Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம் டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம்.
கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை.
பதின்நான்கு வயது எல்லாவற்றையும்  விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில் ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நானும் இருந்துவிட்டேன்.

என்னுடன் வரும் மற்ற இருவரும் என்னிலும் நல்ல நிறமானவர்கள். அதனால் அவர்களில் ஒருத்திதான் என்று எண்ணி அவர்களை தனித் தனியக் கேட்டும் இருவரும் மறுத்துவிட்டார்கள். ஆனாலும் எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

சென்ரல் கொலிச் பெடியள் எத்தனையோ விதமாகக் கண்ணில் பட்டதனால் எனக்கு இவன் பெரிதாகத் தெரியவில்லை. பின்னால் காவலுக்கு வருபவன் ஒருநாள் முன்னால் சயிக்கிளில் முன்னால் நிக்கிறான். நாம் தூரத்தில் இருந்தபடியே பார்த்துவிட்டோம். என்னடி இவன் இண்டைக்கு முன்னுக்கு நிக்கிறான் என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள். எனக்கும் எதோ நடக்கபோகிறது என்று புரிகிறது.

திடீரென சயிக்கிளை எனக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு  மடித்து ஒட்டிய கடிதம் ஒன்றை நீட்டுகிறான். நான் அவன் எனக்குக் கடிதம் தருவான் என்று எதிர்பார்க்காததால் திகைத்துப்போய் நிக்கிறேன். நாங்கள் மூவரும் செய்வதறியாது நிற்க அவன் என் புத்தகத்தின் மேல் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான்.

அதன்பின் நாங்கள் சுற்றுமுற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்று நின்மதிப் பெருமூச்சு விடுகிறோம். நான் அலட்சியமாக கடிதத்தை மற்றவளிடம் கொடுத்து உடையடி என்கிறேன். அவள் மீண்டும் ஒருமுறை சுற்றிவரப் பார்த்துவிட்டு கடிதத்தை உடைக்கிறாள். அவர்கள் வாசித்து முடிய நானும் வாங்கி வாசிக்கிறேன். என் இதய ராணி என ஆரம்பித்து .......தொடர்ந்து  என்பெயரையும் போட்டு காதல் கடிதம் நீண்டிருந்தது.

எனக்கு ஒரு குறுகுறுப்பு இருந்தாலும் ஏனோ தெரியவில்லை அவன் மேல் காதல் ஏற்படவில்லை. அதற்கு அவன் எழுதியிருந்த கடிதத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். வாசித்து முடிய நான் வைத்துக்கொள்ளாது என்னுடன் வந்த ஒருத்தியிடமே நீயே வைத்துக்கொள். வீட்டுக்குப் போகும்போது கிழித்து எறிந்துவிடலாம் என்கிறேன். திரும்பி வரும்போது கடிதத்தைத் துண்டுதுண்டாகக் கிழித்து ஒரேயடியாக எறியப் பயத்தில், ஒவ்வொரு இவ்விரண்டு துண்டுகளாக  எறிந்து கொண்டு வந்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது.

அடுத்தநாள் அவன் எதிர்பார்ப்புடன் காத்து நிற்க நாங்கள் எதுவும் கூறாது கடந்து செல்கிறோம். என்னடி அவனுக்கு ஓம் என்று சொல்லப் போகிறாயா என்கிறாள் ஒருத்தி. இல்லை என்று நான் கூற முதலே, அப்ப மாட்டேன் என்று உடனேயே கூறிவிடு என்கிறாள் மற்றவள். எனக்கோ இன்னும் இரண்டு நாள் பின்னால் வரட்டும் என்று எண்ணம் தோன்றினாலும் உடனேயே மனதை மாற்றி நாளை நீயே சொல்லிவிடெடி என்கிறேன்.  

அடுத்த நாள் நானும் ஒருத்தியும் அவனைக் கடந்து போக மற்றவள் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு விரைந்து என்னிடம் வந்து பாவமடி என்கிறாள். அடுத்துவந்த   இரு நாட்கள் நாம் போகும் பாதையில் பேசாது பார்த்துக்கொண்டே நின்றான். ஆனாலும் எனக்கு எந்த இரக்கமும் தோன்றவில்லை. அதன்பின் அவனைக் காணவில்லை.

