Jump to content

செத்த ஒப்பாரி


Recommended Posts

செத்த ஒப்பாரி

ஒரு பேப்பருக்காக கோமகன்

 

wajb.jpg

 

 

தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் .

 

ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாச்சாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த  இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச்சம் தான் வருகின்றது . ஒப்பாரியைப் பற்றிய இந்தக் கட்டுரையினது நோக்கம் வாசகர் மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே .

 

ஒப்பாரிப் பாடல்களைச்   செத்த  வீட்டிலே படிப்பின் வாசம் அறியாத ஆச்சிகள் தங்களுடைய சோக எண்ணங்களைக் கவிதை வடிவில் பாடுவார்கள் .  இதன்பொழுது அந்தக் குடும்பத்தில் நடந்த நல்ல விடையங்களோ அல்லது கெட்ட விடையங்களோ இந்த ஒப்பாரி மூலம் பூடகமாக வருவது ஓர் சிறப்பான விடையமாகும் . அந்த படிப்பின் வாசம் அறியாப்  பெண்களின் கவி நயத்தையும் சொல் ஆட்சியையும் பார்த்து வியந்து போனவர்கள் பலர் .   ஒப்பாரியை எமது மக்கள் அன்றைய காலங்களில் செத்த வீடுகளில் ஓர்  கிராமியக் கலையாகவே  பயன்படுத்தி வந்தனர் . அன்றைய கால கட்டத்தில் ஒப்பாரிக்கு பெயர் பெற்றவர்களாக வடமராட்சியைச் சேர்ந்தவர்களே இருந்து வந்துள்ளனர்.

 

இந்த ஆச்சிகள் தங்களது உணர்வுகளையும் துயரங்களையும் ஒரு விதமான இசைக் கட்டமைப்புடன் இழுத்துப் பாடி , செத்தவீட்டில் அழாதவர்களையும் அழ வைப்பதில்  திறமை வாய்ந்தவர்கள் .  ஒப்பாரி பாடும் ஆச்சிகள் செத்தவரை மிகவும் உரிமையுடன் " என்ரை மோனை , ராசா ,  ராசாத்தி , ஆத்தை "  என்று அழைத்து மிகவும் உருக்கமாக தங்களின் சோகத்தை வெளிபடுத்துவார்கள் . இந்த ஒப்பாரி அன்றைய கால கட்டத்தில் பரம்பரை பரம்பரையாகவே ஆச்சிகளிடம் கடத்தப்பட்டு வந்தது .

 

நிலவோ நிலவுதவி என்ரை ராசா

எனக்கு

நிலவுபட்டால் ஆருதவி ........

பொழுதோ போழுதுதவி என்ரை ராசா

எனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........

 

இந்த ஒப்பாரியில் கவித்திறனும் சொல்லாட்சியும்  மலைக்க வைக்கின்றன . இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் பின்பு நாட்டுக் கூத்திலும் இடம் பெற்றதாக அறியக் கூடியதாக இருந்தது.

 

எங்களிடையே ஆச்சிகளால்  பாடப்பட்ட ஒப்பாரிப் பாடல்கள் கூடிய அளவு உறவு முறைகளையும் சமூகப் பண்பாடுகளையும் உள்ளடக்கியே  பாடப்பட்டன .

 

கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்

என்ரை நீல நையினார்  நீ

எனக்கொரு

கொள்ளி  வைச்சால் காணுமடா

பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்

என்ரை நீல நையினார்  நீ எனக்குப்

பால் வார்த்தால் காணுமடா .......

 

நான் பெத்தேன் பிலாப் பழத்தை

இப்ப

பிச்சு வைச்சேன் சந்தியிலை .....

