Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கிராண்ட்பாசில் பதற்றம்! கலகத்தடுப்புப் பொலிஸார் குவிப்பு!

Featured Replies

breakingnews.jpgகொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராண்ட்பாஸ் ஸ்வர்ன ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும், அண்மித்த வீடுகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு... http://tamilworldtoday.com/?p=27293

தமிழருக்கு எதிராக செயற்பட்டமைக்காக கிரான்பாஸ் முஸ்லிம்களுக்கு சிங்கள இனவாதிகள் வழங்கிய ரமலான் பரிசு!

கிராண்ட்பாஸ், ஸ்வர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயலை உடைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறுகல்நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இம்முறுகல் நிலையினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் உட்பட, கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கு குழுமியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலைவேளை (மஹரிஃப்) தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு குழுமிய சிலர் பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலினால் மர்கஸின் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு மர்கஸை அண்டிய பகுதியிலிருந்த சில வீடுகளும் சேதங்களுக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற மோதலினால் பொலிஸார் உட்பட சில பொதுமக்களும் காயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராண்பாஸ் சுவர்ணசயித்ய வீதியில் இன்று மாலை இடம்பெற்ற பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதற்காக பொலிஸ் ஊடகங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராண்பாஸ் பிரதேசத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த ஊரடங்கு நாளை காலை 7 மணிவரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கிராண்ஸ் சுவர்ண சயித்த வீதியிலும், கிராண்பாஸ் சந்தியிலும் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிராண்பாஸ் சந்திக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த விகாரையைச் சுற்றியும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வீதிகளில் ஆங்காங்கே குழுமியிருக்கும் மக்கள் குழுக்களையும் அகற்றும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனா;.

http://goldtamil.com/?p=6104

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு முஸ்லீம்களால் ஒரு விகாரையை உடைக்க முடியாது என்பதுதான் சோகம்.. அதன் கட்டுமானம் அப்படி.. :D

இதனால்தான் முன்பு கண்டியில் குண்டு வைத்தார்கள்.. அன்று வெடித்துப் பறந்த முதலைப் பல்லை கண்டுபிடித்தார்களா தெரியவில்லை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இது நடக்கும் என்று நினைத்தேன்.
 
கொழும்பில் முஸ்லிம் மக்களின் ரம்லான் பண்டிகைக் காலத்தில், மாடுகளை அப்படியே முழுவதுமாக வாங்கி வந்து வீட்டினில் வைத்து அடித்து பங்கு போடுவார்கள்.
 
பெரிய வீடு வளவுடன் இருந்தால் பருவாயில்லை. ஆனால் மிகவும் நெருக்கடி உள்ள, ஒரு அறையில் 10, 15 பேர் இருக்கும் நிலையில், அதற்குள் வைத்து தான், மாட்டினை வெட்டி, பங்கு பிரிக்க வேண்டும் என்றால்....
 
மறு நாள், மாட்டின் மிஞ்சிய, எலும்புகள், கொம்புகள், வீதியில் வீசப் பட்டிருக்கும்.
 
இம்முறை போதி பல சேன, எச்சரிக்கை விடுத்திருந்ததாக கேள்விப் பட்டேன்.
 
அது தான் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.   
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளைக்கென்று அந்தப் பள்ளிவாசலை சிங்களவரிடமிரிந்து பாதுகாக்கப் போகின்றார்கள்?
சிங்களவன் அதை உடைக்க வேண்டும் முடிவு கட்டினால்... கட்டினது தான். என்றைக்கோ... ஒரு நாள் முழுதாக உடைபடப் போகும் பள்ளிவாசல் தான் அது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கிராண்பாஸ் பகுதில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு!

நல்ல  செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரதேசத்தில் ஒரு இராணுவமுகாம் உண்டு....இடைக்கிடை சில கலவரங்கள் வருவதுண்டு..அப்படியே அடங்கிவிடும்....முஸ்லிம்களின் தூர நோக்கு அரசியல் அதற்கு காரணம் :D

தமிழருக்கு எதிராக செயற்பட்டமைக்காக கிரான்பாஸ் முஸ்லிம்களுக்கு சிங்கள இனவாதிகள் வழங்கிய ரமலான் பரிசு!

