Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் 

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?
 
2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?
 
3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?
 
4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?
 
5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?
 
6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை?
 
7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?
 
8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?
 
9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?
 
10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
 
11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?
 
12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?
 
13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?
 
14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?
 
15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள்.இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?
 
16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?
 
17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?
 
18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?
 
19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?
 
20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?
 
21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?
 
22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?
 
23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?
 
24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?
 
25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?
 
26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து
ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?
 
28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?
 
29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?
 
30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?

பரீட்சையில் பங்கு கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்   :D 
 
  • Replies 62
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் தோற்றுபவர்கள் ஒரே முறையில் விடைகளை திருத்தாமல்  அழிக்காமல் வரும்  திங்கட்கிழமை 30 ஆம் திகதிக்குள் விடைகளை எழுதவேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களின் விடைத்தாட்கள்  செல்லுபடியாகாது. :D 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணம் மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கபட்டுள்ளதை நான் அறிகிறேன்.

அவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியனவாகும்

தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல்லதிகாரம் . தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்

இவை மூன்றுமே முறையே ஒன்பது துணை அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

'போளி' சாப்பிட்டு எனக்கு கனநாளா வயிற்று வலி வாத்தியார்.

அதனால் மருத்துவ விடுப்பில் நான் உள்ளேன். :(

கும்புடுறேனுங்கோ வாத்தியார் ஐயா ! உங்கடை வகுப்புக்கு என்னாலை வரேலாமல் போச்சுது  குறை  விளங்காதையுங்கோ . எனக்கும் உங்கடை வகுப்புகளுக்கு வரவேணுமெண்டு செரியான ஆசைதான் கண்டியளோ . ஆனால் தோட்டத்திலை நாத்து நடுற சோலியள்  கூட இருந்ததாலை ஏலாமல் போச்சுது பாருங்கோ . எண்டாலும் நீங்கள் தொண்டைத் தண்ணி வத்த உங்கடை பிள்ளையளுக்கு சொல்லிக் குடுத்த நேரம் , என்ரை காதிலை எத்துப் பட்டதை வைச்சு உங்கடை கேள்வியளுக்கு மறுமொழி தாறன் ஐயா . தோட்டக்காறன் எண்டு பாக்காமல்  என்ரை அறிவையும் ஒருக்கால் பாருங்கோ வாத்தியார் ஐயா .

 ******************************************************

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?

எழுத்து ,சொல் , பொருள் , யாப்பு  ,அணி.

2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?

சார்பெழுத்து எனகூறுவர்.

3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?

சுட்டெழுத்துக்கள் என அழைக்கலாம்.

4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?

அகச்சுட்டு என்று சொல்லலாம்.

5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?

இதை வினாவெழுத்துக்கள் என்று சொல்லலாம்.

6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள்

அவை எவை?

உயிர் எழுத்துக்கள் , உயிர்மெய் எழுத்துக்கள் என்று பிரிக்கலாம்.

7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?

உயிர் எழுத்துக்கள் : அ,ஆ,இ,ஈ,உ, ஊ,எ,ஏ, ஐ,ஒ,ஓ,ஔ.

8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?

வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிக்கலாம்.

9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?

ங், ஞ்,  ண் , ந்,  , ம் , ன் என்பன மூக்கால் ஒலிக்கப்படுபவை.

10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

 216.

11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?

01 உயிரெழுத்து.

02 மெய்யெழுத்து.

03 உயிர்மெய்யெழுத்து.

12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?

1. உயிர்மெய்யெழுத்து.
2.ஆய்தம் அல்லது அகேனம்.
3.உயிரளபெடை.
4.ஒற்றளபெடை.
5.குற்றியலிகரம்.
6.குற்றியலுகரம்.
7.ஐகாரக்குறுக்கம்.
8.ஒளகாரக்குறுக்கம்.
9.மகரக்குறுக்கம்.
10.ஆய்தக்குறுக்கம்
.

13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?

தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து என்றும் கூறலாம்.

14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?

வல்லின உயிர்மெய்யெழுத்தாக இருக்கும்.

15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள். இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?

அளபெடை என்று சொல்வார்கள் . இவை இரண்டு வகைப்படும் . அவையாவன உயிரளபெடை ஒற்றளபெடை என்றழைக்கப்படும் .

16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?

மாத்திரை என்று அழைத்தனர்.

17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?

ஒரு மாத்திரை என்று சொல்லலாம்.

18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?

