Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிற்கு போய் வந்து ஒரு பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையானின் நண்பனுக்குப் பல புரிதல்கள் கிடைக்கவேண்டி உள்ளது.. புலம்பெயர்ந்தவர் அனைவருமே விருப்பத்துடன் புலம்பெயர்ந்தவர்கள் என்கிற விம்பத்தை உருவாக்குகிறது.. அது அவ்வாறானதல்ல என்பதுதான் உண்மை..

தலாய் லாமாவால் திபெத்திற்குத் திரும்பமுடியாது.. அவர்போல் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் வெ ளிநாடுகளில் இருப்பார்கள்..! திபெத்தில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்.. நண்பரின் கருத்துப்படி லாமா தன்னுரிமை இழந்தவர் ஆகிறார்..

இங்கு கவனிக்கப்படவேண்டியது நண்பர் தாயக மக்களுக்காகப் பேசவல்ல பிரதிநிதி அல்ல என்பது.. பொதுவில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே மக்கள் அந்த உரிமையை வழங்குகிறார்கள்..! அண்மையில் இந்த அமைப்பு புலம்பெயர் அமைப்புக்களை சந்தித்த விடயம் தெரிந்ததே..

 

நீங்கள் கூறியது உண்மை தான் அண்ணா. ஆரம்பத்தில் அனைவரும் விருப்பத்துடன் புலம்பெயரவில்லை ஆனால் பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் விருப்பமின்றி புலம்பெயர்ந்தார்கள் எனக் கூறமுடியாது.

ஊரிலிருப்பவனைப் பலிக்கடாவாக்கி எனக்கு சுதந்திரம் கிடைப்பதைவிட நான் அடிமையாக இருப்பதையே விரும்புகிறேன். எனக்கு சுதந்திரம் தேவைப்படுமிடத்து அதற்கான எனது நேரடிப் பங்களிப்பை வழங்காமல் விடயங்கள் எனது எண்ணப்படி (எனது ஞாபக வீதியில் உள்ளதன் படி) இருக்கவேண்டும் என எண்ணுவது எந்த வகையில் நியாயம்? அவன் கூறியபடி அவர்களுக்கானதை அவர்களே பார்த்துக்கொள்ள தகுதியும் நேரமும் வரும். அப்போது அவர்களே பார்த்துக் கொள்ளுவார்கள். எனக்கு முன்னர் கருத்துக்கூறிய, ஊருக்கு அண்மையில் போய் வந்த இன்னுமொருவன், இணையவன், கிருபன் மூவரின் கருத்துக்களின் சாராம்சப் படி ஊரில் சனத்துக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் இல்லை, தமிழ்க் கூட்டமைப்பு எதையும் வெட்டிப் பிடுங்கும் என அவர்கள் நினைக்கவில்லை. வேறு யாருக்கும் வாக்குப் போட முடியாது என்பதாலும் யாராவது இரட்சகர் வேண்டும் என சனம் நினைப்பதாலும் கூட்டமைப்புக்கு வாக்கு போடுவார்கள். நவநீதம் பிள்ளையையும் சனம் இரட்சகராகத்தான் நினைத்தது. நாளைக்கு மகிந்தவையும் இரட்சகராக நினைக்கலாம்.  நீங்கள் இன்னுமா கூட்டமைப்பை நம்புகிறீர்கள்? கூட்டமைப்பை அதிகமாக நம்பாதீர்கள். நாம் எதையாவது அதிகமாக நம்பும் போதுதான் ஏமாற்றங்களும் அதிகமாகின்றன. இன்றைய சூழலில் கூட்டமைப்பு ஆணியே புடுங்க முடியாது.

எனது நண்பன் தாயக மக்களின் பிரதி நிதி அல்ல ஆனால் தாயக மக்களில் ஒருவன் என்ற வகையில் அவனது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். கற்பனையில் ஊரின் நிலையும் நிஜத்திலே ஊரின் நிலையும் மிக மிக வித்தியாசம். நீங்களும் ஒருமுறை போய் பார்த்துவிட்டு வந்து உங்களின் நேரடி மனநிலையை பதிவு செய்ய வேண்டும்.

  • Replies 88
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை மட்டுமல்ல.. யாரையுமே அரசியலில் நான் நம்புவதில்லை. ஆனாலும் நான் என்ன நினைக்கிறேன்.. யாரை நம்புகிறேன் என்பது உண்மையான ஜனநாயக அரசியலுக்கு முக்கியமில்லை என்பதே இங்கு

கவனிக்கப்பட வேண்டியது.. பெரும்பான்மை தமிழ் மக்களின் குரலே எனது குரலும் ஆக்கப்படுகிறது..

