாதம் 15 ஆம் திகதிவரை மட்டுமே தம்மால் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் (அதுவும் தமக்கு பணம் கிடைத்தால் மட்டும் ) மே மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் சொல்லப்பட்டது. அத்துடன் மே மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஊழியர்களை சம்பளம் இல்லாமல் தொண்டு அடிப்படியில் வேண்டுமானால் வெலைசெஇயுமாரும் , அப்படி சம்பளம் இல்லாமல் வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் விட்டுவிட்டு போகுமாறும் சொல்லப்பட்டது. ஊழியர்கள் சம்பளம் வேண்டும் என்று கேட்டால் நிறுவனத்தை வங்குரோத்து செய்துவிட்டு போய்விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அவையும் ஒலிப்பதிவாக உள்ளது.

அதிர்வு கண்ணனுக்கு வேண்டுமானால் பிரித்தானிய சட்டதிட்டங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். அதிர்வு கண்ணனுக்கு வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய முடியுமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல. மச்சானுக்கு ஜால்ரா அடிக்க அதிர்வு கண்ணனுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தேவையில்லை.

மேற்படி இனியொரு கட்டுரையில் தீபம் தொடர்பில் கூறப்பட்ட விடையங்கள் எவையும் உண்மைக்குப் புறம்பானவை இல்லை. இதில் கூறப்படாத விடையங்கள் பலவும் நடக்கின்றன. உண்மைகள் இவைதான். அதிர்வு கண்ணனின் ஜால்ராக்கள்தான் பொய்யானவை.

புதிய முதலாளிகள் தீபத்தை மேற்கொண்டு நடத்த பல இடங்களிலும் பெருமளவு பணம் சேர்த்துள்ளார்கள். பழைய ஊழியர்களில் பெருமளவானோரை வெளியேற்றிவிட்டு தமக்கு நீண்டகாலமாக தெரிந்தொரை போட்டு நடத்த முயற்சித்தார்கள். பிரித்தானிய சட்டப்படி அப்படிச் செய்வதாயின், நீண்டகாலமாக வேலைசெய்யும் பழைய ஊழியர்களுக்கு குறிப்பிட்டளவு ரிடண்டன்சி பணத்தைக் கொடுத்தே அவர்களை வேலை நீக்கம் செய்யமுடியும். அப்படி ரிடண்டன்சி பணத்தைக் கொடுக்க புதிய முதலாளிகளுக்கு விருப்பமில்லை. வாய்ப் பேச்சின் மூலம் ஊழியர்களை வெளியேற்ற எத்தனித்தார்கள். அதற்கு ஊழியர்கள் எவரும் உடன்படவில்லை. காரணம், அனைத்து ஊழியர்களும் இந்த ஒரு வருமானத்தை மட்டும் நம்பியே இங்கு வாழ்கிறார்கள். குடும்பச்சுமை உட்பட பல பொறுப்புகள். ரிடண்டன்சி பணத்தைக் கொடுக்காமல் திடீரென வேலையை விட்டு நீக்கினால் அடுத்த வேலை கிடைக்கும்வரை அனைவருக்கும் பெரும் நெருக்கடி. அதனாலேயே ஊழியர்கள் ரிடண்டன்சி கொடுப்பனவில்லாமல் வேலையை விடமுடியாது எனக் கூறிவிட்டனர். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இப்போது சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, ஊழியர்களை அவர்களாகவே ஓடச் செய்கின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் புதிதாக சம்பளத்துக்கு ஊழியர்களை வேலைக்கமர்த்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன. அவறிற்கும் ஆதாரங்கள் உள்ளன.
பழைய TTN தொலைக்காட்சி ஊழியர்களோடு பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட்டங்களும் நடந்துள்ளன. இதற்கும் மேலாக லண்டனில் ஒரு நிறுவனத்துக்கு கடந்த வாரமா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பவுண்ட்ஸ் கொடுத்து தீபம் தொலைக்காட்சியை IPTV இற்கூடாக ஒளிபரப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்றால், புதிதாக சம்பளத்து ஊழியர்களை வேலைக்கமர்த்த பணம் எங்கிருந்து வந்தது ? IPTV தொடங்க பணம் எங்கிருந்து வந்தது ?

