Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தம்பதி பூஜை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூசைக்குச் செல்வதற்குப் பதிலாகத் தம்பதிகள் வீட்டிலிருந்து கொண்டே மனம்விட்டுப் பேசினாலே அவர்கள் நீடுழிகாலம் வாழ்வார்கள்.  :)

 

 

உங்களது கருத்துத்தான் எனதும்

 

இப்படித்தான் பல இடங்களிலும் நடக்கும்

ஆனால் அவர்கள் பேசியதும் வாழ்வை தொடர்ந்ததும் வெளியில் தெரியாது.

 

இப்படியான நிகழ்வுகள் மூலம் தானே நமக்கும் செய்தி  வருகிறது.

படம் வேறு போடுகிறார்கள்.

பணம் செல்வாக்கு நேரம் இருக்கும்போது

பிரபலமாகுதல் என்பதும் தேவைப்படுகிறது. அதை  நாம் எப்படி தடுப்பது...??

அதை சிலர் வியாபாரமாக்குகிறார்கள்.

கைமேல் பலன்.

நல்ல வியாபாரிக்கு அழகு வெல்லுதல் தானே.... :D

  • Replies 51
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாமும் புத்தகம் எழுதினால் அது மனுதர்ம சாஸ்த்திரதை விட வித்தியாசமானதாக இருக்க முடியுமா? அல்லது  இதில் சம்சாரிக்கும் சந்நினியாசிக்கும் மட்டும்தான் இடம் இருக்கு என்று நாம் எமது காலை நீட்டி மற்றவர்களை வண்டியிலிருந்து உதைத்து தள்ளிவிட முடியுமா?  சிவலிங்கத்தை பாதுகாப்பதாக போட்டி போட்டுகொண்ட சிலந்தியும் யானையும் கதை இன்னமும் சமய பாடப்புத்தகங்களில் இருக்கே?  தனது இரண்டு கண்களையும் தோண்டிய கண்ணப்பர் கதை இன்னமும் நீக்கப்படவில்லையே? எதிரி என்று தெரிந்த பின்னர் முத்திநாதனின் கையால் இறக்க வென்று அவனின் காலின் கீழ் இருந்து இறந்த மெய்ப்பொருள் நாயனாரின் சரிதம் இன்னமும் சமய பட புத்தகங்களில் இருந்து விலக்கப்படவில்லையே?

 

 

மல்லையூரன்.. கல்வி கற்பதற்கு மனதை ஒரு நிலைப்படுத்தல் அவசியம் என்று கூறி இருக்கிறமே தவிர மனதை ஒரு நிலைப்படுத்தினால் கல்வி தன்பாட்டில் வரும் என்று அதனை அர்த்தப்படுத்துதல் தவறு..!

 

மேலும்.. நீங்கள் குறிப்பிட்ட பல கதைகள் புதிய பாடத்திட்டத்தில் (நாங்க படிச்சதற்கு அமைய) இருக்கவில்லை. நாயன்மார்கள் வாழ்வுக்கால சம்பங்களைத் தவிர புனை கதைகள் நீக்கப்பட்டு.. சிவாகமம்.. சைவ சித்தாந்தம்.. உபநிடதம் போன்ற விடயங்களே அதிகம் புகட்டப்பட்டன. இவை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக மனித வாழ்வியல் நெறி பற்றிப் போதித்தன. ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வு என்பது அந்த மனிதன் தன்னைத் தானே உணர்வதிலும்.... கட்டுப்படுத்தி.. செயற்படுத்தி.. வாழ்வதிலும் தங்கி உள்ளது..! அதை அவை போதிக்கின்றன. அது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட..!

 

நாங்கள் சைவர்கள். இந்துக்கள் அல்ல..! அதனால் தான் என்னவோ.. நாங்கள் சிங்கள பெளத்தர்களால் அழிக்கப்பட்ட போதும் இந்திய ஆரிய வகைப்படுத்தல் இந்துக்கள் வேடிக்கை பார்த்தார்கள்..! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா பி ஜே பி எமக்காகக் குரல் கொடுப்பதில்லை. சிங்கள பெளத்தர்களுக்கு அது அதிகம் குரல்கொடுக்கிறது..! எம்மைப் போலவே தமிழக மக்களும் சைவர்கள்..! அதனால் தான் அவர்கள் எமக்காக தமிழர்கள் என்பதற்கு அப்பாலும் அக்கறை காட்ட விளைகின்றனர்..! :):icon_idea:

மொகச்சதாரோ ஹரப்பாவில் எழுச்சி பெற்றிருந்தது.. சைவமே தவிர இந்து அல்ல. இந்து என்பது பின்னாளில் இயற்றப்பெற்ற ஒன்று..! சைவமே பழமையானது. தமிழர்களின் இறை நம்பிக்கையில் அதிக காலம் அவர்களோடு இருந்து வருவது..! :icon_idea:

