Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினக்குரல்வெளிநாடுகளிலிருந்து ஆதரவுக் குரல் கொடுப்போருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுக்கும் வேண்டுகோள் - தினக்குரல்

Featured Replies

 

கலம் மக்ரே,மற்றும்சிங்கள ஊடகவியளாலர்கள் அந்த மக்களுக்கு குரல் கொடுக்கலாமென்றால் நாங்களும் குரல் கொடுக்கலாம்....

தாராளமாக குரல் கொடுங்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுங்கள், ஆனால் அங்க உள்ள மக்களுக்கு அரசாங்கம் நீங்கள் என நினைக்கவேண்டாம். நாடுகடந்த அரசாங்கம் உங்களுடையது தாயக மக்களின் அரசியல் அவர்களுடையது. இது இரண்டுக்கும் எக்காலத்திலும் சம்மந்தம் ஏற்படாது ஏற்படவும் முடியாது என்பதில் தெளிவாய் இருந்துகொண்டு குரல்கொடுங்கள்.

  • Replies 51
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Colombo விக்கிக்கும் க்கும் வடக்கு மக்கள் பற்றி பேச உரிமை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

 

தாராளமாக குரல் கொடுங்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுங்கள், ஆனால் அங்க உள்ள மக்களுக்கு அரசாங்கம் நீங்கள் என நினைக்கவேண்டாம். நாடுகடந்த அரசாங்கம் உங்களுடையது தாயக மக்களின் அரசியல் அவர்களுடையது. இது இரண்டுக்கும் எக்காலத்திலும் சம்மந்தம் ஏற்படாது ஏற்படவும் முடியாது என்பதில் தெளிவாய் இருந்துகொண்டு குரல்கொடுங்கள்.

 

உடனடியாக சம்பந்தம் ஏற்படாது ஆனால் ஒரு காலகட்டத்தில் ஏற்பட சம்பந்தம் உண்டு,,,,,

வர வர எல்லாருமே புலிக்கு புளி கரைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள் .ஏனேன்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

Colombo விக்கிக்கும் க்கும் வடக்கு மக்கள் பற்றி பேச உரிமை இல்லை

 

அம்பாந்தொட்டை மகிந்தாவுக்கே உரிமை உண்டு..... :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மகிந்தவை ரகசியமாகச் சந்தித்து பேசிய போது மகிந்த சொல்லி இருப்பார்.. நீங்கள் எப்படியாவது கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அதனைப் பலவீனப்படுத்தி என்னைப் பலப்படுத்துங்கள். நான் உங்களுக்கு சலுகை காட்டுகிறேன் என்று,

 

சம்பந்தனின் அனைத்து நகர்வுகளும் மக்களையும் கூட்டமைப்பையும் பிரிக்கும் வகையில் உள்ளது. இதனால் பெருவாரி  மக்கள் வாக்களிக்க விருப்பமின்றிப் போகும் நிலை எழும். அதன் போது மகிந்த - ஒட்டுக்குழு கூட்டணி போடும் கள்ள வாக்குகள் வெற்றிக்கு வழிவிடும்.

 

சம்பந்தன்.. தமிழ் மக்களை மிக விரைவில் நேரடியாகச் சந்திக்க வேண்டும். மக்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். இவற்றைச் செய்ய.. தன்னால் முடியல்லை என்றால் பதவியை விட்டு வெளியேறுவதே நல்லது..! :icon_idea:

///

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்கள் இலங்கையில் சமத்துவமும் கௌரவமும் உடையவர்களாக வாழவேண்டுமென்பதற்காக தமிழகத்தில் இருந்து குரல்கொடுக்கிற, போராட்டங்களை நடத்துகிற அரசியல் தலைவர்களையோ, சக்திகளையோ மலினப்படுத்தும் நோக்கில் எனது கருத்துக்களை அர்த்தப்படுத்த முயற்சிப்பது பொருத்தமற்றது.

குரல் கொடுப்பவர்களினதும் போராடுகின்றவர்களினதும் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன் என்றும் இந்துஸ்தான் ரைம்ஸுக்கு கூறியிருந்தேன். ஆனால், அவர்கள் இதை பிரசுரிக்கத் தவறிவிட்டனர்.

 

வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் தங்களுக்கான தீர்வை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென்று நான் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளருக்கு கூறினேன்.

 

அத்தகைய தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கையொன்றுக்குள்தானா என்று அவர் என்னிடம் கேட்டபோது, நான் அதற்கு "ஆம்' என்று பதிலளித்தேன். ஆனால், பிரசுரிக்கப்பட்ட பேட்டியில் அந்தப்பகுதிகள் பிரதிபலிக்கவில்லை.

 

 //

இப்போது தான் கவனித்தேன். இதைத் தான் இந்த பத்திரிகைகள் செய்யும் என்று தெரிந்திருக்க வேண்டும் பேட்டி கொடுக்கும் போது. பேட்டியின் முன் ந்கலைப்  பார்த்து சரி சொன்னபின்னர் தான் வெளியிட முடியும் என்று நிபந்தனை விதித்து இருக்க வேண்டும். புலத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியவற்றை நாம் செய்வோம்.அவருக்கு அங்கு உரிமை இல்லாவிட்டால் எதற்காக சுதந்திரமாக இருக்கும் நாம் செய்வது பற்றி அவர் அலட்டிக் கொள்ள வேண்டும். புலத்தில் இருந்து நாம் விமர்சித்த படியால் தானே இந்தப் பதிலும் வந்திருக்கு. ஆகவே அங்கு இருந்து உபதேசிப்பதை விட்டு விட்டு , யார் யார் எதிரிகளோ அவர்களுடன் மோதட்டும். சுதந்திரமாக இருக்கும் புலத் தமிழர்களைப் பற்றியோ இல்லை தமிழகத் தமிழர்கள் பற்றியோ அவர் ஏன் கவலை கொள்ள வேண்டும்? இதன் பின்னணியில் இந்திய வல்லாதிக்கம் இருப்பதாகவே நான் சந்தேகிக்கிறேன்.போகப் போக பூனைக் குட்டி வெளியால் வரும் தானே.மக்களும் ஊடகங்களும் அவதானமாக இருக்க வேண்டும்.