திரைமறைவில் பல நடக்கின்றன. ஆரம்பத்தில் இருந்து ஒரே ஒரு பெண் ஊழியர் (கோமதி சுரேன்) மட்டும் புதிய முதலைகளின் கைப்பொம்மையாக இருந்து வந்தார். சென்ற வாரம் சம்பளம் கொடுக்கமுடியாது, விரும்பினால் தொண்டராக வேலை செய்யுங்கள் எனச் சொல்லப்பட்டபோது அந்தப் பெண் ஊழியர் மட்டும் தான் தொண்டராக வேலை செய்வதாக கூறினார். இப்போது பழைய ஊழியர்களில் மூன்று நான்கு பேர்களை மட்டும் தமது பக்கம் இழுக்கும் நடவடிக்கையை புதிய முதலாளிகள் செய்கிறார்கள். தமது நோக்கம் நிறைவேறும்வரை அந்த மூன்று நான்கு பேர்களை மட்டும் வைத்து தொலைக்காட்சி நின்று விடாமல் இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் அந்த நோக்கம், பழைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவந்து தொலைக்காட்சியை நடத்துவது. அதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குத்தான் அந்த மூன்று நான்குபேரும் தேவைப்படுகிறார்கள். ஆனால் புதிய முதலாளிகள் விருக்கும் வலையில் கோமதி சுரேன் என்ற ஒருவரைத் தவிர வேறு எவரும் விழவில்லை. இவைதான் உள்ளே நடக்கும் உண்மைகள். இந்த உண்மைகள் தெரியாமல் எவரும் ஜால்ரா அடிக்கவேண்டாம்.

மேலதிக விபரங்கள் பின்னர் தொடரும்.நன்றி http://inioru.com/?p=35397

இங்குள்ள முதல் பிரச்சனை தேசியம் சார்ந்தோர் இதை வாங்கியதே 

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைகாட்சி ஊழியர்கள் இந்த பிரச்சினையை trade union கொண்டுசெல்ல முடியாதா? சரியான வழிமுறையில் சென்று சட்டபூர்வமாக போராடுவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள முதல் பிரச்சனை தேசியம் சார்ந்தோர் இதை வாங்கியதே 

தொடங்கும்போதே பார்த்தேன்.

பாவம்

எத்தனை நாளைக்குத்தான் வெறும் வாயை  மெல்வது.????

தீபம் அழிவது சந்தோசமே.

எந்த நாட்டிலிருந்து

என்ன கதைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இந்த கம்பனி சம்பளந்தருவதில்லை. என அறிவித்து பதிந்து

எனக்கு வருமானம் இல்லையென்றால் அரசபணங்களை  எங்கும் எடுக்கலாம்.

இவர்கள் ஏன் சம்பளந்தா என்று அங்கேயே  நிற்கிறார்கள்??

ஏதோ  அரசியல் இருக்கு....... :(

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்கு முன்னர் தீபம் புதிய நிர்வாகத்தின் கீழ்

புதுப் பொலிவுடன் வலம் வரும் என விளம்பரம் செய்தவர்கள்.

பின்னர் ஒன்றையும் காணவில்லை.

எல்லா விடயங்களும் மலிந்தால் சந்தைக்கு வரும் தானே.