உங்கள் நண்பரின் குரலை அவரது கருத்துரிமை என்கிற அளவிலேயே எடுத்துக்கொள்கிறேன்..

உங்கள் நண்பரின் கருத்தியலில் உள்ள ஆழமான பிரச்சினை என்னவென்றால் புலம்பெயர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களின் தாயகம் குறித்த உரிமைகளை மறுதலிக்கும் பாங்காகும்.. ஒரு தனிமனிதன் புலம்பெயர்ந்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.. இன்று இலங்கைத் தீவை ஆட்டிப்படைக்கும் கோத்தபாய ராஜபக்சகூட ஒரு புலம்பெயர்வாசிதான்.. ஆனால் உங்கள் நண்பரால் வெ ளிப்படையாக கோத்தாவை உள்ளடக்க முடியாது.. இது ஏன் என்பதை ஆழமாக விளங்கிக் கொண்டிருந்தார் என்றால் அவரால் இவ்வாறான பதிவு ஒன்றை மேற்கொண்டிருக்க முடியாது..

அதேபோல இலங்கைத் தீவின் உள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்.. இவர்கள் நாட்டின் எல்லையைத் தாண்டாதவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக நவி பிள்ளையை சந்திக்கும் தகுதியைப் பெற்றவர்களா??

உண்மை என்னவெனில் புலம்பெயர்ந்தவர்கள் ஐநாவை நாடுகிறார்கள்.. இடம்பெயர்ந்தவர்கள் ஐநாவின் பிரதிநிதியைச் சந்திக்கிறார்கள்..! இருதரப்பினருக்குமே இடம்தான் பிரச்சினை.. இருக்கும் இடங்கள்தான் வேறு..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் வலியை நான் முழுதும் உணராவிட்டாலும், பார்வையாளனாக இங்குள்ள பதிவுகளை படித்தவரையில், சிறு நெருடல்.

 

தன்னை படிக்க வைத்து ஆளாக்கி முன்னேற்றிய பெற்றோர்களை அவர்களின் பிற்கால ஊனம், முதுமையினால் இயலாமையைக் காட்டி உதாசீனப்படுத்தி கைகழுவும் அல்லது தவிர்க்கும் மனநிலையே அதிகரித்துள்ளதாக தெரிகிறது. யாரும் மூழ்கும் படகிலிருப்போருக்கு உதவ முன்வரவில்லை, கழிவிரக்கத்தில் 'உச்' கொட்டுவதைத் தவிர.


இதைச் கூற எனக்கு தகுதியில்லையென யாழ் உறவுகள் நினைத்தால், பொறுத்தருள்க.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஊரில் போய் இருக்க தயாராக இல்லை :) அது தான் உண்மை

பாடசாலைகள் கட்டுவது அரசாங்கத்தின் கடமை பிரதேச செயலர் ஊடகவோ இல்லை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவோ பாடசாலைக்கு நிதி வாங்கி கட்டலாம் . கோவில்கள் கட்ட வேண்டிய வசியம் இல்லை இருக்கும் கோவில்களை பராம்ரிச்சா போதும்  ஆனால் புலம்பெயர் தமிழர் அனுப்பும் பணங்களை ஊர் மன்றங்கள் வீணாக்காமல்  விவசாயங்கலையோ தொழில் துறைகளையோ அபிவிருத்தி  செய்து அங்குள்ளவர்களுக்கு வேலை கொடுக்கலாம் . வெறுமனே முஸ்லிம்களையும் சிங்களவனையும் வளர்த்துவிடாமல் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் வலியை நான் முழுதும் உணராவிட்டாலும், பார்வையாளனாக இங்குள்ள பதிவுகளை படித்தவரையில், சிறு நெருடல்.

 

தன்னை படிக்க வைத்து ஆளாக்கி முன்னேற்றிய பெற்றோர்களை அவர்களின் பிற்கால ஊனம், முதுமையினால் இயலாமையைக் காட்டி உதாசீனப்படுத்தி கைகழுவும் அல்லது தவிர்க்கும் மனநிலையே அதிகரித்துள்ளதாக தெரிகிறது. யாரும் மூழ்கும் படகிலிருப்போருக்கு உதவ முன்வரவில்லை, கழிவிரக்கத்தில் 'உச்' கொட்டுவதைத் தவிர.