பள்ளிக்கூடம் தூரமெண்டு

என்ரை ராசாவை

நான் பக்கத்தே வைச்சிருந்தேன்

தோட்டம் தொலை தூரமெண்டு

என்ரை ராசாவை நான்

தொட்டிலிலை  வைச்சிருந்தேன்

 

தகவல் : சின்னம்மா கரவெட்டி வயது 80

 

இந்த ஒப்பாரிப் பாடலிலே அந்தத் தாயானவள் தனது மகனது நிறத்தையும் தனக்குக் கொள்ளி வைக்கவேண்டிய அவன் தனக்கு முதலே மரணமாகி விட்டானே என்று எம்மிடையே வந்த பாண்பாட்டு முறைகளைத்  தனது ஒப்பாரியிலே சொல்லி அழுகின்றாள் .

 

இன்னுமொரு தாயோ தனது குடும்பத்தையே பொருளாதார ரீதியில்க் கட்டிக் காத்து வந்த மகளைப் பறிகொடுத்த சோகத்தில் பின்வருமாறு பாடுகின்றாள்,

 

என்ரை ஆத்தை

நீ

வாரி வரத் திண்டிருந்தன்

என்ரை வண்ண வண்டி வாடுதணை

என்ரை ஆத்தை

நீ

கோலிவரத் திண்டிருந்தன்

என்ரை கோலவண்டி வாடுதணை

 

தகவல் : செல்லம்மா கரவெட்டி வயது 67

 

பொதுவாகவே இந்த வகையான ஒப்பாரிப் பாடல்களில் என்ரை ஆத்தை என்ற விழிப்பில் சந்தர்பத்தற்கு ஏற்றவாறு என்ரை ராசா , மோனை , அப்பு என்று உரிமையுடன் விழித்து ஆச்சிகள் தங்கள் சோகத்தினை வெளிபடுதுவதைக் காணலாம்.

 

ஒரு ஊரிலே வாழ்ந்த ஒருவர் வேறு ஒரு இடத்திலே கலியாணம் செய்கின்றார் .

அவர்களது குடும்பத்திலே பிரச்சனைகள் வந்து கணவனும் மனைவியும் பிரிகின்றார்கள். இந்தநிலையில் அந்தக் கணவன் ஒருநாள் செத்துவிட்டார் . அந்தச் செத்த வீட்டுக்கு பிடிவாதக்கார மனைவியோ வரவில்லை . அபொழுது அந்தக் கணவனின் குடும்பத்தில் உள்ள சொந்தக்காறப் பெண் இப்படி ஒப்பாரி சொல்லித்  தனது வேதனையை வெளிப் படுத்துகின்றார்,

 

ஊரெல்லாம் பெண்ணிருக்க

என்ரை ராசா நீ

ஊர்விட்டுப் போனாயோ .....

பக்கத்தே பெண்ணிருக்க

என்ரை ராசா நீ

பரதேசம் போனாயே.........

பாழ்படுவாள் வாசலிலே

என்ரை ராசா நீ

பவுணாக் குவிச்சாயோ .............

 

தகவல் மீனாட்சி துன்னாலை வயது 78

 

தமிழர் வாழ்வின் இறுகிய வாழ்வியல் கட்டமைப்புக்குள் தாய் வழி உறவுகளிலேயே கலியாணம் செயிகின்ற பண்பாட்டு முறை அன்றைய காலகட்டங்களிலே இருந்து வந்துள்ளது . மேலே வந்து விழுந்த ஒப்பாரிப் பாடலானது இதையே காட்டி நிற்கின்றது. இதனையொட்டி வழங்குகின்ற பல சொலவடைகளையும் நாம்  காணலாம்  . தங்கள் குடும்பங்ககளிலே ஏற்றபட்ட பிரச்சனைகளையும் , ஒருதலைக் காதல்களால் முறிந்த திருமணபந்தக்களையும்  செத்தவர் மீது ஒப்பாரி மூலம் சொல்லி அழுகின்ற வழமை அந்தக் காலப் பெண்களிடம் இருந்து வந்துள்ளது .

 

தங்கள் குடும்பத்திலே பெண் சகோதரங்களிடையே நீண்டகாலமாக ஏற்றபட்ட பகை உணர்சிகளை ஓர்  பெரியம்மா செத்தபொழுது , ஒரு ஆச்சி இவ்வாறு பாடுகின்றார் ,

 

என்ரை ராசாத்தி

நீ பெத்தவை

சீனத் துவக்கெடுத்து என்னைச்

சிதற வெடிக்க வைக்கினமே ..........