 

தாராளமாக குரல் கொடுங்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுங்கள், ஆனால் அங்க உள்ள மக்களுக்கு அரசாங்கம் நீங்கள் என நினைக்கவேண்டாம். நாடுகடந்த அரசாங்கம் உங்களுடையது தாயக மக்களின் அரசியல் அவர்களுடையது. இது இரண்டுக்கும் எக்காலத்திலும் சம்மந்தம் ஏற்படாது ஏற்படவும் முடியாது என்பதில் தெளிவாய் இருந்துகொண்டு குரல்கொடுங்கள்

 

 

சண்டமாருதன்,

நாங்களும் அதைத் தான் சொல்கிறோம், அங்கிருக்கும் தமிழர்களுக்கு எது வேண்டும் என்று அறிந்து கொள்ள ஒரு சர்வசன வாகெட்டுப்பு ஐனாவின் மேற்பார்வையின் கீழ் நடாத்துங்கள் என. இதில் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன?

 

புலிகள் மக்களின்ஆரசியல் அபிலாசைகளைப் பிரதிபலித்தார்கள்.அவர்களை இராணுவ வலிமை கொண்டு அடக்கி விட்டு, சுயாதீனமாக எழும் குரல்கள்,ஊடகவியலாளர்கள், தலைவர்கள் மக்கள் எல்லோரையும் கொன்றொழித்து விட்டு, ஆயிரக்கணக்கானோரை சிறைகளில் அடைத்து விட்டு , தொடர்ந்த்தும் இராணுவதைக் வைத்துக் கொண்டு, இந்திய சிறிலங்கா அரசுகள் செய்யும் சதி அரசியலையா நீங்கள் எம்மை ஆதரிக்கச் சொல்கிறீர்கள்?

 

இன்று விகினேசுவரரின் குரல் இந்த இந்தியச் சதிகார்களின் குரலாகவே ஒலிக்கிறது.சிறிலங்கா அரசைச் சாடுவதை விட்டு விட்டு அவர் , புலத் தமிழர்களையும், தமிழனாட்டுத் தமிழர்களையும் சாடுவது எவரைத் திருப்திப் படுத்த?

 

இந்திய வல்லாதிகச் சக்திகளை அரசியல் ரீதியாகாக் காப்பாறவே. எந்த அரசுகள் எம்மை அழித்தனவோ அவற்றின் நிகழ்ழி நிரலுக்கு ஏற்ற பேச நடக்க எமக்கு என்ன கடமை இருக்கிறது? மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்க எமக்கு என்ன உரிமை இருக்கிறது?

 

 

இதில் இன்னொரு பகிடி என்னவென்றால் , தமிழத் தேசிய அபிலாசைகளை மிகத் தீவிரமாக பிரதிபலித்த கஜேந்திரகுமார்,கஜேந்திரன்,பத்மினி போன்றோரை வெளியேற்றி விட்டு, தற்போதும் கிழடுகளை வேட்பாளார்களாக நிறுத்திக் கொண்டு, இளையோருக்கு வாய்ப்புக்களை வழங்காமல் இழுபறிப் படும் போது, புலத் தமிழர்களை எங்கனம் இவர் வந்து அரசியல் செய்யச் சொல்வார்? முதலில் யாழ்ப் பல்கலைக் கழக மாணவரின் அறிக்கைக்கு பதில் சொல்லுங்கள், பின்னர் புலத் தமிழர்கள் வந்து அரசியல் செய்யக் கேட்கலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்து மக்கள் அரசியல் உட்பட அனைத்துக்கும் முதலாளி கண்காணி தாங்களே என்ற கனவில் இன்னும் இருக்கின்றார்கள். இதில் ஒரு துளி கூட எக்காலத்திலும் பலிக்கப்போவதில்லை. இதே மனப்பான்மையில் அணுகினால் சிங்களவர் அல்ல தாயகத்தில் வாழும் தமிழ்மக்களே சொல்வர்கள் "

 

அதெண்டா உண்மைதான்...  

 

ஊரிலை பிரச்சினை தீராமல் சிங்களவன் நெருங்குவாரம் எண்டால் தான்  வெளிநாடுகளிலை இருந்து சில்லைறையை சனம் அனுப்பி வைக்கும்...   அப்ப தானே வெளிநாட்டு காசிலை  சுகமாய் வாழ முடியும்... ! 

 

ஒருவேளை பிரச்சினை தீர்ந்தால்  ஊருக்கு அனுப்பிற சில்லறை நிண்டு போகும் தானே...?? 

வர வர எல்லாருமே புலிக்கு புளி கரைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள் .ஏனேன்று தெரியவில்லை .

 

உங்களுக்கு புலி இல்லாமல் வாழ முடியாது...    

Edited by தயா

வர வர எல்லாருமே புலிக்கு புளி கரைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள் .ஏனேன்று தெரியவில்லை .

அது எல்லோருக்குமே பத்தநாபாபின் ஒரு கவர்சி.

 

அவர் குஸ்பு மாதிரி பின்வளத்தை, முன்வளத்தை எல்லாம் காட்டி கட்டிப்போட்டுவிடுகிறார். இறந்தாலும் இனி அவர்தான் முதல் அமைச்சர்.