இதைச் கூற எனக்கு தகுதியில்லையென யாழ் உறவுகள் நினைத்தால், பொறுத்தருள்க.

 

நீங்கள்   சொல்வது நிஐம்

அது தானே இன்றைய  வாழும் வழியும் கூட.

 

இதைச் கூற   உங்களுக்குக்கு  முழுத்தகுதியும்  உண்டு

ஆனால்   சிலர்  வந்து சொல்வார்கள்

அழிக்கப்பட்டபோது

பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்று.

ஆனால்  அந்த வலி

இன்று எம்மைவிட

தங்களை  வாட்டுவதை அறிவோம் ஐயா.

(இங்கு தங்களை  என்று குறிப்பிடுவது ராஐவன்னியன்  என்ற  ஒருவரை அல்ல  தமிழக மக்களை)

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஊரில் போய் இருக்க தயாராக இல்லை :) அது தான் உண்மை

 

இது உண்மையா? :D பரிசோதித்துப் பார்க்க வேண்டும்..

 

தமிழகத்தில் இருந்தோ, அல்லது இந்தியாவில் இருந்தோ புலமை அடிப்படையில் புலம் பெயர்ந்தவர்களில் பலர் அந்தந்த நாடுகளிலேயே வாழ்க்கையை முடித்துவிட விரும்புவதில்லை. காரணம், அவர்களுக்கு தமது பூர்வீக இடங்களில் சுதந்திர வாழ்வு உள்ளது..

 

எனது பல்கலைக்கழக நண்பர் அமெரிக்கா சென்று முதுகலை முடித்து பச்சை அட்டையுடன் சில வருடங்கள் அங்கு வேலை செய்தார். இப்போது பெங்களூருவில் வசிக்கின்றார்.

 

அதுபோல, பாலர் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய குழந்தைகளை தமிழகத்தில் படிக்க வைத்துவிட்டு அமெரிக்காவில் பணி செய்யும் தமிழக உறவுகளும் உள்ளார்கள், எனக்குத் தெரிந்து.. அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் காணாத வசதியா தமிழகத்தில் கிடைத்துவிடப் போகிறது.. எனக்குத் தெரிந்தே இப்படி சில உதாரணங்கள் உள்ளன..

 

ஆனால், எங்கள் நிலைமை வேறு.. இருப்பதை விட்டால் வேறு போக்கிடம் இல்லை.. தாயகத்தில் நிலையான சுதந்திரம் கிட்டுமாக இருந்தால் அங்கு சென்று மீள்குடியேறுபவர்களும் இருப்பார்கள்.. அந்த சூழ்நிலை வராத மட்டும் எதையும் அறுதியாகச் சொல்லிவிட முடியாது அல்லவா?

 

சுதந்திரமற்ற சூழலில்கூட நாட்டுக்குத் திரும்பிய எம்மவர் உதாரணங்களும் உள்ளன.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஊரில் போய் இருக்க தயாராக இல்லை :) அது தான் உண்மை

 

அப்படிக் கூற முடியாது அக்கா. பிள்ளைகள் படிப்பு, என இருப்பவர்களால் அவை முடியுமட்டும் போக முடியாது ஆனால் போவதற்குத் தயாராகவும் பலர் இருப்பார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வழிகாட்டுபவர்கள் என்பதைவிட மற்றவர்களின் பின்னால் போவோர் தான் அதிகம். சிலர் போய் நிலைமைகள் நல்லம் எனக் கூறமட்டும் மற்றவர்கள் வெளிக்கிட மாட்டார்கள். ஒண்டு ரெண்டு பேர் போய், இங்க நல்ல காசும் இருக்கு எண்டு சொன்னால் எல்லோரும் விழுந்தடிச்சுக்கொண்டு ஓடுவார்கள். நான் பார்த்ததில், அங்க போய்  ஒரு மூண்டு மாதமாவது தங்கி நிக்காமல் எதுவிதமான வேலைத் திட்டங்களோ வியாபார முயற்சிகளோ செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

1- இது உண்மையா? :D பரிசோதித்துப் பார்க்க வேண்டும்..