 

என்ரை ராசாத்தி

நீ பெத்தவை

பாரத் துவக்கெடுத்து என்னைப்

பதற வெடி வைக்கினமே .......

 

இன்னுமொரு பாடல் ஒருத்தி தான் தனது குடும்பத்தவரால் புறக்கணிக்கப் படுவதை எண்ணிப் பெருங்குரலேடுத்துப் பாடுகின்றாள் ,

 

படலையிலே ஆமணக்கு

என்ரை ராசாத்தி ........

நீ பெத்தவைக்கு

நான்

பாவக்காய் ஆகினனே .............

 

வேலியிலை ஆமணக்கு

என்ரை ராசாத்தி ..........

நீ பெத்தவைக்கு

வேப்பங்காய் ஆகினனே ...........

 

அன்றைய காலகட்டங்களிலே செத்த வீட்டிலே ஒப்பாரி சொல்லி வாய் விட்டு அழுவது தமிழர் வாழ்வியலில் ஓர் சிறந்த உளவியல்  மருத்துவ முறையாகவே இருந்து வந்துள்ளது . ஏனெனில் உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் வாய் விட்டு அழுதாலே அவர்களது மனப்பாரமும் துயரமும் குறைவடையும் . அனால் இன்றைய காலகட்டத்திலோ வாய் விட்டு அழுவது நாககரீக் குறைச்சல் என்று எம்மவர்கள் எண்ணுகின்றார்கள் .

 

தனது குடும்பத்துடன் ஒரு சொந்தம் கதைக்காமல் இருந்து விட்டுச்  செத்த வீட்டிலே வந்து நாட்டாமை செய்வதைப் பொறுக்க மாட்டாத குடுபதுப் பெண் இவ்வாறு பாடுகின்றாள்,

 

சொருகி வைச்ச எப்பை எல்லாம்

இப்ப

சோறள்ள வந்த தெணை .......... 

பொட்டுடைச்ச கோழி முட்டை

இப்ப

போர்ச் சாவல் ஆச்சுதணை   .............

 

இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம்  குடும்பத்திலே ஏற்பட்ட பிரச்சனைகளைச்  சொல்லி அழுகின்ற பாடல்களாகவும் , இன்னும் சில பல வருடங்களுக்கு முதலே செத்த உறவுகளை நினைத்து வேறு செத்த வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும் காணலாம் ,

 

என்ரை அப்பு

நீ போய் சொல்லணை

நீங்கள் பெத்தவள்

இஞ்சை

சோகத்தாலை  வாடயில்லை

உங்கடை

சோகத்தாலை  வாடுதெண்டு ...........

 

என்ரை அப்பு நீ போய்ச் சொல்லணை

நீங்கள் பெத்தவள்

இஞ்சை காசாலை வாடயில்லை

உங்கடை

கவலையினால் வாடுதெண்டு...........

 

செத்த வீட்டிலே தனது கணவனைப் பறிகொடுத்த மனைவியானவள் தமக்குள் இருக்கும் நெருக்கத்தையும் சில வேளைகளில் ஒப்பாரியாக பாடுவாள் . அப்போது அதன் சோகமானது மற்றவர்களையும் கலங்க வைக்கும் ,

 

முத்துப் பதித்த முகம்

என்ரை ராசா

நீ

முழு நிலவாய் நின்ற முகம்

நினைப்பேன் திடுக்கிடுவேன்......

 

என்ரை ராசா

உன்ரை நினைவு வந்த நேரமெல்லாம்

போகக் கால் ஏவினதோ என்ரை ராசா

இந்தப் பொல்லாதவள்  தன்னை விட்டு

நாகரீகம் பேசுகினம் ...........

 

மூக்குப் படைச்சவையள்

இனி

முளிவியளம்   பேசுவினம்

மூளி அலங்காரி இவள்

மூதேசி  என்பினமே ................

