Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பாடசாலையில் மதுபான அனுமதி

Featured Replies

இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை

பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம்.

அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில  நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழில பேசுங்கோவன் நாங்கள் எல்லாரும் தமிழர் தானே எல்லாருக்கும் விளங்கும் இலகு தானே என்டு. அதுக்கு நிர்வாகத்தில இருந்த ஒரு அறிவான தமிங்கிலம் சொல்லிச்சு  நீங்க முதிலிலேயே சொல்லவில்லை நாங்க தமிழில கூட்டம் வைக்க ஒழுங்கு பண்ணிக்கொண்டு வந்திருப்பம் இப்ப தமிங்கிலத்தில தான் நடக்கும் என்றார் எந்த வெட்கமும் இல்லாமல் சுத்த தமிழில சொன்னார் அங்க கூடுதலான ஆட்கள் புதிய பெற்றோர் எல்லாரும் இப்போ தாயகத்தில இருந்து குடும்பமானோர் .ஜரோப்பாவில இருந்து வந்தோர் என பலர்.

சரி கூட்டம்  தமிங்கிலத்திலேயே போச்சு கணக்கு வழக்கெல்லாம் தமிங்கிலத்தில விளங்க படுத்திச்சினம். ஏன் இந்த கூட்டத்தை வைக்கிறார்கள் என்பதே அவர்களுக்கே புரியவில்லை ஏன் இந்த பெற்றோர்கள் இவ்வளவு நேரம் செலவு செய்து தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்கனும், எங்கள் சமூகத்தோடு ஒரு உறவு இருக்கனும் என்று சொல்லி வருகிறார்களே  அவர்களுக்காக ஆதல் எங்கள் அரைகுறை மேதாவித்தனத்தை காட்டாமல் புரிதல் மொழியில் அவர்களோடு உறவை வைத்து கொள்ளலாம் என்ட நோக்கமே  நிர்வாக கூட்டத்தில் காணப்படவில்லை. சரி கூட்டம் முக்கிய விவாதத்திற்கு வந்தது.

இந்த தமிழ் பள்ளியில் ஒரு முக்கிய பிரச்சனை எந்த பிள்ளைகளின் கலைவிழா நடந்தாலும்  முன்னுக்கு பிள்ளைகளின்  நிகழ்ச்சிகள் நடக்கும் பின்னால மதுக்கடை திறக்கப்படும், இதுக்கென்டு கொஞ்ச பேர் இருக்கினம்

நிர்வாகமோ அல்லது விழா பொறுப்பாளரோ எந்த தடையும் இல்லை எந்த எதிர்ப்பும் இல்லை ,பழைய மாணவ பெற்றொர் என்டு கொஞ்ச பேர் இருக்கினம் அவையும் வந்துவிடுவினம். அவை அண்டைக்கு தானாம் எல்லாரையும் சந்திச்சு எஞ்சோய் பண்ணலாம்.

இந்த பிரச்சனையை கூட்டத்தில இருந்த ஒருத்தர் கேட்டார் விழாக்களில மது பாவிக்க அனுமதிப்பது தவறு பிள்ளைகளை தவறான வழியில கொண்டு போறியள் அதுவும் தமிழ் கலாச்சார பண்புகளை பிள்ளைகளுக்கு  புகட்டுவதாக சொல்லிதான் இப்பள்ளியை நடாத்துகிறீர்கள்இதை நிறுத்தனும் என்றார்

 

நிர்வாகத்தில இருந்து பதில் வந்திச்சு இதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை இங்க இதெல்லாம் சகஜம். மதுவை உள்ளே கொண்டு வருவதையோ அல்லது கொண்டு வந்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து இலவசமாக அருந்துவதையோ நாங்கள் நிற்பாட்டும் யோசனை இல்லை,விழாக்களிற்கு வருபவர்கள் எஞ்யோய் பண்ணிட்டு போக உரிமை உண்டு. இல்லையேல் பல பழைய மாணவ பெற்றோர்கள் மற்றும் பலர் தங்கள் விழாவிற்கு வருவதை நிறுத்தி விடுவார்களாம்.