 

 

ஆனால்,

2- எங்கள் நிலைமை வேறு.. இருப்பதை விட்டால் வேறு போக்கிடம் இல்லை.. தாயகத்தில் நிலையான சுதந்திரம் கிட்டுமாக இருந்தால் அங்கு சென்று மீள்குடியேறுபவர்களும் இருப்பார்கள்.. அந்த சூழ்நிலை வராத மட்டும் எதையும் அறுதியாகச் சொல்லிவிட முடியாது அல்லவா?

 

சுதந்திரமற்ற சூழலில்கூட நாட்டுக்குத் திரும்பிய எம்மவர் உதாரணங்களும் உள்ளன.

 

எந்த  ஒரு  உயிரினமும்

ஏன்  தாவர  இனம்  கூட

புலம் பெயர்ந்தால்  அதிகம்  வாழ்வதில்லை

தமிழன்  மட்டும் விதிவிலக்கு என்றால்   எப்படி???

ஒரு சிலரை  வைத்து ஒட்டுமொத்தத்தையும்   கணிப்பது தான்  தமிழரின் தலைவிதி.

 

இப்பொழுதும்  காலம்   கடந்துவிடவில்லை

மகிந்த ஒரு தீர்வை  வைத்துப்பார்க்கட்டும்

 

ஆகக்குறைந்தது

தமிழரது காவல்துறையாவது வரட்டும்

கோடிக்கணக்கான  பணத்தை முதலீடு செய்து 

புலத்தில்  செய்யப்படும்  வியாபாரங்களுக்கு  ஈடாக

சில லட்சங்களுடன் பெரும் துறைகளைக்கட்டி  எழுப்ப

புலம்  பெயர் சமூகம் துடித்துக்கொண்டிருக்கிறது

தடை  என்ன  என்பதை நாம்  புரிந்து கொள்ளவேண்டும்

 

(புலம்  பெயர்  தமிழருக்கு மகிந்த அதிகம்  பயப்படுவது

இவர்களை நிம்மதியாக உள்ளே  விட்டால்

சிங்களவர்  வவுனியாவில்  தமிழரிடம்  வேலைக்காக கையேந்தி  நிற்கும்  நிலை வரும்  என்பதாலேயே)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  ஒரு  உயிரினமும்

ஏன்  தாவர  இனம்  கூட

புலம் பெயர்ந்தால்  அதிகம்  வாழ்வதில்லை

தமிழன்  மட்டும் விதிவிலக்கு என்றால்   எப்படி???

ஒரு சிலரை  வைத்து ஒட்டுமொத்தத்தையும்   கணிப்பது தான்  தமிழரின் தலைவிதி.

 

இப்பொழுதும்  காலம்   கடந்துவிடவில்லை

மகிந்த ஒரு தீர்வை  வைத்துப்பார்க்கட்டும்

 

ஆகக்குறைந்தது

தமிழரது காவல்துறையாவது வரட்டும்

கோடிக்கணக்கான  பணத்தை முதலீடு செய்து 

புலத்தில்  செய்யப்படும்  வியாபாரங்களுக்கு  ஈடாக

சில லட்சங்களுடன் பெரும் துறைகளைக்கட்டி  எழுப்ப

புலம்  பெயர் சமூகம் துடித்துக்கொண்டிருக்கிறது

தடை  என்ன  என்பதை நாம்  புரிந்து கொள்ளவேண்டும்

 

(புலம்  பெயர்  தமிழருக்கு மகிந்த அதிகம்  பயப்படுவது

இவர்களை நிம்மதியாக உள்ளே  விட்டால்

சிங்களவர்  வவுனியாவில்  தமிழரிடம்  வேலைக்காக கையேந்தி  நிற்கும்  நிலை வரும்  என்பதாலேயே)

 

 எம்மை நாமே அதிகமாக எடைபோடுவதும், தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் காரணம் அண்ணா. ஏற்றகனவே புலம்பெயர்ந்த பலர் ஊரிலே முதலீடுகளுடன் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலில் இருக்கும் சில தரம் வாய்ந்த ஹோட்டல்களின், போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களின்  பின்னணி புலம்பெயர் தமிழர்கள் தான். குடியுரிமை இல்லாத காரணத்தால் அங்கிருக்கும் அவர்களின் நெருங்கிய உறவுகளின் பெயர்களிலே வியாபாரங்கள் நடக்கின்றன. வியாபார காரணங்களுக்காக வெளியில் விடயங்களை விடுபவர்கள் குறைவு.