2 மாத்திரை.

19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?

1/4 மாத்திரை.

20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?

வன்தொடர்க் குற்றியலுகரம் , மென்தொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம் ,  நெடிற்தொடர்க் குற்றியலுகரம்  ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ,  உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் .

 21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?

 மென்தொடர்க் குற்றியலுகரம்.

22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?
 
முழுமையாக இருக்கும் என்பதே சரியானது.

23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?

இரண்டு மாத்திரை ஒலி.

24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு , பத்து உயிர் மெய்யெழுத்துக்கள் ( க ச த நப ம வ ய ஞ ங ) , பத்து உயிர் மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்கள் .

25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?

ர், ழ் என்ற இரண்டு எழுத்துக்கள்.

26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

போலி என்று பெயர்.

27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?

 சொல்லுக்கு , புல்லுக்கு , பற்றைக்கு.

28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?

பதினைத்து , இருபத்தி ஐந்து ,  முப்பத்தியொன்று  ,நாற்பத்தியொன்று , நாற்பத்திஐந்து.

29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?

12  உயிரெழுத்துக்கள்,

18 மெய்யெழுத்துக்கள்,

216 உயிர்மெய்யெழுத்துக்கள்,

1 ஆய்த எழுத்து,

மொத்தம் தமிழ்மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன.

30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?

 க்,ங்,ச், ஞ், ட், ண் ,த், ந், ப் , ம் , ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய எழுத்துக்களை மெய்யெழுத்து என்று  சொல்லலாம்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணம் மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கபட்டுள்ளதை நான் அறிகிறேன்.

அவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியனவாகும்

தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல்லதிகாரம் . தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்

இவை மூன்றுமே முறையே ஒன்பது துணை அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வரவிற்கும் விளக்கத்திற்கும் நன்றி ஏழுஞாயிறு

வினாக்களுக்குச் சரியான விடைகளை ஒரே முறையில் கூறுங்கள்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக வேகமாகப் பதில்களை அள்ளி வீசியிருக்கின்றீர்கள் கோமகன்
இருந்தாலும் இடையில் திருத்தம் செய்யக் காரணம் யாதோ ?

சரி  சரி  மற்ற மாணவர்கள் எப்படி விடைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் எனப் பார்ப்போம் :D

ஐயா ஒரு எழுத்துப் பிழை போச்து எண்டு எழுதி போட்டன் அந்த எழுத்துப் பிழையை திருத்தி விட்டன் .

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி சோதினை வையுங்கோ வாத்தியார். ஒரேயடியா வச்சு எங்கட கழுத்தை நெரிக்காமல்.

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?
  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி 

2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?
  சார்பெழுத்துக்கள்

3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?
  சுட்டெழுத்துக்கள் 

4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?
  புறச்சுட்டு 

5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?
  வினாவெழுத்துக்கள்.

6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை?
  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் 

7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?
  முதலெழுத்து வகையைச் சேர்ந்தது 

8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?
  வல்லினம், மெல்லினம், இடையினம்

9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?
 மெல்லினம்

10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
  இருநூற்றுப்பதினாறு 

11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?
  குற்றியலிகரம், குற்றியலுகரம்,ஆய்தம்

12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?
  பத்து 

13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?
  தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து

14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?
  வல்லின உயிர்மெய்யெழுத்து

15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள்.இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?
  அளபெடை - உயிரளபெடை,ஒற்றளபெடை

16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?
 கைநொடிக்கும் நேரம் ,  கண்ணிமைக்கும் நேரம்

17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?
  மாத்திரை 

18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?
   இரண்டு மாத்திரைகள்

19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?
  கால் மாத்திரை

20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?
 வன்தொடர்க்குற்றியலுகரம்,  மென்தொடர்க்குற்றியலுகரம்,  இடைத்தொடர்க்குற்றியலுகரம்,நெடிற்தொடர்க்குற்றியலுகரம்  ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்,உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் 

21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?

  வன்தொடர்க்குற்றியலுகரம்

22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?
  குறையாது

23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?
  இரண்டு மாத்திரை

24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?
  முப்பது 

25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?
   ர், ழ்

26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து
ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

  போலி 

27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?
  அகரம், சகரம், தகரம்

28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?
  மயிலை, காலால், காலை, காலத்து, எனக்கு.

29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?
  இருநூற்றுநாற்பத்தியேழு

30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?