இதை இன்று நிர்வாக கூட்டத்தில் பெற்றோர்களுக்கு நிர்வாகத்தில் இருந்து பதிலாக சொல்லப்பட்டது. இவ்வளவு காலமும்  தெரிந்தும் தெரியாமலும் செய்யப்பட்டது இன்றும் வெளிப்படையாக நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்ட்டுள்ளது.

 

இதில் சரி பிழைக்கு அப்பால் என்ன நோக்கிற்காக இந்த பாடசாலை தமிழின் பெயரால் நடாத்தப்படுகிறது?

ஆங்கிலத்தில் நிர்வாக கூட்ட உரையாடல்

மாணவர்களின் விழாக்களில் மதுபான அனுமதி

கலைவிழா பிரசுரத்தில் முற்று முழுதான ஆங்கிலம்,ஒரு தமிழ் சொல் காணப்படமாட்டாது.

 

இங்கே யார் தவறு?

பெற்றோர் தவறா? அல்லது எது நடந்தாலும் எங்களுக்கென்ன என்ன ஒதுங்கும் தன்மையா?

அல்லது ஏன் தேவை இல்லாமல் பகைப்பான் என்று தவறை கேட்காமல் விட்டு ஒதுங்குவது போன்ற தன்மையால்  அவர்கள் இப்படி தொடந்து செய்கிறார்களா?

இதை சரிப்படுத்துவதற்கான வழி தான் என்ன?

 

 

 

  • Replies 60
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு லண்டனில் பல உறவுகள் உள்ளனர். கையில் பத்துசதம் இல்லாவிட்டாலும் அவர்களின் இங்கிலிஸ் அவர்களுக்கு மூலதனம்.பிறரை நக்கலடிக்கவும் பயன்படுதுகின்றார்கள். இதில் யாழ்களமும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பெற்றோரால் தான் தெரியப்படுகிறது. நிர்வாகம் சரியாக செயற்படவில்லை எனில் அடுத்த தடவை சரியான நிர்வாகத்தை பெற்றோர் தான் தெரிய வேண்டும். பெற்றோர் தான் பொறுப்பெடுத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களுக்கு கதைக்க பயம்,வெட்கம்.அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது,நாகரீகம் தெரியாது என்று தங்களைப் பற்றி குறைவாக மற்றவர்கள் நினைச்சுப் போடுவார்கள் என்ட பயமும்,வெட்கமும் தான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தமிழ்ப்பள்ளியை நடத்துவதற்கு அரசு பணம் கொடுக்கிறதா அல்லது முழுக்க பெற்றோர்களின் பணத்தில் செயற்படுகிறதா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எல்லா பள்ளிகளும் உதவி பெறுகின்றன, பெற்றோரிடம் அங்கத்துவ பணம், மற்றும் தவணைக்கட்டணம் அறவிடுகிறார்கள்.

பிரச்சனை அதுவல்ல.

நிர்வாகத்தை பொறுப்பெடுப்பவர்கள்   இப்பள்ளி  எந்த நோக்கிற்காக தொடங்கப்பட்டது என்பதை  மறந்து தங்கள்  சுய விருப்பங்களை நிறை வேற்ற  முற்படுகிறார்கள்.

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பள்ளிக் கூடத்தின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இங்கு மது அருந்துபவர்கள்தான் பதவி பெறமுடியும். இன்றும் பொங்கல் விழா , விளையாட்டு மண்டபத்தில் மது தாராளமாக ஓடியது.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுராஜ்1 யாழுக்கு நல்வரவாகுக  வந்ததும் வராததுமாய் ஆட்லறிஅடியோடை வருகிறீங்கள் அப்புறமா அந்த croydonதமிழ் சங்கபிரச்சினை முடிஞ்சுதா முடியைலையா ?  :)

இதை சரிப்படுத்துவதற்கான வழி தான் என்ன?