 

அன்றைய காலகட்டங்களில் மதமாற்றம் என்பது  எமது சமூகதில் நடைபெற்றது . அதில் பல கலப்புக் கலியாணங்களும் நடைபெற்றது இருக்கின்றன . இறுகிய   கட்டமைப்பைக் கொண்ட எமது சமூகமோ ஆரம்பத்தில் இந்தக்   கலப்புக் கலியாணங்களுக்கு முரண்டு பிடித்தனர் . ஒரு செத்த வீட்டில் ஒரு ஆண்  கிறீஸ்தவ பெண்ணைக் கலியாணம் செய்திருந்தார் ,  அவள்  ஒரு நாள் செத்து  போய் விட்டாள் . பொதுவாக  கிறீஸ்தவர்கள் செத்தால் அழுவது குறைவானதே . அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவருமே அழவில்லை . அபொழுது அந்தப் ஆணின் உறவுப் பெண் ஒருவர் பின்வருமாறு தனது சோகத்தை ஒப்பாரியாக வெளிப் படுத்துகின்றார்  ,

 

என்ரை ஆத்தை , நீ வேத சமயமென

இவை

விரும்பி அழமாட்டினமாம் ...

நாங்கள் சைவ சமைய மெணை

உன்னோடை சருவி அழ மாட்டினமாமம்

ஊர் தேசம் விட்டாய்

என்ரை ராசாத்தி

உறவுகளைதான் மறந்தாய் ...

 

மேபிள் துரைச்சியென்று

இஞ்சை

மேட்டிமைகள்  பேசுகினம்

ஊரும் அழவில்லையென என்ரை ராசாத்தி

உன்றை உறவும் அழவில்லையெணை

 

ஏறதாள  1980 கள் வரை இந்த ஒப்பாரிப் பாடல்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன . அதன்  பின்னர் தொடர்ச்சியாக வந்த விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளைப்  பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி,

 

நீ போருக்கு போனடத்தை

போராடி மாண்டாய் ஐயா

மகனே

பாரத்துவக்கெடுத்தோ

உங்களுக்கு

பயந்தவெடி வச்சானோ........

 

உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ

உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்

மகனார்

உன்ன சந்தியல கண்டடத்தை

உன்னைப் பெத்த கறுமி

தலைவெடித்துப் போறனையா.......

மகனார் நீகப்பலில வாராயெண்டோ

நாங்க கடலருகில் காத்திருந்தோம்

 

மகனே நீ

இருந்த இடத்தைப் பார்தாலும்

இரு தணலாய் மூளுதையா

நீ படுத்த இடத்தை பார்தாலும்

பயம் பயமாய் தோன்றுதடா.......

 

மகனே

உன்னைப் பெற்ற கறுமி நான்

இங்க உப்பலந்த நாழியைப்போல்

நீ இல்லாம

நாள்தோறும் உக்கிறனே.............

 

இவ்வாறு எமது வாழ்விலும் பாரம்பரியத்திலும் ஊறிவிடிருந்த இந்த ஒப்பாரி , இன்று அழிந்து போகும் நிலையில் உள்ளது . பொதுவாகவே சோகமான இசை வடிவங்களை நாங்கள் விரும்புவது இல்லை .  இந்த ஒப்பாரி அழிவதற்கு அதுவுங்காரணமாக இருக்கலாம் . அத்துடன் நாகரீகம் என்ற போர்வையில் எமது வாழ்கையை "கூட்டுப்புழு" வாழ்க்கை முறைக்கு மாற்றிக் கொண்டதும் ஒரு காரணமாக இருக்கிறது . கால ஓட்டத்தில் நாம் பலதைத்   தொலைத்து விட்டோம் , அதில் இந்த ஒப்பாரியும் ஒன்று .  இந்த ஒப்பாரி சொல்லும் வழக்கை  யார் முன்னெடுத்துச் செல்லப் போகின்றோம் ??????????????

