Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‎காவியக் கவிஞன்‬ நான்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

OB-TH430_POET_7_D_20120608232403.jpg

காவியக் கவிஞ்ஞன் நான்

என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது
அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது..

என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப்
போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி
அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது..

என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம்
அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது
எஞ்சியவர்களை அகதியாக்கியது..

மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து
முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்..

இன்று????????

அவன் அவதாரம் எடுப்பான்
என் வயிற்றுப் பிழைப்பு நடக்க
அவன் வருவான்..

வரவேண்டும் .!!
சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க
அவன் வரவேண்டும்...!!!
  • Replies 54
  • Views 6.4k
  • Created
  • Last Reply

ஏன் என்றால் அவர்கள் சாப்பாட்டுக்கு நீங்க தானே பணம் அனுப்புறிங்கள். முல்லிவாய்க்காலுக்கும் முன்னும்  ஒவ்வொரு கவிதைக்கும் 1000 பொற்காசுகள் கொடுத்தீர்கள். அந்த ஏக்கத்தில் அவர் உங்களிடம் பொற்காசுகளை எதிர்பார்த்து கவி படைக்கிறார். பார்த்து நல்ல பொட்காசாய் கொடுங்கள் அவசரத்தில் செல்லாக் காசை கொடுத்து விடப் போறீங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

969569_374901715966519_374514905_n.jpg

காவியக் கவிஞ்ஞன் நான்

என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது

அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது..

என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப்

போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி

அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது..

என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம்

அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது

எஞ்சியவர்களை அகதியாக்கியது..

மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து

முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்..

இன்று????????

அவன் அவதாரம் எடுப்பான்

என் வயிற்றுப் பிழைப்பு நடக்க

அவன் வருவான்..

வரவேண்டும் .!!

சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க

அவன் வரவேண்டும்...!!!

ஜீவாவின் கவிதை மிகப்பெரிய அவதூறாக இருக்கிறது.. எங்கிருந்தாவது பிரதிபண்ணி போட்டாரா அல்லது சுய ஆக்கமா என்று தெரியவில்லை..!

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்தவைதான் போராட்ட இயக்கங்கள்.. அன்று வெற்றியுடன் கூட நின்றீர்கள்.. இன்று தோல்வியென்று நினைத்து விரல் நீட்டுகிறீர்கள்..! :rolleyes: கவிஞர்கள் குறைந்தபட்சம் ஒரு நிலையிலாவது உள்ளார்கள்..!

சிங்கள அரசாங்கம் அடக்குமுறை செய்யாமல் சிறுபான்மை இனமென்று எவ்வளோவோ சலுகை தந்து , 56 , 77 , 83 கலவரங்களில் எல்லாம் ஒரு தமிழன் கூட சாகாமல் காப்பாற்றி உங்களை செல்ல பிள்ளைகள் வைத்திருக்க உந்த முட்டாள் கவிஞனினதும்   சூரியகடவுளினதும்  சொல்லுகேட்டு போரால் மாண்டவர்ககளை நினைத்து இந்த கவிஞனின் ஆதங்கம் நியாமானதே  :unsure: 
 
இப்ப பார்த்தியளே போர் முடிந்தவுடன் , வடக்கு கிழக்கு என்ன மாதிரி இருக்கு . ஒரு கொலை கூட இப்ப இராணுவம் செய்யுறதில்லை.இலங்கை அரசாங்கம் என்ன தங்கமானது தெரியுமே   <_< 
 
இப்ப ஒரு தமிழச்சி கற்பழிக்க படுகிறாளா ?  தமிழனின் நிலம் ஆக்கிரமிக்கப்படுதா? ஓர் தமிழன் காணமல் போகிறானா ? இந்த கவிஞனோடு சேர்ந்து நானும் உரக்க சொல்வேன் " இல்லவே இல்லை" :D 
 
Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஜீவா!

கவிதை நன்றாக உள்ளது! ஏனெனில், அது உங்கள் உணர்ச்சியின், தணிக்கை செய்யப்படாத வெளிப்பாடு! :icon_idea:

நாங்கள் ஒன்றை மட்டும் மறந்து போகின்றோம்! ஒருவரது கருத்துக்களையும், செயல்களையும் அந்தந்தக் காலத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்! அப்போது தான் அவை, பொருத்தமான கருத்துக்களா அல்லது பொருந்தாதவையா என முடிவு செய்யமுடியும்!

உதாரணத்துக்கு 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்ற கவிதையைப் படித்தால், அது எனக்கும் விளங்கும், உங்களுக்கும் விளங்கும்! ஆனால் எனது குழந்தைகளுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு, அவை விளங்காது !. விளங்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை! அதே நிலையைத் தான், நாம் காசி ஆனந்தனின் கருத்துக்களிலும் எடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்!

அந்தப் போராட்ட காலத்தில், அவரது கருத்துக்கள் பொருத்தமானவையாக இருந்தன! ஆனால், இன்றைய கால கட்டத்தில், அவை அநாவசியமாகத் தான் படுகின்றன! :o

கடந்த காலத்தில் இருந்து பாடம் படிப்பது என்பது வரவேற்கத் தக்கது! ஆனால் கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துவது அவ்வளவு இயல்புடையதல்ல!

பிரித்தானிய அரச பரம்பரையின் சொத்துக்கள், அனைத்தும் கடற் கொள்ளைகளினாலும், களவுகளாலும் சேர்ந்தவையே ! கடற்கொள்ளைக்காரர்களுக்குப் கௌரவப்பட்டங்கள் கூடக் கொடுத்திருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் அதையிட்டுப் பெருமைப்படாத போதிலும், தங்கள் முன்னோர் 'கடற் கொள்ளையர்கள்' என்று கூறுவதேயில்லை!