சைவம் இப்படியான தம்பதி பூஜை ஆட்டிக்குட்டி பூஜை இவற்றை வலியுறுத்துவது இல்லை..! நாங்க இது குறித்து இதுவரை படித்த சைவ நூல்களில் எங்கும் இது பற்றி அறிந்திருக்கவில்லை..! ஆனால் வட இந்திய இந்துக்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அதிகம் பதிந்து கிடக்கின்றன. அவர்கள் உண்மையான சைவர்களாகவும் இல்லை. இந்துக்களாகவும் இல்லை..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இசை,

மருதின் ஒரு பதிவு: பிள்ளையார் விளையாடிப்போட்டார் போல கிடக்குது:

Maruthankerny

Maruthankerny

Advanced Member

  • av-1409.jpg?_r=0
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 3,664 posts
  • Gender:Not Telling
  • Location:USA
  • Interests:In Anything

Posted 10 March 2013 - 07:49 AM

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

இப்போது உலகம் இருக்கும் நிலையில் .... பூமிக்கு பிள்ளையார் வந்து பால் குடித்து விளையாடி விட்டு போனார்?

இப்படியொரு பேமாண்டியை தான் நாம் கடவுள் என்று கும்பிட வேண்டும் என்றால்?

நாதமுனி.. உங்களை நம்ம்ம்பி பச்சையைக் குத்திவிட்டேன்.. :unsure::icon_idea:

சனத்திற்கு காசு மெத்திப் போச்சு தமிழச்சி...

எதற்கு எல்லாம் செலவு செய்வது என்று தெரியாமல் கடசியில போய் ஐயனுக்களுக்கு கொட்டுகிறார்கள்.பூசைகள் புனஸ்காரங்களை உண்மையான மன  திருப்தியோடு செய்தால் பறவா இல்லை..எனது உறவுக்கார பெண் ஒருவர் என்னோடு சொல்லி கவலைப் பட்ட விடையம்...இப்படி ஒரு பூசைக்கு போய் விட்டு எல்லாம் முடிந்ததும் ஐயனின் காலில் தொட்டு கும்பிட்டு விட்டு நிமிரும் போது ரொம்ப, வடிவாயிருக்கிறாய் என்னைக் கட்டுறாயா என்று கேட்டாராம்...ரொம்ப வயதான ஒருவர் கேட்கும் கேள்வியா இது...அந்தப்பிள்ளை ஏற்கனவே திருமணம் செய்த ஒருவர்..இப்படி நிறைய விடையங்களை எழுதலாம்....நாங்கள் எழுதுவதை எவ்வளவு தூரம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியாது..

 

பணம் என்று தேடப்போனால், சமய வாழ்க்கையில் (பணத்திற்கு பொருளாதார நோக்கம் மட்டுமே இருக்கலாம்- இறைவனுக்கு கொடுக்க என்று பணம் தேடுவதில்லை) 1).அதனை சேர்த்து வைப்பதால் வரும் மனத் திருப்தியை அனுபவிப்பது அல்லது 2).அதை செலவழித்து வரத்தக்க உடல் சுக போகங்களை அனுபவிப்பதாற்காக மட்டும்தான் இருக்க முடியும். ஐயரிடம் காசு கொடுப்பதோ அல்லது உண்டியலில் போடுவதோ, அல்லது அரிச்சனை செய்ய சொல்லி அதை காதால் கேட்டு மகிழ்வதோ எல்லாமே இரண்டாம் நோக்கத்தில் வருபவைதான். பணத்தை ஐயரிடம் கொடுத்துவிட்டு காலைத்தொட்டு கும்பிட்டு, தான் தந்த கடனை திருப்பித்தா என்று ஐயரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தால், ஐயர் செய்ய கூடிய உதவி அன்புகாட்டுவது மட்டும்தான்.

 

நீங்கள் நல்ல வேலைகாரனிடம் நிறையப் பணத்தை கொடுத்து என்னை கவனிக்கிறாயா என்று கேட்டால் அவன் தண்ணீர் கொண்டுவந்து தருவான், உடையை மாற்றி விட்டு, அதை தோய்த்துக் காயப் போட்டுவிடுவான். நீங்கள் நிமிர்ந்து நடக்கும் போதும் ஊன்று கோலை கொண்டு வந்து தந்து பிடிக்கச் சொல்லுவான். தூக்கம் பிடிக்கதாபோதும் படுக்கையைத் தட்டிப்போட்டு படுக்க சொல்லுவான். தூக்கம் வரவில்லை என்று முறைப்பாடு கொடுத்தால் தேடி எடுத்து வந்து நல்ல ஒரு பாட்டை போட்டுவிட்டு தூங்கச் சொல்லுவான். நீங்கள் பணம் கொடுத்த ஆள் ஒரு திருடனாக இருந்தால் உங்கள் வாய் நிறைய துணி அடைந்துவிட்டு. கட்டிலின் காலுடன் கட்டிவைத்துவிட்டு, தன்னை கண்டுகொள்ளாமல் இருக்க விரல்களால் கண்ணிரண்டையும் குத்திவிட்டு, அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான். இதில் இருப்பது லக்கு மட்டுமே. இதை எண்ணி யாரும் வயோதிப காலத்தில் உதவியை தேடக்கூடாது என்று யாராவது உதேசம் செய்தால் அது இன்னொரு மதப்பிரசங்கமாகாது.