சிங்கள பெளத்த பேரினவாதம், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஒவ்வொரு சிறுபான்மையினரையும் வெவ்வேறு வடிவங்களில் அடக்கி ஒடுக்கியபடியே வருகிறது. 1915ல் முஸ்லீம்களுக்கெதிரான கலவரத்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களான இராமநாதன் போன்றவர்கள் சிங்கள இனவாதிகளிற்கே தமது விசுவாசத்தைக் காட்டினார்கள். பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டபோது ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமை அதனை எதிர்த்துப் போராடாமல் மலையகத் தமிழர்களை நாடற்ற அநாதைகளாக்க துணை போனது. இருந்தாலும் தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்பதுடன் கட்சியின் உடைவிற்கும் இதுவே பிரதான காரணமாக இருந்தது என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

பின்னர் ஈழத்தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளான போது ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் கணிசமான ஆதரவும் பங்களிப்பும் இருந்திருந்தாலும் பின்னாட்களில் இரு தலைமைகளினதும் பல்வேறு தவறுகள், குத்து வெட்டுகளால் முஸ்லீம்கள் பெரும்பாலும் அரச விசுவாசிகளாகவே  பார்க்கப் பட்டார்கள்.

இப்போது பெளத்த பேரினவாதம் மறுபடியும் முஸ்லீம்கள் மீது குறி வைத்திருப்பது ஈழத் தமிழர்களுக்கோ அல்லது மலையகத் தமிழர்களுக்கோ எந்தவகையிலும் உவப்பான செய்தியல்ல. மாறாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பேரினவாதிகள் தட்டிப் பறிக்கவே வழிவகுக்கும். ஆகவே குத்தல் பேச்சுக்களை இந்த இடத்தில் தவிர்த்துக் கொள்வோம் நண்பர்களே.

இந்த ஏமாற்றுப் பிழைப்பு இனி எடுபடாது!

சிங்கள இனவாதிகளின் துணையுடன் முஸ்லிம்கள் தமிழருக்கு எதிராக நடக்கும் போது, தமிழர் சொத்துக்களை கொள்ளையிடும் போது, தமிழர் காணிகளை அடாத்தாக பிடிக்கும் போது  எங்கு போய் ஒழித்து கொண்டீர்கள்? அப்போது எங்கே போச்சுது உங்கள் வாதங்கள்!

டக்லஸ் தேவாந்தா, ஆறுமுகம் தொண்டமான், இராமநாதன் போன்றவர்கள் ஒருபோதும்  தமிழரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை.

இப்போது எமது பாதை தெளிவாக உள்ளது. இதில் உள்ள தடைகள் சிதறும் போது நாம் மகிழ்ந்தே தீருவோம்.

இப்போது எமது பாதை தெளிவாக உள்ளது. இதில் உள்ள தடைகள் சிதறும் போது நாம் மகிழ்ந்தே தீருவோம்.

உங்களது பாதைகளை தெளிவாக வகுத்திருக்கிறீர்கள் தடைகளும் சிதறி உடைகின்றன. பிறகென்ன மகிழ்ந்து தீருங்கள்.

http://www.youtube.com/watch?v=86sz8oBZBE0

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது பாதைகளை தெளிவாக வகுத்திருக்கிறீர்கள் தடைகளும் சிதறி உடைகின்றன. பிறகென்ன மகிழ்ந்து தீருங்கள்.

http://www.youtube.com/watch?v=86sz8oBZBE0

தோழரே கருத்தும் படமும் புரியவில்லை.....விளக்கம் தரமுடியுமா?

தோழரே கருத்தும் படமும் புரியவில்லை.....விளக்கம் தரமுடியுமா?