ஆனாலும் என் வாழ்வில் முதலில் கிடைத்த காதல் கடிதத்தையும் அவனின் உருவத்தையும் எப்போதாவது மீட்டிப் பார்ப்பேன். அதன்பின் அவனை நான் காணாவிட்டாலும் கூட அவன்பால் ஒரு இரக்கம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • Replies 55
  • Views 4.4k
  • Created
  • Last Reply

அடி ஆத்தி ........................ :o  :o  பெடி தப்பீட்டான் :lol::D .

பகிர்வுக்கு நன்றி சுமே, . முந்தி ஒரு பெடியன் எனக்குப் பின்னாலை 3 வருடமாய் சுற்றினவன், எனக்கு அவனில் காதல் வரவே இல்லை, பெடி பிறகு இன்னொரு பெட்டையைச் சுற்றி பிறகு இருவரும் கல்யாணம் கட்டீட்டினம். இரண்டு பேரும் என்னுடைய ஊர் தான்  :lol:

அதுசரி உங்கட மிச்சக் கதையையும் எழுதுங்கோ :D

அடி ஆத்தி ........................ :o  :o  பெடி தப்பீட்டான் :lol::D .

அடபாவி  :lol:  :lol:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அந்தாள் இதனை வாசித்து உங்களுடன் தொடர்பு கொண்டு பேசினால் என்ன செய்வீங்கள்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே அந்தாள் இதனை வாசித்து உங்களுடன் தொடர்பு கொண்டு பேசினால் என்ன செய்வீங்கள்? :lol:

கதைப்பேன். கதைப்பதற்கு என்ன?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதைப்பேன். கதைப்பதற்கு என்ன?? :lol:

இப்பவும் உங்களை என் இதயத்து ராணியாகத்தான் நினைச்சுக் கொண்டிருக்கிறேன் என்று டயலாக் எடுத்துவிட்டால்..... :lol::D

உன் நெஞ்சக்கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் தா பெண்ணே என்றால் நிலமை என்னாகும்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் உங்களை என் இதயத்து ராணியாகத்தான் நினைச்சுக் கொண்டிருக்கிறேன் என்று டயலாக் எடுத்துவிட்டால்..... :lol::D

உங்களில் எப்பவுமே காதல் வராது என்று நேரிலேயே சொல்ல வேண்டியதுதான். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் நம்பணுமே

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அந்தாள் இதனை வாசித்து உங்களுடன் தொடர்பு கொண்டு பேசினால் என்ன செய்வீங்கள்? :lol:

அப்பிடி செய்வான் எண்டு நீங்க நினைக்கிறீங்களா ,இப்ப கண்டான் எண்டால் பழைய செருப்பு ஒண்டை தேடி எடுத்து .......... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி செய்வான் எண்டு நீங்க நினைக்கிறீங்களா ,இப்ப கண்டான் எண்டால் பழைய செருப்பு ஒண்டை தேடி எடுத்து .......... :icon_idea:

வசனத்தை முடிந்தால் சுமெயிடம் வாங்கிக்கட்டவேண்டிவரும் என்ற பயத்தில் முடிக்கவில்லைபோல இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

சுமே சும்மா பகிடிக்கு கேள்வி கேட்டு எழுதினேன். எப்போதுமே முதல் காதல் கடிதம் முத்தம் வெட்கம் இப்பிடி நிறைய விடயங்கள் மறக்கமுடியாதன. அவற்றில் பற்பல நமக்குள்ளேயே மலர்ச்சியையும் மகிழ்வையும் ரகசியமாக தந்து கொண்டிருக்கக் கூடியன கூட... சில மிகக் கொடிய ரணத்தையும் தீராத வலிகளையும் தருவனவாகவும் இருக்கும். எனிவே உங்கள் பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவம் இப்போதும் அதரங்களை முறுவலவைக்கக்கூடிய சம்பவம் பகிர்ந்திருக்கிறீர்கள். வாசித்ததில் சில பழைய நினைவுகளில் மனம் லயித்துக் கொண்டது. பாராட்டுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் நெஞ்சக்கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் தா பெண்ணே என்றால் நிலமை என்னாகும்? :lol:

இத்தனை காலம் கடந்த பின்னரும் ஒருவருக்கு அப்படிக் காதல் தொடரும் என்று நான் எண்ணவில்லை. அப்படி இருந்தாலும் கூட அதை வெளியே சொல்லும் அளவு மனப்பக்குவம் ஏற்படாது ஒருவன் இதனை காலமும் இருப்பானானால் அந்தக் கிறுக்கனை  வெட்டிவிடவும் தயங்காததுடன் இரக்கமும் கொள்ள மாட்டேன். :D