 

இதில் சமய விடையங்களை மட்டும் பார்த்தால், நீங்கள் கூறியது மாதிரியே 6ம் நூற்றாண்டிலும் ஒரு தடவை இதே மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் அழகே தன் சொருபமான ஒரு சிறுமி வசித்து வந்தாள். பருவத்தில் பெற்றொர்கள். பெண்ணுக்கு திருமணம் செய்த்துவைத்தார்கள். அவளும் தன் மனித வலிமைக்குள் உட்பட்ட முயற்சிகள் எல்லாம் எடுத்து தன் குடும்பத்தை கட்டிக்காத்து கணவனை தன்னுடன் வைத்திருக்க முயன்றாள்.  ஆனால் அவள் கணவன் ஒருநாள் அவளுக்கு தெரியாமல் அவளைவிட்டு ஓடிப்போய் பணம் உள்ள வாணிபன் ஒருவனின் மகளை திருமணம் செய்து கொண்டான்.  சௌந்தர்யமான மகளைப் பெற்ற அன்னையும், பிதாவும், படாத பாடுபட்டு ஓடிப்போன கணவனை தேடிப்பிடித்து அவனுக்கு இரண்டாம் தாரமாகத்தன்னும் தங்கள் மகள் வாழட்டும் என்று அவனிடம் அழைத்துச் சென்றார்கள். தன் முதல் மனைவி தன்வீட்டுப் படியேறி வருவதை கண்ட தனதத்தன் தன் புதிய மனைவியை அழைத்து,  புனிதவதி என்று கூப்பிட்டு தன் மகளையும்  அழைத்து பெரியோர் பார்த்திருக்க தன் முதல் மனைவின் காலில் வீழ்ந்து வணங்கி, தலையை நிமிர்த்தி "அம்மையே" என்று தேவியை அழைப்பது போல் அழைத்தான்.  அப்படி உயர்வாக அழைத்தானே அல்லாமல் அவன் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த தாய், தந்தையர், மாமன், மாமி பெரியோர்களால் யாராலும் அவளை ஏற்றுக்கொள்ள அவனை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அந்த பெண் உண்மையில் கணவன் வீடு தேடி வந்திருந்தது அவனுடனான தாம்பத்திய வாழ்வை புதுப்பிக்க அல்ல. அவனுக்கு ஒரு துணை கிடைத்துவிட்டதால், அந்த வாழ்வில் தனக்கு இருந்த அவனின் கடமைகளில் இருந்து தனக்கு விடுதலைக்கான அவனின் ஒப்புதலுக்கே. அது கிடைத்தவுடனே அந்த இடத்திலேயே தான் தோலையும் சதையையும் உதறி எறிந்துவிட்டு எலும்புகளுடன் மட்டும் திருவேங்கடனைத்தேடி போய்விட்டாள்.

 

அந்த பெண்ணை ஐயர் அல்ல அங்கு அழைத்து சென்றது. அங்கு அழைத்து சென்றது உங்களின் நண்பிகளில் ஒருவர். ஐயர் எத்தனை அழகான பெண்களை தன்னை திருமணம் செய்ய சொல்லிக்கேட்டாரோ தெரியாது.  ஆனால் சமயத்துக்கு வெளியே ஒன்று மட்டும் சொல்ல முடியும். கோவில் தேடிச் சென்று அந்த பெண் தான் கொடுத்த பணதுக்கான பலனை பெற்றுக்கொண்டா. தாம்பத்திய உறவு என்றால் என்ன என்பதை விளங்கியதால் தனது கணவன் இருக்க ஐயர் தன்னையும் திருமணம் செய்ய சொல்லிக்கேட்டார் என வந்து உங்களிடம் குறைப் பட்டுக்கொண்டா. அவ நிச்சயமாக சிறைக்காப்பில்லமல் வெளியே சென்று திரும்பி வந்து கணவனுடன் திருப்திகரமான வாழ்க்கை நடத்தக்கூடிய பாடத்தை ஆலயத்தில் கற்றுக்கொண்டா. அவ அதை உங்கள் உங்களீடம் சொன்னது மாதிரியே இன்னும் பல நண்பிகளிடமும் சொல்லிக் கவலைப்படுவா. அப்படி நடந்து கொள்வது அவவின் பாதுகாப்பு வேலி. அப்படி சொல்லும் போது அதை கேட்கும் பெண்களில் ஒருவர், இலகுவாக சிரித்துவிட்டு, தோழி இதில் உட்பொருள் ஒன்றும் இல்லை, இலகுவாக எடுத்துக்கொள் என்றும் கூறுவா. அன்று தொடக்கம் அந்த பெண் தன்னைத்தான் காத்துக்கொள்ள கற்றுக்கொண்டதுடன், புதிதாக  தன் மனதையும் இலகுவாக வைத்துக் கொள்ளவும் கற்றுகொண்டுவிடுவா.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