"இப்போது எமது பாதை தெளிவாக உள்ளது. இதில் உள்ள தடைகள் சிதறும் போது நாம் மகிழ்ந்தே தீருவோம்." என்று சயானி எழுதியிருந்தார். அதற்கு எனது பதிலையும் கூடவே சிங்கள காடையர்கள் மசூதியை தாக்கும் காணொளி இணைப்பையும் இணைத்திருந்தேன்.

சிறுபான்மையினர் தாக்கப் படும் போது ஈழத்தமிழர்களாகிய நாம் எள்ளி நகையாடத் தேவையில்லை என்று அதற்கு முதல் எழுதியிருந்தேன். இதனை விளங்கிக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?

இப்போது பெளத்த பேரினவாதம் மறுபடியும் முஸ்லீம்கள் மீது குறி வைத்திருப்பது ஈழத் தமிழர்களுக்கோ அல்லது மலையகத் தமிழர்களுக்கோ எந்தவகையிலும் உவப்பான செய்தியல்ல. மாறாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பேரினவாதிகள் தட்டிப் பறிக்கவே வழிவகுக்கும். ஆகவே குத்தல் பேச்சுக்களை இந்த இடத்தில் தவிர்த்துக் கொள்வோம் நண்பர்களே.

நீங்கள் கருத்தை தொகுத்தவிதம் பிடித்திருக்கு. முடித்தவிதம் பிடித்திருக்கு.  நக்கல்களும், குத்தல்களும் கருத்தல்ல. அவை இன்னொருவகை உணர்வை வெளிபடுத்த முயலும் மறைபாசைகளே. யாழில் அவைதான் பிரதான கருத்துவெளிபடுத்தும் முறை.  :(  அவை இருக்க வேண்டிய இடம் நகைச் சுவை பக்கமே.

ஆனால் முஸ்லீம்மக்களின் சமாசாரத்தில் இப்போது தமிழர் தலையிடுவதால் அதில் அரசியல் கருத்து, பொருள் ஒன்றும் இருக்கப் போவதில்லை.  முஸ்லீம் தலைமை ஒரு துளிதானும் சமூக அரசியல் சிந்தனையில் ஈடுபடும் நிலையில் இல்லை. மத விசுவாசம் காரணமாக முஸ்லீம் மக்கள் தலைமைகளை ஒதுக்கவோ, அல்லது 60 வருடம் தமிழர் மாற்றாமல் கடைப்பிடிக்கும் விடுதலையை நோக்கிய கொள்கையுடைய தலைமையை ஏற்கவோ அவர்கள் தயாரில்லை.

தமிழ், சிங்கள முஸ்லீம்களின் பிரதிநிதியாக இருந்த இராமநாதனை தமது எதிரியாக வரித்து கொண்டு படித்த முஸ்லீம்கள் தமிழருடன் துவேசம் வளர்க்கிறார்கள். முஸ்லீம்கள், தமிழக முஸ்லீம்கள் மாதிரி மற்றய தமிழ் மக்களுடன் இணைந்துவாழாமல் தாங்கள் அரேபிய இனம் என்று படித்த முஸ்லீம்களால் பிரித்துவைக்கப்படுக்கிறார்கள். இந்த நிலையில் கக்கீம் போன்ற பல தலைவர்கள் முஸ்லீம்களின் பிரச்சனை தமிழர்களினதை போன்றதல்ல, எனவே தாங்கள் தமிழர்களுடன் இணையப்போவத்தில்லை என்று பல் முறை  கூறிவிட்டார்கள். இதை தெளிவாக கிழக்கு மாகாண சபையில் காட்டியும் வருகிறார்கள்.