அப்பிடி செய்வான் எண்டு நீங்க நினைக்கிறீங்களா ,இப்ப கண்டான் எண்டால் பழைய செருப்பு ஒண்டை தேடி எடுத்து .......... :icon_idea:

 வழியில்லாத உங்களைப் போல ஆண்கள் வழமையா உப்பிடிச் சொல்வதுதான். :D

சுமே சும்மா பகிடிக்கு கேள்வி கேட்டு எழுதினேன். எப்போதுமே முதல் காதல் கடிதம் முத்தம் வெட்கம் இப்பிடி நிறைய விடயங்கள் மறக்கமுடியாதன. அவற்றில் பற்பல நமக்குள்ளேயே மலர்ச்சியையும் மகிழ்வையும் ரகசியமாக தந்து கொண்டிருக்கக் கூடியன கூட... சில மிகக் கொடிய ரணத்தையும் தீராத வலிகளையும் தருவனவாகவும் இருக்கும். எனிவே உங்கள் பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவம் இப்போதும் அதரங்களை முறுவலவைக்கக்கூடிய சம்பவம் பகிர்ந்திருக்கிறீர்கள். வாசித்ததில் சில பழைய நினைவுகளில் மனம் லயித்துக் கொண்டது. பாராட்டுகள்.

அப்ப மற்றக் கதையும் எழுதலாம் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலம் கடந்த பின்னரும் ஒருவருக்கு அப்படிக் காதல் தொடரும் என்று நான் எண்ணவில்லை. அப்படி இருந்தாலும் கூட அதை வெளியே சொல்லும் அளவு மனப்பக்குவம் ஏற்படாது ஒருவன் இதனை காலமும் இருப்பானானால் அந்தக் கிறுக்கனை  வெட்டிவிடவும் தயங்காததுடன் இரக்கமும் கொள்ள மாட்டேன். :D

சுமே எத்தனை காலம் சென்றாலும் மாறாதது   . பொதுவாக ஆண்களின் செயல்களில் தான் இளவயதில் காதலித்த பெண்ணை வயதான நிலையில் கண்டாலும் அவளை கவரும்படியாக நடந்து கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. எப்போதுமே எந்த வயதானாலும் அந்தப் பெண்ணுக்கான கீரோ தான்தான் என்பது போன்ற பிரமை இயல்பாகவே அவர்களிடத்தில் தேங்கிக்கிடக்கும். பெண்கள் அப்படியல்ல தங்கள் திருமணத்திற்குப் பின்னான வாழ்வில் விருப்புக்குரியவர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்க முடியுமோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.

இந்த யாழிலையே கேட்டுப்பாருங்கோ எங்களுடைய செல்லச்சிங்கங்கள் எப்படி வந்து வாலை முறுக்கிக் கொண்டு நின்று தங்கள் காதலிகளை காதலைப்பற்றிச் சொல்லுவினம் பாருங்கோ :lol::D

1157517_505502059542956_657808546_n.jpg

1150811_1387683421459066_1073027064_n.jp

கதைப்பேன். கதைப்பதற்கு என்ன?? :lol:

யக்கோவ் ..அப்படிங்களா ...இப்ப வீட்டிலை பிரச்சனையென்றால்  நம்ம ஆட்களும் முந்தின EX மாரு க்கு தான் டெலிபொன் அடிக்கினமாம்...ரிலாக்சுக்கு ..வெள்ளைக்காரன் நடக்கிற மாதிரியை பின்பற்றி...ஏனென்றால் ரோமிலை இருக்கும் பொழுது ரோமனா இருக்கோணுமாம் ...

அவனவன் அப்படி விசரில் திரியிறான் ...தெரியாமால் வாய் விட்டிட்டியள் ...என்ன செய்ய போறியளோ தெரியாது 

எவனவனோ..., அவன் தான் என்று சொல்லி வரிசைக்கு டெலிபோன் மணி அடிக்க போறான்கள் :lol:  :lol:

Edited by matharasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னுடன் வரும் மற்ற இருவரும் என்னிலும் நல்ல நிறமானவர்கள். அதனால் அவர்களில் ஒருத்திதான் என்று எண்ணி அவர்களை தனித் தனியக் கேட்டும் இருவரும் மறுத்துவிட்டார்கள். ஆனாலும் எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

