Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆராயப்படவேண்டியது அல்ல...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

wife5.jpg

வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.”

உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார்.

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம்.

அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

http://www.ilaignan.com/1917

ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன்னு பார்ப்போம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ராஜவன்னியன் அண்ணா.. :D ஆனால் நெடுக்ஸ்க்கு இன்னும் இந்த அனுபவம் கிட்டவில்லைதானே.. :wub:  ஆகவே மன்னிக்கலாம்.. :lol:

மாடு இழுக்கும் வரை வண்டியில் மூடைகளை ஏற்றுங்கள்.  இல்லையேல் பாதி வழியில் மாடு படுத்துவிடும்.  ஆனால் தேவையாயின் வீட்டுக்கு கூட்டி வந்து ஒரு தடவை தவிடு புண்ணக்கு ஊட்டினால் மிச்சப் பாரத்தை கொண்டுவந்து சேர்க்க இன்னொரு தடவை வண்டியில் பூட்டலாம்.  :lol:

"ஐம்பது, நூறு என்றல் அது என்னால் முடியாது, ஐந்தை, பத்தை என்றால் பையப் பைய இறுப்பன்." வட்டி இல்லாமல் கடனை கொடுக்காமால் வட்டியோடு கடன் கட்ட விரும்பும் கடனாளி.  :(

:D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை,தோசை,அப்பளம்,வடை!

ஆசை,தோசை,அப்பளம்,வடை! -எல்லாமே சுட்டது தான்!

ஆசைங்குறது ஆணுக்கும் உண்டு; பெண்ணுக்கும் உண்டு! ஆனா, பாருங்க எல்லாரும் பெண்களுக்குத் தான் ஆசை அதிகமுன்னு எழுதுறாங்க. (அப்பாடா, இனிமேலாவது வலையுலகத்துலே நம்மளைக் கொஞ்சம் கண்டுக்குறாங்களான்னு பார்ப்போம்!)

ஒரு ஊருலே புதுசா ஒரு கடை திறந்தாங்களாம். நம்ம பிக்-பஜார் மாதிரி ஒரு அடுக்குமாடிக்கட்டிடம்; மொத்தம் ஆறு மாடிங்க! ஆனா, அங்கே விற்பனைக்கு வச்சிருந்தது என்னவோ ஒரே ஒரு பொருள் மட்டும் தானாம் - கணவர்கள்! ஆமாம், அந்தக் கடைக்குப் போயி பொண்ணுங்க அவங்களுக்குப் புடிச்சா மாதிரி கணவனைப் பார்த்து பில் போட்டு, பிளாஸ்டிக் பையிலே தூக்கிட்டு வந்திரலாம். 

ஆனா பாருங்க, இதுலே ரொம்ப முக்கியமான விஷயம் என்னான்னா, வாங்க வர்றவங்க மேலே மேலே தான் போக முடியுமே தவிர கீழே வர முடியாது; ஒரு தளத்துலேருந்து அதுக்கு முந்தின தளத்துக்கு வர முடியாது; நேரா கீழ்த்தளத்துக்கே வந்திர வேண்டியது தான்.

ஒவ்வொரு தளத்துலேயும் ஒவ்வொரு மாதிரி கணவர்களை விற்பனைக்கு வச்சிருந்தாங்களாம். தரம் தரமாப் பிரிச்சு, பார்-கோடிங் பண்ணி, லேபல் தொங்க விட்டு வச்சிருந்தாங்களாம். இதைக் கேள்விப்பட்ட ஒரு அம்மணி, சரி, நாமும் போய் சல்லிசா நல்ல புருசனாக் கிடைச்சா வாங்கிட்டு வந்திரலாமேன்னு கிளம்பிப்போனாங்களாம்.

முதல் தளம். வாசல்லே ஒரு பெரிய அறிவுப்புப்பலகை இருந்திச்சாம். என்னான்னு அம்மணி பார்த்தாங்களாம்: "இந்தத் தளத்தில் இருக்கிறவங்கோ நல்ல சோலியிலே இருக்காங்க."

"அட, இது பரவாயில்லையே,"ன்னுச்சாம் அம்மணி. "நமக்கு வந்து வாய்சசவனுங்கெல்லாம் அப்பனோட பணத்தை வச்சுக்கிட்டு அலம்பல் பண்ணுறவனுங்கோ! பாக்கெட் மணி கிடைக்கலேன்னா பத்து நாளைக்கு போன் கூட பண்ண மாட்டானுங்கோ! ஆனாலும், அடுத்த மாடிக்கும் போய்த் தான் பாப்பமே?"

இரண்டாவது தளம். அறிவிப்புப்பலகை "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலைவெட்டியிருக்கு. பொஞ்சாதின்னா உசிரு!"