அதாவது முஸ்லீம்களின் தெரியப்பட்ட எல்லாத் தலைமைகளும்  தமக்கு சிறுபன்மை பிரச்சனை இல்லை என்கிறார்கள். முதலில் அவர்கள் சொல்லவருவது என்ன என்பதை விளங்க வேண்டும். அதை விளங்காமல் "மாறாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பேரினவாதிகள் தட்டிப் பறிக்கவே வழிவகுக்கும். " என்று கருத்துவைத்தால் அது சரியாக வேண்டும் என்று இல்லை. முஸ்லீம்களின் பெரும்பான்மை அப்பிப்பிராயம் தாங்கள் சிறுபானமையாக கணித்து தாக்கப்படவில்லை என்பதாகும். இதனால் ஒரு பள்ளிவாசல், ஒரு உடைப் பிரச்சனை, ஒரு உணவு பிரச்சனையையை அவர்கள் சிறுபான்மை பிரச்சனையாக கருதாதவரைக்கும், மக்களை உண்மையான கொள்கைகள் மூலம் இணைய வைக்கமுடியாத இடது சாரி கொள்கைகள் இலங்கையில் அவர்களை தமிழர்களுடன் இணைக்க இனி எடுபடாது. முஸ்லீம்களை உள்வாங்கலாம் என்று, அவர்கள் ஒத்துக்கொள்ளாத போது,  அவர்களுக்கும் இனப்பிரச்சனை என்று கூக்குரல் போடுவது ஒரு கையை தட்டி ஓசை எழுப்ப முயலும் செயல். 

LSSP யோ, CP யோ கொண்டுவரமுடியாத சோசலிச ஆட்சியை, ஏகாதிபத்திய கட்சிக்கொள்கையில் ஊறிப் போயிருந்த பண்டாரநாயக்காவும், ராஜபஷாவும் 1950 கொண்டுவந்தார்கள். அதையே தான் இன்றும் சிங்கள மக்கள் விரும்பி ஏற்கிறார்கள். இலங்கை இடதுசாரிகள் சிங்கள் மக்களிடம் தட்டி ஏமாந்த ஒரு கை ஓசை அது.

இதுவேதான் காராளசிங்கம், வலகம்பாகு, சண்முக நாதான் எல்லோருடைய கதையும்.  காரளசிங்கம் போன்றன நேர்மையான  அரசியல் வாதிகளையே  தமிழ்மக்கள் அன்று கூட ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

எனவே இலங்கை இனப்பிரச்சனையை, மூன்று இனமும் விரும்பாத பாணியில், ஒருகை ஓசையாக மட்டும் வைத்து இடதுசார்த்துவ சமாதானம் பேசாமல் இணைந்துவாழ விரும்பும் முஸ்லீம், சிங்கள் சமூகத்தை ஒரு புறமாக விட்டு தம்முடன் அவர்கள் இணைத்துக்கொள்ள மறுக்கும் தமிழர் சமூகத்திற்கு இனி ஒரு யதார்தமான தீர்வு தேட வேண்டும். இனியுனம் சமாதானம் என்ரு வடக்கு கிழக்கை தொடர்ந்து சிங்களமும் அதன் கைக்கூலிகளும் உழுது விதைப்பதை பார்த்துக்கொண்டிருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாதம், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஒவ்வொரு சிறுபான்மையினரையும் வெவ்வேறு வடிவங்களில் அடக்கி ஒடுக்கியபடியே வருகிறது. 1915ல் முஸ்லீம்களுக்கெதிரான கலவரத்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களான இராமநாதன் போன்றவர்கள் சிங்கள இனவாதிகளிற்கே தமது விசுவாசத்தைக் காட்டினார்கள். பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டபோது ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமை அதனை எதிர்த்துப் போராடாமல் மலையகத் தமிழர்களை நாடற்ற அநாதைகளாக்க துணை போனது. இருந்தாலும் தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்பதுடன் கட்சியின் உடைவிற்கும் இதுவே பிரதான காரணமாக இருந்தது என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

பின்னர் ஈழத்தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளான போது ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் கணிசமான ஆதரவும் பங்களிப்பும் இருந்திருந்தாலும் பின்னாட்களில் இரு தலைமைகளினதும் பல்வேறு தவறுகள், குத்து வெட்டுகளால் முஸ்லீம்கள் பெரும்பாலும் அரச விசுவாசிகளாகவே  பார்க்கப் பட்டார்கள்.