 

உச்சாந்துணை  :

 

01. அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52

 

கோமகன்

20/09/2013

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரடித்து பிலாக்கணம் வைப்பதும், மூக்கைச் சீறி எறிந்துவிட்டு அப்பால் விடுப்புக் கதைக்க நகர்வதும் பழங்காலத்துக் கிழவிகளுக்குத்தான் சரி. இப்போதைய நவநாகரிக உலத்தில இருக்கமுடியாதுதானே!

ஒப்பாரி அழிவதும் ஒடுக்குமுறையாளர்களின் சதி என்று ஒப்பாரி வைக்கலாமோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை மிக நன்றாயிருக்கிறது.  அந்தக் காலத்தில் இழவு வீடுகளில் கூலிக்கு மாரடிப்போர் என்று சிலர் வந்து இத்தகைய ஒப்பாரிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.  ஒப்பாரி பாடப் பயிற்றப்பட்ட அவர்கள் ஒரு குறித்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.  அவர்களின் சமூக அந்தஸ்துக் குறைவாக இருந்ததாலும் போதிய ஊதியம் அதில் கிடைக்காததாலும் பிற்கால சந்ததி தமது குடும்பங்களிலிருந்த ஒப்பாரி பாடும் முதியவர்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.  அதனால் ஒப்பாரிக் கலையும் இசைவடிவங்களும் அழிந்து போய்விட்டன.

Link to comment
Share on other sites

இந்தப் ஒப்பாரி பாட்டு நீங்கள் எழுதிய நெருடிய நெஞ்சியின் கதாநாயகர்கள் ஈபிடிபி க்கு சனம் இந்த தேர்தலில் கட்டிய பாடை வீடு பற்றித்தானே. இனி நெருடிய, உங்களை ஊரில் வருடிய, தடவிய ஈபி க்கு சேர்த்து பாடுங்கள் உங்கள் நெருஞ்சி ராகம் ஒப்பாரியை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ப சிலவற்றை மறக்கத்தான் வேண்டியுள்ளது கோமகன். ஊரில் எல்லாம் இன்னும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுகின்றனரா கோ ???
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் செத்தால் அழுகிறதிற்கு ஆட்களே இல்லை :)  <_< இதில வேற ஒப்பாரியா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ப சிலவற்றை மறக்கத்தான் வேண்டியுள்ளது கோமகன். ஊரில் எல்லாம் இன்னும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுகின்றனரா கோ ???

 

 
கறுப்புகோட்டுசூட்டோடை கறுப்புக்கண்ணாடியும் போட்டுக்கொண்டு அமசடக்காய் இருந்துட்டு போறதுதான் லேட்டஸ் பாஷன்.சுத்தி நிண்டு ஒப்பாரி வைக்கிறது....கட்டிப்புடிச்சு ஐயோ எண்டு அழுறதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்....இப்பிடித்தான் காலம் போகுது :(
 
வாய்விட்டு சிரிச்சால்,மனம்விட்டு அழுதால்,மனம்விட்டு மற்ற ஆக்களுடன் கதைச்சால் சகல நோய்களும் , மன அழுத்தங்களும் மறைந்து போகும் எண்டு ஊரிலை கதைப்பினம்.
அதிலையும் ஒப்பாரி வைச்சு கத்தியழுதால் மனப்பாரம் குறையுமாம். வருத்தங்களும் குறையுமாம்.
 
நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா???? :icon_idea:
நன்றி கோமகன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
கறுப்புகோட்டுசூட்டோடை கறுப்புக்கண்ணாடியும் போட்டுக்கொண்டு அமசடக்காய் இருந்துட்டு போறதுதான் லேட்டஸ் பாஷன்.சுத்தி நிண்டு ஒப்பாரி வைக்கிறது....கட்டிப்புடிச்சு ஐயோ எண்டு அழுறதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்....இப்பிடித்தான் காலம் போகுது :(
 
வாய்விட்டு சிரிச்சால்,மனம்விட்டு அழுதால்,மனம்விட்டு மற்ற ஆக்களுடன் கதைச்சால் சகல நோய்களும் , மன அழுத்தங்களும் மறைந்து போகும் எண்டு ஊரிலை கதைப்பினம்.
அதிலையும் ஒப்பாரி வைச்சு கத்தியழுதால் மனப்பாரம் குறையுமாம். வருத்தங்களும் குறையுமாம்.
 
நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா???? :icon_idea:
நன்றி கோமகன்.

 

ஒப்பாரி பெண்-1:                                   பாவக்காய்.........பாவக்காய்.......

 

ஒப்பாரி பெண்-2:                                   எங்கக்கா.......எங்கக்கா........

 

ஒப்பாரி பெண்-1:                                   பந்தலில........பந்தலில......

 

ஒப்பாரி பெண்-2:                                   போகேக்கை.... போகேக்கை......

 

வீட்டுக்காரி:                                           அது.. விதைக்கேல்லோ...விட்டிருக்கு....! :icon_idea:

Link to comment
Share on other sites

மாரடித்து பிலாக்கணம் வைப்பதும், மூக்கைச் சீறி எறிந்துவிட்டு அப்பால் விடுப்புக் கதைக்க நகர்வதும் பழங்காலத்துக் கிழவிகளுக்குத்தான் சரி. இப்போதைய நவநாகரிக உலத்தில இருக்கமுடியாதுதானே!

ஒப்பாரி அழிவதும் ஒடுக்குமுறையாளர்களின் சதி என்று ஒப்பாரி வைக்கலாமோ!

 

அப்போ இன்றைய காலத்தில் செத்த வீட்டில் விடுப்பு கதைப்பதில்லை என்று சொல்கின்றீர்களா கிருபன்ஜி ?? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இன்றைய காலத்தில் செத்த வீட்டில் விடுப்பு கதைப்பதில்லை என்று சொல்கின்றீர்களா கிருபன்ஜி ?? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

இப்பவெல்லாம் விடுப்புக் கதைப்பதற்கு விடயங்கள் குறைவு. ஏனென்றால் விடுப்பான விடயங்கள் எல்லாம் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டது.. ஆனால் விடுப்புக் கதைப்பதற்கு இருக்கும் ஒரு கூட்டம் சாதாரண விடயங்களையெ விடுப்பாகத்தான் கதைக்கும்! <_<

Link to comment
Share on other sites

கோ...! ஒப்பாரிப் பாடல்கள் என்பதும் தமிழரின் பாரம்பரியத்துக்குள்  அடங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்றதே.

காலங்களின் மாற்றத்தோடு நாட்டுப்புறப் பாடல்கள் போன்று  மரண வீடுகளில் ஒப்பாரி வைப்பதும் அருகிக்கொண்டே வருகின்றது.

இப்படியான ஒப்பாரிப் பாடல்களை ஊரில் பல மரணவீடுகளில் கேட்டிருக்கின்றேன். ஆனால் அதன் அர்த்தத்தினை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு கூர்ந்து கவனித்ததில்லை. உங்கள் கட்டுரையில் சில வரிகளை காணும்போது அவற்றில் எவ்வளவு அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை இப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடிகின்றது.

 

ஊரில் சில இடங்களில் இன்னும் இந்த ஒப்பாரி வைப்புகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் புலம்பெயர் தேசங்களில் முற்றுமுழுதாக இல்லை என்பதுதான் நிலை. இங்குள்ள சூழ்நிலைகளுக்கு அது பொருத்தமானது இல்லை என்பதுகூட அதற்கொரு காரணம்.

 

மொத்தத்தில் அருகிவரும் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றாக இந்த ஒப்பாரி வைப்புக்களும் அடங்குகின்றது.

