Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைக் கைப்பற்ற வேண்டும் என்கிறார் சுதர்சன நாச்சியப்பன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sutharsana-Nachiayappan-9913-150.jpg

தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு என்ன நடந்தது.. கீழ்ப்பாக்கத்துக்கு கொண்டுபோக வேணுமா? :o நேரத்துக்கு ஒன்று பேசுகிறாரே.. :huh:

இப்படி திரிகளுக்கு கருத்து எழுத துணிசல் உள்ள்வர்கள் சிலர் மட்டுமே. அதில் இசை முக்கியமான புள்ளி. :D

 

அவர் கீழபாக்கம் போவாரோ இல்லையோ  அவர் டெல்கி போகும் சாத்தியங்கள் தென்படுகின்றன. குறைந்த பட்சம் நியமன எம்.பி யாகத்தன்னும். :icon_idea:

 

 


அது டெல்கி போக தேவையான தகுதிகளும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா,

தேர்தல் விரைவில் வருதில்ல!

நம்மள தான் கீழ்ப்பாக்கம் தள்ளிட்டு போக பிளானு போட்டுட்டாரு தலைவரு!

ராஜபக்ச ஐடியா, கொடுத்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியக்காரப்பேச்சு

 

எமது போராட்டம்  எமது மண்ணுக்கு மட்டுமே  சொந்தம் கொண்டாடி மட்டுமே.

சிங்களவன் பூமியில் ஒரு அங்குலமும் எமக்கு வேண்டாம்

நிலத்தை இழந்து தவிக்கும்  தவிப்பு எமக்குத்தெரியும்.

 

இந்தியர்கள்

ஒன்றில் உழைக்கப்போனவனுக்கு எதற்கு நிலம்  என்கின்றனர்

அல்லது

இலங்கையைக்கைப்பற்றவேண்டும்  என்கின்றனர்.

இது இரண்டுமே தப்பு என்பதை எப்பொழுது அறிவர்...............???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி மலிவு விளம்பரங்களையெல்லாம் கணக்கிலெடுக்கக் கூடாது. சூ சாமியின் வார்த்தைகளுக்கு என்ன மரியாதையோ அதுதான் இவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா,

தேர்தல் விரைவில் வருதில்ல!

நம்மள தான் கீழ்ப்பாக்கம் தள்ளிட்டு போக பிளானு போட்டுட்டாரு தலைவரு!

ராஜபக்ச ஐடியா, கொடுத்திருப்பாரோ?

 

 

சீமான் கனிமூனுக்கு போய் வாறதுக்குள்ள

இப்படி  தானும் பேசி 

புகுந்திடலாம்  என்று பார்க்கின்றார் போலும்

சீமான் எமது தம்பி

இது ...........

வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை அவர்களின் கடந்த கால செயல்ப்பாடுகள் எப்பிடி இருப்பினும் இப்பிடியான கருத்துகளை கூறி அவர்கள் வருகின்ற பொழுது நேசக்கரம் நீட்டுவது தான் முறை

ஓன்று எமக்கு மேலும் மேலும் எதிரிகளை கூட்டாமல் இருக்கும்

மற்றது எமது ஆதரவு சக்திகளின் வட்டத்தை பல்வேறு மட்டங்களில் பெருப்பித்து கொள்ளலாம்

நாங்கள் அவர்களை நம்பாவிட்டாலும் எதிர்க்காமல் இருப்பது நல்லது.....,..

எங்களுக்கு காங்கிரசும் தேவை

பா ஜா காவும் தேவை

தேர்தல் பயம் ஒருவனை எப்படியெல்லாம் பேசவைக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...... :lol: 

இந்த மாதிரி மலிவு விளம்பரங்களையெல்லாம் கணக்கிலெடுக்கக் கூடாது. சூ சாமியின் வார்த்தைகளுக்கு என்ன மரியாதையோ அதுதான் இவருக்கும்.

அண்ணோய் சூ சாமியை குறைவாய் மதிப்பிடாதீங்கோ... !

அந்தால் ஒபாமாவையே அப்போய்ன்மன்ற் இல்லாமல் பாக்கிற ஆள்... !

  • கருத்துக்கள உறவுகள்

sudharsanan.jpg

மே 18ன்  பின் நீங்கள் உட்பட 10 எம்பிகள் இலங்கைக்கு டூர் போய் ராஜபக்சேவிடம் இளித்தீர்களே, அப்போதே இலங்கையை கைப்பற்ற வேண்டியது தானே சார்?

  • கருத்துக்கள உறவுகள்

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே காங்கிரஸ் தயாராகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

19duklos.jpg

 

இந்த சுதர்சன நாச்சியப்பன், யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்திருந்த போது....
டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து.... ஈழத்து எம்.ஜீ.ஆர். என்று சொன்ன ஆள்.
 