இப்போது பெளத்த பேரினவாதம் மறுபடியும் முஸ்லீம்கள் மீது குறி வைத்திருப்பது ஈழத் தமிழர்களுக்கோ அல்லது மலையகத் தமிழர்களுக்கோ எந்தவகையிலும் உவப்பான செய்தியல்ல. மாறாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பேரினவாதிகள் தட்டிப் பறிக்கவே வழிவகுக்கும். ஆகவே குத்தல் பேச்சுக்களை இந்த இடத்தில் தவிர்த்துக் கொள்வோம் நண்பர்களே.

20909_365502906900250_1748071308_n.jpg

ஹக்கீம் போன்ற முஸ்லீம் தலைவர்களை எப்படி தமிழ் தலைமைகள் நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்

766219398US-embassy.jpg

கிரான்ட்பாஸ் சம்பவம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது - அமெரிக்கா

கொழும்பில் உள்ள கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கிரான்ட்பாஸ் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள அமெரிக்கா அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 

தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகில் அமெரிக்கா மட்டும்தான் முஸ்லிம்கள் மீது உண்மையான கரிசனை கொண்டுள்ளது! :D

பாகிஸ்தான், மத்தியகிழக்கு நாடுகள் எல்லாம் பொதுபல சேனவுக்கு பயந்து மௌனமாக உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அமெரிக்கா மட்டும்தான் முஸ்லிம்கள் மீது உண்மையான கரிசனை கொண்டுள்ளது! :D

பாகிஸ்தான், மத்தியகிழக்கு நாடுகள் எல்லாம் பொதுபல சேனவுக்கு பயந்து மௌனமாக உள்ளன.

என்னப்பா.... கிராண்ட்பாஸ், பள்ளிவாசல் தாக்குதலைக் கண்டித்து, அரபுநாடுகள் அறிக்கை விட  முதல்,  அமெரிக்காகாரன் முந்திவிட்டான்.

நானும்.... உங்களை மாதிரித்தான் யோசித்தேன், அதற்குள் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள் சயானி. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

90487579mosq.jpg

கிரான்ட்பாஸ் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை: முஸ்லிம் அமைச்சர்கள் அரசிடம் வலியுறுத்தல்

August 11, 2013  05:32 pm

lg-share-en.gif
கிரான்ட்பாஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கூட்டாக இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கிரான்ட்பாஸ் சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர் இன்று (11) சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்தினர். 

அந்த சந்திப்பின்போது கிரான்ட்பாஸ் தாக்குதல் தொடர்பான கண்டனத்தை அரசாங்கத்திற்கு கூட்டாக தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி சிரேஸ்ட அமைச்சர் பௌசி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன், ஏ.எல்.எம் அத்தாவுல்லா, பசீர் சேவுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.எம் ஹிஸ்புல்லா, பைசர் முஸ்தப்பா மற்றும் ஏ.ஆர்.எம் அப்துல்காதர் ஆகியோரின் கையொப்பந்தத்தில் கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கூட்டு அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

கிரான்ட்பாஸ் தாக்குதல் குறித்து உடனடி, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் அரச தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அமைதியாக வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த தேச விரோதிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் தேச விரோத சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் யுத்தம் முடிந்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன எனவும் தெரிவிக்கப்டப்டுள்ளது. 