ஏனெனில், அவ்வாறு கூறுவதன் மூலம் தங்களை மற்றவர்கள் முன்பு தாழ்த்திக் கொள்ளுவதை அவர்கள் தவிர்க்கின்றார்கள்! அதே நிலையையே, நாமும் எடுத்து முன்னோக்கிய பயணத்தைத் தொடருவோம்!

மற்றும்படி கருத்துக் கூறுவதும், பதில் கருத்துக் கூறுவதும் காசியினதும், உங்களதும் கருத்துச் சுதந்திரமே!

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் மண் அள்ளுவதை பற்றி கவிதை எழுதத் தெரியாதோ இந்த சமுதாய நலன் விரும்பிகளுக்கு??

||மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்..|| புலிகளை சாட்டி அசூல் அடிச்சுப்போட்டு கவிஞரில் மேல் மட்டும் ஏன் பழி போடுகிறீர்கள்?

புள்ளியே குத்தாதனான் ஜீவாவுக்கு பச்சை குத்தினேன் .

அந்த அந்த நேரத்தில் உண்மை பேச ஒரு திராணி வேண்டும் .அமத்தி வைத்திருந்து விட்டு விளையுளை பார்த்து வலை வீசுபவர்கள் தான் இங்கு அதிகம் .

உண்மையை சொல்லி நல்லதை செய்ய வேண்டும் .

பழமைவாதிகள் உங்களை  போன்றவர்களை  வெளியில் வர முதலே அமுக்க நிற்பார்கள் அதையும் தாண்டி வரவேண்டியதுதான் உங்கள் வெற்றி .

விட்டால் கல் தோன்றி மண் தோன்றி என்று தொடங்கிவிடுவார்கள் .

பிரிட்டிஷ்காரன் தான் செய்த அநியாயங்களை தானே படமாக்கி விற்கவும் செய்கின்றார்கள் . நாமோ அன்று முதல் இன்றுவரை பொய்யிற்கும் புரட்டிற்கும் இன்று வரை நியாயம் சொல்ல மட்டும் முன் நிற்கின்றோம் .

நீங்கள் பச்சை குத்திப் போட்டீங்கள், எண்டதுக்கு யாழ் களம் விழா எடுக்கவேண்டும் என்றா எதிர் பார்க்கின்றீர்கள், அர்ஜுன்? :icon_idea:

மண்ணின் மகிமை, உங்களை விட ஜீவாவிற்கு அதிகம் தெரியும்! அவரின் வலைத்தளத்துக்குப் பெயரே 'புழுதிவயல்"!

புதுமைவாதிகளான நீங்கள், சிங்கள அரசிடமிருந்து திரும்பப்பெற்ற, ஏதாவது சில தமிழின உரிமைகளைப் பட்டியலிடுங்கள்!

நானும் புதுமைவாதியாகி விடுகின்றேன்! :D

MoonBarking.jpg

களைத்தவுடன் செல்லுங்கள்.

நிலையற்ற கொள்கையுடைய மனிதர்கள். எழுதும் சுதந்திரத்திற்கு ஒர் எல்லையில்லையா. கவிஞனின் கால் தூசிக்குக்கூட அருகதையற்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழா நாட்களில்.. நல்லூர் வீதிகளில்.... பலர் பல தேவைகளோடு கந்தனைக் கூவி அழைக்கின்றனர்...

ஓர் அம்மா.. சாதாரண பருத்தி நெய்வுச் சேலை..உடம்பு நிறைய திருநீறு சந்தனம்.. ஓயாத "கந்தனுக்கு அரோகரா".. அவள் உள்ளக்கிடக்கைகளுக்கு வடிகாலாக.. கந்தனைக் கூவி அழைக்கிறாள்.

இன்னொரு அம்மா.. காஞ்சிபுரம் பட்டு... கழுத்து நிறைய தங்க மாலைகள்... கால்களில் கொலுசு.. கைகளில் வளையல்கள்.. உள்ளே பல ஏக்கங்கள்.. அவள் வாயிலும் "கந்தனுக்கு அரோகரா" வந்து போகிறது...

இன்னொரு யுவதி... உள்ளமெங்கும் காதலன் சிந்தனை.. கைபிடிக்கும் நாளின் எதிர்பார்ப்பில்... சுடிதாரோடு.. வாய் நிறைய அழைக்கிறாள்.. "கந்தனுக்கு அரோகரா"

இன்னொரு யுவதி.. நாட்டின் விடுதலைக்காய் போய்.. போர் வடுவைத் தாங்கி.. காலிழந்து.. கச்சான் விற்கிறாள்.. அவளும் "கந்தனுக்கு அரோகரா"... இன்னும் வெல்லுவம் என்ற நினைவில்....

இன்னொரு யுவதி.. நல்லூரில் அடி அழித்து... வாழ்க்கை கேட்டு.. வெளிநாட்டில்.. அகதி தஞ்சம்புகுத்த ஒருவருக்கு அம்மாவானவரின் பிள்ளை.. அவளும் ஜீன்சோடு சுற்றுலாவுக்கு வந்தவள்.. "கந்தனுக்கு அரோகரா"...

இன்னொரு மாணவி.. எழுதிவிட்ட சோதனையில்.. நல்ல பெறுபேறு... அவள் விருப்பு.. அவளும்.. "கந்தனுக்கு அரோகரா"....