 

இந்த கதைதான் விசரினின் புட்டை பைத்தியக்கரன் பறிப்பத்தால் வரும் அவஸ்தை. :(  <_<

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளிநாடுகளில் இருந்து சென்று அங்கே அரசியல் செய்ய அழைக்கும் நீதியரசரின் கருத்து அபத்தமானது, தாயகத்தில் வாழ்பவனே அரசியலை தீர்மானிக்கவும் தலமைதாங்கவும் உரித்தானவன். வெளிநாட்டவர்கள் அதற்கு ஆதரவு கொடுக்கலாம் இல்லை கொடுக்காமல் விடலாம் தவிர தாயகத்து மக்களின் அரசியலில் குறுக்கீடு செய்வதற்கு ஒரு துளி அதிகாரமும் தாயகத்தை துறந்தவர்களுக்கு இல்லை என்பதே அடிப்படை உண்மை.

 

 

துறந்தவர்கள் ஒரு சிறு பகுதிதான்.. துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்தான் பெரும்பான்மை..!

இவர் தடுமாறுகிறார். திரும்ப தெரியாத "புத்தம் வளர்த்த தமிழ்" சரித்திரம் எழுதுகிறார்.

 

இவரின் நப்பாசை புலத்து தமிழருக்கும் புலம் பெயர் தமிழருக்குமிடையில் ஆப்பிறுக்கலாம் என்பது. இது அராபிய முஸ்லீம்கள் தாம் என்று தடுமாறி நினைக்கும் இலங்கை தமிழ் முஸ்லீம்களுக்கும், அராபிய முஸ்லீம்களுக்கும் இடையில் இருக்கும் உறவாக புலத்து மக்களையும், புலம் பெயர் மக்களையும் நினைப்பதால் வரும் குழப்பம்.

 

புத்தம் பரவவேண்டும் என்றும் தமிழர் அழிய வேண்டும் என்று திட்டுபவர் தமிழருக்காக அரசியல் செய்வாராம். மற்றவர்களை ஒதுங்கி இருக்கட்டாம். 

 

இந்தாள் பொய்யட்க்கு தீபன் செல்வன் எழுதியிருக்கும் பதிலைப் படித்தாராயின் தமிழரின் அரசியல் பற்றி நிறைய விளங்கும். தான் நிச்சயமாக ஒரு ஒழுங்கான புலத்து தமிழர் குடும்பத்தில் இருந்து வராத படியால் இப்படி ஆபிறுக்கலாம் என்று கனவு.

 

குறைந்த பட்சம் செல்வாவை பற்றி நீதியரசர் என்ன சொன்னார் என்பதை பற்றி வாச்சிக்காமல் ஆப்பிறுக்கும் தொழிலில் இறங்கி இருக்கிறார்.  புலம் பெயர் சமூகத்திலிருந்து பல செல்வாக்களும், விக்கினேஸ்வரங்களும் யாழ்ப்பாணமும் மட்டகளப்பும் போய் அரசியலை கையில் எடுக்கப் போகிறார்கள். இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை கூட்டமைப்பும், நீதியரசர் விக்கினேஸ்வரனும் எற்படுத்தத்தான் போகிறார்கள் என்பதை இவருக்கு புரிவது கஸ்டம்.

 

இவர்கள் அரசுக்காக பாடினாலும், அரசு இவர்கள் மாதிரி அரை வேக்காடு இல்லை. அரசுக்கு தெரியும் புலம்பெயர் சமூகத்திடமிருக்கும் பலத்தை புலத்து தமிழர் கவரபார்ப் பார்பார்கள் என்று. அரசு அதர்கேற்ற சட்டங்களை ஏர்கனவே போட்டுத்தான் வைத்திருக்கு. ஆனால் புலதில் இருக்கும் விக்கினேஸ்வரங்களும் செல்வாக்களும்  மானிப்பாய்க்கும் தெல்லிப்பழைக்கும் திரும்ப போய் அரசில் செய்வதை சண்டமாருதனோ அரசு நிறுதத முடியாது.

Edited by மல்லையூரான்

 

புலிகள் மக்களின்ஆரசியல் அபிலாசைகளைப் பிரதிபலித்தார்கள்.அவர்களை இராணுவ வலிமை கொண்டு அடக்கி விட்டு, சுயாதீனமாக எழும் குரல்கள்,ஊடகவியலாளர்கள், தலைவர்கள் மக்கள் எல்லோரையும் கொன்றொழித்து விட்டு, ஆயிரக்கணக்கானோரை சிறைகளில் அடைத்து விட்டு , தொடர்ந்த்தும் இராணுவதைக் வைத்துக் கொண்டு, இந்திய சிறிலங்கா அரசுகள் செய்யும் சதி அரசியலையா நீங்கள் எம்மை ஆதரிக்கச் சொல்கிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் இராணுவம் தமிழ் மக்களை ஆட்சி செய்ய்யலாம் என்றால்  உலகின் எங்குள்ள தமிழரும் ஈழத்தமிழருக்காக பேச முடியும். தேவை எனில் அதற்கு மேலும் போகலாம். 

 

வர வர எல்லாருமே புலிக்கு புளி கரைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள் .ஏனேன்று தெரியவில்லை .

 

 

புளட்டின் அரசியல் பிரிவு இப்படி பீத்தலாகும் என யாரும் நினைக்கவில்லை. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 இராணுவத்தை வெளியேறும்படி புலத்து தமிழர்கள் எங்கும் ஆர்பாட்டமோ குரலோ கொடுக்கவில்லை

சிறையில் அடைபட்ட தமிழர்களை விடுவிக்கும்படியும் எந்த முனைப்பும் செய்யவில்லை

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்கவில்லை

மீள் குடியேற்றம் குறித்தும் குரல்கொடுக்கவில்லை

இந்திய இலங்கை சதிகளை அம்பலப்படுத்தவும் இல்லை

மக்கள் பாதுகாப்புக் குறித்து மூன்றாம் தரப்பு கண்காணிப்பை வலியுறுத்தவும் இல்லை

மக்களின் புனர்வாழ்வு குறித்து அக்கறைப்படவும் இல்லை

ஆனால் இவற்றை எல்லாம் முறையே செய்வதாக புலத்து தமிழர்கள் கற்பனை செய்கின்றார்கள்

இவற்றை செய்வதற்கு ஸ்திரமான ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம். அதற்கான ஒற்றுமையோ அடிப்படையோ கூட புலத்தில் இல்லை. அதற்கு முயற்ச்சிக்கவும் இல்லை

புலத்தில் தமிழர்கள் செய்வது தேசீயத்தை வைத்து தங்களுக்குள் சொறிந்துகொள்வது அடயாள அரசியல் செய்வது. குழு அரசியல் செய்வது.