கிரான்ட்பாஸ் தாக்குதல் காரணமாக மத்திய கொழும்பு மற்றும் வட கொழும்பு கிரான்ட்பாஸ், மாலிகாவத்த, மருதானை, கெத்தாராம பிரதேச முஸ்லிம்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கூட்டு அறிக்கையின் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடைந்து அனைத்து பிரஜைகளும் சுதந்திரமாக வாழ வழி வகுக்கப்டப்டுள்ளது. ஆனால் அது தனிப்பட்ட குழுவால் வீணடிக்கப்படக் கூடாது என அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் மத சுதந்திரத்தை பாதுகாக்க நம்பிக்கைக்குரிய பொறிமுறை கொண்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதியும் பெளத்த தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்டப்டுள்ளது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

90487579mosq.jpg

நானும் ஏதோ.... பள்ளிவாசலின் நாலு யன்னல் கண்ணாடியை, பொதுபல சேனா உடைத்து விட்டு ஓடி விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நுணாவிலான் இணைத்த படத்தைப் பார்த்ததின் பின்தான்... மசூதிக்குள்ளும் புகுந்து விளையாடியுள்ளார்கள் என்று தெரிகின்றது.

வாசலில் கன செருப்பு இருப்பதைப் பார்த்தால்... தொழுகை நடந்து கொண்டிருந்த நேரம் பலமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பிக்குவின் தோழிலிருந்த பையிலிருந்துதான்... கற்கள் "சப்ளை" பண்ணப் பட்டிருக்குப் போலை கிடக்குது. :D 

ஹ்ம்ம்ம்... நடக்கட்டும், நடக்கட்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாக்கால்வரைக்கும் வாய் மூடி மௌனம் காத்தற்க்கான பரிசு .....    

... முஸ்லீம் தலைமை ஒரு துளிதானும் சமூக அரசியல் சிந்தனையில் ஈடுபடும் நிலையில் இல்லை. மத விசுவாசம் காரணமாக முஸ்லீம் மக்கள் தலைமைகளை ஒதுக்கவோ, அல்லது 60 வருடம் தமிழர் மாற்றாமல் கடைப்பிடிக்கும் விடுதலையை நோக்கிய கொள்கையுடைய தலைமையை ஏற்கவோ அவர்கள் தயாரில்லை.

... இந்த நிலையில் கக்கீம் போன்ற பல தலைவர்கள் முஸ்லீம்களின் பிரச்சனை தமிழர்களினதை போன்றதல்ல, எனவே தாங்கள் தமிழர்களுடன் இணையப்போவத்தில்லை என்று பல் முறை  கூறிவிட்டார்கள். இதை தெளிவாக கிழக்கு மாகாண சபையில் காட்டியும் வருகிறார்கள்.

...முதலில் அவர்கள் சொல்லவருவது என்ன என்பதை விளங்க வேண்டும். அதை விளங்காமல் "மாறாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பேரினவாதிகள் தட்டிப் பறிக்கவே வழிவகுக்கும். " என்று கருத்துவைத்தால் அது சரியாக வேண்டும் என்று இல்லை.அவர்களுக்கும் இனப்பிரச்சனை என்று கூக்குரல் போடுவது ஒரு கையை தட்டி ஓசை எழுப்ப முயலும் செயல்...

முஸ்லீம்களையோ மலையகத் தமிழர்களையோ எமது தலைமையை ஏற்க வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு இனமும் தனது தனித்துவங்களைக் காப்பற்றிக் கொண்டே ஒரு பொது உடன்பாட்டினடிப்படையில் ஒடுக்கப் படும் சிறுபானமையினர் என்ற வகையில் பேரினவாதிகளுக்கெதிராகப் போராட முடியும்.

கக்கீம் போன்ற சந்தர்ப்ப வாதத் தலைவர்கள் இன்று மக்கள் முன்னால் அம்பலப் பட்டுக் கொண்டே போகிறார்கள். சமீபத்தைய பேரினவாதிகளின் செயற்பாடுகளும் முஸ்லீம் தலைவர்களின் கையாலாகாத் தனமும் சாதாரண முஸ்லீம் மக்களின் வெறுப்புக்களையே சம்பாதித்திருக்கிறது. இந்த சந்தர்ப்ப வாத தலைமைகள் தூக்கியெறியப் பட்டு நேர்மையான தலைமைகள் முஸ்லீம்கள் மத்தியில் பலம்பெறுவது சிறுபான்மை மக்கள் அனைவருக்குமே அநுகூலமாக இருக்கும்.