 

 ஐயர்  என்று சொல்லக்கூடாது

ஐயா  என்று சொல்லணும்

(சிறு பிள்ளையை  மன்னித்தருள்ள ஐயா :D )

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

 

இந்த பழமொழியும்  நல்லாத்தான் இருக்கு.... :D  :D

மல்லையூரன்.. கல்வி கற்பதற்கு மனதை ஒரு நிலைப்படுத்தல் அவசியம் என்று கூறி இருக்கிறமே தவிர மனதை ஒரு நிலைப்படுத்தினால் கல்வி தன்பாட்டில் வரும் என்று அதனை அர்த்தப்படுத்துதல் தவறு..!

 

நானும் நீங்கள் சொன்னத்தாக சொல்லவில்லை. எனது வாதம் நீங்கள் கூறியவைகளைக் கடந்து போக அந்தப் படி அவசியம். அதாவது, மூளையால் கற்று, உடம்பால் உணர்த்து கொள்பவற்றுக்கு மேலே போனால்த் தான் துறவி துறவறத்தை உணர முடியும். நான் நண்பர்களுடன் சமய விடைங்களைப் பற்றி விவாதிக்கும் போது இதை சொல்வேன் . ஆன்மிக அந்தஸ்த்தில் ஆங்கிலம், தமிழ், வடமொழி  என்ற படிகளை நாம் இன்று வகுத்துள்ளோம்.  இந்த மூன்றிலும் ஒரே பொருளில் வருபவைதாம், Renunciation, துறவு,  நிர்வாணம். ஆனால் நான் அவற்றின் பொருளிலும் அந்த அந்தஸ்த்து மறைந்திருப்பத்தாக அவர்களுக்கு விளங்க வைப்பேன்.

1). Renunciationல் வரும் துறவி வாழ்க்கையை  வெறுத்து ஒதுக்குகிறான். இது மிகத்தாழ்ந்த படி. அல்லது அந்தஸ்த்து. அது Rejecting லிருந்து எழுவது. இதில் மனிதன் தனது முழு உணர்வையும் தக்க வைத்துக்கொண்டு செயலாற்ற முயல்கிறான்.  அதாவது கர்மத்தால் வினையை தேடுவதை உணர்ந்தும், விலக்குதல் என்ற கர்மத்தில் தன்னை ஆழ்த்தி தொடர்ந்தும் கர்மவினைகளை தேடுகிறான். உதாரணத்துக்கு., ஒரு மண்டபத்தில் ஆடம்பரமான கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உடுத்து நடத்தி கனவான்களும் சீமாங்களும் ஒய்யாரமாக வந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.  தெருவால் சென்ற நமது renunciation  துறவி முழு நிர்வாணமாக, மக்கள் தன்னைக் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த மண்டபம் இருந்த  நகரத்தின் தெருக்களில் அலைந்து திரிகிறான்.  மண்டபத்திலிருந்து வந்த கேளிக்கைகைகளும், பாட்டுக்களுக்குமான ஒலியை கேட்டவுடன்  அந்த மண்டபத்துக்குள் புகுந்துவிடுகிறான். கொண்டாடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து "பாபவாழிகளே உங்கள் கண்கள் குறுடாகட்டும், எவ்வளவோ கற்றும் இப்படி திமிராக நடந்து கொள்ள உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது. இறைவனின் பிரதிபலிப்பான எளிமையையும், இரகத்தையும் மறந்த நீங்கள் என் சொல்லை கேட்காவிட்டால் இறப்பின் பின்  நரகத்திற்குள் விழுவீர்கள் என கூச்சலிடுகிறான்."  

 

2).இன்னொரு கிராமத்தில் நமது தமிழ் பதம் தரும் துறவி வாழ்ந்து வருகிறான்.  தான் உடைகளை துறந்தாலும் வாழ்கையை துறக்க முடியவில்லை என்பது அவன் மனதில் நிழலாடும் வேதனை. சிந்தனையால் கருமாற்றி வினைகளை தேடாமல் இருக்க ஊரின் சுடலைக்கு பக்கத்தில் ஒதுக்கமாக ஒரு மரநிழலின் கீழ் வாழ்கிறான். பகலில், தான்  இரவு போர்த்த கந்தையை கசக்கி காயப்போட்டுவிட்டு ஊரார் கறுமாதி செய்யும் கேணியில் குளித்துவிட்டு தன் தியானத்தில் இறங்குவான். மதியம் கழித்து தான் அந்த கந்தையை உடுத்துகொண்டு தன் அரை நிர்வாண நிலையை சகித்துக்கொள்ளும் குடும்ப பெண்களின் முன்னால் வந்து தண்டிப் பெற்றுகொண்டு சுடுகாட்டுக்கு சென்று சமைத்து உண்பான். சுடுகாட்டுக்கு வருபவர்கள்  போர்வை கொடுத்தாலும் ஏற்காமல் குளிரிலும் மழையிலும் தொடர்ந்து தன் உடம்பை வதைப்பான். இவன் துறந்திருக்கிறான். அது உடம்பை மட்டுமே. அவனுக்கு வாழ்க்கையை துறக்க அடுத்த படி ஏறினால் மட்டுமே முடியும்.