இன்னொருத்தி.. கொலைஞனின் மனைவி.. சிறையில் வாடும்.. தன் துணைக்காக.. கையெடுத்து வணங்கி.. "கந்தனுக்கு அரோகரா"

இன்னொருத்தி.. சுத்த நாத்திகனின்.. குடும்ப பத்தினி.. அவளும்.. நோயில் விழுந்திட்ட நாத்திகனின் சுகம் வேண்டி.. "கந்தனுக்கு அரோகரா"

இன்னொரு சிறுவன்.. கோவணத்தோடு ஒரு மூலையில்.. கந்தனைக் காண்கிறான். கந்தா மூலஸ்தானத்தில் இரத்தினக் கற்கள் மின்ன.. தங்க வேலாய்.. பெறுமதியாய் இருக்கிறாய்.. இங்கோ... இப்படி. இருந்தாலும்.. உன்னை அங்கு தொட்டு வணங்குவோரும்.. இங்கு திட்டுவோரும்.. அங்கு திட்டுவோரும்.. இங்கு தொட்டு வணங்குவோரும் காண்கிறேன். இத்தனைக்கும்.. கந்தா நீ இருக்கிறாயா இல்லையா.. இறுதியில் அவனும்.. சிந்தனை தெளிய.... "கந்தனுக்கு அரோகரா"

இன்றைய எம்மவரின் நிலை இது தான்............................................ கந்தன்.. அவன் இரத்தின தாங்கினாலும்.. கோவணத்தோடு நின்றாலும்.. திட்டித் தீர்த்தாலும்.. வாழ்த்திப் பாடினாலும்.. கடவுள் கடவுள் தான்...!  :):lol:

(அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல.. சாட்சா.. நானே தான். தெற்கு வீதியில் நல்லூர் கேணியில் மீன்களோடு விளையாடுவதே என் வாடிக்கை... சாமி கும்பிடுறது வெகு சொற்ப நேரம் மட்டுமே. அப்போதெல்லாம் தெற்கு வீதியால்.. முருகன் தங்க வேலாய் சுற்றி வர பின்னால் பக்த கோடிகள் ஓடிப் போவார்கள். ஆராதனைகளை கண்ணில் ஒற்ற. நானோ கேணிப் படிகளில் விடுப்புப் பார்த்தபடி... ஓர் நாள். தெற்கு மூலையில்.. அந்தக் கந்தனைக் காண்கிறேன். வெறும் கோவணத்தோடு. ஒரு சிலரே வந்து அவன் பாதம் தொட்டுச் செல்கின்றனர். பலருக்கு அவன் அங்கிருப்பது தெரியாது. அங்கே...இன்னொருவரை (தண்டாயுதபாணி/தட்சணாமூர்த்தி என்று நினைக்கிறேன்) அவர் நல்லா பட்டு உடுத்தி இருக்கிறார் பலர் வந்து தொட்டு கைதட்டிச் செல்கின்றனர்..! எம்மவர்கள் ஒரே கடவுள் மீது அதாவது கந்தன் மூலஸ்தானத்தில் இருந்தால் அவனை ஒருவாறும்.. கோவணத்தோடு இருந்தால் இன்னொருவாறும் பார்க்கும்.. பழகும் பாங்கு கொண்டவர்கள். கடவுளுக்கே இந்தக் கதி என்றால்........................................) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன்  சேரும்  கூட்டம்

அவனை  மாற்றுமா?

எவ்வளவு  மாற்றலாம்??

நான்  என்ற  கர்வத்தை

எந்தளவு விதைக்கலாம்??

அதை  எவ்வாறு வளர்க்கலாம்???

எதுவரை

எதுவரை????????

சூரியத்தேவனின்  புதல்வனை

தந்தையின்

கோவணம் பற்றியும் பாடவைக்கலாம்........ :(

அதற்கு ஒரு  உதாரணம்

இக்கவிஞன்

இக்கவிதை................. :(  :(  :(

"ஒருவன்  சேரும்  கூட்டம்

அவனை  மாற்றுமா?

எவ்வளவு  மாற்றலாம்??"

மாற்றாது.

உண்மை முகத்தை வெளியிடும் கணங்கள் இவை.  எத்தனை பேரை தாண்டி எமது போரட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உள்ளதை திறந்து காட்டியதிற்கு நன்றி சொல்லனும்.

ஜீவா....

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். அதற்காக கவிஞர்கள் பொய்யர்களாக முடியாது.

கவிஞர் காசியானந்தன் சொன்னதை அப்படியே மேலோட்டமாக நேரிடையாக யோசித்தால், ஏதோ வேண்டாத கூற்றாகத்தான் தோன்றும். ஆனால் அப்படியல்ல. பல ஆண்டுகளாக தமிழ்மக்களை நன்கு படித்தவன் சொன்ன கூற்று அது. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களினை நன்கு பட்டறிந்தவன் தேவைகருதிச் சொன்ன கூற்று அது. சில விடயங்களை ஆழமாக சிந்தித்தால் சில விடயங்கள் புரியும்.

தமிழ்மக்கள் எப்பொழுதும் கொதிநிலையில் வைக்கப்படவேண்டியவர்கள். இல்லையென்றால்..... ஒன்றுமே நடக்காது. அப்படியே போட்டுவிட்டு வேறுவேலை பார்க்கப் போய்விடுவார்கள். அது அவருக்கு நன்கு தெரியும்.

கவிஞர் காசியானந்தன் ஒரு உண்மையான கொள்கைவாதி. கொண்டகொள்கையிலிருந்து இன்றுவரை அவர் தளம்பியதில்லை.

அறியாத்தனமாக அவர் அப்படிக் கதைப்பதற்கு அவர் முட்டாளும் அல்ல.

அவர் அப்படிச் சொன்னமைக்காக..... இப்படியான கோணத்தில் பார்ப்பது விரும்பத்தகாத ஒன்று. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் என்றால் அவர்கள் சாப்பாட்டுக்கு நீங்க தானே பணம் அனுப்புறிங்கள். முல்லிவாய்க்காலுக்கும் முன்னும்  ஒவ்வொரு கவிதைக்கும் 1000 பொற்காசுகள் கொடுத்தீர்கள். அந்த ஏக்கத்தில் அவர் உங்களிடம் பொற்காசுகளை எதிர்பார்த்து கவி படைக்கிறார். பார்த்து நல்ல பொட்காசாய் கொடுங்கள் அவசரத்தில் செல்லாக் காசை கொடுத்து விடப் போறீங்கள் 

வரவிற்கும், அருமையான கருத்துப்பகிர்விற்கும் நன்றி... :D

கவிதை அதன் கருத்து சரி பிழைகள் என்பதை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இங்கு கருத்திய எழுதிய பலரை பார்த்தால் அவர்களின் தரம் தெரிகிறது. சீவா நல்ல பக்குவப்பட்டிருக்கிறார். அமைதியான முறையில் பதில் அளித்திருக்கிறார்.பலரும் ஆத்திரத்தில் கவிதைக்கான தமது பதிலை அல்லது விமர்சனத்தை வைக்காமல் பன்றி,கூட்டம் என்று தனிமனித தாக்குதல்லைய்யெ இருக்கிறார்கள்.