இனவாதிகளால் வணக்கத் தலங்கள் தாக்கப் படும் போதோ அல்லது ஒரு இனத்தின் அடையாளம் இழிவு படுத்தப் படும் போதோ நாம் வாளாவிருந்தால் நாளை அதே இனவாதம், தனது கடந்த கால அளவினையும் தாண்டி பெரியளவில் நம்மை நோக்கி வரும் என்பதையே வரலாறு எமக்குப் புகட்டுகிறது.

வரலாறு நமக்கு இனியும் ஏதாவது புகட்ட இருந்தால், அது நாம் இன்னமும் சிங்களவர்களையோ, முஸ்லீம்களயோ, சர்வதேசத்தையோ படிக்கவில்லை என்பதுதான் பொருள். உண்மையில் இந்த பள்ளிவாசல் உடைக்க கல்லெடுத்து கொடுதிருந்தால் (அதை பார்க்க உள்ளே குண்டு வெடித்த இடம் போலகத்தான் காணப்படுகிறது) நிச்சயம் சிங்கள அரசு அதை தன்னுடனான, தமிழர்களின்  இண்க்க அரசியலாக பார்த்திருக்கும். இந்த கேவலத்தை மட்டும்தான், இதுவரை, மானமில்லாத  முஸ்லீம் தலைமைகள் செய்து வருகின்றன. இப்படி கல்லெடுத்து கொடுத்து அடிக்க உதவும் கேவலத்தை கதிர்காமரோ, தேவானந்தாவோ கூட இதுவரை முஸ்லீம்களுக்கு செய்யவில்லை. அவர்கள் தமிழரை அடிக்க மட்டும்தான் கல்லெடுத்து கொடுப்பவர்கள். 

இதில் தேவானந்தா, கதிர்கமரை ஒருநாள் திருத்தாலாமென்றாலும், பதியுதீனை, அஸ்வரை, கக்கீமை திருத்த முடியாது. ( சுயநலமாகவோ, பொது நலமாகவோ சித்தார்தன், ஆனந்த சங்கரி அரசை கும்பிடுவதை நிறுத்தியிருக்கிறார்கள்- ஆனல் இப்போது அரசில் இருக்கும் முஸ்லீம் தலைமைகள் எல்லாமே அண்மையில் சேர்ந்த துரோகங்கள்தான்). முஸ்லீம்களுக்குள் இந்த மத பிரச்சனையை தீர்த்து, இப்படியான இக்கட்டான நேரம், தலைமைகள் தோன்றும் சந்தர்பம் அரிது. இக்கட்டு இல்லாத, பாகிஸ்த்தான், லிபியா, எகிப்து, ஈராக், ஈரான், சவுதி எதுவிலுமே மத மூடியைஉடைத்து மேலே சென்று சமாதானதையும் சுபீட்சத்தையும் இதுவரையில் யாரும் கொண்டுவரவில்லை. தமிழ் நாட்டில் பெண்கள் மசூதி, இந்தியாவில் பெண்கள் வங்கி எல்லாமே வரலாம், ஏன் எனில் இவர்கள் தமது மக்களுடன் இரத்த அண்ணன் தம்பி உறவு உள்ள முஸ்லீம்கள். ஆனால் இலங்கைப்படித்த முஸ்லீம்கள், தமிழரிடமிருந்து பிரிந்து கொள்வதற்கென,  தம்மை தமிழர்களாக மட்டும் இல்லை இலங்கையர்களாகவும் காணாமல்  தம்மை அராபியர்களாக காண்கிறார்கள். அவர்களின்  இந்த நிலைப்பாடு தொடரும் வரையும் நாமும் அவர்களும், ஒன்றாக இணைந்து சிறுபான்மை இனப்பிரச்சனையை தீர்ப்பதானால் செல்வா காலம் மாதிரி , தமிழ் தலைமைகளில் தன்னும் நம்பிக்கை வைத்தால் மட்டுமே முடியும்.

