Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவன் கோவில் விருந்தில் சிக்கன் பிரியாணி! - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chicken-15913-150.jpg

உளுந்தூர்பேட்டை அருகே சிவன் கோவிலில் இன்று காலை நடைபெற்ற திருமண விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து சாமி கும்பிடாமல் திரும்பி சென்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை கிராமத்தில் சொர்ணகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோவில் பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இன்று காலை நெய்வணை கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (29) என்பவருக்கும், காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கமலர் (25) என்பவருக்கும் சொர்ண கடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு கோவில் கருங்கல் மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவன் கோவிலில் இறைச்சி விருந்து அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சாமி தரிசனம் செய்யாமல் கோவிலில் இருந்து வெளியேறி சென்றனர். மேலும் கோவிலில் இன்று பல திருமணங்கள் நடைபெற்றதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களும் சிக்கன் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டதை பார்த்து முகம் சுளித்துக் கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.seithy.com/breifNews.php?newsID=92961&category=IndianNews&language=tamil

கலி காலம்..

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகர்களுக்கு, கோவில் மண்டபங்களில்... நிகழ்ச்சி வைக்க இடம் கொடுக்கக் கூடாது என்று, சென்ற கிழமை இந்து அறநிலைத்துறை அறிவித்தது சரிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகர்களுக்கு, கோவில் மண்டபங்களில் இடம் கொடுக்கக்கூடாது. 

ஆனால் அந்தக் கோவில்களுக்குள் தமிழனை அழைத்துக் கொண்டு போய் விட நாத்திகன்தான் வரவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அந்தக் கோவில்களுக்குள் தமிழனை அழைத்துக் கொண்டு போய் விட நாத்திகன்தான் வரவேண்டும்

ஏன் அப்படி சொல்லுகின்றீர்கள்   :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
அட, இங்க லண்டனில ஈலிங் அம்மன் கோவிலில. ஒரு கலியாணம் சில வருடங்களுக்கு முன்னர்...
 
கோவிலுக்கு அரச்சனை செய்வம் எண்டு போனால், ஐயா மந்திரம் சொல்ல, அங்கால, குத்துப்பாட்டு  நடக்குது.
 
பொறுத்துப் பார்த்த கோவில் நிருவாகி, போய், சொல்லிப் பார்த்தார்.
 
அவர்களோ, காசு வான்கிடீங்க தானே, கமுன்னு கிடங்க, ரகத்தில் கதை. மேலும் வேண்டும் என்றே, சத்தத்தினைக் கூட்ட, பிரச்சனை பெரிதாகி, கரண்டை நிறுத்த, போலீசைக்  கூப்பிடுவோம் என்ற நிலையில் கலியாணப் பாட்டி.
 
பிறகு பெரிசு ஒண்டு போய், மாப்பிளை, பொம்பிளையிடம். அம்மனை கோவிக்க வைக்காதையுங்கோ, இது உங்கள் வாழ்க்கை. தண்ணி போட்டு வந்து சிலர் செய்யும் கூத்தினால், உங்களுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல, மாப்பிளை, பொம்பிளை கூட்டாக வெகுண்டு, தமது தரப்பில் குழப்பியவர்களை அடக்க, எல்லாம் அடங்கியது.
 
இப்போது கோவில்கள் எல்லாம், ஒப்பந்தம் எழுதி வாங்கி தான் இடம் கொடுக்கின்றனர்.
 
லண்டனில் நடந்த இதற்கும், அங்கே நடந்த அதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லையே.  

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட, இங்க லண்டனில ஈலிங் அம்மன் கோவிலில. ஒரு கலியாணம் சில வருடங்களுக்கு முன்னர்...
 
கோவிலுக்கு அரச்சனை செய்வம் எண்டு போனால், ஐயா மந்திரம் சொல்ல, அங்கால, குத்துப்பாட்டு  நடக்குது.
 
பொறுத்துப் பார்த்த கோவில் நிருவாகி, போய், சொல்லிப் பார்த்தார்.
 
அவர்களோ, காசு வான்கிடீங்க தானே, கமுன்னு கிடங்க, ரகத்தில் கதை. மேலும் வேண்டும் என்றே, சத்தத்தினைக் கூட்ட, பிரச்சனை பெரிதாகி, கரண்டை நிறுத்த, போலீசைக்  கூப்பிடுவோம் என்ற நிலையில் கலியாணப் பாட்டி.
 