 

இவங்களுக்கு இருட்டடி போடவேணும்!!  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு இருட்டடி போடவேணும்!!  :wub:

sOliyAn அண்ணேய் நம்மாட்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரப்போறாங்கள் சட்டத்தை கையிலை தூக்கக்கூடாதுன்னு தெரிஞ்சுதான் கேட்கிறீங்களா தைரியமான ஆள் தான் நீங்க கறண்டு கம்பியை கைல பிடிக்கிறீங்க வாழ்த்துக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பள்ளிகளும் உதவி பெறுகின்றன, பெற்றோரிடம் அங்கத்துவ பணம், மற்றும் தவணைக்கட்டணம் அறவிடுகிறார்கள்.

பிரச்சனை அதுவல்ல.

நிர்வாகத்தை பொறுப்பெடுப்பவர்கள்   இப்பள்ளி  எந்த நோக்கிற்காக தொடங்கப்பட்டது என்பதை  மறந்து தங்கள்  சுய விருப்பங்களை நிறை வேற்ற  முற்படுகிறார்கள்.

நான் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன் என்று இப்ப மறந்துவிட்டது. :D ஆனால் அரச்ன் பணத்தைப் பெற்று நடத்துவதாக இருந்தால் அவர்களின் வரைமுறைக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைகள் இருக்கும். அவ்வகையில் பள்ளிக்கூட வளாகத்தில் மது இருக்கக்கூடாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிபந்தனைகளுள் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

sOliyAn அண்ணேய் நம்மாட்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரப்போறாங்கள் சட்டத்தை கையிலை தூக்கக்கூடாதுன்னு தெரிஞ்சுதான் கேட்கிறீங்களா தைரியமான ஆள் தான் நீங்க கறண்டு கம்பியை கைல பிடிக்கிறீங்க வாழ்த்துக்கள். :lol:

பெருமாள்.. நீங்கள் நம்ம கட்சியில் நிற்பீர்கள் என நினைத்திருந்தேன். :D

ஆகையால், இருட்டடி போடும் விடயம் தொடர்பாக சில விளக்கங்களைக் கொடுக்க நேரிடுகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர, ஏழை மக்களுக்கு நீதிக்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. அங்கு இருட்டடி என்பது சமூக அளவில் ஓரளவு இலைமறைவு காயாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சட்டம் செயற்படாதபோது மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். பெருமளவில் அது நடக்கும்போது புரட்சியாக மாறுகிறது.

மேற்கு நாடுகளில் அந்த நிலை உள்ளதா? இங்குள்ளவர்களுக்கு இல்லை. ஏனென்றால் இங்குள்ள பெண்கள் பல ஆண்களுடன் பழகி சிலபேரைத் திருமணம் செய்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அந்த இளைஞன் மாதிரி பல பெண் தொடர்பு கொண்ட வெள்ளை / கறுப்பு இனத்தவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் படத்தை வைத்து மிரட்டினால் தண்டனைக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. வெள்ளைப் பெண்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டால் வழக்கிற்கு முன்வருவார்கள்.

ஆனால், தமிழ் சமுதாயத்தில் சிலருக்குப் பிரச்சினை என்னவென்றால், வெள்ளையினத்தினர்போல் பழகவும் வேண்டும். அதேநேரம் தமிழ்ப்பண்பாட்டையும் சமூகத்திற்காகக் கடைப்பிடிக்க வேண்டும். இது சிக்கல். இதைத்தான் You cannot have it both ways என்று சொல்வார்கள். :D

ஆகவே, இதற்குத் தீர்வுதான் என்ன?

ஒன்றில் மேற்கத்தைய நாட்டவர் போல திறந்து விட வேணும் (கஷ்டம்.) விளைவுகளுக்குப் பிள்ளைகளே பொறுப்பு என்பதை ஊட்டி வளர்க்க வேண்டும்.