 

ஆக்கபூர்வமான கட்டுரையொன்றைத் தந்தமைக்கு மிக்க நன்றி கோ! பாராட்டுக்கள்! :)

 

 

 

Link to comment
Share on other sites

கட்டுரை மிக நன்றாயிருக்கிறது.  அந்தக் காலத்தில் இழவு வீடுகளில் கூலிக்கு மாரடிப்போர் என்று சிலர் வந்து இத்தகைய ஒப்பாரிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.  ஒப்பாரி பாடப் பயிற்றப்பட்ட அவர்கள் ஒரு குறித்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.  அவர்களின் சமூக அந்தஸ்துக் குறைவாக இருந்ததாலும் போதிய ஊதியம் அதில் கிடைக்காததாலும் பிற்கால சந்ததி தமது குடும்பங்களிலிருந்த ஒப்பாரி பாடும் முதியவர்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.  அதனால் ஒப்பாரிக் கலையும் இசைவடிவங்களும் அழிந்து போய்விட்டன.

 

இது விவாதத்திற்குரிய பொருள் தான் ஆனால் இதுமட்டும் காரணம் இல்லை என்பது எனது கருத்து ; எம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்ற பழக்கத்தால் பல கலைகளை இனி நாம் நூதன சாலையில் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் ;  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கரு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒப்பாரி,பறை என்பது சாதீயத்தின் அடிப்படையாக அமைந்ததால் அவை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஒரு இனத்தின் முரண்பாடு,பகைகளுக்கு காரணமாய் இருப்பவை எவையாயினும்  பாரம்பரியம் என்ற போர்வையில் தொடர்வது அனுமதிக்க முடியாது. அந்த வகையில் சமுதாய முன்னேற்றத்துக்காக சில அழிவடைந்தாலும் தவறில்லை. எனிவே உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள் கோமகன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கால கட்டத்தில் ஊரில் உள்ள மக்களால் தங்கள் அழுகைகளை,விம்மல்களை வீட்டு சுவற்றுக்கு கேட்க கூடியதாக அழுகிறார்களோ  தெரியாது....அப்படி இருக்கையில் பழம் தமிழர் பண்பாடு என்ற போர்வையில் வேண்டாதவற்றை காலம்,காலமாக கொண்டு காவவேணும்  என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறன்..கற்கை ரீதியாக அதை பரப்ப முயற்சிக்கிறார்களேயன்றி பயன் இல்லை என்றே சொல்லலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பு என்பது தாங்கமுடியாத ஒரு இழப்பு
அப்போதுகூட ஒரு சிலர் தங்கள் சோகத்தை அழுகை மூலம் தீர்க்க முடியாமல் தவிப்பார்கள்.

அது அவர்களின்உடல் நிலையைப் பாதிக்கும். அப்படியான பாதிப்புக்கள் வராமல் இருப்பதற்குத்தான்

ஒப்பாரி வைத்து  அழும் முறை காலம் காலமாக எம்மவரிடையே இருந்து வருகின்றது.
பல இறுகிய  நெஞ்சம் படைத்தவர்களும் ஒப்பாரியைக் கேட்டு வாய்விட்டுக் கதறி அழுவார்கள் 
 

நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

இந்தப் ஒப்பாரி பாட்டு நீங்கள் எழுதிய நெருடிய நெஞ்சியின் கதாநாயகர்கள் ஈபிடிபி க்கு சனம் இந்த தேர்தலில் கட்டிய பாடை வீடு பற்றித்தானே. இனி நெருடிய, உங்களை ஊரில் வருடிய, தடவிய ஈபி க்கு சேர்த்து பாடுங்கள் உங்கள் நெருஞ்சி ராகம் ஒப்பாரியை.

 

குளோனிங்குகளுக்கு நான்  பொதுவாகப் பதில் தருவதில்லை . என்னுடன் கருதாடுவதானால் உண்மையான பெயருடன் வாருங்கள் . நன்றி

 

Link to comment
Share on other sites

காலத்துக்கேற்ப சிலவற்றை மறக்கத்தான் வேண்டியுள்ளது கோமகன். ஊரில் எல்லாம் இன்னும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுகின்றனரா கோ ???

 

 

காலத்துக்கு ஒவ்வாதது என்று எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா சுமே :unsure: :unsure: ??

 

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.