பிறகு பெரிசு ஒண்டு போய், மாப்பிளை, பொம்பிளையிடம். அம்மனை கோவிக்க வைக்காதையுங்கோ, இது உங்கள் வாழ்க்கை. தண்ணி போட்டு வந்து சிலர் செய்யும் கூத்தினால், உங்களுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல, மாப்பிளை, பொம்பிளை கூட்டாக வெகுண்டு, தமது தரப்பில் குழப்பியவர்களை அடக்க, எல்லாம் அடங்கியது.
 
இப்போது கோவில்கள் எல்லாம், ஒப்பந்தம் எழுதி வாங்கி தான் இடம் கொடுக்கின்றனர்.
 
லண்டனில் நடந்த இதற்கும், அங்கே நடந்த அதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெறியவில்லையே.  

ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கின்றார்கள் என்று புரியவில்லை ...... இவர்களின் நோக்கம்தான் என்ன ?  :rolleyes:

வணக்கம்!

இதுல தப்பு எதுவும் இருக்கிற மாதிரி தெறியால. பண்டைய தமிழ் மரபு படி சாமிக்கே படைக்கலாம். திருமுருகாற்றுபடையில முருகனுக்கு சேவக் கோழி அருத்து எப்படி படைக்க வேண்டும் என்று இருப்பட்தாக கேள்விப்பட்டு இருக்கின்றேன். தமிழ் நாட்ல

சில முருகன் கோவில்கள்கல் இப்படி படைக்கப்பட்டதும் எனக்கு தெறியும். அங்கேல்லாம் வினாயகர் சிலை வைத்து சேவல் படைக்கின்ற மறபை உடைத்திருஇக்கின்றானர்.

முருகனுக்கே இப்படினா , பிள்ளைக் கறி கேட்ட சிவனுக்கு நீங்க ஆடு வெட்டி பிரியானி போடுவதிள் என்ன தவறு?

Edited by sathyaonnet

வணக்கம்!

இதுல தப்பு எதுவும் இருக்கிற மாதிரி தெறியால. பண்டைய தமிழ் மரபு படி சாமிக்கே படைக்கலாம். திருமுருகாற்றுபடையில முருகனுக்கு சேவக் கோழி அருத்து எப்படி படைக்க வேண்டும் என்று இருப்பட்தாக கேள்விப்பட்டு இருக்கின்றேன். தமிழ் நாட்ல

சில முருகன் கோவில்கள்கல் இப்படி படைக்கப்பட்டதும் எனக்கு தெறியும். அங்கேல்லாம் வினாயகர் சிலை வைத்து சேவல் படைக்கின்ற மறபை உடைத்திருஇக்கின்றானர்.

முருகனுக்கே இப்படினா , பிள்ளைக் கறி கேட்ட சிவனுக்கு நீங்க ஆடு வெட்டி பிரியானி போடுவத

தமிழரின் தொன்மையான சமயமான சைவத்திலே கடவுளே இயற்கைச் சக்திகள்தான். அந்த சக்திகளுக்கு வேள்வி என்று பறையடித்து உயிர்களை பலியிட்டு வணங்கினார்கள்.

ஆனால் தற்போதுள்ள சைவத்தில் புலால் உண்பதோ பலியிடுவதோ தவறு.

ஆலயங்கள் எந்த நெறிமுறைகளின்படி ஒழுகுகின்றன என அறிந்து.. எமக்கு அவைகளை உபயோகிக்க விருப்பமாயின் அவற்றின் ஆச்சாரங்களுக்கு உட்படுவதுதான் நியதி.. எமக்கு விருப்பமில்லாவிடின் எமக்கு அனுகூலமான இடத்தில் எமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே முறை.

சமையலறைக்குள் மலசலம் கழிக்கலாம் என்றாலும் கழிப்பவனுக்கு இந்த சமூகத்தில் என்ன நிலையோ.. அதைப் போலவே இதுவும் என்பது எனது கருத்து.

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

தவறு என்று கருதுகின்றேன், சோழியன்!

எமது பூர்வீக மதம், இயற்கையோடு சம்பந்தப்பட்டது என்பது உண்மை தான்!

ஆனால், பலியிடுவது என்பது, சைவத்துடன் தொடர்பு பட்டிருக்கவில்லை! மாமிசம் உண்ணுதல், இருந்திருக்கின்றது! ராஜ ராஜ சோழனின் இரவு உணவில், எப்போதும் ஆட்டுத் தொடை ஒரு கட்டாயம் இருக்குமாம்! பின்பு 'பிராமணீயம்' தமிழரின், போர்வலுவை அகற்றும் நோக்கமாக, மாமிசத்தை விலக்கி வைத்திருக்க வேண்டும்!

ஆயினும் ஓம குண்டத்தில், விலங்குகளை இடுதல், பலி கொடுத்தல் என்பன, வட இந்தியாவில் இருந்து தான் சைவத்தினுள் ஊடுருவியிருக்க வேண்டும்!