முஸ்லீம்களையோ மலையகத் தமிழர்களையோ எமது தலைமையை ஏற்க வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு இனமும் தனது தனித்துவங்களைக் காப்பற்றிக் கொண்டே ஒரு பொது உடன்பாட்டினடிப்படையில் ஒடுக்கப் படும் சிறுபானமையினர் என்ற வகையில் பேரினவாதிகளுக்கெதிராகப் போராட முடியும்.

கக்கீம் போன்ற சந்தர்ப்ப வாதத் தலைவர்கள் இன்று மக்கள் முன்னால் அம்பலப் பட்டுக் கொண்டே போகிறார்கள். சமீபத்தைய பேரினவாதிகளின் செயற்பாடுகளும் முஸ்லீம் தலைவர்களின் கையாலாகாத் தனமும் சாதாரண முஸ்லீம் மக்களின் வெறுப்புக்களையே சம்பாதித்திருக்கிறது. இந்த சந்தர்ப்ப வாத தலைமைகள் தூக்கியெறியப் பட்டு நேர்மையான தலைமைகள் முஸ்லீம்கள் மத்தியில் பலம்பெறுவது சிறுபான்மை மக்கள் அனைவருக்குமே அநுகூலமாக இருக்கும்.

இனவாதிகளால் வணக்கத் தலங்கள் தாக்கப் படும் போதோ அல்லது ஒரு இனத்தின் அடையாளம் இழிவு படுத்தப் படும் போதோ நாம் வாளாவிருந்தால் நாளை அதே இனவாதம், தனது கடந்த கால அளவினையும் தாண்டி பெரியளவில் நம்மை நோக்கி வரும் என்பதையே வரலாறு எமக்குப் புகட்டுகிறது.

ஒருவர் எங்களுக்கு ஆதரவு தருவது என்பதுக்கும்  எதிர்ப்பதுக்கும்  எதிரியோடு சேர்ந்து இயங்கு வது எனும் மூண்றும் வேறு வேறான கட்டங்கள்...

புலிகள் எனும் ஒரு தரப்பு பிழை விட்டிருந்தால் அது ஒட்டு மொத்த தமிழினத்தை பாதிக்குமாறு சிங்களத்துடன் இணைந்து  தமிழர்களை ஒட்டு மொத்தமாக பாதிப்படைய வைத்தை முஸ்லீம்களின் செயலை நியாயப்படுத்த முடியாது...   

ஒட்டு மொத்த முஸ்லீம்களும் பேசாமல் இருந்ததின் மூலம் அதை தான் செய்தார்கள்... 

அதுக்காக தமிழர்கள் சிங்களத்தோடை சேர்ந்து முஸ்லீம்களை ஒடுக்க வேண்டியதில்லை...   

இங்கே தமிழர்களின் நம்பிக்கையை பெறுவதோ இல்லை இணைந்து போராட அழைப்பதோ  முஸ்லீம்களின் கைகளில் மட்டும் தான் இருக்கிறது...  

யாரும் வலிந்து போய் செய்யும் உதவிக்கு இங்கு யாரும்  மதிப்பு கொடுப்பதில்லை...   அது தாங்களாக  போய் இலவசமாக போராடிய புலிகளுக்கும் பொருந்தும்...   ஆகவே நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதில்லை... 

செரமுடியாதேண்டு அவங்களே சொன்னபிறகும் செருவமேண்டு நாங்கள் போனால் யாருது சேருவது?

அவர்கள் தெளிவா சொல்லிவிட்டார்கள் என்ன நடந்தாலும் அரசாங்கத்தியா விட்டு தாம் வெளிஎரமாட்டம் என்று. 

இன்னுமொருமுறை தமிழருக்கு எதிரா ஆர்ப்பாட்டம் செய்ய வாங்கோ என்று கேட்டால் இதே பள்ளிவாசலில் வெள்ளி தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் பண்ண அவங்க தயார்.

அதுக்குள்ளே நாங்கள் போய் அவர்களுக்கு கலுவிவிடோனுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.