"அட, நல்லாருக்கே,"ன்னுச்சாம் அம்மணி. "ரெண்டாவது தளத்திலேயே இப்படீன்னா மூணாவது இதை விட நல்லாத்தானே இருக்கும்?"

மூணாவது தளம்: "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்கவும் சும்மா கிண்ணுன்னு இருப்பாங்க!"

"இது தான் மேட்டரா?" அம்மணி யோசிச்சுது. "மேலே போகப்போக அயிட்டம் நல்லாவே இருக்குது."

அத்தோட நிக்காம அடுத்த தளத்துக்கும் போச்சுது அம்மணி. 

"இங்கே இருக்கிறவங்களுக்கு நல்ல வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்க ராசாவா இருப்பாங்க; சமையல் கூட பண்ணுவாங்க!" -அப்படீன்னுநாலாவது தளத்து போர்டு சொல்லிச்சு.

"கிட்டத்தட்ட ஷாப்பிங்கே முடிஞ்சா மாதிரி தான்,"ன்னு கூச்சலே போட்டாங்க அம்மணி. "எதுக்கும் அஞ்சாவது மாடிக்கும் போய்த்தானே பார்ப்போமே? இதை விட பெட்டராக் கிடைச்சா வேண்டான்னா இருக்கு...?"

அஞ்சாவது மாடியிலே அறிவுப்புப் பலகை என்ன சொல்லிச்சு? "இவங்கெல்லாம் நல்ல வேலையிலே இருக்காங்க, பொஞ்சாதின்னா உசுரு, சமையல் தெரியும். அத்தோட குழந்தைகளை நல்லாக் கவனிச்சுப்பாங்க!"

"யுரேகா!"ன்னு கத்தினாங்களாம் அம்மணி. "ஆனா, இதை விடவும் நல்ல புருஷன் ஆறாவது மாடியிலே இருந்தாகணுமே! இவ்வளவு தூரம் வந்திட்டு அதை ஏன் மிஸ் பண்ணனும்? போயிர வேண்டியது தான்."

ரொம்ப ஆசையாசையா அம்மணி ஆறாவது மாடிக்குப் போனாங்களாம். வெளியே பெரிய போர்டு மாட்டியிருந்துச்சு. என்னா...?

"நீங்க இந்த மாடிக்கு வந்த 34,56,789,012-வது பெண்மணி. இங்கே விற்பனைக்கு எந்த ஆம்பிளையும் இல்லை. பொண்ணுங்களைத் திருப்திப்படுத்தவே முடியாதுன்னு புரிய வைக்கிறதுக்காகத் தான் இவ்வளவு பெரிய மாடியைக் காலியா வச்சிருக்கோம். போயிட்டு வாங்க!"

http://settaikkaran.blogspot.ca/2010/01/blog-post_6775.html

  • கருத்துக்கள உறவுகள்

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம்.

அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

வாழ்க்கை   வாழ்வதற்கே  என்பதை  நாம்  உணர்ந்தால்தான்  வாழ்க்கையை  இனிப்பாக்கமுடியும்.

ஆளையாள்  அடிபடுவதும்  

வார்த்தைகளால் நோகடிப்பதும்

திட்டிக்கொள்வதும்

...........................  வாழ்க்கையல்ல. அது  நரகம்

புரிந்து  விட்டுக்கொடுத்து  வாழுதல்  என்பது மேலும  மேலும்  வாழ்வை இனிமையாக்கும்

அதையே  நான்  செய்கின்றேன்.

அதற்கு ஒரு சம்பவத்தை  எழுதலாம்

எனது 25வது திருமண நாளுக்கு மக்கள்  தான் முதலில்  வாழ்த்து சொன்னார்கள்

அவர்களிடம்  நான் சொன்ன  வசனம்

என்  மாமன் பெத்த ஒருத்தியின் பொறுமையால் இத்தனை  வருடத்தை  தாண்டினேன்  என்று.

வாழ்த்துச்சொன்ன  அனைவருக்கும்  அதைத்தான்  சொன்னேன்.

உண்மையும்  அதுதான்

எனது பிள்ளைகளிடம்

எனது உறவினரிடம்

எனது அயலவரிடம்

பழகும் இடமெல்லாம்  எனக்கொரு மரியாதை  கிடைக்கிறது என்றால் அது அவளிடமிருந்தே  ஆரம்பிக்கின்றது.

எனது பிள்ளைகள்  எனது சொல்லுக்கு  கட்டுப்படுகிறார்கள்  என்றால் முதலில்  எனது மனைவி  அதற்கு கட்டுப்பட்டதை அவர்கள்  பார்த்தார்கள் என்பது தான் அத்திவாரம்.

உண்மையை  சொல்லாமல் விடுவதும் தப்பை  ஆதரிப்பதாகும்.

wife5.jpg

வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.”

உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார்.

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம்.

அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

http://www.ilaignan.com/1917

ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன்னு பார்ப்போம்! :rolleyes:

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம்.

அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா இப்ப உணர்ச்சிவசப்படுறீங்க.. :D

ஏனய்யா இப்ப உணர்ச்சிவசப்படுறீங்க.. :D

ஐயையோ ............................................,,,,,,,,,,,,,,,, :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

wife5.jpg

வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.”

உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார்.

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம்.

அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

http://www.ilaignan.com/1917

ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன்னு பார்ப்போம்! :rolleyes:

 இதில நாங்கள் சொல்லுறதுக்கு ஒண்டுமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கலாம், அனுபவிப்பதற்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்தானாம்!. ஏனையா எட்டாததை எல்லாம் போட்டு பாடாய் படுத்துறீங்க.... :( 

இங்கே பாராட்டு என்ற பெயரால் ஒரு பெண் அடிமைத்தனம் அரங்கேறியுள்ளது. மனைவிக்கு தான் விரும்புகிற பொருளை தங்கள் குடும்ப வருமானத்திக்கு கட்டும் என்றால் வாங்க கூடிய சுதந்திரம் கூட இல்லையா? எல்லாத்திக்கும் கணவனை எதிர்பார்க்கணுமா? :o
 
:D  :D
 
Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ,எனக்கு அப்படித்தான் இருக்குகு :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை   வாழ்வதற்கே  என்பதை  நாம்  உணர்ந்தால்தான்  வாழ்க்கையை  இனிப்பாக்கமுடியும்.

ஆளையாள்  அடிபடுவதும் வார்த்தைகளால் நோகடிப்பதும் திட்டிக்கொள்வதும் வாழ்க்கையல்ல. அது  நரகம்

புரிந்து  விட்டுக்கொடுத்து  வாழுதல்  என்பது மேலும  மேலும்  வாழ்வை இனிமையாக்கும்

வாழ்க்கையை இனிதாக வாழ விரும்புபவர்களுக்கு அடியெடுத்துத் தரும் அழகான அரிச்சுவடிகளில் ஒன்று. விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

எங்கு ஆணின் ஆண்மையும். வீரமும் பெண்ணுக்குக் கிடைக்கிறதோ, எங்கு பெண்ணின் பெண்மையும், மென்மையும் ஆணுக்குக் கிடைக்கிறதோ அங்குதான் இன்பங்கள் பூக்கும், மணம்வீசும், மகிழ்ச்சிதரும். வாழ்க்கையும் தேன் சிந்தும். இதுதான் உயிர்கள் தோன்றிய காலமுதல், பொருளுக்காக உயிர்களை விலைபேசும் இன்றைய காலம்வரை வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்த, அனுபவிப்பவர்களால், உணரப்பட்டும், எழுதப்பட்டும் வரும் உண்மைகள்.

என்னமோ.. போங்க..
 
எனக்கு படறது..
 
ராசவன்னியருக்கு கல்யாண வயசில பெண் பிள்ளை ஒன்று மகளாக இருப்பதாக.. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ.. போங்க..
 
எனக்கு படறது..
 
ராசவன்னியருக்கு கல்யாண வயசில பெண் பிள்ளை ஒன்று மகளாக இருப்பதாக.. 

பெண்களைப் புரிந்து கொள்வதற்கு மகளோ, தமக்கை, தங்கைகளோ உடன் இருக்க வேண்டுமென்பதில்லை...

தாய் & தாரம் இருவரையும் புரிந்துகொண்டாலே வாழ்க்கை மிக இனிமையானதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைப் புரிந்து கொள்வதற்கு மகளோ, தமக்கை, தங்கைகளோ உடன் இருக்க வேண்டுமென்பதில்லை...

தாய் & தாரம் இருவரையும் புரிந்துகொண்டாலே வாழ்க்கை மிக இனிமையானதுதான்!

தாய் & தாரம் இருவரையும் புரிந்துகொள்வதில் அத்தனை பெரும் சிரமமில்லை. ஆனால் தாய் & தாரம் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்தான் சிரமமுள்ளது. புரிந்துகொண்டால் வாழ்க்கை மிக இனிமையானதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய் & தாரம் இருவரையும் புரிந்துகொள்வதில் அத்தனை பெரும் சிரமமில்லை. ஆனால் தாய் & தாரம் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்தான் சிரமமுள்ளது. புரிந்துகொண்டால் வாழ்க்கை மிக இனிமையானதுதான். 

