Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் இயங்கும் மாபெரும் தமிழர் நிறுவனம்: 82 மில்லியனுக்கு காணிகளை வாங்கியது!

Featured Replies

பிரிட்டனில் இயங்கும் மாபெரும் தமிழர் நிறுவனம்: 82 மில்லியனுக்கு காணிகளை வாங்கியது!

on 

05 August 2013.
Subaskaran-Lyca_eu05082013.jpg

லண்டனில் இயங்கிவரும் தமிழருக்குச் சொந்தமான மாபெரும் நிறுவனம் ஒன்று லண்டன் மையப்பகுதியில் 3.7 ஏக்கர் காணியை வாங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம் "லைக்கா மோபைல்" என்னும் இன் நிறுவனமே லண்டனில் உள்ள சவுத் குவே(மையப் பகுதி) £82 மில்லியன் பவுண்டுகள் செலவில் இக் காணியை வாங்கியுள்ளது. திரு.சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்பட்டு வரும்...

லைக்கா ரெல் குழுமத்தால், லைக்கா மோபைல், லைக்கா பிரயாண ஒழுங்கு, லைக்கா வங்கி (கிரெடிட் காட் வழங்கும்) நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருடம் ஒன்றுக்கு பல மில்லியன் பவுண்டுகள் லாபமீட்டிவரும் இந்த நிறுவனம் , இலங்கை வட கிழக்கில் பல திட்டங்களை தமிழர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளதும் அவர்களுக்கு பல உதவிகளைச் செய்துவருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

கிருஸ்டப கொலம்பஸ் வந்து இறங்கிய நகரங்களில் ஒன்றாக போற்றப்படும், மற்றும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான சவுத் குவேயில், தமிழர் ஒருவர் இவ்வளவு பெரிய காணியை வாங்கியுள்ளது இதுவே முதல் தடவையாகும். அத்தோடு அவர் ஒரு ஈழத் தமிழர் என்பது மிகவும் பெருமையான விடையமும் கூட. தமிழர்கள், இந்தியர்கள், போலந்து மக்கள், துருக்கி மக்கள் என பல நூற்றுக்கணக்கான வேற்றின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது லைக்கா மோபைல் ஆகும்.

 

உலகை மிகவும் குறைந்த விலையில் அழைக்க லைக்கா மோபைல் சிம் காட்டுகளை பல மில்லியன் மக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். லைக்கா மோபைல் தமது சேவையை, ஸ்பெயின் , இத்தாலி, தொடக்கம் அமெரிக்கா வரை விரிவாக்கியுள்ளார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் லைக்கா மோபைல் தற்போது கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்துள்ளது.

 

சர்வதேச அரங்கில், இரும்புத் தொழில் புரியும் லக்ஷ்மி மிட்டல், மைக்ரோ சாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், ஆப்பிள் நிறுவனம், மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக லைக்க நிறுவனமும் பெரும் வளர்சிகண்டு வருகிறது. இவை அனைத்திலும், இன் நிறுவனம் ஒரு ஈழத் தமிழரது நிறுவனம் என்பதே அனைவருக்கும் பெருமைசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

http://eutamilar.com/index.php/954-subaskaran-allirajah-s-lycatel-group-purchases-thames-quay-e14.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் முளைத்து தளிர்விடுவது பெரிய விடயமல்ல.....அதை தக்கவைப்பதுதான் பலருக்கு சிம்மசொப்பனம்,

  • கருத்துக்கள உறவுகள்

'சுத்துமாத்து' இல்லாத வியாபாரம் போல கிடக்கு! :D

 

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நேரடியாகச் சுத்துமாத்துச் செய்வதில்லை. வேறு பெயர்களால் வேறு அட்டைகளை விற்பனை செய்வர். சிறிது காலத்தில் அவை வேலை செய்ய மாட்டாது. இதில் பாதிக்கப்படுவது இடைத்தரகர்களே. இந்தக் காலத்தில் நேர்மையாக உழைப்பவன் எவனுமே இப்படி விரைவில் முன்னுக்கு வர முடியாது. ஆயினும் ஈழத் தமிழர் ஒருவர் சொத்துக்களை வாங்கியது தமிழருக்குப் பெருமைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நான் பெருமையாக கொள்ளவில்லை .......,

 

இவர் தன்னைச்சார்ந்தவர்களும் தனது தாய் மண்ணுக்கும் அவர் செய்வதையே பெருமையாக கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நேரடியாகச் சுத்துமாத்துச் செய்வதில்லை. வேறு பெயர்களால் வேறு அட்டைகளை விற்பனை செய்வர். சிறிது காலத்தில் அவை வேலை செய்ய மாட்டாது. இதில் பாதிக்கப்படுவது இடைத்தரகர்களே. இந்தக் காலத்தில் நேர்மையாக உழைப்பவன் எவனுமே இப்படி விரைவில் முன்னுக்கு வர முடியாது. ஆயினும் ஈழத் தமிழர் ஒருவர் சொத்துக்களை வாங்கியது தமிழருக்குப் பெருமைதான்.