எதைச் செய்யவேண்டுமோ அதை செய்வதை விடுத்து புலிக்கொடியுடன் விழையாட்டு மைதானங்களில் ஓடுவது யாகங்கள் செய்வது அமர்வுகள் வாக்கெடுப்புகள் முரசறைவுகள் என்று தங்களுக்குள் சுய இன்பம் காணும் போக்கே இங்கிருக்கின்றது. தாயக மக்களின் யதார்த்த நிலையில் ஐக்கியப்படாமல் புறம்புபட்ட நிலையில் இருந்துகொண்டு தாயக மக்களின் அரசியலில் குறுக்கிட முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

 

 

சும்மா

இல்லை  இல்லை  இல்லை   என்று வெளியில்  நின்று கத்தக்கூடாது

நீங்கள் இதுவரை  ஏதாவது செய்ததுண்டா???

அதையாவது அடையாளமாக 

முன்  உதாரணமாக  முன்  வையுங்கள்

அதன் பின்னர் பேசலாம்.......... :(  :(  :(

 

சும்மா

இல்லை  இல்லை  இல்லை   என்று வெளியில்  நின்று கத்தக்கூடாது

நீங்கள் இதுவரை  ஏதாவது செய்ததுண்டா???

அதையாவது அடையாளமாக 

முன்  உதாரணமாக  முன்  வையுங்கள்

அதன் பின்னர் பேசலாம்.......... :(  :(  :(

 

உங்களைப்போல் மிகக் குறுந்தேசிய அரசியல் கருத்துடையவர்களை எதிர்க்கின்றேன். இதுவே அடிப்படையில் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது.

யாழ்கள உறவுகள் ஒன்று கூடுவதற்கு தற்போது நீங்கள் முன்வைத்த ஒரு கருத்து

//இது யாழ் கள உறவுகளின் ஒன்று கூடல் போல் தெரிந்தாலும் பின்னால் ஏதாவது துரோகம் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.//

எங்கெல்லாம் நீங்கள் துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆளுக்காள், ஒருவர் செயற்பாட்டிற்கு மற்றவர், ஒரு நிகழ்வுக்கு என்னுமொருவர் என மாறி மாறி துரோகம் என்று இந்த இனத்தை சிதைக்கும் மிக மிக குறுகிய மனப்பான்மையை தேசீயம் என்று புரிந்திருக்கும் உங்களை உங்களைப்போன்ற குழுவாத குறுந்தேசீயவாதிகளை எதிர்க்கின்றேன். இதை வேண்டுமானால் முன்னுதாரணமாக எடுங்கள்.

இல்லை இல்லை என்று நான் கூறும் அத்தனை செயற்பாட்டிற்கும் உங்களை போன்றவர்களே காரணகர்த்தாக்கள். நீங்களே தடைக்கற்கள். அதை எதிர்கின்றேன்.இதில் வெற்றி பெற்ற பின்னரே தாயக மக்களின் அவலங்கள் உரிமைகளுக்கான நியாயமான குரல் வலுப்பெற முடியும். அதுவரை உங்கள் கைகளில் உள்ள தேசீயம் யாகம் நடத்தவும் அமர்வுகள் அறிக்கைகள் விடவும் போட்டி நிகழ்வுகள் நடத்தவும் ஆதாயம் பார்க்கவும் புலிக்கொடி தூக்கிக்கொண்டு குறுக்கால ஓடவுமே லயக்கானது. இதை எதிர்ப்பதே தற்போதைய தேவை ஏனெனில் இதுவே தடைக்கற்கள். அதையே செய்கின்றேன்.

இது யாழ் கள உறவுகளின் ஒன்று கூடல் போல் தெரிந்தாலும் பின்னால் ஏதாவது துரோகம் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.//

 

இது தொடர்பில்லாத திரியில் இருந்து எடுத்து வரபட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உங்களைப்போல் மிகக் குறுந்தேசிய அரசியல் கருத்துடையவர்களை எதிர்க்கின்றேன். இதுவே அடிப்படையில் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது.

யாழ்கள உறவுகள் ஒன்று கூடுவதற்கு தற்போது நீங்கள் முன்வைத்த ஒரு கருத்து

//இது யாழ் கள உறவுகளின் ஒன்று கூடல் போல் தெரிந்தாலும் பின்னால் ஏதாவது துரோகம் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.//

எங்கெல்லாம் நீங்கள் துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆளுக்காள், ஒருவர் செயற்பாட்டிற்கு மற்றவர், ஒரு நிகழ்வுக்கு என்னுமொருவர் என மாறி மாறி துரோகம் என்று இந்த இனத்தை சிதைக்கும் மிக மிக குறுகிய மனப்பான்மையை தேசீயம் என்று புரிந்திருக்கும் உங்களை உங்களைப்போன்ற குழுவாத குறுந்தேசீயவாதிகளை எதிர்க்கின்றேன். இதை வேண்டுமானால் முன்னுதாரணமாக எடுங்கள்.