எதுவாக இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் விடுவது 

கண்டிக்கப்பட வேண்டியது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்கள் ஒழுங்கான முறையில் பதிந்து வேலைக்கு அமர்த்துவதில்லை.பெரும்பாலும் விசா இல்லாதவர்களுக்கு குறைந்த சம்பளத்தைக் கொடுத்து வேலை வாங்குவார்கள்.இந்த நிலையில் ஒழுங்கான பதிவில்லாதவர்களும்,அரைகுறைப் பதிவில் உள்ளவர்களும்,விசா இல்லாதவர்களும் எப்படி அரசாங்கத்திடமிருந்து பணம் பெறுவது?அதனால் வேலையை விடாமல் நின்று போராடுகிறார்கள். இது தெரிந்தே புதிய நிர்வாகவும் அவர்களை வேலையை விடுமாறு நச்சரிக்கிறது. இது ஒரு மனிதாபிமான மற்ற செயலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய சட்ட வரைமுறைகளுக்கு ஒப்ப சட்டப்படி வேலை நீக்கம் செய்யப்படுகிறன்வர்கள் தமது வாழ்க்கைக்கான அடிப்படை உதவித் தொகையாக வேலையற்றோருக்கான சமூக உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும்.

தீபம் தொலைக்காட்சி ஊழியர்களை சட்டரீதியாக வேலை நீக்கம் செய்யாதிருப்பதால் அவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையிலுள்ளனர்.

கிருபன்,

நீங்கள் சொல்வதில் ஒன்று மட்டும் புரியவில்லை.

தொடர்ந்து இயங்கும் நிறுவனம், ஒருவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டது என தெரிவுக்கும் கடிதம் அரச உதவி பெற தேவை படலாம்.

திவாலாகும் நிறுவனம் சம்பளம் தரவில்லை என்பது மட்டும் அரச உதவி பெற, போதுமே.

நீங்கள் சொல்லும் கடிதம் எழுத சம்பளம் பெறும் வேலையாட்களே இருக்க மாட்டார்களே. கடிதம் யார் தருவார்கள் என்று எதிர் பார்கிறார்களோ, அவர்களும் தமக்கு கடிதம் எப்போ கிடைக்கும் என பார்ப்பவர்களாக தான் இருப்பார்கள்.

இப்படி எல்லோரும் கடிதம் கிடைக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Edited by Nathamuni

செய்தியை நான் எழுதவில்லை!

தீபம் இன்னமும் வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவிக்கவில்லை. ஆனாலும் ஊழியர்களுக்கான சம்பளங்களைக் கொடுக்காமல் அவர்களாகவே வேலையை விட்டுப் போகும் நிலையை உருவாக்குகின்றது என்றுதான் செய்தி சொல்கின்றது. அத்தோடு IPTV ஊடாக தொடர முயற்சிக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 க்குப் பின்னர்.. தீபம் ஓவரா தீப்பற்றி எரிஞ்சது தப்பு..! :lol:

அப்ப சந்தாக்காரர் நெற்றில் நாமம் தானா..?! :)

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 க்குப் பின்னர்.. தீபம் ஓவரா தீப்பற்றி எரிஞ்சது தப்பு..! :lol:

அப்ப சந்தாக்காரர் நெற்றில் நாமம் தானா..?! :)

பட்டை நாமம் !!! U

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை நான் எழுதவில்லை!

தீபம் இன்னமும் வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவிக்கவில்லை. ஆனாலும் ஊழியர்களுக்கான சம்பளங்களைக் கொடுக்காமல் அவர்களாகவே வேலையை விட்டுப் போகும் நிலையை உருவாக்குகின்றது என்றுதான் செய்தி சொல்கின்றது. அத்தோடு IPTV ஊடாக தொடர முயற்சிக்கின்றது. 

ஆம் கிருபன், நீங்கள் எழுதவில்லை என்று தெரியும்.

வாசிக்கும் தீபம் வேலையாளர்களுக்கு உதவும் என்று அவ்வாறு குறித்தேன்.

இன்னுமொரு திரியில் இந்த எமது தமிழ் எழுத்தாளர்களின் திறமை குறித்து விவாதிக்கின்றோம்.

பார்த்தீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு திரியில் இந்த எமது தமிழ் எழுத்தாளர்களின் திறமை குறித்து விவாதிக்கின்றோம்.

பார்த்தீர்களா?

எந்தத் திரி? எனது கண்களில் தட்டுப்படவில்லை. 