அண்ணா சூரியனைப் பார்த்து வெயிலில் வேகிறவன் திட்டுவான் போ என்று கலைப்பான். நல்ல விளைச்சல் கண்ட விவசாயி புகழ்வான்.. வா என்று அழைப்பான். ஆனால் சூரியன் இவர்கள் இருவருக்காகவும் இங்கே வருவதில்லை..! அது காலத்தின் கோலம். இந்த எளிமையை எல்லோரும் உணர்ந்து விட்டால் போதும்.....மனித மனங்களில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.  :)  :lol:
 super :icon_idea: 

ஜீவா....

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். அதற்காக கவிஞர்கள் பொய்யர்களாக முடியாது.

கவிஞர் காசியானந்தன் சொன்னதை அப்படியே மேலோட்டமாக நேரிடையாக யோசித்தால், ஏதோ வேண்டாத கூற்றாகத்தான் தோன்றும். ஆனால் அப்படியல்ல. பல ஆண்டுகளாக தமிழ்மக்களை நன்கு படித்தவன் சொன்ன கூற்று அது. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களினை நன்கு பட்டறிந்தவன் தேவைகருதிச் சொன்ன கூற்று அது. சில விடயங்களை ஆழமாக சிந்தித்தால் சில விடயங்கள் புரியும்.

தமிழ்மக்கள் எப்பொழுதும் கொதிநிலையில் வைக்கப்படவேண்டியவர்கள். இல்லையென்றால்..... ஒன்றுமே நடக்காது. அப்படியே போட்டுவிட்டு வேறுவேலை பார்க்கப் போய்விடுவார்கள். அது அவருக்கு நன்கு தெரியும்.

கவிஞர் காசியானந்தன் ஒரு உண்மையான கொள்கைவாதி. கொண்டகொள்கையிலிருந்து இன்றுவரை அவர் தளம்பியதில்லை.

அறியாத்தனமாக அவர் அப்படிக் கதைப்பதற்கு அவர் முட்டாளும் அல்ல.

அவர் அப்படிச் சொன்னமைக்காக..... இப்படியான கோணத்தில் பார்ப்பது விரும்பத்தகாத ஒன்று. :(

இதுதான் நிதர்சனமான உண்மை. நாங்களும் முடிந்த அளவிற்கு எம்மால் முடிந்ததை செய்வோம். உண்மையான தேசியவாதிகளை துகில் உரிவதை கைவிட்டு  :icon_idea: 

ஜீவாவின் கவிதை "விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் " என்ற காசியின் பேச்சை பற்றியதுதான் .

சிங்களவனிடம் நாங்கள் என்ன பெற்றோம் அல்லது ஜீவாவிற்கு என்னை விட மண்ணை தெரியும் என்ற ஆராய்சி இல்லை .

ஏனெனில் நீங்களும் காசியின் பேச்சை ஏற்கும் சுயலாப அரசியல் தான் செய்கின்றீர்கள் .

அதை விடுத்து ஜீவா இப்போ எங்கு நிற்கின்றார் ,என்ன செய்கின்றார் என்ற ஆராய்சி தான் பலரும் செய்யினம்.யாழுக்கு இவை ஒன்றும் புதிதும் இல்லை .

கருணாநிதியை எவ்வளவு கேவலமாகவும் திட்டினாலும் கண்டும் காணாதவர்கள் காசிக்கு வக்காலத்து வாங்குவது தான் வேடிக்கை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவன்  சேரும்  கூட்டம்

அவனை  மாற்றுமா?

எவ்வளவு  மாற்றலாம்??

நான்  என்ற  கர்வத்தை

எந்தளவு விதைக்கலாம்??

அதை  எவ்வாறு வளர்க்கலாம்???

எதுவரை

எதுவரை????????

சூரியத்தேவனின்  புதல்வனை

தந்தையின்

கோவணம் பற்றியும் பாடவைக்கலாம்........ :(

அதற்கு ஒரு  உதாரணம்

இக்கவிஞன்

இக்கவிதை................. :(  :(  :(

வணக்கம் விசுகு அண்ணா.. :)

ஒருவருடைய பழக்கம் என்பது என்னைப் பொறுத்தவரையில் எந்த வகையிலும் அவருடைய ஆளுமையில் செல்வாக்குச் செலுத்திவிட முடியாது. சூழ்நிலை சிலவற்றை ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்கிறது இன்றைய சூழ்நிலை அவரவர் அறம் சார்ந்து தனக்கான தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கிறது.

நிற்க,

சிறு உதாரணம்..

காசி ஆனந்தன்

எம் தானைத்தலைவனின்

சேனைப்படைகளில்

மூத்தோனே - கவி யாததோனே

இஞ் ஞாலத்தீவினில்

ஈழப்பரணி இசைத்திடக்

கலை வேள்வி படைத்தோனே

காலப் பெருவெளியில்

உன் கந்தகக் கவி நிலைத்திடும்

கண்கொண்டு பார் திருமகனே..!

******************************************************

வைகோ

உன் திருவாய் உதிர்க்கும்

முழக்கம் இருக்கும் போர்முரசாய்

எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்

உன் பேச்சுக் கணைகளால்

அத்தனையும் வெற்றிக் கழிம்பல்லவா

திருவாசக்ம் முதல் மதுவுக்கெதிரான

வாசகம் முதல் உனதல்லவா

தலைமகன் கண்ட தவப்புதல்வனே

உன்னால் மலரும் தமிழீழம்..!!