 

3). இப்போது நாம் காணப்போது நிர்வாணி. நமக்கு ஆச்சரியம் அளிக்கத்தக்கதாக நாம் இன்று அவனைக் காணும் போது அவன் குளித்து அழகாக உடுத்து தலை சீவி, காணப்படுகிறான். அந்த ஊரிலே ஒரு தனவந்தார் இருக்கிறார். அவர் தனது தேவைக்காக ஒரு கோவில் வைத்திருக்கிறார்.  அந்த கோவிலில் தான் இந்த நிர்வாணி சிலகாலமாக தங்கியிருந்தான்.  தனவந்தருக்கு அவனின் ஆன்மிக உயர்வைப்  பற்றி கோவில் தொண்டர்களை ஏற்கனவே காதில் போட்டிருந்தார்கள்.  அதனால் அவர் இன்று அவனிடம் உபதேசகம் கேட்கும் ஆர்வத்துடன் குளித்து புது வேட்டி கட்டி, விரதமாக அவனைக்காண வந்திருந்தார். ஆனால் அவன் பல நாள் குளியாமல், கெட்ட நெடி தூரவே வீச பைத்தியக்கரன் மாதிரி எதையோ பேசிக்கொண்டும் இருந்தான்.  பல ஆண்டுகள் சீராக ஒருநாள் தன்னும் உண்ணாததால் வெறும் குச்சிகளும் தண்டுகளாலும் அவன் உடம்பு செய்யப்படிருந்தது . தனவந்தர் தனது வருகையை அறிவித்த போது அவரை அழைத்து வைத்திருந்து தொடர் பில்லாதவை பலவற்றை பற்றி பேசிவிட்டு தனக்கு பசியெடுப்பதாக கூறிகொண்டு இடையில் எழுத்து எங்கோ போய்விட்டான். தொண்டர்கள் வந்து சமாசரத்தை தனவானுக்கு விளங்கப்படுத்த அவர் அவர்களில் ஒருவனை தனது வீட்டு அழைத்து சென்று நல்ல தரமுள்ள ஆடைகளை சிலவற்றை கொடுத்து, அடுத்த முறை தான்  அவனிடம் உபதேசம் கேட்க வரும் போது அவனை நன்றாக கவனித்து இருக்க வேண்டும் என்று கட்டளை போட்டுவிட்டு  தன் வழமையான காரியங்களில் இறங்கிவிட்டார். கோவிலுக்கு திரும்பி வந்த தொண்டன் நமது நிர்வாணி எங்கோ கண்டெடுத்த அழுகிய மாம்பழம் ஒன்றை வைத்து சூப்பிக்கொண்டிருப்பதை கண்டு அதை பறித்து எறிந்து விட்டு, நிர்வாணியை வலோற்காரமாக அழைத்து சென்று நன்றாகக் குளிப்பாட்டி புதிய உடைகளை போட்டு கோவிலில் இருந்த தரமான பிரசாதத்தையும் உண்ண கொடுத்தான்.  அதை சாப்பிட்டுவிட்டு  யாருடனாவது எதையாவது தர்க்கிக்கும் மனத்துடன் நிர்வாணி கோவிலை விட்டு வெளியே வந்தான்.  இந்த நிலையில் வைத்துதான் நாம் அவனை முதல் முதல் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அப்போது  நான்றாக உடுத்திருந்த இரண்டு சிறார்கள் ஒரு மண்டபத்திலிருந்து ஒருவரை ஒருவர் துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள்.  நோக்கம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த நிர்வாணி மீதி மோதி ஒரு சிறிசு கீழே விழுந்து காயப்பட்டுப் போகிறது.  எங்கிருந்து வந்தார்கள் சிறுவர்கள், எதுக்கு எங்கே போக வேண்டும் என்ற எந்த  நோக்கம் இல்லாத நிர்வாணி விழுந்த குழந்தையை தூக்கிகொண்டு  உதவி பெற அந்த மண்டபத்துள் நுளைகிறான்.   அங்கே நடந்து கொண்டிருந்த பாட்டிக்காக கடமையில் இருந்த உதவியாளர் பிள்ளையை வாங்கிக்கொண் டு அவனை வெளியே அனுப்ப முயன்ற போது தனது பிளையை காப்பற்றியவரை தனது கணவனுக்கு காட்டவும், மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தவும் அந்த சிறிசின் தாய் உள்ளே அழைத்து செல்கிறாள். அந்த நேரத்தில் பரிதாப உருவத்துடன், கோமாளித்தனமாக நல்ல உடைகளை உடுந்திருந்த மனிதரை வினோதம் பார்த்துக் குசு குசு பேச சில இளம் பெண்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். பெண்கள் குசுகுசுப்பாக பேசுவதையும் கேலியாகச்  சிரிப்பதையும் கேட்ட,  அவர்களுடன் அங்கிருந்த போதகர் ஒருவர் தன் கவனத்தை இந்த புதிய மனிதர் மீது திருப்புகிறார்.  அவர் அந்த மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறார்.  அந்த போதகர் தான் நமது கோவில்த் தனவந்தரும்.   அவமரியாதையான விடையங்கள் எதாவது நடந்து விடலாம் என்று தனக்குள் தான் பரிதவித்து கொண்டு ஓடிவந்து மற்றவர்கள் அடக்குகிறார். தன்னைத்தான் முன்னிலைப்படுதுகிரார். அப்போது  நொய்மைக இருந்த நமது நிர்வாணியை கைத்தாங்கல் கொடுத்து மேடைக்கு அழைத்து வர தனது அழகிய உதவிகளில் ஒன்றை அமர்த்திவிட்டு தான் மேடையில் முதலில் ஏறி நமது ஆன்மிக சிகரத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய ஆரம்பிக்கிறார். அந்த அழகியின் உதவுடன் நமது நிர்வாணி மேடை ஏறி மக்களுக்கு காட்சி அளிக்கிறார். இப்போதுதான் நாம் அவரை யார் என்று முழுமையாக தெரிந்து கொள்கிறோம்.