பழய தீபம் ஊழியர்களான சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்றவர்களை புதிய தீபம் நிர்வாகம் நிறுத்தியதை அடுத்தே தீபம் தொலைக்காட்சி மீது இனிஒரு இணையம் ஊடாக பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. இந்த பரப்புரைக்கு பின்னணியாக செயல்படுபவர்கள் சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்றவர்கள். பழைய தீபத்தில் அளவுக்கு அதிகமான பணியாட்களை முன்னாள் தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் நியமித்திருந்தார். காரணம் அவர் தனது  தொழில் மூலம் கிடைக்கும் அதிக லாபங்களை உயர் வரிவிதிப்பில் இருந்து தப்புவதற்காக தீபம் தொலைக்காட்சிய தொடக்கி தொடர்ந்து நட்டத்தில் காட்டி வரி ஏய்ப்பு  செய்துவந்தார். அதற்க்காக புதிய நிர்வாகமும் புதிய உரிமையாளர்களும் 15 பேர்கள் மட்டுமே தேவையான இடத்தில் தங்கள் 40 பேரையும் வைத்திருக்கமுடியாது. தங்களுக்கு யாரை வைத்திருக்க முடியுமோ அவர்களை மட்டுமே நிர்வாகம் வைத்திருக்கும். இதில் யாரும் பிரச்சனை  இல்லை . எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க அவர்கள் பணத்திட்கு  எங்கே செல்வார்கள்? ஆனால் சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்ற சிலரே தாங்கள் தீபத்தில் இல்லை என்றால் தீபமே இயங்க கூடாது என்று பிரச்னை பண்ணுகிறார்கள். இவர்களுக்கு முதல் பிரச்னை லண்டன் பகுதில் மற்றவர்கள் போல கஷ்டப்ப்பட்டு வேலை செய்யாதவர்கள். டிவிய காட்டி சுகமாக இருந்தவர்கள் இனி மற்றவர்கள் போல் கொஞ்ச காசுக்கு வேலை செய்யணும் என்ற மன உளைச்சலே காரணம்  இவர்களது பிரச்னையை இன்னும் ஊதிப் பெருப்பிப்பவர்கள் வேறு யாரும் அல்ல மாற்றுக்கருத்து மாணிக்கங்களே .ஏன் என்றால் அவர்கள் புலி வாந்திய எடுக்க பழைய தீபம் இடம் கொடுத்தது . இப்ப எங்கே வாந்தி எடுப்பது என்ற பிரச்னை.அத்தடன் சில இலங்கை அரசு புலனாய்வாளர்கள் தீபம் தொலைக்காட்சிய அழிக்க உறுதி எடுத்துள்ளார்கள். ஆனால் புதிய நிர்வாகம் இந்த குள்ளநரிகளுக்கு பயப்படுவது போல் தெரியவில்லை.

(இது முற்று முழுதாக நான் லண்டனில் ஆராய்ந்து எடுத்த தகவல்களே இதற்கு மூலம் இல்லை தயவு செய்து என் கருத்தை நீக்கி விடவேண்டாம்)

இந்த கட்டுரையில் ,

1) மக்களவை தீபம் தொலைக் காட்சியை வாங்கவில்லை . மூன்று தனிநபர்களின் இணைந்த முயற்சி அது என்றே அறியப்படுகின்றது ..

2)பணம் இல்லை என்று சொல்லப்படவில்லை . 15 ஆம் திகதி சம்பளம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

3) ////புதிய தலைமுறையின் புலம்பெயர் வருகை உண்மையானதாயின் அது ஆபத்தானதும் கூட..இது 100 வீதம் உண்மையானது /// என்பதும் மிகச்சரியான கருத்து .