பைத்தியக்காரப்பேச்சு

 

எமது போராட்டம்  எமது மண்ணுக்கு மட்டுமே  சொந்தம் கொண்டாடி மட்டுமே.

சிங்களவன் பூமியில் ஒரு அங்குலமும் எமக்கு வேண்டாம்

நிலத்தை இழந்து தவிக்கும்  தவிப்பு எமக்குத்தெரியும்.

 

இந்தியர்கள்

ஒன்றில் உழைக்கப்போனவனுக்கு எதற்கு நிலம்  என்கின்றனர்

அல்லது

இலங்கையைக்கைப்பற்றவேண்டும்  என்கின்றனர்.

இது இரண்டுமே தப்பு என்பதை எப்பொழுது அறிவர்...............???

 

 

விஜயன் வருவதற்கு முன் (இல்லை வந்த பொழுது) முழு இலங்கையையும் தமிழர்கள் ஆளவில்லையா?

 

நாசியப்பன்: இராமாயண காலத்தில் இருந்தே இலங்கை தமிழர்களது என்னும் அடிப்படையில் தமிழீழம் ஆக்கப்பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நாசியப்பன்: இராமாயண காலத்தில் இருந்தே இலங்கை தமிழர்களது என்னும் அடிப்படையில் தமிழீழம் ஆக்கப்பார்க்கலாம்

 

அன்று இலங்கையை இராவணன் காப்பாற்றினான்...இன்று பிரபாகரன் காப்பாற்றினார்....நாளை யார் காப்பாற்றுவார்......இந்தியாவின் விஸ்தரிப்பு கொள்கையிலிருந்து.... :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் கைப்பற்றுவது. அதை நாச்சியப்பனே தலைமை தாங்கிச் செய்யுறதை விட்டிட்டு.. கூச்சல்போட்டிட்டா கைப்பற்றி விட முடியுமா என்ன..??! தமிழீழத்தைக் கைப்பற்ற விடமாட்டன் எண்டு பிரபாகரனோட மல்லுக்கட்டினியள்.. இப்ப என்னடான்னா.. முழு இலங்கையையும் கைப்பற்றி தமிழீழம் அமைக்கப் போறன் எண்டுறீயள். ரெம்ப சந்தோசம். ஆனால் சாத்தியம்.. பூச்சியமாகும். அதுதான் உங்க "நட்பு" நாடாச்சே. :lol::D

என்னை பொறுத்தவரை அவர்களின் கடந்த கால செயல்ப்பாடுகள் எப்பிடி இருப்பினும் இப்பிடியான கருத்துகளை கூறி அவர்கள் வருகின்ற பொழுது நேசக்கரம் நீட்டுவது தான் முறை

ஓன்று எமக்கு மேலும் மேலும் எதிரிகளை கூட்டாமல் இருக்கும்

மற்றது எமது ஆதரவு சக்திகளின் வட்டத்தை பல்வேறு மட்டங்களில் பெருப்பித்து கொள்ளலாம்

நாங்கள் அவர்களை நம்பாவிட்டாலும் எதிர்க்காமல் இருப்பது நல்லது.....,..

எங்களுக்கு காங்கிரசும் தேவை

பா ஜா காவும் தேவை

 

மெத்தச் சரி, எமக்கு அரிசிதான் வேண்டும், யார் குற்றவேண்டுமென்பதல்ல.

 

19duklos.jpg

 

இந்த சுதர்சன நாச்சியப்பன், யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்திருந்த போது....

டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து.... ஈழத்து எம்.ஜீ.ஆர். என்று சொன்ன ஆள்.

 

 

பாவம், அவரை மன்னித்துவிடுவோம். அவருக்கு சிலவேளை எம்.யி.ஆர். ஐத் தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது எமக்கு எம்.யி.ஆர். ஐ தெரியாதென்று அவர் நினைத்திருக்கலாம்.

அரசியலில் மட்டுமல்ல, அரசியல்வாதிகளிலும் இதெல்லாம் சகசமப்பா...குறிப்பாக இந்தியாவில்.

:)

 

sutharsana-Nachiayappan-9913-150.jpg

தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil

 

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

 

