Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் ரமழான் இப்தார் நிகழ்வு.

Featured Replies

யாழ் பல்கலைக்கழகத்தில் ஸபாப் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு மாணவர் பொது அறை மண்டபத்தில் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது. அமைப்பின் தலைவர் எம்.சர்ஜுன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்விற்கு அதிதிகளாக விஞ்ஞான பீடாதிபதி எஸ் சற்குணராஜா, கலைப்பீட சிரேஸ்ட பதிவாளர் கே.ஞானபாஸ்கரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கே.தபோதரன், யாழ் கல்வி வலய உத்தியோகத்தர் அப்துல் ஜலீல், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வருகை தரும் விரிவுரையாளருமான அஷஷெய்க் பைஸர் மதனி ஆகியோருடன் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முதலில் ஹிராஅத் ஒதலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வு அதிதிகளின் உரை மற்றும் மார்க்க சொற்பொழிவுடன் தொடர்ந்து இறுதியாக இப்தார் நிகழ்வு நிறைவடைந்தது.

இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி கற்கும் மருத்துவ, விஞ்ஞான , வர்த்தக,கலைப்பீடம் என 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

(பாறூக் சிகான்)

 

DSCF4915+(1).JPG

DSCF4945.JPG

DSCF4968.JPG

DSCF4996.JPG

DSCF5020.JPG

DSCF5044.JPG

DSCF5050.JPG

 

http://www.ilankainet.com/2013/07/20.html

யாழில் பொதுபலசேன இல்லையென்ற துணிவு!

  • கருத்துக்கள உறவுகள்

DSCF4915+(1).JPG

 

மருந்துக்கும்.... தமிழில் பதாகைகள் இல்லை.
இவர்கள் தமிழ்ப் பேசும், முஸ்லீம்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில முஸ்லிம் பெண்கள் கறுப்பிலும் சிலர் வெள்ளையிலும்

பர்தா அணிந்திருக்கின்றார்கள் 

இதற்கு அவர்கள் மதத்தில் ஏதாவது காரணம் உண்டா :D   

 

  • கருத்துக்கள உறவுகள்

அரபியில் எழுதி, அரேபிய ஆடைகளை அணிந்தாலும் மத்தியகிழக்கில் மருந்துக்கும் மதிக்க மாட்டான்.. பிறகு என்னத்துக்கு இந்த வேடங்கள்?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில முஸ்லிம் பெண்கள் கறுப்பிலும் சிலர் வெள்ளையிலும்

பர்தா அணிந்திருக்கின்றார்கள் 

இதற்கு அவர்கள் மதத்தில் ஏதாவது காரணம் உண்டா :D   

 

நாம் கோவிலுக்குப் போகும் போது...

நாலு முழ வேட்டி கட்டுவதற்கும், எட்டு முழ வேட்டி கட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் வாத்தியார். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப் பார்த்தால் நாடே முஸ்லிம் நாடகிவிடுமோ என்று எண்ண தோன்றுகின்றது  ......  :(

 

 

சிங்களவனும் தமிழனும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சண்டை போட்டு செத்துபோக இவனுகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெத்து வாழ்ந்திருக்கின்றாங்கள்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கோவிலுக்குப் போகும் போது...

நாலு முழ வேட்டி கட்டுவதற்கும், எட்டு முழ வேட்டி கட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் வாத்தியார். :D  :lol:

அதென்ன நாலுமுழம்.. ..எட்டு முழம்...

எனக்குத் தெரிந்ததெல்லாம் அரை முழத் துண்டும் அறுணாக் கொடியும் தான்

அதோடைதான் கோயில் எண்டாலும் குளம் எண்டாலும் :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

DSCF4915+(1).JPG

 

மருந்துக்கும்.... தமிழில் பதாகைகள் இல்லை.

இவர்கள் தமிழ்ப் பேசும், முஸ்லீம்களா?

அவர்கள் எப்போது சொன்னார்கள் ? :rolleyes:  :unsure:

எங்கட பத்திரிகளும் சில ஊடகவியலாளர்களும் அரசியல் வாதிகளும் எல்லோ சொல்கிறார்கள்  :(

ஒரு சில முஸ்லிம் பெண்கள் கறுப்பிலும் சிலர் வெள்ளையிலும்

பர்தா அணிந்திருக்கின்றார்கள் 

இதற்கு அவர்கள் மதத்தில் ஏதாவது காரணம் உண்டா :D   

 

சில பொடியள் தொப்பி போடாமல் இருக்கு சிலது போட்டிருக்கு .அதை கவனிச்சியளோ ? :D
அல்ஹம்துரில்லா 

DSCF5050.JPG

நாங்கள் இடையில் போய் இருப்பதானால் அவ்வாளவு கஸ்டமாக இருக்குமா? :lol:

  • தொடங்கியவர்

அரபியில் எழுதி, அரேபிய ஆடைகளை அணிந்தாலும் மத்தியகிழக்கில் மருந்துக்கும் மதிக்க மாட்டான்.. பிறகு என்னத்துக்கு இந்த வேடங்கள்?? :rolleyes:

தங்களை அரபு வம்சாவளி என்று கூறுவதில் அவர்களுக்கு பெருமை.