நாங்கள் வணங்கும் பிள்ளையாரே, ஒரு தெய்வமில்லை! ஒரு அரண்மனை வாசலில் அழகுக்கு வைக்கப் பட்ட சிலை! அதை 'வடக்கை வென்ற' மன்னனொருவன், தனது வெற்றிச் சின்னமாகத் தூக்கிக்கொண்டு வந்த வெறும் சில என்று சொன்னால், நம்பவா போறீங்கள்? :D

இந்தச் செயலை எதிர்த்துத் தான், புத்தர் 'புத்தமதத்தை' உருவாக்க வேண்டியிருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

அந்தத் காலத்து படிபறிவில்லா காடு வாழ் வேடர் செயலை, இந்தக் காலத்து அறிவிலிகளுடன் எவ்வாறு ஒப்பிடமுடியும் கோமகனார்?

வேடர் கண்ணப்பர் கதை, வீம்புக்காக அல்ல  ஒரு விடயத்தினை புரியவைக்கவே சொல்லப் பட்டது.

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

கோமகனாரா! கண்ணப்ப நாயனார் மாமிசத்தைப் படைச்சிட்டு கடவுளுக்கு கண்ணிலை இருந்து ரத்தம் வரேக்கை தன்ரை கணணையும் கொடுத்ததாகதான் புராணம் சொல்லுது. மாமிசத்துக் கண்ணப்ப நாயனாரை உதாரணத்துக்கு இழுக்கிறவை அவர் செய்த இரண்டாவது வேலையையும் செய்ய தயாரோ??? :D

தவறு என்று கருதுகின்றேன், சோழியன்!

எமது பூர்வீக மதம், இயற்கையோடு சம்பந்தப்பட்டது என்பது உண்மை தான்!

ஆனால், பலியிடுவது என்பது, சைவத்துடன் தொடர்பு பட்டிருக்கவில்லை! மாமிசம் உண்ணுதல், இருந்திருக்கின்றது! ராஜ ராஜ சோழனின் இரவு உணவில், எப்போதும் ஆட்டுத் தொடை ஒரு கட்டாயம் இருக்குமாம்! பின்பு 'பிராமணீயம்' தமிழரின், போர்வலுவை அகற்றும் நோக்கமாக, மாமிசத்தை விலக்கி வைத்திருக்க வேண்டும்!

ஆயினும் ஓம குண்டத்தில், விலங்குகளை இடுதல், பலி கொடுத்தல் என்பன, வட இந்தியாவில் இருந்து தான் சைவத்தினுள் ஊடுருவியிருக்க வேண்டும்!

நாங்கள் வணங்கும் பிள்ளையாரே, ஒரு தெய்வமில்லை! ஒரு அரண்மனை வாசலில் அழகுக்கு வைக்கப் பட்ட சிலை! அதை 'வடக்கை வென்ற' மன்னனொருவன், தனது வெற்றிச் சின்னமாகத் தூக்கிக்கொண்டு வந்த வெறும் சில என்று சொன்னால், நம்பவா போறீங்கள்? :D

இந்தச் செயலை எதிர்த்துத் தான், புத்தர் 'புத்தமதத்தை' உருவாக்க வேண்டியிருந்தது

காளி வைரவர் கோயில்கள் உருவமில்லாத வீடுகளில் வழிபடும் கடவுள்கள்.. இக் கோயில்களின் பூசகர்கள் சைவக் குருக்கள் அல்லது பண்டாரக் குருக்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் பிராமணர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் பூசகர்களாக உள்ள கோயில்களில் வேள்வி இடம்பெறும். பறைமேளம் ஒலிப்பார்கள். இக் கோயில்களில் நாதசுரம் தவில் போன்றன ஒலிப்பதை நான் பார்த்ததில்லை. இங்கு இடம்பெறும் வேள்விகளில் பறவைகள் விலங்குகள் என்பன பலியிடப்படும். மீன் முட்டை அவித்து படையலிடுவார்கள். சர்க்கரையற்ற புக்கையும் நீர்ச் சோறும் பொங்குவார்கள்.

இந்த சைவ அல்லது பண்டாரக் குருக்கள்மார்தான் தமிழர்களது தகனக் கிரியைகளையும் செய்வார்கள்.. (சுண்ணம் இடிப்பது போன்றன.) காடாத்து முடிந்து வீடு வாசல் கழுவி தோய்ந்து தோய்த்து துடக்கு கழித்த பின்னர்தான் பிராமணக் குருக்கள்மார் வீட்டுக்கு ஏனைய கிரியைகளுக்காக வருவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பிராமணக் குருக்கள்மாரே பிணத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து தகனக் கிரியைகள் செய்கிறார்கள்.. இது பணம் படுத்தும் பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவேளை சிவன் குடும்பத்தோடு .............
பூலோகத்திற்கு விஜயம் செய்தால் ???
 