*****************************************************

சீமான்

தங்கத்தேரினில் தமிழீழம்

காக்கப் புறப்பட்ட சிங்கத் தமிழன் சீமானே

உன் பாதம் படர்ந்திடும் புழுதிக்காற்றில்

பருதியே தலைமறைவாகித் தொலைப்பான்

பிட்டத்தில் பின்னங்கால் முட்ட

எதிரிப்(எட்டப்பர்) படைகள் பின்வாங்கும்

கரிகாலன் புதல்வர் நாம்

களம் விரைவோம்

காலம் சொல்ல ஈழம் மீட்போம்..!!!

**********************************************************

தமிழில் என்ன வார்த்தைகளுக்கா பஞ்சம்????? இப்படி எழுதி இருந்தால் கொண்டாடுவீர்கள்.

முதலில் என்னை மட்டுமல்ல யாரையும் கொண்டாடுவதையும், குற்றம் காண்பதையும் நிறுத்துங்கள்.

காசியானந்தன் மட்டுமல்ல எவரும் எனக்கு விரோதியுமல்ல, குடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டவர்களும் அல்ல,என்நோக்கமும் அவர்களை விரோதியாக்குவதல்ல பங்காளன் என்ற வகையில் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் என்னையும், என் இனம் சார்ந்தும் சிலவற்றுக்கெதிராக எழுதியேயாக வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். :):icon_idea:

அவர் புலிகள்  இருந்த போதும் சரி  இல்லை என்று சொல்லும் போதும் சரி ஒரே கொள்கையில்  தான் பேசிகொண்டிருகிறார். உங்களை போல  புலிகள் இருக்கும் போது ஒரு மாதிரியாகவும்  (   ) இப்போது அவர்கள்  இல்லை என்றாகி விட்ட  போது ஒரு மாதிரியாகவும்  எழுதவில்லை .    சரியோ  தவறோ  தனது கொள்கையில்  நிலையாக  நிற்கும்   அவருக்கு  காவிய  கவிஞன் என்று கவி படைக்கும்  நீங்கள் உங்களின் இந்த இரட்டை  நிலைக்கு  என்ன  பெயரில்  கவி படைக்க  போகிறீர்கள்  ஜீவா

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு அண்ணா.. :)

தமிழில் என்ன வார்த்தைகளுக்கா பஞ்சம்????? இப்படி எழுதி இருந்தால் கொண்டாடுவீர்கள்.

முதலில் என்னை மட்டுமல்ல யாரையும் கொண்டாடுவதையும், குற்றம் காண்பதையும் நிறுத்துங்கள்.

இது  எந்தவகை   உத்தரவு  ஜீவா

காசியானந்தன் மட்டுமல்ல எவரும் எனக்கு விரோதியுமல்ல, குடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டவர்களும் அல்ல,என்நோக்கமும் அவர்களை விரோதியாக்குவதல்ல

பங்காளன் என்ற வகையில் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில்

என்னையும், என் இனம் சார்ந்தும் சிலவற்றுக்கெதிராக எழுதியேயாக வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். :):icon_idea:

பாதிக்கப்பட்டவன்  என்ற ரீதியில்

எழுதலாமே  ஜீவா

சிங்களம் பற்றி

அடக்குமுறை  பற்றி

வன் புணர்வு பற்றி

அத்துமீறிய  குடியேற்றம்  பற்றி

போராளிகளின்  விடுதலை  பற்றி

கைதிகளின் வதைபற்றி

இந்தியாவின் நரித்தனம் பற்றி

சர்வதேசத்தின்  பாராமுகம்  பற்றி

ஐநாவின் தூங்குநிலை  பற்றி

............................

.................................

.....................................

செத்தவீட்டில் ஒப்பாரி  வைக்கும்

காசிக்கு எதுக்கு

பாதிக்கப்பட்டவன்  படைக்கணும்...........??? :(   

தமிழருக்காக

காசி கடந்ததில்

தூசி  வருமா எம்மது...........??? :(  :(  :(

இங்கு  காசியண்ணாவின்  கழுத்தை  இழுத்து  தாங்கள்  அறுத்தது

எவரது கழுத்தையோ  தேடித்தான்

நாம் அறிவோம் :(

Edited by விசுகு

கவிதை தனிமனித தாக்குதலாக அமைந்திருப்பது வருந்தத்தக்கது.  கவிதை காசி ஆனந்தனின் நிலைப்பாட்டை தொடவில்லை. அது அருசுனன் யாழில் தொடர்ந்து முன்னெடுக்கும் நக்கல்ப் பாணியில் இருப்பது இன்னும் வேதனை தருவது.

அகிம்சைப் போராட்டம் அதன் பின்னால் தொடங்க இருந்த ஆயுத போரட்டத்திற்கு அடி கோலியிருந்தது.  ராஜதந்திர போரட்டத்திற்கு வழிகோலிவிட்டுபோராளிகள் ஆயுதங்களை மௌனித்தார்கள். ஒன்று இல்லாமல் மற்றயது வந்திருக்க முடியாது. மொட்டு இல்லாமல் பூவராது, பூ இல்லாமல் பிஞ்சு வராது.  ஆயுத போராட்டத்தை இழிவு படுத்துவது தமிழருக்கு உரிமை தேவை இல்லை, அவர்கள் தங்களைதான் தேவை இல்லாமல் அழித்தார்கள்  என்பது போலானது.