அல்லது பிள்ளைகளை அவதானித்து, அவர்களுடன் அன்புடன் நேரத்தை செலவழித்து பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். இதுவும் தவறாகிப் போகலாம். எது எவ்வாறெனினும், மேற்குலகில் இருட்டடி என்பது தகுந்த தீர்வல்ல என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்.. நீங்கள் நம்ம கட்சியில் நிற்பீர்கள் என நினைத்திருந்தேன். :D

ஆகையால், இருட்டடி போடும் விடயம் தொடர்பாக சில விளக்கங்களைக் கொடுக்க நேரிடுகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர, ஏழை மக்களுக்கு நீதிக்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. அங்கு இருட்டடி என்பது சமூக அளவில் ஓரளவு இலைமறைவு காயாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சட்டம் செயற்படாதபோது மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். பெருமளவில் அது நடக்கும்போது புரட்சியாக மாறுகிறது.

மேற்கு நாடுகளில் அந்த நிலை உள்ளதா? இங்குள்ளவர்களுக்கு இல்லை. ஏனென்றால் இங்குள்ள பெண்கள் பல ஆண்களுடன் பழகி சிலபேரைத் திருமணம் செய்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அந்த இளைஞன் மாதிரி பல பெண் தொடர்பு கொண்ட வெள்ளை / கறுப்பு இனத்தவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் படத்தை வைத்து மிரட்டினால் தண்டனைக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. வெள்ளைப் பெண்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டால் வழக்கிற்கு முன்வருவார்கள்.

ஆனால், தமிழ் சமுதாயத்தில் சிலருக்குப் பிரச்சினை என்னவென்றால், வெள்ளையினத்தினர்போல் பழகவும் வேண்டும். அதேநேரம் தமிழ்ப்பண்பாட்டையும் சமூகத்திற்காகக் கடைப்பிடிக்க வேண்டும். இது சிக்கல். இதைத்தான் You cannot have it both ways என்று சொல்வார்கள். :D

ஆகவே, இதற்குத் தீர்வுதான் என்ன?

ஒன்றில் மேற்கத்தைய நாட்டவர் போல திறந்து விட வேணும் (கஷ்டம்.) விளைவுகளுக்குப் பிள்ளைகளே பொறுப்பு என்பதை ஊட்டி வளர்க்க வேண்டும்.

அல்லது பிள்ளைகளை அவதானித்து, அவர்களுடன் அன்புடன் நேரத்தை செலவழித்து பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். இதுவும் தவறாகிப் போகலாம். எது எவ்வாறெனினும், மேற்குலகில் இருட்டடி என்பது தகுந்த தீர்வல்ல என்பது என் எண்ணம்.

கலைஞன் வேர்த்து விதிர்விதித்து போய்ட்டனய்யா என்னை பற்றி தெரிஞ்சுமா? நான் sOliyAn யனுக்கு புகை போட நீங்களா வந்து மாட்டினது நமக்கு சில விடயங்கள் தேவையற்றது எனில் அந்த பக்கமே போவதில்லை சில விளக்கங்கள் தேவை எனில் கேட்டிருப்பன் திரி முழுமையாய் படிக்கபட்டபின்பு விளங்கியது அது போல் இருட்டடி என்பதை நான் ஆதரிக்கவில்லை எதிர்க்கப்போவதும் கிடையாது இங்கு புலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு மருந்துக்கு மனசும் நேரமும் எதை சொல்லுதோ அதை செய்யனும் செய்தபின் அதை விளம்பரபடுத்துவது வீண் கலக்கத்தை உருவாக்கி மேலும் பல பிரச்சினைகளை உண்டு பன்னும் அதை விட நான் செயற்படுவது என்னுடைய மனசுக்கு திருப்தியாய் இருத்தல் வேணும்

 