பதினெட்டு

ஏதாவது எழுத்துப் பிழை இருந்தால் நீங்களே திருத்திப்போட்டுச் சரி போட்டுவிடுங்கோ வாத்தியார்.

கும்புடுறேனுங்கோ வாத்தியார் ஐயா ! உங்கடை வகுப்புக்கு என்னாலை வரேலாமல் போச்சுது  குறை  விளங்காதையுங்கோ . எனக்கும் உங்கடை வகுப்புகளுக்கு வரவேணுமெண்டு செரியான ஆசைதான் கண்டியளோ . ஆனால் தோட்டத்திலை நாத்து நடுற சோலியள்  கூட இருந்ததாலை ஏலாமல் போச்சுது பாருங்கோ . எண்டாலும் நீங்கள் தொண்டைத் தண்ணி வத்த உங்கடை பிள்ளையளுக்கு சொல்லிக் குடுத்த நேரம் , என்ரை காதிலை எத்துப் பட்டதை வைச்சு உங்கடை கேள்வியளுக்கு மறுமொழி தாறன் ஐயா . தோட்டக்காறன் எண்டு பாக்காமல்  என்ரை அறிவையும் ஒருக்கால் பாருங்கோ வாத்தியார் ஐயா .

 ******************************************************

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?

எழுத்து ,சொல் , பொருள் , யாப்பு  ,அணி.

2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?

சார்பெழுத்து எனகூறுவர்.

3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?

சுட்டெழுத்துக்கள் என அழைக்கலாம்.

4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?

அகச்சுட்டு என்று சொல்லலாம்.

5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?

இதை வினாவெழுத்துக்கள் என்று சொல்லலாம்.

6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள்

அவை எவை?

உயிர் எழுத்துக்கள் , உயிர்மெய் எழுத்துக்கள் என்று பிரிக்கலாம்.

7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?

உயிர் எழுத்துக்கள் : அ,ஆ,இ,ஈ,உ, ஊ,எ,ஏ, ஐ,ஒ,ஓ,ஔ.

8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?

வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிக்கலாம்.

9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?

ங், ஞ்,  ண் , ந்,  , ம் , ன் என்பன மூக்கால் ஒலிக்கப்படுபவை.

10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

 216.

11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?

01 உயிரெழுத்து.

02 மெய்யெழுத்து.

03 உயிர்மெய்யெழுத்து.

12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?

1. உயிர்மெய்யெழுத்து.
2.ஆய்தம் அல்லது அகேனம்.
3.உயிரளபெடை.
4.ஒற்றளபெடை.
5.குற்றியலிகரம்.
6.குற்றியலுகரம்.
7.ஐகாரக்குறுக்கம்.
8.ஒளகாரக்குறுக்கம்.
9.மகரக்குறுக்கம்.
10.ஆய்தக்குறுக்கம்
.

13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?

தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து என்றும் கூறலாம்.

14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?

வல்லின உயிர்மெய்யெழுத்தாக இருக்கும்.

15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள். இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?

அளபெடை என்று சொல்வார்கள் . இவை இரண்டு வகைப்படும் . அவையாவன உயிரளபெடை ஒற்றளபெடை என்றழைக்கப்படும் .

16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?

மாத்திரை என்று அழைத்தனர்.

17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?

ஒரு மாத்திரை என்று சொல்லலாம்.

18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?

2 மாத்திரை.

19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?

1/4 மாத்திரை.

20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?

வன்தொடர்க் குற்றியலுகரம் , மென்தொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம் ,  நெடிற்தொடர்க் குற்றியலுகரம்  ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ,  உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் .

 21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?

 மென்தொடர்க் குற்றியலுகரம்.

22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?
 
முழுமையாக இருக்கும் என்பதே சரியானது.

23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?

இரண்டு மாத்திரை ஒலி.

24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு , பத்து உயிர் மெய்யெழுத்துக்கள் ( க ச த நப ம வ ய ஞ ங ) , பத்து உயிர் மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்கள் .

25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?

ர், ழ் என்ற இரண்டு எழுத்துக்கள்.

26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

போலி என்று பெயர்.

27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?

 சொல்லுக்கு , புல்லுக்கு , பற்றைக்கு.

28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?

பதினைத்து , இருபத்தி ஐந்து ,  முப்பத்தியொன்று  ,நாற்பத்தியொன்று , நாற்பத்திஐந்து.

29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?