இதனை நான் பெருமையாக கொள்ளவில்லை .......,

 

இவர் தன்னைச்சார்ந்தவர்களும் தனது தாய் மண்ணுக்கும் அவர் செய்வதையே பெருமையாக கொள்ளலாம். 

 

இந்தத்தொழிலிலை அறிந்தவன்  என்ற ரீதியில்

மிகவும் ஏமாற்றுத்தனமான  தொழில் மூலம்  உழைத்த பணம்.

சுமே  மற்றும் தமிழ் அரசு சொல்வது சரியே.

 

ஆனால்   உலகம் இதையே இன்று செய்கிறது  என்பதால் தமிழன்  வளர்ந்திருப்பது பெருமையே.

(ஒரு சிறு குற்ற   உணர்வு இருந்தாலும்)

தமிழர் ஒருவர் வளர்ந்த்தது பெருமை.

இவர் செய்தாரோ தெரியாது. ஆனால் இந்தத் துறையில் நிறைய மோசடிகள் செய்துதான் உழைக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ.. கோட் கேஸ் என்று வரேக்க பிறகு வாழ்த்தினை வாபஸ் வாங்காட்டிச் சரி. ஏலவே சில மோசடிகளில் சிக்கி கோட் கேஸ் என்று போயிருக்கினம்.

 

இதுமட்டுமல்ல.. இப்ப தென்னிந்நிய கலைஞர்கள் மூலமும் பணம் பார்க்கிறார்கள்..! டக்கிளசின் டன் ரீவிக்கும் விளம்பர கட்டணம் செலுத்தினம். சும்மா இல்ல...! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் செய்தாரோ தெரியாது. ஆனால் இந்தத் துறையில் நிறைய மோசடிகள் செய்துதான் உழைக்கிறார்கள்.  

 

 

T-Mobile demands EUR 38.5 mln from Lycamobile

 

Monday 23 November 2009 | 08:40 CET | News

 

T-Mobile is demanding EUR 38.5 million from MVNO Lycamobile, according to statements at a Hague court and court of appeals. The court in The Hague pronounced judgement on 13 October, giving its permission for T-Mobile to claim almost EUR 31 million for the period to end-July, plus interest from 15 September 2009. . The court approved on 20 November a claim of around EUR 7.5 million for the period from August to September. In addition, Lycamobile has to pay about EUR 45,000 in legal and litigation costs.

 

http://www.telecompaper.com/news/tmobile-demands-eur-385-mln-from-lycamobile--704485

 

Court action over alleged $28,000 underpayment of retail workers

 

Lycamobile allegedly committed several breaches of workplace laws. The company faces maximum penalties of $33,000 per breach. A directions hearing is listed in the Federal Magistrates Court in Brisbane on September 5.

 

http://www.fairwork.gov.au/media-centre/media-releases/2012/08/pages/20120815-lycamobile-prosecution.aspx

 

இப்படி நிறைய வாசித்த ஞாபகங்கள்...

 

சும்மா இல்ல நம்ம தமிழர்கள் அசைலம் அடித்துள்ள அனைத்து நாடுகளிலும் பிராட் செய்யினம்.. இவை..! :lol::D

 

இதுவும் பெருமை பாருங்கோ....! :icon_idea:

Lycamobile sells cheap international mobile calls, mostly aimed at migrant workers in Europe wanting to phone home. It sells them through phone cards or mobile deals. It uses two names - Lycatel for telephone card sales and Lycamobile for mobile phone calls.

 

But Timms avoided three surprising facts about Lycamobile.

 

First, even though it has a billion-euro turnover, it pays no tax.

 

Second, even though it claims not to make any profits, it has had spare cash to become one of the Tories' top donors. Since 2011 it has given the Tories £426,000.

 

Third, it has an international reputation for cheating its workers.

 

Multimillionaire Subaskaran Allirajah's European Lycamobile and Lycatel firms - all based in Dublin - had a turnover of around £550m, but made no profit and paid no tax. In Britain Lyca firms had over £150m turnover, but again no taxable profits.

 

http://www.morningstaronline.co.uk/news/content/view/full/133818

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சுத்து மாத்தி முன்னுக்கு வந்தால் வரவேற்போம் அதே சிங்களவன் என்டால்???????????????

மகிழ்ச்சி!

இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் பல தமிழர்களுக்கு உதவி செய்துவருகின்றார்கள் .

வாழ்த்துக்கள் .தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் சேவையை .

 

 

74914_364698113657350_1564834316_n.jpg

 

இவர்கள் உருப்படியா எதுவும் செய்வதில்லை என்று சொல்லுகிரீர்களோ?

வியாபாரத்துக்கு விளம்பரமும் அவசியம்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.