/4) //ஈழத் தமிழர்களின் உணர்வுபூர்வமான தேசியப் பிரச்சனை மனிதாபிமானமற்ற அவமானகரமான வியாபாரப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து இயங்கிவந்த தீபம் தொலைக்காட்சி சேவை ஏதோ மாற்றங்களை உருவாக்கிய ‘புரட்சிகர’ தொலைக்காட்சியல்ல. ஆயினும் ‘புதிய தலைமுறையின்’ ஊடாக இலங்கை இந்திய உளவுத்துறைகள் சீரழிந்துபோன புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியலைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.//// என்பதும் மிகச்சரியான கருத்து .

உண்மை பெயரில் கருத்தை வெளியிடமுடியாமல்  தீபம் தொலைக்காட்சி ஊழியர் என்ற பெயரில்  வாய்க்கு வந்தபடி எழுதுவது என்ன நாகரீகம்.

கோமதி சுரேன் என்று கைப்பொம்மையாக செயற்படுகின்றார் பெயரைக்குறிப்பிடும் ஊழியரே உங்கள் மனத்தாங்கல்களை  கொட்டித்தீர்த்து ஜால்ரா அடிக்கிறார். தீபம் தங்களுடையதே  என்று நேயர்களுக்கும் வெளீயாருக்கும் போட்ட நாடகங்கள் உடைப்படப்பொகிறது என்ற மன அழுத்தம் உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

மக்களவையோ அல்லது பத்பநாபனோ என்று ஆராய்வு செய்யபோன உம்மைப்போன்ற ஊழியர்களால் தான் தீபம் தெருவுக்கு வந்துவிட்டது.

உங்கள்போன்ற உள்வீட்டு தகவல்களை உண்மைகளை உருட்டிபிரட்டி தீபத்தின் பெயர்கெடுக்க செயற்படும் ஊழியர்களை தெருவில் போடுவது நல்லது.

தீபம் தொலைக்காட்சி ஊழியர் தன் சுய நலத்துக்காக தன் மன வெம்பல்களை கொட்டி தீர்த்திருக்கிறார்.ஊழியர்கள் சம்பளம் வேணும் என்பதை கேட்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அவரின் கருத்தில் அதுகுறித்து கருத்து வெளியிடதை விட மன வெம்பல்களே வெளித்தள்ளியிருக்கிறாது.அதற்குள் தீபம் என்றால் நான், நான் என்றால் தீபம் என்று பூச்சாண்டி காட்டி குடும்பத்தோடு சுரண்டி உழைத்து பிரித்தனியாவில் தீபத்தால் உல்லாச வாழ்வு வாழ்ந்து ..

அவர் இது மட்டுமல்ல இன்னும் எழுதுவார்.ர். இவையெல்லாம் போக போகிறது என்பதற்காக பொதுவாக தீபத்தின் பெயரால் கருத்து எழுதியிருக்கிறார்.அவ்வளவு தான்.