ஒரு உறையுள் இரு கத்திகள் இருக்க முடியாதென்பது போல்தான் ஒரு சமையலறையில் இரு பெண்கள் இருக்க இயலாது, யார் ஆண்மகனை கவர்வது என்ற அன்பால் வரும் போட்டியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.. :)

குடும்பத்தில் பிரச்சனைகள் எப்பொழுது வருமென்றால், அக்குடும்பத்தலைவனால் தாய் & தாரம் இருவரையும் சரி சமமாக(Balanced approach) சரியான நிலைப்பாட்டுடன் கையாண்டால் குழப்பங்கள் சடுதியில் மறைந்துவிடும்! :icon_idea:

ஆனால் நம்மவர்கள் எப்பொழுதும் தாய்க்கு மிக அதிகமாக முன்னுரிமை கொடுத்து, தாரத்தை உதாசீனப்படுத்துவதாலேயே குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கிகொள்வது கண்கூடு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உறையுள் இரு கத்திகள் இருக்க முடியாதென்பது போல்தான் ஒரு சமையலறையில் இரு பெண்கள் இருக்க இயலாது, யார் ஆண்மகனை கவர்வது என்ற அன்பால் வரும் போட்டியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.. :)

திருமணவாழ்வைத் தொடங்கும் ஒவ்வொரு ஆண்மகனும் கற்றுக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான பாடமும், அறிவுரையும்,

குடும்பத்தில் பிரச்சனைகள் எப்பொழுது வருமென்றால், அக்குடும்பத்தலைவனால் தாய் & தாரம் இருவரையும் சரி சமமாக(Balanced approach) சரியான நிலைப்பாட்டுடன் கையாண்டால் குழப்பங்கள் சடுதியில் மறைந்துவிடும்! :icon_idea:

தானாகத் தோன்றிவந்த தலைவனைத் தக்கவைக்க முடியாமலும், ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க முடியாதமலும் தத்தளிக்கும் தமிழரைப்போன்றது. இது ஒரு இடியாப்பச் சிக்கல். சிக்கலில் இருந்து விடுபடுவது மிக மிகக் கடினம். அப்படியே விண்டு உண்டு பசியாறவேண்டியதுதான்.

ஆனால் நம்மவர்கள் எப்பொழுதும் தாய்க்கு மிக அதிகமாக முன்னுரிமை கொடுத்து, தாரத்தை உதாசீனப்படுத்துவதாலேயே குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கிகொள்வது கண்கூடு. :rolleyes:

இப்படியானவர்கள் மணவாழ்வை எட்டியும் பார்கக்கூடாது. இதனைவிட பிமச்சாரியாக வாழ்ந்துவிடுவது மிகவும் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.”

உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார்.

அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

------

கணவனால்... செய்யக் கூடியதை கேட்கும் பெண்களிருக்கும் வரை... குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

சில பெண்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் வைத்திருப்பது எல்லாம் தமக்கும் வேண்டும் என்ற ஆசை கிளம்பும் போது... அளவுக்கு மீறிய கடன் ஏற்பட்டது குடும்பப் பொருளாதாரம் பெண்களால் பாதிக்கப்பட்டவர்களை நானறிவேன். அநேகமாக... பெண்டாட்டி தாசனாக இருக்கும் ஆண்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....சில பெண்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் வைத்திருப்பது எல்லாம் தமக்கும் வேண்டும் என்ற ஆசை கிளம்பும் போது... அளவுக்கு மீறிய கடன் ஏற்பட்டது குடும்பப் பொருளாதாரம் பெண்களால் பாதிக்கப்பட்டவர்களை நானறிவேன்.

இங்கே தான் ஆண், பெண் இருவருக்கும் இருக்கிறது புரிந்து அனுசரித்துப் போகும் பொறுப்பும், கடமையும்.

"பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து எனக்கு அலுப்பு கொடுக்காதே...!" என சொல்லும் ஆதே ஆண், பக்கத்து வீட்டு மாமிக்கு நூல் விட்டுக்கொண்டிருப்பார் அல்லது அதே குணங்களையும், அழகையும் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பார்.

இது தவறில்லையா?

தனக்கு வாய்த்திருக்கும் துணையின் குணாம்சம், வீட்டின் பொருளாரம் இவ்வளவுதான்! என இருவரும் உணர்ந்து நடக்கத் தலைப்பட்டவர்கள்..

தவறும் பட்சத்தில் குடும்பத்தில் சச்சரவுகளே மிஞ்சும்.

  • கருத்துக்கள உறவுகள்
"பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து எனக்கு அலுப்பு கொடுக்காதே...!" என சொல்லும் ஆதே ஆண், பக்கத்து வீட்டு மாமிக்கு நூல் விட்டுக்கொண்டிருப்பார் 

ராஜவன்னியனின் வாய்க்குச் 'சர்க்கரை' தான் போடவேண்டும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனின் வாய்க்குச் 'சர்க்கரை' தான் போடவேண்டும்! :D

புங்கையூரனின் மனைவிக்கு கணணியை இயக்கத் தெரியுமா? :blink:  இத்தனை தைரியமாக எழுதியுள்ளாரே. :icon_idea:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.