 

பேசாமல் முழு தமிழரும் நாட்டை விட்டு வெளியேறி முஸ்லிம்களுக்கு மகிழ்வை கொடுப்போம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன நாலுமுழம்.. ..எட்டு முழம்...

எனக்குத் தெரிந்ததெல்லாம் அரை முழத் துண்டும் அறுணாக் கொடியும் தான்

அதோடைதான் கோயில் எண்டாலும் குளம் எண்டாலும் :D  :lol:

 

 ஹம்கோயில் அடுத்த தேர்த்திருவிழாவிலை சந்திப்பம் வாத்தியார்

நாட்டில் மக்கள் வலு தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் .கனடா மாதிரி பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு வந்தும் எம்மவர் பலர் திருந்தினதாய் காணோம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கனடாவிலைதான் நிண்டுகொண்டு சொல்லோணுமெண்டில்லை.......கொக்குவில் கோண்டாவில் இணுவிலிலை நிண்டுகொண்டும் சொல்லலாம்.

  • தொடங்கியவர்

நாட்டில் மக்கள் வலு தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் .கனடா மாதிரி பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு வந்தும் எம்மவர் பலர் திருந்தினதாய் காணோம் .

இத கோண்டாவில் அன்னங்கையில்  போய்  நிண்டு சொல்லுங்கோ 

கனடாவிற்கு வந்து நாலு விடயங்கள் தெரிந்தபடியால் தான்  இப்படியும் நாடுகள் இருக்கு என்று அறிந்தேன் .

இல்லாவிட்டால் உங்களை மாதிரி வடலியிக்க தான் நானும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் மக்கள் வலு தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் .கனடா மாதிரி பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு வந்தும் எம்மவர் பலர் திருந்தினதாய் காணோம் .

 

 

கனடாவில் பல்லின மக்களுக்கு  உள்ள உரிமைகள் சிறிலங்காவில் உள்ள பல்லின மக்களுக்கு இல்லை என்பதை பாலர் வகுப்பு பிள்ளைக்கே விளங்கும். தமிழர் சிங்களவர்களுடன் சும்மா முசுப்பாத்திக்கு சண்டை பிடித்தார்கள் என்றோ நினைத்துக் கொண்டோ இருக்கிறீர்கள்??  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக் களக முஸ்லிம் மானவ மானவியருக்கு என் மனமார்ந்த ரமழான் இப்தார் நல்வாழ்த்துக்கள்

 
Started by யாழ்அன்புYesterday, 01:57 PM
  • கருத்துக்கள உறவுகள்

தங்களை அரபு வம்சாவளி என்று கூறுவதில் அவர்களுக்கு பெருமை.

 

பேசாமல் முழு தமிழரும் நாட்டை விட்டு வெளியேறி முஸ்லிம்களுக்கு மகிழ்வை கொடுப்போம் 

 

நிலத்துடன் ஒட்டாத கலாச்சாரம் என்பது திணிக்கப்படுவதாகும்.. இலங்கையிலோ, தென்னிந்தியாவிலோ முஸ்லீம்கள் தங்கள் மத அடையாளங்களுடன் தான் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள்..! அதாவது சேலையின் தலைப்பை முக்காடாக அச்சமூகத்தின் பெண்கள் போட்டிருப்பார்கள்..! இது மதம், நிலம் இரண்டையும் ஒன்றாகப் பேணும் கலாச்சாரம்.

 

இப்போது இலங்கையில் கறுப்பு உடையுடன் பல படங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இது மத தீவிரவாதத்தின் ஆரம்பம் என்பதில் ஐயமில்லை. வெயிலுக்கு கறுப்பு நிறக் குடையையே பிடிக்கக்கூடாது (வெப்பத்தைப் பிரதிபலிக்காது) என்று கூறும்போது கறுப்பு நிற உடையை இவர்கள் உடுத்திக்கொள்வது மத்திய கிழக்கைப் பிரதிபலிக்கவேயன்றி வேறொன்றுமில்லை. இது இலங்கைத் தீவுக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது. மத்திய கிழக்கில் குளிரும், வெயிலும் மாறி மாறி வரும் என்பது கவனிக்கத்தக்கது. அதற்கேற்றாற்போல் அங்கு நிலவிய கலாச்சார சூழலில் இவ்வகை ஆடைகள் உருவாகியிருக்கலாம். அது வேறு கதை.