இப்ப அந்த இரண்டுபேரும் ஐ மீன்  அந்த நிறமான சிங்கியள் எங்கையிருக்கினம் எண்டு தெரியுமோ?  :wub:  :wub:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்தக்காலத்திலை, மூண்டு பெட்டையள் குரூப் ஒண்டில, ஆருக்கோ கடிதம் குடுத்ததா, நினைவிருக்கு! :D

ஆனால் பதில் கடிதம் வந்தது, அந்தப் பெட்டையின் அப்பாவிடமிருந்து!  :o

சில விசயங்களை, எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிற மனிசன் நான்! :icon_idea:

சுமே அக்கா , நீங்கள் பொடியள் காதல் கடிதம் கொடுக்கிற காலமா? எங்க காலத்தில் பெட்டையள்தான் தருவாளவை :D :D

இருந்தாலும் அக்கா, அந்த பொடியனுக்கு சின்ன வயதில் பார்வைக் குறைவு இருந்தததை அவன் பெற்றோருக்கு எடுத்து சொல்லி இருக்கவேண்டும் :icon_mrgreen:அதாவது ,சின்ன வயது காதல் பார்வையை சொன்னேன் :o 

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சில விடையங்களை வீட்டை போட்டுக் குடுப்பதில் அலாதிப்பிரியம் போலும்...பாவங்கள்....

நானும் அந்தக்காலத்திலை, மூண்டு பெட்டையள் குரூப் ஒண்டில, ஆருக்கோ கடிதம் குடுத்ததா, நினைவிருக்கு! 

ஆனால் பதில் கடிதம் வந்தது, அந்தப் பெட்டையின் அப்பாவிடமிருந்து!  

சில விசயங்களை, எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிற மனிசன் நான்! 

:o அவருக்கு உங்களில காதல் வந்திச்சா புங்கை  :lol:

சுமே எத்தனை காலம் சென்றாலும் மாறாதது   . பொதுவாக ஆண்களின் செயல்களில் தான் இளவயதில் காதலித்த பெண்ணை வயதான நிலையில் கண்டாலும் அவளை கவரும்படியாக நடந்து கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. எப்போதுமே எந்த வயதானாலும் அந்தப் பெண்ணுக்கான கீரோ தான்தான் என்பது போன்ற பிரமை இயல்பாகவே அவர்களிடத்தில் தேங்கிக்கிடக்கும். பெண்கள் அப்படியல்ல தங்கள் திருமணத்திற்குப் பின்னான வாழ்வில் விருப்புக்குரியவர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்க முடியுமோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.

இந்த யாழிலையே கேட்டுப்பாருங்கோ எங்களுடைய செல்லச்சிங்கங்கள் எப்படி வந்து வாலை முறுக்கிக் கொண்டு நின்று தங்கள் காதலிகளை காதலைப்பற்றிச் சொல்லுவினம் பாருங்கோ :lol::D

அக்கோய் என்னக்கா இப்படி போடுகின்றீர்கள், வயது போன நேரத்தில் கண்டாள் அட இவளையா காதலித்தோம், தப்பிட்டோமென்ற நினைப்புதான் வரும். பெண்களின் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது. கட்டினவள் தந்த அனுபமே வாழ்க்கைக்கு போதும். அவள்தான் கடைசிவரை என்காதலி. பெண்கள் கட்டுவது எப்பவுமே மண்கோட்டை. கொஞ்சம் இறங்கி யோசியுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  காதல்க்கதைக்கு சுமே

இந்த  தைரியத்தை  பாராட்டாமல்  இருக்கமுடியவில்லை

(ஒரு பெண்ணாக  இருந்து கொண்டும்.)

நானும் அந்தக்காலத்திலை, மூண்டு பெட்டையள் குரூப் ஒண்டில, ஆருக்கோ கடிதம் குடுத்ததா, நினைவிருக்கு! :D

ஆனால் பதில் கடிதம் வந்தது, அந்தப் பெட்டையின் அப்பாவிடமிருந்து!  :o

சில விசயங்களை, எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிற மனிசன் நான்! :icon_idea:

எனக்கும்  இப்படி  கதைகளை  எழுத ஆசைதான்  புங்கையர்

கனக்க  இருக்கு

ஊர் முழுக்க உருண்ட காளையல்லவா :D

ஆனால்

நாம்  ஒரு பார்வையில்  எழுதுவோம்

மறு புறம்  எப்படி  பார்த்தார்கள்  அல்லது

அவர்களது கருத்தையும் கேட்காமல் எழுதுவது சற்று குத்துதலாக இருக்கு.