 

எதையாவது வெறுத்து ஒதுக்குவதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ அல்ல ஆன்மீகம். 

 

மேலும்.. நீங்கள் குறிப்பிட்ட பல கதைகள் புதிய பாடத்திட்டத்தில் (நாங்க படிச்சதற்கு அமைய) இருக்கவில்லை. நாயன்மார்கள் வாழ்வுக்கால சம்பங்களைத் தவிர புனை கதைகள் நீக்கப்பட்டு.. சிவாகமம்.. சைவ சித்தாந்தம்.. உபநிடதம் போன்ற விடயங்களே அதிகம் புகட்டப்பட்டன. இவை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக மனித வாழ்வியல் நெறி பற்றிப் போதித்தன. ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வு என்பது அந்த மனிதன் தன்னைத் தானே உணர்வதிலும்.... கட்டுப்படுத்தி.. செயற்படுத்தி.. வாழ்வதிலும் தங்கி உள்ளது..! அதை அவை போதிக்கின்றன. அது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட..!

 

நாங்கள் சைவர்கள். இந்துக்கள் அல்ல..! அதனால் தான் என்னவோ.. நாங்கள் சிங்கள பெளத்தர்களால் அழிக்கப்பட்ட போதும் இந்திய ஆரிய வகைப்படுத்தல் இந்துக்கள் வேடிக்கை பார்த்தார்கள்..! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா பி ஜே பி எமக்காகக் குரல் கொடுப்பதில்லை. சிங்கள பெளத்தர்களுக்கு அது அதிகம் குரல்கொடுக்கிறது..! எம்மைப் போலவே தமிழக மக்களும் சைவர்கள்..! அதனால் தான் அவர்கள் எமக்காக தமிழர்கள் என்பதற்கு அப்பாலும் அக்கறை காட்ட விளைகின்றனர்..! :):icon_idea:

மொகச்சதாரோ ஹரப்பாவில் எழுச்சி பெற்றிருந்தது.. சைவமே தவிர இந்து அல்ல. இந்து என்பது பின்னாளில் இயற்றப்பெற்ற ஒன்று..! சைவமே பழமையானது. தமிழர்களின் இறை நம்பிக்கையில் அதிக காலம் அவர்களோடு இருந்து வருவது..! :icon_idea:

சைவம் இப்படியான தம்பதி பூஜை ஆட்டிக்குட்டி பூஜை இவற்றை வலியுறுத்துவது இல்லை..! நாங்க இது குறித்து இதுவரை படித்த சைவ நூல்களில் எங்கும் இது பற்றி அறிந்திருக்கவில்லை..! ஆனால் வட இந்திய இந்துக்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அதிகம் பதிந்து கிடக்கின்றன. அவர்கள் உண்மையான சைவர்களாகவும் இல்லை. இந்துக்களாகவும் இல்லை..! :)

 

நான் குறிப்பிடிருந்தது தமிழ்க் கதைகளை மட்டுமே. ஆன்மீக ரீதியாக  சைவ மதம், இந்து மதம் என்று இரண்டு இல்லை. சைவ சிந்தாந்தங்கள் சமரச சன்மார்க்கத்தைத்தான் போதிப்பன. எனவே நீங்கள் சொல்லும் இரண்டு பிரிவுகள் சரித்திர ரீதியாக இருந்தாலும் அவற்றின் அடிப்படைப் பேதங்களை சைவ சமயம் ஏற்றுக்கொள்ளாது.  நீங்கள் விவாதிப்பதற்கு சமயம், சரித்திரம், அரசியல் என்ற மூன்றையும் ஒன்றாக எடுக்கிறீர்கள். அவை தனித்தனி தலைப்புகளின் கீழ் எடுக்கப்படவேண்டியவை. (திரி பேசாப் பொருளில் இருந்தாலும் எல்லாவற்றையும் கலப்பதால் தெளிவு பிறக்காது) அதாலால் நான் சரித்திரம், அரசியல் இரண்டிற்குள்ளும் இந்தத் தடவை போகவில்லை.