1971 கலம்பரங்களை மனத்தில் வைத்து தான் இலங்கையை காத்து ஆள்வதாக நினைத்து கச்சதீவை இலங்கைக்கு கொடுத்திலிருந்து இலங்கையை இந்தியாவின் பாகமாக நினைத்த காங்கிரசின் கொள்கைகள் மாறி இந்திர காந்தி தமிழருக்கு உதவ முன் வந்தார். இது உலக நடவடிக்கைகளை ஒரு தனி மனிதன் உணர்ந்து செயல்ப்பட்ட விதம். ஆனால் தனி மனித வாழ்வு முடிவுக்கு வரும். ரஜீவ் நடந்ததை உணராமல் தான் இலங்கையை ஆழும் கனவு கண்டார். இதனால் திரும்ப 13ம் திருத்தம் என்ற கச்சதீவை இலங்கைகு கொடுத்து பூச்சியத்திலிருந்த்து ஆரம்பித்தார். தேர்தலின் முன்னர் அவரும் திருந்தியிருந்திருக்கலாம். ஆனால் தனி மனித வாழ்வுக்கு முடிவு வரும். ரஜீவை வாழ்வு, சாவிலிருந்து காப்பாற்றி நமது தீர்வை தேட முடியாது. ஆனால் அரசியல் கொள்கைகளே இருக்காத சோனியா- மன்மோகன் கூட்டு நோக்கம் எதுவும் இல்லாமல் த்மிழரை அழிப்பதை கச்ச தீவாக நினைத்து. ஆனால் இந்தியா சந்தித்திருக்கும் சில இக்கட்டால் இலங்கை அரசியலில் திரும்ப நோக்கம் கற்பிக்கப்பட வேண்டிய நிலையில் காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் திரும்ப இலங்கைப் பிடிக்கும் கனவில் விழுகிறது. அதுதான் நாச்சியப்பனின் கதையின் வெளிப்பாடு. அதாவது இப்பத்தான் இந்த புதிய காங்கிகிரஸ் தமது கச்ச தீவு டீலை முடித்திருக்கிறார்கள். இப்படி இந்தியா தனக்கென்றொரு பாதுகாப்புக் கொள்ளகை இல்லாமல் 45 ஆண்டுகளை வீணடித்திருப்பது தமிழரை போதுக்கிசர், ஒல்லாந்தர் காலத்துக்கு த்ள்ளிக்கொண்டு போய் விட்டிருக்கிறது.

 

டக்கிளசை கட்டி அணைத்த இந்த முட்டாள் பேசும் கதையை பார்த்தால் சம்பந்தருக்கு ஏதும் உபயோகமான வாக்குறுதி மன்மோகன் சிங்கால் கொடுக்கப்பட்டிருக்கும்மபோல் தெரியவில்லை. இந்திரா காந்தியின், ராஜீவின் தோல்விகளையே காங்கிரஸ் சந்திக்கும் போது இவர்கள் படித்த பாடமும் முடுவடைந்து போய்விடும் போலிருக்கு. தமிழருக்கு ஒரு நிரந்தரமான மாற்றம் மேற்கிலிருந்துதான் வரம் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையைக் கைப்பற்ற வேண்டும் என்கிறார் சுதர்சன நாச்சியப்பன்!

 

அய்யய்யோ ..... , இந்தியாவிடம் அடிமையாக இருப்பதை விட சிங்களவனோடு வாழலாம்.   

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழமே தீர்வு- சுதர்சன நாச்சியப்பன்! இலங்கையை பிரிக்கக் கூடாது- நாராயணசாமி!!
 
இலங்கையில் தமிழர் வாழும் பகுதியை பிரித்து தமிழீழம் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், ஆனால் இலங்கையை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு இணை அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
 
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. அந்த போர்க்கப்பல்களை தமிழருக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என இலங்கைக்கு சொல்லியிருக்கிறோம்.
 
அப்படி ஈழத் தமிழருக்கு எதிராக அந்த போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டால் அது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவிப்போம்.
 
சிங்களரும் தமிழரும் இலங்கை அரசியலமைப்புக்கு தமிழர்களும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை.
 
எங்களைப் பொறுத்தவரை ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
 
மத்திய அரசின் இரண்டு இணை அமைச்சர்களும் ஈழத்க் தமிழர் பிரச்சனையில் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/09/10/tamilnadu-war-ships-sri-lanka-not-against-eelam-tamils-183095.html

 

ஒரு வாசகரின் நச் கமெண்ட்:

 

sundar moothy

 

ஒ ஹோ ஹொஹ்... நீங்க அப்படியே சொல்லிட்டாலும்.. சொன்னது அவரு காதுல விழுந்துட்டாலும் , அதே போல அவரு பேசிட்டாலும்.... டேய் கருவாயா.... அவருதான் யார் பேசினாலும் கேட்க்காதமாதிரி காதை இறுக்கி தலப்பா கட்டிகிட்டாரே அவருக்கு எப்படி கேக்கும், நம் தமிழர்களின் கதறல்.... அதுசரி அது என்ன ஈழ தமிழர்களுக்கு பாதிப்பு வருமெனில் அவர்கிட்ட சொல்வேன்!!!!! மூதேவி கருமுண்டம் ஈழதமிழர்க்கு மட்டும் இல்ல, இங்குள்ள தமிழர்க்கும் தான் பாதிப்புன்னு உனக்கு தோணலையா??



 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மூதேவி கருமுண்டம் ஈழதமிழர்க்கு மட்டும் இல்ல, இங்குள்ள தமிழர்க்கும் தான் பாதிப்புன்னு உனக்கு தோணலையா??

 

:) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.