 

இல்லை இல்லை என்று நான் கூறும் அத்தனை செயற்பாட்டிற்கும் உங்களை போன்றவர்களே காரணகர்த்தாக்கள். நீங்களே தடைக்கற்கள். அதை எதிர்கின்றேன்.இதில் வெற்றி பெற்ற பின்னரே தாயக மக்களின் அவலங்கள் உரிமைகளுக்கான நியாயமான குரல் வலுப்பெற முடியும். அதுவரை உங்கள் கைகளில் உள்ள தேசீயம் யாகம் நடத்தவும் அமர்வுகள் அறிக்கைகள் விடவும் போட்டி நிகழ்வுகள் நடத்தவும் ஆதாயம் பார்க்கவும் புலிக்கொடி தூக்கிக்கொண்டு குறுக்கால ஓடவுமே லயக்கானது. இதை எதிர்ப்பதே தற்போதைய தேவை ஏனெனில் இதுவே தடைக்கற்கள். அதையே செய்கின்றேன்.

 

யாழ்  என்ற  ஒரு அமைப்பின் ....

அதன் நிர்வாகத்தால் 

திறமையால்

பணச்செலவால்..............

கண்டு பிடிக்கப்பட்டு  அதன்  உறுப்பினர்களுக்கு   வழங்கப்படும் வேலைத்திட்டங்களை அந்த அமைப்பின் அங்கத்தவராக இருந்து கொண்டு  

அவர்களிடம் அனுமதி  பெறாது 

அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை

அவர்களுக்கு போட்டியாக  உள்ள  ஒரு இடத்தில்  பதிந்து

அதை  வளர்க்க பயன்படுத்துவதையே  நான் துரோகம  எனக்குறிப்பிட்டேன்.

என்னவோ  தெரியவில்லை

திருடுபவர்களுக்கே  உங்கள்  வாக்கு தொடர்ந்து கிடைக்கிறது.......... :(  :(  :( 

(இதை அந்த  திரியிலேயே  நீங்கள் எழுதியிருக்கலாம்)

 

 

ஒன்றை  மட்டும் தாங்கள் மறைக்கவேண்டாம்

எம்மை  தாக்குவது தங்கள் நோக்கம்  என்று  எமக்குத்தெரியும்

ஆனால் அதன் மூலம் நீங்கள்  பாதுகாப்பவர்கள் எவரென்று நீங்கள்  கவலைப்படுவதே இல்லை  என்பது தான் தாயகம்  சார்ந்து மட்டுமல்ல   யாழ்  சார்ந்தும் தாங்கள் செய்யும்  சேவை.

Edited by விசுகு

 

இது தொடர்பில்லாத திரியில் இருந்து எடுத்து வரபட்ட கருத்து.

 

துரோகம் என்பதே நீங்கள் தமிழர்களை இணைக்க ஒற்றுமைப்படுத்த கையில் எடுத்திருக்கும் கருவி. அதன் பலாபலன்கள் அமோகமாக இருக்கின்றது. அந்தவகையில் இது சம்மந்தப்பட்ட இடத்திற்கு பொருத்தமானது.

 

 

சண்ட மாருதன் கீழ் உள்ள இணைப்பு பிரித்தானிய தமிழர் பேரவையினது, அதில் நீங்க்கள் புலத் தமிழர்கள் செய்ய வில்லை என்று சொன்ன அனைத்தையும் சொல்லியும் செய்தும் இருக்கிறோம். பார்த்து விட்டு வந்து கதையுங்கள். நன்றி.

 

http://tamilsforum.co.uk/

 

 

Edited by narathar

 

 

துரோகம் என்பதே நீங்கள் தமிழர்களை இணைக்க ஒற்றுமைப்படுத்த கையில் எடுத்திருக்கும் கருவி. அதன் பலாபலன்கள் அமோகமாக இருக்கின்றது. அந்தவகையில் இது சம்மந்தப்பட்ட இடத்திற்கு பொருத்தமானது.

 

இந்த மேற்கோள் இந்த திரிக்கு தொடர்பில்லாதது. இந்த திரியில் துரோகி என்ற சொல் பாவிக்க தேவையில்லை. இது நீதியரசின் அழைப்பு பற்றியது. அந்த துரோகிக் கதையில் அவரின் அழைப்பு பற்றி எந்த கருத்தும் விவாதிக்கபடவில்லை.  முதுகில் புண் உள்ளவர்கள் அந்த சொல்லை எங்கோ கண்ட போது தம்மை சுட்டுவது கண்டு இங்கே இழுத்து வந்து பொருத்தமில்லாத இடத்தில் விவாதிக்கிறார்கள்.  அதே இயடத்தில் வைத்து விவாதிப்பதை தவிர்த்தார்கள்.

 

நிர்வாகம் தனக்கேற்றபடி விதிகளை மாற்றுவத்தால் அதை ஏற்றுக்கொள்கிறது. 

 

தமிழர் துரோகத்தால் இணைக்கப்படாலம் அல்லது இணைக்க வேண்டும் என்று யார் எழுதினார்கள்? நானா எழுதியது அதை? தமிழரை துரோகிகள் என்று யார் அழைத்தது? இதை தங்களால் அந்த அந்த எழுத்துக்களை கொண்டு வந்து நிரூபிக்க முடியுமா? 

 

தமிழரை விபரிக்க துரோகி என்ற சொல்லை பாவிப்பது நாங்கள் அல்ல. தாங்கள் ஒரு விரலை நீட்டும் போது தங்களை மூன்று விரல்கள் சுட்டுவதை நீங்கள் மனதார உணர்பவர்களில் ஒருவர். 

 

தமிழ் இனம் கெட்டது, தமிழ் இனம் அழிய வேண்டும், புத்தம் பரவேண்டும் என்ற ஈனக் கதைக்களை மட்டும் எழுதும் இழி பிறப்புக்களுக்கு, துரோகி என்ற சொல்லை கண்டவுடன் வலித்ததிற்கு நான் தமிழரை துரோகிகள் என்று அழைத்தாக மாறாது.  