நீங்கள் குறிப்பிடும் பிரான்ஸ் பிரச்சினை மாதிரி பலது நடந்திருக்கு அவை மீடியா வெளிச்சம் படவில்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரி  தான பேத தண்டம் பல கதைகளில் ஒரு கதை பிரான்ஸ் இளைஞன் மாதிரி பூவுக்கு பூ தாவும் வண்டு ஆளுக்கு விசா இல்லை நம்மைடையாள் homeofficeக்கு ஊதிவிட அந்த மூன்று பெண்களும் அவரிடம் இருந்து விடுதலை இரு பெண்கள் கல்யாணம் வேறிணத்தவர்கள் மூன்றாவது கட்டினது நம்மைடையதை மூவரும் யுனி முடித்து நல்ல வேலை கார் இதற்க்குள் நம்ம வண்டு ஊரிலும் இதே விளையாட்டு சமீபத்தில் தென்மராட்ச்சி போய் வந்த நண்பர் வண்டுவின் படத்துடன் வந்தார் என்ன வேலை செய்யிறான்? மாம வேலை என்னையும் கேட்டான் பழைய ஞாபகம் வந்து பகுடிக்கு கேட்டனான் என்று கதையை மாத்திபோட்டான் இஞ்ஞையே வைச்சு நாய்க்கு நலமெடுத்திருந்தா இரண்டு குடும்பமாவது வயிறார சாப்பிட்டுருக்கும் என்றார். :huh:  :o

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

(புகை போட்டு கடைசியில் மாட்டுபட்டது நான்தானக்கும் ) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதானே பார்த்தன்.. :D சரி.. சரி.. எழுதினது வேறை யாருக்காவது பிரியோசனப்பட்டால் சரி.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வாழ்வு முள்ளி வாய்க்காலோடு போச்சு. தப்பினவன் வாழ்க்கை தத்தளிக்கிறது. நான் மீட்பனல்ல, மீட்பனுக்காகக் காத்திருப்பவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பள்ளிக் கூடத்தின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இங்கு மது அருந்துபவர்கள்தான் பதவி பெறமுடியும். இன்றும் பொங்கல் விழா , விளையாட்டு மண்டபத்தில் மது தாராளமாக ஓடியது.

 

 

ரகுராஜ்1 யாழுக்கு நல்வரவாகுக  வந்ததும் வராததுமாய் ஆட்லறிஅடியோடை வருகிறீங்கள் அப்புறமா அந்த croydonதமிழ் சங்கபிரச்சினை முடிஞ்சுதா முடியைலையா ?  :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரைச்சனை பாடசாலையில் மது அருந்துவதை ஆதரிப்பவர்கள் பதவியில் இருக்கும் வரை தீராது. இவர்களும் எது நடந்தாலும் விட்டு  விட்டு போகமாட்டிணம் . பதவி ஆசை .....

  • கருத்துக்கள உறவுகள்

இப்பள்ளியை குறிப்பிட்ட பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் புறக்கணிப்பதோடு.. இங்கு இங்கிலாந்தின் பாடசாலை அடிப்படை நெறிகள் பின்பற்றப்படவில்லை என்பதை குறித்த பள்ளி இயங்கும்.. கவுன்சிலுக்கு அறிவிப்பதன் மூலம் இதற்கு முடிவு கட்டலாம்.

 

அண்மையில் முஸ்லீம் தனியார் பள்ளிகள் சில மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இழுத்து மூடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலாந்தில்.. பள்ளிகளில் மதுபானம்.. புகைப்பிடித்தல்.. ஆயுதங்களை வைத்திருத்தல்.. வன்முறையில் ஈடுபடுதல்.. பட்டம் தெளித்தல்.. மத.. இனவிரோத.. நிற விரோத.. பாலியல் விரோதச் செயல்களில் ஈடுபடுதல்.. தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

 

இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பொருந்தும். :icon_idea:

  • 3 weeks later...

பள்ளியின் நிர்வாகம் ஒரு வட்டத்துக்குள் இறுக்கி பிடிக்கப்பட்டுள்ளது. பதவிகள் மாறினாலும் மாற்றம் வராத படி பார்த்து கொள்கிறார்கள்.