 

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

 

எல்லாக் கோவிலும்தான். அடுத்த முறை ஐயரைக் குத்தமட்டும் என்று கோவிலிற்கு போனால் அங்கு ஒரு பொடிகாட்டும் நிற்பார் கவனம். :D

 ஐயர்  என்று சொல்லக்கூடாது

ஐயா  என்று சொல்லணும்

(சிறு பிள்ளையை  மன்னித்தருள்ள ஐயா :D )

அத்தோடு இந்த முறை உங்களிடம் சொல்ல கருத்தில்லாமல் எழுத வந்ததையும் மன்னிக்கிறேன். :D

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

 

அது உங்கள் அப்பிராயம். வேறும்  எதும் அந்த ஐயரைப்பற்றி உண்மையாக இருந்தாலும், இப்போது நீங்கள் ஏன் அந்த ஐரோடும் காய்கிறீர்கள் என்பது விளங்குமாப்போல் இருக்கிறது. :D

 

Edited by மல்லையூரான்

&nbsp;

இந்த பழமொழியும் &nbsp;நல்லாத்தான் இருக்கு.... :D&nbsp; :D

&nbsp;

சிறிலங்கள் ஆமியிடம் இருந்து தெரிந்து வைத்திருப்பது அது. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

&nbsp;

&nbsp;

சிறிலங்கள் ஆமியிடம் இருந்து தெரிந்து வைத்திருப்பது அது. :D

 

 

 

அத்தோடு இந்த முறை உங்களிடம் சொல்ல கருத்தில்லாமல் எழுத வந்ததையும் மன்னிக்கிறேன். :D

 

ராசா

காலைக்காட்டுங்கோ

நான் இந்த விளையாட்டுக்கு வரல...  :lol:   :D   :D

Edited by விசுகு

 

 

ராசா

காலைக்காட்டுங்கோ

நான் இந்த விளையாட்டுக்கு வரல...  :lol:   :D   :D

 

 

பயப்படாமல் விழலாம், அநியாயம் செய்யமாட்டேன். நான் யாயினி பார்த்த ஐயர்  இல்லை. இசை மேடை ஏற்றிவைத்த ஆள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயப்படாமல் விழலாம், அநியாயம் செய்யமாட்டேன். நான் யாயினி பார்த்த ஐயர்  இல்லை. இசை மேடை ஏற்றிவைத்த ஆள். :lol:

 

தெரிந்தபடியால் தானே எழுதினேன்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியுள்ள மனிதர்களை நயத்தாலும், புத்தி குறைந்தவர்களைப் பயத்தாலும் தாம்பத்தியத்தில், இணைத்து வைப்பது சமுதாய வழக்கம்! :o

 

நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!

 

நாதமுனியின் கருத்துடன் (கண்ணதாசனின் வரிகள்) , நூறு வீதம் உடன்படுகின்றேன்!

 

வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ நீங்கள் ஒருநாளும் போகேல்லைத் தானே புங்கை. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வரவர மல்லைக்கு என்னவோ நடந்துபோச்சு. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பிரசங்கம் அல்லது கட்டுரை. எதுக்கும் ஒருக்கா நீங்கள் .........போய்ப் பாருங்கோ மல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
ஓகே எல்லாம் சரி,
 
வியாபாரத்தை கவனிப்போம் வாருங்கோ,
 
லண்டனில, நல்ல இடம் ஒண்டு இருக்குது. ஒரு நல்ல கோயில் வைக்க அருமையான இடம். பக்கத்தில பர்ர்கிங் வசதியும் இருக்கு.
 
ஆத்தங்கரை ஓரமா இருகிறதால  சும்மா தீர்த்தம், அது இது எண்டு துட்டுப் பார்கலாம்.
 
எல்லாத்துக்கும் முக்கியமா, ஐயா ரெடி. மகனும் இந்தியா போய் மந்திரம் படிச்சு வந்திருக்கிறார்.
 
காசு கொஞ்சும் முதல் போடுற ஆக்கள், ஓடி வாருங்கோ, நல்ல வட்டியோட ஒரு வருசத்துக்குள திருப்பி தரலாம். மேலும் தலைவர், தனாதிகாரி மாதிரி போஸ்டுகளும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆரும் விருப்பம் எண்டால் கெதியாய் சொல்லுங்கோ. இங்கை ஆரோ நிழலியானந்த சுவாமிகள் பத்தி கதைச்சினம்.
 