இறால் காரன் தெருவில் வரும் பொது மணியைக் கிலுக்குவான். குடும்பத்தலைவி வீட்டுக்கு வெளியே வந்ததும் மணியை பைசிக்கிலில் தூங்க போட்டுவிட்டு பைசிக்கிலை நிறுத்தி ஸ்ராண்டில் போட்டுவிட்டு பேரத்தில் இறங்குவான். அந்த நேரமும் அவன் மணியைக் கிலுக்கினால் அது வாடிக்கைக்காரிக்கு பேரத்திற்கு இடைஞ்சல்.  இதனால் ஆயுதங்கள் ஓயப்போடப்பட்டுவிட்டன. வீடுகளுக்கு வெளியே வந்த சர்வதேசத்துடன் ராஜதந்திர முறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் நாட்டு அரசியலுக்கும், தமிழ் ஈழ அரசியலுக்கும் நடைமுறைப் பேதம் இருக்கு. அங்கே பேச்சுக்கு இடம் இருக்கு. ஊடக சுதந்திரம் அடக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள், தமது பிரச்சாரத்தில் ஒருபகுதியாக வரவிருக்கும் நிகழ்வுகளை எதிர்வு கூற முடியும். சரியான எதிர்வு கூறல்களை செய்வது அங்கு இன்னும் ஒரு அரசியல் பந்தயமாக இருக்கு.   தமிழ் ஈழத்தில் பேச்சுக்கு இடம் இல்லை. எனவே அரசியல்வாதிகள் பேச்சால் மக்களைக் கவர முயற்சிப்பதில்லை. தமிழ் ஈழம் கேட்கும் தலைவர்களான, நெடுமாறன், சீமான், வைகோ அந்த நிலத்து பண்பாடுகளுடன் அந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். இதில் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது தமிழ் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள முயலும் ஒரு அரசியல் செய்தி. இதில் தலைவர்கள் கூறும் எதிர்வுகள் அவர்கள் எடுதுக்கொள்ளும் chances. ஆனால் எந்த சூழ் நிலையிலும் போராட்டம் முன்னால் தொடரப்பட வேண்டும் என்பது தமிழீழத்தவரின் அடிப்படைத் தேவை. செய் அல்லது செத்துமடி என்பது அவர்களின் நிலைமை. அவர்கள் தலைவர் வருவார் என்று போராட்டத்தை தள்ளிப்போடப்போவதில்லை. அது அவர்களுக்கு தலைவர் விட்டுவைத்திருக்கும் செய்தியுமல்ல.

இந்த சூழ்நிலைகளில் ஆயுதப் போராட்டம் மீளாரம்பிக்கப்பட வேண்டும் என்ற காசி ஆனந்தனின் இன்றைய நிலைப்பாடு காலவதியாகியதொன்று. இது தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பான தலைவர் எப்போது திரும்பி வருவார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் ஒன்றல்ல. நெடுமாறன், வைகோ .... புலிகள் இப்போது ஆயுத போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரவில்லை. 

இந்த சூழ்நிலையில் காசி ஆனந்தன் மீது வரையப்பட்ட கவிதை தன்னைத்தான் அடையாளம் காணத் தவறுகிறது. காசி ஆனந்தன் உணர்வு பூர்வமாக ஆயுதப்போராடத்தில் பங்கெடுத்துகொண்ட கவிஞன். அதன் பலாபலன்களை அனுபவித்தவர். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமையை அடைந்தவர். மேலும் எந்த ஒரு நேரத்திலும் தமிழர் யாரும் ஆயுத போராட்டத்தின் வேதனைகளுக்கு குற்றம் ஏற்க முடியாதவர்கள். ஏன் அனில் அது ஈழத்தமிழ் மண்ணில் யாரும் உசுப்பேத்தி கொண்டுவரப்பட்டது என்ற கருதுகோள் தவறு. அது சிங்களத்தால் 65 ஆண்டுகளாக  தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. தமிழ் மக்களின் இழப்புக்களுக்கு அதுதான் காரணம்.  ஆயுதபோராட்டம் வராவிட்டிருந்தால் பறிக்கப்பட்ட வேலைகள் தமிழருக்கு திரும்பக் கொடுக்கப் பட்டிருக்கமாட்டா.  எரிக்கப்பட்ட உடமைகளுக்கும், கொல்லப்பட்ட உயிர்களுக்கும்  நட்ட ஈடு கிடைத்திருக்கமாட்டா. தெற்கிலிருந்து துரத்தப்பட்ட தமிழருக்கு போக இன்னொரு இடம் கிடைத்திருக்க மாட்டாது.  இனி சரித்திரத்தில் என்றுமே அவர்கள் தாங்கள் வசித்த இடங்களில் குடியேற்றப்படப்போவதில்லை. அதற்கான பாதுகாப்பு, உறுதிமொழியை, கூட்டமைப்போ, அரசாங்கமோ, சர்வதேசமோ  வழங்கவும் போவதில்லை. அதிலும் கொடுமை ஈழத்தமிழரின் அவலத்தை இந்தியா தனது நன்மைகளுக்கு பாவித்து நாடு பிடிக்க முயன்றமை. இது தமிழனின் அழிவை பலமடங்காக்கியது. உண்மை இந்த திசையில் இருக்கையில்  ஆயுதப்போராட்ட காலத்தை வராமல் தடுத்திருக்க காசியானந்தனின் கவிதைகளால் முடிந்திருக்காது,  இதில் நடந்தவற்றுக்கெல்லாம் காசியானந்தன் பொறுப்பாகவும் மாட்டார்.

.

இப்படி நாலுவரிக்கவிதைகள், பத்து வரிக்கவிதைகள் தமிழரின் உண்மை சரித்திரத்தை சிதறடிக்குமே அல்லாமல் தமிழருக்கு சிங்களத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடுமைகளைப் பறைசாற்றாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126347&p=919325

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், ஜீவா!

கவிதை நன்றாக உள்ளது! ஏனெனில், அது உங்கள் உணர்ச்சியின், தணிக்கை செய்யப்படாத வெளிப்பாடு! :icon_idea:

நாங்கள் ஒன்றை மட்டும் மறந்து போகின்றோம்! ஒருவரது கருத்துக்களையும், செயல்களையும் அந்தந்தக் காலத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்! அப்போது தான் அவை, பொருத்தமான கருத்துக்களா அல்லது பொருந்தாதவையா என முடிவு செய்யமுடியும்!