 

அண்மையில்  20 வருடங்களுக்கு மேல்  சேவை ஆற்றிய ஒரு ஆசிரியரை   கல்விக்கு பொறுப்பான ஆசிரியர்  தகாத வார்த்தைகளால் பேசி சேவையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

 

அந்த ஆசிரியர் இந்த பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் .அவரது கணவரும்  இப்பாடசாலைக்காக பெரும் உதவி ஆற்றியவர் .பண்பானவர்.  

ஏன் அவரை  கலைத்தார்கள் என்று பார்த்தால்  நிர்வாகத்தில் இருக்கும் இருவரின் பிள்ளைகள் இந்த ஆண்டு  கலைக்கப்பட்ட ஆசிரியரின் வகுப்புக்கு  தரமுயர்த்த பட வேண்டியவர்கள்  அனால் அந்த ஆசிரியரின் கற்பிக்கும் முறையில் திருப்தி இல்லாத படியால் நேரடியாக  அடுத்த ஆசிரியரின் வகுப்புக்கு அந்த இரு பிள்ளைகளும் தரமுயர்த்த பட்டார்கள் .இதை இந்த  ஆசிரியர் நிர்வாகத்திடமும் ,ஆசிரியர் களுக்கு  பொறுப்பானவ்ரிடமும்  விசனமாக விசாரித்துள்ளார். உடனே தொடங்கியது பூகம்பம்  .உனக்கு படிப்பிக்க தெரியாது, எல்லாரும் குறை கூறுகிறார்கள்.விருப்பம் என்றால் செய்யும் இல்லாவிட்டால் போய் உன் வேலையை பாரும் என்று ஒரு ஆசிரியருக்கு  ஒரு பொறுப்பான ஆசிரியரால் திட்டி அனுப்பபட்டார். நிர்வாகமும் சேர்ந்து அந்த ஆசிரியரை அவமான படுத்தி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆசிரியர் இப்போ தமிழ் படிப்பிக்க வ்ருவதில்லை.

 இதில் 20 வருடமாக சேவை செய்த போது  தெரியாத காரணம் எவ்வாறு நிர்வாக பிள்ளைகள் அந்த ஆசிரியரிடம்  தரமுயர்த்தும் நிலை வரும் போது மட்டும் குறை காணப்பட்டது? சரி குறை கண்டவர்கள்  அதை நிவர்த்தி செய்யும் முறையை பின்பற்றாமல்  இப்படி அடாத்தாக் நடந்து கொண்டது வேதனைக்குரியது. தங்கள் நலத்திற்காக  ஒரு கல்விக்கூடத்தையே சீரழிப்பவர்கள்  கண்டிக்கப்பட வேண்டியவர்கள்,நிர்வாகத்தில் இருந்து  விலக்கப்படவேண்டியவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பெற்றோரால் தான் தெரியப்படுகிறது. நிர்வாகம் சரியாக செயற்படவில்லை எனில் அடுத்த தடவை சரியான நிர்வாகத்தை பெற்றோர் தான் தெரிய வேண்டும். பெற்றோர் தான் பொறுப்பெடுத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்.


அப்படி செய்ய முடியாவிடின் இந்த விடயம்பற்றி பேசுவதே வேஸ்ட் 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பெற்றோரால் தான் தெரியப்படுகிறது. நிர்வாகம் சரியாக செயற்படவில்லை எனில் அடுத்த தடவை சரியான நிர்வாகத்தை பெற்றோர் தான் தெரிய வேண்டும். பெற்றோர் தான் பொறுப்பெடுத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

அப்படி செய்ய முடியாவிடின் இந்த விடயம்பற்றி பேசுவதே வேஸ்ட் 

 

உண்மைதான் தமிழ் அரசு

 

இந்த திரியில் எழுதவிரும்பவில்லை

குற்றம் சொல்வதும்

குறை  பிடிப்பதும் மிகமிகச்சுலபம்

ஆனால் ஒன்றை செய்வது

நாடத்துவது என்பது.............??