 

எது நடந்ததோ அது அமோக வெற்றியை தமிழருக்கு தந்திருக்கிறது.  கக்கீம் 13ம் திருத்ததை மாற்ற கூடாது என்ற பிரேரணையை கிழக்கு மாகண சபையில் இருந்து விலக்கிங்கொண்டு ஓடிவிட்டார். ஆனால் தங்களின் புத்தமதமாக மாற்றப்பட வேண்டிய ஈன இனம், துரோகத்தால் இணைக்கப்படும் இனம் செய்த அமோகமான பலனால் பசில் 13ம் திருத்தம் பலமாக்கப்படும் என்று பேசியிருக்கிறார். அது பலமாக்கப்படும் என்று அவர் பேசியதால் சம்பிக்க, விமல் போன்றோர் அதை பலவீனமாக்க என்று தெரியப்பட்ட தெரிவுக்குழுவிழிருந்து விலகுகின்றனராம். இவ்வளவற்றுக்கும் காரணம் துரோகத்தால் இணைக்கப்படும் தமிரின் மேட்டுக்குடி இராமநாதனின் உறவினரான மேட்டுக்குடி விக்கினேஸ்வரனை வேட்பாளராக நிறுத்தியமையால்த்தான்.

 

அடுத்து அடுத்து பல அமோக வெற்றிகள் துரோகத்தால் இணைந்தாரிடமிருந்து வர இருக்கின்றன. வடக்குக்கு நீதி பரிபாலணம் கிடைத்தவுடன், அது மற்றைய 8 மாகாணத்திற்கும் போயேயாக வேண்டும். அப்போதுதான் சந்திரிக்கா, சிராணியின் கிழ் வரும் மாகாணங்கள் அரச குடும்பத்தை பந்தாடக் காத்திருக்கின்றன. நாம் அதற்குள் இல்லையாயினும் துரோகத்தால் இணைக்கப்பட்ட சந்திரிக்காவும், சிராணியும் மாகாணங்களுக்கு நீதி அதிகாரம் பரவேண்டும் என்று இரவு பகலாக் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் பின்னர் மிச்ச அமோக வெற்றியை பற்றி பேசுவோம். 

 

துரோகி என்ற என்ற சொல்லே வலிக்கும் அளவுக்கு இவர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்டுவிட்டன. 

கிழே மூடி மறைக்க முடியாத சில பொய்கள் சொல்லப்பட்டிருக்கு.  இனிமேலும் மூடி மறைக்க முடியாத இந்த பொய்கள் ஏன் சொல்லப்பட்டது என்ற காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் நான் அதற்கு உண்மையான காரணத்தை பொய் சொன்னர்கள் வாயால் வரட்டும் என்று தான் பதில் அளிக்காமல் விட்டிருந்தேன். துணிச்சல் இருந்தால் அவர்கள் தை வெளியே சொல்லிக்கட்டட்டௌம். என்ன பதில் காத்திருக்கு என்பது அப்போது தெரியவரும். அதை அந்த நேரம் பார்த்துக்கொள்ளலாம். இப்பொது அவர்கள் சொல்லும் பொய்களையும் ஒருதடவை பார்த்துவிடலாம்.

 

மாற்றுக்கருத்துக்கள் ஒழித்து ஒழித்து ஓடிவிட்டு, நடப்புகளை பிழையாக விளங்கிக்கொண்டு. ஒருத்தமான திரி வந்திருக்கு என்று ஓடி வந்து வங்குரோத்துக் கருத்தகளை எழுதும் போது வாசிப்பவர்களின் மனத்தில் இப்போது  இவர்களுக்கு சப்பிகளுக்கு இருக்கும் மரியாதை கூட இல்லை என்பதை அறிந்து நாணி சுருங்கித்தான் தம்மை சுட்ட பொருத்தமான சொல்லான துரோகியை கண்டவுடன் அல்றிப் புடைக்கிறார்கள். அதனால் துரோகி என்ற சொல்லே வலிக்கும் அளவுக்கு கெட்டு நொந்து போய் இருக்கிறார்கள்.

இராணுவத்தை வெளியேறும்படி புலத்து தமிழர்கள் எங்கும் ஆர்பாட்டமோ குரலோ கொடுக்கவில்லை

இராணுவத்தின் அட்டூளியங்களை படங்களில் போட்டுக்காட்டாத ஆர்ப்பாட்டம் ஒன்றை புலம் பெயர் நிலத்தில் தமிழ் மக்கள் நடத்தியது கிடையாது, இராணுவம் தமிழ் பகுதிகளில் பதினாறு முகாம்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் வெளியேற்றப்படுவதோடு, போர்க்குற்ற விசாரணையும் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்துவதை எந்த ஆர்பட்டத்திலும் தமிழர் தவறவிட்டது கிடையாது.

சிறையில் அடைபட்ட தமிழர்களை விடுவிக்கும்படியும் எந்த முனைப்பும் செய்யவில்லை.

திறந்தவெளி சிறை முகாம்கள், சிறைகள் எல்லாவற்றின் உண்மைகளையும் இலங்கைக்கு வெளியே கொண்டுவந்த பொறுப்பு புலம் பெயர் மக்களிடம் தான் இருக்கு.  அம்னெஸ்டி,  ICG , ICRC, Chennel-4 என்று எதை எடுத்தாலும், GTF, BTF, TGTE. USTPAC ..... இவர்களுடன் தான் சேர்ந்து தொழில் ஆற்றுகின்றன. இதில் எவரும் சண்டமாருதனை, சபேசனை விரங்களுக்கு தொடர்பு கொண்டது கிடையாது.  இதனால் தான் சண்ட மாருதனுக்கு அந்த பக்க அறிவு குறைவாக இருக்கிறது.

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்கவில்லை.

இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது. அரசுக்காக ஊடாக அடக்கு முறைகளுடன் இணந்து பொய்த் தகவல்களை பரப்பி அதில் தோற்றுப்போனவர்கள் இப்படி எழுதுவது உண்மையான நகைச் சுவை.  இலங்கை உலகத்தில் ஊடகவியலாரை கொல்வத்தில் நான்காம் இடத்தில் இருப்பதை நான்காம் ஆண்டும் வெளிவிடக் காரணமானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்.  இந்த உண்மைகள் இலங்கையில் அடித்து மூடப்படும் பொது அதை வெளியே கொண்டு வரும் ஒரே ஒரு சாரர் புலம் பெயர் தமிழர். இது பரப்படுவது புலம் பெயர் தமிழ் பத்திரிகைகளிலே. 

மீள் குடியேற்றம் குறித்தும் குரல்கொடுக்கவில்லை. 

பதியுதினுக்கு மீளக்குடியேற்றத்திற்கு ஆட் சேர்ப்போட் மீளக்குடியேற்றம் பற்றி ஏன் எழுதுகிறார்கள் என்பது யாருக்கும் புரியாததல்ல. அரசும், இராணுவமும் வெளியேறி எமது காணிகளை எம்மிடம் தர வேண்டும் என்று கேட்பவர்கள் புலம் பெயர் தமிழர். மீளக்குடியேற்றம் என்ற போர்வையில் இந்திய வீடுகளை கையடக்குபவர்கள் பதியுதின் கூட்டம். குடியேற்றத்தில் உழைக்கும் தன் ஆர்வ நிறுவனங்கள் 50% வரைக்கும் கூட பட்டா கொடுக்க வேண்டும் என்று அரசு, பதியுதின் போன்ற்வர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால் குடும்பங்களிலிருந்து குடும்பத்திற்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் உதவுபவர்கள் புலம் பெயர் தமிழர்.  வருமானம் குறைவதால் குடியேற்றம் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள்.

இந்திய இலங்கை சதிகளை அம்பலப்படுத்தவும் இல்லை.

தமிழ், ஆங்கிலம் இரண்டையும் வாசிக்க முடியாதவர்களாக இருந்தால் இந்த செய்திகள் பல புலம் பெயர் தமிழர்களால் ஜேர்மன், பிரெஞ்சு, நோர்வே, சுவீடன் மொழிகளிலும் வெளிவிடப் படுகின்றன. அவற்றையாவது இனிமேல் படித்து பிரயோசனப்படலாமே?

மக்கள் பாதுகாப்புக் குறித்து மூன்றாம் தரப்பு கண்காணிப்பை வலியுறுத்தவும் இல்லை.

இலங்கை ஒற்றை ஆட்சி நாடு. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மூன்றாம் தரப்பால் என்ன பாதுகாப்பு கொடுக்கப்படலாம் என்ற விவாதம் வைக்காமல், மூன்றாம் தரப்பை கேடக்கவில்லை என்ற கபட வாதாட்டம் நோக்கம் உள்ளது.

 

பிருத்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் இலங்கைக்கு விஜயம் போகும் மக்களை தங்களால் பாதுகாக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கின்றன. இது புலம் பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் நடக்கும் அடக்குமுறை, சட்டப்படி அல்லாத ஆட்சியை ஆகியவற்றை  வெளியே புட்டு வைத்ததால் ஏற்பட்ட முன்னேற்றம். அண்மையில் யாழ்ப்பல்கலை கழகத்தில் கைது செய்யபட்ட மாணவர்கள் புனர்வாழ்வின் பின்னர் வெளியே வந்து சொன்னவற்றிலிருந்து இலங்கையில் மூன்றாம் தரப்பால் பாதுகாப்பை கொண்டு வர முடியாது என்ற உண்மை வெளியே வந்திருக்கிறது. இதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் மேர்பார்வைக்கு கூட யாரையும் அனுப்பவில்லை. எப்போதும் அரசு தனக்கு தேவையான பணயக்கைதிகளை கையில் வைத்திருக்கு. இது 83 ல் கொல்லபட்ட 53 வர் பற்றிய சரித்திரம் அல்ல. வடக்கு கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழும் தமிழ் மக்கள், எல்லோருமே அரசின் பணயக்கைதிகள் என்பதை மேற்குலகம் நன்கு அறிகிறது. அவர்கள் பொது நலவாயத்தில் தாம் புலம் பெயர் மக்களிடமிருந்து பெற்ற இந்த அறிவை காட்டுவார்கள். 

மக்களின் புனர்வாழ்வு குறித்து அக்கறைப்படவும் இல்லை.

 

இது பல தடவை அரசுக்கு பணம் சேர்ப்பவர்கள் செய்த பிரச்சாரம்.   அரசிடம் பணம் கொடுத்தால் தான் புனர் வாழ்வு என்பது அரசுக்காக தண்டுபவர்கள் எழுதுவது. சம்பந்தர் அண்மையில் மகிந்தாவிடம் அதற்கு பணத்தை தரும் படி கேட்ட போது எங்கே இருக்கு பணம் என்றார் மகிந்தா. அதற்கு சம்பந்தர் அப்போ அங்கு போக நெடும் சாலைகள் போடுகிறீர்களே என்று கேட்டாராம். புலம் பெயர் குடும்பங்களின் பணத்தில் புலத்தில் வாழ்கை போவது யாதார்த்தம். அதை தட்டிப்பறிக்கத்தான் புலத்தில் ஆட்களை நியமித்திருக்கிறது அரசு.

 

ஆனால் இவற்றை எல்லாம் முறையே செய்வதாக புலத்து தமிழர்கள் கற்பனை செய்கின்றார்கள்.இவற்றை செய்வதற்கு ஸ்திரமான ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம். அதற்கான ஒற்றுமையோ அடிப்படையோ கூட புலத்தில் இல்லை. அதற்கு முயற்ச்சிக்கவும் இல்லை. 

இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். TRO போன்ற ஒழுங்கமைக்கப்பட்டவையாக இருந்தால் தான் காசை முடக்கலாம். தனிய தனிய காசை அனுப்பும் போது அதை பறிப்பது அரசுக்கு மிக கஸ்டமாக இருக்கிறது. அதை பற்றித்தான் சண்ட மாருதன் பேசுகிறார்.  திரும்ப ஒரு TRO  வேண்டும் என்கிறார்.

 

புலத்தில் தமிழர்கள் செய்வது தேசீயத்தை வைத்து தங்களுக்குள் சொறிந்துகொள்வது அடயாள அரசியல் செய்வது. குழு அரசியல் செய்வது.

எதைச் செய்யவேண்டுமோ அதை செய்வதை விடுத்து புலிக்கொடியுடன் விழையாட்டு மைதானங்களில் ஓடுவது யாகங்கள் செய்வது அமர்வுகள் வாக்கெடுப்புகள் முரசறைவுகள் என்று தங்களுக்குள் சுய இன்பம் காணும் போக்கே இங்கிருக்கின்றது.

அண்மைய பிரச்சாரங்கள் அரசுக்கு நன்றாக வலிக்கிறது. இதனால் பொதுநலவாயம் என்ற கயிறு அரசின் தொண்டையில் நன்றாக இறுக்கிறது. இதற்கு அரசு காணும் மாற்றீடுதான் ஐ.தே.கட்சி அங்கத்தவர்களுக்கு 25 கோடி வரையும் பணம் கொடுத்து புனர் வாழ்வு அளித்து ஸ்ரீ.சு.கட்சியில் சேர்ப்பது.  ஏன் 2/3 பெரும்பான்மையின் பின்னரும் அரசு ஆட் சேர்க்கிறது என்பது பலருக்கு ரகசியமாக இருக்காலாம். அரசின் மீது இருக்கத்தக்கத்தான நம்பிக்கை எல்லாவற்றையும்  அணமையில் செய்த பிரச்சார உத்திகள் "0" வாக கொண்டு வந்துவிட்டன.  இனி அரசு ஜனநாயத்திற்கு திரும்ப முடியாத நிலை. எனவே அது ஒரு கட்சி கீயூபா, வட கொறியா, சீனா போன்ற அரசியலில் இறங்குகிறது.  அதற்கு 100% வித இருந்தால்தான் நல்லது.  அப்போது அந்த பாராளுமந்ற உறிப்பினர்களுக்கு தேர்தல் வராமல் இருப்பது நல்லத்தாக இருக்கும். 

 

தாயக மக்களின் யதார்த்த நிலையில் ஐக்கியப்படாமல் புறம்புபட்ட நிலையில் இருந்துகொண்டு தாயக மக்களின் அரசியலில் குறுக்கிட முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

தாயக மக்கள், புலம் பெயர் மக்கள் என்ற இரண்டு உண்மையில் எங்கும் இல்லை. சண்டமாருதனின் அரசு 6 திருத்தம், பயங்கரவாத சட்டம், 2/3 பெரும்பான்மை, இராணுவ ஆட்சி, வெள்ளைவான் அராஜரீகம்  போன்றவற்றை வைத்து தமிழரின் நிலத்தை பறித்துவைத்திருந்து, அவர்களை பிரித்துவைத்திருக்கும் வெற்றியே. தமிழரின் புலம் பெயர்வு 83 ன் கறுப்பு யூலையில் தான் ஆரம்பித்தது. அதாவது அடக்கு முறையில் தப்ப முடியாமல் போவிட்டவர்கள் தாயக மக்கள்; உயிருடன் தப்பி அடக்கு முறையை எதிர்ப்பவர்கள் புலம் பெயர் தமிழர். துரோகி என்ற சொல்லு சிலருக்கு வலிப்பது போல அரசை எதிர்க்க என்று புலம் பெயர் தேசங்களில் ஒரு சாரார் இருப்பது அரசுக்கு வலிக்கிறது. இதனால்  மேல்ச் சொன்ன உத்திகளை கையாண்டு அரசு இரு மக்களையும் பிறித்து வித்தியாசத்தை  ஏற்படுத்தி பின்னர் அந்த வித்தியாசம் புலம் பெயர் மக்களின் சுயநலமாக படம்காட்ட அடிவருடிகளை ஏவி வைத்திருக்கிறது 

 

ஒன்றரை லட்சம் இராணுவம் தமிழ் மக்களை ஆட்சி செய்ய்யலாம் என்றால்  உலகின் எங்குள்ள தமிழரும் ஈழத்தமிழருக்காக பேச முடியும். தேவை எனில் அதற்கு மேலும் போகலாம். 

 

 

புளட்டின் அரசியல் பிரிவு இப்படி பீத்தலாகும் என யாரும் நினைக்கவில்லை. :icon_mrgreen:

டைசன் புரபசனல் பொக்சர் ஆக இருந்தாலும் இடைக்கிடை அங்கங்கேயும் கை வைப்பார் .அப்படிதான் நாங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

டைசன் புரபசனல் பொக்சர் ஆக இருந்தாலும் இடைக்கிடை அங்கங்கேயும் கை வைப்பார் .அப்படிதான் நாங்களும்.

 

நல்ல காலம் நீங்கள் சொன்னதை ரைசன் கேள்விப்படவில்லை. கேள்விப்பட்டிருந்தால் காதை சப்பி துப்பி இருப்பார். :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

குறும்தேசியவாதம்.........சாதியம்....இனவாதம்.....போன்றவை எமது இனத்தில் உள்ளது அதேபோன்று புலி எதிர்ப்பாளர்களும் உண்டு......புலி எதிர்பாளர்களும் தங்களை மீள் ஆய்வு செய்ய வேண்டும் ....என்னை பொருத்தவரை குறுந்தேசியாவாதியும் புலிஎதிர்ப்பாளர்களும் ஒன்றே இருவரும் எம் இனத்திற்க்கு விடுதலையை பெற்றுத்தரப்போவதில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.