எங்களைக் காக்க எங்கிருந்தாவது மீட்பர்கள் வருவார்கள் என்று நம்பும் கனவு அபத்தமானது. மீட்பர்களாக நாங்களே மாறினால் தான் உண்டு...!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அதுபோல, பாலர் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய குழந்தைகளை தமிழகத்தில் படிக்க வைத்துவிட்டு அமெரிக்காவில் பணி செய்யும் தமிழக உறவுகளும் உள்ளார்கள், எனக்குத் தெரிந்து.. அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் காணாத வசதியா தமிழகத்தில் கிடைத்துவிடப் போகிறது.. எனக்குத் தெரிந்தே இப்படி சில உதாரணங்கள் உள்ளன..

 

 

இங்குள்ள இந்தியர், தங்கள் பிள்ளைகளை இந்தியாவிற்கு அனுப்பவது பல காரணங்களால். அங்குள்ள குறைந்த வாழ்க்கை செலவு,தமது கலாச்சாரத்த்த்தை தொடர்ந்து பேணுதல், இங்குள்ள வாழ்க்கை முறைக்கு தங்கள் பிள்ளைகள் வந்து விடக்கூடாது என்கிற இயல்பு. சரி பிழைக்கு மேல், அவர்கள் 2 - 3 சந்ததியாக இருந்தும் தங்கள் கலாச்சாரத்த்த்தை பேணுவதில் இது உதவி செய்கிறது . ஆனாலும் குழு நிலையாக ஓட்டியும் ஓட்டதா  சமூகமாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள் . பலரின் சிந்தனை , இந்தியாவில் வேலைக்காரர் வைத்திருக்கலாம் , காருக்கு சாரதி வைத்திருக்கலாம்  , அவை இங்கே ஒரு மிக செலவு கூடிய கருமம் என்று சொல்லி குறைபபடுவார்கள் அல்லது இந்தியாவை நினைத்த்து பெருமை கொள்ளுவார்கள் ஆனால் அந்த  வீடு வேலைக்காரரின் , கார் சாரதியின் , எடுபிடி செய்பவர்களின் வாழ்க்கை நிலையை பற்றி யோசிப்பது இல்லை.

  • 2 weeks later...

கனடாவில் பிறந்து வளர்ந்த தங்கை ஒருவர் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அவர் சொல்கிறார் இப்படி. I would love to go to Sri lanka. I like their hospitality. people are so relaxed.

 

Yes People are so relaxed. Just a phone call salary payment without working. Postbox without Bills.  Yes really relax. I love too that. but my bad luck I live in Europa.

 

Ja Leute sind so entspannt. Nur ein Anruf Gehaltszahlung, ohne zu arbeiten. Postbox ohne Rechnung. Ja wirklich entspannen. Ich liebe auch, dass. aber meine pech Ich lebe in Europa.

 

ஜோக் தான் சீரியசாக எடுக்க வேண்டாம். றிலாக்சாக சிரிப்பதற்கு.

  • 3 weeks later...

இன்னுமொருவன்,

 

உங்களிற்காவது பரவாயில்லை, 23வருடங்களின் பின்னர் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நாம் 23 வருடங்களின் முன்னர் எமது சொந்த ஊரிலிருந்து இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயரவேண்டி வந்தது. இன்றும்கூட அந்த ஊரிற்கு செல்வதற்கு ஒருவருக்கும் (பொதுமக்கள்) வழியில்லை. 23வருடங்கள் தொடர்ச்சியான மனித நடமாட்டம் இன்றி (இராணுவ நடமாட்டம் நீங்கலாக) அந்தவூர் 23 வருடங்களில் எப்படி பாழடைந்து போயிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். என்னவோ இப்படி எல்லாம் நாசமாய்ப் போகவேண்டுமென்று ஏதோ சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

Yes People are so relaxed. Just a phone call salary payment without working. Postbox without Bills.  Yes really relax. I love too that. but my bad luck I live in Europa.

 

Ja Leute sind so entspannt. Nur ein Anruf Gehaltszahlung, ohne zu arbeiten. Postbox ohne Rechnung. Ja wirklich entspannen. Ich liebe auch, dass. aber meine pech Ich lebe in Europa.

 

ஜோக் தான் சீரியசாக எடுக்க வேண்டாம். றிலாக்சாக சிரிப்பதற்கு.

 

காசை வைத்துக்கொண்டு றிலாக்ஸாக இருந்தாக அச்சிறுமி சொல்லவில்லை. றிலாக்சாக இருந்தார்கள் என்று தான் சொல்லி இருக்கிறார். :mellow:  :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.