உதாரணத்துக்கு 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்ற கவிதையைப் படித்தால், அது எனக்கும் விளங்கும், உங்களுக்கும் விளங்கும்! ஆனால் எனது குழந்தைகளுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு, அவை விளங்காது !. விளங்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை! அதே நிலையைத் தான், நாம் காசி ஆனந்தனின் கருத்துக்களிலும் எடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்!

அந்தப் போராட்ட காலத்தில், அவரது கருத்துக்கள் பொருத்தமானவையாக இருந்தன! ஆனால், இன்றைய கால கட்டத்தில், அவை அநாவசியமாகத் தான் படுகின்றன! :o

கடந்த காலத்தில் இருந்து பாடம் படிப்பது என்பது வரவேற்கத் தக்கது! ஆனால் கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துவது அவ்வளவு இயல்புடையதல்ல!

பிரித்தானிய அரச பரம்பரையின் சொத்துக்கள், அனைத்தும் கடற் கொள்ளைகளினாலும், களவுகளாலும் சேர்ந்தவையே ! கடற்கொள்ளைக்காரர்களுக்குப் கௌரவப்பட்டங்கள் கூடக் கொடுத்திருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் அதையிட்டுப் பெருமைப்படாத போதிலும், தங்கள் முன்னோர் 'கடற் கொள்ளையர்கள்' என்று கூறுவதேயில்லை!

ஏனெனில், அவ்வாறு கூறுவதன் மூலம் தங்களை மற்றவர்கள் முன்பு தாழ்த்திக் கொள்ளுவதை அவர்கள் தவிர்க்கின்றார்கள்! அதே நிலையையே, நாமும் எடுத்து முன்னோக்கிய பயணத்தைத் தொடருவோம்!

மற்றும்படி கருத்துக் கூறுவதும், பதில் கருத்துக் கூறுவதும் காசியினதும், உங்களதும் கருத்துச் சுதந்திரமே!

உங்களுடைய கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை உண்மை தான் ஏற்றுக்கொள்கிறேன் புங்கை  அண்ணா ஆனால் இவ்வளவு அவலங்களுக்குப் பின்னும் இப்படியான இவர்களின் கருத்துக்களின் பின்னணி என்ன? இது காசியானந்தன் என்ற மனிதருக்கெதிரான கருத்துக்கள் அல்ல என்பதை நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் அண்ணா. மேலும் இப்படியானதொரு கருத்தைச் சொல்வதற்கான சந்தர்ப்பாமகத் தான் காசியானந்தன் கூறிய பத்திரிகைச் செய்திக்கான எதிர்விளைவு இது? ஒட்டுமொத்தமாக இப்படியான எண்ணவோட்டங்களைக் கொண்டோருக்கான பதிவே தவிர தனிப்பட்ட எவருக்குமானது எனக் குறுக்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :)

அடுத்து ஈழத்தமிழருக்கு விடுதலை பெற்றுத்தருகிறேன்,தமிழீழம் பெற்றுத்தருகிறேன் என்பவர்களும் சரி எமது அவலங்களைத் தமது சுயநல அரசியலுக்கும், தமது இருப்புக்குமே மட்டும் பயன்படுத்தும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு விளக்குப் பிடிக்கும் புலம்பெயர் பிழைப்புவாதிகளையும் அம்பலப்படுத்துவதும் கூட ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இங்கு கருத்து எழுதுபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 80-90களிலேயே நாட்டை விட்டு ஓடி வந்து பத்திரிகைச் செய்திகளிலும்,இணையங்களிலும் செய்திகளைப் படித்து விட்டு தேசியம் பேசுவதும்,மீண்டும் வருவார்,போர்வெடிக்கும், ஈழம் அமையும் என்பது அவர்களுக்கு சுதியேற்றும் செய்தியாக இருக்கலாம் ஆனால் 2008 வரை ஊரில் இருந்து விட்டு ஒவ்வொரு சென்றிபொயின்டையும் கடக்கும் போதும் முதுகு கூசும், அடுத்தது நான தானா என்று ஏங்கிச் செத்த எமக்கு இந்த உசுப்பேத்தல்களின் வலி அதிகமாகவே தெரியும். இல்லை எனில் ஏ9 பாதை திறந்த நேரம் ஊருக்குப்போய் தலமையுடன் போட்டோ எடுத்து விட்டு வந்தும்,அரசியல் துறையுடன் பேசிவிட்டு  TRO வுக்கு காசு சேர்த்து விட்டு தாமும் அடித்து வாழ்பவர்களுக்கு இப்படியான செய்திகள் சந்தோசத்தைக் கொடுக்கலாம், இவர்கள் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேதாந்தம் மட்டும் தான் பேசத்தெரியும் வேதனையோட வலி தெரியாது. :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. நீங்கள் சொல்வது பல இடங்களிலும் நடப்பதுதான்.. உங்களுக்கு முதுகு கூசியதுக்கு உங்கள் தந்தையோ, மாமன்மாரோ அல்லது உறவினர்களோ பங்காளராக இருந்திருக்கலாம்.. collective responsibility எடுக்காமல் இன்னொருவரை நோக்கி கைநீட்டுவது ஏற்புடையதன்று..

அமெரிக்க ஜனாதிபதி அல்கைடாவுக்கு எதிராக அறைகூவல்விடுத்தால் அமெரிக்க மக்கள் கைதட்டுவார்கள்.. ஆனால் சாலையோர வெடிகுண்டில் சிக்குவது சாதாரண சிப்பாயாக இருப்பான்..

காசி அண்ணையை நோக்கி கைகாட்டிய நீங்கள் இப்ப புலம் பெயர்ந்தவைக்கு எதிரா கை காட்டுறீங்கள்..! இது கவிதையின் முதற்பொருளில் இருந்து விலகி சேதக்கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறது..