12  உயிரெழுத்துக்கள்,

18 மெய்யெழுத்துக்கள்,

216 உயிர்மெய்யெழுத்துக்கள்,

1 ஆய்த எழுத்து,

மொத்தம் தமிழ்மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன.

30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?

 க்,ங்,ச், ஞ், ட், ண் ,த், ந், ப் , ம் , ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய எழுத்துக்களை மெய்யெழுத்து என்று  சொல்லலாம்.

 திருப்பவும் திருத்தாமல் இருக்கத்தான் இது. :lol:
 
வாத்தியர் சுமே கோவைப் பார்த்து எழுதீட்டா. ஈ அடிச்சான் கொப்பி. அதனால் சுமேக்கு 00/100 அதாவது 0%

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியர் சுமே கோவைப் பார்த்து எழுதீட்டா. ஈ அடிச்சான் கொப்பி. அதனால் சுமேக்கு 00/100 அதாவது 0%

சத்தம்போட்டுச் சொல்லாதையும் உமக்கு மூண்டு விசுக்கோத்துத் தாறன் :(

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம்போட்டுச் சொல்லாதையும் உமக்கு மூண்டு விசுக்கோத்துத் தாறன் :(

ஆளே விசுக்கோத்து  பிறகு ஏன் இன்னும் மூண்டு  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவசரப்பட்டு பேப்பறை வாங்கிப்போடாதையுங்கோ.. பிள்ளையார்கோயிலுக்கு கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைச்சு நேத்திவச்சிட்டு வாறன்..

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் 30 ந்தேதிதான் பேப்பரைத்திருத்துவாராம் அதுவரைக்கும் அவகாசம் இருக்காம் சுபேசு :)

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனும், சுமோவும்... உடனே பதில் எழுதி விட்டதால்,
வினாத்தாள் முன்பே வெளியாகி இருக்கலாம்... என்று, கல்வித் திணைக்களம் சந்தேகிக்கின்றது.
:D  :lol: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்.. யாராவது  குதிரையோட  இருக்கிறீங்களா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம்

1. தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?

விடை: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. என்பவையாகும்.

2. உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?

விடை: சார்பெழுத்து. என அழைப்பர்.

3. என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?

விடை: சுட்டெழுத்துக்கள். எனப் பெயராகும்..

4. அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?

விடை: புறச்சுட்டு. என அழைப்பர்.

5. என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?

விடை: வினாவெழுத்துக்கள். எனப் பெயராகும்.

6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை?

விடை: முதலெழுத்து, சார்பெழுத்து. என்பவையாகும்.

7. உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?

விடை: முதலெழுத்து. வகையைச் சேர்ந்தவை.

8. மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?

விடை: அவை வல்லினம், மெல்லினம், இடையினம். ஆகும்.

9. ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?

விடை: மெல்லின எழுத்து, அதற்கு மூக்கினம் என்றும் பெயருண்டு.

10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 216 ஆகும்.

11. தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?

விடை: கூற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். என்பவையாகும்.

12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?

விடை: 10 எழுத்துக்களாகும்.

13. ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?

விடை: தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து.

14. ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?

விடை: வல்லின உயிர்மெய்யெழுத்து. ஆக இருக்கும்.

15. பாடல்களில் சொற்களின் ஒலி குறைவதாகத் தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள். இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?

விடை: அளபெடை. என அழைப்பார்கள். உயிரளபெடை, ஒற்றளபெடை. என்பன அவையிரண்டு பிரிவுகளுமாகும்.

16. முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?

விடை: கண்ணிமைக்கும் நேரமாகவும் அல்லது கைநொடிகளின் நேரமாகவும். அளந்தனர்.

17. ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?

விடை: மாத்திரை. என அழைப்பர்.

18. நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?

விடை: 2 மாத்திரையாகும்.

19. மகரக்குறுக்கத்தின் ஒலி அளவு எத்தனை?

விடை: 1/4 மாத்திரையாகும்.

20. ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?

விடை: வன்தொடர்க்குற்றியலுகரம், மென்தொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், நெடிற்தொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம். என்பவையாகும்.

21. கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?

விடை: மென்தொடர்க் குற்றியலுகரம். என்ற வகையானது.

22. முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?

விடை: (குறையாது) (முழுமையாக) என்பன சரியானது.

23. ஐகாரக்குறுக்கத்தில் இன் ஒலி அளவு என்ன?

விடை: 2 மாத்திரையாகும்.

24. இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?

விடை: 142 எழுத்துக்கள் ஆகும்.

25. உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?

விடை: ர், ழ். ஆகியன.

26. ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

விடை: போலி. எனப் பெயர்.

27. எழுத்துச் சாரியைக்கு மூன்று உதாரணங்கள் தருக?

விடை: கரம், காரம், கான்.

28. சொல் சாரியைக்கு ஐந்து உதாரணங்கள் தருக?

விடை: மயிலை, காலை, காலால், காலத்து, எனக்கு.

29. தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

விடை: 247 எழுத்துக்கள் உள்ளன.

30. மெய்யெழுத்துக்கள் எத்தனை?

விடை: 18 மெய்யெழுத்துக்கள் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பில உருப்படாததுகள் எண்டு வாத்தியார் கழிச்சுவிட்டு கடைசி வாங்கில என்னோட இருந்த பாஞ்சே விடை எழுதினது...தமிழ்சிறி அண்ணாவின் சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது.. :lol:

Edited by சுபேஸ்

சுபேஸ், உங்கள்மேல் நான் மிக்க மரியாதை வைத்துள்ளேன் சுபேஸ். ஆனால் நீங்கள் வாத்தியார் மேய்ப்பதற்கு எருமைகள் வாங்கப்போய்விட்டீர்கள். :(  தமிழ்சிறி அவர்கள் பரீட்சை என்றதும் வயித்தைக் கலக்கி வடலிக்குள்ள போனவர் இன்னும் வெளியாலை வரவிலில்லை. :blink:  ஆகவேதான் உங்களுக்காகக் காத்திராமல் முன்னரே பதிந்துவிட்டேன். ஆனாலும் (Ladies First) மெசொபொத்தேமியா சுமேரியருக்கு முன்னுரிமை கொடுத்து அவருக்குப் பின்னாலைதான் பதிந்துள்ளேன். :wub: 

நாங்கள் பின்வாங்கிலை இருந்தாலும் பின்வாங்காமல் எதையும் உள்வாங்கி விடுவோமில்லை. :icon_idea:

உந்த பிட்டு, புட்டவிப்பது, குதிரையோடுவது என்றால் என்ன சுபேஸ். :rolleyes: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளது
எழுதி முடித்தவர்கள் விடைத்தாள்களைத் தாருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் விடையை எழுதவேணும் எண்டு கட்டன்றைற்றா போட்டு பேப்பரை வாங்கிறதை விட்டிட்டு உப்பிடிக் கேட்டியள் எண்டா ஒருத்தரும் தரவே மாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'போலி' கேட்டு 'போலி போளி' சாப்பிட்டதால் வந்த வினை. ம்...உவர் பக்கத்து வாங்கிக்காரர் 'போளி' பாஞ்ச், சரிவர விடைத்தாளை கொடுக்க மாட்டேன்கிறார்.

இப்படி 'கமுக்க'மாக இருந்தால், நாங்கள் காப்பியடிப்பது எவ்வாறாம்? :wub:

கூட்டாளிகள் விசுக்கர் & சோழியையும் இந்தப் பக்கமே காணோம்.

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்

பார்த்துக்கொண்டு பார்வையாளர்களாக நிற்கின்றேன்.

தலையை  உடைத்து  செய்யும் வெலைகளை  தற்பொழுது செய்ய  மனம்  இடம் கொடுக்குதில்லை ராசவன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்

'போலி' கேட்டு 'போலி போளி' சாப்பிட்டதால் வந்த வினை. ம்...உவர் பக்கத்து வாங்கிக்காரர் 'போளி' பாஞ்ச், சரிவர விடைத்தாளை கொடுக்க மாட்டேன்கிறார்.

இப்படி 'கமுக்க'மாக இருந்தால், நாங்கள் காப்பியடிப்பது எவ்வாறாம்? :wub:

நான் பிட் அடிச்சதை சுபேஸ் வாத்தியாரிட்டை போட்டுக் குடுத்திட்டார். <_<   இந்த நிலையில் என் விடைத்தாளை உங்களுக்குத் தந்தால் இருவர் விடையும் அச்சொட்டாக இருப்பதை வாத்தியார் கண்டுபிடித்துவிட்டால் பெரும் வில்லங்கமாகிவிடும். :o   நான் பெயிலாகினாலும் பரவாயில்லை. என் நண்பன் பெயிலாவதை என்னால் தாங்கமுடியாது ராசவன்னியரே அதனால்தான்...... :(  :D   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. :)
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.