மேலும் தொடரும்

http://inioru.com/?p=35397

  • கருத்துக்கள உறவுகள்

பழய தீபம் ஊழியர்களான சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்றவர்களை புதிய தீபம் நிர்வாகம் நிறுத்தியதை அடுத்தே தீபம் தொலைக்காட்சி மீது இனிஒரு இணையம் ஊடாக பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. இந்த பரப்புரைக்கு பின்னணியாக செயல்படுபவர்கள் சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்றவர்கள். பழைய தீபத்தில் அளவுக்கு அதிகமான பணியாட்களை முன்னாள் தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் நியமித்திருந்தார். காரணம் அவர் தனது  தொழில் மூலம் கிடைக்கும் அதிக லாபங்களை உயர் வரிவிதிப்பில் இருந்து தப்புவதற்காக தீபம் தொலைக்காட்சிய தொடக்கி தொடர்ந்து நட்டத்தில் காட்டி வரி ஏய்ப்பு  செய்துவந்தார். அதற்க்காக புதிய நிர்வாகமும் புதிய உரிமையாளர்களும் 15 பேர்கள் மட்டுமே தேவையான இடத்தில் தங்கள் 40 பேரையும் வைத்திருக்கமுடியாது. தங்களுக்கு யாரை வைத்திருக்க முடியுமோ அவர்களை மட்டுமே நிர்வாகம் வைத்திருக்கும். இதில் யாரும் பிரச்சனை  இல்லை . எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க அவர்கள் பணத்திட்கு  எங்கே செல்வார்கள்? ஆனால் சாம்றதிபன் ,அனஸ்,அரசு,ராஜ்குமார் போன்ற சிலரே தாங்கள் தீபத்தில் இல்லை என்றால் தீபமே இயங்க கூடாது என்று பிரச்னை பண்ணுகிறார்கள். இவர்களுக்கு முதல் பிரச்னை லண்டன் பகுதில் மற்றவர்கள் போல கஷ்டப்ப்பட்டு வேலை செய்யாதவர்கள். டிவிய காட்டி சுகமாக இருந்தவர்கள் இனி மற்றவர்கள் போல் கொஞ்ச காசுக்கு வேலை செய்யணும் என்ற மன உளைச்சலே காரணம்  இவர்களது பிரச்னையை இன்னும் ஊதிப் பெருப்பிப்பவர்கள் வேறு யாரும் அல்ல மாற்றுக்கருத்து மாணிக்கங்களே .ஏன் என்றால் அவர்கள் புலி வாந்திய எடுக்க பழைய தீபம் இடம் கொடுத்தது . இப்ப எங்கே வாந்தி எடுப்பது என்ற பிரச்னை.அத்தடன் சில இலங்கை அரசு புலனாய்வாளர்கள் தீபம் தொலைக்காட்சிய அழிக்க உறுதி எடுத்துள்ளார்கள். ஆனால் புதிய நிர்வாகம் இந்த குள்ளநரிகளுக்கு பயப்படுவது போல் தெரியவில்லை.

(இது முற்று முழுதாக நான் லண்டனில் ஆராய்ந்து எடுத்த தகவல்களே இதற்கு மூலம் இல்லை தயவு செய்து என் கருத்தை நீக்கி விடவேண்டாம்)

ரமணன் கூறுவது உண்மையாக இருந்தால் தீபம் ஒளிவீசலாம் 

பொறுத்திருந்து பார்ப்போம்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றில் புலி நாமம் அல்லது புலிக்கு எ திர் நாமம்

புலி ஆதரவாளர்களையும் புலி எதிரானவர்களையும் வசைபாடி நாம் மகிழ்கின்றோம்

அங்கு பசியில் கிடக்கும் மக்களுக்கு எவரும் உருப்படியாக எதுவும் செய்வதில்லை தீபத்தை உண்மையான - புலி வாடை அல்லது புலி எதிர் வாடை இல்லாத - தமிழர் சொத்தாக ஆக்க யாராவது முன்வருவார்களா?

புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலராவது ஆளுக்கு 1 டாலர் பங்களிப்பு செய்தால் தமிழ் மக்களுக்கு உதவும் ஒரு IPTV ஒன்றை உருவாக்க முடியும் அதில் சிலருக்கு வேலையும் இலாபத்தை பசியில் வாடும் எமது உறவுகளுக்கு கொடுக்க முடியும்

கையில் கறைபடியாத ----- புலி சார்பு புலி எதிர் இல்லாத -----எவரும் இதை செய்யலாம்

Yarl IPTV என்ற பெயரில் yarl அங்கத்தவர்கள் இப்படியான ஒன்றை ஆரம்பிக்க விரும்பினால் நான் குறைந்தது 100 டொலர்கள் பங்களிப்பு செய்யமுடியும்

இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் விரும்பினால் அது நடக்கும்

அதென்ன புலி வாடை,புலி எதிர்ப்பு வாடை?...2009க்குப் பிறகும் இப்படி எழுத வெட்கமாயில்லை.இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீங்கள் புதுப் புது ஜடியில் எழுத?
 
அங்குள்ள மக்களுக்கு உதவி தான் முக்கியம் அந்த உதவியை புலி செய்தால் என்ன,எலி செய்தால் என்ன <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.