முந்தி விடுவாரோ எண்டு பயம் பாருங்கோ!!! 
 

Edited by Nathamuni

நானும் யோசிச்சனாந்தான். எதுக்கும் வீட்டுக்குப்பக்கத்து கோயில் ஐயரை ஒருக்கால் போய் பார்க்கலாமோ என்று நினைத்தேன். ஆனால் இசையின் கருத்தைக் கேட்ட பிறகு கண்ணாடி ஒன்று வாங்கும் பிளான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓகே எல்லாம் சரி,
 
வியாபாரத்தை கவனிப்போம் வாருங்கோ,
 
லண்டனில, நல்ல இடம் ஒண்டு இருக்குது. ஒரு நாள் கோயில் வைக்க அருமையான இடம். பக்கத்தில பர்ர்கிங் வசதியும் இருக்கு.
 
ஆத்தங்கரை ஓரமா இருகிறதால  சும்மா தீர்த்தம், அது இது எண்டு துட்டுப் பார்கலாம்.
 
எல்லாத்துக்கும் முக்கியமா, ஐயா ரெடி. மகனும் இந்தியா பொய் மந்திரம் படிச்சு வந்திருக்கிறார்.
 
காசு கொஞ்சும் முதல் போடுற ஆக்கள், ஓடி வாருங்கோ, நல்ல வட்டியோட ஒரு வருசத்துக்குள திருப்பி தரலாம். மேலும் தலைவர், தனாதிகாரி மாதிரி போஸ்டுகளும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆரும் விருப்பம் எண்டால் கெதியாய் சொல்லுங்கோ. இங்கை ஆரோ நிழலியானந்த சுவாமிகள் பத்தி கதைச்சினம்.
 
முந்தி விடுவாரோ எண்டு பயம் பாருங்கோ!!! 

 

 

என் காலில்தான்  விழுவேண்டும்

ஓகேயா??? :D

  • கருத்துக்கள உறவுகள்

என் காலில்தான்  விழுவேண்டும்

ஓகேயா??? :D

 

அப்படி போடுங்க அரிவாளை விசுகர்,
 
இது வியாபார உலகம். எதை வைத்து காசு பார்க்கலாம் என்று அறிந்து சந்தை படுத்தி காசு பார்க்கும் வியாபாரிகள் போல் கோவில் வைப்பவர்கள் செயல் படுகின்றனர்.
 
அவர்கள் ஒரு சேவையினை வழங்குகின்றனர். விருப்பமானவர்கள் வாங்குகின்றனர். சேவைக்கு ஒரு விலையினை நிர்ணயித்து வழங்குகின்றனர்.
 
இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. லண்டனில் மட்டும் குறைந்தது 40 கோவில்கள்.
 
சாராயக் கடையில் தண்ணி விற்கிறார்கள். போய்   அடிக்கின்றோம்.
 
அதற்காக வியாபாரம் செய்பவர்களையும், தண்ணி வார்பவர்களையும் தண்ணி அடிக்காதவர்கள் திட்டி என்ன நடக்கப் போகிறது?
 
எந்த ஊர் நியாயம் ஐயா?
 
சட்டத்துக்கு உட்பட வரையில் எந்த 'வியாபாரமும்' சரியானதுதான் என்பது நம்ம நியாயம்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி எழுதியிருப்பதை வாசித்துவிட்டு பச்சை போடலாமா என்று யோசித்தால், அது பகிடி என்று உறுதியா சொல்ல முடியேல்ல.. :(:D

 

கோவில் விடயத்திலும் யாராவது பகிடி விடுவார்களா???

 
பிரச்சாரத்தை முன்னெடுத்து தாம்பத்திய பூசையை கோவிலில்  தொடக்கிவிட்டு.........
வீடியோ கமராவுடன் போக வேண்டுயதுதான் பாக்கி என்று நான் பெரிய திட்டமே போட்டுகொண்டு இருக்கிறேன்.
நீங்கள் இதை பகிடி என்கிறீர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பேசாமல் அல்லாஹ்வின் பின்னால் செல்லலாமோ

எனத் தோன்றுகின்றது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பேசாமல் அல்லாஹ்வின் பின்னால் செல்லலாமோ

எனத் தோன்றுகின்றது.

 

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

 

எப்பவும்... வாள், உறையுக்குள் இருந்தால்.... தான், கூர் மழுங்காமல் இருக்கும். :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

 

பிறகென்ன, வாத்தியார், 'முக்கால் வாத்தியார்' எண்டு பேரை மாத்திப் போடுவம்!!! 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும்... வாள், உறையுக்குள் இருந்தால்.... தான், கூர் மழுங்காமல் இருக்கும். :icon_idea:

 

வாள் எண்டால் வெளியால வந்து கூர் மழுங்க வேண்டும்.
 
இல்லை எண்டால் வாள் இருந்தென்ன, இல்லா விட்டால் என்ன.
 
வெட்டு வாங்கி உறையிளிருந்து, வெளியில எறிபடுறது நல்லது.  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.