 

ஒரு உதாரணத்துக்கு, தமிழரின் பாரம்பரிய உடை வேட்டி துண்டு என்றால், அதை மேற்கு நாடுகளில் குளிர் ஆடைகளுடன் சேர்த்து யாரும் உடுப்பதில்லை. காரணம் அது அந்த நாட்டுக்குப் பொருந்தாதது. கோடைகாலம் வரும்போது உடுத்தலாம்.. தவறில்லை.

 

அவ்வாறில்லாமல் யாரும் குளிர்காலத்தில் வேட்டி உடுத்தினால் சிரிக்கவே செய்வார்கள். :unsure:

 

ஆக, தனி அடையாளத்தைக் காண்பிக்கிறோம் பேர்வழி என்று, மத்திய கிழக்கின் பாரம்பரியத்தைப் புகுத்துவது, இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் தம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை (இலங்கைத் தீவுக்குரியது) இழக்கும் செயலாகும்.

 

இதன் இன்னொரு தொடர்ச்சியே பேரீச்சை மரங்கள் நடுவது. Native species என்று சொல்லப்படுகின்ற அந்த நிலத்துக்குரிய உயிரினங்களின் இயற்கைச் சமன்பாட்டை மாற்றும் செயல் இது. அறிவார்ந்த சமூகம் உள்ள எந்த நாட்டிலும் இது போன்ற செயல்களை அனுமதிக்கவே மாட்டார்கள். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களில் Burmese python என்கிற பாம்புகளைக் கொல்பவர்களுக்கு போனவருடம் சன்மானம் அறிவித்திருந்தார்கள். யாரோ கூண்டுகளில் அடைத்து வைத்திருந்த வெளிநாட்டுப் பாம்புகள் தப்பியோடி இன்று சதுப்பு நிலங்களில் பல்கிப்பெருகி பெரும் பிரச்சினையாகிவிட்டது. அந்த நிலத்துக்குரிய உயிரினங்கள் சில அழியும் நிலையில் உள்ளன.

 

இவ்வாறான பிரச்சினைகள் பற்றி கவிஞர் ஐயா என்ன நினைக்கிறார் என்று அறிய ஆவலாக உள்ளது. வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

944541_419482581493752_740542049_n.jpg

 

இதை கொஞ்சம் பாருங்கோ இது உண்மையா அல்லது ஏதும் ..........

 

 

முக நூலில் இருந்தது .....

 

மட்டுநகர் பகுதியில் எடுத்தது  என்று இருந்திச்சு ..

 

 

 

 

(இந்த இடத்தில் பதிவு செய்தது தவறாயின் மன்னிக்கவும்,,உடனடியாக அகற்றியும் விடவும் )

படங்களும், திரையும் எழுதும் இந்த ஒரு சந்தர்ப்பத்தற்கு தயாரானவை போல இருக்கு.

 

படமும், தட்டும் ஆராத்தி முறையும் யாழ்பாண மத வழிபாட்டினுடையது அல்ல.

 

இது மட்டக்களப்பில் எடுத்ததாக நிரூபணம் போடப்படவிலை.  மட்டக்களப்பு பெண்களின் முகம் தெரியவில்லை. மட்டக்களப்பில் இராமர் வழிபாடு இருப்பதும் அறியப்படவில்லை.

 

ஆனால் பெண்கள் நடிகர்கள் அல்லாமல் முஸ்லீம்கள்தான் என்பது உண்மையானால் மதம் மாறியவர்கள் இன்னமும் பழையை இராமர் வழிபட்டை தொடர்கிறார்களாக இருக்கும். ஏன் எனில் அவர்கள் அருவக்கடவுகளை மட்டும்த்தான் நம்புவர்கள். மனித தூதரை நம்புபவர்கள். இந்துக்கள் மனித தூதரை நம்புவதில்லை. அவதாரத்தை நம்புபவர்கள். அருவம் உருவம் இரண்டையும் ஒரே நேரத்தில் நம்புபவர்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவிற்கு வந்து நாலு விடயங்கள் தெரிந்தபடியால் தான்  இப்படியும் நாடுகள் இருக்கு என்று அறிந்தேன் .

இல்லாவிட்டால் உங்களை மாதிரி வடலியிக்க தான் நானும் .

நீங்கள் பேய்க்காய் அண்ணை! படிச்ச மூளையை பாவிச்சு  அந்தமாதிரி ஜனநாயக கடலிலை நீந்தி சேவை செய்யுறியள். என்னைப்போலை நாலைஞ்சு வெளிநாட்டுக்குவந்தும் மாரிதவக்கைமாதிரி வடலிக்கை நிண்டு கத்திக்கொண்டிருக்கிறம்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.