அவர்களுக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசிக்கிறேன்.
கோவிலில் படைக்காவிட்டாலும் .............
நல்ல சிக்கன் மட்டன் என்று நாங்கள் போட்டு பிடித்துவிட்டு அவருக்கு சும்மா காய் கறியை அவிச்சு வைத்தால் கோவிக்க மாட்டாரா?
 
இன்னொரு உயிரை உணவுக்காக கொல்வது தவிர்க்க பட  வேண்டும். என்பதில் மனிதர்கள் இடையே நல்ல சிந்தனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்து சைவர்கள் இடையே மேலோங்கி இருக்கிறது.
 
ஆனால் இந்த அகிலத்தை படைத்த இறைவனிடம் இருக்கிறதா?? புலியும் சிங்கமும் மரசெடி கொடிகளை திரும்பியும் பாரா. பெரிய மீன்கள் உணவுக்காக சிசிய மீன்களை உண்பதை தவிர வேறு வழியில்லை. கடலுக்குள் சில நிலத்தடி தாவரம் இருப்பினும் திமிங்கலம்  உண்ண என்று ஏதும் இல்லை.
இதை படைத்தவர் ஏன் இதை பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை ??? 

கண்ணப்பர்  இறைச்சி  படைத்தது தான்  முத்தி  அடைந்தார் அதுவும் தான் சாப்பிட்டு பாத்து ...........     விடுங்க   இது கண்ணப்பர்  காலம் போல இருக்கு

ஒருவேளை சிவன் குடும்பத்தோடு .............
பூலோகத்திற்கு விஜயம் செய்தால் ???
 
அவர்களுக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசிக்கிறேன்.
கோவிலில் படைக்காவிட்டாலும் .............
நல்ல சிக்கன் மட்டன் என்று நாங்கள் போட்டு பிடித்துவிட்டு அவருக்கு சும்மா காய் கறியை அவிச்சு வைத்தால் கோவிக்க மாட்டாரா?
 
இன்னொரு உயிரை உணவுக்காக கொல்வது தவிர்க்க பட  வேண்டும். என்பதில் மனிதர்கள் இடையே நல்ல சிந்தனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்து சைவர்கள் இடையே மேலோங்கி இருக்கிறது.
 
ஆனால் இந்த அகிலத்தை படைத்த இறைவனிடம் இருக்கிறதா?? புலியும் சிங்கமும் மரசெடி கொடிகளை திரும்பியும் பாரா. பெரிய மீன்கள் உணவுக்காக சிசிய மீன்களை உண்பதை தவிர வேறு வழியில்லை. கடலுக்குள் சில நிலத்தடி தாவரம் இருப்பினும் திமிங்கலம்  உண்ண என்று ஏதும் இல்லை.
இதை படைத்தவர் ஏன் இதை பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை ??? 

சகலதையும் இறைவன் மனிதருக்காகவே படைத்தார் என விவிலியம் கூறுகிறது.

கோமகனாரா! கண்ணப்ப நாயனார் மாமிசத்தைப் படைச்சிட்டு கடவுளுக்கு கண்ணிலை இருந்து ரத்தம் வரேக்கை தன்ரை கணணையும் கொடுத்ததாகதான் புராணம் சொல்லுது. மாமிசத்துக் கண்ணப்ப நாயனாரை உதாரணத்துக்கு இழுக்கிறவை அவர் செய்த இரண்டாவது வேலையையும் செய்ய தயாரோ??? :D

நாதமுனி எழுதிய இறுதிப் பதில்தான் மயூரனுக்கு . கண்ணப்பர் வேடரோ படிபறிவில்லா தவரோ இல்லைப் பிரச்னை , இறைவனுக்கு பரிபூரண அன்புடன் படைக்கப்படும் எதுவுமே  இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் :) :) .

நாதமுனி எழுதிய இறுதிப் பதில்தான் மயூரனுக்கு . கண்ணப்பர் வேடரோ படிபறிவில்லா தவரோ இல்லைப் பிரச்னை , இறைவனுக்கு பரிபூரண அன்புடன் படைக்கப்படும் எதுவுமே  இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் :) :) .

உண்மை இறைவன் அன்பும் ,நீதியும் ,சாந்தமும் கொண்டவரானால்...... நிச்ச்யம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் ................. :)
 
மீண்டும் வருவேன், 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.