யாழ்களவிதிகளின் படி

ஒரு  அமைப்பு சார்ந்து

இவ்வாறு ஆதாரங்களற்று குற்றம் சாட்டுவது தப்பாகும்............ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் நடைபெறும் பாடசாலைகளில் கிட்டத்தட்ட ஐம்பது பாடசாலைகள் ஒழுங்காகத்தான் நடக்கின்றன. சில அறிவு ஏவிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் சில முட்டாள்கள் சேர்ந்து பல பாடசாலைகளை நடத்துகின்றனர். அங்கு தமது பிள்ளைகளைத் தமிழ் படிக்கக் கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்களும் இப்படியான மடையர்களுக்குப் பயந்து எதுவும் கதைக்காமல் அவர்களைக் கடவுள்கள் போல் நினித்து சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டுச் செல்கின்றனர். தமிழ் பாடசாலையைச் சாட்டி வருடத்தில் கடைசி 15,000 பவுண்ட்ஸ் வரை அரசாங்கத்திடமிருந்தும் லாட்டிரி நிறுவனத்திடமும் பண்ட் என்னும் பெயரில் பெருந்தொகைப் பணம் இனாமாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதைவிடப் பெற்றோரிடமும் வாங்கப்படுகிறது. பெற்றோர் நினைத்தால் அவர்களைத் திருத்த முடியும். ஆனால் தமிழன் எங்கே ஒற்றுமையாக இருந்தான். மற்றவரைக் கேள்வி கேட்டுத் திருத்த. கடமைக்குத் தம் பணத்தையும் கொடுத்து தம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு தாமே தம் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கத்தான் தெரியும். சுய சிந்தனை அற்ற ஒரு கேடுகெட்ட சமூகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது என்பதே உண்மை  நிலை. 

உண்மைதான் தமிழ் அரசு

 

இந்த திரியில் எழுதவிரும்பவில்லை

குற்றம் சொல்வதும்

குறை  பிடிப்பதும் மிகமிகச்சுலபம்

ஆனால் ஒன்றை செய்வது

நாடத்துவது என்பது.............??

யாழ்களவிதிகளின் படி

ஒரு  அமைப்பு சார்ந்து

இவ்வாறு ஆதாரங்களற்று குற்றம் சாட்டுவது தப்பாகும்............ :(  :(  

ஆதாரங்களற்ற குற்றசாட்டுக்கள் என்று இலகுவாக சொல்லி விட முடியாது. குற்றம்  சொல்வதும்  குறை பிடிப்பது மிக சுலபம் என்று  சொல்லலாம்.

தமிழர்களிடையே நடக்கும்  சில நிர்வாக சீர்கேடுகளை   வெளிக்கொண்டு வருவதன் மூலம் ஏதாவது  நல்லது நடக்குமா என்று தான் எதிர் பார்க்கிறார்கள்.

 

உண்மையை சொன்னால் புலிகள் இருந்த போது  துணிச்சலோடு   பேசியவர்கள், எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போ ஒதுங்கி விட்டார்கள். ஏன் என்றால் இப்போ  யார் கள்ளன், யார் நல்லவன், யார் ஒட்டு குழுவோ என்னவோ ஒன்றுமே தெரியாது. திறந்து பேசவே பயப்படுகிறார்கள்.

இன்னும்   நிலமை மோசமாகுமே தவிர  மாறாது.  இணையத்தின் கருத்து பரி மாற்றத்தின் மூலம்   விமர்சனங்களை உருவாக்கி  நல்வழிப்படுத்த முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இங்கே உரையாடுவது ,விமர்சிப்பது ,பாடசாலையில் பெற்றோருக்கு தெரியாது. நிர்வாகத்த்தில் உள்ளோர் மூடி மறைத்த்து விடுவார்கள். எப்படியாவது பெற்றோருக்கு தெரியப்படுத்த்ததுங்கள் .அப்போது தான் மாற்றங்கள் உருவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.