நீங்கள் 2008 இல் புலம்பெயர்ந்துவிட்டீர்கள்.. ஆனால் இன்றும் தாயகத்தில் உள்ளவர்களின் சார்பாக நீங்கள் எவ்வாறு பேசமுடியும்? அங்குள்ள ஒருவராவது தலைவர் வரமாட்டாரா என்று எண்ணுவாராக இருந்தால் அவர்களுக்கு உங்கள் கவிதை சொல்வது என்ன? :D

எனக்குத் தெரிந்த கொழும்புத் தமிழர் ஒருவர்.. அரசியலே பேசாதவர்.. தலைவர் எப்ப வருவாரு என்கிறார்.. :D

ஆக, வரும் நிகழ்வுகளை நிர்ணயிக்கப்போவது காரண காரியங்களே தவிர மேடைப்பேச்சுக்களும், கவிதைகளும் அல்ல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவின் கவிதை மிகப்பெரிய அவதூறாக இருக்கிறது.. எங்கிருந்தாவது பிரதிபண்ணி போட்டாரா அல்லது சுய ஆக்கமா என்று தெரியவில்லை..!

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்தவைதான் போராட்ட இயக்கங்கள்.. அன்று வெற்றியுடன் கூட நின்றீர்கள்.. இன்று தோல்வியென்று நினைத்து விரல் நீட்டுகிறீர்கள்..! :rolleyes: கவிஞர்கள் குறைந்தபட்சம் ஒரு நிலையிலாவது உள்ளார்கள்..!

இது தனிப்பட்ட ஒருவரையோ அல்லது போராட்ட இயக்கங்களையோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல, போராட்டத்தைச் சாட்டி தம் சுயநலத் தேவைகளை நிறைவேற்றும் சிலருக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்று அந்த வகையில் கடுமையான சொற்பிரயோகங்களை நான் பிரயோகிக்க விரும்பாத போதும் மென்மையான கவிதை இந்தளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்காது. இப்படி உசுபேத்துபவர்கள் அதை தம்மோடு மட்டும் வைத்திருப்பது தான் ஈழத்தமிழருக்குச் செய்யும் உதவி,புண்ணியமாய் அமையும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை உண்மை தான் ஏற்றுக்கொள்கிறேன் புங்கை  அண்ணா ஆனால் இவ்வளவு அவலங்களுக்குப் பின்னும் இப்படியான இவர்களின் கருத்துக்களின் பின்னணி என்ன? இது காசியானந்தன் என்ற மனிதருக்கெதிரான கருத்துக்கள் அல்ல என்பதை நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் அண்ணா. மேலும் இப்படியானதொரு கருத்தைச் சொல்வதற்கான சந்தர்ப்பாமகத் தான் காசியானந்தன் கூறிய பத்திரிகைச் செய்திக்கான எதிர்விளைவு இது? ஒட்டுமொத்தமாக இப்படியான எண்ணவோட்டங்களைக் கொண்டோருக்கான பதிவே தவிர தனிப்பட்ட எவருக்குமானது எனக் குறுக்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :)

அடுத்து

ஈழத்தமிழருக்கு விடுதலை பெற்றுத்தருகிறேன்,

தமிழீழம் பெற்றுத்தருகிறேன் என்பவர்களும் சரி

எமது அவலங்களைத் தமது சுயநல அரசியலுக்கும்,

தமது இருப்புக்குமே மட்டும் பயன்படுத்தும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளையும்

அவர்களுக்கு விளக்குப் பிடிக்கும் புலம்பெயர் பிழைப்புவாதிகளையும்

அம்பலப்படுத்துவதும் கூட ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இங்கு கருத்து எழுதுபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர்

80-90களிலேயே நாட்டை விட்டு ஓடி வந்து

பத்திரிகைச் செய்திகளிலும்,இணையங்களிலும் செய்திகளைப் படித்து விட்டு தேசியம் பேசுவதும்,

மீண்டும் வருவார்,போர்வெடிக்கும், ஈழம் அமையும் என்பது அவர்களுக்கு சுதியேற்றும் செய்தியாக இருக்கலாம்

ஆனால் 2008 வரை ஊரில் இருந்து விட்டு ஒவ்வொரு சென்றிபொயின்டையும் கடக்கும் போதும் முதுகு கூசும், அடுத்தது நான தானா என்று ஏங்கிச் செத்த எமக்கு இந்த உசுப்பேத்தல்களின் வலி அதிகமாகவே தெரியும். இல்லை எனில்

ஏ9 பாதை திறந்த நேரம் ஊருக்குப்போய் தலமையுடன் போட்டோ எடுத்து விட்டு வந்தும்,

அரசியல் துறையுடன் பேசிவிட்டு  TRO வுக்கு காசு சேர்த்து விட்டு தாமும் அடித்து வாழ்பவர்களுக்கு இப்படியான செய்திகள் சந்தோசத்தைக் கொடுக்கலாம்,

இவர்கள் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேதாந்தம் மட்டும் தான் பேசத்தெரியும்

வேதனையோட வலி தெரியாது. :(:icon_idea:

எங்கேயோ  கேட்ட  குரல்...................?? :(  :(  :(

காசி அண்ணையை நோக்கி கைகாட்டிய நீங்கள் இப்ப புலம் பெயர்ந்தவைக்கு எதிரா கை காட்டுறீங்கள்..! இது கவிதையின் முதற்பொருளில் இருந்து விலகி சேதக்கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறது..

நீங்கள் 2008 இல் புலம்பெயர்ந்துவிட்டீர்கள்..

ஆனால் இன்றும் தாயகத்தில் உள்ளவர்களின் சார்பாக நீங்கள் எவ்வாறு பேசமுடியும்?

அங்குள்ள ஒருவராவது தலைவர் வரமாட்டாரா என்று எண்ணுவாராக இருந்தால் அவர்களுக்கு உங்கள் கவிதை சொல்வது என்ன? :D

பாவம்  காசியண்ணை.......... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.