எனவே  நீங்கள்  சொல்வது போல்

 எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிறன் நானும்! 

:icon_idea: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சுமோ அக்காவின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள், கூடவே  உங்கள் ஆத்துக்காரருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் என்னக்கா இப்படி போடுகின்றீர்கள், வயது போன நேரத்தில் கண்டாள் அட இவளையா காதலித்தோம், தப்பிட்டோமென்ற நினைப்புதான் வரும். பெண்களின் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது. கட்டினவள் தந்த அனுபமே வாழ்க்கைக்கு போதும். அவள்தான் கடைசிவரை என்காதலி. பெண்கள் கட்டுவது எப்பவுமே மண்கோட்டை. கொஞ்சம் இறங்கி யோசியுங்கள் :lol:

அடச்சீ போங்கடா நீங்களும் உங்க காதலும் என்று தூக்கிப்போட்ட பெண்ணைப் பார்க்க ரோசம் பொத்துக் கொண்டு வரத்தான் செய்யும் மறுக்கேல்லை. அந்த ரோசம் கூட அவளின் மீதான ஒருவகை ஈர்ப்பினாலதான் தம்பியோவ்.

சரி சரி நல்ல பிள்ளைகளை நாலையும் பத்தையும் எழுதி தடுமாற வைக்கக்கூடாது. கடைசிவரை காதலியாக துணையை ஏற்று வாழும் ஆண்களுக்காக கொஞ்சம் இறங்கி நின்றும் யோசிக்கிறோம்.

என்னதான் இறங்கி நின்று யோசித்தாலும் உண்மைகள் முழிச்சுக் கொண்டு நிற்குது வந்தி என்னுடைய பாட்டன் காலத்திலிருந்து பெற்றோர் காலத்தைத் தாண்டி என் காலம் வரைக்கும் பலருடைய கதைகளை அறிந்திருக்கிறேன் நேரில் பார்த்திருக்கிறேன். பதட்டத்தையும் , பரிதவிப்பையும் பார்வைகளின் ஏக்கங்களையும் நுணுக்கமாக கவனித்திருக்கிறேன். எத்தனை கிழமானாலும் ஈர்ப்பு என்பது அற்றுப்போவதில்லை. உடலை மட்டும் காதலித்திருந்தால் அழகிழக்கும்போது அற்றுப்போய்விடும். அநேகமாக காதலுக்கு காரணம் கிடையாது. இதற்கு மேல எனக்கு எழுதத் தெரியவில்லை. உணர்வுகள் உறங்குவதில்லை அதற்கு நாளங்கள் எல்லாம் செயற்படவேண்டும் என்ற விதி கிடையாது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1157517_505502059542956_657808546_n.jpg

1150811_1387683421459066_1073027064_n.jp

அட உங்களுக்குமா அன்பு இந்த நிலை :D

யக்கோவ் ..அப்படிங்களா ...இப்ப வீட்டிலை பிரச்சனையென்றால்  நம்ம ஆட்களும் முந்தின EX மாரு க்கு தான் டெலிபொன் அடிக்கினமாம்...ரிலாக்சுக்கு ..வெள்ளைக்காரன் நடக்கிற மாதிரியை பின்பற்றி...ஏனென்றால் ரோமிலை இருக்கும் பொழுது ரோமனா இருக்கோணுமாம் ...

அவனவன் அப்படி விசரில் திரியிறான் ...தெரியாமால் வாய் விட்டிட்டியள் ...என்ன செய்ய போறியளோ தெரியாது 

எவனவனோ..., அவன் தான் என்று சொல்லி வரிசைக்கு டெலிபோன் மணி அடிக்க போறான்கள் :lol:  :lol:

எனக்குக் கொஞ்ச நாளாப் பொழுது போகுதில்லை. போனிலாவது பொழுதைப் போக்குவம். :lol:

இப்ப அந்த இரண்டுபேரும் ஐ மீன்  அந்த நிறமான சிங்கியள் எங்கையிருக்கினம் எண்டு தெரியுமோ?  :wub:  :wub:  :wub:

நீங்கள் இன்னும் கனடாவிலையோ நிக்கிறியள். அவை அங்கதான் இருக்கினம் குழந்தை குட்டியளோட.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.